சென்ற பதிவில் இன்னும் கொஞ்சம் கேள்விகள் மீதம் இருப்பதால் அதற்கும் பதில் அளித்து விடலாம்.நமக்கு இதுவரை பரிச்சயம் இல்லாத நண்பர்களின் கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கிறேன்.பழைய விவரங்களை கிளர விரும்பவில்லை. மீதம் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே பல் பதிவுகள் விவாதங்களில் பதில் சொல்லியாகிவிட்டது.அவர்களுக்கு நான் சொல்லும் பதில் குரான் 109ஆம் சூரா(ஸூரத்துல் காஃபிரூன்) 6 வசனங்களே.இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு கூறப்படுகிரது.அரபி வார்த்தை காஃபிர் என்றால் நம்பிக்கை மறுப்பாளர்.ஆகவே உங்களுக்கு நான் காஃபிர் என்றால் நீங்கள் எனக்கு காஃபிர்.இப்போது படியுங்கள் 109ஆம் சூரா.
The Qur'an uses the words Kafir, Kuffar, and Kufr 470 times in 451 different verses.
******************************************
உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்
உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்
hajamydheen[at]gmail.com
நண்பரே
இந்த பகுத்தறிவுவாதி என்பதை விட மத விமர்சகன் என்ற பெயரையே விரும்புகிறேன்.அனைவருக்கும் பகுத்து அறியும் அறிவு உண்டு.திராவிட பாணி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் பட்டம் எனக்கு தேவையில்லை.நான் எந்த மதத்திலும்,நாட்டிலும் உள்ள மனித விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவன்.இந்து மதத்தில் பொருள்முதல் வாதம் சார்வாகம் என்று அழைக்கப் படுகிறது.சமண மதத்தில் கடவுள் இல்லை.இப்போது கெள்விகள்&பதில்கள்.
1 /அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?/
தமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன.இந்தியா முழுவதும் சமுக சட்டங்கள் மத ரீதியாக உள்ளன.ஆகவே இருவரும் இருவரும் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர் எனில் இந்து திருமண சட்டம் செல்லும். பல் கிறித்தவர்,முஸ்லிம்கள் தங்களை வெளிப்படையாக மதம் விட்டு வெளி வருவதில்லை.
***********************
2 / அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?/
Living together என்பது திருமண பதிவு இல்லாமல் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதாகும்.இது பெண்ணுக்கு பல பாதகங்களை தரும் என்றாலும் தானாக ரிஸ்க் எடுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.மேலை நாடுகளில் மிக இயல்பான ஒன்று. விருப்பப்படும் இருவர் சேர்ந்து வாழும் போது அதன் சாதக் பாதகங்களை அறிந்து எதனை எதிர்கொள்ளத் துணியும் போது சட்ட ரீதியாக தடை நமது மேலை நாடுகளில் இல்லை.இது தனிப்பட்ட விஷயம்.என்னை பொறுத்த்வரை சுய மரியாதை திருமணம் செய்து பதிவு செய்வது பெண்ணுக்கும்,குழந்தைகளுக்கும் சட்ட ரீதியாக பாதுகாப்பு..ஓரிணப் புணர்சியில் ஈடுபடும் சிலரை மனரீதியாக் குணப்படுத்த முடியும்.சிலரை முடியாது இது ஜீன் குறைபாடு.அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம், பாதுகாப்பு வேண்டும்.
***********************
3./இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்./
இறைமறுப்பாளர்கள் தனியாக் நட்த்தப்படாமல் பிறந்த மதங்களை சேர்ந்தவர்களாகவே நம் நாட்டில் நடத்தப் படுகிறார்கள்.அப்படி ஒருவேளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தால் ஆண்,பெண்களுக்கு இந்து சொத்து முறை சட்டமே சிறந்தது.இஸ்லாமியர்களையும்,அவர்கள் உரிமைகளையும் மதிக்கும் மனிதர்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு(muslim personnel law) தனி சமூக சட்டம் இருக்கிறது.இதனை ஒழித்து அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சில கட்சிகள் போராடுகின்றன.குற்றவியல் நடைமுறைகளில் அனைவரும் சமமே.
**************************
4/இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்./
மத விமர்சகர்கள் எந்த சமூகத்தில் வாழ்கிறார்களோ அச்சமூக நடைமுறையில் காலத்திற்கு ஏறறவற்றை பின்பற்றுவர்.மாற்ற வேண்டியதை மாற்றுவர்.மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.
____________
B)
G u l a m
/நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?
*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?
*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?/
உங்கள் கருத்து தவறு. இஸ்லாம் தவிர்த்த பிற மதத்தினர் தங்கள் மத புத்தக்த்தில் சொல்லிய அனைத்தையும் பின்பற்றுவது இல்லை.இந்து மதம் என்பதே வாழ்வியல் நடைமுறைதான்.அது காலத்திற்கேற்ற படி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.நேற்றைய தவறுகளுக்கு இன்று பரிகாரம் செய்யப் படுகின்றது.நியாய படுத்தப் படுவது இல்லை.
இறை மறுபாளர் என்ற் தனி சட்டத்தின்.நடைமுறை அவசியம் இங்கு இல்லை.இந்துமதம் இறை மறுப்பாளர்களையும் ஒதுக்குவது இல்லை.இறைமறுப்பாளர்கள் சீர் திருத்தப் பட்டுக் கொண்டிருக்கும்
இந்து (இந்திய) நடைமுறை சட்டங்களை பினபற்றுகிறார்கள் என்று கூறலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து திருமண சட்டம் அம்பேத்கார் (1955) தலைமையில் தொகுக்கப் பட்டது.
________________
C)
சகோதரி,
அஸ்மா.
costblog[at]gmail.com
/1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?/
நல்ல கேள்வி.ஒவ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். நம் குடும்பத்தினர் நம்மை நேசிப்பதை உண்ர முடியாதா? பெற்றோர் குழந்தைகளை நேசிப்பதால் அவர்களுக்கு பொருளாதார,மன் ரீதியான பாதுகாப்பு தருகின்றனர்.இறை மறுப்பாளர் தங்கள் குழந்தை வேற்று மதத்தவரை காதல் திரும்ணம் செய்வது என்று முடிவெடுத்தால் ,அத்துணை சரியாக் இருக்கும் எனில் அனுமதிப்பர்.மத நம்பிக்கையாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை.
2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
உங்களுக்கு சரியாகப் படுவது எனக்கு தவறாக படலாம்.ஒரு புத்தக்த்தில் சொல்லி இருக்கிறது,அத்னை ஒரு மத்வாதி ஒர் விளக்கம் தருகிறார் என்பதற்காக எதனையும் ஏற்று கொள்ள முடியாது.சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.
3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?
கடவுள் பெயரில் அக்கிரமங்கள் நடக்கிறது.நடக்கும் வாய்ப்பு உண்டு.இத்னை பெரும்பாலான் மதவாதிகள் நியாயப் படுத்துகிறார். இதனை நான் சொன்னால் பிரச்சினை ஆகியிருக்கும் நன்றி. .இது மட்டும் காரணமில்லை மத புத்தகங்கள் கூறும் கடவுள்கள் உண்மையாக் இருக்கமுடியாது என்பதற்கு பல ஆய்வுகள்,பதிவுகள் எழுதியாயிற்று..மத புத்தகங்கள் தொகுப்பே அரசியல் சார்ந்தது.
/4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா/
இது திரவிட பிரிவு கேள்வி என்றாலும் பரவாயில்லை.
இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், அவர்கள் வந்து உதவி செய்வார்கள் என்பதற்காக் அல்ல. அப்படி என்றால் ஃபோட்டோ எடுப்பது கூட தவறுதான்.
5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள அறிவியல் தத்துவம்தான் என்ன?
இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திகரா?.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற விஷயங்கள் தவிர்க்க இயலாது.
6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?
7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்பல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன?
மன்னிக்கவும். மத புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று
வேலைஉங்களுக்கு என்பதிவு ஒன்றை பரிந்துரைக்கிறேன்.
_________
மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.
8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"
இது கிறித்தவ,இஸ்லாமிய மத நம்பிக்கையாளரின் கொள்கை.பரிணாம்த்திற்கு எதிரானவர்கள் மதவாதிகள். அதுவும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த எதிர்ப்பு மட்டுமே.பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.
நன்றி சகோதரி.
********************************************************
D) /ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! /
சபாஷ் சரியான் கேள்வி.இதன் காரண்மாக் மதம் பின்பற்றுகிறீர்கள். see this
********************************************************
E) நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? .ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.
-Mohamed Ihsas
இஹ்சாஸ் ஓன்லைன்
mohamedihsas786[at]gmail.com
அப்படியா இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதரத்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.
நன்றி.
**********************************************************
எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. அரசியல்,பொருளாதார பலம் உள்ள மதங்கள் மட்டுமே நீடிக்க முடியும்.என்னாலும் பல் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் உங்கள் மதத்தை பொறுத்தவரை எனது தேடல் முடிந்து விட்டது.அவசியம் என்றால் மட்டுமே விவாதிப்பேன்.ஆக்வேதான் இப்பதிவில் இறைமறுப்பை பற்றி மட்டும் விள்க்கினேன்.
மறுமை வாழ்வில் நம்பிக்கை அற்ற ஒருவனுக்கு மதம் என்பது தேவையற்றது.உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம் எனக்கு நகைச்சுவையாக் படுகிறது.நாகரிகமாக் விவாதிப்பதில் தவறில்லை.
//இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதரத்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.//
ReplyDeleteஇஸ்லாமியரின் கருத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் காபிர் சார்வாகனுக்கு பாராட்டுகள்
http://pagadu.blogspot.com
வணக்கம் நண்பரே,
ReplyDeleteகருத்துக்கு நன்றி
who is a kafir?
ReplyDeleteThe word kāfir is the active participle of the root K-F-R "to cover". As a pre-Islamic term it described farmers burying seeds in the ground, covering them with soil while planting.[2] Thus, the word kāfir implies the meaning "a person who hides or covers".
In Islamic parlance, a kāfir is a word used to describe a person who rejects Islamic faith, i.e. "hides or covers [viz., the truth]".[3]
"kafara" ~ the root verb ~ means "he hid (something)" and "he covered (something)" or "He hid (something) by covering it up." Both "hiding" and "covering up" are indelible significations of all of the words arising on the verbal root. In recent times, the Arabic term used as a loanword in English is seen as derogatory, which is why some Muslim scholars discourage its use and suggest the neutral term non-Muslim instead.[4]
The Hebrew cognate gives words like kofer meaning "apostate" and kefira, meaning "apostasy". The Hebrew word kever (replacing p with B/V] means "grave" and kover means "he who buries", i.e. act of covering (a body with earth) ....
http://en.wikipedia.org/wiki/Kafir
எந்த நாத்திகனும் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வெடிகுண்டு வைத்து கொல்வதில்லை.
ReplyDeleteகோவிலை, மசூதியை இடித்து கொள்ளை அடிப்பதில்லை.
எனக்கு தெரிந்த கடவுள் நம்பிக்கையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் மதவாதிகளைத்தான் எண்ண முடியாது, இவர்கள் ஆத்திகம் என்று பேசுவது கடவுள் நம்பிக்கை பற்றியதல்ல, வெறும் மதவாதமே, இவர்களுக்கு பதில் சொல்லத் தேவை இல்லை என்பது என் எண்ணம்
உதாரணத்திற்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் நாத்திகர்களே, அதே போல் பெந்தகோஸ் கிறித்துவர்களுக்கு பிறர் நாத்திகர்களே, பார்பனர் பார்பனரல்லாதோர் என்பது போல் மதவாதக் கூட்டங்கள் பிறரை நாத்திகர் என்கிறது. இதில் இறைமறுப்பாளர் என்று யாரைச் சொல்ல முடியும் ?
கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் குழுவாக செயல்படும் அனைத்துமே பிழைப்பு வாதம்
ReplyDeleteநாத்திகன் உள்ளிட்ட உலகில் உள்ள எல்லோரும் ஒரே மதத்திற்கு மாறினாலும் அந்த மதத்தலைவன் ஒண்ணுக்கு போனது போல் ஏன் போகலைன்னு அடித்து கொல்வார்கள், என்று யாரோ எங்கேயோ எழுதியது நினைவுக்கு வருகிறது.
@kovi kannan
ReplyDeleteவாங்க நண்பரே,
நான் கண்டு கொள்ளாமல் செல்லலாம என்றால் மத பெருமித விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்பது அவசியமாகிறது.
மதச்சார்பின்மை என்பதை தாங்கி பிடித்தவர்கள் தமிழக்த்தில் இறை மறுப்பு திராவிட இய்க்கத்தினர் .இத்னால்தான் தேசப் பிரிவினை போது இந்தியா முழுவதும் கலவரம்(15 இலட்சம் பேர் மரணம்) வந்த போது கூட தமிழகம் அமைதியாக் இருந்தது. பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆன கதியை பார்த்தும் மதம் சர்வ ரோஹ நிவாரனி,சொர்கத்தின் நேர்வழி என்று வாதிடுபவர்களை என்ன செய்ய முடியும்?.சரி பார்க்கலாம் என்ன விவாதிக்கிறார்கள் என்று
நன்றி நண்பரே
ReplyDeleteநண்பரே,
அவர்களின் கேள்வி படிக்க படிக்க இப்படியும் நம்புபவர்கள் இருக்கிறார்களே, நல்லவேளையாக இஸ்லாமிய மத ஆட்சி நாட்டில் பிறக்காததின் அருமை புரியவில்லையே என்று பரிதாபம்தான் வருகிறது. பாகிஸ்தானின் இங்கிருந்து சென்ற முஸ்லிம்களை முஜாஹிர் என்று தனியாக்வே நட்த்துகின்றர்.
http://en.wikipedia.org/wiki/Muttahida_Qaumi_Movement
பங்களா தேஷில் பீஹாரி முஸ்லிம்கள் என்னும் உருது பேசுபவர்களுக்கு ஓட்டு உரிமையே இப்போதுதான் கொடுத்தார்கள்.
http://en.wikipedia.org/wiki/Stranded_Pakistanis
/மதவாதிகளிம் முதலில் உங்களுக்குள் இருக்கும் கடவுளர்களில் யார் உண்மையான கடவுள் என்று நிருபனம் செய்துவிட்டு பிறகு நாத்திகனிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிடுங்கள்./
ReplyDeletehaa haa நன்றி
//வாங்க நண்பரே,
ReplyDeleteநான் கண்டு கொள்ளாமல் செல்லலாம என்றால் மத பெருமித விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்பது அவசியமாகிறது.//
மதவாதங்களுக்கு முற்றுப் புள்ளியா ? புத்தர்காலம் முற்பட்டே அவை நடந்துவருகின்றன, புற்றீசல் போல் அவை புறப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.
மதவாதிகளிம் முதலில் உங்களுக்குள் இருக்கும் கடவுளர்களில் யார் உண்மையான கடவுள் என்று நிருபனம் செய்துவிட்டு பிறகு நாத்திகனிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிடுங்கள்.
(மேலே முந்தைய பின்னூட்டத்தில் கட் & பேஸ்ட் தவறாகப் போட்டுவிட்டேன்)
அறிஞர் அண்ணாவின் மாஜிக்கடவுள் பற்றிய நூல் கிடைத்தால் படியுங்கள்.
ReplyDeleteசாக்ரிடிஸை விசம் வைத்துக் கொல்லக் காரணமான மத நம்பிக்கைகளும், அந்த கடவுள்களும் என்றோ அழிந்துவிட்டன, தற்போதைய மதங்கள் அழிய இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் கொடுமையிலும் கொடுமையாக அந்த இடத்தை இன்னொரு இறைத்தூதரும், இன்னும் சில புதிய மதங்களும்ம் ஆக்ரமத்துக் கொள்ளும்.
//8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"//
ReplyDeleteபரிணாமம் பொய்தது என்று இவர்கள் எதை வைத்துச் சொல்லுகிறார்கள். இவர்களது கற்பனை ஆதாம் - ஏவாளின் வாரிசுகள் ஒன்று போல் அல்லவா இன்றும் இருக்க வேண்டும், பிறகு எப்படி அவர்களிடம் இருந்து தோன்றியவர்கள் வெள்ளைக்காரர்களாகவும், கருப்பர்களாகவும், மூக்கு சிறுத்த மஞ்சள் இன மங்கோலியர்களாகவும் இருக்கிறார்கள், இவர்களெல்லாம் தனித்தனி ஆதாம் - ஏவாள் வழித்தோன்றினார்களா ?
//3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? //
ReplyDeleteஎல்லாம் வல்ல கடவுள் அவர்களின் தலையைக் கொய்கிறாரா என்று பார்க்கிறார்கள், அப்படி யாரும் வரவில்லை என்பதால் கேள்வி எழுப்புகிறார்கள், இதில் தவறென்னா ?
ஒரு ஊர் அமைதியாக இருந்தால் அங்கு அவற்றை கட்டுப்படுத்தும் தலைவன் உண்டு என்று தானே பொருள், அமைதியாக இல்லாவிடத்தில் தலைவன் இல்லை என்று தானே நம்ம வேண்டி இருக்கிறது. தலைவனையே அடையாளம் காட்டாமல் தலைவன் இருந்தாலும் இருக்கலாம் என்பதை நம்புங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது.
நன்றி நண்பரே,
ReplyDeleteமாஜி கட்வுள்கள் படிக்க வேண்டும்.
மற்ற மத கோஷ்டிகள் எல்லாம் அடங்கி விட்ட்ன.இவர்கள் மட்டுமே மிச்சம்,மத்திய கிழக்கில் எண்னெய் தீர்ந்தால் சுதி இறங்கி விடும் என்பது தெரியும் என்றாலும் பல் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அநியாய்த்திற்கு எல்லாம் சரி,விவாதிப்போம் வா என்பவர்களை என்ன செய்வது? கவுண்டமனி செந்தில் கதையை விட தமிழக் இஸ்லாமிய உட்பிரிவுச் சண்டை போய்க் கொண்டு இருக்கிறது.இரு இறை நம்பிக்கையாளர்களை கூட ஒன்று படுத்த முடியாத்வர் கடவுளா!!!!!
சேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல்
http://markaspost.wordpress.com/2009/01/21/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/
//6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?//
ReplyDeleteஇது காபி ரைட் பிரச்சனை, நாங்கள் கண்டுபிடித்ததை வேறுபெயரில் யாரும் கண்டிபிடிக்கக் கூடாது என்று ஒரு வசனம் இருந்திருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.
புற்றுநோய்க்கும் சர்கரை நோய்க்கும் ஏதேனும் மருந்து இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், பின்னர் அவற்றை அறிவியல் கண்டுபிடித்தபிறகு முன்பே அவை பற்றி 140000 நூற்றாண்டுக்கு முன்பே கூறிவிட்டதாகக் கூறும் முன் இன்றைக்கு தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா ?
//*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்.,//
ReplyDeleteஇவை கண்டனத்துக்குரியதும், விஷமத்தனமும் ஆகும், இவர்கள் பின்பற்றுவது சரியானதாகவும், பிற மதத்தினர் சரியோ / தவறோ என ஆராயமல் பின்பற்றுவதாகவும் சாடி இருக்கிறார்கள். முதலில் பிறமத்தினரின் செயல்களை விமர்சனம் செய்யமல் இருக்க முயற்சித்து பின்னர் நாத்திகன் என்ன செய்கிறான் என்று கேட்கலாமே
//இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?//
ReplyDeleteஇது என்ன கூத்து ஒரு அரபி பெண் ஒரு கருப்பின முஸ்லிம் ஆணை மணந்து கொண்டால் பண்பாட்டு ரீதியான பிரச்சனை வருவது போல் தான் பகுத்தறிவு வாதிக்கும் பழக்க வழக்கம் சார்ந்த பிரச்சனை வரும். இது அறிவார்ந்த கேள்வியா ? நாத்திகருகான கேள்வியா ? ஆனால் படிக்க நகைப்பு வருகிறது. நகைச்சுவை கேள்வி
/முதலில் பிறமத்தினரின் செயல்களை விமர்சனம் செய்யமல் இருக்க முயற்சித்து பின்னர் நாத்திகன் என்ன செய்கிறான் என்று கேட்கலாமே/
ReplyDeleteஅப்படி செய்தால் இணை வைப்பது ஆகி விடும் அவர்கள் தெளிவாக்த்தான் சொல்கிறார்கள் நண்பரே!!!!!!!!.ஹா ஹா ஹா
அவர்கள் எங்கள் மதமும் பிர மதங்கள் போல் நம்பிக்கை மட்டுமே சார்ந்தது என்று கூறட்டும்.நான் மதங்கலை விமர்சிப்பதை விட்டு விடுகிறேன்.
/புற்றுநோய்க்கும் சர்கரை நோய்க்கும் ஏதேனும் மருந்து இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், பின்னர் அவற்றை அறிவியல் கண்டுபிடித்தபிறகு முன்பே அவை பற்றி 140000 நூற்றாண்டுக்கு முன்பே கூறிவிட்டதாகக் கூறும் முன் இன்றைக்கு தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா ?/
ReplyDeleteகாய்ச்சல்,வாந்தி பேதி,முதல் எய்ட்ஸ் வரை அனைத்து நோய்களுக்கும் கண்கண்ட மருந்து கருஞ்சீரகம்
_______
5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :76
/பரிணாமம் பொய்தது என்று இவர்கள் எதை வைத்துச் சொல்லுகிறார்கள். இவர்களது கற்பனை ஆதாம் - ஏவாளின் வாரிசுகள் ஒன்று போல் அல்லவா இன்றும் இருக்க வேண்டும், பிறகு எப்படி அவர்களிடம் இருந்து தோன்றியவர்கள் வெள்ளைக்காரர்களாகவும், கருப்பர்களாகவும், மூக்கு சிறுத்த மஞ்சள் இன மங்கோலியர்களாகவும் இருக்கிறார்கள், இவர்களெல்லாம் தனித்தனி ஆதாம் - ஏவாள் வழித்தோன்றினார்களா ?/
ReplyDeleteஇவர்களுக்குமத பிரச்சாரகர்கள் காசு வாங்கிக் கொண்டு பெருமித போதை ஏற்றி விடுகிறார்கள்.அவர்களுக்குள்ளேயே பேசும் போது ,ஒருவரை ஒருவர் மிஞ்சி நம்பிக்கை காட்டுவதால்,அவர்களுக்கு அனைவரிடமும் விவாதிக்க ஜெயிக்க முடியும் என்ற அசட்டு தைரியம் வந்து விடுகிறது.
ஆதம் 90 அடி உயரம் இருந்தாராம்.அரபி பெசியுள்ளார்.முதல் மொழி அரபி ஆனால் பொ.ஆ 650 வரைக்கும் குரானுக்கு முந்தி ஒரு புத்தகம் கூட எழுதப்படவில்லை.
__________
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60
/மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை.,/
ReplyDeleteஇத்னை நீங்கள் கடைப்பிடித்து இருந்தால் விவாதம் செய்ய மாட்டீர்கள்.சரி உங்கள் மதம் நம்பிக்கைக்கு மேல் என்றால் அது பற்றி ஒரு பதிவு பிறகு இடுங்கள்.இப்போது வேறு விஷயம் பார்ப்போம்.
/ ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்./
வாழ்வு என்பது இயல்பான விஷயம்.சர்வ ரோஹ நிவாரணி தீர்வு என்று எதுவும் கிடையாது.தீர்வு என்பது எதற்கு என்கிறேன்.பிரபஞ்சம் எப்படி தோன்றியது ,மனிதன் தோன்றியது என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சினை.அதை அறிவியல் சொல்வது ஏற்புடையதக்வே இருக்கிறது.சமூகம் சார்ந்த பரம்பரையான் வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்து விட்டு போகிறோம்.கால்த்திற்கு ஒவ்வாத விஷயத்தை தூக்கி எறிவோம். இப்படித்தான் எங்கள் வழ்வியல் நடைமுறைக்கு வந்தது. அவ்வளவுதான்.இதனை செய்/செய்யாதே என்று ஒரு புத்தகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இதில் மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் .
இஸ்லாமின் வாழ்வியல் நடைமுரைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.
________________
/எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ...? மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாறாக தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்./
குரான் சொல்லும் சுவன் வாழ்வு மீது பிரியமா.மத சொர்க்கங்களிலேயே வித்தியாசமான் சுவனம்.நினைத்தாலே சிரிப்பு வரும்.வாழ்த்துக்கள்.
ஒரு இஸ்லாமியர் மறுமை வாழ்வு இல்லையென்று சொல்ல்லாமா?.இதை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள் அப்போது விவாதிப்போம்.
_________
/யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள்.? நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..?/
அப்ப இஸ்லாமும்& இஸ்லாமியரும் பிற்ர் போல்தான்.!!!!!!! எதுவும் நடக்கும் .
_____________________
/தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே! அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் ? /
நானும் அப்ப்டித்தான் 100% அந்தோஷமாக் இருக்கிரேன்.எனது கொள்கையை பின்பற்றுங்கள் என்று கூறி பிரச்சாரம் பண்ண நேரம் இல்லை.அது என்ன சாத்தியக் கூறு?,இதுவும் நம்பிக்கையே.நம்பிக்கை மட்டுமே!!!!!!.
____________
/மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது
100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ..
இது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற /
கடவுளை வரையரையா ஆஆஆஆஆஆஅ!!!!!!!!!!!!!!!!!!.செய்யுங்கள் பார்க்கலாம்.பிற மத புத்தக்த்தில் இல்லாத குரானில் மட்டுமே உள்ள விஷய்த்தை கூற் வேண்டும்.
இஸ்லாமின் ஏவல் விலக்குகளில் பல வில்லங்கம் உண்டு.எ.கா வேண்டுமானால் தருகிறேன்.இத்னை அப்புறம் பார்க்கலாம்.கடவுளை ஒரு பதிவுக்கு மிகாமல் வரையறுக்க.
இது எப்போ ஆரபித்தது .:) (கேள்வி பதில்) . இந்த கேள்விகள் உங்களிடம் கேட்கப்பட்டதா? . என்னவாக இருந்தாலும்.. பதில்கள் அருமை..
ReplyDeleteஅய்யோடா..........மீண்டும் கடவுளைப் பற்றியா?
ReplyDeleteகடவுள் இப்போது இருப்பது சிங்கப்பூரில்...!
உண்மையான கடவுளை விட்டுவிட்டு இல்லாததைப் படித்து பொல்லாததைப் பேசிக்கொண்டு............
கடவுளைக் காண சிங்கப்பூர் வாருங்கள்!
வாஙக சகோ தமிழன்,இராவணன் வணக்கம்
ReplyDeleteசும்மா ஒரு பதிவு அவுக போட அதில் மிகவும் நகைசுவையாக் இருந்ததால் நான் முந்திக் கொண்டு பதில் அளித்து இந்த முழு நீள நகைசுவை பதிவு இட்டுள்ளேன்.
எவரேனும் தாவா பதிவு இட்டால் முந்துங்கள் இல்லையேல் நான் முந்திவிடுவேன்.கேள்விகளை பார்த்து நன்ராக் வாய் விட்டு சிரித்தேன் நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று
தாவா பதிவுன்னே அப்படியே பதில் அளிப்பேன்.ஹா ஹா ஹா
/கடவுளைக் காண சிங்கப்பூர் வாருங்கள்!/
கடவுள் சிங்கப்பூர் போயிடாரா!!!!!!!!!!!!.சொல்லவே இல்லை!!!!!!!!!!
பார்த்து சாமி மலேஷியா ப்க்கம் போயிராதிக ,பிரம்படி குடுக்குராங்க.அப்புறம் நின்று கொன்டே அருள் பாலிக்க வேண்டியதுதான்!!!!!!!!!!!!
இஸ்லாம் பற்றிய சிட்டிஜன் முஹம்மத் ஆஷிக்கை ஒட்டி அவரது கருத்துக்களை விவரித்து விளக்கி காபிர்களுக்கு இஸ்லாமிய விளக்கப் பாடம் எடுத்து தாவா செய்துள்ளேன்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை பதியவும்
மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு
சகோதரி மகளை திருமனம் செய்தவர் இஸ்லாமுக்கு மாறினால் மனைவியை விவாக இரத்து செய்ய வேண்டுமா?
ReplyDeleteஆமாம் என்பதை அண்னன் பி.ஜே எப்படி நாசூக்காக் சொல்கிறார் பாருங்கள்.கலக்கல்.
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/
\\வ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். \\
ReplyDelete-1 x -1 = +1 .
இது நிரூபிக்கப் பட்டதா?
//அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?// அதே மாதிரி, இந்து சமயத்தில் பிறந்த நாத்தீகன், அவனுடைய தலைவர்களுக்கு சிலை வைப்பான், மாலை போடுவான். சமாதிக்குப் போவான், அங்கே பூவைத் தூவி அப்படியே மௌனமாக நிர்ப்பான். [கல்லறைக்குள்ள அவனோட தலைவரோட எழும்புக்கூடு, இந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு, சில அறிவுரைகளையும் ரகசியமாய் வழங்குமோ என்னவோ யார் கண்டது!!]
ReplyDeleteநல்ல கேள்வி.நிரூபிக்க்லாம்.
ReplyDeleteஎண்களில் மைனஸ் எண் என்பது திசை,அல்லது பரிமானத்தை குறிக்கும் குறியீடு மட்டுமே.
இதனை பாருங்கள்
http://www.mathsisfun.com/multiplying-negatives.html
என்னவோ யார் கண்டது!!
ReplyDeleteI like it
நண்பர் ஜெயதேவ் தாஸ்,
ReplyDeleteநம் செயல்கலை விளக்க்வே கணிதம் அறிவியல் பயன் படுத்துகிறோம்.
குலம் அல்லது குருப் தியரி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இயல் எண்கள் என்பது ஒரு பரிமாண கணிதத்திற்கு மட்டுமே ப்யன் படும்.இந்த எண்கலுக்கிடையேயான செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் போன்றவைக்குத் தீர்வு இயல் எண்களுக்குள்ளேயே வர வேன்டும்.அப்ப்டி இல்லையெனில் அது ஒரு குலம் ஆகாது.சிக்கலெண்கள் எனப்ப்டும் காம்ப்ளெக்ஸ் எண்கள்(complex numbers) இருபரிமாண கணிதம். வெக்டர் கால்குலஸ்(vector calculas) என்பது மூன்று,அதற்கு மெற்பட்ட கணிதம்.
நன்றி
//உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் //
ReplyDelete//விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள்// என்னமோ அறிவியல் தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி/Ultimate authority, அதைத் தாண்டி எதுவும் இல்லை என்பது போல ஒரு இல்லாத இமேஜை உருவாக்குவது வேடிக்கையாக உள்ளது!!
அறிவியலில் எதை வேண்டுமானாலும் Postulates ஆக சொல்லலாம், இவற்றுக்கு நிரூபணம் தேவையில்லை. உதாரணத்துக்கு, ஒளியின் வேகம் மாறாதது, என்று ஒரு Postulateஐ ஐன்ஸ்டின் எடுத்துக்கொண்டார், அதை அவர் நிரூபிக்கத் தேவையில்லை, அது உண்மையா என்றும் யாருக்கும் தெரியாது, ஆனால் அதற்க்கப்புறம் அதை வைத்து அவர் சொன்ன தியரிகள்படி பரிசோதனை முடிவுகள் வருகின்றனவா என்றுதான் பார்ப்பார்கள். வந்தால், தியரியை வைத்துக் கொள்வார்கள், வராவிட்டால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு தியரியைத் தேடுவார்கள். இது அறிவியலின் ஆதிகாலம் தொட்டே பின்பற்றப் பட்டு வரும் முறை, பல தியரிகள் அந்த வகையில் தூக்கியடிக்கப் பட்டுள்ளன. ஒரு பக்கம், நிரூபிக்கப் படாத Postulates , அப்படியே ஒரு அறிவியல் விதி வந்தாலும், அது நிரந்தரமற்றது, தற்போதைக்கு வைத்துக் கொல்லலாம், ஆனால் எந்த நேரமும் அது மாற்றப் படலாம். இதுதான் கடைசி உண்மை, மாற்றமே அடையப் போவதில்லை என்று அறிவியலால் ஒரு போதும் எதையும் சொல்ல முடியாது, இது அறிவியலின் மாற்றமுடியாத பண்பு, அதனால் அறிவியலைக் கொண்டு எதையும் நிரூபித்து விட்டேன் என்று சொல்ல முடியாது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட.
\\எண்களில் மைனஸ் எண் என்பது திசை,அல்லது பரிமானத்தை குறிக்கும் குறியீடு மட்டுமே.\\ This is an axiom, doesn't require proof, and has never been proved. What you have mentioned is necessary proof, but not sufficient proof.
ReplyDeleteஎனக்கு ஒரு சின்ன ஐயம்,
ReplyDeleteஉங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் சாராம்சம் எல்லாம், உலகத்திலுள்ள அனைத்து தரப்பு மதவாதிகள் முன்வைக்கிறார்கள். எல்லோரும் ஒரே ”விவாதம் எப்படி செய்ய வேண்டும்” என்ற புத்தகத்தை படிப்பார்களோ.
இருந்தாலும் உங்களுடை விளக்கம் அருமை.
நண்பர் ஜெயதேவ் தாஸ்,
ReplyDeleteஅது உங்கள் கருத்து.இந்த கருத்து குறித்த சுட்டி அளித்தல் நன்று .
கணிதம் என்பது தேவையின் காரணமாக் உருவாக்கப் பட்டது.முதலில் மனிதர்கள் கூட்டமாக் வாழ்ந்த்னர் என்னிடம் 10 எருமை,10 ஆடு 10 மாடு, என்று கண்க்கு வைத்த்னர்.பிறகு பங்கிடுவதில் தேவை வந்ததால் பின்னம் வந்தது.பிறகு கடன் கொடுத்தல்.திசை குறிக்க மைனஸ் எண்கள் வந்தது.அதுவும் போறாமல் சிக்கலெண்கள் வந்தது நுட்பமாக் ஆய்வு செய்ய்லாம் அதற்கு மிக அதிகமாக் நேரம் கால்ம் தேவைப்படும்.
எண் கணிதத்தின் வரலாறு பற்றி ஒரு பதிவு இடுவேன்.
இயற்கை விதிகளின் விளக்கத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்பவே கணித கோட்பாடுகள் விரிவடைகின்றன்.
நண்பர் நரேன்,
ReplyDeleteஇதைத்தான் ஒன்று பட்ட மைய கருத்து திணிப்பு என்கிறேன்.இப்பதிவர்களில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுடன்(குறிப்பாக சவுதி) தொடர்பில் இருப்பவர்கள்.அங்கிருந்து பிரச்சாரம் இங்கு செய்யப் படுகிறது.உங்கள் பதிவிலேயே பின்னூட்டம் இருவர் எப்படி ஒரே பொய்யை கூற முடியும் என்று கேட்டேன் அல்லவா?அதேதான்.
Example: The tank has 30,000 litres, and 1,000 litres are taken out every day. What was the level 3 days ago?
ReplyDeleteWe know the tank has -1,000 every day, and we need to subtract that 3 times (to go back 3 days), so the change will be:
-3 × -1,000 = +3,000
The full calculation is:
30,000 + (-3 × -1,000) = 30,000 + 3,000 = 33,000
So 3 days ago there was 33,000 litres.
\\இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், \\ உசிரோட இருக்கும் ஒருத்தருக்கு மாலை போட்டா அது அவருக்கு மரியாதை காட்டியதாகச் சொல்லலாம். கல்லுக்கு மாலை போட்டால் அதெப்படி அந்த மனிதரை மரியாதை செய்ததாக ஆகும்? இதை உணர்ச்சிபூர்மாக சிந்திப்பவர் சொல்லலாம், தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது.
ReplyDeleteஇந்த பதிவின் உருப்படியான விஷயம் கடைசியில் நீங்க போட்ட பதில் தான். எனக்கும் - * - = + என்பது எப்படி practical ஆக சாத்தியம் என்பது படிக்கும் காலத்திலிருந்தே கேள்வி.
ReplyDeleteஅதை தெளிவுப்படுத்தியதற்கு நன்றி.
\\இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திகரா?.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற விஷயங்கள் தவிர்க்க இயலாது.\\ அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு?
ReplyDelete/கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட./
ReplyDeleteநண்பர் ஜெயதெவ் தாஸ்
கடவுள் என்பது நம்பிக்கை.அறிவியல் கடவுள் குறித்து எதையும் சொல்வது இல்லை.அறிவியல் என்பது விமர்சிக்கப் பட்டு ,மேம்பட்டுக் கொண்டே பட்டு கொண்டே இருந்தால் மட்டுமே சரி.
பிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் படைத்தார் என்று ஒரு நாளும் அறிவியல் சொல்லாது.
\\பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.\\ டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியல் முறைப் படி நிரூபிக்கப் பட்டதல்ல. [நிரூபிக்கப் பட்டதென்றால் எந்த வருடம் எதை நிரூபித்தார்கள் என்று சொல்லவும்]. அதை யாராவது ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய சொந்த விருப்பு/வெறுப்பாகும், அறிவியலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ReplyDelete/அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு?/
ReplyDeleteத்வறு இல்லை.உரிமை.
இது உங்கள் விருப்பம் நண்பரே,
இது நண்பர் திருச்சிக்காரனிடம் கேடக்வேண்டிய கேள்வி.அனைவரும் அணியலாம் என்று சகோ தொடர் பதிவே எழுதி வருகிறார்.தியானம் கற்றுக் கொடுக்கிறார் நானும் செய்கிறேன்.படியுங்கள்
\\எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. \\ இது அறிவியலுக்கும் பொருந்தும்.
ReplyDelete/தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது./
ReplyDeleteநண்பர் ஜெயதேவ் தாஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது.நான் தெளிவாக் சொல்லி இருக்கிரேன்.இது திராவிட பகுத்தறிவாளர்களின் செயல் என்று.இரை மறுப்பாளன் இப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையாகம் எனக்கு பொருந்தாது.
/இது அறிவியலுக்கும் பொருந்தும்./
yes it should be.ஆமாம் மதம் அறிவியல் இரண்டுக்கும் பொருந்தும்.
நன்றி
நண்பர் ஜெயதேவ் தாஸ்
ReplyDeleteசரி இந்து மதமே உண்மையானது ,அது இறைமறுப்பையும்,பரிணாமத்தையும் அங்கீகரிப்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே.பரிணாம்ம் குறித்தும் சில பதிவுகள் வரும்.அதில் விவாதிப்போம்.
நன்றி
\\Example: The tank has 30,000 litres, and 1,000 litres are taken out every day. What was the level 3 days ago?
ReplyDeleteWe know the tank has -1,000 every day, and we need to subtract that 3 times (to go back 3 days), so the change will be:
-3 × -1,000 = +3,000
The full calculation is:
30,000 + (-3 × -1,000) = 30,000 + 3,000 = 33,000
So 3 days ago there was 33,000 litres.\\
அவ்வளவு ஏன் போறீங்க, (a-b)^2 =a^2-2ab+b^2
a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது!! இது கணிதத்தின் வழியும் அல்ல!!
நண்பர் ஜெயதேவ்தாஸ்
ReplyDeleteமத்த்திற்குநான் விரோதி அல்ல.எல்லா மதங்களும் ஒன்றுதான்.
என் மனைவி குழந்தைகள் விருப்பப் படும் போது அவர்கலை வழிபட்டுத் தல்த்திற்கு அழைத்து செல்வது என் கடமை செய்கிறேன்.என் கருத்தை அவர்கள் மீது திணிப்பது இல்லை.
என் மதம் மட்டுமே 100% சரி.அதில் அறிவியல் அன்றே கூறப்பட்டு உள்ளது என்ற பிரச்சாரம் ஏமாற்று வேலை.
இன்னும் வரும் பதிவுகளிலும் பேசுவோம்!!!!!!!!!!!.
மிக்க நன்றி அடிக்கடி வாருங்கள்
/a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது!! இது கணிதத்தின் வழியும் அல்ல!!/
ReplyDeletesome link please on this .
நண்பர் ஜெயதேவ் தாஸ்
ReplyDelete1.கணிதம்,அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை விள்க்கும் ஒரு முறையாகும்.இதன் கரணமாக்வே குறியீடுகள்,வரயறுத்தல்கள்,ஃபாஃப்முலாக்கள் அனைத்து கொஞ்சம் கொஞ்சமாக் மீண்டும் மீண்டும் சோதிக்ப் பட்டு பயன் பாட்டுக்கு கல்வியாக் வந்த்ன.ஏதோ ஒரு விஞ்ஞானிக்கு கடவுள் வந்து கொடுப்பதல்ல ஃபோர்முலாக்கள். ஒருவர் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஒரு கோட்பாடு,ஃபார்முலா கொடுக்கிறார்.அதன் மீது இன்னொருவர் சில மாற்றங்கலை கொண்டு வருவார்.இது ஒரு தொடர்கதை.மதமும் இப்ப்டித்தான் வளர் சிதை மாற்றம் அடைகிறது என்றால் உங்களுக்கு மிக ஆச்சர்யமாக் இருக்கும்.
2. நீங்கள் சொலும் இரு மைனஸ் எண்களை பெருக்கினால் ஒரு பாசிடிவ் எண் வரும் என்பது நிரூபீகப்ப்டாத ஒன்று என்பது மிகவும் ஆச்சர்யமான் ஒன்று.இந்த கருத்தின் மூல சுட்டி இருந்தால் அளிக்கலாம்.இன்னும் அறிய ஆசை.ஒருவேளை உங்களின் கருத்தாக் இருந்தால் என்க்கு,யாருக்குமே ஆட்சேபனை இல்லை.
3.இப்பதிவில் சில இஸ்லாமிய பதிவுலக் நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.உங்களுக்கு பிடித்த மத்த்தை பின்பற்றுவதில் என்க்கு ஆட்சேபனை இல்லைநீங்கள்.மதம் மாறுவதென்றால் கூட அதுவும் உங்கள் உரிமை.வாழ்த்துகள்
இயற்கையின் நிகழ்வுகளுக்கு காரனம்,விளக்கம் கண்டுபிடிப்பதே அறிவியல்.ஒருவரின் மனிதில் உதிப்பதல்ல!!!!!!!!.
ReplyDeleteஇங்கே சொல்லியுள்ள இயற்கை நிகழ்வுகளுக்கு விள்க்கம் சொல்லியே பெருக்கல் விதிகள் உருவாகின!!!!!!!.
Multiplying and Dividing Negative Numbers (page 3 of 4)
http://www.purplemath.com/modules/negative3.htm
Turning from addition and subtraction, how do you do multiplication and division with negatives? Actually, we've already covered the hard part: you already know the "sign" rules:
***************
1.plus times plus is plus (adding many hot cubes raises the temperature)
2.minus times plus is minus (removing many hot cubes reduces the temperature)
3.plus times minus is minus (adding many cold cubes reduces the temperature)
4.minus times minus is plus (removing many cold cubes raises the temperature)
***************
The sign rules work the same way for division; just replace "times" with "divided by". Here are a couple examples of the rules in division: Copyright © Elizabeth Stapel 1999-2011 All Rights Reserved
(Remember that fractions are just another form of division!)
Minus times minus results in a plus,
ReplyDeleteThe reason for this, we needn't discuss.
- Ogden Nash
Why is a negative times a negative a positive?
People have suggested many ways of picturing what is going on when a negative number is multiplied by a negative number. It's not easy to do, however, and there doesn't seem to be a visualization that works for everyone.
http://mathforum.org/dr.math/faq/faq.negxneg.html
Is it just a convention?!!
ReplyDeletehttp://www.sodahead.com/fun/why-does-a-double-negative-equal-a-positive-but-two-positives-dont-equal-a-negative/question-341297/
It is nice my dear friend .Great!!!!!!!.
ReplyDeleteThank you