Showing posts with label chess. Show all posts
Showing posts with label chess. Show all posts

Saturday, September 10, 2011

காஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி

கேரி காஸ்பரோவ் உலகின் மிக சிறந்த வீரர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.பொ.ஆ 1997 இல் அவர் IBM இன் கணினி டீப் ப்ளூ எதிராக ஒரு சதுரங்க ஆட்டத்தில் விளையாடினார்.அதில் காஸ்பரோவை கணிணி வென்று விட்டது. இந்த காணொளி அது குறித்த நிகழ்வுகளை காட்டுகிறது.
ஏற்கென்வே 1996ல் நடந்த போட்டியில் கணிணியை காஸ்பரோவ் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 . இது காஸ்பரோவ், அவரது மேலாளர், செஸ் வல்லுநர்கள், மற்றும் IBM டீப் ப்ளூ அணி உறுப்பினர்கள், போன்ற்வர்களின் நேர் காணல்கள்,போட்டி குறித்த பல் வர்ண்னைகள்,குறிப்புகள் என்று பல் விஷயங்களை அலசுகிற‌து கண்டு களியுங்கள்!!!!!!!





The 1996 match
Game #WhiteBlackResultComment
1Deep BlueKasparov1–0
2KasparovDeep Blue1–0
3Deep BlueKasparov½–½Draw by mutual agreement
4KasparovDeep Blue½–½Draw by mutual agreement
5Deep BlueKasparov0–1Kasparov offered a draw
after the 23rd move.
6KasparovDeep Blue1–0
Result: Kasparov – Deep Blue: 4–2
The 1997 rematch
Game #WhiteBlackResultComment
1KasparovDeep Blue1–0
2Deep BlueKasparov1–0
3KasparovDeep Blue½–½Draw by mutual agreement
4Deep BlueKasparov½–½Draw by mutual agreement
5KasparovDeep Blue½–½Draw by mutual agreement
6Deep BlueKasparov1–0
Result: Deep Blue–Kasparov: 3½–2½


http://en.wikipedia.org/wiki/Deep_Blue_versus_Garry_Kasparov

பாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி



பாபி ஃபிஷர் (Robert James "Bobby" Fischer, மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) அமெரிக்காவில் பிறந்த சதுரங்கமேதை ஆவார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவர்தான்.
 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
இவர் 13 வயதில் ஆடிய ஒரு சதுரங்க ஆட்டம் இந்நூற்றாண்டிலேயே சிறந்த ஆட்டமாக் கருதப் படுகிறது அது பற்றிய சுட்டி.
இதன் காணொளி



1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்.. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்.

இவர் எழுதிய என் மறக்க முடியாத 60 சதுரங்க ஆட்டங்கள் [My memorable 60 games ] என்னும் நூல் மிக பிரபலம் ஆனது.அதன் மின் புத்தகம் இங்கே தரவிறக்கலாம்.


மிகப் பெரிய மேதை என்றாலும் பல விஷயங்களில் சமுகத்தோடு ஒத்துப் போக முடியாததால் அங்கீகாரத்தை இழந்து வரலாற்றில் மறைந்து போன பாபி ஃபிஷர் பற்றிய வாழ்க்கை சரித காணொளி.