Saturday, September 10, 2011

பாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி



பாபி ஃபிஷர் (Robert James "Bobby" Fischer, மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) அமெரிக்காவில் பிறந்த சதுரங்கமேதை ஆவார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவர்தான்.
 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
இவர் 13 வயதில் ஆடிய ஒரு சதுரங்க ஆட்டம் இந்நூற்றாண்டிலேயே சிறந்த ஆட்டமாக் கருதப் படுகிறது அது பற்றிய சுட்டி.
இதன் காணொளி



1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்.. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்.

இவர் எழுதிய என் மறக்க முடியாத 60 சதுரங்க ஆட்டங்கள் [My memorable 60 games ] என்னும் நூல் மிக பிரபலம் ஆனது.அதன் மின் புத்தகம் இங்கே தரவிறக்கலாம்.


மிகப் பெரிய மேதை என்றாலும் பல விஷயங்களில் சமுகத்தோடு ஒத்துப் போக முடியாததால் அங்கீகாரத்தை இழந்து வரலாற்றில் மறைந்து போன பாபி ஃபிஷர் பற்றிய வாழ்க்கை சரித காணொளி.

8 comments:

  1. அட! இவருடைய திறமையை சொல்லனும்ன்னா நிறைய சொல்லலாம், இவர் ஒரு ஏகலைவன்., குரு என்று யாரும் கிடையாது, தானாகவே நிறைய புத்தகங்கள் , பயிற்சி ஆட்டங்கள் என்று தன்னையே செதுக்கியவர்.

    ரஸ்சியர்களின் ஆதிக்கத்தில் இருந்த செஸ் உலகத்தை முதன் முதலின் தனி ஒரு ஆளாக உடைத்தவர் ( cababalanca - கியூபா ., போன்ற ஆட்கள் அவ்வப்பொழுது வந்தாலும் இவரே புகழ் வாய்ந்த ரசியர் அல்லாத செஸ் மேதை!)., அதன் பின் உலகம் தெரிந்த ரசியர் அல்லாத செஸ் மேதை நம்ம ஆனந்த்!

    தற்போது கார்ல்சென், நார்வே போன்ற பல ரசியர் அல்லாத செஸ் பிரபலங்கள் இருந்தாலும் பிஷேர் என்று தனி சிறப்பு வாய்ந்தவரே.

    செஸ் குறித்து பக்கம் பக்கமாக எழுதும் அடிப்படி தகுதி அடியேனுக்கு இருந்தும் அதனை எழுதியதில்லை., காரணமும் தெரியவில்லை., இந்த இடுக்கை அது குறித்த எனது ஆவலை அதிகரிக்கிறது!

    அடியேனின் செஸ் ரேட்டிங் - 1800 ELO ( ananth rating? - 2800!!)

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே,
    நல்ல திற்மையானவர் என்றாலும் என்ன காரணத்தினாலோ சரியான் அங்கீகாரம் பெறாம்லே சென்று விட்டர்.பாவம் !
    புத்தகம் பதிவிறக்கி கொள்ளுங்கள். அந்த மறக்க முடியாத ஆட்டங்களை ஆடி பாருங்கள்.குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க்லாம்.
    நன்றி

    ReplyDelete
  3. /அடியேனின் செஸ் ரேட்டிங் - 1800 ELO ( ananth rating? - 2800!!)/
    Hearty congratulations brother.

    ReplyDelete
  4. எனது செஸ் அறிவுக்கு எட்டியவரை கடந்த ஐம்பது ஆண்டு கால செஸ் விளையாட்டுகளை அவ்வப்பொழுது விளையாடி பார்த்தவன் என்ற வகையிலும், செஸ் நிபுணர்களில் அதிகம் பேர் செய்த விமர்சனங்களை படித்த வகையுளும் பார்த்தால் காஸ்பரோவ் - தான் இதுவரையிலான வீரர்களில் மிக மிக சிறந்த செஸ் வீரர். நம்ம ஊர் ஆனந்த் ராபிட் செஸ்ஸில் வேண்டுமானால் காஸ்பரோவ் -வைவிட திறமையானவர் என்று சொல்வேன்.

    ReplyDelete
  5. வண்க்கம் நண்பர் ஷர்புதீன்
    காஸ்பரோவ் சிறந்த வீர்ர்தான்.காஸ்பரோவ் &கார்போவ் போடிகள் மிக பிரபலம்.அவரும் அரசியல் என்று இறங்கி பிரசினைகளை சந்தித்தார்.
    காஸ்பரோவுக்கே த்ண்ணி காட்டிய டீப் ஃப்ளு கணிணி பற்றி ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
    __________
    என்ன ஓபெனிங் உங்களுக்கு பிடிக்கும்?.
    நமக்கு வெள்லை எனில் ரை லோபஸ்,கருப்பு எனில் சிசிலியன் அல்லது கேரோ கான் தடுப்புமுறை பிடிக்கும்.
    நன்றி

    ReplyDelete
  6. செஸ் விளையாட்டை பற்றி எழுதுவது என்பது மிக பிடித்த பானம் ஒன்றை மனம் விரும்பும் நேரம் ஒன்றில் பருகுவதை போல.,

    எனது செஸ் அறிவு மிக குறைந்தது எனினும் , அது குறித்து அறிந்த்கொள்வதில் மிக மிக ஆவல் உண்டு!

    செஸ் விளையாட்டை பொறுத்தவரையில் எனக்கு பிடித்த ஓபனிங் என்று குறிப்பிடும்படி ஒன்று இல்லை,( பெரும்பாலும் வெள்ளை எனில் e4 Or d4, கருப்பு எனில் , மேல சொன்ன ஒபெனிங் -க்கு பதிலடியாக e5 Or c5, Or Nf6) ஆனால் இதுவரையில் விளையாடியதில் மற்றவர்கள் எனது பலமாக குறிப்பிட்டது - end game மற்றும் tactics!

    சில நாட்களுக்கு முன் விளையாடிய கேம் ஒன்றின் PGN - LIGHTNING GAME ( 1min +1 sec game )
    1. e4 e5 2. Nf3 d6 3. Bc4 Nf6 4. Nc3 Be7 5. d4 exd4 6. Nxd4 Bd7 7. O-O c5 8. Nb3 Bc6 9. Nd5 Nbd7 10. Nxe7 Qxe7 11. Re1 O-O 12. Bg5 Qe5 13. f4 Qxb2 14. Qxd6 Bxe4 15. Rxe4 Qxc2 16. Qd3 Qxd3 17. Bxd3 Nxe4 18. Bxe4 Rab8 19. Rc1 b6 20. Nd2 f5 21. Bd5+ Kh8 22. Nf3 h6 23. Bh4 Rfe8 24. Bc6 Nf6 25. Bxe8 Rxe8 26. Bxf6 gxf6 27. Re1 Rxe1+ 28. Nxe1 Kg7 29. Kf2 Kf7 30. Ke3 Ke6 31. Kd3 b5 32. Nc2 a5 33. Ne3 c4+ 34. Kc3 h5 35. h4 Kf7 36. a3 Ke6 37. Kd4 Kd6 38. Nxf5+ Kc6 39. Ng7 c3 40. Kxc3 Kc5 41. Nxh5 1-0

    , இத அப்படியே இந்த லிங்கில் (http://www.chessvideos.tv/chess-game-uploader.php) போய் பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்தால் , நான் விளையாடியதை எந்த வித டவுன்லோட் பிரச்சனைகளும் இல்லாமல், நீங்கள் பார்க்கலாம்!

    நீங்கள் விளையாடி பார்க்க அருமையான தளம் என்ற வகையில் எனது பரிந்துரை - WWW.CHESSCUBE.COM

    ReplyDelete
  7. காஸ்பரோவின் deep blue கம்புட்டர் கேம் , காஸ்பரோவின் திறமையில் ஒரு மகுடமே., யாராலும் ஜெயக்கமுடியாது என்று சவால் விட்டு விளையாடி பார்த்த கேமில் , கம்புட்டரை ஜெயத்த காஸ்பரோவின் ஆட்ட திறனை ஓரளவிற்கேனும் செஸ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் சமாச்சாரம் அது!

    ReplyDelete
  8. நன்றி த்லை
    கலக்கிறீங்க.காஸ்பரோவும் கணிணியும் பற்றிய காணொளி பதிவு இட்டுள்ளேன்.கண்டு மகிழுங்கள்.
    நன்றி

    ReplyDelete