Sunday, September 11, 2011

எய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா?:காணொளி(18+)


இந்த பதிவில் நண்பர் ஏன் எய்ட்ஸ் நோய்க்கு காரணமாக கூறப்படும் HIV கிருமி கொசு மூலம் மலேரியா கிருமி போல் பரவுவதில்லை என்ற கருத்து நம்க்கு ஒரு தேடலை தோற்றுவித்தது.

எய்ட்ஸ் கிருமி முதலில் இருந்தே எந்த மனித உடலில் இருந்திருந்தாலும் நாகரிகமற்ற வாழ்க்கை முறை காலங்களில் பலருக்கு பரவி மனித இனமே அழிந்து இருக்கும்.

சரி இது ஒரு கிருமியின் பரிணாம் வளர்ச்சி என்று கூறிவிட்டு ஆகவே இப்போது மட்டும் தாக்குகிறது என்று கூறிவிட்டு சென்று விடலாம்.இப்போது இதுதான் காரணமாக் கூறப்படுகிறது. 
___________________
சரி எய்ட்ஸ் என்றால் என்ன?

எய்ட்ஸ் நோய் என்றால் பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட கிருமியால்(வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்.

இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்கள் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு (Mucous membrane) அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
______________

எய்ட்ஸ் என்னும் நொய் உண்மை.அது உடலின் வெள்ளை அணுக்களை குறைத்து எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக் அழிக்கிறது என்பது உண்மை.
ஆனால் இதற்கு இன்னும் குணப்படுத்தும் மருந்து கண்டறியப் படவில்லை.

,வேலை வாய்ப்பு,குடியுரிமை போன்ற பல் விஷயங்களிலும் இந்த HIV பரிசோதனை செய்யப் படுகிறது.

இக்காணொளி எய்ட்ஸ்க்கு காரணம் HIV கிருமி என்பது பொய்,ஏமாற்று வேலை என்று கூறுகிறது. பரிசோத்னை முறைக்கு காப்புரிமை பெற்றுள்ள அமைப்புகள் இந்த பொய் பிரச்சாரத்திற்கு காரணம் என்கிறனர்.எய்ட்ஸ்க்கு காரண்மாக வேறு சில விஷயங்களை கூறுகின்றனர்.

பல் விஷயங்களை கூறி,பல் வாதங்களை முன் வைக்கின்றனர்.

இதில் நம் கருத்து ஒன்றுமில்லை.காணொளி பாருங்கள்.




இது குறித்து தெரிந்த மருத்துவம் தொடர்புள்ளவர்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81




Deconstructing The Myth Of AIDS Gary Null



நன்றி 

8 comments:

  1. அனுமானங்கள் தான் அறிவியலை உண்டுபண்ணும் இங்கு நாம் அனுமானங்கள் புதிய அறிவியல் கருத்திற்கு வித்திடலாம்........ எனவே அனுமானங்கள் சிறந்தவை... தொடருங்கள்...

    ReplyDelete
  2. வாங்க நண்பரே,
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. HIV: The Ultimate Evolver (1 of 3)
    http://evolution.berkeley.edu/evosite/relevance/IA2HIV.shtml

    ReplyDelete
  4. எய்ட்ஸ் என்பது ஒரு நிலை (condition), அதை நோய் என்பது குறிப்பது சரியாக இருக்குமா?

    இரண்டு காணொளியில் பார்த்தது, HIV கிருமியை தவிர்த்து எய்ட்ஸுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன் என்கிறாரகள்.

    நான் google செய்த வகையில் hiv கிருமி இல்லாத எய்ட்ஸ் நிலையை காண முடியவில்லை. ஆனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் immune suppressant-ல் இருப்பார்கள்.


    எய்ட்ஸ் நிலை இருந்தாலும் நோய் தோற்று இல்லாமல் இருந்தால் உயிருடன் வாழ முடியும் அல்லவா?.

    எய்ட்ஸ் மருந்து பற்றியது, மருந்து எங்கள் மருத்தவத்தில் உண்டு என்பவர்கள் அதை பெரும் மருந்து நிறுவனங்கள் மறைகின்றன என்பவர்களுக்கு- தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தில் ஒரு பொருளுக்கு சந்தை உள்ள நிலையில் அதை யாராலும் மறைக்க முடியாது. apple சீனாவில் துபாக்கூர் நிறுவனம் தொடங்கியவர், மற்ற மாற்று மருத்துவ துறைகளில் சிகிச்சை மருத்துவம் இருந்தால் அவர்கள்தான் உலகத்தில் கோடிஸ்வரர்களாக இருப்பார்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் நரேன்,
    இப்படி ஒரு கருத்து இருப்பதை பதிவு செய்தேன்.எனக்கும் இதில் குழப்பமே மிஞ்சுகிறது.இது conspiracy theory ஆக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
    நன்றி

    ReplyDelete
  6. நான் முன்பு பணியில் சேர்ந்த சமயத்தில் முதல் இரண்டு வருடம் டிரைனிங். பயிற்சிக்கு தனி இடம் உண்டு. எங்கள் நிறுவனத்துக்கு தனியாக மருத்துவமனையும் உண்டு.

    பயிற்சி மாணவர் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசி போட்டனர். ஒவ்வொரு மாணவருக்கும் என்று கணக்குப் போட்டு தேவையான அளவுக்கு சிரிஞ்சும் நீடில்களும் வழங்கப் பட்டன. ஆண் பணியாளர் ஒருத்தர்தான் எல்லோருக்கும் வூசி போட்டார். ஒரே சிரிஞ்சையும், நீடிளையும் உபயோகித்து நான்கு மாணவர்களுக்கு வூசி போட்டார். நான் அவரிடம் இது அபாயமானதல்லவா என்று கேட்டேன்.

    அவர் தெனா வெட்டாக என்னிடம் உன் பிரண்ட்சுகளுக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். நான் மவுனமாக இல்லை என தலை யாட்டின்னேன். உனக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். மவுனமாக இல்லை என தலை ஆட்டினேன். அப்ப ஒரு ஆபத்தும் இல்ல போ என்றார்.

    சக நண்பர்கள் வேண்டாமா, நாம டிரைனிங் முடிந்து பணியில் கண்பாரம் ஆகும் வரை சைலண்டாக இருப்போம் என்று சொல்லி விட்டனர். இத்தனைக்கும் எங்கள் நிறுவனம் மத்திய அரசை சார்ந்தது.

    ReplyDelete
  7. வாங்க நண்பரே,
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. //thiruchchikkaaran said...

    அவர் தெனா வெட்டாக என்னிடம் உன் பிரண்ட்சுகளுக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். நான் மவுனமாக இல்லை என தலை யாட்டின்னேன். உனக்கு எய்ட்ஸ் இருக்கா என்றார். மவுனமாக இல்லை என தலை ஆட்டினேன். அப்ப ஒரு ஆபத்தும் இல்ல போ என்றார். //

    அறியாமையின் மற்றுமொரு பக்கம் ஊசிப் போட்டவர் சொன்னது.

    ReplyDelete