பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர் அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன.
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன..
http://en.wikipedia.org/wiki/Bermuda_Triangle
http://en.wikipedia.org/wiki/Bermuda_Triangle
அது பற்றிய காணொளி கண்டு களியுங்கள்!!!!!!!
வணக்கம் நண்பா,
ReplyDeleteஇன்று தான் உங்கள் வலைப் பதிவினை அறிந்தேன்,
பெர்முடா முக்கோணம் பற்றிய அருமையான வீடியோத் தொகுப்பினைத் தந்திருக்கிறீங்க.
பார்த்து விட்டு வருகிறேன்,
நன்றி சகோ
ReplyDeleteநண்பர் சார்வாகான்
ReplyDeleteபெர்முடா முக்கோண மர்மங்கள், விடை கண்டுபிடித்தாலும், நமக்கு மர்மங்கள் பிடிக்கும் என்பதால், அது மர்மமாகவே இருக்க விரும்புவோம்.
//Skeptical researchers, such as Ernest Taves[18] and Barry Singer,[19] have noted how mysteries and the paranormal are very popular and profitable. This has led to the production of vast amounts of material on topics such as the Bermuda Triangle. They were able to show that some of the pro-paranormal material is often misleading or inaccurate, but its producers continue to market it. Accordingly, they have claimed that the market is biased in favor of books, TV specials, and other media that support the Triangle mystery, and against well-researched material if it espouses a skeptical viewpoint.//
இதில் வியாபாரம் நோக்கமும் இருக்கின்றது.
அடுத்து அந்த காணொளியில்...பூமியின் magnetic field புரிந்தது. magnetic north and south poles are changing என்று ஒரு discovery channel ஆவணப்படத்தில் பார்த்தாக ஞாபகம். magnetic fields பற்றி அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி
நமது நண்பர்களுக்கு
ReplyDeleteDavid Kusche pointed out a common problem with many of the Bermuda Triangle stories and theories: "Say I claim that a parrot has been kidnapped to teach aliens human language and I challenge you to prove that is not true. You can even use Einstein's Theory of Relativity if you like. There is simply no way to prove such a claim untrue. The burden of proof should be on the people who make these statements, to show where they got their information from, to see if their conclusions and interpretations are valid, and if they have left anything out."[17]
இது எல்லா துறைக்கும் பொருந்தும்...
நிறைய பதிவர்கள் பெர்முடா முக்கோணம் பற்றிச் சொல்லி விட்டார்கள்.ஆனால் காணொளியுடன் பதிவை இணைத்தவர் நீங்கள் மட்டுமே.
ReplyDelete50.22 நிமிடங்கள் என்பதாலும் தரவிறக்க நேரமாகுமோ என்ற எண்ணத்தில் முன்னாடியே பின்னூட்டம் போட்டு விட்டேன்:) இனி காணொளிக்கு.
பெர்முடா பற்றிய பிரமாதமான பதிவுக்கு நன்றி.......
ReplyDeleteஅருமையான வலைபதிவு. அறிவியல் தகவல்கள் பற்றிய பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!
ReplyDelete