இப்பதிவில் நகைச்சுவையாக இப்படி கூறியிருந்தேன்."இந்த இளைய பூமி கொள்கையாளர்கள் எல்லா விலங்குகளும் டைனோசார் உட்பட மனிதனுடன் படைக்கப் பட்டன என்றே நம்புகிறார்கள்.டைனோசார்கள் எல்லாம் நோவாவின் வெள்ளப் பெருக்கில் அழிந்துவிட்டன என்ற கருத்தும் உண்டு.டைனோசார் அழிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் தோன்றியது என்றால் நம்மை பார்த்து ஒரு புன்முறுவல் புரிவார்கள்."
அத்னை உண்மையாக்கி சில பரப்புரைகள் வெளிவர ஆரம்பித்து விட்டது. இப்பதிவில் இத்னை பற்றிப் பார்ப்போம். முதலில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
1.அறிவியல் மதத்தை கண்டு கொள்வதில்லை,ஆனால் மதங்கள் அறிவியலின் எந்த ஒரு புதிய கண்டு பிடிப்பும் மதத்தின் ஆதார விஷயங்களை பொய்யாக்கி விடக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கின்றனர்.
2. ஏதேனும் நன்றாக நிரூபிக்கப் பட்ட கருத்தாக இருந்தால் இது ஏற்கெனவே மத புத்தக்த்திலும் கூறப்பட்டது என்று வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்.மத புத்தகத்தில் கூறப்படும் கருத்து நேரெதிராக இருந்தால் ,அப்போதைய புரிதல் தவறு இப்படித்தான் சரியாக அர்த்தம் கொள்ள வேண்டுமென்று கூறுவர்.
3.இந்த பரிணாமக் கொள்கை மட்டும் அபிரஹாமிய மத வாதிகளை மிகவும் தொல்லைப் படுத்துகிறது. இந்து மதத்தில் பரிணாமம் குறியீடாக விஷ்ணுவின் அவதாரங்களில் கூற்ப்பட்டுவிட்டது,ஆகவே ஏற்பதில் ஆட்சேபனை இல்லையென்று கூறுகிறார்கள்.ஆபிரஹாமிய மத படைப்பியல் கொள்கையின் படி இறைவன் ஆறு நாட்களில் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தார். ஆதம்,ஏவாள் இருவரை படைத்தார். இவர்களில் இருந்தே சந்ததி பலுகி பெருகியது..
ஆகவே பரிணாமக் கொள்கையை மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் மதவாதிகள். இதற்காக சில பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படை விஷயங்கள் சில
பரிணாமக் கொள்கையின் படி ஒரு செல் உயிரில் இருந்து, இயற்கைத்தேர்வு(Natural Selection) மற்றும் சிறு மாற்றத் தன்மை (Mutation) காரணமாக பல செல் உயிர்கள்,...பல உயிரினங்கள் தொன்றியது.இப்பரிமாணத்தில் சிறு பரிணாமம்,(Micro evolution) பெரும் பரிணாமம்(macro evolution) என்ற பிரிவுகள் உண்டு.
மேற்கூறிய ஒரு செல்லில் இருந்து அனைத்து உயிர்களும் தோன்றியது என்பது பெரும் பரிமாணம்,ஒரு உயிரில் காலப் போக்கில் ஏற்படும் சிறு மாற்றங்கள் சிறு பரிமாணம் எனப்படுகிறது.
பரிணாமம் பற்றி பல பதிவர்கள் தமிழில் விளக்கமான் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.இது குறித்து விளக்கம் வேண்டுபவர்கள் கீழ்க் கண்ட சுட்டிகளை பார்க்கும் படி வேண்டுகிறேன்.
இந்த சிறு பரிமாணம் நேரடியாக சோதித்து அறிய முடியும் என்பதால் மத வாதிகள் இதனை மறுக்க மாட்டார்கள்.
இப்போது மதவாதிகள் பெரும்பரிமாணத்தை மட்டும் மறுத்தால் போதும். சரி என்ன விமர்சன கேள்வி எழுப்புகிறார்கள்?.
அ) ஒரு செல் உயிர்கள் எப்படி தோன்றின? அறிவியலாளர்களால் ஒரு செல் உயிரையாவது படைக்க முடியுமா?
ஆ) உலகத்தின் வயதை கணக்கிட கார்பன் டேட்டிங் முறை பயன் படுத்தப் படுகிறது. இது 60,000 ஆண்டுகளுக்குள் மட்டுமே துல்லியமாக் இருக்கும்.பரிணாம விதிப்படி மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.ஆகவே சரியாக கணிப்பதில் சில சிக்கல்கள் உண்டு.
இ) பெரும் பரிணாமம் நெரடியாக உயிரினங்களில் சோதிக்க முடியாது.[சில நுண்ணுயிர்களில் பரிணாம மாற்றம் விரைவாக நடபப்தும் அது சோதித்தறியப் பட்டதையும் மத வாதிகள் ஏற்பதில்லை.]
ஈ) இறைவைன் படைத்த அனைத்து உயிரினங்களும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே இருக்கின்றன.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் பரிணமிக்காது என்பதை மத வாதிகள் நிரூபிதால் மட்டுமே துல்லியமற்ற மத படைப்பியல் கொள்கையை காக்க முடியும்.
இதில் இன்னொரு நகைச்சுவையான விஷயம் உண்டு.பரிணாமம் ஒருவேளை தவறென்றால் கூட மத படைப்பியல் கொள்கை சரியாகி விடாது.ஆனால் ஒரு அளவிற்கு தாக்கு பிடிக்கலாம்.
உ) மத படைப்பியல் கொள்கையை வரையறுத்து பரிணாம கொள்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பரிணாமமே வாய்ப்பு அதிகமாக இருப்பதால்,பரிணாம்த்தை விமர்சிக்கும் மத வாதிகள் மத படைப்பியல் கொள்கையை விவாதிக்க மாட்டார்கள்.
பரிணாமம் என்பது கிடைத்த படிமங்கள்,காலக் கணக்கீடுகள் ஆகிய சான்றுகளின் மீது கட்டமைக்கப் பட்டது.பூமியில் வாழ்ந்த 99% உயிரினங்கள் இல்லாமல் போய் விட்டன.இவை அனைத்தையும் விளக்கும் மாற்று அறிவியல் கொள்கை எதுவும் இப்போது அறிவியலாளர்களால் முன் வைக்கப் படுவது இல்லை.
பரிணமத்தை விமர்சிப்பவர்கள் ஒரு மாற்றுக் கொளகை முன் வைக்க வெண்டும் மற்றும் அது இந்த சான்றுகள் கால்க் கணக்கீடுகள் அனைத்தையும் மெய்ப்பிக்க வேண்டும் .அப்போதுதான் அது ஏற்றுக் கொள்ளப் படும்.
பரிணாமம் என்பது கிடைத்த படிமங்கள்,காலக் கணக்கீடுகள் ஆகிய சான்றுகளின் மீது கட்டமைக்கப் பட்டது.பூமியில் வாழ்ந்த 99% உயிரினங்கள் இல்லாமல் போய் விட்டன.இவை அனைத்தையும் விளக்கும் மாற்று அறிவியல் கொள்கை எதுவும் இப்போது அறிவியலாளர்களால் முன் வைக்கப் படுவது இல்லை.
பரிணமத்தை விமர்சிப்பவர்கள் ஒரு மாற்றுக் கொளகை முன் வைக்க வெண்டும் மற்றும் அது இந்த சான்றுகள் கால்க் கணக்கீடுகள் அனைத்தையும் மெய்ப்பிக்க வேண்டும் .அப்போதுதான் அது ஏற்றுக் கொள்ளப் படும்.
ஒரு வகை ஆப்பிரிக்க குரங்கினம் பரிணாம வளர்ச்சி அடந்து மனித இனமாக [ஹோமோ சேபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மாறியது என்பது பரிணாம கொள்கை.
இன்னும் பல மனித சகோதர இனங்களான ஹோமோ எரக்டஸ்,நியாண்டர்தால்,ஹோமிநிட்ஸ் போன்ற்வையும் பூமியில் வாழ்ந்து மறைந்தன என்பதும் முக்கியமான் விஷயம்.
இன்னும் பல மனித சகோதர இனங்களான ஹோமோ எரக்டஸ்,நியாண்டர்தால்,ஹோமிநிட்ஸ் போன்ற்வையும் பூமியில் வாழ்ந்து மறைந்தன என்பதும் முக்கியமான் விஷயம்.
இறைவன் (களி)மண்ணில் இருந்து மனித்னையும்(ஆதம்),மனிதனின் விலா எலும்பில் இருந்து மனுஷியையும்(ஏவாள்) படைத்தார் என்பது ஆபிரஹாமிய மத படைப்பியல் கொள்கை.
_________
இவ்வளவும் அடிப்படை விஷயங்களே ,இப்போது பதிவுக்கு வருவோம்!!!!!!!!!!!!.
இந்த கொள்கை (ஈ)ன் படி இறைவன் படைத்த எல்லா உயிரினங்களும் சில சிறிய மாற்றங்களோடு அபப்டியே இருக்கின்றன என்று காட்டினால் தான் இறைவன் ப்டைத்தார் என்று கூற முடியும்.
டைனோசார் என்பது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன என்பது அறிவியலாளர்களின் கருத்து.கிறித்தவர்களின் ஒரு படைப்பியல் கொள்கை இளைய பூமி கொள்கை.அதாவது பூமி,பிரபஞ்சம் ,உயிரினங்கள் அனைத்தும் 6000 ஆண்டுகளுக்கு முன்(பைபிளின் படி) படைக்கப் பட்டது. இவர்கள்தான் டைனோசோரும்,மனிதனும் சம காலத்தில் வாழ்ந்தனர்,வாழ்கின்றனர் என்று பரப்புரை செய்கின்றனர்..பிற பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் இது பற்று கருத்து கூற விரும்புவதில்லை.
இளைய பூமி கொள்கையாளர்கள்(Young earth creationists) கூறுவது என்ன?
1.. டைனோசார் என்பது முற்காலங்களில் ட்ராகன்(Dragon) என்று அழைக்கப் பட்டது.
2. பலர் மார்க்கோ போலோ உட்பட இதனை பார்த்தாக ,சில சீன அரசர்கள் ட்ராகன் படை வைத்து இருந்ததாக்வும் கூறுகின்றன்ர்.
3.ஆப்பிரிக்க காங்கோ நாட்டின் இருண்ட காடுகளில் வாழும் பழங்குடியினர் இப்போதும் பார்த்தாக கூறுகின்றனர்.
_________
இக்காணொளி கிறித்தவ இளைய பூமி கொள்கையாளர்களின் பரப்புரையாகும்.இவர்களின் கூற்றுகளை எப்படி முறுப்பது என்பதை பினூட்டமிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
வாருங்கள் டைனோசாரின் கதை கேட்போம்.
இவையெல்லாம் நம்ப விரும்புபவர்கள் நம்பலாம்!!!!!!!!!!!
நண்பரே.
ReplyDeleteபரிணாமம், அதைப் பற்றின படைப்பு கொள்கையின் கேள்விகள், அதற்கான விடைகள் பதில்கள், ஆகியவற்றை பதிவுகள் மற்றும் புத்தகதிலிருந்து தொகுத்து கொண்டிருக்கிறேன்.
படைப்பு கொள்கையின் கால நேரம் பைபிலில் வைத்து 6,000 வருடம் என்று கூறலாம் அதையே கிருத்துவ படைப்புவாதிகளும் கூறுகிறார்கள்.
ஆனால் இஸ்லாத்தில் படைப்பின் கால நேரம் எவ்வளவு என்று கூறியிருப்பதை என்னால் கண்டுபிடிக்கவில்லை. இஸ்லாத்தின் படி கால நேரம் எவ்வள்வு என்று கூறினால் நன்று.
இஸ்லாமில் என்றால் குரானின் படி என்று எடுத்துக் கொள்கிறேன்.கால் கணக்கீடுகள் எதுவுமே இருக்காது.நீங்கள் தொழர் செங்கொடியின் பதிவு இது பற்றி பார்க்கவும்.
ReplyDeletehttp://senkodi.wordpress.com/2011/09/07/man-evolution-4/
அருமையாக் வாதங்களை வைக்கிறார்.
உங்களுக்கு ஏதேனும் தக்வல்கள் வேண்டுமெனில் தருகிறேன்.
நன்றி
நண்பர்களே!
ReplyDeleteபரிணாமம் குறித்த கல்வியை இணையத்தில் பெர்க்லி பல்கலைகழகம் வழங்குகிறது.அறிய விரும்புவோம் பயன் படுத்த்ங்கள்.இவை அனைத்தும் தமிழ் படுத்த வேண்டுமென்ற ஆசை உண்டு.முயற்சிப்போம்.
நன்றி
http://evolution.berkeley.edu/evolibrary/article/evo_01
நண்பர் நரேன்,
ReplyDeleteஇந்த சுட்டியை பாருங்கள் இபின் இஷாக்கின் திரு முகமதுவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக் கொண்டு ஆதமில் இருந்து முகம்து வரை பைபிள் போலவே வம்ச வரலாறு காட்டும் சுட்டி.
இத்னை ஏற்றால் குரானும் 6000 வருடம்தான்.
பிரப்ஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆன படியால் இத்னை பிரச்சாரகர்கள் வழக்கம் போல் மறுப்பார்கள்.
நன்றி
http://playandlearn.org/Genealogy/101.pdf
http://genesisden.musicdot.com/genealogy.htm
சகோ சார்வ.
ReplyDeleteதோழர் செங்கோடி தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பல விஷயங்களில் பயனுள்ளதாக உள்ளது.
அதில் பின்னூட்டமிட்ட நீங்கள், இன்னும் கீழ்பாக்கம் மெண்டல் மருத்தவமனையில் admit ஆகாமல் இருப்பது அதிசயமே. நம்மால் முடியாது.
ஒரு கேள்விக்கு பதில் தராமல் எப்படி பதில் அளிப்பது என்பதை அறிந்துக்கொண்டேன்.
சரியோ தவறோ எழுப்பும் கேள்விகளுக்கு நண்பர்கள் பதில் தந்திருக்கலாம். இதுதான் கேள்வி, இதுதான் பதில், என்று படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருக்கலாம். ஆனால் அனைவரும் அண்ணன் தளத்தையே லிங்காகுகிறார்கள்.
நன்றி.
வாங்க நரென்,
ReplyDeleteஅத்தளத்தில் சுமார் 2 வருடங்களுக்கும் மேல் பின்னூட்டம்,விவாதம் மூலமே பல் தேடல்கள் கிடைத்தது.சில தேடல்களுக்கு மட்டும் விடை கிடைத்தது.
ஒரு காரியத்தை குறித்து இருவர் மாற்று கருத்து கொண்டிருக்கும் பட்சத்த்தில் சன்றுகளை அளித்து படிக்கும் நண்பர்களின் சிந்தனைக்கு விட்டு விட வெண்டியதுதான் சரி.அனைவருக்கும் சிந்திக்கும் ,சரி தவறு பகுத்தறியும் ஆற்றல் உண்டு.
கருத்த்துக்கு நன்றி.