பாலஸ்தீன அதிபர் திரு மெஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீனத்தை உலகின் 194ஆம் நாடாக அங்கீகரிக்கும் படி ஐ நா சபையில் முறைபடி விண்ணப்பித்துள்ளார்.இது குறித்து ஐ நாவில் இபோது விவாதம் நடந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை ஐ நா 1948ல் இஸ்ரேல் என்ற நாட்டை சர்ச்சைக்குறிய முறையில் உருவாக்கியது இப்பிரச்சினைக்கு வித்திட்டது.
ஐ நா ஆங்கீகரித்த நிலப்பரப்பை விட அதிக இடம் இபோது இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ளது.
ஏற்கெனவே பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பர்வையாளர் அந்தஸ்து உண்டு.ஐ நா அங்கீகரிக்கும் பட்சத்தில் இப்பிரச்சினை தீர்ந்து விடும் வாய்ப்பு உருவாகும்.
பலஸ்தீன ராமல்லாவில் ஆயிரக்கணக்கான் மக்கள் எழுச்சியோடு பிரகடனத்தை எதிர் நோக்கி உள்ளார்கள்.
இது நடக்க நாமும் வாழ்த்துகிறோம்.இது நடந்து அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப் படும் வண்ணம் பிற பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
வழக்கம்போல் இஸ்ரேல்+அமெரிக்கா இதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஐ நா பாதுகாப்பு அமைப்பின் 15 நாடுகளில் 9 நாடுகளின் அங்கீகாரம் தேவை ஏற்கெனவே இந்தியா உட்பட்ட 6 நாடுகள்[China, Brazil, India, Lebanon, Russia and South Africa]ஆதரவு தெரிவித்து உள்ளன.
பிற நாடுகள்
இதில் கொலம்பியா கல்ந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிவிட்டது.பாலஸ்தினர்களின் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகள்,இது வெற்றி பெற்றால் ஈழப்பிரசினையும் தீரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அல்ஜசீரா தொலைக்காட்சி நேரலையாக ஒரு இணையப் பக்கம் இது தொடர்பான செய்திகளை பகிர்ந்து வருகிறது.
இது வெற்றி பெற வாழ்த்துகிறோம்.இது நடந்து அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப் படும் வண்ணம் பிற பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
உங்களைத் தேடிப்பிடித்து வந்ததற்கு நல்ல செய்தியை தருகிறீர்கள்.
ReplyDeleteபாலஸ்தீன நாடு அங்கீகரிக்க அமெரிக்கா சரியென்று சொன்னாலும் இஸ்ரேல் தனது பிடிவாதத்தில் இன்னும் நாட்களை நகர்த்தவே முயற்சி செய்யும்.
எப்படியிருந்த போதும்,வன்முறைகளிலிருந்து விலகி ஐ.நாவில் விண்ணப்பிக்கும் அளவுக்கு பாலஸ்தீனீயர்களின் நகர்வு வரவேற்க தக்கதே.
பகிர்வுக்கு நன்றி.
வாங்க சகோ
ReplyDeleteபாலஸ்தீனர்கள் போராட்டத்தின் நியாயத்தை ஆக்கபூர்வமாக் எடுத்துரைக்கும் திரு மெஹ்மூத் அப்பாஸின் முயற்சி பாராட்டுக்கு உரியது.ஒரு பேச்சுக்கு இம்முறை அமெரிக்க இஸ்ரேல் தடுக்கிறது என்றாலும் அது அவர்கள் தரப்பு வாதங்களை பொய்யாக்கி விடும்.இதே மாதிரித்தான் இஸ்ரேல் உருவாக்கப் பட்டது என்பதை இருவரும் மறப்பது அநியாயம்.
பாலஸ்தீன போராட்டத்திடிற்கு தமிழர்கள் மட்டுமல்ல ,மனித உரிமை மதிப்பவர்கள் அனைவருமே ஆதர்வு கொடுக்க வேண்டும்.
இன்று பாலஸ்தீனம் நாளை ஈழம் நல்லதே நடக்கும் சகோ!!!!!!
நன்றி