நமது தலைநகர் டெல்லி அருகே உள்ள சோனா பட் என்னும் இடத்தை மையமாக் கொண்டு 4.2 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்..
சரியாக இரவு 11.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சேதம் ஒன்றும் குறிப்பிட்த் தக்க அளவு இல்லை என்றலும் மக்கள் அச்சம் கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன மக்கள் தொடர்ந்து வீதிகளிலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம்
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம்அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.
பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும்பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
நில நடுக்கம் வரும் வாய்ப்பு உள்ள இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர்த்து வருமுன் காப்போனாக் பதுகாப்பான வாழ்வு முறையை அமைத்தல் நல்லது.இக்காணொளி இது குறித்து சில விஷயங்கலை கூறுகிறது.
கவலையான விடயம்,
ReplyDelete4.2 ரிக்டர் என்பது சிறிய அளவிலான அதிர்வுகளை மாத்திரம் ஏற்படுத்தும் என்றாலும்,
கட்டடங்கள் அசைந்தாலே உயிர்ச் சேதங்கள் வந்து விடும்,
இறைவனும், இயற்கை அன்னையும் தான் டெல்லி மக்களுக்காக தம் கோபத்தினைக் குறைக்க வேண்டும்
வங்க நண்பரே,
ReplyDeleteஇது போல் நடக்கும் வாய்ப்பு உள்ள இடங்களில் மக்கள் நெருக்கம் குறைத்தல்,வீடு கட்டுமானம் இலேசான பொருள்கள் கொண்டு கட்டி,அடுக்கு மாடி குடியிருப்புகளை தவிர்தால் சேதம் தவிர்க்க முடியும்.
நன்றி