Tuesday, September 27, 2011

அணு துகள் உடைக்கும் சுத்தியல்! பெரும் துகள் உடைப்பான்(LHC):காணொளிகள்


அணு துகள் இயக்கவியளின் பல கேளிவிகளுக்கு ஆய்வு ரீதியாக் விடை தேடும் முயற்சியாக அமைக்கப்பட்டதுதான் எனப்படும் பெரும் துகள் உடைப்பான்(முடுக்கி)(Large Hadron Colloider).

இது ஃப்ரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனிவா அருகில் அமைக்கப் பட்டது. இது ஐரோப்பிய நுயுக்ளியர் ஆய்வகத்தால் (European Organization for Nuclear Research :CERN) அமைக்கப்பட்டது.
இது வட்ட வடிவ குழாய் போன்ற 27 கி.மீ சுற்றவு கொண்டது. 175 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதிக அளவு ஆற்றல் கொண்ட ப்ரோட்டான்களை(protons) நேர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் உடைப்பான்(முடுக்கி (particle accelerator) ஆகும்.

இதன் முக்கியமான பணிகள்

1. ஹிக்ஸ்(Higgs particle) துகள் எனப்டும் அடிப்படை அணு உப துகளை தேடுதல்.

2.அணு துகள்களில் உன்னத‌ சமநிலை எனப்படும் super symmetry உள்ளதா?

3.பல பரிமாணங்கள்(dimensions) என்பது உண்மையா?

4. கருப்பு விந்தை பொருள் எனப்படும் dark matter என்பது என்ன? .அதனை அணு துகள்கள்கள் மூலம் உருவாக்க முடியுமா?

இந்த ஓவ்வொரு கேள்விகளை புரிந்து கொள்ளவே சில பதிவுகள் இடவேண்டும் எனினும் அது குறித்தும் முயல்வோம்.

இப்போது இந்த பற்றிய இரு காணொளிகளை காணுங்கள்.முதல் காணொளி ஒரு ஃபோட்டானை உடைத்து அதில் உள்ள உப துகள்கள் சிதறும் பொது  பொருள்(matter) உருவாகிறதா என்ற பெரு விரிவாக்க கொள்கையின்(origin of big bang) மூலம் பற்றிய ஆய்வு நடத்திய பற்றியது.

The Big Bang Machine


இரண்டாவது காணொளி இந்த உடைப்பான்(முடுக்கி) கொண்டு இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து விள்க்குகிறது.கொஞ்சம் எளிமையாகவே அனைவருக்கும் புரியும் வண்ணம் தயாரித்து இருப்பது சிறப்பு.கண்டு மகிழுங்கள்!!!!!!!!!!!
 CERN Stockshots 2011: the experiments of the LHC


5 comments:

  1. அருமையான காணொளி. அணுவை atom பற்றி முதன் முதலில் சொன்னது இந்தியா என்கிறது முதல் காணொளி. அதவும் 6th century B.C. யில்.
    அதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் இருந்தால் தர வேண்டுகிறேன்.

    இரண்டாவது காணொளியில் voice over இல்லை.

    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் நரேன்
    அணுவை முதலில் இந்தியர்கள் கண்டு பிடித்ததாக கூறும் செய்திகள் தேடி பார்க்கிறேன்.பிரபஞ்ச்த்தின் பழமை,பூஜ்யம்(ஜிரோ) போல் இதுவும் ஒரு ஆச்சரியமான் விஷயமே.அக்கால விஞ்ஞானிகள் பாஸ்கரா ஆர்யபட்டா போன்றோரின் கண்டுபிடிப்புகள் மலைக்க வைக்கின்றன.உலகின் வரலாற்றில் கிரேக்கர்களுக்கு இணையாக‌ அறிவியல் மற்றும் தத்துவத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.பிறகு எப்படியோ நிலை பிறழ்ந்து விட்டார்கள்.
    நன்றி

    ReplyDelete
  3. நரேன்
    இத்தளங்கள் கொஞ்சம் தகவல்கள் பகிர்கின்றது.படித்து பாருங்கள். இது குறித்து பல தேடல்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் இது குறித்து ஆர்வம் இல்லை.நீங்கள் செய்யலாம்.
    நன்றி
    http://india_resource.tripod.com/upanishad.html
    http://india_resource.tripod.com/physics.htm
    http://india_resource.tripod.com/mathematics.htm

    ReplyDelete
  4. வ்ருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி சகோ தமிழன்.
    http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II
    http://www.archive.org/details/The_Aryabhatiya_of_Aryabhata_Clark_1930

    ReplyDelete
  5. @சார்வாகன் ,
    இனிமேல் தான் காணொளியை பார்க்கவேண்டும். download செய்து விட்டேன்.

    //உலகின் வரலாற்றில் கிரேக்கர்களுக்கு இணையாக‌ அறிவியல் மற்றும் தத்துவத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.பிறகு எப்படியோ நிலை பிறழ்ந்து விட்டார்கள்.//
    நம்மிடம் இருந்து தான் மற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள். எப்போது பாரதத்துக்கு அந்நியர்கள்வந்தார்களோ அப்போது நமக்கு சனி பிடித்தது.. இன்னும் அது நம்மை விடவில்லை.

    Tamilan

    ReplyDelete