Tuesday, July 26, 2011

பைபிளின் இரகசியங்கள்.


பைபிள் அல்லது விவிலியம் பற்றி அகழ்வாராய்சியாளர் Dr Francesca Starakopoulou ( University of Exeter.) வழங்கும் காணொளிபார்க்கப் போகிறோம்.இதில் 12 ப்குதிகள் உல்ளன.ஒவ்வொரு நான்கு பகுதியும் ஒவ்வொன்றாக‌ மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகின்றன.

1.முதல் கேள்வி(1_4)அரசன் டேவிட்(தாவூத் அல்லது தாவீது)ன் சாம்ராஜ்யம் இருந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் உறிதிப் படுத்துகின்றனவா?
பைபிளின் கதைகளில் அரசன் சாலமன்(சுலைமான்) கால்த்தில் இருந்து மட்டுமே ஒரு அளவிற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உண்டு.அதற்கு முந்தைய கதைகளான ஆதம்,நோவா,ஆபிரஹாம்,மோசஸ் முதலிய   கதைகளுக்கு ஆதாரங்கள் இல்லை.டாக்டர்.ஃப்ளோரன்ஸ்கா சாலமனின் தந்தையாக் கூறப்படும் டேவிட்டின் காலத்திற்கு நம்மை அழைத‌து சென்று சான்றுகளை ஆய்கிறார்.

2.இரண்டாம் கேள்வி(5_8).பழைய ஏற்பாட்டு கடவுளுக்கு மனைவி உண்டா?.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாய‌மான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டா?இது பைபிளில் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தேடப் படுகிறது. நான் பைபிள் படித்தது உண்டு,அப்ப்டி இல்லை என்று துள்ளி எழும் நண்பர்களே,பொறுமை மொழி பெயர்ப்பதில் மதவாதிகள் பல் ஏமாற்று வேலைகளை செய்வார்கள்.அதில் ஆண் ,பெண் பால் வேறுபாடு,ஒருமை ,பனமை வித்தியாசம், தனமை,படர்க்கை,இலக்கணம், பல அர்த்தங்கள்  போன்றவற்றில் பல ஏமாற்று வேலைகள் உண்டு.கேட்டால் இப்படியும் சொல்லலாம் ,அப்படியும் சொல்லலாம் ஆனால் இப்படித்தான் அக்கால்த்தில் பொருள் கொள்ளப்பட்டது என்று பிடி கொடுக்காமல் பேசுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சந்தேகம் இருந்தால் இப்பதிவை படியுங்கள்.


இப்பொதைய அறிவியலே மத புத்தக்த்தில் புதிதாக முளைத்து வரும்போது இம்மாதிரி வேலைகள் சுலபமல்லவா?

3. மூன்றாம் கேள்வி(9_12) உண்மையிலேயே ஏதேன் தோட்டம் உண்டா? இருந்தால் எங்கே இருக்கலாம்?.ஆதம்&ஏவாள்(ஹவ்வா) முதலில் வசித்த இத்தோட்டம் எங்கே இருக்கலாம் என்ற அகழ்வாராய்சி மீதான ஆய்வு.ஆதம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு இது என்ன என்று கேட்கிறீர்களா?.பைபிளில் குறிப்பிடப் படும் சம்பவங்கள் அம்மாதிரியே நடக்க வாய்ப்பு உண்டா என்பதையே ஆய்வு செய்கிறோமே அன்றி வேறெந்த உணர்வு கொண்டு அல்ல.அதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் அந்த கால வரிசையிலேயே நடந்திருக்கும் என்பதக் கூட ஏற்பதில் ஆய்வுகள் தடை போடுகின்றன.ஆகவே காணொளி பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி.


அற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா?ஒரு செய்முறை விளக்கம்.



டேரன் பிரௌன் 

குருடர் பார்க்கிறார்,செவிடர் கேட்கிறார்,முடவன் நட்க்கிறான் என்ற விளம்பரங்கள் அறியாதவர்கள் இருக்க முடியாது என்னும் அளவிற்கு இந்த சுகமளிக்கும் கூட்டங்க்கள் என்பது மிக பிரபல்ம்.இது பெரும்பாலும் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவான விஷயம் என்றாலும் முண்ணனியில் இருப்பது கிறித்தவ பிரச்சாரகர்களே என்பதும் அறிந்ததே.
              
இந்த நிகழ்வுகள் குறித்த சில தகவல்கள்

1.இது பெரிய மைதானத்தில் நடத்தப் படும்

2.அதிக விள‌ம்பரம் கொடுத்தும் பெரும் மக்கள் திரள் கூட்டப் படும்.

3.பல மொழி பேசும் மக்களை கவர மொழி பெயர்ப்ப்பு வசதியும் அளிக்கப் படும்.

முதலில் பாடலகள்,காணிக்கை[இது இல்லாமல் எதுவுமே இல்லை] என்று சுமுகமாக்வே ஆரம்பிக்கும்.பிரச்சாரகர் உரையை திடங்கி மத புத்தக்த்தின் சில வசனங்களை கூறி அவருக்கு தோன்றிய விள‌க்கம் அளிப்பார்.இந்த விளக்கத்தை இறைவன் தனக்கு தனது பிரார்த்தனையின் போது வெளிப்படுத்தினார் என்பதையும் தவறாமல் சொல்வார் என்பதும் கவனிக்கப் படவேண்டும்.ஒரு வழியாக நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யும்    உச்சகட்டம் வரும்.நோய் இருப்பவர்கள் தங்கள் உடலின் நோய் கண்ட பகுதியில் கை வைத்து பிரார்த்த்னை செய்ய அறிவுறுத்தப் படுவார்கள்.மெதுவாக பிரார்த்தனை ஆரம்பிக்கும் பிரச்சாரகர் திடிரென்று உணர்ச்சிவசப் பட்டவராக 'அஆஇஈ' உனக்கு இந்த ''ககாகிகீ' வியாதியை இறைவன் இப்போதே சுகமாக்குகிறார் என்பர்ர்.   இப்படியெ ஒரு சிலரை குறிப்பிட்டு பிரார்த்தனையை தொடர்வார்.

 பிரார்த்தனை முடிந்த பிறகு சிலர் மேடை ஏறி பிரச்சாரகர் குறிப்பிட்டது என்னைத்தான்,எனக்கு அவர் குறிப்பிட்ட 'ககாகிகீ' வியாதி பல நாட்களக இருந்தது.இப்போது சுகமடைந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சாட்சி அளிப்பார்கள். பார்க்கும் பலருக்கு பக்தி பெருகும்,பிரச்சாரக்ரின் புகழும் பரவும் என்பதில் ஐயமில்லை.  

இறை மறுப்பாள‌ர்களுக்கு இதில் நம்பிக்கை இருப்பது இல்லை என்றாலும் பொதுவாக கண்டு கொள்ளாமல் செல்வது இல்லை . இவற்றை பொய் என்று நிரூபிக்கவே முயற்சிக்கின்றனர்.இதற்காக் முயற்சி எடுத்த டேரன் பிரௌன் என்னும் புகழ் பெற்ற எழுத்தாள‌ர்,சிந்தனையாளர்,தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாள‌ர் குறித்து இப்பதிவில் அறிவோம்.

        இவர் கொஞ்சம் வித்தியாசமான் ஆள். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தார்.ஒருவேளை இம்மாதிரி அற்புதம் விற்கும் பிரச்சாரக்ர்களிடம் சென்று விவாதித்தால் ஒன்றும் நடவாது,அவர்கள் அற்புத சுகம் என்பது நம்புபவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று அதனையே திருப்பி திருப்பி சொல்வர்.மதவாதிகள் அனைவருக்குமே அவர்கள் செய்வது ஏமாற்று வேலைகள் என்று நிச்சயமாக் தெரியும்,அப்படி தெரியாமல் இருக்கும் பிரச்சாரகர்கள் சீக்கிரம் மதம் விட்டு வெளியேறி விடுவார்கள்.

டேரன் பிரௌன் இங்கிலாந்தில் இதே மாதிரி ஒரு ஆளை உருவாக்குவது என்று முடிவெடுத்து பல சோத்னைகளுக்கு பிறகு உருவாக்குகிறார்.முன்கூறிய நடைமுறைகளின் படியே விளம்பரம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்.டேரன் பிரௌனால் உருவாக்கப் பட்ட பிரச்சாரகரும் கூட்டத்தில் சுகமளிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.சிலரின் பெயரையும் சொல்லி அழைத்து சுகமளிக்கப் பட்டதாக் கூறுகிறார்.கூட்டத்தின் முடிவில் பிரச்சாரகர் தான் ஒரு இறை மறுப்பாளன் ,இக்கூட்டமே ஒரு மக்களை திருத்தும் முயற்சி என்று போட்டு உடைப்பதுதான் நோக்கம். 

இந்த பிரச்சாரத்தின் மூலம பயன் இருந்ததா? முடிவு என்ன? என்பதனை காணொளியில் காண்க!!!!!!!!!!!
               

Saturday, July 23, 2011

நார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி

நார்வேயில் நடைபெற்ற குண்டு வெடிப்பு ,துப்பாக்கி சூட்டில் 80க்கும் மேற்பட்ட‌ பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இந்த மனித விரோத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
.
இதற்கு காரணமாக் நார்வே நாடை சேர்ந்த தீவிர வலது சாரி கிறித்தவ அடிப்படைவாதி என்று கூறப்படும்'  32-வயதுd Anders Behring Breivik,
கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். இன்னும் விவரங்கள் ஒருவேளை தெரிய வரலாம்.

அமெரிக்க ,மேற்கத்திய நாடுகளில் தீவிர வலது சாரிகள் வளர்ந்து வருகிறார்கள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு வியப்பாக இருக்காது.இரு உலகப் போர்களுக்கும் இக்கருத்துகளே காரணம் என்பதும் ஹிட்லரின் நாஜி,முசோலினின் ஃபாஸிஸ்டுக் கொள்கைகளும் தோற்கடிக்கப் பட்டதால் இக்கருத்துக் கொண்டவர்கள் வெளிவராமல் கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்தனர்.

இப்போதைய‌ பொருளாதார மந்த நிலைக்கு (குடியுரிமை பெற்ற) வேற்று(ஆசிய) நாட்டவ்ரே என்ன்னும் கருத்து வெள்ளையின தீவிரவாதிகளால் வலியுறுத்தப் படுகின்றது.இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

ஒரு கொள்கை மட்டுமே சரி,அத்னை சார்ந்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் அதற்கு விரோதமானவர்கள் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள் என்னும் மனநிலைக்கு வரத் தூண்டும் எந்தக் கொள்கையுமே தீவிரவாதம் ஆகும். தீவரவாதத்திற்கு இன ,மத, மொழி வித்தியாசம் கிடையாது என்பதையே இத்தாக்குதல் காட்டுகிறது.இம்மாதிரி தாகுதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் முயற்சிகளை அரசும் பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு நமது அஞ்சலி.
http://blogs.voanews.com/breaking-news/2011/07/23/norway-shooting-bombing-suspect-recently-bought-six-tons-of-fertilizer/

http://www.nytimes.com/2011/07/23/world/europe/23oslo.html

Friday, July 22, 2011

பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா?


எல்லா மதங்களிலும் பிரபஞ்சம் ,உயிர்கள் படைப்பு என்பதை கடவுள் நடத்தி ,காத்து பரிபாலித்து வருகிறார் என்பது நம்பிக்கை.ஆகவே பிரபஞ்சத்தின் தோற்றத்தின் இப்போதை அங்கீகரிகப் பட்ட கொள்கையான பெரு வெடிப்பு(விரிவாக்க)  கொள்கை எங்கள் மத புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது என்ற பிரச்சாரம் இதன் அடிப்படையிலானது..

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, பிறப்பு: ஜனவரி 8, 1942), ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்;இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருங்குழி (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)த, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தது.

பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design 2010) என்பது முதன்மையான இயற்பியலாளர் ஸ்டீபன் ஃகாக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவால் எழுதப்பட்ட ஒரு பொதுமக்கள் அறிவியல் நூல் ஆகும். இந்த நூலில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதிக்கப்படுகிறது. இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூல் வாதிக்கிறது. இந்த நூலின் விமர்சங்களுக்கு பதில் தருகையில், ஃகாக்கிங், "இறை இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறையை தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்..

இப்பதிவில் இந்த க்ராண்ட் டிசைன் என்னும் புத்தக்த்தின் மின் பிரதி,ஒலி வடிவம் வழங்குகிறோம்.இத்தள‌த்தில் இப்புத்த்கம் மட்டுமல்லாமல் ப்ல புத்தக்ங்கள்,ஆவணப் படங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூமியின் தோற்றம் பற்றிய கொள்கைகளின் பரிணாம் வளர்ச்சியை வரலாற்று கண்ணோட்டத்துடன் கொண்டு செல்லும் விதம் மிக அருமை.

பல பிரபஞ்சங்கள் இப்போதும் இயற்கை விதிகளின் படி தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது.ஆகவே நமது பிரபஞ்சம் மட்டு கடவுளால் படைக்கப் படவேண்டிய அவசியம் இல்லை.புவி ஈர்ப்பு விசை போல்,இயக்கவியல் விதிகள் போல் பிரபஞ்ச தோற்றமும் ஒரு இயல்பான இயற்கையின் நியதியே என்று முடிக்கிறார். 

அந்த இயற்கை விதிகளை உருவாக்கியவர்தான் எங்கள் இறைவன் என்று கூறாமல் இருப்பர்களா என்ன?.படைப்பதும்,படைப்பு விதிகளை மட்டும் உருவாக்கி தானாக் படைப்பு விளைவதை வேடிக்கை பார்ப்பதும் ஒன்றா?. அறிவியல் வளர வளர இறைவனின் சக்தியாக (செயலாக)கூறப் படுவது சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் நாம் கூறுவது.

இப்புத்தகம் பற்றிய ஒரு காணொளி.இரண்டாம் அத்தியாயம் பற்றி ஒரு சுருக்கமான் கண்ணோட்டம்.நன்றாக் இருக்கிறது.கண்டு மகிழுங்கள்.

Thursday, July 21, 2011

பள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா?


சென்ற வாரம் கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அணுப்பப் பட்டது.அதில் பள்ளிக் கால் அட்டவனையில் 3 மணி நேரம் பகவ்த் கீதை கற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு இதனை முன்னெடுத்து செல்லும் என்று தெரிகிறது.இது குறித்து கருத்து தெர்வித்த கர்நாடக பள்ளி கல்வி அமைச்சர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காஹேரி கூறியது  தேவையற்றதாக தெரிகிறது.

அவ்ர் கூறியது

"இந்த நாட்டு மக்கள் பகவத் கீதையை நம்புகின்றனர்,இத்னை எதிர்ப்பவர்கள் தாங்கள் நம்பும் கொள்கை உள்ள இடங்களுக்கு செல்லலாம்"


This country believes in the Gita. Those who oppose it and believe in philosophies that are not of this country can go there and propagate them," he told TOI on Tuesday. 



மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்,சுய தேடல்.கட்டாயமாக்ப் படக் கூடாது.இது அரசியல் இலாபத்திற்காக கூறியது,இபடி கூறினால் பி மதத்தவர் எதிர்ப்பர், பிறகு இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற‌ பெயரை தட்டி செல்வதுதான் இலக்கு.இதனை ஓட்டுகளாக மாற்றுவதுதான் இலட்சியம்.
                
கர்நாடகாவில் யெடியூரப்பா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நித்ய கண்டம்,பூரண ஆயுசு என்ர வகையிலேயே உயி தப்பி வருகிறது.ரெட்டி சகோதர்கள்,எதிர் கோஷ்டி சட்டமன்ற உறுப்பினர்கள்என்று பல தகிடு தத்தம் செய்தே தப்பித்தது.இன்னும் நிறைய இது மாதிரித்தான் செய்வார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

http://en.wikipedia.org/wiki/G._Janardhana_Reddy


இந்த மாதிரி ஆட்கள் தான் மதம் என்னும் விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள் என்பது நாம் அறிந்தது. அந்த அமைச்சருக்கும் கர்நாடக் அரசுக்கும் நமது கண்டனங்கள்.

இது சட்ட ரீதியாக் சந்திக்க பட வேண்டிய‌ விஷயம்.மதம் கல்வி,அரசியலில் கலக்க் கூடாது.இதில் உடனே அந்த அமைச்சர் எதிர் பார்த்த பலன் உடனே கிடைக்க பிற மதத்தை சார்ந்த நண்பர்கள் உண‌ர்ச்சி வசப் பட்டு கூறும் கருத்துகள் தேவையில்லாதது. இந்த பதிவிற்கும் நமது கண்டனம்.

அவர்கள் மத ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தவரின் மீதான் அடக்குமுறையை கண்டிக்கட்டும்..  முதலில்.இது ஒரு மாநிலத்தில் மட்டுமே நடக்கும் சட்ட ரீதியான பிரச்சினை.இத்னை தீர்க்க பல் வாய்ப்புகள் இந்தியாவில் உண்டு.பிரச்சினையை பெரிதாக்க‌ வேண்டாம் என்று வேண்டுகிறோம்.  

குழந்தைகளுக்கு மதக் கல்வி மட்டுமல்ல மதமே தேவையில்லை என்பதுதான் நம் கருத்து.பள்ளியின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்


Monday, July 18, 2011

படைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விடைகளும்.


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத படைப்புக் கொள்கை வேதாளங்கள் பரிணாம விக்கிரமாதித்தன்களிடம் பல கேள்விகளை 100 வருடங்களுக்கு மேலாக கேட்டு வருவதும் அதற்கு பதில் அளித்தால் முருங்கை மரம் ஏறுவதும்.அனைவரும் அறிந்ததே!!!!!!!.

படைப்புக் கொள்கையாளர்களின் இணையத் தளமான் creation.com சென்ற மாதம் பரிணாம்த்தை வினவுவோம் என்று 15 கேள்விகளை தயார் செய்து அத்னை அனைத்து பரிணமம் போதிக்கும் ஆசிரியர்கள்,விஞ்ஞானிகளிடம் கேட்க அனைவரையும் அழைத்தது.

அந்த கேள்விகள் இங்கே பாருங்கள்.





இதற்கான பதில்களை சில யு டுயூப் பரிணாம் ஆதரவாளர்களே அருமையாக் தயாரித்து அளித்துள்ளார்கள்.பல் கேள்விகளுக்கு விடை ஏற்கெக்னவே தெரிந்த ஒன்று என்றாலும் பதில்கள் நல்ல விளக்கமாக் இருக்கின்றன.வைரஸ் H5N1 ல் பரிணாம் வளர்ச்சி பரிசோத்னையில் அறிய முடியும் என்பது அருமை.கண்டு களியுங்கள்.




***************************
References for the 15 answers.

QUESTION 1
-E. Anders, PRE-BIOTIC ORGANIC-MATTER FROM COMETS AND ASTEROIDS. Nature 342, 255 (Nov, 1989).
-J. R. Cronin, S. Pizzarello, Enantiomericexcesses in meteoriticaminoacids. Science 275, 951 (Feb, 1997).
-W. Gilbert, ORIGIN OF LIFE - THE RNA WORLD. Nature 319, 618 (Feb, 1986).
-J. F. Kasting, EARTHS EARLY ATMOSPHERE. Science 259, 920 (Feb, 1993).
-D. H. Lee, J. R. Granja, J. A. Martinez, K. Severin, M. R. Ghadiri, A self-replicating peptide. Nature 382, 525 (Aug, 1996).
-S. L. Miller, J. L. Bada, SUBMARINE HOT SPRINGS AND THE ORIGIN OF LIFE. Nature 334, 609 (Aug, 1988).
-E. D. Schneider, J. J. Kay, LIFE AS A MANIFESTATION OF THE 2ND LAW OF THERMODYNAMICS. Math. Comput. Model. 19, 25 (Mar-Apr, 1994).
-D. Segre, D. Ben-Eli, D. W. Deamer, D. Lancet, The lipid world. Orig. Life Evol. Biosph. 31, 119 (Feb-Apr, 2001).
-S. G. Zhang, T. Holmes, C. Lockshin, A. Rich, SPONTANEOUS ASSEMBLY OF A SELF-COMPLEMENTARY OLIGOPEPTIDE TO FORM A STABLE MACROSCOPIC MEMBRANE. Proc. Natl. Acad. Sci. U. S. A. 90, 3334 (Apr, 1993).
QUESTION 2
-Biology: Eighth Edition, Raven et. al.,Chapter 14- DNA: The GeneticMaterial, Chapter 15- Genes and How TheyWork
-Anatomy and Physiology : Eighth Edition, Marieb and Hoenh, Chapter 2- ChemistryComes Alive- Part 2: Biochemistry, Chapter 3- Cells: The Living Units
-DNA: The Secret of Life, James D. Watson and Andrew Berry : Chapter 3- Bringing DNA to Life, Chapter 7- The HumanGenome: Life'sScreenplay, Chapter 8- Reading Genomes: Evolution in Action
QUESTION 3
-Saenger, Wolfram (1984). Principles of NucleicAcid Structure. New York: Springer-Verlag. ISBN 0-387-90762-9.
-Alberts, Bruce; Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts and Peter Walters (2002). MolecularBiology of the Cell; Fourth Edition. New York and London: Garland Science. ISBN 0-8153-3218-1. OCLC 48122761 57023651 69932405 145080076 48122761 57023651 69932405.
-Rebecca M. Turk, Nataliya V. Chumachenko, and Michael Yarus (February 22, 2010). "Multiple translationalproductsfrom a five-nucleotide ribozyme.". -Proceedings of the National Academy of Sciences (10): 4585--9. doi:10.1073/pnas.0912895107. ISSN 1091-6490. PMC 2826339. PMID 20176971. Lay summary -- ScienceDaily (February 24, 2010).
-Lincoln, Tracey A.; Joyce, Gerald F. (January 8, 2009). "Self-SustainedReplication of an RNA Enzyme". Science (New York: American Association for the Advancement of Science) 323 (5918): 1229--32. doi:10.1126/science.1167856.
-Bowmaker JK (1998). "Evolution of colour vision in vertebrates". Eye (London, England) 12 (Pt 3b): 541--7. PMID 9775215
-Carroll SB, Grenier J, Weatherbee SD (2005). From DNA to Diversity: MolecularGenetics and the Evolution of Animal Design. Second Edition. Oxford: BlackwellPublishing. ISBN 1-4051-1950-0
-Hastings, P J; Lupski, JR; Rosenberg, SM; Ira, G (2009). "Mechanisms of change in gene copy number". Nature Reviews. Genetics 10 (8): 551--564. doi:10.1038/nrg2593. PMC 2864001. PMID 19597530.
QUESTION 4
-Definition of "Natural Selection" from Wikipedia.com and The American Heritage Science Dictionary 2005.
-Definition of "Evolution" from 
dictionary.com and merriam-webster.com

QUESTION 5
-Chapman, D.J. and Ragan, M.A. (1980). Evolution of BiochemicalPathways: Evidence From Comparative Biochemistry. Ann. Rev. Plant Physiol. 31: 639-67.
Whitaker, R.J., Berry, A., Byng, G.S., Fiske, M.J. and Jensen, R.A. (1984). Clues fromXanthomonascampestris about the evolution of aromaticbiosynthesis and itsregulation. J. Mol. Evol. 21: 139-49.
-Jensen, R.A. (1985). BiochemicalPathways in Prokaryotes Can Be TracedBackwardthroughEvolutionary Time. Mol. Biol. Evol. 2: 92-108.
-Ahmad, S. and Jensen, R.A. (1987). Evolution of the biochemicalpathway for aromaticaminoacidbiosynthesis in Serpensflexibilis in relationship to itsphylogenetic position. Arch. .Microbiol. 147: 8-12.
-Forst, C.V. and Schulten, K. (1999). Evolution of Metabolisms: A New Method for the Comparison of MetabolicPathwaysUsingGenomics Information. J. Comp. Biol. 6: 343-63.
-Behrman , E.J., Marzluf, G.A. and Bentley, R. (2004). Evidence fromBiochemicalPathways in Favor of Unfinished Evolution ratherthan Intelligent Design. J. Chem. Educ. 81: 1051.
-Koes, R., Verweij, W. and Quattrocchio, F. (2005). Flavonoids: acolorful model for the regulation and evolution of biochemicalpathways. Trends Plant Sci. 10: 236-42.
-Nacher, J.C., Ochiai, T., Yamada, T., Kanehisa, M. and Akutsu, T. (2006). The role of log-normal dynamics in the evolution of biochemicalpathways. Biosystems 83: 26-37.
-Raymond, J. and Segrè, D. (2006). The Effect of Oxygen on Biochemical Networks and the Evolution of Complex Life. Science 311: 1764-1767.
-Harborne, J.B. (2008).Constraints on the evolution of biochemicalpathways. Biol. J. Linn. Soc. 39: 135--151.
-Fani, R. and Fondi, M. (2009). Origin and evolution of metabolicpathways. Phys. Life. Rev. 6: 23-52.
-Lenski, R.E. (2004). Phenotypic and genomicevolutionduring a 20,000-generation experimentwith the bacterium Escherichia coli. Plant Breed. Rev. 24: 225-265.
-Ohno, S. (1984). Birth of a unique enzyme from an alternative reading frame of the preexisted, internallyrepetitiouscodingsequence. Proc. Natl. Acad. Sci. USA 81: 2421-25.
-Okada, H.et al. (1983). Evolutionary adaptation of plasmid-encoded enzymes for degrading nylon oligomers. Nature 306, 203 - 206.
QUESTION 6
QUESTION 7
-Boraas M.
et al (1998). Phagotrophy by a flagellate selects for colonial prey: A possible origin of multicellularity. EvolutionaryEcology Volume 12, Number 2, 153-164
-
http://pleion.blogspot.com/2008/11/watching-multicellularity-evolve-before.html
-
http://www.talkorigins.org/origins/postmonth/jul00.html
-
http://en.wikipedia.org/wiki/Multicellular_life#Hypotheses_for_origin
QUESTION 8
-Baldwin AP (2002). Behind the green operculum: the sexlives of mollusks. Of Sea and Shore Magazine 25(1): 17-19. (non-peerreviewed, but I heard the rumorthat the authorisa super-genius!)
-Bulmer MG and Parker GA (2002). The evolution of anisogamy: a game-theoreticapproach. Proceedings of the Royal Society of London 269(1507): 2381--2388.
-Dusenbery, DB (2009). "Chapter 20". Living at Micro Scale. Cambridge, Mass: Harvard UniversityPress.
-Margulis L and Sagan D (1997). Whatissex? Simon and Schuster Editions. New York, New York. 256 pp.
QUESTION 9
QUESTION 10
-https://www3.amherst.edu/~jwhagadorn/courses/27paleo/readings/GouldEldredge1993.pdf
-PunctuatedEquilibriumComes of Age, 1993, Stephen J Gould & Niles Eldredge
QUESTION 11
QUESTION 12
-Wake D. et al (1986), Geographic Variation in Allozymes in a "Ring Species", the Plethodontid Salamander Ensatinaeschscholtzii of Western North America. Evolution, Volume 40, Number 4, 702-715
-Vervust B. et al (2007), Differences in Morphology, Performance and Behavior of between recently diverged populations of Podarcissicula mirror differences in predation pressures. Oikos, Volume 116, Issue 8, 1343-1352
-Reznik D. et al (1997), Evaluation of the rate of Evolution in Natural Populations of Guppies (PoeciliaReticulata). Science Magazine, Volume 275, Issue of 28th March 1997, 1934-1937
Ohno S (1984), Birth of a unique enzyme from an alternate reading frame of the preexisted, internally repetitious coding sequence.Evolution, Volume 81, Issue of April 1984, 2421-2425
-Boraas M.
et al (1998). Phagotrophy by a flagellate selects for colonial prey: A possible origin of multicellularity. EvolutionaryEcology Volume 12, Number 2, 153-164
-Brown CJ. et al (1998), Multiple Duplication of Yeast Hexose Transport Genes in Response to Selection in a Glucose-limitedEnvironment. MolecularBiology and Evolution, Volume 15, Issue 8, 931-942
-Abrahms P. (2000), The Evolution of Predator-Prey Interractions. AnnualReview of Ecology and Systematics, Volume 31, 79-105
-Meller AP (1993), Symmetrical male sexualornaments, paternal care and offspringquality. BehavioralEcology, Volume 5, Issue 2, 188-194
-Trut L. (1999), EarlyCanid Domestication : the Farm-Fox Experiment. American Scientist, Volume 87, Issue of March-April, 160-169
-
http://www.nature.com/authors/policies/peer_review.html
-
http://en.wikipedia.org/wiki/Philip_Skell
QUESTION 13
-Harris MP, Linkhart BL, Fallon JF: Bmp7 mediatesearlysignalingeventsduring induction of chickepidermalorgans. Dev Dyn 2004, 231:22-32.
-
http://www.lonesomegeorge.net/
QUESTION 14

ஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரயாணம்

இப்பதிவில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான மரபியல் நிபுணர் ஸ்பென்சர் வெல்ஸ் மேற்கொண்ட இன்னொரு ஆய்வு பற்றிய ஆவணப் படம்.முந்தைய ஆய்வில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனப் பரவல் எவ்வாறு நடந்து என்பதை கண்டறிந்தார். இந்த ஆய்வில் என்ன செய்கிறார்?

ஆபிரஹாமிய மதங்களின் படி உலகில் முதன் முதலில் படைக்கப் பட்ட மனிதர்கள் ஆதம்,ஏவாள்(ஹவ்வா) மட்டுமே.அனைத்து மனித‌ர்களுமே இவர்களின் வழித் தோன்றல்கள் என்பது பல மதங்களின் நம்பிக்கை.இதனை ஜீன் ஆய்வு மூலம் உறுதிப் படுத்த முடியுமா என்பதுதான் இந்த ஆய்வு.மங்கோலியாவில் ஆரம்பித்து கிழக்கு ஆப்பிரிக்காவரை தேடல் தொடர்கிறது.
முடிவு என்ன? காணொளியில் காண்க!!!!!!!!!!!!.

The Genius Of Britain


Part 4

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ

கொஞ்சம் தீவிர கருத்துள்ள பதிவுகள் எழுதி கொஞ்சம் போரடிப்பதால் கொஞ்சம் மாறுதலாக் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை பகிர்கிறேன்.பாடி பழகி கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கற்று கொடுக்கலாம்.
**************
பாடல்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
திரைப்படம்:பெயர் ஓர் இரவு(1951)
கதை: அறிஞர் அண்ணா
 இயக்குனர்:  ப. நீலகண்டன்
நடிகர்கள்: நாகேஸ்வரராவ், லலிதா, பத்மினி ,பி. எஸ். சரோஜா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை:தண்டபானி தேசிகர்&ஆர் சுதர்சன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இராகம்:தேஷ்,தாளம்:ஆதி
***********************

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறாமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

1.திரைப்படத்தில்[ நாகேஸ்வரராவ், லலிதா]


2.திரு தண்டபானி தேசிகர்& திரு உன்னி கிருஷ்னன்(நன்றி திரு யோவான்)

Sunday, July 17, 2011

நித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்(பறக்கும் )மனிதன்




நித்யானந்தாவின் நடவடிக்கைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறோம் அல்லவா!!!!!!.இப்போது மனிதர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி பறக்க வைக்கிறேன் என்று புரளி விட்டு கையும் களவுமாக் மாட்டினார்.அந்த கூட்டத்தில் நடிகை இரஞ்சிதாவும் இருப்பதை பார்க்கலாம்.காணொளி காணுங்கள்.இதற்கும் பாருங்கள் வெளிநாடு உள்நாடு என்று அனைத்து மனிதர்களின் கூட்டம்.
திருந்தவே மாட்டார்களா!!!!!!!!!!!!!!
Some More



Tv9 - Nityananda still a 6 year old child?


Telugu

எல்லா மொழிக்காரனும் அடிக்கிற கிண்டல் நமக்கு வெட்கமாக் இருக்கிறது!!!!!!!!!!..

தமிழர்கள் மானத்தை காற்றில் பறக்க விடும் இந்த ஆளை என்ன செய்யலலாம்?!!!!!!!!!!!!!


nithiyanandhadance1607-02 by tamil2011