Saturday, July 23, 2011

நார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி

நார்வேயில் நடைபெற்ற குண்டு வெடிப்பு ,துப்பாக்கி சூட்டில் 80க்கும் மேற்பட்ட‌ பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இந்த மனித விரோத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
.
இதற்கு காரணமாக் நார்வே நாடை சேர்ந்த தீவிர வலது சாரி கிறித்தவ அடிப்படைவாதி என்று கூறப்படும்'  32-வயதுd Anders Behring Breivik,
கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். இன்னும் விவரங்கள் ஒருவேளை தெரிய வரலாம்.

அமெரிக்க ,மேற்கத்திய நாடுகளில் தீவிர வலது சாரிகள் வளர்ந்து வருகிறார்கள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு வியப்பாக இருக்காது.இரு உலகப் போர்களுக்கும் இக்கருத்துகளே காரணம் என்பதும் ஹிட்லரின் நாஜி,முசோலினின் ஃபாஸிஸ்டுக் கொள்கைகளும் தோற்கடிக்கப் பட்டதால் இக்கருத்துக் கொண்டவர்கள் வெளிவராமல் கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்தனர்.

இப்போதைய‌ பொருளாதார மந்த நிலைக்கு (குடியுரிமை பெற்ற) வேற்று(ஆசிய) நாட்டவ்ரே என்ன்னும் கருத்து வெள்ளையின தீவிரவாதிகளால் வலியுறுத்தப் படுகின்றது.இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

ஒரு கொள்கை மட்டுமே சரி,அத்னை சார்ந்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் அதற்கு விரோதமானவர்கள் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள் என்னும் மனநிலைக்கு வரத் தூண்டும் எந்தக் கொள்கையுமே தீவிரவாதம் ஆகும். தீவரவாதத்திற்கு இன ,மத, மொழி வித்தியாசம் கிடையாது என்பதையே இத்தாக்குதல் காட்டுகிறது.இம்மாதிரி தாகுதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் முயற்சிகளை அரசும் பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு நமது அஞ்சலி.
http://blogs.voanews.com/breaking-news/2011/07/23/norway-shooting-bombing-suspect-recently-bought-six-tons-of-fertilizer/

http://www.nytimes.com/2011/07/23/world/europe/23oslo.html

3 comments:

  1. தனக்கு பிடிக்காதவற்றை பின்பற்றுபவர்களை, எதிர் கொள்கையுடையவர்களை, கொல்ல நினைத்தால், தன்னை விடுத்து அனைவரையும் கொல்ல வேண்டி வரும், கடைசியில் தன்னை தானே மாய்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

    இந்த மாதிரி பயங்கரவாத குண்டுவெடிப்புகள் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களுகு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. எட்டாயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாறு உடைய இந்திய சமூகம் அன்று தொட்டு இன்று வரை உருவாக்கி, கடைப்பிடித்து,பரப்பி வரும் முக்கியக் கோட்பாடு, நாம் பிறருக்கு எந்த வித ஹிம்சையும் தராமல் வாழ வேண்டும் என்பதுதான். அப்படி வாழ தான் துன்பம் ஏற்றாலும் பரவாயில்லை என்று தான் இந்தியன் கருதுகிறான்.

    வரலாற்றின் கரங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்ததாக சொல்லும் சிரவணன், இராமன், அரிச்சந்திரனாக இருந்தாலும் சரி, பிந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த புத்தர்,அசோகர், விவேகானந்தர் காந்தி போன்றோராக இருந்தாலும் சரி இந்தக் கோட்பாட்டின் படியே வாழ்ந்து வந்தனர்.

    தனக்கு சொந்தமான நாட்டை மாற்றான் ஆண்ட போது கூட வன்முறையை உபயோகிக்க கூடாது என்று இருந்தார் காந்தி. அவரால் ஈர்க்கப் பட்டனர் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா போன்றோர்.

    உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்திய தத்துவங்களை தங்கள் பாடத் திட்டத்தின் முக்கிய பகுதியாக வைக்க வேண்டும் என்பதை எவ்வளவு விரைவில் புரிந்து கொள்வார்களோ, அந்த அளவுக்கு உலகுக்கு நல்லது.

    ReplyDelete
  3. பயங்கரவாத குண்டுவெடிப்புகள் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களுகு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete