Saturday, November 19, 2011

எண்ணெயின் விலை அரசியல்!!!!!!!!!!!!!!!

எண்ணெய் என்பது உலகின் இபோதைய அச்சாணி என்றால் மிகையாகாது.எண்ணெய் (மட்டும்) வைத்திருக்கும் நாடுகள் செல்வம் கொழிக்கும் நாடுகளாக விளங்குவதும்,அவற்றை தங்கள் கட்டுக்குள் வைத்து எண்ணெய் வளத்தை சுரண்டுவதையே அரசியலாக கொண்டுள்ளவை.

அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள். உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் வெனிசுவேலா,சவுதி அரேபியா,கனடா, இரான் ,இராக்,லிபியா,நைஜீரியா மற்றும் இரஷ்யா குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும்.அந்நாடுகளின் எண்ணெய் இருப்பு பேரல்களின் கீழே தரப் பட்டுள்ளது.


1 Venezuela  (2010) 296,500,000,000
2 Saudi Arabia  (2011)] 264,600,000,000
3 Canada  (2008)                                      175,200,000,000 
4 Iran (2011)                                             151,000,000,000
5 Iraq  (2010)                                            143,500,000,000
6 Kuwait  (2010)                                       104,000,000,000
7 Brazil                                                      100,800,000,000 
8 United Arab Emirates  (2008)                    97,800,000,000
9 Russia (2009)                                            74,200,000,000
10 Libya  (2010)                                          47,000,000,000
11 Nigeria  (2007)                                        37,500,000,000

எண்ணெய் வளத்தை சுரண்ட ஆதரவு தரும் நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்,ஜனநாயக விரோத ஆட்சிகள் முதலியவற்றை கண்டு கொள்ளாமல் விடும் அமெரிக்க ,மேற்கத்திய நாடுகள் எண்ணெய் சுரண்டலை அனுமதிக்காத நாடுகளின் மீது இதே குற்றச்சாட்டுகளை கூறி தங்கள் நலம் நாடும் பொம்மை அரசுகளை ஆட்சியில் அம்ர்த்துவதையே அரசியல் நடவ‌டிக்கையாக மேற்கொள்ளுகின்றன. இன்று எண்ணெய் சுரண்டலை அனுமதிக்கும் அரசுகள் விளக்கை தேடி அழியும் விட்டில் பூச்சிகள் என்பதே சரியான எடுத்துக்காட்டு.

இந்த காணொளி எண்ணெய் சுரண்டலின் பிண்ணனியில் உள்ள அரசியல் சதுரங்க விளயாட்டுகளை ஆவணப் படுத்துகிறது.எண்ணெய்க்கு மாற்று தொழில் நுட்பத்தின் சாத்தியங்களையும் அலசுகிறது.
காணுங்கள் காணொளியை!!!!!!!!!!!!!!!!!!!!!



6 comments:

  1. அருமையான பதிவு பாஸ்

    ReplyDelete
  2. நன்றி நண்பர் ராஜ்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தக்க சமயத்தில் சரியான பதிவு. thomas friedman சொல்வதைப்போல ஒரு நாடு innovate, educate and invest in human resources கண்டிப்பாக வேண்டும். அடிப்படை மனிதவள கட்டமைப்புகள் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். கொடுமையான விஷ்யம் நம் நாட்டில் இதை மூன்றையும் எட்டாக்கனி என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
    எண்ணெய் அடிமை பற்றி addicts மற்றும் pushers ஒருவருக்கு ஒருவர் உண்மையை சொல்ல மாட்டார்கள் என்பது உண்மையே.
    தற்போது நமது தேசத்தில், நாம் எண்ணெய் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு தனிமனிதனும் தம் வாழ்வில் எண்ணெயின் உபயோகத்தை குறைக்க வேண்டும்.

    முதல் முயற்சியாக அலுவலக பயணங்களுக்கு பொது பேருந்துகளை பயன்படுத்தலாம். அதற்கும் அம்மா ஆப்பு வைத்துவிட்டார்கள். alternative resources வரும் வரை எண்ணெயின் ஆட்சிதான் இருக்கும்.

    பதிவிற்கும் காணொளிக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. தம் பிடித்து காணொளியை ஒன்றே கால் மணி நேரம் பார்த்தேன்.எண்ணை வளத்திற்கு பின்னால் இவ்வளவு ராஜதந்திர அரசியலா என தோன்றியது.மாற்று எரிபொருளின் சாத்தியக் கூறுகள் பயன்பாட்டளவில் வெற்றி பெற்றால் நிம்மதி கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete