Tuesday, November 29, 2011

ஸ்டீஃபன் ஹாக்கிங்கோடு புதிய உலகம் காண்போம்.

இக்காணொளியில் ஸ்டீஃபன் ஹாக்கிங் உலகின் பல அறிவியல் முன்னேற்றங்களை பல அறிவியலாளர்களுடன் இணைந்து வழங்குகிறார்.தலைப்புகள்,மருத்துவம்,தொழில் நுட்பம்,சுற்று சூழல்,உயிரியல் என பல விஷயங்களையும் அலசுவது சிறப்பு.இரண்டுமணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் காணொளி மெதுவாக இரசித்து பாருங்கள்!!!!!!!!!!!!!!


1


2


3

7 comments:

  1. ரசிக்கவைத்த பகிர்வு. நன்றி..

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர் சார்வாகன். HD High Definition காணொளிகளுக்கு நன்றி. முதல் பாகம் பாதி பார்த்தேன், informative சிந்திக்க தூண்டுகிறது. நேரம் கிடைக்கும் போது முழுவதும் பார்த்து விட்டு மறுமொழியிடுகிறேன்.

    ReplyDelete
  3. சிந்திக்க உண்மைகள் உமது பதிவுகளுக்கும்,பின்னூட்டத்திற்கும் சரியான இடமாகிய குப்பைக்கு நகர்த்தப் படுகிறது.தேவையில்லாமல் சிந்திக்காமல் பதிவிற்கு தொடர்பற்ற விஷயத்தை ஏன் கூற வெண்டும்.என் பதிவில் உம்மை போன்றவ்ர்களுக்கு இடமில்லை.
    Byeeeeeeeeeeeeeeeeeeeeee

    ReplyDelete
  4. நண்பரே நலமா?
    agnosticism பற்றி உங்களின் கட்டுரையை எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  5. நண்பர் ஷர்புதீன்
    வணக்கம் கூடுமானவரை மதம் போன்ற வாழ்விற்கு தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி விடலாம் என்று முடிவெடுத்து பல நாள்களாகி விட்டது.மறுமை வாழ்வு என்பது தேவையில்லை என்று எண்ணும் ஒருவருக்கு கடவுள் என்னும் கருத்தியல் அவசியமா?
    வேண்டுமானால் agnosticism பற்றிய எனது கருத்தினை சொல்லி விடுகிறேன்.இறை நம்பிக்கையாளர்களை இரு விதமாக பிரிக்கலாம்.
    1. வரையறுக்கப் பட்ட மதம் சர்ந்தவர்கள்,இறைவன்(கள்) இவர்களுடனோ அல்லது முன் வாழ்ந்தவர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டு சில கட்டளைகளை கொடுத்து இருப்பதாகவும்,அதனை பின்பற்றி வாழ்ந்தால் மறுமை வாழ்வு கிடைப்பதாகவும் நம்புகின்றனர்.இவர்கள் கருத்து ஏதோ ஒரு மத புத்தகம் சார்ந்தது.மதப்புத்தக்கங்களின் விள‌க்கங்களை அவர்களே முன்னுக்குப் பின் முரணாக பேசும் இவர்களை மறுப்பது எளிது.
    2.இரண்டாம் பிரிவு இறை நம்பிக்கையாளர்கள் அறிவியல்,வாழ்வின் அறியப்படாத மர்மங்களை ஏதோ ஒரு சக்தி வழி நடத்துவதாக எண்ணுகின்றனர். இவர்களுக்கு என்று எந்த கொள்கையும் சரியாக வரையறுக்கப் படாததால் எதை வேண்டுமானாலும் கூறலாம்.பெரும்பாலும் மதவாதிகள் இவர்களின் கருத்தை (வழக்கம் போல்) திருடி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவர்.இந்நம்பிக்கை பிறரை பாதிக்காத வரை நம்பிக்கை கொள்ளட்டும்.இந்நம்பிக்கை மாறிக் கொண்டே இருக்கும் என்பது என் கணிப்பு.
    நன்றி

    ReplyDelete
  6. பதில் கருத்துக்களுக்கு நன்றி!

    தங்களுடன் செஸ் விளையாட விருப்பமாக உள்ளேன், chesscube.com - இல், vellinila என்ற ஐடியில் விளையாடி வருகிறேன். விளையாடலாமா?

    ReplyDelete
  7. //வாழ்விற்கு தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி விடலாம் என்று முடிவெடுத்து பல நாள்களாகி விட்டது//

    :(

    ReplyDelete