Wednesday, January 11, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்றால் என்ன? பகுதி 3:

நண்பர்களே பரிணாமத்திற்கு மாற்றாக அதன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[ID] என்னும் கொள்கையை குறித்த தொடர் பதிவுகளை எழுதி வருகிறோம்.முந்தைய இரு பதிவுகளில் அதன் வரையறுப்பு ,முக்கியமான் கொள்கையாக்கங்களை பார்த்தோம். ID கொள்கையாளர்களின் கருத்துகளை அப்படியே வெளியிடுவதில் மிக கவனமாகவும் வெளிப்படையாகவும் இருந்து வருகிறோம்.இப்பதிவில் அதன் தோற்றம், வரலாறாக அவர்களின் தளத்தில் இருந்தே மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறோம். இதில் பல தேவையான் விவரங்கள் இருக்கலாம். வழக்கம் போல் மொழி மாற்ற சிக்கல்களை தவிர்க்க ஆங்கில மூலத்தையும் அளித்து விடுகிறோம்.

 History of intelligent design and the creation - evolution controversy

1611: அரசன் ஜேம்ஸ் ஆங்கில பைபிள் பிரதி வெளியீடு

1654: கிறித்தவ‌ பேராயர் உஷைர் உலகம் தோன்றிய நாளை பைபிளில் இருந்து 4004B.C.E என கணக்கிடுகிறார்

1802: இயற்கை இறையியல் என்பது அறிவியல்,தத்துவம் உட்பட்ட காரணிகளை கொண்டு  கடவுளின் இருப்பை நிறுவும் முயற்சியாகும்.
William Paley (July 1743 – 25 May 1805) இயற்கை இறையியல் துறை சார்ந்த முக்கியமான புத்தகம் வெளியிடுகிறார். இது Teleological argument என்னும் இயற்கையின் படைப்புகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு இருப்பது கடவுளை நிறுவுகிறது எனும் கொள்கையை தெளிவாக முதலில் முன் வைத்தது எனலாம்.

1830: டார்வினின் பரிணாம் கொள்கைக்கு மூல ஆதாரங்களில் ஒன்றான புவியியலின் முக்கியமான புத்தக்மான Principles of Geology        Charles Lyell          வெளியிடுகிறார்.


1859: டார்வினின் உற்ற நண்பரும்,தீவிர ஆதரவாளரான          T.H. Huxley பரிணாம கொள்கைக்கும்,மதவாதிகளுக்கும் கருத்து மோதல் வரலாம் என எதிர் நோக்குகிறார்.  Origin of Species     புத்தகம் வெளிவருவதற்கு முன் டார்வினுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த மோதலுக்காக என் ஆயுதங்களை தயாராக் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார்.


1859: அறிவியலாளர் டார்வின் (12 February 1809 – 19 April 1882)  பரிணாம கொள்கையின் மிக முக்கியமான புத்தகமாகிய  "Orgin of Spicies" வெளியிடுகிறார். உயிர்கள் அனைத்தும் ஓர் செல் உயிர்களில் இருந்து இயற்கைத் தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றங்களின் காரணமாக பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகின என்பதுதான் இக்கொள்கையாகும்.

1860: T.H. Huxley ம் Samuel Wilberforce ம் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக்த்தில் பரிணாமம் குறித்து விவாதிக்கின்றனர்.

1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே எதிர்ப்பு' வந்தது. பலர் டார்வினின் கொள்கையை நிரூபிக்க முடியாது,உயிர்களின் தோற்றம் ,பல் வகை பிரிவுகளாதல் ஆகியவற்றை விளக்க முடியாது என்றே கருத்து தெரிவித்தனர்.இந்த அறிவியல் ரீதியான எதிர்ப்பு  சுமார் 50_80 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.இது மட்டுமல்லாமல் மத ரீதியாகவும் எதிர்ப்பு வந்தது.

1874: John William Draper என்ற எழுத்தாளர் History of the Conflict Between Religion and Science என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.அதில் மதம்,அறிவியல் இவற்றின் முரண்பாடுகள் மோதல் போக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறார்.இந்த டார்வினின் பரிணாம கொள்கை மீண்டும் ஒரு மத கொடுந் தண்டனைகளை தோற்றுவிக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.அது என்ன மத கொடுந் தண்டனை [Inquisition] என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்கள் இங்கே பாருங்கள்.

1896: Andrew Dickson White என்ற எழுத்தாளர் A History of The Warfare of Science With Theology என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் . இது கிறித்தவ மதத்தின் கொள்கைகளை ,வரலாற்றை விமர்சித்தது.

1905-1915: இதற்கு எதிர்வினையாக கிறித்தவ ப்ராஸ்டன்டன்ட் சபையை சேர்ந்த Bible Institute of Los Angeles (Biola) அமைப்பு The Fundamentals என்ற புத்தக்த்தை வெளியிடுகிறார்கள்.  இது இந்த இரு புத்தகங்களையும் கடுமையாக விமர்சித்தது.பரிணாமம் குறித்த  ஆவணப்படுத்தப்பட்ட முதல் விமர்சனம் இது ஆகும்

1912: நாளிதழ் தலைப்பு செய்தியாக டார்வினின் பரிணாம கொள்கை நிரூபணம் கிடைத்ததாக செய்தி வெளியிடுகிறது.மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான[Missing link] முன்னோர் உயிரினத்தின் படிமம் கிடைத்ததாகவும் இது மதவாதிகளின் தாக்குதலில் இருந்து அறிவியலை வளர்க்க உதவியதாக ஆர்தர் கெய்த் குறிபிட்டார். ஆனால் பொ.ஆ 1953ல் இது ஒரு பொய்யான் படிமாம், ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்டது. இது இன்றும் பரிணாம எதிர்ப்பாளர்களால் பரிணாம(ஆய்வாளர்களின்)த்தின் நேர்மையற்ற சான்றாக  விமர்சிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Piltdown_Man


1925: இக்கால கட்டத்தில் (பெரும்பாலான)உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாம கொள்கையை ஏற்கின்றனர். பள்ளி,கல்லூரிகளில் பரிணாம் பாடத்திட்டம் ஆக்கப்படுகிறது.இப்போது பரிணாமத்திற்கு இருவகைகளில் எதிர்ப்பு வருகிறது.
1. பரிணாம்த்தை முற்று முழுதாக எதிர்க்கும்,பைபிள் ரீதியான படைப்பியல்வாதிகள்.[Young and Old earth creationists]
2.பரிணாம்த்தின் சீரற்ற,ஒழுங்கற்ற தனமையை மட்டும் ஏற்காமல் ,இது ஒரு வழி நடத்தப்பட்ட செயல் என்னும் கொள்கையாளர்கள். [Guided and directed Evolution]

1925: ஸ்கோப்ஸ் வழக்கு விசாரணை:பரிணாமத்தை பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டமாக்க அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் எதிர்ப்பு வலுக்கிறது ஜான் ஸ்கோப்ஸ் என்னும் உயிரியல் ஆசிரியர் மீது டென்னீஸ் மாநிலத்தின் பட்லர் சட்டத்தை மீறியதாக் வழக்கு போடப்பட்டது.பட்லர் சட்டம் எனில் பைபிளின் படைப்புக் கொள்கையை தவிர வேறு கல்வி அளித்தல் தவறு.,இது நீதி மன்றத்தில் வழக்காகிறது. இதில் ஸ்கோப்ஸ் சட்டத்தை மீறியதாக நிரூபணம் ஆனாலும்,தீர்ப்பு மாற்றப்பட்டு விடுவிக்கப் பட்டார்.இது மதம் பரிணாமம் மோதலை மிகவும் பரபரப்பு ஆக்கியது. [இது குறித்தே ஒரு சிறப்பு பதிவு இடுவோம்]


1959: டார்வினின் புத்தகம் வந்து நூறாண்டு கடந்தும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஓயவில்லை.

1968: படைப்பியல் கொள்கையும் பள்ளிகளில் கற்பிக்கப் பட வேண்டும் என்ற‌ இன்னொரு வழக்கில் Edwards v. Arkansas அமெரிக்க ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் பரிணாம் கல்விக்கு எதிரான சட்டம் நீகப்படுகிறது.எந்த மதத்தின் படைப்புக் கொள்கையும் பாடத் திட்டத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.:


1971: பரிணம்த்தை விமர்சித்து சிறந்த வழக்கறிஞர் Norman Macbeth என்பவர் Darwin Retried: An Appeal to Reason. என்ற புத்தத்தை வெளியிடுகிறார்.இதில் அக்கால கட்டத்தின் பரிணாம் விமர்சனங்களை முன் வைத்தது. 

1972: Institute for Creation Research ஆரம்பிக்கப் படுகிறது.இதில் 1980 வரை இளைய பூமி[Young earth] கொள்கையே முன் வைக்கப் பட்டது..

1973: அமெரிக்க டென்னீஸ் மாநில சட்டசபையில் மீண்டும் பட்லர் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்படி மனிதனின் தோற்றமாக் பள்ளிகளில் எந்த கொள்கையும் பாட புத்தகங்களில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படி செய்வதென்றால் அது ஒரு கோட்பாடு[theory] மட்டுமே மற்றும் அறிவியல் ரீதியாக் நிரூபிக்கபடாத உண்மை என்றும் கூறப்பட வேண்டும். பைபிள் உட்பட்ட அனைத்து மத புத்தகங்களும் பாடபுத்தகங்கள் அல்ல என்பதும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

1982: McLean v. Arkansas: வழக்கில்  Arkansas மாநிலத்தில் அறிவியல் படைப்புக் கொள்கை["scientific creationism"] என்பது அறிவியல் அல்ல என தீர்ப்பு வருகிறது.

1983. அறிவியல் படைப்புக் கொள்கை["scientific creationism" ]  எதிர்த்து சில அமைப்புகள் உருவாக்கப் படுகிறது. 1982 வழக்கு விசாரணைகளுக்கு பிறகு இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேசிய அறிவியல் கல்வி அமைப்பு[National Center for Science Education (NCSE),] ஆக உருவெடுக்கிறது.

1986: ஹியூக் ராஸ்[Hugh Ross] "நம்பிக்கையின் காரணங்கள்" ["Reasons to Believe," ] என்னும் பழைய பூமி[Old earth] கொள்கை அமைப்பை ஏற்படுத்துகிறார்.

1986: மைக்கேல் டென்டன் [Michael Denton] என்பவர்          Evolution: A Theory in Crisis.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.

1987: Edwards v. Aguillard: வழக்கில் மூன்று நிபந்தனைகள் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு விதிக்கிறது.
1) பாட திட்டத்தில் மதம், அல்லது சார்ந்த கொள்கைகள் இருக்க கூடாது.
 2) மத பிரச்சாரம் தவிர்த்தல்
 3) அரசு மற்றும் மதத்தின் தொடர்பு பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
1991: Phillip Johnson என்பவர்          Evolution: Darwin on Trial.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.  

1993: பரிணாம எதிர்ப்பு வரலாற்றில் முக்கியமான கூட்டம்            Pajaro Dunes, California. ல் நடக்கிறது. இதில் அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தை[intelligent design movement] தொடங்க போகும்    Phillip Johnson, Michael Behe, உட்ப‌ட பலர் கலந்து கொள்கின்றனர்.

ID Starts
1996: Michael Behe எழுதிய புத்தகம்  Darwin's Black Box, அறிவார்ந்த வடிவமைப்பு[intelligent design] என்னும் சொல்லை முதன் முதலில் பிரபலப் படுத்துகிறது. இப்புத்தக்த்தில்தான் எளிமைப்படுத்தப் படாத சிக்கல்["irreducible complexity] என்னும் கொள்கையும் விவாதிக்கப்படுகிறது

1996: "Mere Creation" ஆய்வரங்கம் Biola University ல் நடக்கிறது.இதில் அறிவார்ந்த வடிவமைப்பின் நாயகர்கள் Michael Behe, David Berlinsky, Walter Bradley, William Dembski, Sigrid Hartwig-Scherer, Phillip Johnson, Robert Kaita, Steven Meyer, J. P. Moreland, Paul Nelson, Nancy Pearcey, Del Ratzsch, John Mark Reynolds, Hugh Ross, மற்றும் Jonathan Wells கலந்து கொள்கின்றனர்..

1998: William Dembski எழுதிய புத்தகம் The Design Inference அறிவார்ந்த வடிவமைப்பின் பல கொள்கைகளை கணித ரீதியாக அளிக்கிறார். .

1999: அமெரிக்க கான்சாஸ் மாநிலத்தில் பெரும் பரிணாமம் [macroevolution] குறித்த பாடத்திட்டங்களை கல்வியில் இருந்து நீக்குகிறது.

2000: Jonathan Wells எழுதிய புத்தகம் Icons of Evolution வெளியிடப் படுகிறது.
2000: David K. DeWolf, Stephen C. Meyer, and Mark Edward எழுதிய புத்தகம்  "Teaching the Origins Controversy: Science, Or Religion, Or Speech"  வெளியிடப் படுகிறது. இது பாட திட்டத்தில் அறிவார்ந்த வடிவமைப்பு சார்ந்த பரிணாம விமர்சனம் சேர்க்கப் பட வேண்டும் என வலியுறுத்தியது.

2001: PBS ன் பரிணாமம் குறித்த ஆவணப் படம் ஒளிபரப் பட்டது.

2001ல் இருந்து இன்றுவரை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் பரிணாமம் vs ID , மோதல் நீதி மன்றங்களில் மற்றும் பல தளங்களில் தொடர்கிறது.................. தொடர்கிறது!!!!!!!!!!!!!!.


(நாமும் தொடர்வோம்)
References:

1. Summer for the Gods by Edward J. Larson.
2. Bones of Contention by Marvin L. Lubenow.
3. Darwinism and the Law: Can Non-Naturalistic Scientific Survive Constitutional Challenge by H Wayne House (see http://www-acs.ucsd.edu/~idea/house.rtf).
4. Cretinism or Evilution? No. 2 Edited by E.T. Babinski. See http://www.talkorigins.org/faqs/ce/2/part12.html
5. Timeline for Origins Class at http://jmlynch.dhs.org/classes/origins/timeline.php
6. Religion and Science: History, Method, Dialogue in "Dispelling Some Myths About The Split Between Theology and Science in the Nineteenth Century" an essay by Claude Welch.
7. See PBS Evolution's re-interpretation of this famous exchange.
8. William Jennings Bryan & The Scopes Trial by R.M. Cornelius at http://www.bryan.edu/historical/wjbryan_trial/ from Bryan College Historical Resources (a Christian college in Dayton Tennessee, home of the Scopes Trial).
The History of Creation Science
Part 1


Part 2

Part 3

19 comments:

  1. நூற்றாண்டுகளை கடந்து தொடரும் சர்ச்சை, நீங்களும் தொடருங்கள், உங்களை நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர் சீனிவாசன்,

    பரிணாம கொள்கை எதிர்ப்பின் பரிணாம் வளர்ச்சியை ஆவணப் படுத்தியுள்ளோம்

    இளைய பூமி கொள்கை(Young earth creationism)

    பழைய பூமி கொள்கை (Old earth creationism)

    அறிவியல் படைப்பு(Scientific creationism)

    அறிவார்ந்த‌ வ‌டிவ‌மைப்பு(Intelligent Design)

    _____________-??????

    இதில் அறிவா‌ர்ந்த‌ வ‌டிவ‌மைப்பு ந‌ன்றாக‌ வ‌ளைந்து கொடுக்கும் கொள்கை.இதன் மூல‌‌ம் வ‌ழி ந‌ட‌த்த‌ப‌ட்ட‌ ப‌ரிணாம‌ம் வ‌ரை ச‌ரி என்று கூற‌ முடியும்.ம‌த‌ சார்ப‌ற்ற‌தாக‌ காட்டுவ‌தால் ம‌த‌ புத்த‌க‌ க‌தைக‌ளை தாங்கி பிடிக்க‌ வேண்டாம்.டார்வினின் இய‌ற்கை தேர்வு+சீர‌ற்ற‌ சிறு மாற்றத்தினால் ம‌ட்டுமே ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி ஏற்ப‌டுகின்ற‌து என்ப‌தை ம‌ட்டும் த‌வ‌று என‌ நிரூபிப்ப‌துதான் ஒற்றை இல‌க்கு.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. இது சர்ச்சை எல்லாம் இல்லை.
    உலகம் தட்டை என்றுகூடத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும்.
    அதற்காக உலகம் தட்டையா உருண்டையா என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றா சொல்லமுடியும்?

    ReplyDelete
  4. ஸலாம் இபின் ஷாகிர்
    பரிணாம கொள்கையின் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களில் அ.வ இப்போதைய விமர்சன கொள்கை என்ற வகையிலேயே இதனையும் ஒரு சார்பற்ற நிலையில் அறிய முயல்கிறோம்.

    இதில் சர்ச்சை என்று பரிணாமம் ,அ.வ(ID)இடையேயான விவாதங்கள் ,வழக்குகளையே குறிப்பிடுகிறேன்.எதிர தரப்பு ஒன்று இருக்கும் போது சர்ச்சை என்று தொடர்வது காலத்தின் கட்டாயம்.
    இன்னும் விமர்சனங்கள் அதற்குறிய விள்க்கங்கள் என்று சூடு பறக்கும்,மயிர் கூச்செரியும், விவாத காட்சிகள் நிறைந்த தொடர்பதிவுதான் இது .இதில் யாருக்கும் ஏன் எந்த சந்தேகமுமே வர மாட்டேன் என்பதுதான் எனக்குள் ஏற்படும் சர்ச்சை .ஹா ஹா ஹா
    நன்றி

    ReplyDelete
  5. /உலகம் தட்டை என்றுகூடத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும்.
    அதற்காக உலகம் தட்டையா உருண்டையா என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றா சொல்லமுடியும்?
    /
    தட்டை புமி.இந்த விவரமும் சர்ச்சையாக இருந்தது.இது முற்று முழுக்க தவறு என்று ஆன பிறகு துக்கி எறியப்பட்டது பிறகு பூமி மையக் கொள்கையும், 6000 வருட பூமி என்ற இளைய பூமி கொள்கையும் காணாமல் போயின.

    அவ்வழியில் பழைய பூமி கொள்கை,அ.வ செல்ல வேண்டும் எனில் இதனை முன் வைப்பவர்களே முந்தைய கொள்கைகள் போல் ஒதுக்க வேண்டும்.அது போல் செய்யவே முயற்சிக்கிறோம்.ஆனால் அ.வ போல இன்னொன்றும் [ஆ.வ=ஆற்றல்மிகு வடிவமைப்பு?]]வரலாம்!!!!!!!!!!!!!!.இது ஒரு தொடர்கதை

    ReplyDelete
  6. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நண்பரே இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றி நண்பர்கள் தமிழன்,நரேன்.உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இனிய இனிப்பு பொங்கல், வெண்பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சார்வாகன், நரேன், தமிழன், பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நன்றி நண்பர்கள் thequickfox ,. Ibnu Shakir இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
    நாம் மிக சிறப்பாக கொண்டாடுவது மாட்டுப் பொங்கல்தான்!!!!!!!!!!!.
    ஆக்வே அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. //1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே வந்தது. //

    'எதிர்ப்பு' என்ற சொல் விடுபட்டுப் போயிற்று என்று நினைக்கிறேன்.

    //அ.வ போல இன்னொன்றும் [ஆ.வ=ஆற்றல்மிகு வடிவமைப்பு?]]வரலாம்!!!!!!!!!!!!!!//

    எஸ்கேப்பிஸம்???

    ReplyDelete
  13. ஆம் விட்டு போய் விட்டது.சரி செய்து விட்டேன்.நன்றி அய்யா

    ReplyDelete
  14. இவ்வளவு தொடுப்புக்கொடுத்திருக்கீங்க!எப்ப படிச்சு முடிக்கிறது!அதற்கு பதிலா பதிவையே அடிவேறு வரை மேய்ந்து விடுகிறேன்.கால அவகாசம் கிடைக்கும் போது மூல நூல்களை பார்க்க முயற்சி செய்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர் இராஜ நடராஜன்,
    மூல புத்த்கங்கள் மின் பிரதி இணையத்தில் எளிதில் கிடைக்கிறது.கொஞ்சம் தாமதமாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!!!!!!!!
    ந்ன்றி

    ReplyDelete
  16. Time line பார்க்கும் போது ஐந்து நூற்றாண்டுகள் தொடர் கருத்து வைத்தும் அசையா நகர்வு மூளைகளை சிந்திக்க வைக்க முடியவில்லையோ:)

    ReplyDelete
  17. நண்பர் நடராஜன் ஹா ஹா ஹா
    உங்களுக்கு பேராசை.இவ்வளவு நாள் கட்டி காத்த அதிகாரம்,சாம்ராஜ்யம் எல்லாம் ஒரு கொள்கைக்காக் விட முடியுமா?அவர்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்!!!!!!!!!!!!!!!

    இன்னும் கொஞ்சம் iD கொள்கையாகத்திற்குள் செல்லும் போது நம்க்கே இவர்கள் சொலவ்து சரியாக இருக்குமோ என்ற அளவிற்கு குழப்பி விடுவார்கள் இந்த அ.வ[ID] ஆட்கள்.அ.வ ஆட்கள் இ.வா (இனிய‌ வாழ்வு வேறு ஏதும் நினைக்கவேண்டாம்] ஆட்கள் அல்ல‌
    நன்றி

    ReplyDelete
  18. David Attenborough (Richard Attenborough's brother) life series BBC telecast videos are available online as well as video format too.

    A must see for a visual proof of evolution theory.

    ReplyDelete
  19. வார்த்தையிலாவது பொங்கல் கொண்டாடிக்கிறேன்.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete