Sunday, May 6, 2012

காலத்தால் மறைந்த மாமத யானை :மாமூத் காணொளி
மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத் என்கிற வார்த்தையானது மன்சி என்ற ருஷ்ய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும்.

மாமூத்துக்கள் தற்கால யானைகளை ஒப்பிடும் போது மிகவும் பேருரு உடையதாகும். ஆங்கிலச் சொல் "mammoth" என்பது "பெரிய" அல்லது "மிகப்பெரிய" என்கிற பொருள் தருவதாகும். சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே இதுவரை கண்டுபிடிக்க பட்ட படிமங்களிலேயே மிகப்பெரியது (Songhua River mammoth). அது ஏறத்தாழ ஐந்து மீட்டர் உயரம் இருந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மாமூத்துகள் ஆறு முதல் எட்டு ட‌ன்கள் எடை இருந்திருக்க கூடும் சில ஆண் மாமூத்துகள் பன்னிரண்டு ட‌ன்கள் வரை இருந்திருக்கலாம் என கருதபடுகிறது.

சுமார் 6000 வருடங்கள்க்கு முன்பு கூட அலாஸ்காவில் வாழ்ந்த இவை அதன் பிறகு  மறைந்த்ன.உயிரின மறைவில் சமீப காலத்தில் நடந்த சம்பவம் என கொள்ளலாம்.

அது பற்றிய பி பி சி காணொளி பாருங்கள்.நன்றி


17 comments:

 1. சகோ.சார்வாகன்!காலத்தினால் அழிந்தது என்றால் காணொளி கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகத்தானே பொருள்.

  இன்றுதான் King Kong படம் பார்த்தேன்.இன்னும் அந்த மா குரங்கின் தாக்கமே தீரவில்லை:)

  ReplyDelete
 2. வாங்க சகோ இராஜநடராஜன்

  ஆமாம் காணொளி கிராஃபிக்ஸ்தான்.அப்ப்டியாவது பார்க்ககூடிய கால் கட்டத்தில் வாழ்கிறோம் என்பதும்,உலகின் 99% உயிரினங்கள் அழிந்து விட்டன,இன்னும் கூட பல் அழியலாம் என்பதை உணர்ந்து அவற்றை பாதுகாக்க முயற்சி தேவை.

  உலகில் மனிதனும் இல்லாமல் இருந்த காலம் இருந்தது,இல்லாமல் போகும் கால‌ம் சீக்கிரம் வந்து விட வேண்டாம் எனவே சில முயற்சிகளை செய்கிறோம்.

  http://www.endangeredspeciesinternational.org/overview.html

  நன்றி

  ReplyDelete
 3. www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,

  ReplyDelete
 4. மதிப்பிற்குறிய திருவாளப்புத்தூர் முஸ்லிம அவர்களுக்கு

  நல்மா?.இங்கு அனைவரும் நல்ல சுகம்.நீங்கள் குறிபிட்ட விடயங்கள் அறிந்து மகிழ்சி.அதாகப்பட்டது உங்களால் இறைத்தூதராக ஏற்கப்ப்டும் திரு முகம்து இபின் அப்துலா அவர்களின் செயலாக உங்கள் ஹதித்துகள் கூறுவதை மாற்று மதத்தினர தவறாக புரிவதாக் எண்ணி சரியாக மூமின் புரிதல் ஏற்படுத்த முயல்கிறீர்கள்.

  அந்த புரிதல் ஏற்பட மூமின் ஆனால் மட்டுமே சாத்தியம் என அறிந்து உணர்ந்ததால் நாம் அந்த புரிதல் குறித்து விருப்பம் காட்டுவது இல்லை.
  சரி விவாதிக்க ஆசைப் படுகிறீர்கள்

  நம்முடன் விவாதிக்க இவ்விடயங்கள் மட்டுமே தகுதியானவை.

  1.குரான்,முகமது,இஸ்லாமின் தோற்றம் பற்றிய வரலாற்று சான்றுகள் குறித்து விவாதிக்கலாம்.

  2. குரானில் அறிவியல் அல்லது பரிணாம் எதிர்ப்பு

  மற்றபடி உங்கள் தளம் பார்த்தேன்.Super appu!!!!!!!!!
  போட்டு தாக்குங்கள் எனக்கு எந்த வித ஆட்சேபனை இல்லை.

  நன்றியுடன்

  காஃபிர் சார்வாகன்

  ReplyDelete
 5. சார்வாகன் அவர்களுக்கு,
  விவாதத்திற்கு எப்பொழுதும் நான் தாயராக இல்லை(நட்பை கெடுத்துவிடும்),அதற்கான சூழ்நிலை ஏற்படும் வரையில்...தனிமனித தாக்குதல்,அநாகரீக வார்த்தைகள் இவற்றை பயன்படுத்தாமல் உங்களுக்கு எழும் கேள்வியை மட்டும் விவாதிக்க நீங்கள் தயார் என்றால் நீங்கள் குறிப்பிட்ட விசயங்களில் விவாதிக்க முஸ்லிம்கள் சார்பாக தாராளமாக நான் ரெடி...
  உடனே உங்கள் கட்டுரையை குறிப்பிட்டு இதற்கென்ன பதில்,இதற்கென்ன பதில் என்று தயவு செய்து கேட்க வேண்டாம்...
  நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வியை எனது தளத்தில் பின்னூட்டமாக கேளுங்கள்...
  இதை விட SUPER IDEA சொல்லுறேன் கேளுங்க மாதக்கணக்கில் கட்டுரை விவாதம் வேணாம்.நீங்கள் கேட்ட கேள்விக்கு நானும்,நான் கேட்ட கேள்விக்கு நீங்களும் ஒரு பதிலை சொல்லிவிட்டு அதற்க்கு மறு கேள்வி எழுப்பும் பொழுது முன்பு சொன்ன பதிலை முற்றிலும் மறுக்கும் விதமாக நான் அப்படி சொல்ல வரவில்லை,இப்படி சொல்ல வரவில்லை என்று சமாளிப்பு கட்டுரைகளும் வேண்டாம்.உங்கள் சார்பாக சிலர் என் சார்பாக சிலரை அழைத்துக்கொண்டு மக்கள் மன்றத்தில் முகம் காட்டி நேரடி விவாதத்திற்கு தயாரா?

  ReplyDelete
 6. மதிப்பிற்குறிய தி.பு.முஸ்லிம் அவர்களே
  /தனிமனித தாக்குதல்,அநாகரீக வார்த்தைகள் இவற்றை பயன்படுத்தாமல் உங்களுக்கு எழும் கேள்வியை மட்டும் /

  இப்படி நாம் கருத்து வெளியிடுவது இல்லை.நாம் கேட்பது வரலாற்று சான்றுகள்,அறிவியல் விள்க்கங்கள் பற்றி மட்டுமே.அப்ப்படி கருத்து கூறியதாக சுட்டி காட்டினால் அதனை நீக்கி விடுகிறோம்.பொதுவாக கூறாமல் குறிப்பிட்டு விள்க்க வேண்டுகிறேன்.

  நன்றி

  ReplyDelete
 7. ///உங்கள் சார்பாக சிலர் என் சார்பாக சிலரை அழைத்துக்கொண்டு மக்கள் மன்றத்தில் முகம் காட்டி நேரடி விவாதத்திற்கு தயாரா?////

  இதற்கு என்ன பதில், என்ன பதில். பதில் சொல்ல தில்லிருக்கா, தலையிருக்கா (சும்மா தலையை சீப்பால் சீவுவதற்குதான்), ......LOL

  ReplyDelete
 8. வாங்க நரேன்

  நலமா நம்ம சகோ தி பு.முஸ்லீமின் கேள்வியை மிக சரியாக் விளங்கியதற்கு நன்றி.நமக்கு தலை இருக்கிறது.அதற்குள் மூளையும் இருக்கிறது.

  அதற்கு சிந்திக்கும் திறனும் இருக்கிறது.

  சரி நாம் கூடுமானவரை தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கிறோம்.எதிர்வினை மட்டுமே தவிர்க்க முடியாமல் ஆற்றுகிறோம்.ஏன் எதிர்வினை புரிகிறாய்?..மற்றவர்கள் போல் சும்மா இருக்க வேண்டியதுதானே என்னும் அன்புக் கட்டளை,இது 1400 வருடம் பழமையான மிகவும் பலன் அளித்த முறை.

  சரி முதலில் தி.பு.மு என்ன நம்முடைய எதிர்வினை காட்டுகிறார் என அறிய ஆவல் .அதற்கான் வினையையும் நாம் காட்டுவோம்.அப்படியே பொழுது நன்கு போகும்.இதில் மத அறிவியல்,பரிணாம் எதிர்ப்பு வந்தால் சில பதிவு தேத்தலாம்.

  ஆனால் தி.பு .மு வின் பதிவுகள் நம் இ.சா தாவா பதிவு[காப்பி அடிக்கிறாரா?] போலவே உள்ளதால் அந்த எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால் நகைச்சுவை பதிவு எழுதும் மூட் இல்லை!.

  பரிணாம் எதிர்ப்பு பதிவு வராமல் மிகவும் போர் அடிக்கிறது.

  நீங்களாவது ஏதேனும் ஏற்பாடு பண்ண முடியுமா?.தமிழில் மட்டுமல்ல ஆங்கில பரிணாம் எதிர்ப்பு அண்ணாச்சிகளும் மொக்கை போடுகிறார்கள்.

  சரக்கு தீர்ந்து விட்டதா!.வெளிவரும் 1000 ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்று கொஞ்சம் வித்தியாசமாக் எதையோ சொன்னால் அக்கருத்தை திரிப்பது மட்டுமே பரிணாம் எதிர்ப்பு ஆய்வு எனில் அதை நாமே அவர்களை விட சிறப்பாக செய்வோம்.

  இதனால் பதிவு எழுதவே உத்வேகம் குறைந்து விட்டது.சகோ தி .பு.மு தான் நம்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பார் என ஒரே நம்பிக்கை.

  நம்பிக்கை பலிக்குமா,விவாதம் நடக்குமா,பதிவுகள் புத்தெழுச்சி பெறுமா என்பதெல்லாம் நாளைய வரலாறு!

  நன்றி

  ReplyDelete
 9. சார் உங்க கட்டுரைக்கு ஆக்கமோ ஊக்கமோ தருவது என் வேலை இல்லை...

  நான் எதை சொல்லி பின்னூட்டம் இட்டேனோ அதை 100 % உண்மை படுத்தியமைக்கு நன்றி..நாள் கடத்தும் கட்டுரை விவாதங்கள் வேணாம் நேரடி விவாதத்திற்கு வரத்தயாரா என்று கேட்டால் வரத்தயார்,வரத்தயார் இல்லை ஒரு வார்த்தைல பதில் சொல்லாம தல இருக்கு,மூளை இருக்குனு எதுக்கு சமந்தமில்லாத இந்த வியாக்கியானங்கள்.நீங்க முதல்ல நேரடி விவாதத்திற்கு வாங்க மக்கள் முடிவெடுக்கட்டும் யாருக்கு மூளை இல்லை என்று...உங்களுக்கு நீங்கள் எழுதும் தொடர்கள் புகழடைய வேணுமா அல்லது மக்களை அறியாமை என்னும் இருளிலிருந்து வென்றெடுக்க வேண்டுமா?

  இல்ல இல்ல நேரடி விவாதம் என்ன,கட்டுரை விவாதம் என்ன எல்லாம் ஒன்னு தான் நீங்க சொல்ல வரிங்க(வருவீங்க) சரி இருந்துட்டு போகட்டும்.1400 பழமை பலன்,மத அறிவியல்,பரிணாம்,மத அடிப்படைவாதம் இப்படி பல விசயங்களில் நீங்கள் குற்ற சாட்டுக்கள் வைத்தாலும்(உங்கள் ஓர் இரு கட்டுரைகளை படித்ததில் விளங்கினேன் ).உங்கள் அனைத்து கட்டுரைகளுக்கும் மறுப்பு எழுதுவது சாத்தியமில்லை,அதற்கான நேரமும் என்னிடத்திலே இல்லை அதனால் நான் உங்களிடத்திலே கேட்பது முதலில் ஒரே ஒரு குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு அந்த வசனம் எந்த அறிவியலை மாறுகின்றது அல்லது அதிலே அறிவியலே இல்லை என்று தாங்கள் கருதும் ஒரு வசனத்தை தாருங்கள்(1000 வசனம் இருக்குனு தயவு செய்து பழையதை பேச வேண்டாம்).என்ன முதல்ல இருந்து ஆரம்பிக்குரேனு தப்பாக நினைக்க வேண்டாம் சார்.நீங்கள் கேட்க போகும் வசனத்தை நான் தவறாக இது நாள் வரையில் புறிந்திருக்கலாம் அல்லது நீங்கள் விளங்கும் வகையில் உங்களுக்கு யாரும் புரிய வைக்க முயற்சிக்காது இருந்திருக்கலாம்...எனது தளத்தின் கட்டுரையில் பின்னூட்டம் இட்டால் இறைவன் நாடினால் விரைவில் பதில் கிடைக்கும்(உங்கள் தளத்தின் அப்டேட் எனக்கு வர தாமதம் ஆகுகின்றது).இனி நேரடியா இஸ்லாம் சம்மந்தமான கேள்வியை கேட்க ஆரம்பம் செயவிங்கன்னு நம்புறேன்...

  மற்ற படி வினைக்கு,வினையும் எதிர்வினைக்கு, எதிர்வினையும் யாமும் அறிவோம் நண்பா .......

  ReplyDelete
 10. முயலுக்கு எத்தினி காலு ..?

  ReplyDelete
 11. திருவளப்புத்தூர் முஸ்லீம் அவர்களுக்கு,
  என் குறுக்கீடு தவறு என்றால் சொல்லுங்கள், நான் இப்பின்னூட்டத்தைத் திரும்பப் பெறுகிறேன்.

  ‘காலத்தால் மறைந்த மாமத யானை’என்பது சார்வாகன் வழங்கிய இடுகையின் தலைப்பு.
  பின்னூட்டங்கள் அந்தத் தலைப்பை ஒட்டித்தானே அமைய வேண்டும்? தலைப்பை ஒட்டியே விவாதங்களும் அமைந்தால் அது வரவேற்கத் தக்கது.

  உங்கள் இருவரின் மதம் சம்பந்தப்பட்ட வாக்குவாதத்தை இங்கே நுழைப்பது முறையா என்பது என் பணிவான கேள்வி.

  ‘பணிவான’ என்று சொல்லக் காரணம்.............

  மதம் சம்பந்தப்பட்ட வாக்குவாதம் கடும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அடிகோலும் என்பதால்தான்.

  தங்களையும் சார்வாகனையும் நான் கேட்டுக் கொள்வது:

  விரும்பினால் தலைப்பை ஒட்டி விவாதியுங்கள். அது இயலாதென்றால், மதம் சம்பந்தப்பட்ட வாக்குவாதத்தை ஒத்தி வையுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 12. அறியத்தக்க சுவையான செய்தி வழங்கிய சார்வாகன் அவர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்.

  ReplyDelete
 13. முனைவர் பரமசிவம் said...
  //‘காலத்தால் மறைந்த மாமத யானை’என்பது சார்வாகன் வழங்கிய இடுகையின் தலைப்பு.
  பின்னூட்டங்கள் அந்தத் தலைப்பை ஒட்டித்தானே அமைய வேண்டும்?//
  சார் என் முதல் பின்னூடத்தை மீண்டும் ஒரு முறை பார்வையிட உங்களை கேட்டுகொள்கின்றேன்.. அதிலே என் தளத்தை அறியாத மற்றும் புதிதாக பின்னூட்டமிடும் நபர்கள் ஆகியோர்களுக்கு அறிமுகம் செய்ய நான் இட்ட பின்னூட்டம் அது.அதிலே விவாதத்திற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. சார்வாகன் அவர்கள் விவாத தோரணையில் என்னை அழைத்ததால் தான் அவர் அழைப்பிற்கு பதில் கூறினேன்...விவாதிப்பதாக இருந்தால் என் தளத்திலே பின்னூட்டம் இடுங்கள் என்றும் கூறியுள்ளேன் அதையும் சற்று படியுங்கள்...தவறு என்னிடம் இருந்தால் திருத்திக்கொள்ளலாம் ஆனால் !!!!!!

  ReplyDelete
 14. தருமி said...
  //முயலுக்கு எத்தினி காலு ..?//

  ஐயா தங்கள் தளத்திலே என் கட்டுரைக்கு பதில் எங்கே என்று நான் இட்ட பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாமல் இன்னொரு தளத்திலே இட்ட பின்னூட்டத்திற்கு தாங்கள் பதில் சொல்லி இருப்பது அப்படியே மெய் சிலிர்க்க வைக்கின்றது..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்....

  குறிப்பு :மத விவாதங்களை கண்டு கடுப்பேதுறாங்க MY LORD என்று வாசகர்கள் FEEL பண்ணுவதால்,இது சம்மந்தமாக என் தளத்திற்கு வரும் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பதிலளிக்க படும் தயவு செய்து இங்கு இது(இஸ்லாமிய மத) சம்மதமாக யாரும் பின்னூட்டமிட வேண்டாம்.நீங்க என்ன கேள்வி கேட்குனும்னாலும் அங்க வாங்க,அங்க வாங்க.....

  ReplyDelete
 15. வாங்க தருமி அய்யா,முனைவர் பரம சிவம் அய்யா
  கருத்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 16. மதிப்பிற்குறிய தி.பு.முஸ்லிம்,

  கலக்குறீர்கள்.இருந்தாலும் இன்னும் சரியாக தாவா செய்யவில்லை என்பது நம் கருத்து.ஏன் எனில் உங்களோடு விவாதிக்கும் அள்விற்கு நம்க்கு மூட் வரவில்லை.நீங்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து (விவாத) மூட் வர வைத்தால் மட்டுமே விவாதம் நடக்கும்.

  பாருங்கள் நண்பர் சு.பி பதிவு இட்டாலே நம்க்கு மறுப்பு சொல்லும் ஆர்வம் பொங்குகிறது.உலக மார்க்கங்களிடம் சமாதான்ம் நிலவுமா என்று சு.பி பதிவிட்டால் உடனே (விவாத) மூட் வருகிரது.

  முதலில் இஸ்லாமிய மத பிரிவினர்களில் சமாதானம்ம் வந்தாலே உலகில் 99% சமாதானம் வந்துவிடும் என சொல்ல ஆர்வம்,தாபம் வருகிறது.அதுவும் சவுதி செய்வதை புகழ்பாடும் போதே முஸ்லிம் அல்லாத அனைவருக்குமே எரிச்சல்,கோப்ம‌ வந்துவிடும். பாருங்கள்.இப்படித்தான் மூட் உருவக்கனும் புரிந்ததா!

  திருவாளப்புத்தூரை விட்டு சவுதி முஸ்லிம் ஆனால் மட்டுமே இது சாத்தியம்!

  ஆகவே உங்களின் தாவா,தாக்கியா சரியில்லை.நிறைய முன்னேற்ற‌ம்
  இருப்பினும் கவலைப் படாதீர்கள்!,

  உங்களின் தாவா பணி சிற்க்க நம்மால் ஆன பயிற்சி,கருத்தாக்க உதவிகளை வழங்குவோம் என ஆறுதல் கூறுகிறோம்.

  நன்றி

  ReplyDelete
 17. ///தருமி said...
  முயலுக்கு எத்தினி காலு ..///

  நல்லா கவுண்ட் பண்ணுங்க ஒன், டூ, த்ரி.. மூணுதான்.

  அந்த நாலாவது காலு?? அதைதான் மூணு கால் என்று காட்ட வெட்டி முயல் கால் சூப் வைத்துவிட்டோமே..ஹி..ஹி

  ReplyDelete