Thursday, June 28, 2012

இயேசு பிறந்த ஆலயத்தை தொன்மைத் தலம் ஆ(கா)க்க போராடும் பாலஸ்தீனர்கள்



Church of nativity bethlehem

வணக்கம் நண்பர்களே,

நம் பதிவுகளில் மனித குலத்தின் மிக முக்கிய அறிவியல்,வரலாற்று நிகழ்வுகளை தமிழ்ச் சமூகத்தில் பகிர்ந்து வருகிறோம். வரலாற்றின் நிகழ்வுகளை அதன் சான்றுகளை பாதுகாப்பது என்பது உண்மையை வரும் சந்ததியினருக்கு அளிக்கும் ஒரு மகத்தான செயல் ஆகும்.

கிறித்தவ மதத்தின் நாயகர் இயேசு(தமிழில்) ,ஈசா(அரபி) மற்றும் ஜீசஸ்(ஆங்கிலம்) என் அழைக்கப்படுபவர் பொ.ஆ முதல் நூற்றாண்டில் இபோதைய பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேம் நகரில் பிறந்ததாக கூறபடுகிறார்.இஸ்ஸாமில் இவர் ஒரு [முக்கிய?] இறைத் தூதராக ஏற்கப் படுகிறார்.

அவர் வரலாற்றில் வாழ்ந்தவரா,அவர் குறித்து மத புத்தகங்கள் கூறுவது உண்மையா என்பது பற்றியல்ல இப்பதிவு.நம்க்கு மத்திய கிழக்கு அரசியல் ஆபிரஹாமிய மதங்களான யூதம்,கிறித்தவம்,இஸ்லாம் சார்ந்தே இருப்பதால் அது குறித்த வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுகிறோம்.

இஸ்லாமியர்கள் போல் உலகெங்கும் உள்ள கிறித்தவர்க‌ளும் பெத்லகேம் புனிதப் பயணம் செல்வது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது.அப்படி செல்பவர்கள் இயேசு பிறந்த பெத்லகேம்,வசித்த ,பயணம் செய்த பல பகுதிகள் இபோதைய ஜோர்டான், பாலஸ்தின மேற்கு கரைகளில் வருவதால் இபபகுதிகளை சுற்றிப் பார்க்கின்றனர்.

இதில் இயேசு பிறந்தாக கூறப்படும் நேட்டிவிட்டி சர்ச்,ஒரு குகையாக இருந்து ஆலயமாகப்பட்டது விக்கிபிடியா குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.இது ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனால் பொ.ஆ 327ல் தொடங்கி பொ.ஆ 333 ல் கட்டி முடிக்கப்பட்டது.இந்த ஆலயம்  இல்லாமல் இன்னும் பல பழமையான் கிறித்தவ தேவாலயங்கள் பெதலகேம்,பாலஸ்தீனத்தில் உண்டு.

   
இபோது இந்த ஆலயம் உள்ளிட்ட சில இடங்களை யுனெஸ்கோ அமைப்பின் உலகின் தொன்மையான இடங்கள் என அங்கீகாரம் பெற பாலஸ்தீன அரசு முயற்சிக்கிறது.இதற்கான வாக்கு  இரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை 29 ஜூன் நடக்கிறது.

இதில் பாலஸ்தீனர்களுக்கு இரு விடயங்கள் இலாபம்

1. யுனஸ்கோவின் அங்கீகாரம் இன்னும் அதிக சுற்றுலா பயணிகள்,அது சார்ந்த வேலை வாய்ப்பு,பொருளாதாரம் வலுப்படும்.

2.இந்த ஆலயத்தை நகரை சுற்றி ஆக்கிரமிப்பு அமைக்க முயலும் இஸ்ரேலை தடுத்து விடலாம்.


பாலஸ்தினர்களில் கிறித்தவர்கள் பலர் உண்டு.இவர்கள் 10% இஸ்ரேலிலும்,4% சதவீதம் மேற்கு கரையிலும்,1% காசா பகுதியிலும் வாழ்கின்றனர்.பால்ஸ்தீன கிறித்த‌வ ,இஸ்லாமியர்களிடையே மண உறவு மிக இயல்பான ஒன்று.இந்த ஆலயத்தில் நடை பெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அனைவரும் பங்கு கொள்வது,பாலஸ்தீனர்களும் நம் தமிழர்களை போன்ற மத சார்பற்றவர்களே என்பதை விளக்கும் ஒரு செயல் ஆகும்.


ஆகவே இந்த ஆலயம் உட்பட்ட பல இடங்களை தொன்மைத் தலம் ஆக்க முயலும் முயற்சிகளை வழக்கம் போல் இஸ்ரேல், அமெரிக்க எதிர்க்கின்றன.

பாலஸ்தீனர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்.இது வெற்றி பெற்றால் சுற்றுலா,அதன் சார்பு பொருளாதாரம் அதிகரிக்கும். பாலஸ்தீனம் இஸ்ரேலை சார்ந்து இருக்க வேண்டிய அவ்சியம் இல்லை.

தங்கள் போராட்டத்திற்கு உலகளாவிய சுற்றுலா பயணிகளின் ஆதரவையும் பெற முடியும்.உண்மை நிலவரம் வெளிவரும்.

1967ம் ஆண்டு எல்லைகளை மட்டும் கூட பெற பாலஸ்தீனர்கள் தயாராகவே உள்ளனர்.ஆனால் இஸ்ரேல் தன்னை அனைத்து அர‌பு நாடுகளும் அங்கீகரித்து தன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட வேண்டும் என்பதால் எந்த தீர்வையும் தவிர்க்கிறது.

நேட்டிவிட்டி சர்ச் தொன்மைத் தலம் ஆவது இபிரச்சினையின் முக்கிய மைல்கல் ஆகும் வாய்ப்பு உள்ளதால் நாம் இதனை பகிர்கிறோம்.

இன்னும் அதிக தகவல்கள் இங்கே


For millions of Christians around the world, the Church of the Nativity in Bethlehem is a place for worship and contemplation, a revered site worth travelling thousands of kilometres for a chance to kneel before the birthplace of Jesus Christ. A tiny stoop welcomes visitors outside the church, forcing them to humbly bow before making their way inside. Mosaics and glass lamps adorn the dimly-lit church and a narrow stairway leads visitors to the grotto where Jesus is believed to have been born.

Little do those pilgrims know that the church is about to become the centre of contention in St Petersburg, Russia, where Palestinians are hoping that a Hail Mary vote due on Friday, June 29 will mark the inclusion of Jesus' birthplace in the United Nations Scientific and Cultural Organisation's (UNESCO) World Heritage List.

Churches, monasteries and convents from Armenia to Uruguay are a part of the world-renowned list by UNESCO, which protects natural and cultural heritage that meet its criteria for "universal value to humanity".

In its ongoing meeting that concludes on July 6, the UN body's World Heritage Committee, comprising 21 member states, will consider whether to add the Church of the Nativity on its list.

நன்றி

23 comments:

  1. சகோ சார்வாகன்!

    சிறந்த பதிவு. நேரமின்மையால் தமிழ்படுத்த முடியவில்லை. எனவே உங்கள் பதிவிலிருந்து சில பாராக்களை எனது இந்த பதிவில் சேர்த்துள்ளேன். நன்றி!.

    http://www.suvanappiriyan.blogspot.com/2012/06/blog-post_6813.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ சுவனன்
      கருத்துக்கு நன்றி.நம் பதிவுகளை யாரும் எடுத்துப் பயன்படுத்த‌லாம்.
      நன்றி

      Delete
  2. பாலஸ்தீனியர்களின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கது ... பாலஸ்தீனியம் பொருளாதார சுதந்திரம் அடைந்து இஸ்ரேலை சாராமல் இருந்தால் மகிழ்ச்சியே ....

    ஆனால் காலப் போக்கில் கிறித்தவ வழிப்பாட்டுத் தளங்களையும் மசூதிகளாக மாற்றமல் இருந்தால் சரி !

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் காலப் போக்கில் கிறித்தவ வழிப்பாட்டுத் தளங்களையும் மசூதிகளாக மாற்றமல் இருந்தால் சரி//
      சகோ, எல்லா நோக்கங்களும் அதை நோக்கியே. அப்போ தானே சுவர்க்கம் கிடைக்கும்.

      Delete
    2. சகோ இக்பால் செல்வன்
      பாலஸ்தீனர்களின் போராட்டம் மத ரீதியாக சித்தரிக்கப் படுவதான் சிக்கல்.
      இப்பிரசினை சுமுகமாக் தீர்க்கப்படுவது மிக அவசியம் என நினைக்கிறேன்.எப்படியாவது இதனால் இப்பிரச்சினை தீராத என்ற நப்பாசைதான்.
      நன்றி

      Delete
  3. //பாலஸ்தீனர்களும் நம் தமிழர்களை போன்ற மத சார்பற்றவர்களே//
    அரபிய மதத்துக்கு மாறியவர்களை தவிர.
    பாலஸ்தீனர்கள் மத சார்பற்றவர்களா? ஹாமாஸ்!!!
    இங்கேயொருவர் பாலஸ்தீனர்களுக்காக ஓடித் திரிகிறாரே பாலஸ்தீனர்கள் தமிழர்களை போன்ற மத சார்பற்றவர்க இருந்தால் பாலஸ்தீனத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்வோம் என சொல்வாரா?

    ReplyDelete
    Replies
    1. சகோ குயிக்ஃபாக்ஸ் அனித்து இஸ்லாமிய நாடுகளும்,மதவாதிகளுமே பாலஸ்தீனர்களின் பிரச்சினைகளை தீர்க்க முனையாமல் தங்களின் அரசியல் நலனையே அடைய முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை.

      ஹமாஸை ஆதரிக்கும் அரபு நாடுகள் சுமுகப் போக்கை கடைப்பிடிக்கும் ஃபத்தாவை ஆதரிப்பது இல்லை.
      ஜோர்டானில் பாலஸ்தீனர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள்.மதம் அவர்களை பாதுகாக்கவில்லை.எப்படியாவது இஸ்ரேலுடன் ஒரு பொதுவான தீர்வுக்கு வருவது இந்த அரபு நாடுகளை நம்புவதை விட சிற‌ந்தது.அவர்களின் தொன்மைத் தலம் ஆக்கும் இம்முயற்சி நிச்சயம் பாராட்டுக்கு உரியதே!.

      நன்றி

      Delete
    2. //ஜோர்டானில் பாலஸ்தீனர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள்//
      சகோ, இஸ்லாமிய அரபு ஜோர்டானியர்கள் கொடுத்த அடி தாங்காமல் இஸ்லாமிய பாலஸ்தீனர்கள் ஓடிபோய் இஸ்ரேலிடம் சரணடைந்தார்கள் என்பது பழையவரலாறு என்று அறிந்தேன். அரபுகளின் இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாமில் பிரிவுகளே கிடையாது நன்றாக புரிந்தது.

      Delete
  4. மைனாரிட்டி ஓட்டு வாங்க போட்ட பதிவு மாதிரி இருக்குதே... சகோதரர் சார்வாகன் எலெக்சன்ல நிக்குறாரா?

    ReplyDelete
  5. வாங்க சகோ நந்தவத்தான்,
    அப்படியா தெரிகிறது!!!!!!!!!
    நமக்கு நல்லது யார் செய்தாலும் பாராட்டும் மனது உண்டு.பாலஸ்தீனர்களின் ஆலயத்தை தொன்மைத்தலம் ஆக்கும் முயற்சியையும்,சவுதி அரசு 26/11 தாக்குதலில் தொடர்புடைய அபு ஜிந்தாலை[உண்மைப் பெயர் ஜியாவுத்தினா???] இந்திய அரசுடன் ஒப்படைத்த‌தையும் கூட பாராட்டுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  6. அந்த ஆலயம் ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனால் பொ.ஆ 327ல் தொடங்கி பொ.ஆ 333 ல் கட்டி முடிக்கப்பட்டதால் அது தொன்மையான இடம் என்று அங்கீகாரம் வழங்குவதில் எந்த சிரமும் கிடையாது.
    ஆனால் மதம், தேசம், அரசியல் என்று வந்துவிட்டால் சிக்கள்தான். அதனால் இஸ்ரேலில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்.

    உலக இஸ்லாமிய தீவிரவாததிற்கு முதல் காரணமாக பாலஸ்தீன பிரச்சனையை சொல்கிறார்கள். அந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் நல்லது.
    இந்தியா அரசாங்கமும் குடிமக்களும் பாலஸ்தீனர்களுக்கு என்றுமே ஆதரவாகதான் இருந்தது இன்னும் இருக்கின்றது. ஆனால் பாலஸ்தீனர்கள், காஷ்மீர் பிரச்சனையில் நமக்கு ஆதரவாக இல்லை. மத கண்ணோட்டதுடன் தான் பார்க்கிறார்கள்.

    பாலஸ்தீன பிரச்சனை தீர்ந்துவிட்டால், பன்னாட்டு மதவாதிகளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை தேவைப்படும் அதனால் காஷ்மீரை பிடித்து தொங்கினால், நமதுகதி அதோகதிதான்.

    ReplyDelete
    Replies
    1. //உலக இஸ்லாமிய தீவிரவாததிற்கு முதல் காரணமாக பாலஸ்தீன பிரச்சனையை சொல்கிறார்கள்//
      நண்பர் நரேன், அவர்கள் எப்போதும் நல்லா தான் கதை சொல்வார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இஸ்லாமியர் அல்லாதவர்களை அரபு ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாக கொண்டுவரும் முயற்ச்சிகளில் ஒன்று

      Delete
  7. வணக்கம் சகோ,

    பாலஸ்தீன பிரச்சினை என்பது அரசியல்ரீதியாக அணுகப் பட்டு இருந்தால் முதலிலேயே தீர்க்கப் பட்டு இருக்கும்.அரபு மதவாதிகளால் இப்பிரச்சினை இஸ்லாமிய யூத பிரச்சினையாக் சித்தரிக்கப்பட்டது இஸ்ரேலுக்கே சாதகமானது.

    பாலஸ்தீனர்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு அவர்களிடம்தான் உள்ளது,தங்களுக்கு குடியுரிமை,வாழ்வாதாரம் வழங்கத் விருப்ப இல்லாத அரபு நாடுகளை புறக்கணித்து விட்டு தங்களின் எப்படியேனும் ஒருமித்த கருத்தாக 67வருட எல்லைகளை ஏற்கத் தயாராக இருக்கிறென் என சாத்வீக முறையில் உறுதியாக் தெரிவித்தால் மட்டுமே தீர்வு வரும்.

    [இதே சூழலில் உள்ள இது நம்ம ஈழ சகோக்களுக்கும் பொருந்தும். அமெரிக்கா ,இந்தியா தமிழகத்தை நம்புவதை விட்டு விட்டு இராஜபக்சே அல்லாத பிற சிங்கள் அரசியல் இயக்கங்களுடன் ஏதேனும் ஒரு தீர்வுக்கு முயற்சிக்கலாம்.தீர்வையே சொல்லாமல் திரை மறைவு பேச்சு வார்த்தைகள் ஆள்பவனுக்கே இலாபம்.]

    அதை விட்டு மதவாதிகள் போர் தொடுத்து இஸ்ரேலை இல்லாமல் செய்து பாலஸ்தீனத்தை மீட்டு கொடுபார்கள் என்பது பகல் கனவு.இஸ்ரேலுக்கு ஹமாஸ் ராக்கெட் தாகுதல் நடத்துவது அதன் மனித உரிமை மீறல்க‌களை நியாயப் படுத்துவதால் அதற்கு இலாபமே!.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சவுதியில் ஒரு ஊர்வலமோ ,போராட்டமோ நடத்தினாலும் அது அரசுக்கும் எதிராக் திரும்பும் வாய்ப்பு உள்ளதால் அது
    அனுமதி மறுக்கப்ப்படும்.

    உலகளாவிய மத போத்னை பரப்பு மையமாக் திகழும் சௌதி தன் நாட்டில் மத தீவிரவாதிகளை ஒடுக்குவதே சான்று.

    அபு ஜிந்தாலை அமெரிக்க சொல் படி இந்தியாவுக்கு கொடுத்ததன் மூலம் சவுதி உலகளாவிய இஸ்லாமிய அரசு என்னும் மத தீவிரவாதிகள்க்கு எச்சரிக்கை விடுத்ததாகவே கருதலாம்.

    ஜனநாயகம்,மத சார்பின்மை அடிப்படையிலான எந்த போராட்டமும் வெற்றி பெற கால தாமதம் ஆகும் .ஆயினும் ஆட்சி மாற்ற‌ம் இயல்பாக நடக்கும்.பிரச்சினை இல்லாமல் ஆட்சி நடக்கும்.

    இந்த ஆலயத்தை தொன்மைத் தலமாக ஆக்கும் முயற்சி இந்த வகையில் ஒரு சுயசார்புள்ள ஜன‌நாயக,மத சார்ப்ற்ற முயற்சி என்பதால் மட்டுமே வரவேற்கிறோம்.

    பாலஸ்தீன பிரச்சினையை சரியாக் புரியாமல் தங்கள் மத பிரச்சினை போல் துடிக்கும் சகோக்கள் இருக்கும் வரை தீரும் வாய்ப்பு இல்லை.

    காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சி செய்த, செய்யும் குழப்பங்களே காரணம்.பாகிஸ்தான் சிக்கலில் இருக்கும் வரை இது பாலஸ்தீனம் அளவு பெரிதாகாது எனவே கருதலாம். காஷ்மீரிகள் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இருக்கும் சூழலை பார்த்தாலே, கொஞ்சம் யொசித்தால் தீர்வு வந்து விடும்.


    நன்றி

    ReplyDelete
  8. ஐ.நா சர்ச் ஆஃப் நேட்டிவிட்டியை தொன்மைத் தல்மாக் அங்கீகரித்து விட்டது.

    http://www.ynetnews.com/articles/0,7340,L-4249093,00.html

    NESCO makes Church of Nativity endangered site
    UN organization approves Palestinian bid, places Jesus' birthplace on list of World Heritage in danger. Abbas: This is a victory for our cause and for justice

    ReplyDelete
  9. அப்படியே இராமர் ,முகம்மது நபி இன்னபிற மதத்தலைவர்கள் /தூதர்கள் போன்ற‌வர்களின் பிறப்பிடமாக கருதப்படும் இடங்களை மதத்தில் இருந்து பிரித்து வரலாற்று இடங்களாக அறிவித்து அனைவரும் சென்று பார்க்கும் இடமாக இருந்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ கல்வெட்டு,
      உங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.இப்படி இராம ஜன்ம பூமி.. இன்னும் இதர பிரச்சினைக்குறிய ,வரலாற்று சின்னங்கள் ஆக்கிவிட்டு அங்கு மத ரீதியாக வழிபாடு தடை செய்யப்பட வேண்டும்.இதன் பேரில் அரசியல் செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வர வேண்டும்.மத,சாதி பிரிவினை தூண்டும் படி பேசினால் தண்டனை கொடுக்க வேண்டும்.
      ***********

      எண்ணெய் தீர்ந்து விட்டால் முதலில் உளநாட்டுப் போர்கள், ஆட்சி மாற்ற‌ம்,புதிய நாடுகள்,கொள்கைகள் என அரேபியாவே சுற்றுலா சுவ‌னத் தலம் ஆகிவிடும் சகோ.ஆகவே அனைவரும் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள்.காஃபிர்களும் காபாவை பார்க்க முடியும்.

      நன்றி

      Delete
  10. //காஃபிர்களும் காபாவை பார்க்க முடியும்.//

    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் மூதாதையர்களின் வழக்கத்தை மார்க்கமாக்கி கொண்டால் இன்றே கல்வெட்டையும், சார்வாகனையும் கஃபாவை தரிசிக்க அழைத்து செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுவனன்
      உங்கள் அன்புக்கு நன்றி!!!!!!!!

      சகோ கல்வெட்டு நமக்கு ஒரு வழிகாட்டி கிடைத்து விட்டார்.திருவிளையாடல் தருமி பாணியில் கேட்கிறேன்.
      " காஃபா" மட்டும் காட்டினால் சரிதான்,வேறு ஏதாவது காட்டி விட்டால் செய்வது?

      எதுக்கும் நாங்க கொஞ்சம் பொறுத்தே அப்புறம் போகிறோம். போகலாம்.
      போறப்போ சகோ நரேனையும் சேர்த்துக்கலாம்.ஹி ஹி ஹி (தமிழனின் தனிக்குணம்!)
      ஹா ஹா ஹா

      நன்றி

      Delete
    2. கஃபாவை காட்டுவதற்க்கு ஒரு வழிகாட்டி கிடைத்து விட்டார்ரென்று அவசரபடாதீர்கள் சகோ. கஃபாவை காட்டுகிறேனென்று ஆண்டவன் படைத்த உடல் உறுப்புக்கு துன்பம் விளைவிக்கும் செயல்கள் நடைபெற கூடிய அபாயமே அதிகம்.

      Delete
  11. சிறப்பான பதிவு சார்வாகன். சுட்டி காட்டியமைக்கு நன்றி. உடன் பாலஸ்தீனதர்க்கு ஒட்டு அளித்து விட்டேன்.

    ReplyDelete
  12. பெத்லஹெம் சர்ச் கான்ஸ்டன்டைன் தாயார் கனவினால் அடையளாம் காட்டப்பட்டு உருவாக்கப்பட்ட இடம்.
    அதற்கு முன் கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் (பாகன் என முட்டாள்தன புத்தகங்களை நம்புவோர் சொல்லும்) வழிபடும் கோவிலாக இருந்தது.

    இயேசு என ஒருவர் வாழ்ந்தற்கு எவ்வித நடுநிலை ஆதாரமும் கிடையாது. மத்தேயுவின்படி பொ.மு.6ல் பெரிய ஏரோது கால்த்தில் பிறந்தார், லூக்காவின் கதையோ கிரேனியுஸ் சிரியா கவர்னராக இருந்தபோது அதாவது பொ.கா.8ல் பிறந்தார். 14 வருடம் முன் பின்னாக இரண்டு பேர். மத்தேயுவின் ஜோசப் யாக்கோபு மகன் பெத்லஹேமில் தன் வீட்டிலேயே பிறந்தார். லூக்காவின் ஜொசப், ஏலி மகன் நாசரேத்தை சேர்ந்தவர்( அப்படி ஒரு ஊர் இருக்கவே இல்லை அந்த காலத்தில்), தலைமுறை பட்டியல்படி லூக்காவின் ஏசு ஆபிரகாமின்லிருந்து 57வது தலைமுறை, மத்தேயுவின் ஏசு 41வது தலைமுறை.
    கிறிஸ்து - இறுதி தூதர் -மேசியா என ஒரு நபர் வரவேண்டியதே இல்லை என ஏசு காலத்தில் மோசேயின் நாற்காலியை ஏற்றிருந்த சதுசேயா பாதிரி-உலீமாக்கள் கூறுவதையும், இறுதி தூதர் வந்தால் அவர் காலத்தில் உலகம் அழிய வேண்டும் என்பதையும் இங்கெ காணலாம்.
    http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

    1000 ஆண்டு தொன்மையிருந்தால் தொன்மைத் தலம் ஆகும். ஆனால் இதைக் கொண்டு இயேசுவை- பொய்யாக கிறிஸ்து இறைதூதர் வரவேண்டும் என்பது இன்னும் கூச்சல் அதிகமாக்கும்.

    ReplyDelete
  13. சகோ தேவப் பிரியா
    சிந்திக்க வைக்கும் தகவல்கள்.சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி தொன்மைத் தலம் ஆகும் பிரச்சினை நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு,இதன் விளைவுகளை நாம் நிச்சயம் பார்க்கப் போகிறோம்.நல்லதே நடக்க விரும்புகிறோம்.

    நன்றி

    ReplyDelete