Sunday, July 15, 2012

டார்வினியத்தின் மீது 10 விமர்சனங்கள்:அறிவார்ந்த வடிவமைப்பு பகுதி12


வணக்கம் நண்பர்களே,

பரிணாம எதிப்பு பதிவுகள் வராமல் நமக்கு போர் அடிப்பதாலும் நாமும் அறிவார்ந்த வடிவமைப்பு[அ.வ Intelligent Design] பிரசார‌மும் செய்ய முடியும் என்பதையும் நிரூபிக்க அவசியம் இருப்பதாலும் இப்பதிவு இடுகிறோம்.


நாம் பரிணாமம் பாதி அ.வ பாதி இரண்டும் சேர்ந்த கலவைதான்.

**********************

சரி இப்பதிவில் டார்வினியத்தின் மீது பத்து குற்ற்ச்சாட்டுகள் வைக்கப் போகிறோம்.

சென்ற பதிவுகளில் நம் சகோக்கள் பலர் டார்வின் கொள்கையை விளக்கிய விதம் பார்த்து நமக்கு ஆச்சர்யம் வந்துவிட்டது.ஆகவே அந்த டார்வினிஸ்டுகளுக்கு மரண அடி,..இதர .அடிகளை நம் சகோக்கள் பாணியில் வழங்க இப்பதிவு.அவ்வப்போது சிவப்பு எழுத்தில் பரிணாம சார்வாகன் கருத்தில் வந்துவிட்டால் கண்டுகொள்ளாதீர்கள்.அவன் அப்படித்தான்!.சும்மா வம்புக்கென்றே அலைகிறான்!.

மார்க்க சகோக்கள் ந்ம்மை பெருவாரியாக [நாம் சொல்வது என்ன் என்று தெ(பு)ரியாவிட்டாலும்] ஆதரிப்பார்கள் என்னும் நம்பிக்கை இருக்கும் போது நம்மை ஆயிரம் சார்வாகன்கள்&அடிப்பொடிகள்,இலட்சம் டார்வின்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது!!!!!!!!!!!!!!

பரிணாம சார்வாகன் : சகோ அ.வ சார்வாகன் ஏன் டார்வினியத்தின் மீது விமர்சனம் வைக்கிறீர்கள்?பரிணாமம் நடக்கும் விதம் பற்றி விளக்கும்  சில கொள்கைகளுள் டார்வினின் இயற்கைத் தேர்வும் ஒன்று.ஒருவேளை டார்வினியத்தால் விளக்க முடியா விடயங்கள் இருக்கும் என்றாலும் அதனை சீரற்ற மரபு விலகல்,நிறுத்திய நிலைத்தன்மை,லாமார்க்கியன் மாற்றங்கள் ஆகியவை விளக்குவது  அறிய மாட்டீர்களா!

இங்கே பாருங்கள் பரிணாம சகோ  நீங்கள் உண்மையான டார்வினிஸ்ட் ஆக இருந்தால் டார்வின் எழுதிய புத்தகத்தில் இருந்து மட்டும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா? நம் கேள்விகள் இத்தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது.மொழிபெயர்த்து வெளியிடுவது மட்டும் நம் வேலை.முடிந்தால் எதிர்பதிவு போடும்.இப்படி குழப்பி டார்வினை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்.




சரி சரி என்னை தொந்தரவு செயாதீர்.நான் டார்வினிஸ்ட் அல்ல பரிணாமவியலாளன் என ஜல்லி அடிக்காதீர் நீயும் நானும் ஒரே உடலில் இருப்பதால் சிவப்பு எழுத்தில் தேவையான இடத்தில் கருத்திடும்.என்னுடன் விவாதிக்க வேண்டாம்.
  


1.Lack of a viable mechanism for producing high levels of complex and specified information.

சிக்கலான வடிவமைப்பு மற்றும் தகவல் சேகரிப்பு உருவாகும்   வழிமுறைகள் எப்படி இயற்கைத் தேர்வினால் உருவாதலை விள்க்க இயலாமை.

நான் தெளிவா சொல்ரேன்.அதாவது இந்த (முத்ல) டி என்.ஏ எப்புடீ வந்தது?அப்புறம் சிக்கலான,கலக்கனான அமைப்புகள் எப்புடி அதா சும்மா வரும்?.ஒரு வாட்ச் வேணுமின்னா வாட்ச்மேன்[watchmaker] வேணும்.ஆகவே உயிர்கள் படைக்க உயர் சக்தி வேண்டும்.

2.The failure of the fossil record to provide support for Darwinian evolution.

டார்வினின் கொள்கையை நிரூபிக்கும் சான்றுகள் படிமங்களில் இல்லை. 

அதாவது மெதுவா,மொள்ளமா கொஞ்சம் கொஞ்சமா ஒரு செல் உயிரில் இருந்து இப்போதைய  அனைத்து உயிர்களுக்கும் மாற்றத்தை படிமங்களில் கண் முன்னால் காட்ட முடியுமா? அதாவது திரைப்படத்தில் எப்புடி விட்டு விட்டு படம் எடுத்தாலும் கண்ணுக்கு (1/3 வினாடி)தொடர்ச்சியாக தெரிவது போல் படிம வரலாறு காட்ட முடியுமா? கேம்பிரியனுக்கு முந்தி ஏன் படிம வரலாறு தெளிவா இல்லை?.
அப்படி அழுத்தி கேட்கிறீர்கள் நன்று...
படிம வரலாற்றில் நிறுத்திய நிலைத் தனமைக்கும்[puncuated equilybrium] சான்று உண்டு என்பதும் இயல்பான விடயமாக் இபோது ஏற்கப் படுகிறது என்பதும் தங்கள் கவனத்திற்கு சகோ!.
3.The failure of molecular biology to provide evidence for a grand "tree of life."


மூலக்கூறு அறிவியல் பரிணாம மரத்திற்கு மாறுபடுகிறது.


சகோ பரிணாம மரத்தில் நெருங்கிய உயிரினங்களுக்கு,அதன் டி.என்.ஏ வும் நெருங்கிய தொடர்பில் இருப்பது கண்கூடு.உங்கள் பதிவுகளுக்கு நம் பின்னூட்ட சகோக்களும்,நாமும் கருத்திடுவோம்.

4.Natural selection is an extremely inefficient method of spreading traits in populations unless a trait has an extremely high selection coefficient.


இயற்கைத் தேர்வு மட்டும் உயிரின‌ங்களில் பல் புதிய விடயங்களை உருவாக்கி பரப்ப போதுமானது அல்ல.

சகோ இயற்கைத்தேர்வு சூழலுக்கு பொருந்தும் உயிரினங்களின் வகைகளை தேர்ந்தெடுப்பதும்,சில சூழலுக்கு ஏற்ற மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.எனினும் அனைத்து விடயங்களையும் இயற்கைத் தேர்வு என்னும் காரணி கொண்டு மட்டும் விளக்குவது அறிவியல் ஆகாது.டார்வினுக்கு பிறகு பரிணாம கொள்கையில் எவ்வளவோ  மாற்ற‌ம் வந்து விட்டது. இயற்கைத் தேர்வு அல்லாத சில விள்க்கங்களும் சில பரிணாம மாற்றங்களுக்கு அளிக்கப்படுகிறது.

 ஹி ஹி தோற்றுப் போவதை மறைக்க விதண்டாவாதம் பேசாதீர்கள்.அனைத்து விளக்கங்களும் டார்வின் எழுதிய புத்தகத்தின் வரிகளில் இருந்து மட்டுமே வர வேண்டும்.வேண்டுமானால் சொற்களுக்கு நம் சகோக்கள் போல் இல்லாத புது பொருள் கொள்ள அனுமதி அளிக்கிறேன்.இல்லையெனில் டார்வினியம் தவறு,ஆகவே [By default]அறிவார்ந்த வடிவமைப்பே சரி,இன்னும் சரியாக படைப்பியல் கொள்கையே சரி. அதுவும் 'அஆஇஈ'  மத  'ககாகிகீ' பிரிவு படைப்பியல் கொள்கையே சரி.

5.The problem that convergent evolution appears rampant -- at both the genetic and morphological levels, even though under Darwinian theory this is highly unlikely.

இறக்கைகள்  போல் பல கிளைகளில் ஒரே அமைப்பு தோன்றிய குவியும் பரிணாமத்தை[convergent evolution] டார்வினியத்தால் விளக்க முடியாது. 

 பரிணாம மர வெவ்வேறு கிளைகளில் ஒத்த உறுப்புகள் தோன்ற இயலாது என டார்வினியம் கூறவில்லையே.எனினும் இதற்கு ஒரு பதிவு இட்டு விடுவோம்.

6.The failure of chemistry to explain the origin of the genetic code.

முதல் செல் எப்படி வந்தது,முதல் டி என் ஏ எப்படி வந்தது என வேதியியலால் விளக்க முடியவில்லை.முதல் கோணல் முற்றும் கோல் .ஹி ஹி

இது வேதியியல் என்று கூறிவிட்டீர்கள்.மிக்க நன்றி சகோ டார்வினியத்தை குறிப்பிடாமல் விட்டதற்கு.இது ஒரு இப்போதைய  விடை தெரியா கேள்வி என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

ஹா ஹா ஹா மீண்டும் வெற்றி வெற்றி வெற்றி. மத கடவுள் மிக பெரிய ஆளு! .அவருக்கே எல்லா நாடுகளும்,ஆட்சிகளும்!!!!!!!!!!!

7.The failure of developmental biology to explain why vertebrate embryos diverge from the beginning of development.

ஏன் முதுகெலும்பு உள்ள உயிரினங்களின் கருக்கள் ஆரம்பத்தில் இருந்தே உரு அமைப்பில் வேற்றுமை விலகல் காட்டுகின்றன?

இன்னும் ஹேய்க்கலின் வரைபடங்கள் விடயத்தில் இருந்து வெளிவரவில்லை.இப்போது கருவியலும்,பரிணாமவியலும் இணைந்து இவோடிவோ[evodevo] என்னும் புது துறையே தோன்றியுள்ளது.ஆகவே வேற ஏதாவது சொல்லுங்க! 


8.The failure of neo-Darwinian evolution to explain the biogeographical distribution of many species.



டார்வினியதால் ஏன் புவியியல் அமைப்புரீதியாக வெவ்வேறு உயிரின‌ங்கள் வாழகின்றன என்பதை விள்க்க முடியாது.

சூப்பருங்கண்னா.ப்ளேட்டை திருப்பி போடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!.

சூழலுக்கேற்ற உயிரின‌ங்கள் என்பதுதானே இயற்கைத் தேர்வின் அடிப்படை. சிரிக்க முடியலைங்கண்னா!

9. A long history of inaccurate predictions inspired by neo-Darwinism regarding vestigial organs or so-called "junk" DNA.

தேவையற்ற உடல் உறுப்புகள், குப்பை டி என் ஏ போன்ற கணிப்புகள் தவறு.

இதில் விளக்க என்ன சகோ இருக்கு மனிதனின் அப்பன்டிக்ஸ் என்பது தேவையற்றது.அதாவது சிம்பன்சியாக் அல்லது அதற்கு முன்னால் இலைகளை செரிக்க பயன்பட்டது.இப்போது பாக்டீரியவை சேர்த்து வைக்கிறது என்றும் சொல்கிறார்கள். முந்தைய பணி மாறி விட்டது.

தேவையற்ற‌து என்பது முந்தைய பயன்பாடு மாறிவிட்டது,இன்றியமையாதது அல்ல.இந்த பாக்டீரியா சேர்த்து வைக்கும் பை அப்பென்டிக்ஸ் என்பது இன்னும் எப்படி மாறும் என்பதை பொறுத்து பார்க்கலாம்.
குப்பை டி என் ஏ என்பதில் இதில் பல பதிவுகள் விவாதம் நடத்தி விட்டொம்.  ஒரு எ.கா ஆக மனிதனின் டி என் ஏ பிரிவுகளை படம் போட்டு காட்டுகிறோம்.     அவ்வள்வுதான்!!!!!!!!


http://sandwalk.blogspot.com/2011/05/whats-in-your-genome.html 
 

10. Humans show many behavioral and cognitive traits and abilities that offer no apparent survival advantage (e.g. music, art, religion, ability to ponder the nature of the universe).


ஹா ஹா ஹா மனிதனுக்கு பேச,கவிதை இயற்ற,பாட ஆட தெரியும்.இன்னும்  கடவுள்டன் தொடர்பு கொண்டு (சிலர் மட்டும்) தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.ஏன் இதர விலங்கினங்கள்  இப்படி ஆகவில்லை.

கழுதை கவிதை பாடுமா?

குரங்கு குத்தாட்டம் போடுமா?

சிங்க‌ம் சித்தாள் ஆக‌ முடியுமா?

புலிக்கு புத்தாண்டு தெரியுமா?

ஆட்டுக்கு ஆண்டவனைத் தெரியுமா?

மாட்டுக்கு மாடிவீடு க‌ட்ட‌ தெரியுமா?

அருமை ச‌கோ

ம‌னித‌னுக்கு ம‌ட்டுமே அறியும் திற‌ன் இருந்தே தொல்லை பொறுக்க‌ முடிய‌வில்லை.பிற‌ மிருக‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் இத்திற‌ன் இருந்தால் அனைத்தும் சேர்ந்து ம‌னித‌ர்க‌ளை ஒழித்து விட்டுத்தான் வேறு வேலை பார்க்கும்.
பரிணாமம் பெரும்பாலும் விலகி வெவ்வேறு திசையில் சென்றாலும்,சில சமயம் குவிந்து ஒரே திசையில் சென்றாலும் தவறு என்று எப்படி விமர்சிக்கிறீர்கள்?


வில‌ங்குக‌ளுக்கும் அறிவு உண்டு.அது வேறு திசையில் வ‌ள‌ர்ந்த‌து அவ்வ‌ளவுதான்.குல்லா வியாபாரியின் தொப்பிக‌ளை குர‌ங்குக‌ள் திருடிய‌போது,அவ‌ன் குல்லாவை கழற்றி எறிந்த போது அனைத்து குரங்குகளும் கழற்றி எறிந்தன என கதை படித்தது இல்லையா?


இதே போல் ந‌ம்ம‌ ம‌னித‌ர்க‌ளும் விள‌ம்ப‌ர‌த்தில் அந்த‌ ந‌டிக‌ர்,நடிகை ப‌ய‌ன்ப‌டுத்தும் பொருள் என்றால் க‌ண்ணை மூடிக் கொண்டு வாங்குவ‌து இல்லையா?.

முப்பாட்ட‌னுக்கு ,முப்பாட்ட‌ன் காதில் க‌ட‌வுள் வ‌ந்து சொன்னார் என்ப‌தை அப்ப‌டியே ந‌ம்புவ‌து இல்லையா?

 வில‌ங்குக‌ள் த‌ன் இனத்தை ஒருபோதும் கூட்ட‌மாக் அழிப்ப‌து இல்லை.ஒரு புலி மானை வேட்டையாடுவ‌து உண்வுக்காக‌ ம‌ட்டுமே த‌விர‌ இன‌வெறி அல்ல‌.ஒரு புலி இன்னொரு புலியை பெரும்பாலும் கொல்லாது.

மனித‌ர்க‌ள் மட்டுமே பிற ம‌னித‌ர்க‌ளை‌ இன‌ம்,ம‌த‌ம்,கொள்கை என்ற‌ பெய‌ரில் கொன்று குவிக்கிறான்,இய‌ற்கையை பாழ்ப‌டுத்துகிறான்.
இந்த‌ வ‌கையில் வில‌ங்குக‌ள் ம‌னிதனை விட‌ அதிக‌ அறிவு கொண்ட‌வைக‌ளே.
**************


Ha Ha ha கொஞ்சம் வித்தியாசமாக மாற்றி யோசித்தோம். விமர்சனங்கள்,விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.கோல்ட் பற்றிய பதிவு அடுத்து பார்ப்போம்.

நன்றி.ந‌ன்றி

17 comments:

  1. கலாய்க்காத மாதிரி கலாய்ச்சுறீங்க !!! சிலர் அப்பாவிகளாக வந்து கருத்திட்டு செல்வார்கள் பாருங்கோ !!!

    ReplyDelete
  2. //சிலர் அப்பாவிகளாக வந்து கருத்திட்டு செல்வார்கள் பாருங்கோ !!!//

    அப்டீங்கிறீங்க ...?

    ReplyDelete
  3. //அப்டீங்கிறீங்க//

    அதே..அதே....

    ReplyDelete
  4. ஐயா,

    ரொம்பக் குழப்புதே - ரொம்ப நிதானமாக படிக்க வேண்டியுள்ளதே

    ReplyDelete
  5. உங்க பக்கத்துக்கு வந்தா அரை மணிநேரம் ஆகிவிடுகிறது.புரியளையேன்னு விட்டுட்டு போகவும் மனசு இல்லே.

    ReplyDelete
  6. முரளிதரன் சொன்னது தான் முற்றிலும் உண்மை. ஆமா நீங்க என்ன தான் படிச்சுருக்கீங்க? எனக்கு மண்டைமூளை கொளம்புது?

    ReplyDelete
  7. வணக்கம் சார்வாகன்,

    உங்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிக்காக உங்கள் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின்னர் விபரம் அனுப்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அறைகுறை படிச்சவெனுக்கெல்லாம் நம்பர் குடுக்க மாட்டோம்.

      Delete
  8. சகோ சார்வாகன்!

    //உங்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிக்காக உங்கள் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின்னர் விபரம் அனுப்புகிறேன்.//

    மின்னஞ்சல் முகவரியை அனுப்பி விடுங்கள்.

    இந்த வஹாபிகளின் கொட்டத்தை அடக்க:

    கொடி பிடிக்க ஆளின்றி தவிக்கும் கம்யூனஸத்தை பரப்ப:

    நாதியற்று சென்று கொண்டிருக்கும் நாத்திகம் தழைக்க:

    பரிதவித்துக் கொண்டிருக்கும் பரிணாவியல் பரிணமிக்க

    அனுப்பி விடுங்கள் மின்னஞ்சலை! தாமதிக்காது!

    ReplyDelete
  9. சகோ, பின்னிட்டீங்க போங்க. கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து வைத்த கலவை பதிவு.
    எப்பவுமே பதிவை விட மறுமொழிகள், அதிகமான செய்திகளை அளிப்பதால் EVN பதிவின் பின்னூட்டங்களை பார்ப்போம். முதலில் பதிவிற்கு சாதகமான பின்னூட்டங்கள்..
    1) (நவ)டார்வினிஸம் பொருட்களை மட்டும் மையமாக கொண்டது. அது உணர்வுகளையும், மனதையும் பற்றி சொல்லதலால் முற்றிலும் தோல்வியுற்ற ஒரு கொள்கை.
    2) அடுத்து கிளுகிளுப்பு மேட்டர். இனப்பெருக்கம் செய்யும் உறுப்புக்கள் எப்படி ஆண் பெண் இருவரிடம் ஒரே சமயத்தில் சீராக பரிணாமம் அடைந்தது (irreducible complexity).
    3) அறிவியலாளர்களுக்கு டார்விணின் பரிணாமம் எப்படி நடக்கின்றது என்று கூற சரியான செய்திகள், விவரங்கள் தரவுகள் இல்லை.
    4) ஜெனிடிக் ம்யூட்டேஷ்ஷனால் உடலமைப்பில் மாற்றங்கள் நிகழாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

    டார்விணிஸம் ஆட்கள் கேட்கும் கேள்விகள்...
    1) (நக்கல் தொனியில்) அ.வ. கொள்கையை நல்ல முறையில் சோதிக்க உதவும்.
    2) டார்விணின் படிபடியான வளர்ச்சிக்கு படிம அத்தாட்சிகள் இருக்கின்றன.
    3) அ.வ. என்பது படைப்பு கொள்கை இல்லை என்பதால். படைப்பு கொள்கை பற்றிய 10 பிரச்சனைகளை பற்றி பட்டியலிடவும்.
    4) இது முக்கியம் : வடிவமைப்பு என்பது பொருள் உலகில் ஒன்றுமே உற்பத்தி செய்யாது. வடிவமைப்பாளர் மூளையில் கருத்து என்று ஒன்று உருவாகி, அதனால் பொருள் உலகில் அணுக்களை கையாண்டு,வடிவமைக்க வேண்டும். இதை செய்ய ஒரு “கருவி”(உருவாக்கு வழிமுறைகள்) ஒன்று வேண்டும். அந்த கருவியை பற்றி பேச்சு மூச்சு காணோம். அதனால் அ.வ. என்பது வடிமைப்பாளர் ஒரு கடவுள், கருவி ஒரு அதிசயம் - இதை பரப்பவது ஒரு கடினமான அறிவியல் தான்.

    இதற்கு பதிவாளரின் பதிலை பார்ப்போம்...

    1)இந்த பதிவு அ.வ. கொள்கை சரிதான் என்பதை பற்றியல்ல. டார்வின் கொள்கையில் அறிவியல் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை காட்ட.
    2)படைப்பு கொள்கை பலவிதம். படைப்பு கொள்கை வரையறுக்கவும் (lol). அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் ஒரு வடிவமைப்பாளர் தான் வடிவமைத்தார் என்பது நிரூபணம். அது அறிவியல். ஆனால் அந்த வடிவமைப்பாளர் கடவுள் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. அவ்வாறு கடவுள் என்று கூறினால் அது அறிவியல் அல்ல. ஆனால் என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை அது கடவுள்தான். அதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. இதுதான் படைப்பு கொள்கைக்கும் அ.வ. கொள்கைக்கும் உள்ள பிரச்சனை.
    3)டார்வின் கொள்கையை நிரூபிக்காமல், படைப்பு கொள்கையை குறைக்கூறுவது திசை திருப்பும் செயல்.
    4)பரிணாமத்தை உருவாக்கும் பரிணாமம் கருவி கிடையாது. இயற்கை தேர்வு random mutation போன்ற கருவிகளால் பரிணாமம் செயல்படாது.
    5) எப்படி டி.என்.ஏ. ம்யூட்டேஷனால் புதிய உயிரியல் செயல்பாடுகள் ஏற்பட்டுள்ளன, அதனால், அ.வ. வடிவமைப்பாளர்க்கு கருவி தேவையில்லை என்பது தவறு. ( கேட்டது எல்லாம் உருவாகும் வழிமுறை(கருவிகள்) இல்லையே என்பது, எ.கா. சொன்ன டி.என்.ஏ. ம்யூட்டேஷன் செய்ய விஞ்ஞான கருவிகள் உண்டு. அதைப்போல வடிவமைப்பாளர் இந்த கருவிகள் கொண்டு செய்தார் என்ற கூறவேண்டியதானே, ஜெனிடிக் ம்யூட்டேஷனால் மாற்றங்கள் வராது என்று கூறிவிட்டு இதில் மாற்றங்கள் வரும் என்கிறார்...ஒரே கன்பியூசன்).

    @சுவனப்பிரியன்
    கடைசியில் நண்பர் தான் ஒரு வாஹாபி என்பதை ஒத்துக்கொண்டுவிட்டார். ஒரே ஒரு மின்னஞ்சலால், நண்பர் சொன்ன கவிதை நடையில் செய்ய முடியுமென்றால், பவுண்டேசன் பலமாக இல்லையோ. ஆமாக் இஸ்லாத்தில் கவிதைக்கு அனுமதி உண்டா. கவிதை பாடிய ஒருவரை நபி காலத்திலேயே சாஹாபி ஒருவர் போட்டி தள்ளினார் என்று வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நரேன்,
      //1)நவ‌டார்வினிஸம் பொருட்களை மட்டும் மையமாக கொண்டது. அது உணர்வுகளையும், மனதையும் பற்றி சொல்லதலால் முற்றிலும் தோல்வியுற்ற ஒரு கொள்கை.//

      ம‌ன‌தின் ப‌ரிணாம வ‌ள‌ர்ச்சிக்கும் அறிவிய‌ல் சார் விள்க்க‌ங்க‌ள் உண்டு.டேனிய‌ல் டென்ன‌ட் அவ‌ர்க‌ளின் ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் இத‌னை அல‌சுகின்ற‌ன‌.
      //2) அடுத்து கிளுகிளுப்பு மேட்டர். இனப்பெருக்கம் செய்யும் உறுப்புக்கள் எப்படி ஆண் பெண் இருவரிடம் ஒரே சமயத்தில் சீராக பரிணாமம் அடைந்தது (irreducible complexitய்).//

      இது கொஞ்ச‌ம் 18+ என்ப‌தால் இது குறித்து விவாதிக்க‌வில்லை.ஒரு செல் உயிர்ராக் இருந்த‌ போது ஆண் பெண் உட‌ல் என‌ பிரிவு வ‌ந்து இஅன‌விருட்த்ஹி ஏற்ப‌ட‌வில்லை.செக்ஸ் என்ப‌தும் ப‌ரிணாம் வ‌ள‌ர்ச்சியே.ஒரு குறிப்பிட்ட‌ விட‌ய‌த்தை மிக‌ தெளிவாக‌ அறிய‌ வாழ்நாள் போதாது.
      ‌ //3) அறிவியலாளர்களுக்கு டார்விணின் பரிணாமம் எப்படி நடக்கின்றது என்று கூற சரியான செய்திகள், விவரங்கள் தரவுகள் இல்லை.//

      டார்வினின் இயற்கைத் தேர்வு மூலமே அனைத்தும் நிக‌ழ்ந்த‌து என்ப‌தை விள்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை.பிற‌ விள்க்க‌ங்க‌ளும் உண்டு.
      /4) ஜெனிடிக் ம்யூட்டேஷ்ஷனால் உடலமைப்பில் மாற்றங்கள் நிகழாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன./

      ஏன் ப‌யின்ட் முயுட்டேச‌ன் ம‌ட்டும் டார்வினின் கொள்கையில் சேர்க்க‌ப்ப‌டுகிற‌து.ஜீன் டூப்ளிகேசன்‌ உள்ளிட்ட‌ இத‌ர‌ மாற்ற‌‌ங்க‌ள் மூல‌மே அதிக‌ உயிரின‌ பிள்வு ந‌டைபெறுவ‌து ஆய்வு ரீதியாக் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌ ஒன்று.


      டி என் ஏ வில் ஏற்ப‌டும் மாற்ரற‌ங்க‌ள் அனைத்துமே டார்வினின் கொள்கைக்குள் ஏற்க‌ப் ப‌டுகிற‌து. அது ப‌டிப்ப‌டியான‌தா என்ப‌து ம‌ட்டுமே விவாத‌ம்.

      Delete
    2. 1.http://en.wikipedia.org/wiki/Evolutionary_psychology


      2.http://en.wikipedia.org/wiki/Evolution_of_sexual_reproduction

      4.http://en.wikipedia.org/wiki/Gene_duplication

      Delete
  10. வணக்கம் சகோக்கள்

    இக்பால் செல்வன்,யாசிர்,தேவப் பிரியா,தருமி அய்யா,முரளி,ஜோதிஜி,தோழர் செங்கொடி ,ரம்ஜி முகமது,சுவனன் கருத்துகளுக்கு நன்றி.


    தோழர் செங்கொடி உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  11. வர வர உங்களது பதிவுலகை உட்கார்ந்து படிக்க வேண்டி இருக்கு ஒரு நாளைக்கு

    ReplyDelete
  12. வாங்க சகோ ஷர்புதீன்,
    அவ்வள்வு கடினமாகவா உள்லது.சந்தேகனக்களை முடிந்தவரை தீர்க்க விரும்புகிறேன்.தங்களின் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம்.

    நன்றி

    ReplyDelete
  13. @நண்பர் சார்வாகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    இதில் கவனிக்கதக்க விடயம், நடராஜர் சிலையை செர்ன் மையத்தில் நிறுவிய செய்தியை அல்ல. ஏன்னென்றால் நடராஜர் சிலை cosmic dance குறிக்கிறது என்றளவில் மேற்கித்திய நாடுகளில் பிரபலமடைந்துள்ளது. மேலும் அவர்கள் ஆய்வகத்தில் கிழக்கு கலைப் பொருளை வைக்கவேண்டும் என தீர்மானித்து, நடராஜரின் நடனத்தின் தத்துவம் அவர்கள் செய்யும் ஆய்வு சார்ந்து இருப்பதால், சிலையை நிறுவியிருக்கலாம்.

    ஆனால், நடராஜர் சிலையையும், செர்ன் ஆய்வகத்தின் உட்புறத்தின் புகைப்படத்தை உற்று நோக்கி, அந்த மாதிரி எண்ணம் வரவேண்டும் என நினைத்தால், இரண்டும் ஏறக்குறைய ஓத்துப் போவதை பார்க்கலாம்.

    சனாதான தர்மம் இந்து மதத்தில் இருக்கும் மற்ற தர்மங்களில் ஒரு தர்மம் தான். அதை தற்காலத்திற்கு விளக்கி மேன்மை முதனமை படுத்த முனைவது ஏற்கமுடியாது.

    நடராஜர் வடிவத்தின் சரித்திரம் சுவராஸ்யமானது. சிவன் வழிப்பாடு என்பது, புரிந்த வகையில் மேம்படுத்தப்பட்ட மூதாதையர் வழிபாடுதான். அது இயற்கையாக அமைந்ததால், இந்தியா நாடெங்கும் பரவியது. அது மேலும் மேம்படுத்தப்பட்டு, கையலாயத்தில் சிவன், சிவலிங்கம், யோகி, மூனீஸவரர் போன்ற வடிவங்களில் நிற்கிறது. இயற்கையாக வருவதால், வைணவத்தை போல பழமைவாதம் அதற்கு அமையவில்லை.

    வேதத்தில் சிவன் நேரிடையாக பெயர் குறிப்படவில்லை. ஆனால் சிவனை ருதரனுக்கு பொருத்தி தன்னகத்தே இழுத்து வைத்து விட்டது தோன்றுகிறது.

    வடிவத்தை பார்த்தால், சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த சில வடிவங்கள் சிவனை ஓத்திருக்கின்றன. ஏனோ, ஆரிய படையெடுப்பை முன்வைக்கும் இடதுசாரி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அதனை கடுமையாக எதிர்க்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆராய்ச்சிகளை வளர விடாமல் தற்போது இருக்கும் இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். மாற்று கருத்து, புரிதல் வந்தால் யாராக இருந்தாலும் இந்துத்வாதி என முத்திரை வந்துவிடும். அதனால் இந்துத்வாதி எனப்படுவர்கள் அல்லாத ஆய்வாளர்களின் கருத்துக்களும் வளரவில்லை.

    நடராஜர் வடிவத்தை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் பல்லவ காலத்தில் சிற்பங்களில் தான் முதன்முதலில் முழுவதுமாக தோன்றியுள்ளது. அதன்பிற்கு அது வளர்ச்சியடைந்து தற்போது பார்க்கும் சோழர் காலத்து வடிவத்தை அடைந்துள்ளது.

    சைவ சித்தாந்தங்கள் இடம், சமூகம், அரசாங்கம் ஆகியவற்றை பொருத்து பலவிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.

    இதை பற்றி தனி பதிவு எழுதலாம் என நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. உங்களது கணிதம் சம்பந்தப்பட்ட இடுகைகளை நின்று நிதானமாக படிக்கணும் ., அதனைத்தான் அவ்வாறாக சொல்லவந்தேன் . ஓரளவுக்கு நமக்கு தேர்ந்த துறையாக இருந்தால் அதனை சுலபமாக புரிந்து கொள்ளலாம், இது எனக்கு அவ்வளவு சுலபம் என்று நினைக்கவில்லை, அதனால் அப்படி சொன்னேன்

    ReplyDelete