Wednesday, July 4, 2012

அமெரிக்க சுதந்திர நாள் ந‌ல் வாழ்த்துக்கள்




வணக்கம் நண்பர்களே!!!!!!!

இன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் 237 ஆம் சுதந்திர தினம்.இது இங்கிலாந்தில் இருந்து ஜூலை4,1776 ஆம் வருடம் விடுதலை பெற்றது. இன மத பேதமற்ற அரசியலமைப்பு சட்டம் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசு என்ற வகையில் அதன் மக்களுக்கு குறிப்பாக அமெரிக்க தமிழர்கள் மற்றும் இதர மொழி இந்திய   சகோதர சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

நன்றி

18 comments:

  1. சகோ.சார்வாகன்,

    ஒபாமா படிப்பாரா இதை ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,

      ஒபாமாவை குறிப்பிட்டதற்கு நன்றி.ஆப்பிரிக்க இன‌த்தை சேர்ந்த ஒருவர் அதிபர் ஆக முடிவது மக்களாட்சியின் முதிர்ச்சியை காட்டுகிறது.நம் ஊரில் ஒரு தொகுதியில் சாதி,மத கணக்கு பார்க்காமல் வேட்பாளர் தேர்வு நடக்காது!.நாம் அமெரிக்க மக்களிடம் இருந்து ஜன‌நாயகம்,மனித உரிமைகள் கற்றுக் கொள்ள‌ பல விடயம் உள்ளது.

      இன்னும் சில நாடுகளில் ஆளும் இனம் தவிர்த்த பிற இன‌த்தில் பிறப்பதே குற்றம் போன்ற சூழலே நிலவுகிறது.அவர்கள் இந்தியாவிடம் இருந்தாவது பாடம் கற்க வேண்டும்.

      ஒபாமா படிக்கிறாரோ இல்லையோ அங்கு மகிழ்ச்சியாக கவுரவமாக வாழும் நம் சகோக்கள் படிப்பார்கள். நன்றி

      Delete
  2. உலகின் சமத்துவ தேசமாக அமெரிக்க விடுதலையடைந்த வரலாறு மிகவும் நெகிழ்வான ஒன்று !!! அமெரிக்க மக்களுக்கு வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இக்பால் செல்வன்,
      அமெரிக்க ஒரு பல் இன மத,மொழி பேசும் மக்கள் ஒன்றாக அனைவருக்கும் சம் உரிமை,சட்ட பாதுகாப்பு என வாழ்வது ஒரு சிறந்த சாதனை.சாதனையின் 237ஆம் ஆண்டு இது மனுக்குலம் வாழும் வரை தொடர வேண்டும்.

      அமெரிக்க‌ வெளியுறவுக் கொள்கை மீதோ அமெரிக்கனின் நுக‌ர்வு க‌லாச்சார‌ம் மீதொ ப‌ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வைக்க்லாம் எனினும் அத‌ன் குடிம‌க்க‌ளை பார‌ப‌ட்ச‌மின்றி பாதுகாப்ப‌து மிக‌ சிற‌ப்பான‌ விட‌ய‌ம்.

      உல‌கின் அனைத்து நாடுக‌ளில் இருந்தும் எப்ப‌டியாவ‌து அமெரிக்க‌ குடியுரிமை வாங்க‌ முய‌லும் மில்லிய‌ன் க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளே சான்று!

      US constitution

      http://www.usconstitution.net/const.html

      ந‌ன்றி

      Delete
  3. கருத்துச் சுதந்திரம் உலகம் பெற முக்கிய நிகழ்வு தான் அமெரிக்க சுதந்திரம்.

    நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆங்க சகோ தேவப் பிரியா
      அமெரிக்க ஜனநாயகத்தின் வெற்றி,உண்மையான மத சார்பின்மை போற்றுதலுக்கு உரியது. ரிபப்ளிகன்கள் கிறித்தவ சார்பு கட்சி என்றாலும் அவர்கள்க்கும் மதத்தின் எல்லைகள் அறிந்து அரசியலமைப்பு சட்டத்திற்கே முன் உரிமை கொடுப்பர்.

      நன்றி

      Delete
  4. அமெரிக்கனுகளுக்கு என்னத்தை கொடுத்ததோ தெரியல. எனக்கு ஓசி பியரும் பார்பிகியூ சிக்கனும் பெற்று தந்த அமெரிக்க சுதந்திர தினம் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனத்தான்,

      நல்லா இருக்கீங்களா.இப்படி மகிழ்ச்சியாக இருப்பது நமக்கும் பிடிக்கும்.அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.அளவோடு குடித்து, அழகாக (நொறுக்குத் தீனி) உண்டு வளமாக் வாழ்க!

      நன்றி

      Delete
  5. ஆப்பிரிக்க இன‌த்தை சேர்ந்த கறுப்பர் ஒருவர் அதிபர் ஆக முடிவது அமெரிக்காவில். அரபிகளிடம் தமிழன் அடிமையாக தான் ஆக முடியும்.
    அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்
      அடிமை முறை ஒழிக்க போர் புரிந்த ஆபிரஹாம் லிங்கன் ஞாபகத்திற்கு வருகிறார்.அடிமை முறை மத்திய கிழக்கு நாடுகளில் 1960 வரை இருந்தது.பிற நாடுகளின் அழுத்தம் காரணமாகவே ஒழிக்கப்பட்டது என்பது வரலாறு.!

      நன்றி

      Delete
  6. அமெரிக்க வாழ் அனைத்து மக்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

    இனியவன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்
      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  7. நண்பரே, சரியான நினைவுறுத்தல்,

    அமெரிக்காவின் சுதந்திரம், இரத்தம் சிந்தப்பட்டு, மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வாங்கப்பட்ட சுதந்திரம். அதனை உணர்ந்து, அதன் அரசியலமைப்பு சட்டம் இன்று அனைத்து மக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம் அளிக்க, நிறைய போராட்டங்களை மக்கள் நடத்த வேண்டியதிருந்தது. அத்தனை போராட்டங்களின் பலனைதான் இன்று அனுபவித்து, அதனை நிலைநிறுத்தவ்ம் செய்ய போராடுகிறார்கள்.
    இதில் நம்நாட்டு மக்களுக்கும் ஒரு பாடம். சட்டத்திற்கு புறம்பான காரியங்களுக்கு உடன்படாமல், சட்டத்திற்கு நிலை நிறுத்த போராடினால், அமெரிக்காவின் தன்மை நம் நாட்டிற்கும் கிடைக்கும்.

    அமெரிக்கா சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக இருந்தது இந்தியாதான்..
    கிழக்கு இந்திய கம்பெனியின் ஏகபோக தேயிலை தூளு வர்த்தகமும் அதன் மீதான வரிதான்...பாஸ்டன் டீ பார்ட்டி போராட்டத்திற்கு வித்திட்டு அதற்கு முன்னால் வேறு வரிகளுக்கும் வித்திட்டு சுதந்திர போராட்டத்தை துவக்கியது.

    Lord Cornwallis அமெரிக்க சுதந்திர பிரகடனதிற்கு பிறகு, ராணுவ அதிகாரியாக அமெரிக்க சென்று, பிரிட்டீஷ் ஏகபாத்தியத்தை நிறுவ முயன்று தோற்று இந்தியா திரும்பி, இங்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை நிலைநிறுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். டிப்பு சுல்தானை அடக்கியவர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரேன்,
      வரலாறு பின்றீங்க.வாழ்த்துக்கள்,பாஸ்டன் தேநீர் விருந்து என்பதில் இருந்து தொடங்கிய போராட்டம் வெற்ரியில் முடிந்தது.


      அமெரிக்காவை விமர்சிப்பவர்களுக்கும் அங்கே இடம் உண்டு என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

      நன்றி

      Delete
  8. நண்பரே,

    செய்தி...ஹிக்ஸ் பாஸான், துகள் கண்டுபிடிக்கபட்ட சாத்திய கூறுகள் உள்ளன. முந்தைய பதிவுகளில் அதைப்பற்றியும், cern பற்றி காணொளிகள் செய்திகளை தந்து அறியவைத்து எளிமையாக்கியதற்கு நன்று.

    மத அறிவியலாளர் : கவவுள் மனிதனை (களி)மண்ணில்(துகள்) இருந்து படைத்தார். God made particle into man.

    அறிவியலாளர்: அறிவியல் கடவுளை மண்ணாக்கியது. Science Made God into a Particle.

    ReplyDelete
  9. சகோ நரேன்

    ஹிக்ஸ் துகள் கண்டுபிடிக்கப் பட்டது என்று கூவுகிறார்கள்.பலமுறை சார்பற்ற பரிசோத்னை முடிவுகள் ஆமோதிப்பதாக் கூறுபவர்கள், அது எப்படி என் விளக்கம் நான் பார்க்கவில்லை.

    கண்டுபிடிக்கப்பட்டது ஒரு போசான்,அது ஹிக்ஸ் செய‌லாக்கமான எடை அளிக்கும் இரகசியத்தை நிரூபிக்க வேண்டும்.
    2.ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என்றால் என்ன?


    W&Z போசான்கள் எடை அற்றவை. அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எடை பெறுவதை ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என அழைக்கப் படுகிறது.


    In the standard model, at temperatures high enough so that electroweak symmetry is unbroken, all elementary particles are massless. At a critical temperature, the symmetry is spontaneously broken, and the W and Z bosons acquire masses. (EWSB, ElectroWeak Symmetry Breaking, is an acronym used for this).
    ********
    ஹிக்ஸ் செயலாக்கத்தை கண்டு பிடித்த அப்துஸ் சலாம்(பாகிஸ்தானை) அஹமதியா பிரிவு என்பதால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என நாட்டை விட்டு விரட்டிய மதவாதிகள் இபோது ஹிக்ஸ் துகள் புத்த்கத்தில் இருக்கிறது என குத்தாட்டம் போடுகின்றார்.

    அது என்ன கண்க்கு என்றால் படியுங்கள் சுவனப் பிரியனின் பதிவை.

    குரான் 16.77 கண் சிமிட்டும் நேரம் என்று சொல்லப்பட்டதது.


    (அல்லாஹ் அல்லது மனிதன்) கண் சிமிட்டும் நேரம் =0.2 வினாடி.

    இப்போது ஹிஜ்ரி ஆண்டு= 1433

    ஆகவே 0.2 வினாடி அல்லா நேரம்=1433 மனித வருடம்

    ஆகவே ஆறு நாள் அல்லா நேரம்=5*6*24*3600*1433=3714336000 வருடங்கள் அல்லது 3.7 பில்லிய‌ன் வ‌ருட‌ம்.

    சரி பேரண்டம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டு என்றால் வேண்டாம் அங்கேயே போய் படியுங்கள்.

    நாம் அறிவது அல்லாவுக்கு கண் உண்டு,கண் சிமிட்டுவார் ஹி ஹி

    நன்றி

    ReplyDelete
  10. வணக்கம் நண்பரே,
    ஹிக்ஸ் போசான் வரை போனாலும் கடைசியாக சகோ. சு பி யை கோர்த்து விடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.
    அண்ணனுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர்.
    “இறைவனே(ஹிக்ஸ் போசான் துகள் வரையிலான அறிவியல்)அனைத்தும் அறிந்தவன்” எப்பூடீ????

    இப்ப என்னா செய்வீங்க?????

    ReplyDelete
  11. சகோ, உங்க சிறந்த Blog Listல் வினவு மசூதி முன் ஊர்வலம் இருந்தது மட்டும் தான் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. வினவு குழுவினர் இஸ்லாமிய மத வெறியர்களை எவ்வளவு தான் தாஜா பண்ணி எழுதினாலும் வினவும் காபிர்-அரபிய மதத்தை ஏற்காதவர்.BBC தமிழ் செய்தியின் படி பாகிஸ்தானில் மத நிந்தனை செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை ஆத்திரமடைந்த கூட்டம் ஒன்று பிடித்துச் சென்று எரித்து கொலை செய்துள்ளது.அந்த நபரை பிடித்துச் சென்றக் கூட்டத்தினர் அவரை எரியூட்டிய போது அவர் அலறியதை நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமிய மத வெறியர்களை தாஜா பண்ணி எழுதும் சுதந்திரம் வினவுக்கு காபிர்கள் நாடுகளில் உண்டு.

    ReplyDelete