பரிணாமக் கொள்கை என்றதும் ஏற்பவர்கள் மறுப்பவர்கள் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே பெயர் பரிணாமக் கொள்கையின் பிதாமகன் சார்லஸ் டார்வின் அவர்களே..அவருக்கு முந்தைய பரிணாம கொள்கை வடிவமைத்த அறிவியலாளர்கள் இருப்பினும் டார்வினின் இயற்கைத் தேர்வு கொள்கையே பரிணாமத்தின் செயலாக்கமாக எந்த அளவு பங்கு வகிக்கிறது என இன்றுவரை பெரும்பாலான அறிவியலாளர்களால் விவாதிக்கப் படுகிறது.
ஏன் இயற்கைத் தேர்வின் பங்கு பரிணாமத்தில் எவ்வளவு என் கூறுகிறேன் எனில் பரிணம கொள்கை என்றால் என்ன? அதன் செயலாக்கங்களாக இயற்கைத் தேர்வைத் தவிர வேறு என்ன செயலாக்கங்கள் அறிவியலில் ஏற்கப்பட்டவை என்பதையும் இப்பதிவில் அறிவோம்.
பரிணாம கொள்கை என்பது தலைமுறை ரீதியான மாற்றங்களினால் ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களும் கிளைத்து தழைத்தன என்பதுதான். இந்த பரிணாமம் எப்படி நிகழ்ந்தது என்பதின் செயலாக்கமாக இயற்கைத் தேர்வை டார்வின் வடிவமைக்கிறார்.
டார்வினின் கொள்கை என்ன ?
1. உயிரின குழுக்களில் ஏற்படும் படிப்படியான சீரற்ற மாற்றங்கள் பல் வேறு வகைகளை[diversity of species] தோற்றுவிக்கின்றன.
2. இவ்வகைகளில் இயற்கைச் சூழலுக்கு பொருந்துபவை வாழ்கின்றன.பொருந்தாத வகைகள் அழிகின்றன.
சரி இயற்கைத் தேர்வுடன் என்ன செயலாக்கங்கள் இபொது ஏற்கப்பட்டுள்ளன?
1)டார்வினுக்கு முந்தைய அறிவியலாளரின் கொள்கையான சுற்று சூழல் உயிரினங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களும் தலைமுறை ரீதியாக தொடர்கிறது என்பதும் இப்போது பரிணாம அறிவியலில் ஏற்கப்படுகிறது. இப்போது இதன் பெயர் எபிஜெனடிக்ஸ்
http://en.wikipedia.org/wiki/Epigenetics
http://www.britannica.com/blogs/2009/02/the-rebirth-of-lamarckism-the-rise-of-epigenetics/
http://www.britannica.com/blogs/2009/02/the-rebirth-of-lamarckism-the-rise-of-epigenetics/
2)சீரற்ற மரபு விலகல்[Random Genetic Drift] என்னும் செயலாக்கத்தின் படியும் பரிணாம் வளர்ச்சி ஏற்படுகிறது.
இது என்னவெனில் டி என் ஏ ல் ஏற்படும் மாற்றங்களில் பல (அறியக்கூடிய) எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் அதில் விலக்கங்களை மட்டும் ஏற்படுத்துகின்றன. ஒரு உயிரின் குழுவில் ஏற்படும் விலகல்கள், அதில் இரு அல்லது மேற்பட்ட இனவிருத் செய்ய இயலாத உயிரின குழுக்களாக் உயிரின பிளவு[speciation] அடைவதே சீரற்ற மரபு விலகல் ஆகும். இக்கருத்தாக்கத்தில் இயற்கை பேரழிவுகள் போன்ற விபத்துகளும் பரிணாம் வளர்ச்சி வரலாற்றில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
பல மூலக்கூறு அறிவியல் சார் பரிணாம அறிவியலாளர்கள் இயற்கைத் தேர்வை விட சீரற்ற மரபு விலகல் மூலமாகவே அதிக பரிணாம வளர்ச்சி நடந்துள்ளது என்னும் கருத்தை கொண்டுள்ளனர்.
ஆகவே இப்போதைய பரிணாம அறிவியலில் 1)இயற்கைத் தேர்வு,2)சூழலுக்கு ஏற்ற மாற்றம்,3)சீரற்ற மரபு விலகல் ஆகியவற்றின் பங்கு எவ்வளவு,எந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது என்னும் ஆய்வுகள்,விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இயற்கைத் தேர்வுக்கு மாறான பரிணாம விளக்கம் அளிக்கும் ஆய்வுக் கட்டுரைகள் பரிணாமத்திற்கே எதிரானது போல் மதவாதிகளால் காட்டப்படுகிறது.
சான்றுகளை விளக்கும் கொள்கை அளிப்பதே அறிவியல்,கொள்கைக்கு ஏற்றபடி சான்றுகள் அளிக்கும் மதம் போல் அல்ல.
டார்வினின் வாரிசு என பதிவை ஆரம்பித்து விட்டு தொடர்பின்றி டார்வினின் கொள்கையாக்கத்திற்கு மாற்றுக் கொள்கைகள் இரண்டு சொல்லிவிட்டு யார் இந்த வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் (September 10, 1941 – May 20, 2002) என சொல்லாமல் போனால் எப்படி என கேட்பது புரிகிறது..
ஸ்டீபன் ஜே கோல்ட் ஒரு அமெரிக்க பரிணாமவியல் மேதை இவரின் பரிணாம் கொள்கையாக்கம் டார்வினின் படிப்படியான் மாற்றம்[Gradual change] என்னும் கொள்கைக்கு மாற்றாக நிறுத்தப்பட்ட சமநிலை[Punctuted Equilibrium] என்னும் கொள்கையை வடிவமைத்தார்.
என்ன வாரிசு என்று சொல்லிவிட்டு டார்வினின் கொள்கைக்கு மாற்று கண்டுபிடித்தார் என்றால் எதிரி அல்லவா??. ஹா ஹா ஹா அறிவியலில் வழிமொழிபவர் வாரிசு அல்ல,அதற்கு மாற்றுஅல்லது விரிவுபடுத்தும் கருத்தாக்கம் கண்டுபிடிப்பவரே உண்மையான வாரிசு.
ஸ்டிபன் ஜே கோல்ட் பற்றியே எழுத ஆரம்பித்து பல விடயங்களையும் விளக்க வேண்டியது ஆயிற்று.அடுத்த பதிவில் கோல்ட் அவர்களின் கொள்கையாக்கம் பற்றி பார்ப்போம்.
நன்றி
ஸ்டீபன் ஜே கோல்ட் ஒரு அமெரிக்க பரிணாமவியல் மேதை இவரின் பரிணாம் கொள்கையாக்கம் டார்வினின் படிப்படியான் மாற்றம்[Gradual change] என்னும் கொள்கைக்கு மாற்றாக நிறுத்தப்பட்ட சமநிலை[Punctuted Equilibrium] என்னும் கொள்கையை வடிவமைத்தார்.
என்ன வாரிசு என்று சொல்லிவிட்டு டார்வினின் கொள்கைக்கு மாற்று கண்டுபிடித்தார் என்றால் எதிரி அல்லவா??. ஹா ஹா ஹா அறிவியலில் வழிமொழிபவர் வாரிசு அல்ல,அதற்கு மாற்றுஅல்லது விரிவுபடுத்தும் கருத்தாக்கம் கண்டுபிடிப்பவரே உண்மையான வாரிசு.
ஸ்டிபன் ஜே கோல்ட் பற்றியே எழுத ஆரம்பித்து பல விடயங்களையும் விளக்க வேண்டியது ஆயிற்று.அடுத்த பதிவில் கோல்ட் அவர்களின் கொள்கையாக்கம் பற்றி பார்ப்போம்.
நன்றி
நல்லதொரு பதிவு சகோ.. மேலும் எளிமைப் படுத்தலாம் என நினைக்கின்றேன் ... !!!
ReplyDeleteபரிணாமம், டார்வின் ஆகிய இரு சொற்களைத் தவிர இன்றைய படைப்புவாதிகளுக்கு எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. பெரும்பாலும் படைப்புவாதிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் படைப்புவாத மையம் 1960 - களில் எழுப்பிய கேள்விகள் தான். அவற்றுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டும் அவற்றை மறுப்பதை ஒரு தொழிலாகவே செய்கின்றார்கள் ... !!!
உங்களின் இப்பதிவுத் தொடர் தமிழ் பதிவுலகில் பல புரிதல்களையும் பரிணாம உயிரியல் குறித்த தெளிவுகளையும் பிறப்பிக்கும் என நம்புகின்றேன் ... !!!
ஸ்டீபன் ஜெ கோல்ட்டை தமிழில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். அவர் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர், சமூகப் போராளி என்பதும் நினைவுப் படுத்தவேண்டிய விடயங்கள் ... !!!
ReplyDeletePunctuated Equilibrium பற்றியும் சிறு விளக்கம் கொடுங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் ..
மிக்க நன்றிகள் சகோ ... !!!
வாங்க சகோ இக்பால் செல்வன்,
ReplyDeleteஇப்பதிவின் நோக்கமே பரிணாம கொள்கை என்பது டார்வினில் இருந்து விரிவுபடுத்தப்பட்டு வெகு தூரம் வந்து விட்டது என்பதை விளக்கும் நோக்கில்தான்.
பாருங்கள் டார்வின் கூறிய
1.படிப்படியான வளர்ச்சிVs______கோல்டின் நிறுத்தப்பட்ட நிலைத் தன்மை வளர்ச்சி
2. இயற்கைத் தேர்வே முழுமுதல் காரணி Vs __________சீரற்ற மரபு விலகல்
3.சீரற்ற மாற்றரங்கள் VS __________ லாமார்க்கியன் சூழலுக்கேற்ற மாற்றங்கள்
இந்த மூன்றுமே அதன் மாற்றுக் கொள்கையாக்கங்களோடு ஒப்பிடப்படுகின்றன.ஒவ்வொரு போட்டிக் கொள்கைக்கும் சான்றுகள் இருப்பதால் பங்கு எவ்வளவு என்ற ரீதியிலேயே விவாதம் செல்கிறது.
கோல்டின் கொள்கையாக்கமான Punctuated Equilibrium குறித்து மட்டுமே எழுத நினைத்தேன்.[அடுத்த பதிவில் தெளிவாக எழுதுகிறேன்] ஆனால்.டார்வின்& மாற்று செயலாக்கங்கள் பற்றி பொதுவாகவும் எழுத தோன்றியது.ஊக்கமளிக்கும் சொற்களுக்கு நன்றி சகோ
உண்மை! நல்ல பதிவு! ஆனால், நம்ம ஆட்கள் எந்த எழவு புரிய வில்லை என்றாலும், அது கடவுள் என்று ஒளருவான்; இவர்கள் எப்பேர்ப் பட்ட மூடர்கள்?
ReplyDeleteபடித்த படிப்பை நம்பாமல், ஏதோ ஒரு புண்ணாக்கு மட (Mutt) சாமியார், ஆதீனக் கூமூட்டைகள் (மண்டையில் கொட்டை போட்டவர்கள்) பனாதப் பாரேதேசி ரிஷிகளுக்கு அந்தக் காலத்தல் அவ்வளவு அறிவு இருக்கும் என்று நம்புவர்களை நினைத்து....
வாங்க மருத்துவர் நம்பள்கி,
Deleteநலமா, உங்களின் பதிவை தவறாமல் படிப்பது வழக்கம்.சரியான விடயங்களை பட்டென்று போட்டுத் தாக்கும் உங்கள் பாணி அருமை.
பரிணாமம் என்பது என்ன என்பதை கொஞ்சம் எளிமையாக் தெளிவாக தமிழில் சொல்லும் முயற்சி.
நன்றி
நல்ல பதிவு.
ReplyDeleteஅறிவியல் வார்த்தைகள் சற்றெ நம் மூளையில் ஏற தயங்குது. நாலைந்து முறை படித்தால் புரிகிறது.
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டது என்பது தான் மதவாதிகளின் நம்பிக்கை. சிலர் Intelligent Creation என அறிவியலை திருப்பி பைபிளோடு இணைக்கப் பார்க்கின்றனர். http://www.intelligentcreationinstitute.org/
உங்கள் முயற்சி தொடரட்டும்.
நம் முயற்சி இங்கே- வந்து நண்பர்கள் விமர்சிக்கட்டும்.
http://pagadhu.blogspot.in/
வாங்க சகோ தேவப் பிரியா,
ReplyDeleteபரிணாமம் புரிந்து கொள்வது எளிதே.அதன் சான்றுகளையும் நடுநிலையோடு சிந்தித்தால் ஏற்றுக் கொள்ளும் வண்னமே இருக்கும்.
பாருங்கள்.கடந்த காலத்தில் வாழ்ந்த பல விலங்குகளின் படிமங்கள் கிடைத்த்ன.அவற்றை கால்,உருவ அமைப்பு ரீதியாக வகைப் படுத்தியதில் இரு விடயங்கள் உறுதியாகின்றன.
1.வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விலங்குகள் பூமியில் வாழ்ந்து வந்தன.
2. முந்தைய கால கட்ட விலங்குகளும்,அடுத்த காலகட்ட விலங்குகளும் உரு அமைப்பில் பல ஒற்றுமை,கொஞ்சம் மாறுபாட்டுடன் இருந்த்ன.
இது எப்படி இருக்க முடியும் எனில் இயற்கை விதிகளுக்கு உடபட்ட ஒரே விளக்கம் முந்தைய கால் கட்ட விலங்குகள் அடுத்த கால கட்ட விலங்குகளாக பரிணாம் வளர்ச்சி அடைந்தன.
அது எப்படி நிகழ்ந்தது என இதுவரை வாழ்ந்த ,வாழும் பல பில்லியன் உயிரினங்களுக்கும் தொடர்ச்சியான வரலாறு அமைப்பதையே அறிவியலாளர்கள் செய்கின்றனர்.
இந்த சிந்தனையில் பார்த்தால் பரிணாமம் எளிதில் பிடிபடும்.
**********
ஆறு நாள் படைப்புகாரர்களுக்கு ஆறுக்கு மேல்பட காலகட்டங்களை ஒத்துக் கொள்வதில் சிரமம் இருக்காது எனினும் ஆதம் ஏவாள் கடவுளின் சாயல் என்பதால் சிம்பன்சியும்,மனிதனும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியவர்கள் என்பதை ஏற்க கசப்பாக உள்ளது.
அவ்வள்வுததான்!!!!.இத்னால் பரிணம விள்க்கங்களில் வரும் விவாதம்,மாற்றம் அனைத்தையும் தங்கள்க்கு சாத்கமாக் காட்ட என்ன விதண்டாவாதமும் செய்வார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் வழி நட்த்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு வந்து விடுவார்கள்.
நன்றி
//கடந்த காலத்தில் வாழ்ந்த பல விலங்குகளின் படிமங்கள் கிடைத்த்ன....வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விலங்குகள் பூமியில் வாழ்ந்து வந்தன.//
ReplyDeleteஇந்த இரண்டையும் பற்றிச் சொல்லி இதுவே பரிணாமத்திற்கு ஒரு சான்றில்லையா என்று கேட்டு, நம் இஸ்.சகோக்கள் அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ‘விளையாடியது’ நினைவுக்கு வருகிறது.
நல்ல கட்டுரை. பிரமிக்க வைக்கிறீர்கள். அதுவும் எங்கே இருந்து இப்படித் தமிழ்ச் சொற்கள் கொடுக்கிறீர்களோ! என் ஆழமான பாராட்டுக்கள்.
உங்கள் கட்டுரை பிடித்தது; ‘நம்பள்கி’யின் கோபமும் பிடித்தது!
1. வணக்கம் அய்யா,
Deleteபல இடங்களில் இருந்து கொஞ்சம் தமிழ் படுத்தி [இன்னும் மிகச் சரியான தமிழ் பதங்கள் உருவாக்கப் பட வேண்டும்] அளிக்கிறோம் அவ்வளவுதான்.எல்லாப் புகழும் அறிவியல் கட்டுரை அளிக்கும் ஆசான்களுக்கும்,கூகிள் ஆண்டவருக்கு மட்டுமே!!!!!!.
பரிணாமத்தின் மீதி ஐயம் கொண்ட நடுநிலையாளர்களுக்கு நாம் அளிக்கும் ஆலோசனை இதுதான்.தயவு செய்து மதவாதிகளின் பரிணாம் எதிர்ப்பு கட்டுரைகளை படியுங்கள்.அவர்கள் சொல்வது அனைத்துமே பொய் என்பதும்,தொடர்ச்சியாக ஒரே கருத்தை வலியுறுத்த மாட்டார்கள் என்பதும் பிடிபடும்.
இபோது பரிணாம் எதிர்பாளர்கள் படிமங்கள் பற்றி விவாதிப்பதை தவிர்க்கின்றனர்.படிம சான்றுகள் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு பரிணாமத்திற்கே விளக்கம் அளிக்கின்ற்ன.
சரி வேவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விலங்குகளை அறிவியலின் கால அட்டவணைப் படி மட்டுமே இயற்கைக்கு மேம்பட்ட சக்தி படைத்தது என்பதை ஒத்துக் கொள்கிறோம் என்றாலே,99% படைக்கப்பட்ட(?) விலங்குகளை காப்பாற்ற முடியாமல் அழிய விட்டதும் அச்சக்தியே என்றால் என்ன கருத்து ஏற்படும்?
**********
ஆகவேமூலக்கூறு அறிவியல் சார்ந்து வள்ர்ந்து வரும் துறை என்பதால் ஆய்வுரீதியாக ஆய்வகங்களில் அறியப்படும் சான்றுகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்பட்டு,விவாதிக்கப் பட்டே ஒரு முடிவுக்கு வரும் என்பது நாம் அறிந்த விடயம்.
விவாதம் ,கருத்து வேறுபாடுகள் [நாம் பதிவில் குறிபிட்ட மாற்றங்களின் காரணிகள்] குறித்து பாருங்கள் பரிணாம கொள்கையில் குழப்பம் என்பவர்கள்,முடிவு எட்டப் பட்டால் வேறு விடயத்திற்கு தாவி விடுவார்கள்.
மிக சரியான மூலக்கூறு அறிவியல் சார் பரிணாம எதிர்ப்பு எப்படி இருக்க வேண்டும்?
1. டி.என் .ஏ ஒவ்வொரு விலங்கிற்கும் மாறாத நிலையான ஒன்று.
http://aob.oxfordjournals.org/content/95/1/133.full
[இது தவறென்று நிரூபிக்கப்பட்ட கோட்பாடு]
2. டி.என்.ஏ மாறும் ஆனால் உயிரின பிளவு[speciation] ஏற்படாத அளவில் பல்வேறு வகைகளை மட்டும் ஏற்படுத்தும்.
[இதுவும் தவறு பழ ஈக்களில்[fruit fly],இன்னும் பல் உயிரினங்களின் பரிசோதனையின் படி]
இப்படி இருக்கும் போது அவர்கள் என்ன சொல்ல முடியும்?.
நன்றி
தமிழ் சமூகத்திற்கு பரிணாம அறிவியல் குறித்தவெளிச்சம் பாய்ச்சும் தங்கள் எழுத்து போற்றுதலுக்குரியது.வாழ்த்துகள்!!!!!!தொடர்க!!!!!!!1
ReplyDeleteசகோ இராசின்
ReplyDeleteவாங்க!.நாம் என்ன சொல்கிறோம்.மதம் என்பது நம்பிக்கை சார்ந்த ,வாழ்வியல் சார் ஆன்மீகம் மற்ரும் பிடித்த விடயம் எனில் அரசியல் கலப்பின்றி பின்பற்றுவதில் யாருக்கும் எதிர்ப்பில்லை.மதத்தை வைத்து அரசியல் அதிகாரம் கைப்பற்ரும் எந்த முயற்சியும் எதிர்க்க வேண்டியதே.
********
பரிணாமம் என்பது என்ன,சான்றுகள் இருப்பதை எளிதில் விளங்க இயலும்.ஆனால் எப்படி நடந்தது என்பது அறிய நிறைய கற்க வேண்டும்.இது 400 கோடி ஆண்டு வரலாறு ,பல் துறைகள் இணைந்த அறிவியல்.
ஆகவே நம் பதிவில் நிறைய கேள்விகள் நடுநிலையாளர்களே[மத்வாதிகளும்தான்] எழுப்ப வேண்டுகிறோம்.
ஹி ஹி பரிணாமத்தை எதிர்க்கும் போது மதவாதிகள்படைப்புக் கொள்கை,மதம் ஆகியற்றை கழற்றி விட்டு போலி அறிவியல் முகமூடி அணிந்து உளறுவதே ஒரு நல்ல நகைச்சுவை.உலக் அளவிலும் இதே சூழல்தான்.
Genome-wide variation from one human being to another can be up to 0.5% (99.5% similarity)
- Chimpanzees are 96% to 98% similar to humans, depending on how it is calculated. (source)
- Cats have 90% of homologous genes with humans, 82% with dogs, 80% with cows, 79% with chimpanzees, 69% with rats and 67% with mice. (source)
- Cows (Bos taurus) are 80% genetically similar to humans (source)
- 75% of mouse genes have equivalents in humans (source), 90% of the mouse genome could be lined up with a region on the human genome (source) 99% of mouse genes turn out to have analogues in humans (source)
- The fruit fly (Drosophila) shares about 60% of its DNA with humans (source).
- About 60% of chicken genes correspond to a similar human gene. (source)
நன்றி
ஒரு மாதிரி(எ.கா நண்பர்களே ஹி ஹி) இன்றைய பரிணாம் எதிர்ப்பு நகைச்சுவை.மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 98% டி என் ஏ ஒற்றுமை உண்டும்.சிம்பன்சிக்கும் 24 ஜோடி குரோமோசொம்களும் மனிதனுக்கு 23 குரோமோசோம்களும் உண்டு.இரண்டின் மூதாதையருக்கு 48 குரோமோச்சொம் இருந்து இருக்க வேண்டும்.இதில் ஒரு ஜோடி குரோமோச்சொம்கள் இணைந்து மனிதனுக்கு 23 ஜோடி ஏற்பட்டு இருக்கலாம் என்பது இப்போதைய அறிவியல் விளக்கம்.
ReplyDeleteஇதன் சான்றாக 22 ஜோடி குரோமோசொம் கொண்ட ஒருமனிதர் சீனாவில் இருப்பதும் நான் ஏற்கெனவே பதிவில் விவாதித்த விடயம்.இவருக்கும் ஒரு ஜோடி குரோமோச்சொம் இணைந்ததால் இப்படி ஏற்பட்டது.
ஆகவே 23 ஜோடி குரோமோசொம் கொண்ட ஆனது 22 ஆகும் போது 24ம் 23 ஜோடி குரோமோசொம் ஆகமுடியும் என்பது சரியான அனுமானமே.
ஆனால் பாருங்கள் நம்ம பரிணாம் எதிர்ப்பு மதவாதிகளின் கருத்தை,சிரிக்காமல் படிக்கவும்
.
http://www.evolutionnews.org/2012/07/a_veil_is_drawn061751.html
Luskin concludes:
Unlike proponents of Darwinian evolution, intelligent-design theorists are not obligated to accept human/ape common ancestry as a given. They are free to follow the evidence wherever it leads.
Why it leads to ambiguity is a good question, another one that science probably cannot answer. As the adage says, "Teach your tongue to say, 'I don't know.'"
On the weighty matter of human self-definition, we are left without a clear Science Says type of conclusion, free to draw conclusions if we wish from other sources and considerations -- to the frustration of Darwinists of every stripe.
Thank you
Migavum arumayana pathivu nanbera(sir)
ReplyDeleteபதிவிற்கு நன்றி நண்பரே,
ReplyDeleteபரிணாம அறிவியலை எளிதாக விளக்கிவிட்டீர்கள், ஸ்டீபன் ஜே கோல்ட் பற்றி அவரின் கோட்பாடு பற்றி அறிய ஆவல், மர்மம் நாவல் மாதிரி தொடரும் போட்டுள்ளீர்கள், interesting.
வணக்கம் நரேன்,
Deleteபரிணாம கொள்கை என்பது கடல்.அது என்ன என்பதை அனைவரும் ஒரு அள்வுகு நடுநிலையோடு சிந்திக்கும் அனைவரும் அறிய இயலும்.படிமத்திற்கு விள்க்கம் வெவ்வேறு காலகட்டப் படைப்பு அதுவும் மனிதன் பேரண்டம் உருவான 13.7 பில்லியன் ஆண்டுகளில்,பூமி உருவான 4.5 பில்லியன் ஆண்டுகளில் மனிதன்(ஹோமோ சேஃபியன் ) வெறும் 2இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே உருவானவன்.
இன்றும் பல புதிய உயிரினங்கள் உயிரினப் பிளவின் படி உருவாவதும்,ஆவணப்படுத்தப்படுவதும் கண்கூடு.இன்னும் ஒரு 10 தலைமுறை ரீதியாக மரபணு மாற்றங்கள் ஆவணப்படுத்தப்ப்ட்டால் மிகசரியான் பரிணாம் விள்க்கங்கள் பரிசோதிக்கும் வண்ணம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
உயிரினப் பிளவு டி என் ஏ வில் எப்படி மாற்றம் கொண்டு வந்தால் உருவாகும் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் ,அதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெரிய இன ரீதியான சிக்கல்களை உருவாக்கும்.
பரிணாம் ஆய்வுகள் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதும் நம் கருத்து.பரிணாமம் உண்மை என்பதாலேயே அதன் விளைவுகளுக்கு அஞ்சுகிறோம்.
தவிர்க்க விரும்புகிறோம்!
செயற்கைத் தேர்வைத் தவிர்ப்போம்!
கோல்ட் பற்றி கொள்கையாக்கம் பற்ரி எழுதிக் கொண்டு இருக்கிறேன்.விரைவில் வரும்.
நன்றி
நண்பர் சார்வாகன் கலக்குரீங்க பரிணாம எதிர்ப்பாளர்களான ம(ந்)தவாதிகளைப்பற்றிய கவலையை விடுங்க,2000 வருட வேதக் குப்பைகளைக் கிளறுவதைவிட,உங்களின் தமிழ் படுத்தப்பட்ட அறிவியல் மேலும் பரிணாமத்தைப் பற்றிய நல்லறிவை எங்களைப் போன்றவர்களும் புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கின்றது தொடருங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க சகோ இனியவன்
Deleteபரிணாம் அறிவியல் என்பது பல துறை அறிவியல்(உயிரியல்,புவியியல்,வேதியியல்,மூலக்கூறு அறிவியல்,கணிதம்) என இருப்பதால் அனைத்தையும் பரிசோதனை ரீதியாக அறிவதற்கு வாழ்நாள் போதாது.
எனினும் ஒரு சாதாரண மனிதர்களின் சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்ய இயலும்.மதவாதிகளின் [ஒருவேளை]அறிவியல்ரீதியான கேள்விகள் அனைத்தும் குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளே.யாரும் அதனை பொருட்டாக எடுப்பது இல்லை.
பாருங்கள் நான் உயிரியல் துறை சார்ந்தவன் அல்ல,பொறியியலாளன்.ஆனால் பெரும்பாலான பரிணாம எதிர்ப்பு விமர்சனங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிகிறது.எல்லாம் கடந்த ஒரு வருட வாசிப்பு&விவாதம் மட்டுமே.
அனைத்து பரிணாம விமர்சனங்களும் டார்வின்&டார்வினியம் எனப்படும் இயற்கைத் தேர்வு பற்றி மட்டும் இருக்குமே தவிர பரிணாமம் நடக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருக்காது.டார்வினியம் என்பது பரிணாம்த்தில் 50% குறைவு என்பது நம் கருத்து.
அடுத்த பதிவில் இன்னும் விவரம் அறிவோம்.நிறைய கேள்வி கேளுங்கள்!
நன்றி
LOL : குஷ்புக்கு கோயில் கட்டியவர்கள், இதை உண்மையாக்கி கோயில் கட்டினால் ஆட்சேபனை ஏதும் இல்லை -:)
ReplyDeletehttp://www.theunrealtimes.com/2012/07/07/temple1-built-for-higgs-boson-particle-in-tamil-nadu-devotees-throng-to-get-darshan/
நரேன்,
Deleteஇங்கதான் நிக்கிறான் இந்து .என்ன இறைமறுப்பு பிரச்சாரம் செய்தாலும் இந்து மதத்தை அழிக்கவே முடியாது.ஏன் எனில் அழிக்க முயல்பவனையும் சாமி ஆக்கி கோயில் கட்டி விடுவார்கள்.
புத்தர்,மொகலய அரசன் அக்பர் விஷ்ணு அவதாரம் என்றவர்கள் அல்லவா!
ஹிக்ஸ் துகளை கடவுள் துகள் என்றதும் நம்ம ஆள் வேறுவிதமாக விளங்கிட்டான்.வெளங்கின மாதிரித்தான்!!!!!!!!!!!!!.
இறைவன் தூணிலும் இருப்பான்,(ஹிக்ஸ்) துரும்பிலும் இருப்பான். ஹிக்ஸ் ஆனந்தா என்று புது சாமியார் வராமல் இருந்தா சரி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இப்படியெல்லாம் நீங்கள் எழுதறதாலதான் கார்பன் காப்பி எழுதறதையே உட்டுட்டார் போல இருக்கு.
ReplyDeleteஒரு சந்தேகம். எங்க மூமின் நாட்டில அதான்.. புனித பூமி சவுதி அரேபியாவிலயும், செகண்ட் புனித பூமி பாகிஸ்தான்லயும் பரிணாமம் சொல்லித்தர்ராங்களா இல்லியா?
pakadu.blog.com
வாங்க இ.சா
Deleteநம்ம மூமின் அறிவியலாளர்கள் விவாதத்துக்கு வந்தால் இன்னும் பல பதிவு இடலாம்.நம் கடைக்கு கூட்டம் நல்லா வரும் என்று பார்த்தால் பரிணாம் எதிர்ப்பு கடையை கொஞ்ச நாளுக்கு மூடி சதி செய்து விட்டாரகள்.
துருக்கி,பாகிஸ்தான்,மலேசியா உள்ளிட்ட பல் நாடுகளில் பரிணாம பாடம் உண்டு.சவுதியில் பாடம் இருப்பதாக்வும் அதனை எதிர்த்து நம்பிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும் ஒரு செய்தியில் படித்தேன்.
அந்த நாடுகளில் நடப்பது மிகசரியாக எந்த விவரமும் வெளியே தெரியாது.
நன்றி
///பரிணாம் எதிர்ப்பு கடையை கொஞ்ச நாளுக்கு மூடி சதி செய்து விட்டாரகள்.//
Deleteஇப்போது ’கடைகளில்’ வேறு மாதிரி வியாபாரம். ப்ருப்பு வியாபாரம் என்று போர்டு போட்டிருக்கும். அங்கு போவீர்கள். ஒரு ஓரத்தில் கொஞ்சூண்டு பருப்பு இருக்கும். ஆனால் வியாபாரப் பொருள் வேறு ஏதாவது இருக்கும்; மதப்புத்தக சரக்குகளை கடை விரித்திருப்பார்கள்.
ஒரே ஜாலிதான் போங்க ....!
தலைவரே, இப்பத்தான் தெரிந்தது உங்களுக்கு எங்கேயிருந்து அறிவியல்- அறிவு, தாகம், புரிதல், விளக்கம், தெளிவு- எல்லாம் வந்தது என்று. உண்மையாக சொல்லவும் இந்த புத்தகத்தை படித்த பிந்தானே வந்தது.
ReplyDeletehttp://onlinepj.com/books/thirukuranin_ariviyal_sanrukal/
நம்நாட்டு கல்விதுறையே மோசம், நோபல் பரிசு பெறத்தக்க அரிய புத்தகத்தை பள்ளிக்கூடம் கல்லூரி பாடத்திட்டங்களில் இன்னும் சேர்க்காமல் இருக்கிறார்கள்.
இவ்வளவும் எங்கள் வேதத்தில் இருக்கிறது என்பவர்கள். அந்த வேதத்தை 1400 ஆண்டுகளாக் பெரிய பெரிய அறிஞர்கள் ஆராய்ந்து, நான்கு மத்ஹபுகளை வைத்து, புதிதாக அண்ணன் பி.ஜே மத்ஹபும் வந்து, உள் அர்த்தம் மேல் அர்த்தம், உள்ளுக்குள் உள் அர்த்தம் கண்டு, ஆயிரக்கணக்கான மதராஸாக்கள் மிகப்பெரிய அறிஞர்கள் கீழ் இருந்தும், வசனங்கள் கூறும் அறிவியலை போயும் போயும் காஃபிர்கள் தான் கண்டுபிடிக்குணுமா.
இல்லை காஃபிர்கள் திருட்டுதனம்மா குரான் வசனங்களை படித்து, தாங்களே கண்டுப்பிடித்ததை போல அறிவியலை சொல்கிறார்களா??
குரான் அறிவியல் புத்தகம் கிடையாது போகிற போக்கில் அறிவியலை அடித்துவிட்டு செல்கிறது, குரான் வசனங்கள் அப்படியே தான் இருக்கும் ஆனால் அந்த அந்த கால கட்டத்திற்கு பொருந்தும் என்ற ரேடிமேட் பதில்தான் சரியா??
அந்த பதிவில் சு.பி. இந்த புத்தகத்தின் லிங்கை வெளிப்படையாக தராத சூட்சமம் தெரியவில்லை.
வசனங்கள் கூறும் அறிவியலை போயும் போயும் காஃபிர்கள் தான் கண்டுபிடிக்குணுமா.//
ReplyDeleteஇதுக்கும் கைவசம் வசனம் வச்சிருக்கோம்ல, காபிர்களுக்கு அப்படியொரு அறிவை அல்லாதான் கொடுத்திருக்கிறான் என சப்பைக்கட்டுவார்கள், அல்லா நாடினால் நடக்கும், குரான்ல அல்லா சொல்லியிருக்கிறான், அதுக்கு ஹதீது இருக்கு,இப்படியே சொல்லிச் சொல்லி குரானை படிப்பவர்களின் புத்தியும் அதற்குள்ளேயே இருப்பதால் அவர்களுக்கு அறிவியல் பார்வையும் ஆன்மீகமாகத் தெரிகின்றது.விலங்கிடப்பட்ட மூளையை விடுதலை செய்ய வேண்டுமாயின் சற்று விலகியிருந்து சிந்திக்க வேண்டும்.அதுதான் சுட்டுப் போட்டாலும் வராதே. எல்லாத்துக்கும் காரணம் பயம்...பயம்...சொர்க்கம் கிடைக்காது,கைப்படாத ரோஜாக்கள் கிடைக்கமாட்டார்கள்,மறுமையில் கேள்வி கேட்பான்,நரக வேதனை,இப்படி அறிவுக்கு பொருத்தமில்லாத கற்பனைகளை வளர்த்து மூளையை முடக்கி வைத்த ஒரு முட்டாளின் சதிதான் இன்று வரையில் மீளமுடியாமல் தவிக்க வைத்துவிட்டது.இதை தாண்டி சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதுதான் இங்கு வேதனைக்குறியது.
வாங்க சகோ நரேன்,&இனியவன்,
ReplyDeleteஇந்த மத புத்த்கத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு மட்டுமே என் பல முறை விளக்கி இருக்கிறோம்.
இந்த வார்த்தை விளையாட்டை ஆரம்பித்து வைத்தவரே மௌரிஸ் புகைல் என்னும் காஃபிர் என்பதை நம்பிக்கையாளர்கள் மறைப்பது கண்டிக்கத் தக்கது.
ஆகவே மத புத்தகத்தில் அறிவியல் என்பதும் காஃபிர்களீன் கண்டுபிடிப்பே.
புகைல் எந்த வரை கண்டு பிடித்தார் என்றால் நோவாவின் கால வெள்ளப் பெருக்கு பூமி முழுவதும் வரவில்லை,நோவாவின் பகுதிதியில்(எங்கே குறிப்பாகவா இந்த காஃபிர்கள் தொல்லை தாங்க முடியலை!)மட்டுமே.
ஏன் எனில் பூமி முழுதும் வெள்ளப் பெருக்கு என்பதற்கு அறிவியல் சான்று இல்லை.
அல்லாவுக்கும்,முகமதுவுக்கும் எவ்வளவு பூமியில் வெள்ளம் வந்தது என்பது தெரியாத போது ஒரு காஃபிருக்கு புரிந்தது என்றால் காஃபிர்களின் வல்லமைதான் என்னே!
அப்பகுதி மட்டும் வெள்ளம் என்றால் எதுக்கு கப்பல்,அதில் விலங்கு என்றெல்லாம் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் நம்பிக்கை!
காஃபிர்களை மேன்மைப் படுத்தும் மத அறிவியல் வாழ்க.மத அறிவியலை கிண்டலடித்து காஃபிர்களின் நகைச்சுவை உணர்வு வளர்வதால் அவர்கள் மகிழ்வடைகிறரகள்.
புத்தகம் மாறாது,புத்த்கத்தின் விள்க்கம் காஃபிர்களீன் அறிவியல் சார்ந்து மாறும்.
மத அறிவியல் படிப்பீர்!!!!!!!!! மன மகிழ்ச்சி அடைவீர்!!!!!!!.
ஹா ஹா ஹா
நன்றி
காபிர் சார்வாகன்
ReplyDelete//புத்த்கத்தின் விள்க்கம் காஃபிர்களீன் அறிவியல் சார்ந்து மாறும்.//
ஆனால் அல்குரான் மாறாது. அல்குரானுக்கு நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஹூரிப்பிரியரும் கார்பன்காப்பி பதிவரும் கொடுக்கும் விளக்கம் மாறும். ஆனால் அல்குரான் மாறாது. அதை அல்லாஹ் காப்பாற்றுகிறார். அதற்கான விளக்கத்தை அல்லாஹ் காப்பாற்றமாட்டார். அது நம்ம மூமின் இஷ்டம் போல புகுந்துவிளையாட அல்லோ பண்ணிவச்சிக்கிரார். அப்புறம் தட்டையா உலகம் இருக்கு, அலெக்ஸாந்தர் கிழக்கை போயி பார்த்தாரு. மேற்கை போயி பார்த்தாரு.. அப்புறம் இதெல்லாம் உளறி வச்சிக்கிர அல்குரானை தவ்ஹீத் அண்ணன், ஹூரிப்பிரியர், கார்பன் காப்பி மாரி மூமின்கள் காப்பாத்தலைன்னா நம்ம அல்லாஹ் கதி என்னாவுறது? இன்னிக்கு பிக் பேங்க் இருக்குங்கறாய்ங்க காபிர்கள். அதுக்கு தவுந்தாற்போல அல்குரான் விளக்கம் சொல்லிப்புட்டொம். அப்புறம் பிக் பேங்கும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாதுன்னா, அதுக்கு தவுந்தாப்பல அல்குரானை மாத்த முடியுமா? நம்ம வெளக்கத்தைத்தான் மாத்தணும்.
காபிர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேணாமா?
pagadu.blog.com
ஹிக்ஸ் போஸான் பற்றி அறிவிப்பு வந்தவுடன், இந்தியா ஊடகங்கள் அறிவியலாளர் முனைவர் சத்தேயந்திரநாத் போஸ் பற்றியும் அவரின் ஆக்கங்கள் ஆராய்ச்சி மற்றும் ஹிக்ஸ் போஸான் பற்றி பேசாமால், அறிவியல் எதிர் கடவுள் என்ற வாதத்தையே பிரதானபடுத்தின.
ReplyDeleteபாகிஸ்தானில் நீங்கள் சொன்னபடி நடக்கும் கூத்து...
http://www.thehindu.com/news/international/article3619707.ece
The late Abdus Salam, Pakistan’s only Nobel laureate is no hero at home, where his name has been stricken from school textbooks
வாங்க நரேன்,
ReplyDeleteஹிக்ஸ் துகள் கண்டுபிடிக்கபட்டது என்பதை விட அது போன்ற ஒரு (போசான்) துகள் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதுதான் சரி.
அத்துகள் மீது எந்த அளவு பரிசோதனை செய்து ஹிக்ஸ் செயலாக்கம் சரிபார்க்க இயலும் என்பது இப்போதைய விடை தெரியா கேள்விகள்.அறிவியல் என்பது உள்ளது உள்ளபடி அறிந்து,புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம்.
ஒரு பரிசோதனையில் இத்துகள் ஹிக்ஸ் செயலாக்கத்தை நிரூபிக்க இயலாமல் போனால் என்ன ஆகும்?
1.இத்துகள் ஹிக்ஸ் துகள் அல்ல,தேடும் பணி தொடரும்.
2,ஹிக்ஸ் செயலாக்கம் என்பதே சாத்தியம் அற்றது .
இந்த ஹிக்ஸ் துகள் பற்ரிய செய்திகள் குழப்பம்,கேள்விகளையே அதிகம் ஏற்படுத்துவதால் கொஞ்சம் தெளிவான தகவல் கிடைத்த பின் பதிவிடலாம் என எண்னுகிறேன்.
அறிவியலும் விமர்சனக் கண்னோட்டத்தில் மட்டுமே ஆய்வு செய்யப்படவேண்டும். இதில் கடவுள்,மதம் திணிப்பு இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
கடவுள் என்று ஒன்று இருந்தால் அது இயற்கைக்கு மேம்பட்டதாக மட்டுமே இருக்க முடியும்.அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை விளக்கும் கொள்கையாக்கம்.
இயறகைக்கு மேம்பட்டது என ஒன்று இருப்பது உண்மை எனில் அறிவியலால் எப்போதும் கண்டறியப்பட முடியாத ஒன்று.
அறிவியலில் கண்டுபிடிக்க(விளக்க)ப் படுபவை இயற்கைக்கு மேம்பட்டது ஆக முடியாது.
இரண்டும் ஒன்றை ஒன்று சாராதவை,முரண் படுபவை.
ஹிக்ஸ் துகள் என உறுதிப்படுத்தப் பட்டால் அடுத்து கிராவிட்ரான் தேட வேண்டும் அவ்வள்வுதான்.அதுவும் கிடைத்தால் ஒரு இணைந்த பரிபூரண இயற்பியல் கொள்கை வடிவமைக்கப்படலாம்.அதனை பரிசோதனையில் இன்னொரு பேரண்டம் உருவாக்க முடியுமா என்ற கேள்வி வரும்.
நம்மால் ஒரு ஃபிக் பேங்க் மூலம் ஏதேனும் புதிய பேரண்டம்,உலகம் படைக்க இயலுமா என்பதெல்லாம் இப்போதைக்கு சைன்ஸ் ஃபிக்சன் மட்டுமே
நன்றி
காபிர் விஞ்ஞானிகள் கடவுள் இருக்கின்றார் என்று 99.9 சதவீதம் உருதிப்படுத்தியிருக்கிறார்கள் என்று நம்ம தவ்ஹீத் அண்ணன் புல்லரிச்சிரிக்கார்.
ReplyDeleteஇப்ப அந்த ஹிக்ஸ் போஸான்கிட்ட போயி, அல்லாஹ் அல்லாஹ், எனக்கு ஹூரி தருவியா தரமாட்டியான்னு கேக்க வேண்டியது ஒன்னுதான் பாக்கி.
கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!
ஹிக்ஸ் துகளே, எங்களுக்கு ஹூரிப்பொண்ணுங்களை கொடு..இல்லையேல் அந்த பொண்ணுங்களில் அஞ்சு பர்சண்டையாவது எங்களுக்கு இட ஒதுக்கீடு பண்ணு என்று ஸ்விட்சர்லாந்துக்கு ஊர்வலம் போக பிளான் பண்ணிகிட்டு இருப்பாருன்னு நெனக்கிறேன்.
எதுக்கும் உங்களுக்கு தெரிஞ்சா இப்படி ஒரு ஊர்வலம் நடந்தாலும் நடக்கலாம்னு செர்ன் ஆராய்ச்சியகத்துக்கு எழுதிப்போட்டுடுங்க.. அங்க இருக்கிறவங்க ரொம்ப கொழம்பிடப்போறாங்க.. பாவம்.