U.S. Military Bases in the Middle East!!!!!!!!
Via Lew Rockwell, a map of U.S. military bases in the Middle East:
இதைப் பார்த்து என்ன சொல்வது?
புரிபவர்களுக்கு புரிந்தால் சரி!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளைப் பற்றி அறியாமல் எகிப்தில் ஆட்சி மாற்றம்,சிரியாவில் அரச எதிர்ப்பு அல் கொய்தவிற்கு உதவி என செய்வதாக பலர் நம்புகிறோம்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எப்போதுமே மோதல்கள்,முரண்களை இரு பக்கமும் ஊக்குவித்தே தங்கள் பொருளாதார,அரசியல் இலக்குகளை அடைந்தன,அடைந்து கொண்டிருப்பதும் வரலாறு!!!
எனினும் மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என சில கட்டுரைகளின் அடிப்படையில் சுருக்கமான் ஒரு விளக்கத்தை அளிக்கிறோம்.
அமெரிக்கா என்ன செய்யப் பார்க்கிறது என்பது கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தெரியும்.கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் வாங்க சகோ!!!!!!!!!!!!
1967ல் இஸ்ரேலுடன் போர் தொடுத்த நாடுகள் 1)எகிப்து,2)ஜோர்டான்,3)சிரியா மட்ட்டுமே.சவுதி அப்படியே ஒதுங்கியது.
4)துருக்கி ஆட்டோமான் பேரரசின் தலைமையில் இருந்து உலகப் போர்களில் தோற்று இத்து போனது.இப்போது கொஞ்சம் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது.
அமெரிக்கா என்ன செய்யப் பார்க்கிறது.?
இராக்கை முடித்தாகி விட்டது. இப்போது சிரியாவில் போர் மும்முரம்,ஜோர்டானில் தலை காட்டும் மக்கள் எழுச்சி ,எகிப்தில் (சினாய்) பிரச்சினை இருக்கிறது.
இபோது சிரியாவில் இன்னும் கொஞ்ச நாள் போர் நடக்க வைத்து பல இலட்சம் மக்கள் பலி ஆன பிறகே அல்லாவிகள் ,சுன்னிகள்,குர்தியரகள்க்கு சிரியா ப்ங்கிடப்படும். ஜோர்டானிலும் ஆட்சி கவிழும். பால்ஸ்தின அகதிகளை சிரிய,ஜோர்டானில் குடியேற்றுவார்கள்...இஸ்ரேலுக்கு பாதி பிரச்சினை முடியும்!
இரானை பெரும்பாலும் தாக்க மாட்டார்கள் எனவே தோன்றுகிறது. எனினும் சவுதி அரசு போன்ற தங்களுக்கு விசுவாசமான் குழுவை இரானின் ஆட்சியில் அமர்த்த , மாற்றம் கொண்டு வர முழு மனதாக முயற்சிப்பார்கள்.ஷியாக்களை முற்றிலும் ஒழித்தால் ஷுன்னிகள் அமெரிக்கா பேச்சை கேடக மாட்டார்கள். கீரி பாம்பு கதைதான்!.ஹி ஹி
எகிப்து வாலாட்டினால் சினாய் பிரச்சினை பெரிது பண்ணி சூயசோடு சேர்த்து அத்னை தனி நாடு ஆக்குவார்கள்.அங்கு அதிக எகிப்திய கிறித்தவர்கள் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் இஸ்ரேல் நிலை இன்னும் உறுதிப்படும்.சூயஸ் போனால் எகிப்தின் பொருளாதரம் அவ்வள்வுதான்!
இன்னும் இஸ்ரேல் மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு செய்து அதிக பாலஸ்தீனர்களை ஜோர்டன்,சிரிய எல்லைக்குள் துரத்தி விடும். காசா த்னிமைப்படும்.
துருக்கி,இராக்,சிரியவில் குர்திய மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து குர்திஸ்தான் உருவாக்கினால். இந்த நாடுகளுக்கு நிரந்தர தொந்தரவு!!!!!!!!!!!!!!!!!!!!.
http://en.wikipedia.org/wiki/Kurdistan
http://en.wikipedia.org/wiki/Kurdistan
இவை நடக்க எப்படியும் 20+ வருடம் ஆகும் அதற்குள் எண்ணெய் வற்றி விடும். அரபுகள் வயிற்றுப் பாட்டை பார்க்க ஆரம்பிக்க,அவர்களுக்குள் குஸ்தி போட அமெரிக்க படைகளை புதிய எண்ணெய்க் கிணறுகள் கிடைக்கும் வாய்ப்புள்ள (ஆப்பிரிக்க?) நாடுகளுக்கு நக்ர்த்தும்.மத்தியக் கிழக்கின் வரை படமே மாறிவிடும்.
இப்போது சொல்ல்லுங்கள் அமெரிக்காவிற்கு அரபுகளைப் புரியவில்லையா!!! அமெரிக்கா கில்லாடிக்கு கில்லாடி!!!!!!!!!!!!
இதில் அனைத்தும் அப்படியே நடக்கும் என சொல்லாவிட்டாலும் அமெரிக்க,மேலை நாடுகளின் பொருளாதார,அரசியல் நலன் சார்ந்தே மத்திய கிழக்கில் மாற்றங்கள் என்பதை புரிந்தால் விளங்கி விடும்.
இதில் எவவளவு நடக்கும் என பார்க்கலாம்!!!!!!!!!!!!.
இநூற்றாண்டில் வாழும் மிக சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான் நோம் சாம்ஸ்கியின் ஆவண விளக்கப் படமும் பாருங்கள். பல மேலைநாடுகளின் வரலாற்றுத் தந்திரங்களை விளக்குகிறார்.
இநூற்றாண்டில் வாழும் மிக சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான் நோம் சாம்ஸ்கியின் ஆவண விளக்கப் படமும் பாருங்கள். பல மேலைநாடுகளின் வரலாற்றுத் தந்திரங்களை விளக்குகிறார்.
நன்றி
அருமையான பதிவு சகோ .. இரானை சுற்றிவளைத்து விட்டார்கள்.. என்ன சிரியா, ஜோர்டான், துர்க்மேனிஸ்தான், அசர்பைஜான் தான் மிச்சம் ... !!! அங்கும் காலூன்றினால் இரான் பொறிக்குள் அகப்பட்ட எலியாகிவிடும் என்பதில் ஐயமில்லை..
ReplyDeleteஅத்தோடு சிரியா வீழுமானால்.. லெபனானின் ஹிஸ்புல்லாக்களும் அடக்கப்பட்டு விடும்.. இஸ்ரேலுக்கு ஒரு தலைவலி ஒழியும் ...
ஜோர்டான் வீழ்ந்தால் .. மேற்குக் கரை நகர்த்தப்பட்டு கிழக்குக் கரையாக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை ..
பக்ரைன், சௌதியில் எழுப்பப்படும் மக்கள் போராட்டங்கள் நசுக்கப்படுமா ??? !!!
சௌதி இப்போதே கிலியில் இருப்பதால் தான் கடும் சட்டங்களை போட்டு மக்கள் ஆதரவை பெற முயல்கின்றதாமே !!!?
இரானியர் பலர் கிருத்தவர்களாக மாறுவதால் இரானும் கடுப்பாகி போய் உள்ளதாம் .. அதுக் குறித்து ... ?
குர்திஸ்தான் அமைவதும் நிச்சயம் என்கின்றீர்கள் .. பாவம் அவர்களுக்கும் ஒரு நாடு வேண்டாமா ? ஏற்கனவே சிரிய எதிர்க்குழுவினர் சிரிய குர்திஸ்தான் பகுதிகளை குர்து போராளிகளிடம் ஒப்படைத்துவிட்டதாம்.
நோம் சோவ்ஸ்கியின் ஒரு புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுண்டு .. இந்தக் காணொளியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நமது சகோக்கள் பலர் அல் ஜசீரா சொல்வது உண்மை என்று நம்பாமல்.. கொஞ்சம் ஆர்டி போன்றவற்றையும் கவனித்தால் இருப்பக்க செய்திகளையும் அறியலாம் !!!
மிக்க நன்றிகள் !
வாங்க சகோ வணக்கம்,
Delete//பக்ரைன், சௌதியில் எழுப்பப்படும் மக்கள் போராட்டங்கள் நசுக்கப்படுமா ??? !!!
சௌதி இப்போதே கிலியில் இருப்பதால் தான் கடும் சட்டங்களை போட்டு மக்கள் ஆதரவை பெற முயல்கின்றதாமே !!!?
இரானியர் பலர் கிருத்தவர்களாக மாறுவதால் இரானும் கடுப்பாகி போய் உள்ளதாம் .. அதுக் குறித்து ... ?
குர்திஸ்தான் அமைவதும் நிச்சயம் என்கின்றீர்கள் .. பாவம் அவர்களுக்கும் ஒரு நாடு வேண்டாமா ? ஏற்கனவே சிரிய எதிர்க்குழுவினர் சிரிய குர்திஸ்தான் பகுதிகளை குர்து போராளிகளிடம் ஒப்படைத்துவிட்டதாம்.//
இந்தக் கேள்விகள் அனைத்துமே ஒன்றுதான்.
மேலைநாடுகள் வாழ வழியற்று துன்புறும் ,வாழ எதுவும் செய்ய தயாராக இருக்கும் சி(ப)ல இனக்குழுக்களை கண்டுக் கொள்ளாமல் நெடுங்காலமாக் வைத்து இருப்பார்கள்.
தாங்கள் வளர்த்த கடா போன்ற சில இனக்குழுக்கள் தங்களுக்கு எதிராக திரும்பினால் இந்த குழுக்களை அவர்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.
ஒரி நிகழ்ச்சி நிரல் போட்டு, இது அப்படி என்றல் அப்படி என் தெளிவாக இருக்கும்!!!!
நேற்று அவன் மேலே இவன் கீழே.இன்று இவன் மேலே அவன் கீழே உஸ்ஸ்ஸ்ஸ் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுதான் அரசியல்!!!!!
நன்றி
அருமையான பதிவு நண்பரே. அமெரிக்காவின் neo-conservative உள்நோக்கங்களை, நெத்தியில் அடிக்கும்படி வெளிக்கொண்டு வந்துவிட்டீர். இப்படி பகடைகாய்களாக இருப்பதை அறியாமல், பெருமை வேறு.
ReplyDeleteதமிழ்மணம் முகப்பில் வந்துவிட்டது. தலைப்பை பார்த்தவுடன் சேம் சைட் கோல் போட்டுவிட்டார்களோ?
தற்போதிய அமெரிக்காவிற்கு, குடிவந்தவர்களின் தேசமாதலால், அதன் வெளியுறுவு செயல்பாடுகளில் சரித்திரம் தாக்கம் இல்லை. அனைத்து கொள்கைகளிலும் ஒரு real politics இருக்கிறது. அந்த நேரத்திற்கு என்ன தேவையோ அதையே செய்யும். இயற்கை தோழரான பிரிட்டனையே முதுகில் குத்திய சம்பவங்கள் நடந்தன.
இஸ்ரேல் உருவாகும் சமயத்தில், ஜனாதிபதியாக இருந்த ட்ரூமேனுக்கும், வெளியுறு கொள்கைகளை பார்க்கும் ஸ்டேட் டிபார்ட்மண்ட்டுக்கும் பெரும் கருத்து வேறுபாடே இருந்தது. இஸ்ரேல் உருவாவதால் அரபியர்கள் மத்தியில் அமெரிக்காவின் நலன் பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்படும் என்று வெளியுறுவுதுறை சொல்ல, ஜனாதிபதி அதை நிராகரித்தார்.
ஏதோ அமெரிக்கா இஸ்ரேலை எல்லா நேரமும் கண்மூடித்தனமாக ஆதரித்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் இஸ்ரேல் ஆதரவாளர்கள், அவர்களின் செல்வாக்கை வைத்து இஸ்ரேல் பக்கம் சாயுமாறு பாத்துக்கொண்டார்கள். அமெரிக்காவில் இப்போது எந்த அரசியல்வாதி இஸ்ரேலுக்கு எதிராக பேசினாலும் அவருக்கு பண் உதவிகள் சுத்தமாக நின்று விடும்.
பாலஸ்தீன பிரச்சனையை மத பிரச்சனையாக்கியது இஸ்ரேலுக்கு சாதகமாக போய்விட்டது. எதார்தத்தை புரிந்து கொண்டு கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால், இஸ்ரேல் சிறிய நாடாக இருந்திருக்கும், ஜெருசலேம் பாலஸ்தீனியர்கள் கையில் இருந்திருக்கும். மக்களை தூண்டி போர் போர் என்று இருந்த நிலங்களையும் இழந்ததுதான் மிச்சம்.
இந்த பிர்ச்சனையால் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதே உருவானது. நீங்கள் சொன்னதை போல சவுதி அரச குடும்பத்தை நிலை நிறுத்தி வைப்பதே அமெரிக்காதான். சவுதியில் தான் அதிக எண்ணை இருக்கின்றது. அந்த எண்ணை வளத்தை அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு வளர்ச்சிக்கு உதவ, பதிவில் சொன்னதைப் போல அமெரிக்கா செய்கிறது. தற்போது அமெரிக்கா எண்ணை உற்பத்தியில் தன்னிரைவு அடைந்துவிட்டது. ஏற்றுமதி செய்யும் நிலையும் வந்துவிட்டது. அதனால் எண்ணை விலைகள் குறையாமல் பாதுகாப்பதே அதன் முக்கியமான குறிக்கோளாகத்தான் இருக்கும்.
விலை குறைவாக வைக்க, கம்யூணிசத்தை எதிர்க்க சர்வாதிகாரிகள் தேவைபபட்டனர். இப்போது அரபு தேசங்களை கைக்குள் வைக்க குழப்பங்கள் உதவுகின்றன.
மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட, மக்கள், நாடு, தலைவர்கள் திருந்தினால் தான் உண்டு. முழுமையாக இஸ்லாமியர்களாக இருந்தும் இந்த நிலை. அதனால், மதத்தை தவிர்த்து மற்ற இயல்புகள் இருந்தால் தான் அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுப்பட முடியும். சீனாவை, எடுத்துக்கொண்டால் தனக்கு என்ன சாதகமாக இருக்கிறதோ அதை வைத்தே அமெரிக்காவின் கட்டுப்படுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அதவும் அமெரிக்காவை சில நேரங்களில் கட்டுப்படுத்துகிறது, மற்ற நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
நன்றி.
யூகோஸ்லாவியா சம்பவம். கிளிண்டன் அதிபாராக் இருக்கும் நேரத்தில் வேறு எந்த பெரிய வெளியுறுவு பிரச்சனைகள் இல்லாத நேரத்தில், மனித உரிமைகளை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி பேர் வாங்க சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.
ReplyDeleteஅந்த போர்களில் அமெரிக்கா அதிகமாக காப்பாற்றியது இஸ்லாமியர்களைத்தான். சேர்ப்பியர்கள், ரஸ்ஸியாவின் ஸ்லாவ் இனத்தவர் என்ற நோக்கமும் இருந்து அவர்களை ஒடுக்கவும் அமெரிக்கா முயன்றிருக்கலாம்.
வாங்க சகோ நரேன்,
Deleteதெளிவாக புரிந்து உள்ளீர்கள்.மேலை நாடுகளின் பொருளாதரத்திற்கு ஆதரவான எதுவும் வளர்க்கப் படும்.எதிரான எதுவும் வில்லன் ஆக்கப் பட்டு அழிக்கப் படும். இதுவே உலக் நியதி.காணொளி முழுதும் பாருங்கள்!!!!!
" சிந்திப்பவர்கள்க்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன"
நன்றி
அமெரிக்காவின் தந்திரங்களை தோலுரித்துக் காட்டியமைக்கு நன்றி இப்பவாவது பெருமையடிக்காமல் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டால் சரியே.
ReplyDeleteநன்றி சகோ.
இனியவன்...
வாங்க சகோ இனியவன்,
Deleteஇதே கதை இந்தியாவிலும் தொடர்கிறது. இந்தியாவின் சந்தையும் அவர்களின் பொருளாதார நலனுக்கு வேண்டும்.ஆகவே இதற்கு முரண்படாத ஆட்சி அமையவே முயல்கின்றனர்.
நன்றி
சகோ.சார்வாகன்,
ReplyDeleteநல்ல விளக்கமான பகிர்வு,
அடிமைகள் தங்களை அடிமைகள் என உணராமல் எஜமானர்கள் என நினைக்க வைத்து காரியம் சாதிப்பது ஒருவகை ,அதனை அரபிய நாடுகளில் அமெரிக்கா கச்சிதமாக செய்து வருகிறது.
அரபு தேசங்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற மேலை தேசங்களின் நவீன காலனி நாடுகளே, ஏன் இந்தியாவையும் அப்படியாக்க ஒரு திட்டம் உண்டு, மன்னு மோகன்கலை அதற்கு தான் பயன்படுத்துகிறார்கள்,
சமீபத்ததில் அமெரிக்க ராணுவ செயலாளர், ஹிலாரி போன்றோர் இந்திய ராணுவ தளவாட தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது 75% அனுமதிக்கனும் என பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவும் தேவையற்ற போரில் ஈடுபட வைப்பார்கள், அப்போ தானே ஆயுத வியாபாரம் ஜோரா நடக்கும்.
அரபியர்களுக்கு மதம் என்ற ஒன்றை வைத்தே என்னவேண்டுமானாலும் அமெரிக்கா சாதித்துக்கொள்ளும்.இந்தியாவிலாவது யாராவது வழக்கு போட்டு கேட்க முடியும்,அங்கே மூச் :-))
----------
நரேன்,
//ஏதோ அமெரிக்கா இஸ்ரேலை எல்லா நேரமும் கண்மூடித்தனமாக ஆதரித்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் இஸ்ரேல் ஆதரவாளர்கள், அவர்களின் செல்வாக்கை வைத்து இஸ்ரேல் பக்கம் சாயுமாறு பாத்துக்கொண்டார்கள். அமெரிக்காவில் இப்போது எந்த அரசியல்வாதி இஸ்ரேலுக்கு எதிராக பேசினாலும் அவருக்கு பண் உதவிகள் சுத்தமாக நின்று விடும்.//
எறுமை கண்ணில் சுட்டுட்டிங்க :-))
அமெரிக்க அரசியலே அப்படி தான் நடக்குது.அமெரிக்காவை யார் ஆள்வது என மறைமுகமாக தீர்மானிக்கும் சக்தியே இஸ்ரேல் தான், மேலும் அமெரிக்க கொள்கையை சிஐ.ஏ, ராணுவ செயலாளர் ஆகியோர் தான் தீர்மானிக்கிறாங்க,அவங்க சொல்றதுக்கு மாறக அதிபர் நினைத்தால் அவருக்கு பல பிரச்சினைகள் முளைக்கும் :-))
அமெரிக்க அதிபரே சி.ஐ.ஏவின் கண்காணிப்பின் கீழ் தான், கிளிண்டன்-லெவின்ஸ்கி,கென்னடி-மர்லின் மன்றோ கதை எல்லாம் சி.ஐஏ உதவியுடன் பரப்பப்பட்டது.எனவே அதிபர்களும் அடக்கி வாசிக்கணும். ராணுவ பட்ஜெட், ஆயுததயாரிப்புக்கு கட்டப்பாடு என்றதால் தான் கென்னடிக்கு சங்கு ஊதினார்கள், ஆனால் வெளியில் ஒரு கதை.சர்ர்வ வல்லமை பொருந்திய சி.ஐ.ஏ ஏன் அவ்வழக்கை விசாரித்து உண்மையை சொல்லவில்லை என்பதில் இருக்கு பில்லியன் டாலர் ரகசியம்.
வாங்க சகோ,
Deleteஅமெரிக்க இப்படி சொல்லலாம்,
நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையானவர்கள் ,விள்ம்பரம் கூட நம்மை எதிர்ப்பது போல் ஆதரவாக செய்கிறார்கள். நன்றி!!!.
நல்ல பதிவு.
ReplyDeleteஅமெரிக்கா எந்த நாட்டுடனாவது மிகுந்த நட்புறவு காட்டினால் அவர்கள் அந்த நாட்டை சூறையாட வலை விரிக்கிறார்கள் என்று பொருள்.
அணுசக்தி ஒப்பந்தம்,காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, சில்லரை விற்பனைக்கு நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,இந்தியாவுக்கு ஆயுத சப்ளை என்று எல்லா ரோடுகளும் இந்தியாவை ஓட்டாண்டியாக்கும் முயற்சிகளே..
இவற்றை அமுல் படுத்தினாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தக்க செக்'ஸ் அன்ட் பாலன்சஸ் வைக்கும் அளவிற்கு மன்னுவுக்கு,இளைய காந்திக்கோ மூளை இல்லை.
எனக்குத் தெரிந்து ஆசியாவில் அமெரிக்கர்கள் அடக்கி வாசிப்பது சீனத் தலைமைக்கும், சிங்கப்பூரின் சீனியர் லீயிடம் மட்டுமே.
வாங்க அறிவன்,
Deleteஎந்த ஒரு பிரச்சினையிலும் இரு நிலைகளை மட்டுமே மேலைநாடுகள் வழங்கும்.
அதாவது இந்தியாவின் இயற்கை வளத்தை மேலை நாடுகள் சுரண்டுவதை விமர்சித்தால் நீங்கள் ஒரு பொது உடமைவாதி,தேச துரோஹி ஆகெவே நீங்கள் சொல்வது எல்லாம் தவறு!!!
அரபுலகில் அமெரிககவின் எண்ணெய் திருட்டை ஆதரிக்கும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்தால் மத விரோதி.ஆகெவே நீங்கள் சொல்வது எல்லாம் தவறு!!!!
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை இருக்க்லாம் என்பதை யோசிக்க்வே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்!!!
நன்றி
வவ்வால்
ReplyDeleteஏன் இந்தியாவையும் அப்படியாக்க ஒரு திட்டம் உண்டு, மன்னு மோகன்கலை அதற்கு தான் பயன்படுத்துகிறார்கள்,.////
////////////////
ஏன் இனிமேல் தான் ஆக்கனுமா என்ன அது எப்பவோ ஆயாச்சி .. இதை பற்றி சென்ற ஆண்டே நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் .
எனக்கு என்னமோ நான் நினைப்பது போல்தான் நடந்து கொண்டிருக்கிறது ..
http://anjaasingam.blogspot.com/2011/09/blog-post.html
அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க நலம் சார்ந்த அரசுகளை உலகம் எங்கும் அமைப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறன் . அதை அவர்கள் நேரடியாக ஆளாமல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் மட்டும் வைத்துகொள்ள விரும்புவார்கள் . இதுவும் ஒரு வகையில் காலனி ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சி .
மத அடிப்படை வாதிகளை அவர்கள் ஆதரிப்பது நமக்கு முரணாக தெரிந்தாலும் . அது தான் அவர்களுக்கு கையாள சுலபமானதாக இருக்கும் . அவர்களுக்கு எதிரி என்று யாரையாவது காட்டி விட்டால் போதும் .அவர்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அடித்து கொண்டிருப்பார்கள் . குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் .
பாக்கிஸ்தான் மட்டும் தான் இஸ்லாமிய நாடுகளில் அணு ஆயுதம் உள்ள நாடு . ஈரான் அதற்க்கு முயற்சிக்கும் போது இத்தனை முட்டுக்கட்டை போடும் அமேரிக்கா . அப்போது பாக்கிஸ்தானுக்கு உதவியதுக்கு காரணம் . இந்திராவின் இந்தியாவை கட்டுபடுத்த அதற்க்கு தேவையாக இருந்தது . இந்தியா பணிந்த பின் இப்போது பாக்கிஸ்தான் கைவிட பட்டுவிட்டது .
வாங்க சகோ அஞ்சா சிங்கம்,
Deleteஅருமையான புரிதல்
இதை வெளியே சொன்னால் விமர்சிக்கப் படுகிறோம் என்ன செய்வது?
நன்றி
அஞ்சா ஸிங்கம்,
ReplyDeleteஅதே ...அதே , நான் நவீன காலனி என சொன்னேன் ,நீங்க பரிணாம வளர்ச்சின்னு சொல்லிட்டிங்க.நான் சொல்றதும் சரின்னு நினைக்கிற ஒரு நபரா இருக்கீரே :-))
சுதந்திரம் பெற்றோம் அடகு வைத்துவிட்டோம்:-))
ஆமாம் இந்தியாவையும் ஆக்கிட்டாங்க, அது பொருளாதார ரீதியாக ,இன்னும் ராணுவ ரீதியாக ஆக்கவில்லை என்பது என்னோட அவதானிப்பு, இப்போது அதுக்கும் ஒரு கல்லு எடுத்து வச்சிருக்காங்க. ராணுவ ஆயுத தயாரிப்பில் நேரடி அன்னிய முதலீடு என ,அமெரிக்காவில் விற்காத, மேலும் அவர்கள் பொருளாதாரம் பெருக்க என ஆயுதம் விற்று சண்டையை ஏற்படுத்துவாங்க.
இது நாள் வரைக்கும் நம்மளுக்கு ராணுவ ரீதியாக உதவ மாட்டேன் என சொன்னதால் நாம் முழுக்க ரஷியாவை சார்ந்து இருந்தோம். இப்போ மட்டும் ஏன் அமெரிக்காவுக்கு கரிசனம் ,எல்லாம் அமெரிக்க பொருளாதார சரிவு தான் ,அவங்க நாட்டில வேலைவாய்ப்பை உருவாக்க எதை வேண்டுமானாலும் செய்ய தயாராயிட்டாங்க.
அமெரிக்கா உலக அளவில் செய்வது ஆதிகால தந்திரமான "டிவைட் &ரூல்" திட்டம் தான்.
பின் லேடன் வைத்திருந்தது எல்லாம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களே. பின்னர் அமெரிக்காவிற்கு எதிராக போனது எல்லாம் வரலாறு. எதிராக போனப்பின்னும் பின் லேடனுக்கு அமெரிக்க ஆயுதம் சப்ளை ஆச்சு :-))
உங்க பதிவைப்படிக்கிறேன், நான் பெரும்பாலும் தனியாக பதிவுப்போடாமல் படிக்கும் பதிவில் கருத்தினை சொல்லிவிடுவேன். ஆனால் இன்றைய இந்தியா டாலருக்காக அடகு வைக்கப்பட்ட ஒரு பிராப்பர்ட்டி தான் :-))
இதை நான் சொன்னால் ,பொருளாதாரம் தெரியலைனு சொல்லுறாங்க :-))
உலகமயமாக்கல் என்ற பெயரில் இந்தியாவின் பொருளாதாரம் சுரண்டப்படுவது பல்ருக்கு தெரியாது ,கொஞ்சம் அறிந்தாலும் பலர் என்க்கேன் என்ற சிந்தனையில் கண்டு கொள்வது இல்லை.
Deleteநமக்கு வரும் சிந்த்னை,இதே போல்தான் வெள்ளையன் ஆண்டபோதும் பெரும்பானமை மக்கள் இருந்து இருப்பார்கள்!!!!!!
சுதந்திரம் என்று சொல்லி ஏமாற்றி அவனாக குடுத்துட்டு ஓட்ட்ட்டான்.இப்ப அவன் ஆட்களை வைத்து சுரண்டுகிறான்
நன்றி
நல்ல பதிவு சகோ.
ReplyDelete//naren:-
இப்படி பகடைகாய்களாக இருப்பதை அறியாமல், பெருமை வேறு//
:-)
//யூகோஸ்லாவியா சம்பவம். கிளிண்டன் அதிபாராக் இருக்கும் நேரத்தில் வேறு எந்த பெரிய வெளியுறுவு பிரச்சனைகள் இல்லாத நேரத்தில், மனித உரிமைகளை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி பேர் வாங்க சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.அந்த போர்களில் அமெரிக்கா அதிகமாக காப்பாற்றியது இஸ்லாமியர்களைத்தான்//
எனக்கு இந்த சேபியர்களுடன் பல மதங்கள் பழகும் சந்தர்பம் இருந்தது. அவர்கள் கம்யுனிஸ்சியத்தை விரும்பவில்லை. அமெரிக்காவை தான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விடயத்திலே இஸ்லாமியர்களுக்கு சார்பாக அமெரிக்கா நடந்ததை சொல்லி ரொம்பவும் மன வேதனபட்டார்கள். அமெரிக்கா தனது சுயநலத்திற்காக இப்படி அநியாயமாகவும் நடக்கிறது.
//துருக்கி ஆட்டோமான் பேரரசின் தலைமையில் இருந்து உலகப் போர்களில் தோற்று இத்து போனது//
இந்த துருக்கிய ஆண்கள் வெளிநாடுகளில் 100 வீதமும் காபிர் ஆண்கள் மாதிரியே நடை உடை பாவனையில் காட்சி தருகிறார்கள்.அரபு இஸ்லாமிய வாடை மருந்துக்கும் கிடையாது. இளம் பெண்கள் பர்தா அணிவது மிக குறைவு. வயதான பெண்களே பர்தா அணிகிறார்கள். எதிர்காலத்தில் பர்தா அணியாத வயதான பெண்களையும் காணபோவது உறுதி.
படங்கள பாருங்கள்
http://www.rte.ie/sport/olympics/athletics/2012/0810/333083-athletics-alptekin-leads-turkish-one-two-in-1500m/
துருக்கிக்கு தங்க மெடலும் வெள்ளி பதக்கமும் பெற்று கொடுத்த பர்தா போடாத துருக்கிய பெண்கள். மூன்றாவதாக வந்ததும் இஸ்லாமிய பஹ்ரைன் நாட்டை சேர்ந்த பர்தா அணியாத பெண்.தமிழில் தான் பர்தா சாதனை என்று எழுதி முட்டாளாக்க பார்க்கிறார்கள்.
சகோ குயிக்ஃபாக்ஸ்,
Deleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கலக்குங்க
தெளிவாக இருக்கீங்க
நன்றி
அரேபியர்களை தன் பகடைக்காயாக அமெரிக்கா பயன்படுத்தலை தெளிவாக விளக்கியப் பதிவிற்கும் நல்ல பதில்களும் மேலும் தெளிவாக்கின.
ReplyDeleteஅனைவரும் வந்து கருத்து சொல்லவும்.
இயேசு- கடவுளா- தெய்வீகமானவரா?
http://pagadhu.blogspot.in/2012/08/blog-post_12.html
வாங்க சகோ தேவப் பிரியா,
Deleteகருத்துக்கு நன்றி,அவசியம் வருகிறேன்.நாம் மதங்களை விமர்சிப்பதில் வேறுபாடு கட்டுவது இல்லை ஹா ஹா ஹா
அமெரிக்க நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசுதால் சவுதியை அது கடிக்காது என ஒருவர் வந்து சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்த நாய்தான் சவுதிக்கு எஜமானன் என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்தார்களா என தெரியல.
ReplyDeleteஅமெரிக்காவிற்கு ஒத்துழைத்து பொருளாதார அளவில் பெரிய அளவில் வளர்ந்த நாடுகளான கொரியா, சீனா,ஜப்பானை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து அமெரிக்க எதிர்ப்பு பாலிடிக்ஸ பண்ணவெல்லாம் இந்தியாவிற்கு திரணி இல்லை. எதுவும் ஓசியில் கிடைக்காது என்பதால் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் போது நமது நாட்டின் நலனை கவனத்தில் கொண்டால் போதும். ஆனால் இந்திய மக்கள் முட்டாள்களாகவும் அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாக இருப்பதால்தான் அமெரிக்காவினால் இந்தியாவை சுரண்ட இயலுகிறது. நம்ம ஜீனில் ஊறிவிட்டதா என தெரியவில்லை, காசுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதும் ஒற்றுமையின்மையும் நமக்கு பெரிய ஆப்பாக சொருகுகின்றன. சீனர்களிடம் இதெல்லாம் வேலைக்காவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடம் ஊழல் இருந்தாலும் அவர்களின் ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் நாட்டுபற்றும் அவர்களை முன்னெடுத்து செல்கின்றன.நமக்கு இன்னும் அடிமை மனப்பான்மையே போகவில்லை(அரபிகளுக்கும் இது உண்டாம்), வெள்ளை தோலைப் பார்த்தால் கவிழ்ந்து விடுகிறோம்.
வாங்க சகோ நந்தவனத்தான்,
Deleteஅமெரிக்கா,மேலைநாடுகள் விடயத்தில் இந்தியனும்,அரபியும் ஒன்றே
என்ன அரபி மதம் கலந்து போதையான விளம்பரம் செய்கிறான் அவ்வள்வுதான்.
நன்றி
இது போன்ற பதிவுக்கு ஆற அமர பின்னூட்டம் சொல்ல வேண்டும்.அப்படியும் இப்படியுமா சுத்தி கடைசியில் டெசோ மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.நேரலை கண்டு விட்டு மறுபடியும் வர முயற்சி செய்கிறேன்.நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோ இராஜநட,
Deleteஈழ சகோக்களுக்கு ஏதோ ஒருவகையில் நல்ல தீர்வு வந்தால் நல்லதுதான்.இந்த டெசோ மாநாட்டுக்கு கிடைக்கும் விள்ம்பரமும்,எதிர்பார்ப்பும் என்னை ஆச்சர்யப் படுத்துகிறது.
எனினும் மஞ்சள் துண்டு மீது இன்னும் கோபம் தீரவில்லை.எனக்கு நம்பிக்கை வரவே வராது!!!!!!!
நன்றி
ராஜ் ,
ReplyDeleteபடம் ஓடி முடிஞ்சதும் வாங்க , அப்புறம் யாருமே இல்லாத டீ கடையில டீ ஆத்துங்க :-))
அடடா...ஏன் மண்டையைப் போட்டு இந்த கொழப்பு கொழப்பிக்கிறீங்க...நான் முன்பே சொன்னது போல் 20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் பெரும்பான்மை முஸ்லிம்களாக ஆனவுடன் பிரச்னை லேது? :-)
ReplyDeleteஅதுவரை நம் வீட்டை பார்த்துக் கொள்ள பாதுகாக்க வாட்ச்மேன், மற்றும் சில நாய்களை வளர்ப்பதில்லையா? அதற்கு நாம் செலவழிப்பதில்லையா? அது பொல் நினைத்தக் கொள்ள வேண்டியதுதான். என்ன நான் சொல்றது சரிதானே?..............:-(
வாங்க சகோ சுவனன்,
ReplyDelete//அடடா...ஏன் மண்டையைப் போட்டு இந்த கொழப்பு கொழப்பிக்கிறீங்க...நான் முன்பே சொன்னது போல் 20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் பெரும்பான்மை முஸ்லிம்களாக ஆனவுடன் பிரச்னை லேது? :)//
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பு!!!!!!!
அமெரிக்க அத்தை இஸ்லாமிய சித்தப்பு ஆனால் சோமாலியா வங்க தேசம் போல் அமெரிக்கர்கள் பல நாடுகளுக்கு பிழைப்பு காஃபிர்களின் நாடுகளுக்கு தேடி வருவார்கள் ஹா ஹா ஹா
எனினும் அமெரிக்கா இஸ்லாமிய நாடு ஆவதுதான் அவர்கள் செய்த தவறுகளுக்கு சரியான தண்டனையாக இருக்க முடியும்.!!!!!
இன்ஷா அல்லாஹ்!!!!!
*******
//அதுவரை நம் வீட்டை பார்த்துக் கொள்ள பாதுகாக்க வாட்ச்மேன், மற்றும் சில நாய்களை வளர்ப்பதில்லையா? அதற்கு நாம் செலவழிப்பதில்லையா? அது பொல் நினைத்தக் கொள்ள வேண்டியதுதான். என்ன நான் சொல்றது சரிதானே?..............:(//
ஆயினும் அமெரிக்கா ஆதரவு அரபிகளின் புகழ் பாட பல
சமயங்களில் நீங்கள் மார்க்க கோட்பாடுகளையும் முகமது(சல்) அவர்களின் போதனைகளை மறப்பது கண்டு காஃபிரான என்க்கே நெஞ்சு பொறுக்கவில்லை!!.
நாய் வளர்ப்பது பற்றி உலகத்தின் அருட்கொடை இறுதி தூதர் முகமது நபி(சல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
2237. அபூ மஸ்வூத் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!"
Volume :2 Book :34
2322. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
"கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
"கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :41
3227. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது) 'உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை" என்றார்.
Volume :3 Book :59
3314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (பிராணிகள்) எத்தகையவையெனில் அவற்றை 'ஹரம்' எனும் பனித எல்லைக்குள் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை. எலி, தேள், பருந்து, காக்கை, வெறிநாய் ஆகியன தாம் அவை.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
********
இசை முரசு நாகூர் ஹனிஃபா பாடுகிறார்
" மனம் போன போக்கிலே வாழலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா?"
நன்றி
//எனினும் அமெரிக்கா இஸ்லாமிய நாடு ஆவதுதான் அவர்கள் செய்த தவறுகளுக்கு சரியான தண்டனையாக இருக்க முடியும்////
ReplyDeletecouldn't control my laugh :)
சகோ இராஜா வாங்க,
Deleteநம் நகைக்கிறோம் ஆனால் அவர்கள் புல்லரிக்கிறார்களே!!.
இயற்கை வளம் இல்லாத நாடுகளில் மதம் சார் ஆட்சி நடத்த முடியாது.நம்மிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தானும் பங்களா தேசுமே நிரூபணம்.
ஏன் பல (இயற்கை வளமற்ற ) மத ஆட்சி நாடுகளில் சிக்கல்கள்?.
இயற்கை வளமுள்ள நாடுகளில் மேலை நாடுகள் தங்கள் இராணுவம் மூலம் சுரண்டலுக்காக செயற்கை அமைதி ஏற்படுத்துகின்றன என்பதையே வலியுறுத்துகிறேன்.
இபோது அமெரிக்கா,மேலை நாடுகள் மட்டும் அங்கு இல்லையென்றால் ஷியா சுன்னி போர் பெரும் அளவில் வெடித்து விடும்.
நன்றி
//"கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ReplyDeleteVolume :2 Book :41//
இதை நன்றாக கவனிக்கவும்.
சுவனப் பிரியன் சொன்னது
ReplyDelete// நம் வீட்டை பார்த்துக் கொள்ள பாதுகாக்க வாட்ச்மேன், மற்றும் சில நாய்களை வளர்ப்பதில்லையா?//
நபி(சல்) அவர்கள் சொன்னது
//கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக //
****************
கால்நடைகளை வீட்டில் வைப்பார்களா அல்லது பண்ணையில் வைப்பார்களா?.
சரி அரபுகள் சுன்னி அரபுகள் கால்நடைகளா??????
இல்லை
ஷியாக்களை வேட்டையாட அமெரிக்க நாய்களை அரபு சுன்னி முஸ்லிம்கள் வைத்து உள்ளார்களா?????????
Yes/No
நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீலும் வானவர்களுமே பத்ரு போர்களில் கஃபிர்களை வெட்ட உதவி செய்தனர்.நபி (சல்)அவர்கள் என்ன அமெரிக்காவையா கூப்பிட்டார்??.ஜிப்ரீல்(அலை) நாய் இருக்கும் இடத்தில் வருவது இல்லை என்பதால்தான் அரபுகள் போர்களில் தோற்கின்றார்!!!!
அரபுகள் யூதர்களிடம் தர்ம அடி வாங்குகிறார்கள்!!!!!
ஆகவே அமெரிக்கவை முதலில் சவுதியில் இருந்து வெளியேற்ற ஒரு பதிவு இடுங்கள்.போராட்டம் வெடிக்கட்டும். யார் சவுதியை விட்டு வெளியேற்றப் படுவார் என பார்க்கலாம்!!!
http://www.globalsecurity.org/military/facility/saudi-arabia.htm
நன்றி
சகோ.சார்வாகன்,
ReplyDeleteஒரே நகைச்சுவை தான் போங்க, சு.பிக்கு இதெல்லாம் புரிய இன்னும் 35-45 ஆண்டு ஆகும்,ஏன் எனில் அப்போது அரேபியாவில் எண்ணை காலியாகி இருக்கும் :-))
வவ்வால்!படத்தில் புள்ளி ராஜாக்களை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மறுபடியும் பதிவை மேஞ்சிட்டு விட்ட பின்னூட்டங்களை பார்த்தா நீங்க:)
ReplyDeleteஆளில்லாத கடைல டீ குடிக்கிறது கொஞ்சம் வசதி.டீக்கடை பேப்பரை மொத்தமா மேஞ்சிடலாம்.
சகோ.சார்வாகன்!அமெரிக்கா மொத்தமா எல்லோருக்கும்தான் புள்ளி வச்சிருக்கான்.இதுல மத்திய கிழக்குன்னு ஏன் தனியா தலைப்பு.
ReplyDeleteஇன்றைக்கு டெசோ மாநாடு நடக்குமா நடக்காதான்னு நாம விரல் நகத்தை கடிச்சிகிட்டிருந்தா அமெரிக்காகாரன் 10 வருசம் 15 வருசம் கழிச்சு என்ன செய்யலாம்ன்னு திட்டம் போட்டுகிட்டிருக்கான்.இதுல நாலு வருசத்துக்கு ஒரு முறை தல மாறினாலும் நிலமை அதுதான்.ரீகன் காலத்திலேயிருந்து ஒபாமா வரை பார்த்தால் எங்கே குழப்பலாம்ங்கிற ஆமை வேக ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியும்.
நீங்க சொல்கிற மாதிரி ஈரானை அமெரிக்கா தொடுமாங்கிறதே சந்தேகம்தான்.அப்படி நிகழ்ந்து விட்டால் நீங்களும்,நோம் சாம்ஸ்கியும் தீர்க்கதரிசிகள்.ஆசிய அணு ஆயுதப் போட்டிக்கும்,ராணுவ தளவாட விற்பனைக்கும் பாகிஸ்தான் என்ற சின்ன புள்ளி எப்படி முக்கியமாக இருந்ததோ அதே மாதிரிதான் ஈரான் கூட.
மொத்த ஷேக்குகளும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க சதாம் மட்டும் துள்ளியதும் கொஞ்சம் கதை திருப்பமே.
உலக பெட்ரோலிய பொருளாதாரத்தை அமெரிக்கா சார்ந்த மத்திய கிழக்கு காலனி ஷேக்குகளே தீர்மானிக்கிறார்கள் என்பதால் வளைகுடா பெட்ரோலியம் தவிர்த்த அரேபிய வசந்தம் தொடரும்.
வணக்கம் சகோ,
Deleteதீர்க்கதரிசி என்றால் மதம் ஆரம்பிக்க போகிறோம் என நினைத்துக் கொள்வார்கள்.நம் ஊரில் ஏதேனும் சொல்லி பலித்தால் குறி சொல்லி சாமியார் அக்கி விடுவார்கள். நான் ஆக விருமபவில்லை.
வரலாறு எபோதும் சில மாறங்களுடன் திரும்பும்.பிரபஞ்சத்தில் பல விடயங்கள் சுழற்சி முறையிலானது என்பதில் அடிப்படையிலேயே கணிக்கிறோம்.
அவ்வளவுதான் எனினும் எதிர்பாரா சில விபத்துகளும் வரலாற்றின் போக்கை மாற்றிய சான்றுகளும் உண்டு.
சிரியா அலாவிகள்,சுன்னிகள்,குர்த்தியர்கள்க்கு பங்கிடப்படும்,லிபியா போல் முற்றும் முழுதான ஆட்சி மாற்றம் ஆகாது என்னும் கணிப்பு நடக்குமா என பார்ப்போம்.
சிரியாவில் குழப்பம் நெடுங்கால்த்துக்கு நீடிப்பதையே மேலை நாடுகள் விரும்புகின்றன என்ப்தையும் பதிவு செய்கிறென்.
நன்றி
சகோ.சார்வாகன்!டெசோ மாநாட்டின் கலைஞர் புகழ் உலகத்தமிழ் மாநாடு மாதிரியே ஒலித்தது.தனது சுய சொறிதலுக்கும் அப்பால் கருணாநிதியின் பண,மன வலிமையை டெசொ நகர்வுகள் படம் பிடித்துக்காட்டுகிறது.
ReplyDeleteஒரே நாளில் இந்தியாவின் வெளியுறவுத்துறை ஈழம் சொல்லை உபயோகிப்படுத்தக்கூடாது என்றும் மறுநாள் உபயோகிப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு பின் வெளியுறவுத்துறை தடுமாறுகிறதா அல்லது அழுத்தங்கள் மீதான மறு அறிக்கையா என்று தெரியவில்லை.
டெசோ தி.மு.கவின் அரசியல் கலந்த ஆட்சி பீடத்தில் இல்லாத சுயநலமாக இருந்த போதும் மத்திய அரசின் நிலைப்பாட்டோடு ஜெயலலிதாவின் அரசியல் காய்நகர்த்தல்கள் தி.மு.கவுக்கு எதிரானது என்பதை விட கருத்துரிமைக்கு எதிரான ஒன்று.
ஆட்சி காலத்து தும்பை விட்டு விட்டு எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலையில் கலைஞர் வாலைப்பிடிக்கிறார் என்ற போதும்,திருடன் கையிலேயே சாவியைக் குடுத்த மாதிரி மீண்டும் ஈழக்குரலை எழுப்ப வேண்டியிருக்கிறதே என்ற தர்மசங்கடம் இருந்த போதும் மேற்கொண்டு எப்படி நகர்வது என்பதில் பிரிந்து போன நிலையாக வை.கோ,நெடுமாறன்,ராம்தாஸ்,சீமான் என வலுவான ஈழ கூட்டணி இல்லை.இதோடு ஜெயலலிதாவின் பச்சோந்திதனம் வேறு பயமுறுத்துகிறது.
மத்திய அரசின் இலங்கை வெளிநாட்டுக்கொள்கைக்கும்,இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கும் செஸ் விளையாட்டில் ஒரு வீரனையாவது முன் நகர்த்தும் லாவகம் மாதிரியானதுதான் டெசோவின் தற்போதைய நிலை.மத்திய ஆட்சியின் அங்கத்தினர்களாக டெசோவுக்கான குரலை தி.மு.க பாராளுமன்றம் வரை எடுத்துச் செல்கிறதா என் பார்க்கலாம்.
டெசோ மீதும்,மாநாடு மீதும் மகத்தான நம்பிக்கையெல்லாம் இல்லாவிட்டாலும்,கலைஞருக்குப் பின் டெசோவும் மரணித்து விடும் என்பது தெரிந்தும் ஈழத்தின் ஈனஸ்வரத்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்ற ஒலியை எழுப்புவதற்கு பயன்படுகிறதே என்ற முறையில் இப்பொழுது மட்டுமல்ல இரண்டாம் டெசோவை கலைஞர் அறிவித்த நாள் தொட்டு தி.மு.க சார்பு பதிவாளர்களின் பதிவுகளில் பதிவு செய்து வந்துள்ளேன்.இதற்கும் மேல் கலைஞர் மீதான விமர்சனமும் மாறவில்லை.
வானக்க் சகோ
Deleteஅருமையாக விளக்கினீர்கள். கலைஞர்,கடந்தகால் நிகழ்வுகள் தவிர்த்து பார்த்தால் மாநாட்டுத் தீர்மானங்கள் சரியானவை என்பது என் கருத்து.எல்லாம் பழைய கள் .புதிய மொந்தைதான்.
உடனே இத்தீர்மானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
"உடனே இந்தியாவில் வாழும் அனைத்து ஈழ தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்!!!"
எனினும் காகிதத்தில் இனிப்பு என்று எழுதினால் இனிக்குமா.நடப்பதுதான் நிஜம்.தமிழ்நாட்டில் நாம் மொக்கை போட்டு ஏதோ சுமாராக வாழவில்லையா அதே அளவு வாழ்வு என் ஈழ சகோதரனுக்கும் ஏதோ ஒரு வழியில் கிடைக்க வேண்டும்.அவ்வள்வுதான்.
மற்றபடி ஈழம் அமைந்தால் கூட துவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் ,சமூக, பொருளாதர சிக்கல் உடையதாகவே இருக்கும்.இதுவே எதார்த்தம்!!!!!!!!11
பார்ப்போம் நல்லதே நடக்கட்டும்!!!!!!!!
நன்றி
வவ்வால்!
ReplyDelete//ஒரே நகைச்சுவை தான் போங்க, சு.பிக்கு இதெல்லாம் புரிய இன்னும் 35-45 ஆண்டு ஆகும்,ஏன் எனில் அப்போது அரேபியாவில் எண்ணை காலியாகி இருக்கும் :-))//
என்னைக் கேட்டால் இந்த எண்ணெய் வளம் தீர்ந்தால் நல்லது என்பேன். பணம் அதிகமாக குவிவதால்தான் சில அநாச்சாரங்கள் நம்மை மீறி குடி கொண்டு விடுகிறது. முகமது நபி காலத்திய இஸ்லாமிய எழுச்சி ஏற்பட அரபுகளிடம் பொருளாதாரம் குறைய வேண்டும். அது நடந்தால் நல்லதே!
அடுத்து நீங்களும் சார்வாகனும் சவுதியை பற்றி அநியாயத்துக்கு கவலை படுவதை விடுத்து ஸ்ரீரங்கம் கோவிலும் சிதம்பரம் கோவிலும் அர்ச்சகர்களாக ஒரு தலித்தை நியமிக்க முயற்ச்சிப்பீர்களா? இந்த மண்ணின் மைந்தன் சூத்திரன் என்று ஓரம் கட்டப்பட்டு சேரிகளில் புரண்டு கொண்டிருக்கிறானே அதைப் பற்றி ஏதாவது பதிவுகள் எழுதி புரட்சிக்கு வித்திடக் கூடாதா? அப்படி ஏதும் நடந்து விட்டால் என் ஓட்டு உங்கள் இருவருக்குதான். :-)
திரு.சு.பி,
Deleteவாங்க,
//என்னைக் கேட்டால் இந்த எண்ணெய் வளம் தீர்ந்தால் நல்லது என்பேன். பணம் அதிகமாக குவிவதால்தான் சில அநாச்சாரங்கள் நம்மை மீறி குடி கொண்டு விடுகிறது. //
தெரிந்தோ ,தெரியாமலோ ஒரு உண்மையை சொல்லி இருக்கீங்க,எண்ணைப்பணத்தால் அரபிய கலாச்சாரம் சீர் அழியுதுன்னு உண்மையை சொல்லிட்டிங்க, அதே போல எண்ணைக்காக அமெரிக்காவிற்கு அரபிய நாடுகள் விலைபோய்விட்டன, ஏன் எனில் அமெரிக்கா, யூ.கே தான் மொத்தமா எண்ணையை கட்டுப்படுத்துக்கின்றன, எனவே அவர்களை விட்டால் மொத்தமாக எண்ணையை வாங்க ஆள் இல்லை என்பதால் ,அவர்களுக்கு அடிப்பணிந்து போகின்றன, அவர்களும் நமக்கு தேவை எண்ணை வர்ர வரைக்கும் லாபம்னு அரசியல் செய்கிறார்கள்.
இடையில் அரபிய பொதுஜனம் பகடைக்காய் :-))
சகோ.சார்வாகன் சொல்லி இருப்பதை பாருங்கள், நாங்க என்ன அரசியலில் ஓட்டுக்கேட்க்கிறோமா, இல்லை தமிழ்மணம் மகுடம் கேட்கிறோமா, அவருக்காவது மகுடம் கிகுடம் கிடைக்கும் எனக்கு அதுவும் கிடைக்காது நான் அத்திரட்டியிலே இல்லை :-))
ஜாதிய அடக்குமுறைகள் இருக்கின்றன , அவற்றையும் எதிர்க்கிறோம் ஆதரிக்கவில்லையே, நீங்க இந்த கேள்விக்கேட்டிங்க ஆனால் ஒரு பதிவில் நான் இந்துத்வாவை எதிர்த்த போது சிட்டிசன் என்றவர் இந்துத்வாவை விட நாத்திகள் மோசம் அவர்களை நாம் எல்லாம் புறக்கணிக்கணும் என்ன இந்துத்வாவுடன் கூட்டணிப்போட்டாரே எப்படி :-))
இஸ்லாமியர் மற்ற கடவுள் இல்லை என்கிறீர்கள் ,இந்துத்வாக்கள் இஸ்லாமியர்கள் கடவுள் "அல்லா" மற்றும் ஏனைய கடவுள்கள் இல்லை என்கிறார்கள், கிருத்துவர்கள் இந்த இரண்டு கடவுளும் இல்லை என்கிறார்கள், எனவே இம்மூவரின் இல்லை என்ற தீர்ப்பையும் தொகுத்தால் கடவுளே இல்லை என்றாகி விடுது,அப்போ நாங்க கடவுள் இல்லைனா ஏன் சார் நாத்திகம்னு சொல்லி மூன்று மதவாதிகளும் எங்களை அடிக்க வாரீங்க :-))
சு.பி ,வர்ணாசிரமத்தினை ஆதரிப்போரிடம் நீங்கள் சொன்னதை சொல்லவும், நான் அனைத்து மத மூட நம்பிக்கை ,அடிமைத்தனத்தினை எதிர்க்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்.
கடவுளே இல்லை என்ற பிறகு அங்கு சூத்திரனை அர்ச்சகராக வை என சொல்வது அரசியல் மட்டுமே அது நாத்திகம் ஆகாது, ஆனால் கோயில் என ஒன்று இருக்குமானால் அதனை அனைவருக்கும் பொதுவில் வை என சொல்லலாம், எனவே அப்படி நினைத்து ஒரு பதிவு போடுகிறேன், உடனே சமுதாயம் மாறினால் சந்தோஷமே :-))
சகோ சுவனன்,
Delete//முகமது நபி காலத்திய இஸ்லாமிய எழுச்சி ஏற்பட அரபுகளிடம் பொருளாதாரம் குறைய வேண்டும். அது நடந்தால் நல்லதே!//
ஹ ஹா ஹா
"முகமது நபி கால்த்திய இஸ்லாமிய எழுச்சி"இது என்ன என்று விளக்கினால் நலம்.
என்னுடைய கருத்தின்படி முகமது(சல்) அவர்களின் காலத்தில் பொருளுக்காக பத்ரு கொள்ளைப் போர் நடந்தது. அதுவே தொடர்ந்தது.ஒவ்வொரு கொள்ளையிலும் முகமது(சல்) அவர்களுக்கு 20% கொள்ளைப் பொருள்கள் வழங்கப் பட்டது. போரில் கைப்பற்றப் பற்ற அடிமைப் பெண்கள்(வலக்கரம் சொந்தமாக்கிய பெண்கள்) பாலியல் அடிமைகள் ஆக்கப் பட்டனர்.
இது சரியா? உடனே அக்காலத்தில் அப்படித்தான் எல்லோரும் இருந்தனர் என்பீர்கள்,"முகமது நபி கால்த்திய இஸ்லாமிய எழுச்சி" ஏன் இபோது வேண்டும் என் சொல்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி
அமெரிக்காவின் ஆதரவில் தன் ஆட்சியை தக்க வைக்கும் இபின் சவுத் வம்சம் ஆட்சி மறினால் சவுதியில் இப்போதைய நிலையை விட மோசம் ஆகும் என்பதிலும் ஐயமில்லை.சவுதி அமெரிக்கா "அரபி பிடித்த புலிவால்:
ஹி ஹி
நன்றி
சகோ சுவனன்,
ReplyDelete//அடுத்து நீங்களும் சார்வாகனும் சவுதியை பற்றி அநியாயத்துக்கு கவலை படுவதை விடுத்து ஸ்ரீரங்கம் கோவிலும் சிதம்பரம் கோவிலும் அர்ச்சகர்களாக ஒரு தலித்தை நியமிக்க முயற்ச்சிப்பீர்களா? இந்த மண்ணின் மைந்தன் சூத்திரன் என்று ஓரம் கட்டப்பட்டு சேரிகளில் புரண்டு கொண்டிருக்கிறானே அதைப் பற்றி ஏதாவது பதிவுகள் எழுதி புரட்சிக்கு வித்திடக் கூடாதா? அப்படி ஏதும் நடந்து விட்டால் என் ஓட்டு உங்கள் இருவருக்குதான். :-)//
நான் என்ன தேர்தலிலா நிற்கிறேன் அல்லது தமிழ்மண்த்தில் என் பதிவுக்கு வாக்கு கேட்கிறேனா????
இந்தியா,தமிழ்நட்டில் சாதி பிரச்சினை இருப்பதை ஒத்துக் கொள்கிறோம்.இதனை தவிர்க்க முடியுமா என்றும் யோசிக்கலாம் என்றால் ஒவ்வொரு சாதியும், உயர் சாதி ஆகவே விரும்புகின்றார்.இந்த மனநிலை மாறும் என நினைக்கிறோம்.
பரிணாம் அறிவியல் அடிப்படையில் அடிப்படையில் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் என்கிறோம். இனக் கலப்பு திருமணம் செய்யுங்கள் என வலியுறுத்துகிறோம்.
சாதி உருவானது பற்றீய அம்பேத்காரின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் எண்ணம் உண்டு.சிக்கிரம் அதைவும் செய்வோம்.பரிணாம் அடிப்படையில் இன பாகுபாடு உண்டா என்பது குறித்த கட்டுரையும் எழுதுகிறோம்!!
தங்களின் சாதி ஒழிப்பு மீதான் அக்கறைக்கு நன்றி
Kurds take control in Syria's northeast
ReplyDeleteAs Assad's stretched security forces leave parts of the northeast, Kurdish committees slowly assert authority.
http://www.aljazeera.com/video/middleeast/2012/08/2012812155148623460.html
புனித சவூதி அரேபியா பற்றி இப்போ இஸ்லாமியர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க போல தெரியுது.
ReplyDeleteசகோ தொடர்க பணி
சகோ குயிக் ஃபாக்ஸ்
ReplyDeleteநம் மதம் சார் அரசியல் கூடாது என்கிறோம். மதம் என்ற போர்வையில் அரசியல் பிரச்சாரத்தை அம்ப்லப் படுத்துகிறோம்.
தனிப்பட்ட வகையில் ஆன்மிக்கமாக் கொள்வதில் நம்க்கு ஆட்சேபனை.இல்லை.
தமிழ்மணத்தில் என் மதம் மட்டுமே சரி,நிரூபணம் உண்டு என்ற கருத்து திணிப்பை எதிர்த்து போராடுகிறோம்!!!
சிரியாவில் மதம் ஒற்றூமை ஏற்படுத்த வில்லை.போர் மட்ட்டுமே நிஜம். சிரியா அலாவிகள்,சுன்னிகள்,குர்தியர்கள்க்கு இடையே பங்கிடப்படும்.குர்துகள்க்கு நாடு வந்தால் துருக்கி,சிரியா,இராக்,இஅன் ஆகிய பல் நாடுகளின் பகுதிகள் இணைக்கப்பட வேண்டும்.குர்திஸ்தான் வரை படம் பாருங்கள். அப்போது அனைத்துப் பக்கமும் போர் மட்டுமே நிகழும்.அனைவரும் இஸ்ரேளை மறந்து விடுவர்.இதுதான் அமெரிகாவின் சிரியா தந்திரம்!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி
அட
ReplyDeleteஇதப்பத்தித்தான் நானும் ஒரு பதிவு எழுதியிருக்கேன். ஆனா ஈமாந்தாரி பார்வையிலிருந்து
யூதர்களை பற்றி 1400 வருசத்துக்கு முன்னாடி நம்ம காககககே சாமியாடியது (இது அரபு அல்லாசாமி.. உங்க தமிழ் கருப்பண்ணசாமி அல்ல) பத்தி இங்கண ஒரு பதிவு எழுதியிருக்கேன்.
காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்வுக்கே அல்வா கொடுத்த யூதர்கள்.
படிச்சி பார்த்து உங்க கருத்தையும் சொல்லுவீஹன்னு நெனக்கிறேன்
ஸலாம் சகோ இ.சா,
ReplyDeleteநலமா,
உங்கள் பதிவு கண்டேன். உங்களின் பாணியே தனிதான். கருத்தை இட்டுவிட்டோம்.பின்னூட்டம் இட்டால் வரமாட்டேன் என்கிறது!!!. கொஞ்சம் பாருங்கள்!!
கலக்குங்க!!!!!!!!!!!!!
நன்றி!!!!!!!!!11