Wednesday, August 1, 2012

டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் :பகுதி 3




முந்தைய பகுதிகள்



டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட்: Part 1
டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் பகுதி 2: Punctuated Equilibrium

வணக்கம் நண்பர்களே

மறைந்த (2002 C.E) பரிணாமவியல் மேதை ஸ்டீபன் ஜே கோல்ட் அவர்களின் பரிணாமவியல் விளக்கங்களை சென்ற இரு பதிவுகளில் விளக்கினாலும் கோல்ட்டின் நிறுத்திய நிலைத்தன்மை கோட்பாட்டின் மீதே கவனம் செலுத்தியதால் அவருடைய முழு கொள்கையாக்கத்தையும் விளக்க இயலவில்லை.
 டார்வினின் படிப்படியான வளர்ச்சியா(Gradual),கோல்ட்டின் நிறுத்திய நிலைத் தனமையா(punctuated Equilibrium) எது அதிகம் பொருந்தும் கொள்கை என கேள்வி மட்டுமே கேட்டு இருந்தோம். இப்போது இதனை முதலில் அறிவோம்.டார்வின் தனது படிப்படியான வளர்ச்சி என்பதை ஒரு கணிப்பாகவே (prediction) கூறினார் எனலாம்.சிறு பரிமாணத்தை(micro evolution) ஆவணப்படுத்தியவர் அது தொடர்ந்து பெரும்பரிமாணம்(macro evolution) ஆகும் என்ற எண்ண‌த்திலேயே படிப்படியான வளர்ச்சி என கொள்கையாக்கம் செய்தார்.ஆனால் கோல்ட் 1970CE வரை கிடைத்த படிமங்களின் உரு மாற்ற‌ வரலாற்றின் மீதே தனது கொள்கையை வரையறுத்தார்.

ஆனாலும் படிம வரலாற்றில் இரண்டுக்குமே எ..கா உண்டு என்றாலும் நெடுங்கால உரு மாற்றமின்மை [stasis] என்பதை கோல்ட்டின் கொள்கையாக்கம் மட்டுமே விளகக இயலும். படிப்படியாக விளக்கப் படும் படிம சான்றுகளும் எளிதில் நிறுத்திய நிலைத்தன்மை கோட்பாட்டில் விளக்க முடியும் எப்படி எனில் இது ஒரு தொடர்பு பொருத்தும் முறை(function fitting) ஆகும்.





ஆனால் மாற்றி விளக்க முடியாது ஏன் எனில் நெருங்கால் உரு மாற்ற மின்மை.(stasis).

,

Transitional forms in whale evolution

Whale Evolution(gradual evolution example) .


பிறகு என்ன கோல்ட்டின் கோட்பாடே சரி என்று சொல்லலாமே என்றால் கொஞ்சம் பொறுங்கள்.

இரு வெவ்வேறு உயிரினம் என்றால் உரு அமைப்பை வைத்தே வரையறுத்து வந்தவர்கள் ,இப்போது ஜீனோம் ஒப்பீடும் செய்வது வழக்கமாகி விட்டது.

இபோதைய மூலக்கூறு அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்ற‌ங்கள் ஜீனோமில் தலைமுறை ரீதியாக மாற்றங்களை நன்கு ஆவணப் படுத்தி உள்ளன.பொதுவாக ஜீனோமில் ஏற்படும் மாற்றங்களை 


1. ஜீன் மாற்ற‌ம்


2. குரோமோசோம் மாற்றம்


என வகைப் படுத்தலாம். ஜீன்,குரோமோ சோம்களில் ஒரு அமிலத் துணுக்கு(Nucleotide) மாற்றத்தில் இருந்து ஜீன்(குரோமோசோம்) புதிதாக உருவாதல்,இணைதல்,பயனற்று போதல்,மறைதல் என பல மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.


 


ஜீன்களில் ஏற்படும் போதுமான மாற்றம் பல் வேறு வகை உயிரின‌ங்கள்,உரு மாற்றம்,புதிய உறுப்பு உருவாதல்,உள்ள‌ உறுப்பு மறைதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.


குரோமோசோம்களில் ஏற்படும் போதுமான மாற்றம் உயிரின பிளவு(Speciation) ஏற்படுத்துகிறது. உயிரின பிளவு என்றால் இணைந்து இனவிருத்தி செய்ய இயலாத சில குழுக்களாக ஒரு உயிரினம் பிரிதல் என ஏற்கெனவே ஒரு பதிவில் விளக்கி இருக்கிறோம்.


உருமாற்றம்+இணைந்து இனவிருத்தி செய்ய இயலா குழுக்கள் உருவாதல்=பெரும்பரிமாணம்.

Morphological change+Speciation=Macro evolution

பெரும்பரிமாணத்தை அதன் செயலாக்கத்தை விளக்குவதில் கோல்ட்டின் கொள்கையாக்கமே அதிகம் மூலக்கூறு ஆய்வுகளுக்கு அதிகம் பொருந்துகிறது.
ஜீன் மாற்றங்கள் படிப்படியானவையே,குரோமோசோம் மாற்றங்கள் ஜீன் மாற்றங்களினால் ஏற்படுகிறது என கொண்டால் அதுவும் படிப்படியானதே.


ஆனால் ஒவ்வொரு படிப்படியான மாற்றமும் உருமாற்றம் ஆகும் வாய்ப்பு குறைவு.ஒருவேளை அப்படி தோன்றும் புதிய உரு சூழலுக்கு பொருந்தாவிடில் இயற்கைத் தேர்வு வடிகட்டி விடும். ஆகவே உரு மாற்றம் நிறுத்திய நிலைத் தன்மையாக இயற்கைத் தேர்வினால் பாதுகாக்கப் படுகிறது.


உருமாற்றம் என்பது அதன் அமைப்பில் உள்ள உயவுத் தனமை[Phenotype plasitisity)  சார்ந்தும் உள்ள‌து.அதாவது புதிய உறுப்பு அல்லது மாற்ற‌ம் உருவாகும் வாய்ப்பு,அது இயற்கைத் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு இர‌ண்டுமே இறுதி உருமாற்றத்தை நிர்ணயிக்கின்றன.இயற்கைத் தேர்வில் வெற்றி என்றால் அதிக வாரிசுகள் உருவாக்குதல் ஆகவே படிமங்களில் அவையே அதிகம் கிடைக்கும்.எனவேதான் படிம வரலாற்றில் கோல்ட்டின் நிறுத்திய நிலைத்தன்மைக்கு சான்று அதிகமாக் உள்ளது. 


ஆகவே 


"ஜீனோமில் ஏற்படும் படிப்படியான மாற்றங்கள் ,இயற்கைத் தேர்வின் உருமாற்ற நிபந்தனைகளால் நிறுத்திய நிலைத்தன்மை ஆகிறது".


ஒரு வேளை தொடர்ச்சியாக குறைந்த கால இடைவெளியில் அதிகப் படிமங்கள் கிடைத்தால் இது உறுதியாக்கப்படும்.ஆனாலும் பரிணாம ஆய்வாளர்களிப்போது  மூலக்கூறு அறிவியல் சார்ந்து பரிணாம மாற்றங்கள்,பரிணாம கணக்கீட்டியல்[quantitative biology],பரிணாம மருந்தியல் போன்றவற்றிலேயே கவனம் செலுத்துவதால்  இது குறித்து அதிகம் கண்டு கொள்வது இல்லை.இது ஒரு தீர்க்கப்பட்ட அடிப்படை விடயம் ஆக கருதுகின்றனர்.


எனினும் இந்த படிப்படியான் மாற்ற‌மா,நிறுத்திய நிலைத்தன்மையா என்பது எந்த விதத்திலும் பரிணாமத்தின் மீதான விமர்சனம் ஆக முடியாது. 


அவ்வளவுதான்! அடுத்த பதிவில் திரு கோல்ட் அவர்களின் பரிணாம செயலாக்கத்தை விளக்கி முடித்து விடுவோம்.


சந்தேகங்களை வழக்கம் போல் பின்னூட்டத்தில் சரி செய்து விடுவோம் .

http://en.wikipedia.org/wiki/Phenotypic_plasticity

http://www.eeb.cornell.edu/agrawal/pdfs/whitman-and-agrawal-2009-Ch_1-Phenotypic-Plasticity-of-Insects.pdf

நன்றி 


28 comments:

  1. மிகவும் நன்றாக பரிணாம நிலைத்தன்மை கோட்பாடு மற்றும் மூலக்கூறுவியலுக்குள்ள தொடர்பு குறித்து விளக்கியுள்ளீர்கள், நன்றி.

    நீங்கள் அறிவியலை அழகு தமிழில் விளக்குவது குறித்து மகிழ்ச்சியே, ஆனால் உங்களுக்கு தெரிந்தது போல் தமிழ் நல்ல கலைச்சொற்கள் இல்லை. இருப்பனவற்றையும் மிஸ்யூஸ் பண்ணுகிறார்கள். அணு, இனம் போன்ற சொற்களை குறிப்பிடலாம். அணு atom & cell என்ற இரண்டையும் குறிப்பிடவும் இனத்தை race & species இரண்டுக்கும் பயன்படுத்துகிறார்கள். இனிய நண்பர் இக்பால் செல்வனின் பதிவில் இனக்கலப்பு மணம் செய்யனும் என எழுதியிருந்தீர்கள். இதை படிச்சு தப்பா புரிஞ்சுகிட்டு எந்த பயபுள்ளையும் ஆடு மாடுன்னு இறங்கிட போறானுக என நினைத்தேன் :-) நம்மாளுக ஏற்கனவே நாய் கழுதையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கறவனுகதானே, அதாலதான்!

    பெயர்ச்சொற்களை மொழி பெயர்க்க தேவையில்லை என சிலர் வலியுறுத்துவது உண்டு. நீங்கள் Speciation என்பதற்கு உயிரின பிளவு என்கிறீர்கள். இதற்கு விளக்கம் போடாவிடில் ஏதோ உயிரினமே (living being) பிளந்து போவது போல் அர்த்தம் தருகிறது. மேலும் Nucleotide என்பது தமிழ் பாட புத்தகத்திலும் நீயூக்ளியோடைடு என்றுதான் எழுதப்படுகிறது (10 வருடத்திற்கு முன் நான் படித்த போது). நீங்கள் அதை அமிலதுணுக்கு என ஏன் எழுதினீர்களே தெரியவில்லை. ஒருவேளை DNA வின் பில்டிங் பிளாக் என்பதினாலோ? அல்லது நீயூக்ளியோடைடில் அமிலத்தன்மை இருப்பதினாலோ தெரியவில்லை. ஆனால் வேறு பல அமிலத்தன்மை மிகு வேதிப்பொருட்கள் இருப்பதினால் இது குழப்பத்தை தரும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  2. //குரோமோசோம் மாற்றங்கள் ஜீன் மாற்றங்களினால் ஏற்படுகிறது//

    குரோமோசோம் மாற்றங்கள் என்பது குரோமோசோமின் அமைப்பில் (structure) ஏற்படும் மாற்றங்கள். ஜீன் மாற்றங்கள் மீயுட்டேசன் மற்றும் rearrangements. ஆனால் குரோமோசோம் மாற்றங்கள் அதன் அமைப்பில் நடப்பதால் ஜங்க் DNAவையும் பாதிக்கும். இரண்டும் வேறுவேறு செயல்களை குறிப்பவை என நினைக்கிறேன். வீட்டில் ஒரு பெட்டியை நகர்த்துவது போன்றது ஜீன் மாற்றங்கங்கள், ஒரு அறைவே இடிப்பது அல்லது இடமாற்றுவது குரோமோசோம் மாற்றங்கள். பெட்டியை நகர்த்தி வைத்து விட்டு எனது வீட்டினை மாற்றி அமைத்து விட்டேன் என சொன்னால் அது டெக்னிகலாக சரிதான், ஆனால் குழப்பமல்லவா மிஞ்சும்? தாங்களின் மேலான கருத்து என்னவோ? நன்றி.வணக்கம்

    ReplyDelete
  3. வாங்க சகோ நந்தவனத்தான்,

    //ஆனால் உங்களுக்கு தெரிந்தது போல் தமிழ் நல்ல கலைச்சொற்கள் இல்லை. இருப்பனவற்றையும் மிஸ்யூஸ் பண்ணுகிறார்கள்.//


    நம்மால் முடிந்தவரை தமிழ் சொற்கள் உருவாக்கும் முயற்சிதான்.அமிலத் துணுக்கு என்று உருவாக்கும் போதே முழு மனது இல்லை.பெரும்பாலும் புது சொற்கள் உருவாக்கும் போது ஆங்கிலத்தில் அடைப்புக் குறியில் சரியான‌ அறிவியல் சொல் இட்டு விடுவது வழக்கம்.

    நுயுக்ளியர் அமிலத் துணுக்கு என்றால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி
    உயிரின பிளவு பற்றி ஏற்கெனவே பதிவு இட்டுள்ள படியால் அதிக விளக்க தேவையில்லை என எண்னினேன்.
    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html
    **********

    குரோமோ சோம்கள் ஜீன்களால் ஆனவை,ஆகவே பெட்டி என்பதை விட அறையின் செங்கல் என்பதே சரியான உவமானம்.

    எனினும் குரோமோசோம் மொத்தமும் மாறும் ஒரே தலைமுறை நிகழ்வுகளும் உண்டு.அவை பெரும்பாலும் பிறவி குறையுள்ள உயிரினங்களை தோற்றுவித்தன.ம்யுட்டேஷனிஸ்ட் எனப்படும் பரிணாம கொள்கையாளர்கள் இதுதான் சரியான பரிணாம் செயலாக்கம் என விவாதித்தனர்.அவை பல த்லைமுறைகள்க்கு வெற்றிகரமாக பரவ வேண்டும்.


    இப்போது மூலக்கூறு அறிவியலிலும் பரிணாம் மாற்றத்தின் அடிப்படை ஜீன் அல்லது செல் அல்லது உயிரின குழுவா என்பதும் சூடு பறக்கும் விவாதமே.

    ஜீன் அடிப்படை___ நியோ டார்வின்ஸ்டுகள்

    செல் அடிப்படை____ஷஃபிரோ(பதிவு இட்டுள்ளோம்)

    உயிரின குழு[population genetics] அடிப்படை_ கோல்ட்

    கோல்ட் மூலக்கூறு அறிவியலை விட குழு அடிப்படைக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறுகிறார்.

    ஆகவே பெரும்பாலும் ஜீன்களின் மாற்ற‌த்தினால் ஏற்படும் குரோமோசோம் மாற்றங்கள் மட்டுமே இயற்கைத் தேர்வில் வெற்றி பெறும் என்ற கருத்தாக்கத்தின் அடைப்படையில் கூறினேன்.

    எது அதிக முக்கியத்துவம் என்பது சான்றுகளின் அடிப்படையில் தீர்க்க வேண்டிய விடயம்.அது ஒரு தொடர்பயணம்.

    மிக ஆழமாக் செல்லும் போது பன்முகத் தனமையே புலப்படும்.உடனே பாருங்கள் பரிணம கொள்கையில் குழப்பம் இதுவா,அதுவா என கிளம்பி விடுவார்கள்.

    இப்பதிவில் கூறுவது என்ன?

    1. ஜீனோமில் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

    2. அதில் சில உருமாற்றம் ,உயிரின பிளவு ஏற்படுத்துகின்றன.

    3.அவற்றில் இயற்கைத் தேர்வில் வெற்றி அதிக இனவிருத்தி செய்கின்றன.

    4.ஆகவே படிம வரலாற்றில் நிறுத்திய நிலைத் தன்மைக்கு சான்று அதிகம்.

    ஜீனோம்(செல்) இவற்றில் ஒவ்வோரு தலைமுறைக்கும் மாற்ற‌ம் என்பதே படிப்படியான மாற்றம்.

    அவ்வளவுதான்!!!!!!

    நன்றி

    http://web.jjay.cuny.edu/
    ~mwallace/Ch11pwrpt.pdf

    http://en.wikipedia.org/wiki/Chromosome

    ReplyDelete
  4. சகோ நந்தவன‌த்தான்,


    //A chromosome is an organized structure of DNA and protein found in cells. It is a single piece of coiled DNA containing many genes, regulatory elements and other nucleotide sequences. Chromosomes also contain DNA-bound proteins, which serve to package the DNA and control its functions.//

    ஜீனோமில் ஏற்படும் தலைமுறை ரீதியான‌ மாற்ற‌ம் என்பது ஆவணப் படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்ற‌ங்கள் ரேன்டமாக நடப்பதால் மாற்றத்தின் விளைவுகள் அறிந்தாலும் ஒவ்வொரு வகை மாற்றமும் என்ன கால அளவு வீதத்தில் நடக்கிறது என்பதும் சீக்கிரம் அறிவோம் என்பதே நம் கருத்து.

    ஜீனோமில் ஏற்படும் மாற்றங்கள் என் 200 வகையான் ஆவணப்படுத்தப்ப்ட்ட விடயங்களை திரு ஷாபிரோ த்னது புத்தக்த்தில் விளக்குகிறார்.முடிந்தால் அப்புத்தக‌ம் படியுங்கள்.

    http://aatrala
    rasau.blogspot.com/2012/05/blog-post_17.html

    Evolution: A View from the 21st Century

    http://www.amazon.com/Evolution-View-Century-Press-Science/dp/0132780933

    ஆகவே அறிவியல் என்பது தொடர்பயணம் என்பதற்கு பரிணாமமும் விதிவிலக்கு அல்ல.
    Thank you

    ReplyDelete
  5. http://www.nature.com/news/2009/090827/full/news.2009.864.html

    Human mutation rate revealed
    Next-generation sequencing provides the most accurate estimate to date.

    Elie Dolgin


    How quickly is your DNA mutating?
    PunchstockEvery time human DNA is passed from one generation to the next it accumulates 100–200 new mutations, according to a DNA-sequencing analysis of the Y chromosome.

    This number — the first direct measurement of the human mutation rate — is equivalent to one mutation in every 30 million base pairs, and matches previous estimates from species comparisons and rare disease screens.

    ReplyDelete
  6. படிப்பதற்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் தங்களின் விளக்கம் புரியும்படி உள்ளது நன்றி...

    இனியவன்.....

    ReplyDelete
  7. விளக்கங்களுக்கு மிக்க நன்றி!

    //நுயுக்ளியர் அமிலத் துணுக்கு//

    விடமாட்டீங்க போல. உமது தமிழார்வத்துக்கு எமது வந்தனங்கள்!

    //ஜீனோமில் ஏற்படும் மாற்றங்கள் என் 200 வகையான் ஆவணப்படுத்தப்ப்ட்ட விடயங்களை திரு ஷாபிரோ த்னது புத்தக்த்தில் விளக்குகிறார்.முடிந்தால் அப்புத்தக‌ம் படியுங்கள்.//

    புத்தகத்தின் கிண்டில் பதிப்பு விலை குறைவுதான் ($3) என்றாலும் ஏற்கனவே எமது கிண்டிலில் 200 புத்தகங்கள் 'திறந்தாவது பாரேன்' என கதறிக்கொண்டிருப்பதால் யோசித்தபடி ஏதாவது review article/summery கிடைக்குமா எனத் தேடியதில் புத்தகமே இலவசமாக கிட்டியது. ஆர்வமுள்ள அனைவருக்கும் குறிப்பாக தாயகத்தில் வசிப்போருக்காக இந்த இணைப்பு

    http://sunsetridgemsbiology.wikispaces.com/file/view/Evolution.A.View.from.the.21st.Century.pdf

    மேலும் அதே இணையதளத்தில் உள்ள உயிரியல்/பரிணாவியல் புத்தகங்களுக்கு
    http://sunsetridgemsbiology.wikispaces.com/Ebooks-Discussion+and+Reading+Assignments

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவந்த்தான்,

      பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழுக்கு அளிப்பதில் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட மாட்டோமா என்பதுதான்.

      ஜெனெடிக்ஸ் பற்ரிய நுணுக்கமான விவரங்கள் கோல்ட் அவ்ர்களின் கொள்கையாகத்திற்கு முக்கியம் இல்லை என்பதாலும்,அது பரிணாமத்தில் இருந்து விலக்கி விடும் என்பதாலும் மட்டுமே அது குறித்து இப்போது தவிர்க்கிறேன்.

      ஜெனெடிக்ஸ் மூலம் தீர்ந்த ஒரே பிரச்சினை ஜீனோம்(செல்) தலைமுறை ரீதியாக் மாறுகிறது.இது உருமாற்றம்,புதிய உறுப்பு,உயிரின பிளவு நடக்கும் வாய்ப்பை உறுத்திப் படுத்துகிறது என்பதுத்ஹான். ஃப்ரூட் ஃப்ளை மீது நட்த்திய ஆய்வுகளில் இது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது எனினும் இது எந்த கால் அளவு வீதத்தில் ,ஜீனோமுக்கு ஏற்ற‌படி எப்படி நடக்கும் என்பது போல் இன்னும் பல படிகளை கடக்க வேண்டி இருக்கிறது என்பதையே பணிவுடன் கூறுகிறோம்.

      அந்த ட்யூக் பல்கலைக் கழக பரிணாம‌ கல்வி ஆரம்பிக்கட்டும் பிறகு ஜெனடிக்ஸ் உள் செல்வோம்.அதனை முழுதும் தமிழ் படுத்தும் ஆவல் உண்டு.உங்கள் போல் பல சகோக்கள் ஒத்துழைத்தால் பரிணாமத்தை தமிழில் சார்பற்று ஆவணப் படுத்தி விடலாம்.

      புத்தக சுட்டிகளுக்கு நன்றி
      நன்றி !!!!!!!!!!!!!!!!

      Delete
    2. @ நந்தவனத்தான் தாங்கள் அளித்த புத்தக சுட்டிக்கு நன்றிகள் !!!

      Delete
  8. நண்பரே பதிவை புரிந்து கொள்வதில் சிறிது சிரமம் ஏற்பட்டது. பின்னூட்டங்கள் ஒரளவுக்கு தெளிவாக்கின.

    /////////////
    ஆனாலும் படிம வரலாற்றில் இரண்டுக்குமே எ..கா உண்டு என்றாலும் நெடுங்கால உரு மாற்றமின்மை [stasis] என்பதை கோல்ட்டின் கொள்கையாக்கம் மட்டுமே விளகக இயலும். படிப்படியாக விளக்கப் படும் படிம சான்றுகளும் எளிதில் நிறுத்திய நிலைத்தன்மை கோட்பாட்டில் விளக்க முடியும் எப்படி எனில் இது ஒரு தொடர்பு பொருத்தும் முறை(function fitting) ஆகும்.ஆனால் மாற்றி விளக்க முடியாது ஏன் எனில் நெருங்கால் உரு மாற்ற மின்மை.(stasis). //////
    ....கொஞ்சம் விளக்க முடியுமா???

    நண்பர் நந்தவனத்தான் இணைப்புக்கு நன்றி. இந்த மாதிரி புத்தகம் இணைப்பு தருபவர்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  9. வாங்க சகோ நரேன்,

    நம் பதிவில் பலமே பின்னூட்ட மிடும் சகோக்கள்தான்.ஆட்டி வைப்பவர்கள் அவர்கள்.நாம் வெறும் கருவி.இன்னும் பரிணாம எதிர்ப்பு சகோகள் வந்தால் நக்கு இன்னும் பேராவல் வந்து விடும்.நிறைய விளக்கம் பதிவு இடுவோம்!

    பரிணாம விமர்சனங்களை எளிதில் சமாளிக்கும் அளவிற்கு,பரிணாம்கல்வி சார் விள்க்கம் அளிக்கும் போது எதிர் கொள்ளும் பன்முக கொள்கையாக்கங்கள் மிக்க மலைப்பை தருகின்றன.தெளிவாக ஒரு கருத்தை சொல்வதற்குள் படும் கஷ்டம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

    இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது.

    சகோ நந்தவன‌த்தான் கலக்குகிறார்.!!!!!!

    இருப்பினும் அவர் ஒரு தீவிர டார்வினிஸ்ட் போல் தெரிகிறது.நாம் பன்முகத் தன்மை உடைய(கோல்ட்டின்) பரிணாம் விள்க்கம் தேடுவதால்,விளக்குவதால் கோல்ட் ம் டாக்கின்ஸ் ம் போட்ட சண்டை போல் விவாதங்கள் நிறைய வரும். ஹி ஹி ஹி

    நன்றி

    ReplyDelete
  10. நண்பர் நரேன்,

    உங்கள் கேள்வியை இரு பிரிவுகளாக பிரிக்கிறேன்.

    1. நிறுத்திய நிலைத் தன்மைக்கு படிம வரலாற்றில் அதிக சான்றுகள் ஏன்?

    இது பதிவில் விளக்கினோம் எனினும் படிப்படியாக குறைந்த காலத்தில் உருவாகும் உயிரின‌ங்கள் இயற்கைத்தேர்வில் வெற்Ri பெறும் வாய்ய்பு குறைவு.

    எ.கா உடல் ஒட்டிய இரட்டையர்கள்,வித்தியாசமான் உடல் உறுப்புகள்,தாய் தந்தையர் ஆரோக்கியமாக் இருப்பினும் இமாதிரி குறைகள் ஏற்படுவது ஒரு விபத்து போன்றது.

    A).ஒரு ஜீனோம் சூழலுக்கு ஏற்ப எவ்வளவு மாற இயலும்.சிமபன்சிக்கும் நமக்கும் உடல்ரீதியான உருமாற்றம் அளவீடுகளில் மட்டுமே.ஆகவே இரண்டின் முன்னோர் மனிதன் ஆகவும் ,சிம்பன்சியாகவும் பிரிந்தது.சிமபன்சி அதிக உரு மாற்றமில்லை. மனிதனில் 20+ உயிரினங்கள் தோன்றி
    அதில் நாம் (ஹோமோ சேஃபியன்)மட்டும் மிஞ்சினோம்.

    2.உரு மாறும் விதம் சூழலுக்கு பொருந்த வேண்டும்.


    B).படிப்படியான படிம வரலாறு கூட ,நிறுத்திய நிலைத்தனமைக்கு பொறுத்த முடியும் எப்புடீ?

    இது கணிதம் என்ன உரு அளவு மாற்றம் எக்ஸ் அச்சு,காலம் ஒய் அச்சு, பரிணாம் மரம் வரைய புள்ளிகளை இணைக்கும் போது வளை கோடாக இணைத்தல் படிப்படியான் வளர்ச்சி.

    செங்குத்து, நேர் கோடுகள் வைத்து மட்டும் இணைத்தால் அது நிறுத்திய நிலைத் தனமை.மார்ஃப்பிங் பண்ணிப் பாருங்கள் பிடிபட்டு விடும்.
    I have included one graph in the post
    see that
    Thank you

    ReplyDelete
  11. ஹாஹா, நான் எந்த -யிஸ்டும் கிடையாது சகோதரரே. எல்லாவற்றையையும் திறந்த மனதோடுதான் வரவேற்கிறேன். நான் ஏற்கனவே சிறிதளவு கற்றிருப்பது மூலக்கூறு உயிரியல். உமது பதிவுகளை படித்து பரிணாமம் குறித்து மேலும் தெரிந்து கொள்ளுகிறேன்.


    உண்மை இந்த 3 குருப்புகளுக்கும் இடையில் இருக்கலாம் இதில் ஜீன்தான் மிகவும் முக்கியம் எனவும் கருதுகிறேன். ஏனெனில் வாழ்வு RNA/DNA விலிருந்து தோன்றி அதனுடைய survival-க்காகதான் செல், உயிரி, குழு என அனைத்தும் உருவாகி இருப்பதினால் இந்த இது சரியாக இருக்கூடும். ஆனால் செல் மற்றும் population இவற்றின் பாதிப்பு இருக்கூடும். ஆனால் தற்போதைய விஞ்ஞானிகள் பலர் ஜெனடிக்கலாகவே பரிணாமத்தை பார்க்கிறார்கள். ஷாபிரோவின் புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் natural genetic engineering (NGE) என்னவோ புதிய விடயம் மாதிரி அவர் சீன் காட்டுவது சகிக்கவில்லை. NGE ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்று மற்றும் அதிலிருந்துதான் genetic engineering பிறந்ததது. இயற்கையான என்சைம்களே genetic engineering ன் அடிப்படை. இவர் அனைவரும் புறக்கணித்த லாமார்கிசம் எனும் பழய கள்ளை genetic engineering எனும் புதிய மொந்தையில் விற்க பார்க்கிறார்! இதுவும் உண்மையாக இருக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்தவரை ஏதும் அவர் இதுவரை ஏதும் ஒப்புக்கொள்ளத்தக்க ஆதாரம் காட்டவில்லை. மேலும் ஜீன் மைக்ரோபரிணாமத்தையும், population genetics மேக்ரோபரிணாமத்தையும் குறிப்பிடுவதால் ஒன்றுக்கொன்று தொடர்பானவைதானே. நன்றி.

    ReplyDelete
  12. சகோ நந்தவனத்தான்,
    நம் ஊரில் இரண்டு பேர் கொஞ்சம் சத்த்மாக் பேசினால் கூட கூட்டம் திரண்டு விடும்.தமிழனின் தனிக்குணம்.

    ஒரு போட்டி விவாதம் என்று இருந்தால்தான் பதிவு பக்கம் நாலு பேர் வந்து ஏதோ சண்டை போடுகிறார் என்றாவது வந்து சிரமப்பட்டு எழுதுவதை படிக்க மாட்டார்களா என்றுதான் புது மாதிரி விளம்ப்ரம்.முந்தி எல்லாம் நம் பரிணாம் எதிர்ப்பு சகோக்கள் வந்து நம்க்கு அதிக விளம்பரம் கொடுத்தார்கள்.
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது அந்தக் காலம்!!!!!!!!!!!


    உங்களை டார்வினிஸ்ட் என்று கூறியது ஒரு விளம்பரம் மட்டுமே டொட்டய்ங்

    ஷாஃபிரோ இயற்கைத்தேர்வு,லாமார்க்கியம், எல்லாத்தை கல‌ந்து தானே வடிவமைத்தது போல் காட்ட முயல்கிறார்.அனைவருக்கும் புரிந்து விட்டது.பாவம் ஷாஃபிரோ


    ஆனல் டி என் ஏ ல் ஏற்படும் மாற்றங்களை சுமார் 1000 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து ஷாஃபிரோ விவரம் வெளியிட்டு இருப்பது அருமை.அது மட்டுமே நம் தேவை.

    நாம் அன்னப் பற்வை போல் சரியாக பிரித்து விடுவோம்!!!!!!!!!!!!.


    பரிணாம் கொள்கையில் டார்வினின் இடத்தை பிடிக்க எவராலும் முடியாது,அவரை பரிணாமத்தின் முழு நாயகானக இல்லாமல் ஆக்கியது கோல்ட் மட்டுமே!!!!!!!!
    டார்வினை (கொள்கையை)அதிகம் விமர்சித்தவரும் கோல்ட்தான்!!!!

    அடுத்த பதிவில் டார்வின்,கோல்ட் இருவரின் முரண்பாடுகளையும் பார்ப்போம்.
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இன்னும் 3 பதிவுகள் தேவைப்டலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நன்றி!!!!!!!!!!!!!!!!! .

    ReplyDelete
  13. /பதிவு பக்கம் நாலு பேர் வந்து ஏதோ சண்டை போடுகிறார் என்றாவது வந்து சிரமப்பட்டு எழுதுவதை படிக்க மாட்டார்களா ... நம் பரிணாம் எதிர்ப்பு சகோக்கள் வந்து நம்க்கு அதிக விளம்பரம் கொடுத்தார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது அந்தக் காலம்!!!!!!!!!!!//

    ஆடு தானே இலையில வந்து உட்காந்து பிரியாணியாக வேண்டும் என எதிர்பார்ப்பது ரொம்ப ஓவர்!

    ReplyDelete
  14. //நண்பர் நந்தவனத்தான் மாதிரி புத்தகம் இணைப்பு தருபவர்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.//

    Thanks Sir.
    நாம் பலவற்றை இங்குள்ள பதிவுகளினால் கற்றுக் கொள்கிறோம்.
    நாம் ரொம்ப வீக்கு.

    யாத்திராகமம்- மோசே- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
    http://pagadhu.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete
  15. வாங்க சகோ தேவப் பிரியா,

    நாமும் அப்படித்தான். சகோக்கள் கொடுக்கும் கேள்விகள்,தகவல்கள் அடிப்படையில் கொஞ்சம் மொழி மாற்றம் செய்து பதிவிடுகிறோம்.அவ்வளவுதான்.

    உங்கள் பதிவு பார்த்தேன் இந்த பைபிள் வரலாற்று கால் அட்டவனை எனக்கு தெரிந்து மூன்று வித்தியாசமானது உள்ளது.மொத்தம் எத்தனை?

    ஒரு விடயம் சிரிப்பு வந்து விட்டது.நீங்கள் 100 வருட வித்தியாசத்தை தவறு என்கிறீர்கள் நாங்கள் ப்ரபஞ்சம் தோன்றி 1370 கோடி ஆண்டு என்றால் பைபிள்வாதிகள் 7000 ஆண்டு என சத்தியம் செய்கிறார்கள். இந்த வித்தியாசமே மதவாதிகளுக்கு பிரச்சினை இல்லை என்னும் போது 100 வருட வித்தியாச‌ம் எம்மாத்திரம்??

    நன்றி

    ReplyDelete
  16. http://sandwalk.blogspot.com/2012/08/the-paradox-of-stasis.html

    The Paradox of Stasis?

    The word "stasis" entered our consciousness when Gould and Eldredge promoted the concept of punctuated equilibria (see Darwin on Gradualism ). Their observations of the fossil record showed that the morphology of many species remains unchanged for millions of years. Change occurs during speciation by cladogenesis when the new daughter species fixes morphological change, thereby allowing us to recognize it as a different species.

    Stasis is an important observation. Here's how Gould describes it in The Structure of Evolutionary Theory (p. 759).

    Abrupt appearance may record an absence of information but stasis is data. Eldredge and I became so frustrated by the failure of may colleagues to grasp this evident point—though a quarter century of subsequent debate has finally propelled our claim to general acceptance (while much about punctuated equilibrium remains controversial)—that we ureged the incorporation of this little phrase as a mantra or motto. Say it ten times before breakfast every day for a week, and the argument will surely seep in by osmosis: "stasis is data; stasis is data ..."
    Okay, we get it.

    What causes stasis? There are many possible explanations. One of the most common is stabilizing selection or the idea that a species is so well-adapted to its environment that any change will be detrimental. According to this view, evolution only occurs when the environment changes

    ReplyDelete
  17. அருமையான பதிவு சகோ. நிலை நிறுத்திய தன்மையை விளக்கி வருதல் நன்று ... !!! Phenotype என்பது தோற்றவமைப்பு plasticity என்பது நெகிழ்வுத் தன்மை என்ற வார்த்தைகள் பொருத்தமாக இருக்கும் ... !!!

    அதாவது படைப்புவாதிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது தான் .. குரங்கில் இருந்து மனிதன் உருமாறினான் என்றால் ஏன் குரங்கு உருமாறவில்லை என்பது தான் ?? !!! அதற்கான பதில் நிறுத்திய நிலைத் தன்மையை விளக்குவதன் மூலம் சொல்லலாம் என நினைக்கின்றேன் .. !!! பதிலைப் போட்டு உடைத்து பதிவின் நோக்கத்தை கெடுக்க விருப்பம் இல்லை. அதனால் பதிவின் போக்கின் போது நீங்களே சொல்லிவிடுங்கள் ... !!!

    இனி மேல் இப்பதிவுகள் ஊடாக என்னை ஒரு படைப்புவாதியாக மாற்றிக் கொண்டு கேள்வி எழுப்பப் போகின்றேன் ( தமிழ் உலகில் அறிவுசார் படைப்புவாதிகளுக்கு பஞ்சம் என்ற நிலையில் ) நானே படைப்புவாதிகள் சார்பாக ஆஜராகப் போகும் வக்கீல் ... !!! ஆகவே கொஞ்சம் தயாராக இருங்கள் .. என்ன மாதிரி கேள்விகள் கேட்டு உங்களை மடக்கலாம் என நானும் நோட்ஸ் எடுக்கின்றேன் ... !!!!

    ReplyDelete
  18. சார்வாகன் உங்களின் மின்னஞ்சல் முகவரி எனக்குத் தேவைப்படுகின்றது .. என்னைத் தொடர்புக் கொள்ளுங்கள் ..

    iqbalselvanblog@gmail.com அல்லது ட்விட்டர், பேஸ்புக்கிலும் என்னை அணுகலாம் .... !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,

      சிம்பன்சியும் மனிதனும் ஒரு முன்னோரில் இருந்து 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிந்த்னர்.மனிதரில் பல கிளைகள் சுமார் 20+ அதில் மிஞ்சியது நாம் ஹோமோ ஷேஃபியன் மட்டுமே.ஏன் சிமபன்சி இன்னும் அப்படியே இருக்கிறது? நாம் விளக்கலாம் எனினும் நீங்கள் விளக்கினால் பலரை சென்றடையும் என்பதால் இந்த வேண்டுகோள். வாழும் படிபங்கள் என்னும் பரிணாம எதிர்ப்பு விவாதம் கூட அடிபட்டு போய்விடும்.

      உங்களைத் தொடர்பு கொள்கிறேன். என் மின்னஞ்சல்

      saarvaakan@gmaial.com

      ஏற்கென்வே உங்களை ட்விட்டரில் தொடர்கிறேன் என எண்ணுகிறேன்,ட்விட்டர் ஃபேஸ் போக் நம் பயன்பாடு குறைவு.
      பதிவு போடவே தட்டு தடுமாறி ஏதோ செய்கிறோம்.

      நன்றி

      Delete
  19. http://mortentolboll.blogspot.ca/2011/12/pseudoscience-of-new-age-and.html

    போலி அறிவியல் குறித்து நான் வாசித்த ஒரு பதிவு இங்கே ... !!! போலி அறிவியல் குறித்து நாமும் தமிழ் பதிவுலகில் சில விடயங்களை எழுத முற்பட வேண்டும் என நினைக்கின்றேன் .. !!!

    ReplyDelete
  20. போலி அறிவியல் குறித்த மைக்கேல் ஷெர்மர்,சாம் ஹாரிசின் உளவியல் கட்டுரைகள்.இன்னும் எவ்வளவோ செய்யலாம். எல்லாவற்றையும் பலரின் இணைந்த முயற்சி தேவைப்படும்.

    போலி அறிவியல் தடையில்லா சக்தி,எய்ட்ஸ் மருந்து, எதிர்கால கணிப்பு,நினைவின் மூலம் செயல்,சைன்டாலஜி என வகை வகையாய் இருக்கு.

    இருப்பினும் சில பதிவுகள் ஏற்கெனவே எழுதியதாக ஞாபகம்.

    அரைகுறை நாத்திகர்கள் செய்ய த்வறியதை எல்லாம் நாம் செய்கிறோம்.

    நாம் மட்டும் ஏன் இப்புட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    நன்றி

    ReplyDelete
  21. உண்மையில் போலி அறிவியல் குறித்த தெளிவு நம்மிடையே இல்லை என்றே சொல்ல வேண்டும். மதவாதிகள் இதை வைத்துத் தான் தங்கள் மதத்தில் உள்ள அறிவியலை உண்மைப்(?)படுத்தினார்கள் என்றே எண்ணுகிறேன்.உ.ம் தவ்ஹீத் வாதிகள்‍‍ மற்றும் நாத்திகர்கள் நடத்திய விவாதம். எனவே இதை தாங்களும் எழுதி மக்கள் அரியத்தந்தால் மதங்களின் புட்டு வெளியாகும்.

    இனியவன்....

    ReplyDelete
  22. சகோ இனியவன்,

    இந்த மத புத்தக்தில் அறிவியல் என்பது ஏமாற்று வேலை.பெரும்பாலான் இம்மாதிரி விடயங்களை மறுப்பது பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறோம்.

    தமிழ் நாட்டில் நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு அறிவியல் குறித்த தெளிவான புரிதல் இன்றி விவாதம் செய்வது மத்வாதிகளுக்கே சாத்கமாகும்.

    அறிவியல் மூலம் அனைத்தையும் இபோதே தெளிவாக விள்க்க முடியும் என்பதும் த்வறான் கருத்தே. அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை ,அதன் அள்வீட்டு சான்றுகள் மூலம் கண்டு அதற்கு செயலாக்க விள்க்கம் தருவது ஆகும்.
    அப்ப்டி உருவாக்கிய கொள்கை மூலம் சில கணிப்புகள் செய்ய முடியும்.இந்த கணிப்புகளும் சான்றுகள் கிடைத்தால் உறுதி செய்யப் படும் ,இல்லையேல் மாற்றுக் கொள்கை வந்துவிடும்.

    ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல விளக்கங்கள் சாத்தியமே. இந்த அடிப்படையில் பெரு விரிவாக்க கொள்கையை விவாதிப்போம்.

    பிரபஞ்சம் நிலையானதா,விரிவடைகிறதா என விவாதம் நெடுங்காலமாக இருந்தது.நியுட்டனின் விதிகள் இயக்கவியலை தெளிவாக வரையறுத்த்ன. ஆனால் அபோது பூமியைத் தாண்டி தொலை தூரம் அள்வீடு செய்ய சன்றுகள் இல்லை.மாற்றுக் கொள்கைக்கு அவ்சியம் இல்லை.
    ஆனால் நம் சூரியக் குடும்பத்தில் ஒரு கோளின் வேகம்,இருப்பிடம் சார் அள்வுகள் நியுட்டனின் விதியால் கணிக்கப் பட்டதற்கும்,பரிசோத்னை அள்வீட்டுக்கும் சிறிய வித்தியாசம் வந்தது.அப்போது மாற்றுக் கொள்கை அவசியம் வந்தது.அய்ன்டினின் ஈர்ப்பியல் கொள்கை காலமும் சார்புத்தன்மை கொண்டது என்ற அடிப்படையில் வடிவமைத்த சமன்பாடுகள் கோள்களின் இயக்கத்தை துல்லியமாக் நியுட்டனின் விதியை விட விள்க்கின.‌

    ஐன்ஸ்டினின் வகை கெழு சமன்பாட்டில் பிரபஞ்ச மாறிலியின் மதிப்பை மாற்றினால் நிலையான பிரபஞ்சம், விரிவரையும் பிரபஞ்சம் இரண்டுக்கும் பொருந்துகிறது.அறிவியலாளர்கள் இருபிரிவாக பிரிந்து கடும் விவாதம் செய்த்னர். ஹூபில் பிற கால்க்சிகளில் நிகழும் நட்சத்திர வெடிப்புகள்(சூப்பர் நோவா) மீது தொலை நோக்கி மூலம் செய்த பரிசோத்னைகளில் அவர்களின் சிவப்பு விலக்கங்கள் மீதான விலக்கம் இப்போது காலக்சிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகுகின்றன என்பதுதான்.

    ஐன்ஸ்டினின் பிரப்ஞ்ச மாறிலி இதற்கு தக்கபடி சீரமைக்கப் பட்டு விரிவடையும் பிரபஞ்சம் என்னும் கொள்கையாக்கம் ஏற்கப்பட்டது.ஜார்ஜ் லாமாட்டியர் எனப்படும் அறிவியலாளர்(இவர் ஒரு கிறித்தவ‌ பாதிரி) இப்போது விரிவடைகிறது எனில் அதற்கு முன்னாள் என்று ஐன்ஸ்டினின் சம்ன்பாடுகள் மூலம் கணித்து அனைதும் ஒரு மிகசிறிய புள்ளியில் இருந்து விரிவடைந்து இருக்க்லாம் என்ற கொள்கையாக்கத்தை வெளியிட்டார்.

    திக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட மைக்ரோவேவ் ரேடியேசன்களின் விள்க்கமும் பெருவிரிவாக்க கொள்கைக்கே ஆதரவாக இருந்த்ன.

    எனினும் பிரபஞ்சத்தில் உள்ல கருப்பு பொருள்,கருப்பு ஆற்றல், விரிவரையும் வேகம் அதிகரித்தல் போன்ற்வற்றை பெருவிரிவாக்த்தால் விள்க்க முடியவில்லை என்பதால் மாற்றுக் கொள்கை வடிவமைப்பதில் அறிவியலாளர்கள் மும்முரம் ஆகிவிட்டார்கள்.

    ஸ்டிரிங் தியரியின் படி இந்த பிரபஞ்சமே ஒரு பெரும் தொடர் இயகக்த்தின் சிறு பகுதி.அவ்வியக்க்ம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என் விள்க்குகிறது.பல் பிரபஞ்சங்கள் வினாடிக்கு தோன்றி மறைந்து கொண்டே இருக்கின்றன.அதில் நம்முடையதும் ஒன்று.ஸ்டிரிங் தியரில் இரமானுஜத்தின் கணிதம் சில பயன்பாட்டுக்கு வருகின்றன் என்பது நம்க்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல் ஆகும்.

    இதன் படி பெருவிரிவாக்த்தின் முன் என்ன என்பது விளக்க முடியும். ஆகவே கணிப்புகள் அள்வீட்டு சான்றுகள் ரீதியாக் உறுதிப் படுத்தப்படும் வரை முழுமையாக ஏற்கப் படுவது இல்லை.

    பெரு வெடிப்பு நிகழ்ந்ததின் சான்றுகள் இல்லை.இருப்பது சில கால்க்சிகள் விலகிச் செல்லும் அளவீடுகள் மட்டுமே.அதுவும் சிவப்பு விலக்கம் என்னும் ஒப்பீடு அளவீடு சான்று மூலமாக.அறிவிய‌ல் ம‌த‌ சார்ப‌ற்ற‌து,ஒரு முடிவ‌ற்ற‌ தேட‌ல்,இயற்கை சார் நிகழ்வுகளை விளக்கும் கொள்கையாக்கம் மட்டுமே,சான்றுக‌ளின் மீது ம‌ட்டுமே உறுதி செய்ய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று மாற்றுக் கொள்கை என்பது சான்றுகளை முந்தைய கொள்கையைவிட அதிகம் பொருந்தும் படி விளக்க வேன்டும்.


    ஆகவே அறிவியல் கடவுளை நிரூபிக்கிறது என்பதும்,அறிவியலின் மூலம் அனைத்தும் விளக்க முடியும் என்ற இரண்டு கருத்துமே தவறு.
    Thank you

    ReplyDelete
  23. அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ. மேலும் போலி அறிவியலைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இனியவன்...

    ReplyDelete
  24. அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ. மேலும் போலி அறிவியலைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இனியவன்...

    ReplyDelete