சென்ற பதிவில் ஒரு அணுவின் அடிப்படை துகள்கள் 17 என்பதும் அதில்
12 ஃபெர்மியன்கள்=6 குவார்க் வகை+6 லெப்டான் வகை.இவை பொருள்களை உருவாக்கும் துகள்கள்.
விசைகளை உருவாக்கும் 5 போசான்கள்;=1.ஃபோட்டான்கள், 2.குளூஆன்கள், 3&4.வீக்கான்கள்(W&Z Bosons) 5. ஹிக்ஸ் போசான்
இதில் ஹிக்ஸ் துகள் தவிர மற்ற போசான்கள் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப் பட்ட கண்டுபிடிப்புகள். இந்த ஹிக்ஸ் துகள் பற்றியும் அதன் தேடுத்ல் குறித்த ஆவணப் படுத்துதலே இப்பதிவு.
இந்த போஸான் என்னும் பெயரே நமது இந்திய அறிவியலாளர் சத்யேந்திர போஸ் அவர்களின் அணுதுகள் அறிவியலுக்கான பங்களிப்புக்காக் பெயரிடப்பட்டது. இவர் ஐன்ஸ்டினுடன் பல ஆய்வுகளில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெரும் அணு துகள் உடைப்பான்(LHC) மூலம் நடத்தப் படும் சோதனைகளில் இத்துகளை கண்டறிந்து உறுதிப் படுத்துவதும் ஒன்றாகும்.
1.ஹிக்ஸ் துகள் என்றால் என்ன?
அணுவின் ஒரு அடிப்படை துகள்.இது நுயுக்ளியர் எளிய விசையின் செயல்பாடுகளை விளக்க உதவும் ஒரு கருதுகோள். இந்த நுயுக்ளியர் எளிய விசையும்,மின் காந்த விசையின் தொடர்புகள் ஸ்டீபன் ஹைசன் பர்க்,அப்துஸ் ஸலாமின்(பாகிஸ்தான்) அவர்களின் நிரூபணத்திற்காக நோபல் பரிசு பெற்றனர். இத்தொடர்புகள் ஹிக் செயலாக்கம் மூலமாக விள்க்கம் பட்டது.ஆகவே ஹிக்ஸ் என்னும் துகள் இருந்தாக் வேண்டிய கட்டாயம் உள்ளது.இதுவரை ஆய்வு ரீதியாக் உறுதிப் படுத்தப் படவில்லை என்றாலும்,அதனை தேடும் முயற்சி தொடர்கிறது. இது ஒரு சுழற்சியற்ற(spinless scalar) துகள்..
2.ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என்றால் என்ன?
W&Z போசான்கள் எடை அற்றவை. அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எடை பெறுவதை ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என அழைக்கப் படுகிறது.
In the standard model, at temperatures high enough so that electroweak symmetry is unbroken, all elementary particles are massless. At a critical temperature, the symmetry is spontaneously broken, and the W and Z bosons acquire masses. (EWSB, ElectroWeak Symmetry Breaking, is an acronym used for this).
அதாவது நுயுக்ளியர் எளிய விசையும்,மின் காந்த விசையும் தொடர்பு படுத்த வேண்டுமெனில்,அந்த செயலாக்கங்கள் விள்க்கப் படவேண்டுமெனில் ஹிக்ஸ் துகள் என்னும் கருதுகோள் மிக அவசியம்.கொள்கையாக்கத்தின் படி அப்படி ஒன்று இருந்தாக வேண்டும்.ஆனால் அது ஆய்வு ரீதியாக உறிதிப்படுத்தப் பட்டால் மட்டுமே முழு உண்மை ஆகும்.பெரும் அணு துகள் உடைபான் மூலம் இந்த துகளை கண்டறிய பல் சோதனைகள் நடத்தப் பட்டு வருகின்றன..
ஒருவேளை ஹிக்ஸ் துகள் என்று ஒன்று இல்லாமலேயே இச்செயலாக்கங்களை விளக்க முடியுமா என்றால் அத்திசை சார்ந்த ஆய்வுகளை இப்போது பலர் மேற்கொள்வதில்லை.ஹிக்ஸ் துகள் இருக்கவே முடியாது என்னும் போது மாற்று விள்க்கம் சாத்தியமா என்பதும் இப்போதைய கேள்விகள் மட்டுமே.இயற்கையின் நிகழ்வுகளின் மீதான விளக்கமாக இன்றைய கேள்விகளுக்கு நாளை விடை கிடைக்கும் என்ற தேடலே அறிவியல்.
இத்துகளை கண்டறிய நடத்தப் படும் சோதனைகள் பற்றிய காணொளி கண்டுமகிழுங்கள்.
Mumbai conference says 'God particle,' if exists, will be discovered within 12 months
ReplyDeletehttp://www.sify.com/news/mumbai-conference-says-god-particle-if-exists-will-be-discovered-within-12-months-news-international-lixkafedbga.html
_______________
Special: Physics will never be the same again
http://www.dnaindia.com/scitech/report_special-physics-will-never-be-the-same-again_1592376
________________
Atom smasher expected to seal fate of ‘god particle’ by 2012
http://www.thehindu.com/sci-tech/science/article2293244.ece
காணொளியும் பகிர்வும் பயன் மிக்கவை. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி சகோ இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteமுந்தைய பதிவு காணொளியில் அணு துகள்களின் “equations are complex and ugly" என்றிருந்தது. nuclear physicist அனைவரும் God Gifted என நினைத்தேன் to live with complex and ugly.
நீங்கள் எளிமையாக விளக்குவதை பார்த்தால், அது simple and beautiful ஆக இருக்கிறது.
நன்றி.
வணக்கம் நரேன்,
ReplyDeleteஇயற்கையின் நிகழ்வுகள் அற்புதமானவை,எளிமையானவை.அதனை எப்படி என வரையறுத்து நம் கட்டுக்குள் கொண்டு வரும் போது மட்டுமே நீங்கள் கூறிய சிக்கல்கள் ஏற்படும்.ஆனால் என்ன நடக்கிறது,என்ன செய்கிறார்கள் என்பதை சாதரண மொழியில் விளக்க்வோ,விளங்கவோ முடியும்.அதன் மீது பரிசோதனை என்றால் மட்டுமே அனைவரும் செய்ய இயலாது,கடும் உழைப்பும் ,மிக்க ஆய்வு சார்ந்த அறிவு தேவைப்படும்.பெர்ட்னன்ட் ரஸ்ஸல் ஒரு இறைமறுப்பாளர் தத்துவ மேதை மட்டுமன்றி ஒரு சிறந்த கணித மேதை அவர் எழுதிய கணித கொள்கைகள் என்ற புத்தக்த்தில் பெரும்பாலான கணித கொள்கைகளை ஒரு சம்பாடு கூட இல்லாமல் அருமையாக் விளக்கி இருப்பார்.அது குறித்தும் ஒரு பதிவிட வேண்டும்.கொஞ்சம் படித்து பாருங்கள்
http://fair-use.org/bertrand-russell/the-principles-of-mathematics/
http://www.archive.org/details/principlesofmath005807mbp
எதை எழுதுவது என்றே சில சம்யம் மலைப்பாக இருக்கிறது.ஆகவே பல வீண் பதிவுலக விவாதங்களை நிறுத்துவது என்று கூட முடிவு செய்து விட்டேன்.
இந்த “equations are complex and ugly" இல்லாமலே ஸ்டிரிங்க் தியரி கற்கும் ஒரு சிறு முயற்சியே!
நன்றி