Thursday, May 17, 2012

டார்வின் கொள்கைக்கு மாற்றுக் கொள்கை வந்து விட்டதா?




வணக்கம் நண்பர்களே,

பரிணாமம் பற்றி பதிவு இட்டு நாளாகி விட்ட படியால் இப்பதிவில் ஒரு பரிணாம கொள்கையில் ஒரு குறிப்பிடத் தக்க முன்னேற்ற‌ம் & மாற்ற‌ம் வரும் வாய்ப்பை பற்றி அறிவோம்.

சில விடயங்களை ஞாபகப் படுத்திக் கொள்வோம்.

பரிணாமம் என்றால் தலைமுறைரீதியான மாற்ற‌ங்களினால் [Descent with modification]அனைத்து உயிரினங்களுமே ஒரு செல் அடிப்படை உயிர்களில் இருந்து கிளைத்து தழைத்தவை.

பரிணாமம் எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கையே டார்வினியம் எனப்படுகிறது.இது என்ன?

1.சீரற்ற மாற்றங்கள் உயிரின‌ங்களில் பல்வேறு வகைகளை தோற்றுவிக்கின்றன.

2. இயற்கை சூழலுக்கு பொருந்தும் மாற்றங்கள் உடைய உயிரின வகைகள் தப்பி வாழ்கின்றன.முடியாதவை அழிகின்றன‌

இன்று வரை இதுதான் உயிரினங்களின் தோற்றம்,வளர்ச்சியை விளக்கும் கொள்கை.இது மதவாத படைப்பியல் கொள்கையாளர்களால் விமர்சிக்கப்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

1950ல் டி என் ஏ முதன்முதலில் கண்டறியப்பட்டதும் 90களில் அதனுடைய குறியீடு ஆவணப்படுத்தப்ப்ட்டதும் பரிணாம ஆய்வில் பல்தரப் பட்ட சிந்தனைகளை தோற்றுவித்தன.

டார்வினுக்கு முந்தையா கால கட்டத்தில் ஃப்ரென்ச் அறிவியலாளர் லாமார்க் அவர்களின் கொள்கை ஒரு உயிரினத்தின் வாழ்வில் அதன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் படுகின்றன என்பதுதான்.

அப்போதைய ஆய்வுகள் இதற்கு சார்பாக இல்லாததால் அவர் கொள்கை கைவிட்ப் பட்டது.

டி என் ஏ மீதான ஆய்வுகள் தலைமுறை ரீதியாக மாறுவதை உறுதி செய்தன.டி என் ஏ பிரதி எடுப்பின் போது நிகழும் தவறுகள், ட்ராண்ஸ்போசான்கள் என்ப்படும் நகரும் பகுதிகள்,ரெட்ரோவைரஸ்கள்  இம்மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதும் உறுதிப்படுத்தப் பட்டது.

இதுவரை ஆவணப் படுத்தப்பட்ட உயிரின‌ங்களின் டி என் ஏ வின் வேதி மூலப் பொருள்கள்[A,C,T,G] அமைப்பு ஒன்றாக இருப்பது  ஒரு செல்  மூதாதையர் கொள்கையையும்[common ancestry] வலுப் படுத்தியது.

பரிணாமம் உண்மையிலேயே ஐயந் திரிபர நிரூபிக்கப்பட வேண்டுமானால் பல தலைமுறைகளின் DNAமாற்றங்கள் ஆவண்ப்படுத்தப்ப்ட்டு,தொடர்ச்சியான மாற்றங்கள் உயிரின் பிளவு[Speciation]  ஏற்படுத்துகிறதா,உருவ அமைப்பில் மாற்ற‌ம் ஏற்படுகிறதா என்பதை அறிய வேண்டும்.

உயிரின பிளவு ஏற்படும் சராசரி அளவு 3 மில்லியன் ஆண்டுகள் என பரிணாம அறிவியல் கூறுகிறது.ஆகவே இது நடைமுறைக்கு கடினம் என்பதால் இனவிருத்தி வேகமாக குறுகிய கால்த்தில் நடைபெறும் பாக்டீரியாக்கள் மீது பரிணாம ஆய்வு மேலே சொன்ன வகையில் நடைபெற ஆரம்பித்தது.

E colli எனப்ப்டும் பாக்டீரியா மீது 30+ வருடங்களாக் DNA வின் தலைமுறைரீதியான மாற்ற‌ங்கள் ஆவணப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

இப்படி பாக்டீரியாக்கள் டி என் ஏ மீது ஆய்வு மேற்கொண்ட சில மேதைகள் டார்வினின் கொள்கையாக்கதிற்கு மாற்று கொள்கை வடிவமைக்க முயல்கின்றனர்.அதில் குறிப்பிடத் தக்கவர்கள்  
 
1.ஃப்ரென்ச் வைரஸ் ஆய்வாளர் டிடியர் ரால்ட்

2.. அமெரிக்க உயிரியலாளர் லின் மர்குலிஸ்

இவர்கள் இருவருமே என்டோசிம்பையோசிஸ்[Entosymbiosis] என்னும் கொள்கையை வலியுறுத்தினர்.அதாவது டி என் ஏ வின் மாற்ற‌ங்கள் மூல காரணம் பாக்டீரியா,வைரஸ் போன்ற வேற்று DNA உயிரின‌ங்களுடன் கிடை மட்ட ஜீன் பரிமாற்ற‌ம் செய்வதுதான் என விள்க்கினர்.


Primary endosymbiosis involves the engulfment of a bacterium by another free living organism. Secondary endosymbiosis occurs when the product of primary endosymbiosis is itself engulfed and retained by another free living eukaryote. Secondary endosymbiosis has occurred several times and has given rise to extremely diverse groups of algae and other eukaryotes. Some organisms can take opportunistic advantage of a similar process, where they engulf an alga and use the products of its photosynthesis, but once the prey item dies (or is lost) the host returns to a free living state. Obligate secondary endosymbionts become dependent on their organelles and are unable to survive in their absence (for a review see McFadden 2001[16]). RedToL, the Red Algal Tree of Life Initiative funded by the National Science Foundation highlights the role red algae or Rhodophyta played in the evolution of our planet through secondary endosymbiosis.

அதாவது ஒரு செல் உயிர் பரிணம் வளர்ச்சி போலவே அனைத்தும் நடைபெற்றன என எளிமைப் படுத்தலாம்.

இப்பதிவின் காரணம் திரு ஜேம்ஸ் ஷாப்பிரோ என்ப்படும் அமெரிக்க சிகாகோ பல்கலை கழக பேராசிரியர் அவர்களின் கருத்தாக்கம் இப்போது பரிணாம அறிவியலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிற‌து.

அவரின் கருத்தாக்கம் என்ன?

1.ஒரு செல்லில் டி என் ஏ மட்டுமல்ல பிற பகுதிகளும் ,அல்லது உடலின் பல் பகுதிகளில் உள்ள‌ செல்களும் இணைந்து செயல்பட்டு சூழலுக்கு தக்க டி என் ஏ மாற்றத்தை உருவாக்குகின்றன.

இப்படி மாற்றத்தை உருவாக்க முடியும் உயிரினங்கள் வாழ்கின்றன.மற்றவை அழிகின்ற‌ன.

செல்கள் தங்களை ,தலைமுறையை சூழலுக்கு தக்க மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலும் என்பது ஒரு புதிய சர்சைக்குறிய கருத்துதான்.

டார்வினியத்தின் படி டி என் ஏ மாற்றம் சீரற்ற முறையில்[random] நடப்பதாகும்.ஷாப்பிரொவின் கொள்கையாக்கதின் படி மாற்றம் என்பது சூழலை பொறுத்து[adaptive] உருவாகிறது என்பது லாமர்க்கியன் கொள்கையின் உயிர்த் தெழுதல் என கூறலாம்.

இனி பரிணாம விவாதம் அனைத்துமே டி என் ஏ மாற்றம் என்பது சீரற்றதா[Random or Adaptive] இல்லையா என்னும் திசையில் பயணிக்கும்.இந்த விவாதங்களின் முக்கிய விடயங்களை பகிர்வோம் .


திரு ஷாப்பிரோவும் ஒரு செல் உயிர்களில் இருந்தே அனைத்து உயிர்களும் கிளைத்து தழைத்தன என்றே கூறுகிறார்..ஆனால் பரிணாம மரத்தில் கிளைகளுக்கு இடையேயும் கிடைமட்ட ஜீன் பரிமாற்ற‌ம்[Horizontal gene transfer] நடை பெறும் என்றே கூறுகிறார்.

இவருடைய கொள்கையாக்கத்தை இயற்கை மரபு பொறியியல்[Natural Genetic Engineering] என்று பெயர் இட்டுள்ளார்.

ஆக்வே இனி இயற்கைத் தேர்வா அல்லது இயற்கை மரபு பொறியியலா என்னும் விவாதம் சூடு பிடிக்கும்.

அறிவார்ந்த வடிவமைப்பு குழுவினர் வழி நடத்தப் பட்ட பரிணாம‌ம் என்னும் கொள்கையையும் அரவனைப்பவர்கள் என அறிவோம்.ஆகவே அவர்கள் இந்த ஷாப்பிரோவின் கொள்கையை ஆதரிப்பதில் வியப்பில்லை.

என்ன இந்த மாற்றத்தை உருவாக்குவதுதான் அறிவார்ந்த வடிவமைப்பாளர்[Intelligent Designer] என போட்டுத் தாக்க வசதியாக் இருக்கும்.

சூழலுக்கு ஏற்ப DNA மாறுகிற‌து என்பதை எப்படி நிரூபிப்பது? இது இப்போது கடினம் எனவே நினைக்கிறேன்.

இது குறித்து இன்னும் தகவல் அறிந்தால் பகிர்கிறேன்.

ஜேம்ஸ் ஷாப்பிரோவின் விளக்க உரை அவர் சிகாகோ பல்கலை கழக்த்தில் அவர் ஆற்றிய உரையை காணொளியாக பார்ப்போம்.
இது அவருடைய தளம்.


Slides of the Lecture


இவருடைய கொள்கையாக்கம் விவாதத்தில் உள்ளது என்பதும், இயற்கைத் தேர்விற்கு பதிலாக இயற்கை மரபு பொறியியல் வருமா என வரும் காலங்களில் பார்க்க்லாம்.

ஒரு விதத்தில் இவருக்கு நன்றி சொல வேண்டும்.அதாவது DNA மாற்றங்களால் சூழலுக்கு ஏற்ப வாழும் முன்னேற்றம்[beneficial change in DNA] ஏற்படும்,அதனால் உயிரின பிளவு, உரு மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் புத்த‌க்த்தில் வலியுறுத்துகிறார்.பல் சான்றுகள் அளிக்கிறார்.

சூழலுக்கேற்ற டி என் ஏ மாற்றம் என்பது செல்களால் குறுகிய காலத்திலும் ஏற்படும் என்பதும் ஆய்வுக்குறிய விடயம்.இதில் இன்னும் பல சிந்தனைகள் ,விவாதங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.ஆனால் இது அறிவியல் மட்டுமே சார்ந்தது என்பதால நாம் இதன் முன்னேற்றங்களை ஆவணப்ப்டுத்துவோம்!






இவர் கொள்கையாக்கத்தின் மீதான  விமர்சனம் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

நன்றி.

13 comments:

  1. நண்பர்களே
    பரிணாம‌ம் என்பதே டார்வினியம் அல்ல.பரிணாமத்தை விளக்கும் கொள்கைதான் டார்வினியம்,பரிணாமத்தை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு விள்க்கும் எந்த கொள்கைக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல.நிச்சயமாக் ஷாப்பிரோவின் கருத்து டார்வினியத்திற்கு மாற்று ஆகுமா என்பதற்கு பல் படிகள் கடக்க வேண்டும்.இது லாமார்க்கியத்தின் மறு பிறவி என்றே கூறலாம்.இது மீது தொடர் ஆய்வுகள் நடைபெற்றால் மட்டுமே நிலைக்கும்.

    சூழலுக்கு பொருந்தும் மாற்றத்தை செல்களினால் உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க ,சரி பார்க்க முடியுமா,பாக்டீரியாவிற்கு பொருந்தும் சான்றுகள் அனைத்து உயிரின‌ங்களுக்கும் பொருந்துமா என்பதே இபோதைய கேள்விகள்!

    ஷாப்பிரோவின் கொள்கையாக்கம் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்னும் ஊகத்திற்கு இடம் அளிக்கிறது என்றாலும் அதிலும் நாம் நனமையே காண்கிறோம்.

    வழி நடத்தப்பட்ட பரிணாம‌ம் என்பது மத்வாதிகளின் பல கருத்தாக்கங்களை முற்று முழுதும் மாற்றி அமைக்கும் என்பதிலும் ஐயமில்லை.

    பரிணாமம் குறித்த விவாதம் குறைந்த பட்சம் அறிவியல்ரீதியாக் நடக்கும்.

    இன்னும் சில பதிவுகளில் இந்த விவாதத்தை தொடர்வோம்.

    நன்றி

    ReplyDelete
  2. ஊர்பக்கம் "எருமை மேல மழை பெஞ்சாமாதிரி நிக்காதே" என திட்டுவார்கள். அதுபோல நீங்க என்னதான் சொன்னாலும் நம்மாளுக பரிணாமம் இல்லாத மாதிரியே நடிக்கிறாங்க. நீரும் விடாம எருமை மேய்ச்சுகிட்டே இருங்கீங்க! வாழ்க நின் பணி!

    எனிவே, 6-7 வருடங்களுக்கு முன்னாடி இந்து பத்திரிக்கையின் 'சைன்ஸ் அன் டெக்னாலஜி' இணைப்பில் வந்திருந்த ஒரு கட்டுரைப்படி, இசுரேலிய விஞ்ஞானிகள் எலிகளுக்கு குறிப்பிட்ட விதத்தில் உணவு பெற (சரியாக ஞாபகமில்லை) கற்றுக் கொடுத்தனர். பின்பு அவற்றினை கருவுற வைத்து (அவைகளுக்குள் உறவு மூலமாத்தாங்க!) குட்டி போட்டவுடன் குட்டிகளை பிரித்து தனியாக வளர்த்துள்ளனர். குட்டிகள் கற்றுதராமலேயே அந்த எகஸ்சசைஸை சரியாக பண்ணியதாக படித்தேன். லமார்கிசம் தவறு என முன்பு பாடபுத்தகத்தில் படித்ததற்கு மாறாக லார்மார்கிசத்தை நிருபிப்பது போல இம்முடிவுகள் இருந்ததால் இன்னும் நினைவிலேயே தங்கிவிட்டது.

    இதை பல விஞ்ஞானிகளும் நம்புவது போல தெரிகிறது. ஆப்பிரிகர்களுக்கு அறிவு கம்மி எனச்சொல்லி பதவி இழந்த DNA கண்டுபிடிப்பாளருள் ஒருவரான வாட்சன் நினைவிற்கு வருகிறார். நம்மூரில் பல தலைமுறையாக கற்று தலைமுறைகளுக்கு பாஸ் செய்வதால் பிராமணர்களுக்கு மற்றவரை விட அறிவு அதிகமுள்ளதாக ஒரு சிலர் நம்புவது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  3. 1400 ஆண்டுகளுக்கு முன்பே (ஏ)மாற்றுக் கொள்கை வந்துவிட்டதே.
    :)

    ReplyDelete
  4. இனி வேத புத்தகங்களின் ஆராய்ச்சியும் சூடுபிடிக்கும் நல்லா பொழுது போகும்...அய்யா...ஜாலிதான்... நன்றி சகோ.

    ReplyDelete
  5. வாங்க சகோ நந்த வ‌னத்தான்

    ஷாப்பிரோவின் புத்தகம் படித்ததால் எழுதியதுதான் இப்பதிவு.இதில் பாக்டீரியக்களின் பரிணாம மாற்ற‌ங்களை குறித்த ஆய்வுகள்,ஆவணப்படுத்தப் பட்ட முடிவுகளை அருமையாக விளக்குகிறார்.இப்படி பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி நடைபெறுவதை யாரும் மறுக்க முடியாது.இவருக்கு முன்பும் பலர் இந்த விடயங்களை எழுதியுள்ளனர்.

    இதில் இவர சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் உருவாக்கும் தன்மை செல்களுக்கு உண்டு என்ற கருத்தை வலியுறுத்தினாலும் இதுவும் புதிதில்லை,நம் உயிரின பிளவு பற்றிய பதிவில் ஒரே குழு பழ ஈக்கள் இரு குழுவாக்கி இருவிதமான உண்வுகளை அளித்தபோது அவற்ரில் உயிரின பிளவு ஏற்பட்டது என்பதை விவாதித்தோம்.

    இந்த விளைவுகள் அனைத்துக்கும் பொருந்துமா? மொத்த மாற்றத்தில் சீரற்ற மாற்றம்,சூழல் சார் மாற்றம் இவற்றில் எது எவ்வளவு பங்கு வகிக்கும் என்பதை காலம் முடிவு செய்யும்.

    பாருங்கள் 1000 ம்யுட்டேசன் வரும் எனில் அதில் 900 பயன்ற்றவை.ஒரு 99 மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் 1 மட்டுமே நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.இச்சூழலில் இவரின் செல்களின் சக்தி பற்றிய கூற்று எந்த அளவுக்கு உண்மையாகும்?

    இயற்கைத் தெர்வு அந்த நல்ல மாற்ற‌த்தை மட்டுமெ தேர்ந்து எடுக்கும்,மீதம் அழியும். இன்னும் பல கேள்விகளுக்கு விடை தேவை!

    நாம் பரிணாமம் குறித்து கற்பது அது ஒரு அறிவியல் கொள்கை என்பதால் மட்டுமே.

    அடிக்கடி வாங்க!

    நன்றி

    ReplyDelete
  6. வாங்க சகோ கோவி

    [மற்றவர்களுக்கு] (ஏ)மாற்ற‌ம் ஒன்றுதான் [அவர்களுக்கு] (ஏ)மாற்றம் இல்லாதது என்ற கொள்கையின் அடிப்படையிலேயே (ஏ)மாற்றுக் கொள்கை அளிக்கின்றனர்.

    நன்றி

    ReplyDelete
  7. வாங்க சகோ யாசிர்,

    டார்வினை அவர் எழுதிய புத்தகம்& கொள்கைக்காக அவர் என் சொத்தை திருடிவிட்டார்,என் வீட்டு சுவ‌ற்றில் உச்சா போனார் என்ற வரைக்கும் திட்டி தீர்த்து விட்டார்கள்.

    டார்வினுக்கு மாற்று படைப்புக் கொள்கை அல்ல, இயற்கைக்கு உட்பட்ட இன்னொரு பரிணாமக் கொள்கை மட்டுமே.

    பரிணாமத்தின் இன்னொரு காரணியாக இந்த ஷாப்பிரோவின் சூழலுக்கு ஏற்ற மாற்ற‌ம் ஆகலாம் என நம் கணிப்பு,எனினும் முக்கிய காரணியாக் இயற்கைத் தேர்வுக்கு மாற்றாக பல படிகள் கடக்க வேண்டும்.பார்க்கலாம் ,

    பெரும்பாலான பரிணாம ஆய்வாளர்கள இவர் கருத்தை முழு அளவில் ஏற்கவில்லை.

    சபாஷ் சரியான போட்டி!!!!!!

    இப்போது ஷாப்பிரோ வின் கருத்துகளை எதிர்கவும் முடியாமல்,ஆதரிக்கவும் முடியாமல் மதவாதிகள் முழிப்பது அருமையாக் இருக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  8. சகோ நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன் :),
    இதைதான் கிருட்டினர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கூறிருந்தார் :).
    (உங்களுக்கு போர் அடிக்க கூடாது இல்ல அதான் நான் இப்படி :) )

    நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகிறாய். இதுதான் கிருட்டினர் சொன்னது.(அவர் கூறியதில் சில பல குறைகளும் உள்ளன) இதைத்தான் லாமார்க் கூறுகிறார்.
    ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து வளர காரணம் தேவையும் எண்ணமும் என்கிறார்.

    இன்னும் நமது கலாச்சாரத்தில் மனம்போல் வாழ்வு என்று கூறுவார்கள். அது இதுதானே.
    உங்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் அதை மனதில் பதிவு செய்யுங்கள். அடிகடி அதை ஞாபக படுத்தி கொள்ளுங்கள். காலப்போக்கில் நீங்கள் கார் வாங்கும் நிலைக்கு உயருவீர்கள் என்பது ஒரு மனோதத்துவம். இது ஒரு உதாரனத்திற்க்கு கூறினேன்
    .பல செயல்களுக்கும் இது பொருந்தும். மனிதனின் பல செயல்களுக்கு அவன் எண்ணம் தான் காரணம். தேவை எண்ணத்தை தீர்மன்னிக்கின்றது. சூழ்நிலை தேவையை தீர்மானிக்கின்றது.

    இப்பொழுது சொல்லுங்கள் டார்வின், லாமார்க் இருவர் கூறுவதும் சரிதானே. :)

    சகோ முடிந்தால் புற அறிவியலோடு அக அறிவியலையும் படித்து பழகி பாருங்கள் (அதான் ஆன்மீகம்), அதை நீங்கள் ஏற்காவிட்டாலும் விமர்சிக்கவாவது உதவும். :)
    நன்றி சகோ இரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திப்போம் :)

    ReplyDelete
  9. //உங்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் அதை மனதில் பதிவு செய்யுங்கள். அடிகடி அதை ஞாபக படுத்தி கொள்ளுங்கள். காலப்போக்கில் நீங்கள் கார் வாங்கும் நிலைக்கு உயருவீர்கள் என்பது ஒரு மனோதத்துவம்.//

    நானும் 20 வருடமாக மாளிகை போன்ற வீட்டை கட்ட வேண்டும்: பல அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வாடகைக்கு விட வேண்டும். வயதான காலத்தில் சிரமமில்லாமல் வாழ்க்கை ஓட வேண்டும். என்ற நினைப்பில் உழைத்து வருகிறேன்: இது ஏதும் கை கூட வில்லை என்றால் புரட்சி மணியிடம் வந்து நிற்பேன்: சரியா :-(

    ReplyDelete
  10. வாங்க சகோ புரட்சிமணி
    கிருஷ்னர் ஒரு மனிதன் மட்டும் என்ற வகையில் அவர் கருத்து அலசப் படுவதில் நம்க்கு விருப்பமே.

    நன் ஏற்கெனவே கூறியபடி இந்த லாமார்க்,ஷாப்பிரோ ஆகியவர்களின் கூற்றுகள் பலவித ஆன்மீக விளக்கங்கள்க்கு உட்படும்.யோகா செய்து நல்ல மரபணு உருவாக்கி அருமையன் குழந்தை பெறலாம் என்று கல்லா கட்டும் தொழில் நிச்சயம் வரும்.ஒருவேளை ஏற்கெனவே நடந்து கொண்டு இருக்கலாம்.யாகம் எல்லாம் அதனைத்தான் குறிப்பிடுகிறது என்றும் அடித்து விடலாம்.

    நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

    ஆன்மீகம் ,அகத் தேடல் எல்லாம் நம்க்கு எப்படி மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கை பிரசினையின்றி நீடிக்க என்ன செய்ய வேண்டும் என்ற தேடலே.

    ஓய்வுக்கு பின் வாருங்கள் இன்னும் விவாதிப்போம்,
    &&&&
    வாங்க சகோ சுவனப்பிரியன்(நசீர் அகமது)
    இந்த பேர் நன்றாக இல்லை எனக்கு சுவனப் பிரியன்தான்(பெயர் மட்டும் ஹி ஹி!) பிடிக்கும்.

    நீங்கள் மறுமையில் சுவனம் செல்லும் ஆசையில் இவ்வுலக வாழ்வை முற்ரும் துறந்தவர் என்றல்லவா நினைத்தேன்.ஆசை அதிகம்தான்!.உங்கள்க்கு விரும்பியது கிடைக்க வாழ்த்துகள்.

    சரி பரவாயில்லை சகோ புரட்சி மணியிடம் ஒரு பத்திரத்தில் எழுதி வாங்கி விடுவோமா???

    நான் சாட்சி கையெழுத்து இடுகிறேன்.

    ஆனால் அவர் நீங்கள் சரியாக நினைக்கவில்லை என போட்டுத் தாக்கி விட்டால் என்ன செய்வது?

    சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  11. Nazeer Ahamed
    // என்ற நினைப்பில் உழைத்து வருகிறேன்//

    சார்வாகன் said...

    //ஆனால் அவர் நீங்கள் சரியாக நினைக்கவில்லை என போட்டுத் தாக்கி விட்டால் என்ன செய்வது?//

    :) :) சகோ nazeer நீங்கள் உணமையாக நினைத்து உண்மையாக முயலுங்கள். கனவு நிறைவேறும். :)

    சார்வாகன் said...
    //யோகா செய்து நல்ல மரபணு உருவாக்கி அருமையன் குழந்தை பெறலாம் என்று கல்லா கட்டும் தொழில் நிச்சயம் //
    //நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.//
    இப்படியெல்லாம் பொதுவா சொல்லகூடாது சகோ. :) யோகாவால் இது சாத்தியமா என்பதை முதலில் அறிவியல் கொண்டு ஆய்வு செய்யவேணும்.

    சகோ யோகா கற்று கொடுப்பவர்கள் என்ன சொல்வார்கள் எனபதை விடுங்கள். ஆனால் நாளை சோதனை சாலையில் நல்ல மரபணு உருவாக்கி அருமையன் குழந்தை பெறலாம் என்று கல்லா கட்டப்போகிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். பொறுத்திருந்து பாருங்கள் :)

    சகோ நமாதான் காசு வாங்கம எழுதுறோம் பலரும் காசு வாங்கிக்கொண்டுதான் எழுதுகிறார்கள். நான் எதைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். :) இந்த உலகில் பெரும்பாலும் எல்லாமும் காசுக்காகத்தான் நடக்கின்றது.

    அதனால் ஒருவன் கல்லா கட்டினால் என்ன கல்லா கட்டாவிட்டால் நமக்கென்ன சகோ. நமக்கு தேவை உண்மைதானே :)

    ReplyDelete
  12. சகோ புரட்சிமணி,

    சோதனைச்சாலையில் குழந்தை உருவாக்குவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதிக செல்வு என்பதாலும்,தடை பல நாடுகளில் இருப்பதாலும் சட்ட விரோதமாக் நடை பெறுகிறது.

    மனித இனத்தின் பெரும்பகுதி அடிப்படை வசதிகளே பெற இயலா நிலையில் இப்படி சூப்பர் மேன் குழந்தைகள் இன்னும் சமூக பிரிவினை,சிக்கல் உருவாக்கி விடும்.

    நம் கவலை இப்படி உருவாக்கப்படும் மனிதர்க‌ள் புதிய உயிரினம் போல் பிற மனிதர்களுடன் கலக்க முடியாமல் இருந்தால் மிகப் பெரிய சிக்கல் ஆகி விடும்.அம்புலி கதைகள் உயிர் பெற்றுவிடலாம்.

    எழுதி எதுவும் பணம் வருவதாக் தெரியவில்லை. கூகிள் அட்சென்ஸ் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.அதில் நாம் பங்கு எடுக்கவில்லை.
    அதேல்லாம் அதிக பேர் பார்வையிடும் இணைய தளங்களுக்குத்தான் பொருந்தும்.நம் தளத்தை தினமும் சராசரியாக 200+ மட்டுமே படிக்கின்றனர்.

    யோகா,... மரபணுவில் நல மாற்றம் உருவாக்குவது குறித்து நீங்கள்(நான்!) சொன்ன விடயம் குறைந்த பட்சம் தவறு என்று நிரூபிக்கப் பட முடியாது.

    வரும் காலத்தில் இது சோதிடம் போல் ஆகிவிடும் என்பதையே சொல்ல் வந்தேன்.வேறு ஒன்றும் இல்லை.

    நன்றி

    ReplyDelete
  13. Genetically engineered babies.
    &&&&&&&
    http://www.humansfuture.org/genetic_engineering_designer_babies.php.htm


    http://blogs.discovermagazine.com/80beats/2011/04/21/genetically-engineering-babies-with-less-disease-and-3-parents-seems-safe/

    ReplyDelete