Tuesday, May 22, 2012

தடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்தியமா?ஒரு வரலாற்றுப் பார்வை


தடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்தியமா?ஒரு வரலாற்றுப் பார்வை

இயற்பியல் படித்தவர்களுக்கு ஆற்றல் மாறாக் கோட்பாடு [ law of conservation of energy ] என்பது தெரியும்,இருந்தாலும் சொல்லி விடலாம்.
" ஆற்றலை உருவாக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒரு வகை ஆற்றல்(சக்தி) இன்னொரு வகை ஆற்றலாக் மறுகிறது"

ஆகவே ஆற்றல் என்பது இலவசமாய் கிடைக்காது.நமக்கு மின் ஆற்றல் வேண்டுமெனில் மின் தயாரிப்பு இயந்திரம் இயந்திர சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது. வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதிப்படி ஒரு சக்தி மாற்றும் இயந்திரத்தின் வினைத்திறமை[efficiency] 100% விட குறைவாக்வே இருக்கும். 100 அலகுக‌ள் ஆற்றல் தயாரிக்க 100ஐ விட அதிகமான அலகுக‌ள் இன்னொரு வகை ஆற்றல் தேவைப்படும்.   

ஆனால் வரலாற்றில் பலர் சூனயத்தில் இருந்து தடையற்ற சக்தி தயாரிக்க முடியும் என்று நம்பி த்ங்களின் செல்வம், உழைப்பை இதற்காக் செலவிட்ட்னர்.சிலர் காப்புரிமை கூட பெற்றன்ர்.இன்னும் கூடல் சிலர் இது போன்ற ஆய்வில இருப்பதாக கேள்வி. .பலர் இதற்கு இன்னும் முயற்சி செய்கின்றனர் என்பது ஆச்சரியமாக் இருக்கும்.இங்கே பாருங்கள்!!!!!!!!!!!!!
http://www.liveleak.com/view?i=57a_1297510875



இந்த தடையற்ற சக்தி வழங்கும் இயந்திரம் பற்றி ஒரு சிறிய எடுத்துக் காட்டு 


மேலே காட்டப்பட்ட குண்டுகள் கட்டப் பட்ட சக்கரம் சுற்றிவிட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும் என்று பலர் முயன்றனர்.அதாவது மைய விலக்கு சக்தியும்,புவி ஈர்ப்பு விசையும் இதற்கு உதவி செய்கிறது என்று நினைத்த்னர்.
ஆனால் இது நடக்காது.ஏன் என்று யோசியுங்கள்.காணொளியில் இது போன்ற பல விஷயங்களை அலசுகின்றனர்.


இன்னும் கூட சக்தியை மிச்சப் படுத்தும் இயந்திரம் என்று பல ஏமாற்று வேலைகள் விற்பனைக்கு உளளன. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.தடையற்ற சக்தி இயந்திரங்கள் பற்றிய ஒரு வரலாற்று காணொளி கண்டு களியுங்கள்!!!!!!!!!.

10 comments:

  1. நண்பரே,

    ஏற்கனவே இந்த பதிவையும் காணொளியையும் பதிவிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். காணொளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இங்கே தவிர வேறு எங்குபார்க்க முடியும்.

    ReplyDelete
  2. எப்படியோ என்னை பெட்ரோ டாலர் சம்பாதிக்க விடாம செய்றதுக்குன்னே நீங்கள் உள்பட சில ஆட்கள் சுற்றுவது மட்டும் எனக்குப் புரிகிறது:)

    ReplyDelete
  3. நரேன்!உங்களோட வழக்கமான் கடையே இதுதானே!உங்களுக்கு வவ்வால் கடைக்கு வழிகாட்டுனது யார்?சரி அப்படியே தப்பித் தவறி வழி தெரியாமல் போயிட்டீங்கன்னு சொன்னாலும் கூட அங்க போய் ஏன் மஞ்சளா பத்திரிகை படிக்கிறீங்க:)

    அதென்னமோ உண்மைதான்.காணொளிகளை இங்கே தவிர வேறு எங்கே பார்க்க முடியும்!

    ReplyDelete
  4. \\வரலாற்றில் பலர் சூனயத்தில் இருந்து தடையற்ற சக்தி தயாரிக்க முடியும் என்று நம்பி த்ங்களின் செல்வம், உழைப்பை இதற்காக் செலவிட்ட்னர்.\\ ஹா.............ஹா...........ஹா...........

    ReplyDelete
  5. செலவே இல்லாம எனர்ஜி தயார் பண்றேன்னு சொல்லிட்டு இந்த மடச் சாமிபிராநிங்க எக்கச் சக்கமா சொந்த எனர்ஜியை செலவு பண்ணிக்கிட்டு இருக்கானுங்க ஹா....ஹா...ஹா...

    ReplyDelete
  6. வாங்க சகோ இராஜநடராஜன்,

    நலமா கருத்துக்கு நன்றி

    சகோ நரேன்,

    ஆமாம் அந்த பதிவில் ஏற்கெனவே இட்டதுதான்.என்னமோ எழுத கொஞ்சம் போரடிக்குது.இருப்பினும் வாரம் பதிவு ஒன்று போடவேண்டும் என கொஞ்சம் மீள் சுழற்சி செய்கிறோம்.

    சகோ ஜெ தாஸ்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    நன்றி

    ReplyDelete
  7. @Jayadev Das, நண்பரே, இதில் கேலி செய்வதற்கு என்ன இருக்கிறது?. அவர்கள xஐ கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அது yயில் முடிந்து அது மனிதத்துக்கு நல்லதாக அமைந்தால் . நம் அனைவருகும் தானே நல்லது. இதே மாதிரி அனைத்து விஞ்ஞானிகளும் நினைத்திருந்தால் நாம் இப்படி முன்னேறி இருப்போமா?

    ReplyDelete
  8. வாங்க சகோ தமிழன்,

    வண்க்கம் .நீங்கள் சொலவ்து மிக சரி.இந்த ஆய்வுத் தேடலில் தங்கள் வாழ்வையே தொலைத்தவர் பல பேர்.வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வர்லாற்றில் அறியப் படுவார்கள்.

    இன்னும் சில ஆய்வுத் திருட்டுகளும் நடந்தது உண்டு.திரு டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை எடிசன் தனது என காப்புரிமை பெற்றார்.வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு மாமேதை டெஸ்லா.

    இது போல் பலர் நாம் அறிவது இல்லை.

    நன்றி

    ReplyDelete
  9. இயற்கையில் தடையற்ற சுழற்சி விசை இருக்கிறது, மழை, பருவங்கள், உயிரின தோற்றம் - வளர்ச்சி - மறைவு. நாம் தடையற்ற ஆற்றலை செயற்கையாக உருவாக்கிப் பயன்படுத்துவதில் இதுவரை முழுமையாக வெற்றி பெற்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Kovi, you seem right, however, I have following doubts

      மழை,---> It is not unique but cycle

      பருவங்கள்,---> I don't know how to say correctly but I feel it's not unique too.

      உயிரின தோற்றம் - வளர்ச்சி - மறைவு.--> Definitely cycle, right?

      Delete