வணக்கம் நண்பர்களே,
கடந்த வாரம் சீனாவில் ஒரு பெண்ணுக்கு வலுக்ட்டாயமாக கருக்கலைப்பு சீன அரசால் செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.சீனாவில் கடந்த 30+ வருடங்களாக ஒரு குழந்தைக்கு மேல் பெறுபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என சட்டம் அமலில் உள்ளது.அப்பெண்னால் அபராதம் செலுத்த இயலவில்லை என்பதால் இந்த நடவடிக்கைஅ எடுக்கப் பட்டது என செய்திகள் கூறுகின்றன.
இது ஒரு மனித விரோத செயல் என்பதில் துளியும் ஐயமில்லை..இதற்கு நம் கண்டனங்கள்.
Year Population
1000 275 million
1500 450 million
1650 500 million
1750 700 million
1804 1 billion
1850 1.2 billion
1900 1.6 billion
1927 2 billion
1950 2.55 billion
1955 2.8 billion
1960 3 billion
1965 3.3 billion
1970 3.7 billion
1975 4 billion
1980 4.5 billion
1985 4.85 billion
1987 5 billion
1990 5.3 billion
1995 5.7 billion
1999 6 billion
2000 6.1 billion
2005 6.45 billion
2010 6.8 billion
2011 7 billion
2020 7.6 billion
2027 8 billion
2030 8.2 billion
2040 8.8 billion
2046 9 billion
2050 9.2 billion
இப்பதிவில் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி சில விவரங்கள் அறிவோம்..கடந்த இரு நூற்றாண்டுகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் முதலில் அறிவோம்.கடந்த நூற்றாண்டின் மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் அதிகரித்தது,கடும் கொள்ளை நோய்கள் ஒழிக்கப்பட்டன போன்றவையே மக்கள் தொகை அதிகரிப்பின் காரணங்களாகும்.
மக்கள் தொகை என்பதும் ஒரு வகை செல்வம் என்ற கருத்து ஏற்புடையதே எனினும் "அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதும் உண்மையே.
மக்கள் தொகை அதிகரிப்பின் வீதம் குறைவதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும்,இபோதைய அதிகரிப்புவீதம் வருடத்திற்கு 1.1% என்பது ஒரு வருடத்திற்கு சுமார் 7 கோடி மக்கள் தொகை அதிகரிப்பு நடக்கிறது.
அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாழ்வாதாரம்,வசதிகள் செய்து கொடுக்கும் அரசுகள் உலகில் மிக குறைவு.மனித உழைப்பு,உயிர் மிக மலிந்து போனதற்கும் இந்த அதிகரிப்பு காரணமே. இனவாதம்,சமூக சிக்கல்கள் அதிகரிப்பும் இதன் பக்க விளைவுகளே!.
எனினும் வரும் காலங்களில் அரசு மக்கள் தொகையை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் சூழல் உருவாகுமா என்பதே நம் கேள்வி..
இதனை கூடுமானவரை தவிர்த்து மக்கள் தொகை அதிகரிப்பின் சிக்கல் பற்ரிய கல்வி,விழிப்புணர்வு அளிக்க்லாம்.
சீனாவில் இப்படி உச்ச கட்ட கட்டுப்பாட்டினால் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு,அவர்களுக்கு மருத்தும்வம்,பாதுகாப்பு போன்ற சிக்கல் எழுகிறது. இபோதைய ஒரு குழந்தைக்கு அம்மா,அப்பா,2 பாட்டி,2 தாத்தா உள்ளனர்.ஆகவே 6 பேரை காப்பாற்றும் பொறுப்பு ஒருவர் மேல் விழுகிறது.இது இன்னும் அதிக சிக்கலை உருவாக்கும்.
ஆகவே மக்கள் தொகை குறைப்பு என்றாலும் படிப்படியாக் குறைத்தலே சிறந்தது.சீனா போல் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அபராதம் என்ற உச்ச கட்ட கட்டுப்பாட்டுக்கு பதில், ஒரு பெண் இரு குழந்தை மட்டும் பெற்றால் ஊக்கம் அளிக்கும் சலுகைகள் அளிக்கலாம்.
மக்கள் சமூகமாக வாழ ஆரம்பித்து பல அயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது.பல் சாதனைகள்,ஆட்சிமுறை ,சமூக நலன் பரிசோதனைகள் செய்து
ஜனநாயகமும்,மத,இன சார்பற்ற அரசியல்,மனித உரிமைச் சட்டங்கள், கொள்கைகளே சிறந்தது என உணர்ந்தோம்.
அதுபோல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பதும் நம்மால் நமக்கு ஏற்படும் பிரச்சினை என அறிந்து இரு குழந்தைகளுக்கு மேல் பெறுவதைத் நாமாகவே தவிர்ப்பது மிக நல்லது.அனைவருக்கும் நல்ல உணவு,சுகாதாரம் கல்வி,வாழ்வாதாரம் என்பதை உறுதி செய்யும் போராட்டத்தில் இப்பிரசினை தடையாக இருக்கக் கூடாது என்பதே நம் விருப்பம்.
சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாடு அது பற்றிய சிக்கல்களை இந்த ஆவணப்படம் விள்க்குகிறது
நன்றி
Thank to Google for the statistics
Thank to Google for the statistics
பதிவுக்கு ஏன் 18+ போட்டு இருக்கிங்க ?
ReplyDeleteபதிவுக்கு ஏன் 18+ போட்டு இருக்கிங்க ?
ReplyDeleteதானும் தனது குடும்பம்,பிள்ளைகளும் வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க தெரிந்தவனுக்கு குடும்ப கட்டுபாட்டு அறிவுரை தேவையேயில்லை.
ReplyDeleteஎனது மதம் சொல்லிவிட்டது. ஆகவே நல்ல உணவு, சுகாதாரம், கல்வி, தரமான வாழ்க்கை இதுவெல்லாம் முக்கியமா சகோ?
சிறந்த பதிவு சார்வாகன்!
ReplyDeleteமுன்பு முட்டையை கோழி அடை காத்து சில நாட்களுக்குப் பிறகுதான் குஞ்சு பொரிக்கும். ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியினால் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் குறுகிய காலத்திலேயே குஞ்சுகள் வெளி வருகின்றன. அதே போன்று வீரியமுள்ள சீக்கிரமே பலன்தரக் கூடிய விதைகளை மனிதன் கண்டு பிடிக்கிறான். கறவை மாடுகள் முன்பை விட தற்போது அதாவது கலப்பின பசுக்கள் ஐந்து மடங்கு ஆறு மடங்கு பால் உற்பத்தியை மனித குலத்துக்கு தந்து கொண்டிருக்கிறது. எனவே மனிதர்கள் அதிகரிப்பதினால் உணவுப் பஞ்சம் வந்து விடும் என்பது அறியாமையில் வரும் வாதம். மனிதர்கள் உணவு உற்பத்தியை முறைப்படுத்தி உலகம் முழுமைக்கும் முறையாக பங்கிடாததனால் சில நாடுகளில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
ஒரு பெண்ணின் உடல் நிலை கருதி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் வரவேற்கலாம். தற்காலிக தடுப்பு முறைகளை கையாலலாம். நிரந்தரமாக நீக்கிக் கொண்டால் சம்பந்தப்பட்டவருக்கு விபத்திலோ நோயிலோ குழந்தை இறந்தால் அவரின் நிலையையும் நாம் எண்ணிப் பார்க்க வெண்டும்.
சைனாவைப் போல் கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டமும் கண்டனத்துக்குரியது.
மிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteநல்லவேளை. பைபிள் குரான் சொன்ன வேகத்தில்- எகிப்தில் வளர்ந்த வேகத்தில் மக்கள் தொகை வளரவில்லை.
ஜோசப்புடன் - யாக்கொபு (இஸ்ரேல்) சென்றது 70 பேர் மட்டும். திரும்பும்போது 30 லட்சம் பேர். இருந்தது 2 தலைமுறை மட்டுமே? 30 லட்சம் பேரும், 10 மணி நேரத்தில் செங்கடல் இரண்டாகப் பிரிந்து கடல் நிற்க நடுவில் கடந்து சென்றதாகக் கதை. இந்த வேகத்தில் மக்கள் தொகை வளரவில்லை. நல்லது.
பெருமளவில்- கர்ப்பத்தில்- பிறந்து ஒரு வருடத்திற்குள் மரணம் தவிர்த்து வருவதும், மருந்துகளால் மரணம் தள்ளிப் போய்- வயதானவர் வாழ்வதுமே மக்கள் தொகை வளர்ச்சிக்கு காரணம்.
ஆனால் குழந்தை பிறப்பு- கர்ப்பம் தரித்தலே குறைகிறது என்று படித்த ஞாபகம். நீங்களும் விளக்குங்கள்
ஒரு குழந்தையை மட்டும் பெற்றாலே போதுமானது, சில வேளைகளில் குழந்தையைப் பெறாமலேயே வாழ விரும்பினால் அதனையும் செய்யலாம் ! இல்லை எனில் கடவுளால் கூட உலகை காக்க முடியாமல் போய்விடும் என்பதே நிதர்சனம்
ReplyDelete//ஜோசப்புடன் - யாக்கொபு (இஸ்ரேல்) சென்றது 70 பேர் மட்டும். திரும்பும்போது 30 லட்சம் பேர். இருந்தது 2 தலைமுறை மட்டுமே? 30 லட்சம் பேரும், 10 மணி நேரத்தில் செங்கடல் இரண்டாகப் பிரிந்து கடல் நிற்க நடுவில் கடந்து சென்றதாகக் கதை. இந்த வேகத்தில் மக்கள் தொகை வளரவில்லை. நல்லது// இந்த பொய் பிரியர் என்ன சொல்கிறார், புரியவில்லையே.
ReplyDeleteசகோ.சார்வாகன்,
ReplyDeleteவணக்கம்.
நல்ல கருத்தாக்கம்,
கட்டாய கருக்கலைப்பு கம்யூனிச சர்வாதிகாரத்தின் வெளிப்பாடே.மனித உரிமை மீறல் ஆகும்.
விழிப்புணர்வும், வழிக்காட்டுதலுமே அரசு செய்ய வேண்டும்.
சு.பி சொல்வது போல எல்லாம் உணவுத்தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது.
கோழிப்பண்னையில் ஒருங்கிணைந்து வேலை செய்து உற்பத்தி செய்வதால் நிறைய வருகிறது ,ஆனால் அதற்கும் காலம் எடுத்துக்கொள்ளவே செய்யும்,அங்கு ஒன்றும் எந்திரத்தில் அச்சடித்து உருவாகவில்லை சில மணியில் உற்பத்தி செய்ய.
உணவு இப்போது வேண்டுமானால் ஒரு இடத்தில் அதிகம் இருக்கலாம், ஆனால் சரியாக பகிரப்படவில்லை என்கிறார் , அதை எப்படி இலவசமாக யார் பகிர்வார்கள், எனவே தட்டுப்பாடு இருக்கவே செய்யும்.
பெட்ரோலியம் கூட தான் ஓர் இடத்தில் அதிகமாக இருக்கு இலவசமாக பகிர்ந்தால் அனைவருக்கும் நல்லது செய்வார்களா? அதே போலத்தான் எல்லா வளமும்,எனவே மக்கள் தொகை பெருகினால் வருங்காலத்திற்கு ஆபத்து தான்.
நல்ல பதிவு நண்பரே.
ReplyDeleteவீட்டுக்கு ஒரு பிள்ளை என்பது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போடுவது போன்றதுதான். இருந்தாலும் கடன் சுமை அதிகமானவர்கள் கடுமையான சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டுமே. அந்த வகையில் சீனாவின் நிலையை நான் ஆதரிக்கிறேன்.
இந்தியாவிற்கும் இது தேவை. மக்கள் தொகை வளர்ச்சி ஜீரோவை தொட்டவுடன் `இரண்டு` என்ற நிலைக்கு நாம் வரலாம்.
சீனாவின் இந்த செய்தி மனசாட்சிக்கு விரோதமாக இருந்தாலும், தெருவில் அனாதையாய், பட்டினியால் சாகும் மனிதர்களை பார்த்தால், இப்படியெல்லாம் சாவதைவிட கருவிலேயே கொல்வது பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது.
நம் உடம்பில் ரத்தம் இவ்வளவுதான் எடுக்கவேண்டும் என அளவு வைத்திருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு அளவை பூமிக்கு நிர்ணயிக்கவில்லை. கடந்த நூற்றாண்டில் ஆரம்பத்தில் 2 பில்லியன் மக்களுக்காக பூமியிலிருந்து தண்ணீர் உறிஞ்சிய நாம், இன்று 7 பில்லியன் மக்களுக்காக தண்ணீரை உறிஞ்சுகிறோம்? இப்போது கிணறுகளையே காணோம். இது எங்கே போய் முடியும்? எனவே பூமியை (இயற்கையை) காப்பாற்ற சீனாவை போல் கடுமையான கட்டுப்பாடும் தேவை. ஆனால் அதுவும் இயற்கைக்கு விரோதம் என கூச்சல் வருவதுதான் வினோதம்.
சகோ இக்பால் செல்வன்,
ReplyDeleteஉங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ரொபினை அதிக நாட்களாக காணவில்லையே!!!
அரபியர்கள் அவரை பயமுறுத்தியிருப்பார்களோ என்று நினைத்ததுண்டு.
வணக்கம் வாங்க சகோ தேவப்பிரியா,
ReplyDelete"பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்: என்பதுதானே ஏல் என்னும் யாவே என்னும் கர்த்தர் என்னும் ....ஆண்டவன் கட்டளை.ஆகவே யூத்ர்கள் அப்படி பெருகி இருப்பார்கள் என நம்புவோர் நம்பட்டும்.
நம்மை பொறுத்தவரை யூதர்கள் எகிப்தியர்களின் ஒரு பிரிவு என்பதே!
கிறித்தவம் பற்றி மிக அற்புதமாக் ,ஆய்வு செய்து இருக்கிறீர்கள்.
உங்களோடு அதிகம் விவாதிக்க ஆசை.
கொஞ்சம் நேரம் இன்மை சகோ!.சீக்கிரம் விவாதிப்போம்.
கருத்து மற்றும்,வருகைக்கும் மிக்க நன்றி சகோ!
*******
வணக்கம்,வாங்க சகோ இக்பால் செல்வன்,
நலமா,சீக்கிரம் தமிழ்மணத்தில் இணையுங்கள்,உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.நம் தளத்தில் உங்களுக்கு இணைப்பு கொடுத்து விடுகிறேன்
நன்றி
**********
ஸ்தோத்திரம் சகோ ராபின் நலமா,
சகோ தேவ பிரியா சொல்வதை நான் கொஞ்சம் விளக்கி இருக்கிறேன்.இன்னும் விள்க்க ஆவலாக இருக்கிறேன்.
அடிக்கடி வாங்க
நன்றி
**********
வணக்கம் வங்க சகோ வவ்வால்
நான் பேச நினைப்பதை பல முறை நீங்கள் பேசி விடுவதால் நமக்கு பேச முடிவதில்லை.வழக்கம் போல் கலக்கல் பின்னூட்டம்.
பின்னூட்ட பின்லேடன் (நன்றி சகோ குரங்கு பெடல் Nice Name!)என்ற பெயர் கேபிள் சாரின் பதிவில் படித்து சிரித்து மாளவில்லை.
வாழக வளமுடன்
************
வாங்க சகோ சிவானந்தம்,
ஏற்கெனவே உங்களின் சில பதிவுகளில் இது போன்ற சிக்கல்களை அலசி இருந்தீர்கள்.மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு பிரச்சினை என்று உணர்ந்து அதனை தவிர்க்க ஆவண செய்வது நல்லது.அது கட்டாயமாக ஆகும் சூழலுக்கு உள்ளாகாமல் இருப்பது நல்லது.ஆயினும் இன்று சீனாவில் நடப்பது பிற பகுதிகளில் எதிர்காலத்தில் நடக்கும்.
எனக்கு சீனாவில் 7 மாத கர்ப்பக் குழந்தையை கொலை செய்ததாகவே படுகிறது. கம்யுனிசம் என்பது இப்படி முரட்டுத்தனமான ஆட்சியாக் இருந்ததால் அழிந்ததோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது.
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
******
வருகை பதிவு
ReplyDeleteவணக்கம் சகோ கோவி
ReplyDelete//பதிவுக்கு ஏன் 18+ போட்டு இருக்கிங்க ?//
அந்த சீனப்பெண்ணுக்கு கர்ப்பத்தில் 7 மாத குழந்தை இருந்த போது வயிற்றில் ஊசி போட்டு,குழந்தை இறக்கும் படி செய்தது மனித நேயமற்ற வன்முறை ஆக தெரிந்ததாலும்,அது பற்றி காணொளியில் பல் இடங்களில் விவாதிக்கப்படுவதாலுமே 18+ இட்டேன்.
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
*******
வணக்கம் சகோ குயிக்ஃபாக்ஸ்,
மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு பிரச்சினையாக இபோது உள்ளது,இது மிகப்பெரிய சிக்கலாகும் முன்பே நாமே தவிர்க்க முயல்வோம் என்பதே நம் கருத்து.இது ஒரு பிரச்சினை அல்ல என்பது "கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும்" என்னும் நம்பிக்கைக்கு சமம்.
வருகைக்கும் கருத்துக்கும் கருத்துக்கு நன்றி
************
ஸலாம் வாங்க சகோ சுவனப் பிரியன்,
வவ்வால எற்கெனவே பதில் கொடுத்து விட்டார் எனினும் இபோதே உலகில் 90 கோடி[crores] மக்கள் உணவின்றி வாருகின்றனர்.இது மொத்த மக்கள் தொகையில் 13%.ஆகும்.
http://en.wikipedia.org/wiki/Food_security
In India, the second-most populous country in the world, 30 million people have been added to the ranks of the hungry since the mid-1990s and 46% of children are underweight.[5]
...
Worldwide around 925 million people are chronically hungry due to extreme poverty, while up to 2 billion people lack food security intermittently due to varying degrees of poverty (source: FAO, 2010). Six million children die of hunger every year – 17,000 every day.
கோழி,ஆடு,மாடு... போன்ற அசைவ உணவுகளுக்கு கூட அடிப்படையில் தாவரம்,தானியம் தேவை,காடுகள் அழிப்பால் மழை பொய்க்கிறது,விவசாய நிலங்கள் வீடாக மாறுவதும் நீங்கள் அறியாத விடயம் அல்ல,
நம் சகோதர நாடு பங்களாதேஷ் மக்கள் தொகை பெருக்கத்தால் மிக அதிகமாக் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் நாடு.நாட்டின் 50+% நிலம் விவசாயம் செய்யப்பட்டாலும் உணவு பற்றாக்குறை,வேலை இல்லா திண்டாட்டம் போல் பல சிக்கல்கள்..
http://countrystudies.us/bangladesh/26.htm
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
****
வாங்க சகோ ஜோதிஜி
நலமா!
வருகைக்கும் கருத்துக்கும்(!!????) நன்றி
சகோ.சார்வாகன்,
ReplyDeleteஅறிவியல் கண்கொண்டு உலகியலை நோக்கும் போது தானாகவே ஒத்த சிந்தனை வந்துவிடுகிறது என நினைக்கிறேன்.
கலக்கல் பதிவினைப்படித்தால் கலக்கல் பின்னூட்டம் தானாகவே வரும் போல.சிந்தனையை தூண்டும் நீங்கள் தான் இதுக்கு பொறுப்பு :-))
இந்த வீனாப்போனா குரங்குப்பெடல் பத்த வச்சதை நீங்களும் பிடிச்சுக்கிட்டிங்களே அவ்வ்வ்!
பலப்பேரு என்னை பின்னூட்ட சனியன்னே சொல்லுறாங்க,அதுக்கு பின் லேடன் மோசமில்லை :-))
அப்போஸ்தலர் .5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.
ReplyDeleteராமின் -சற்றே பைபிள் படியுங்கள் - புனைந்துள்ள கதைப்படி இருந்தது 2 தலைமுறை மட்டுமே.
எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்.
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர். அதுவும் எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. மேலும் ஆதாரம் வேண்டும் என்றாலும் தரப்படும்.
அப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம்
ReplyDeleteபவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம்
ஆதி 46:27 ல் யாக்கோபினர் 66 பேர் மட்டும் மற்றும் ஜோசப் குடும்பம் 4 உடன் 70 பேர் எனக் கதை சொல்கிறது, ஆனால் உள்ள வேறு கதைப்படி 2 தலைமுறை தான் -மேலும் ஆதாரம் வேண்டும் என்றாலும் தரப்படும்.
ராபின் பைபிளில் புனைந்துள்ளவை உள்ளது உள்ளபடி தான் தந்துள்ளோம், நீங்களே பைபிளை சரி பார்த்து தவறு இருந்தால் சொல்லவும்.
இப்பொழுது மக்கள் தொகை பிரச்சனை- மற்ற எல்லா தேவைகளொடு தண்ணீருக்கும் தட்டுப்பாடு வரச் செய்யும்.
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது நம் நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்றுதான்,ஆனால் கருகலைப்பு என்பதைவிட கரு உருவாகா வண்ணம் தடுத்தல் முறை சிறந்ததாகக் கருதுகிறேன்.
ReplyDeleteமக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம், ஆனால் சுயமாக செய்யும்படி செய்ய வேண்டும். 2வது குழந்தை பெறுபவர்களுக்கு ரேஷன் போன்றவை நிறுத்தப்படும் எனச் சட்டம் வந்தால் பயன் தரலாம். ஓட்டு வங்கெ அரசியல் வாதிகள் செய்வார்களா?
ReplyDeleteதேவப்ரியா சாலமன் கொடுத்த வசனங்கள்- எகிப்தில் 400 வருடம் என்றும் 430 வருடம் எனச் சொல்வது கண்டோம். பைபிள் காலத்தில் ஒரு தலைமுறை 40 வருடம் என நம்பினர்; ஆனால் உண்மையில் 25 வருடம் என்பர்.
400 என்றால் 16, 430 - 17 + ஆகும்.
2 தலைமுறை என்பதற்கு பைபிள் ஆதாரம் தரமுடியுமா
கருப்பையா
முதலாவதாக இக்பால் செல்வனை வரவேற்போம்.
ReplyDeleteஇரண்டாவதாக கோவியின் பின்னூட்டத்தை வழிமொழிவோம்.
மூன்றாவதாக சுவனப்பிரியனின் பாதி கருத்தை மட்டும் ஆதரிப்போம்.வத வதன்னு கோழிக்குஞ்சு பெருகுவதை கரிசனமில்லாமல் நிலத்தில் தூக்கி வீசுவதை பார்த்த அதிர்ச்சி இந்தப் பின்னூட்ட நேரத்தில் நினைவுக்கு வந்து விட்டது.
மூன்றோடு விட்டு விட்டால் சரிப்படாது. நான்காவதாக வேக நரி இங்குமங்கும் ஓடித்திரிந்தாலும் ராபின் மட்டும் ரகசியமாகவே வருவதன் மர்மம் என்ன:)
ஐந்தாவதாக வவ்வால்!எங்களுக்கும் பின்னூட்ட திசுக்கள் சுரக்குமாக்கும்:)
ஜனத்தொகை கட்டுப்படுத்துவது என்பதை பூமியென்ற குறுகிய வட்டத்தில் மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்?
இன்று உலகமயமாக்கல் சித்தாந்தம் நாளை கிரகமயமாக்கல் சித்தாந்தமாகும் போது மாற்று கிரகத்தில் போய் வசிப்பது யார்:)
ஈழத்தமிழர்களும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது என்ற கொள்கைக்குள் நுழைவது சரியான தீர்வா?
அதே நேரத்தில் சீனாவின் சித்தாந்த கோட்பாட்டின் ஜனத்தொகை சரியான ஒன்றா?
மனிதனே நியமித்துக்கொண்ட பொய்யான எல்லைகள் இல்லா யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகத்தான தத்துவத்தின் மனித இனம் என்ற நேர்கோட்டின் விழிப்புணர்வில் ஜனத்தொகை பிரச்சினையற்ற ஒன்றே.
பல்கி பெருகுவோம் வாருங்கள்!
வணக்கம் சகோ கருப்பையா
ReplyDeleteசகோ தேவப்பிரியா இரு தலைமுறைகள் என் எந்த புத்தக்த்தில் இருந்து கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை.
எனினும் 17 தலைமுறைகளில் 430 வருடங்களில் எனில் 70 பேர் 30 இலட்சம் ஆவதற்கு தலைமுறைக்கு 87% மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.இதற்கு ஒவ்வொரு பெண்ணும் 4 குழந்தைகள் பெற வேண்டும்.வருடம் 2.51% அதிகரிப்பு போதும்.சாத்தியம் எனவே தோன்றுகிறது.
நம் நாட்டின் வளர்சி வீதம் 1.4% ல் இருந்து 1.6% வரை என் கூறுவதாலே அஞ்சுகிறோம்.
கருத்துக்கு நன்றி
நன்றி
வணக்கம் சகோ இராஜநடராஜன்,
ReplyDeleteநீங்கள் வான மண்டலங்களில் நாளை குடியேறுவது பற்றி சிந்திக்கிறீர்கள்.நல்ல விடயம் எனினும் அது சாத்தியப்படும் வரை உண்மையாகாது.
நான் கூறியது ஒரு பெண் இரு குழந்தைகள் மட்டுமே பெறுவது.அதுவும் நாமாகவே சுய கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிப்போம் என்கிறேன்.அப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களை அரசு ஊகப் படுத்த வேண்டும் என்கிறோம்.
மற்றபடி இது பொதுவாக அனைவருக்கும் பொருந்தும்.
நன்றி
வஹாபி- சலபி(salafi) இவர்களுக்கிடையில் என்ன வித்தியாசங்கள்? யார் அதிக அபாயகரமானவர்கள்? நேரம் கிடைக்கு போது தெரிவியுங்க சகோ.
ReplyDelete//சார்வாகன்June 20, 2012 7:48 PM
ReplyDeleteசகோ தேவப்பிரியா இரு தலைமுறைகள் என் எந்த புத்தக்த்தில் இருந்து கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை.//
இங்கே விளக்கமாக
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html
யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே