வணக்கம்
நண்பர்களே,
கடந்த
மாதம் முதல் நடைபெற்ற குஜராத்,ஹிமாச்சல்பிரதேஷ் சட்ட மன்றத் தேர்தல் முடிவிகள் வெளிவந்துள்ளன.
குஜராத்தில் திரு
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க வெற்றி
பெற்று ஆட்சியைத் தக்க வைத்து உள்ளது.
ஹிமாச்சல் பிரதேசில் பா.ஜ.க
வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இப்பதிவில்
குஜராத் தேர்தல் முடிவுகளை அலசுவோம்.
குஜராத் என்றதுமே இப்போது முதலில் ஞாபகம்
வருவது 2002 கோத்ரா மதக் கலவரமே.
இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற
மோசமான மதக் கலவரம் என்பதும்,
அதில் ஆளும் மோடி அரசு
பாரபட்சமாக நடந்தது என்பதே குற்றச்சாட்டு.
வழக்குகளில் சரியாக நீதி கிடைக்கவில்லை
எனவும் சொல்லப்படுகிறது.
ஆயினும்
2002க்கு பிறகு மதம் சார்
வன்முறைகள் நடக்கவில்லை என்பது ஆறுதலான விடயம்.
இந்தியா ஒரே நாடு என்றாலும்
பிற மாநிலங்களில்நடக்கும் விடயங்கள் நமக்கு ஊடகம் மூலமாக
மட்டுமே தெரிகிறது.ஊடகங்கள்
பக்கச்சார்பு உடையவை என்னும் போது
சரியாக நிலவரம் தெரியாது.மோடி ஊழல் கறை படியாதவர்,பாரபட்சமின்றி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்பதன் நிரூபணமே இந்த வெற்றி என ஆதரவாளர்கள் கூறுகின்றார்.இல்லை சிறுபான்மையினர் அங்கே அஞ்சி வாழ்கிறார் என எதிர்குரலும் கேட்கிறது. இதனை நாம் சரி பார்க்க எப்படி முடியும்??? வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது.
சரி
முதலில் முடிவுகளைப் பார்த்து விடுவோம்.
|
Seats 2012
|
Percentage 2012
|
Voters 2012
|
Seats 2007
|
Percentage 2007
|
BJP
|
115
|
47
|
26,009,988
|
117
|
49.12
|
Congress
|
61
|
39
|
21,278,648
|
59
|
38
|
GPP
|
2
|
4
|
956,053
|
-
|
-
|
Others
|
4
|
9
|
5,236,916
|
6
|
12.88
|
Total
|
182
|
100
|
54,000,000
|
182
|
100
|
காங்கிரஸ்,பாஜகவிற்கு சுமார் 5 மில்லியன் ஓட்டுகள் அல்லது 8% வித்தியாசம் இருக்கிறது.இது சென்ற தேர்தல்
முடிவில் இருந்து அதிக வித்தியாசம் இல்லை
எனப்புரியும். கேசுபாய் படேல் 4% ஓட்டினைப் பிரித்தார் என்றாலும் அவர் பாஜக அல்லது
காங்கிரசின் ஓட்டைப் பிரித்தாரா அல்லது
அவரின் இனத்தவரை கட்சி வேறுபாடின்றி ஈர்த்தாரா
எனக் கூற இயலாது.
எனினும்
மோடியின் மூன்றாம்
முறை வெற்றி அவரை குஜராத்
மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.
ஜனநாயகம் என்பது மற்ற அரசியல் அமைப்புகளை விட சிறந்த முறை என்றாலும், இதிலும் மக்கள் பொருளாதார ரீதியாக பிரிவதை விட இன மதரீதியாக பிரிவது தவிர்க்க முடிவது இல்லை.
பொருளாதாரரீதியாக மக்கள் பிரிவதை விட இனரீதியாக பிளவு படுத்தல் அரசியல்வாதிக்கு எளிதில் பலன் தருகிறது.
இந்த
ஓட்டுக்கள் மத இனரீதியாக பிரிந்ததையும்
ஓட்டு சதவீதம் மாறாமை
காட்டுகிறது. காங்கிரஸ் அதிகம் தலித்,ஆதிவாசி
மற்றும் சிறுபானமையினர் ஓட்டுகளைப் பெற்றும் இருப்பதும் சொல்ல முடியும். குஜராத்தில்
தலித் மக்கள் 35 இலட்சம்[7%],ஆதிவாசிகள் 74 இலட்சம்[14.7%] ,சிறுபான்மையினர் 46 இலட்சம் [9%] உள்ளனர்.
எனினும்
அனைவரும் தங்களுக்கு வாக்களிப்பதாக பாஜக,காங்கிரஸ் கூறுகின்றனர்.பாஜக
ஒரு படி மேல் சென்று
குஜராத்தில் சிறுபான்மையினரின் கல்வி,வேலைவாய்ப்பு ,நாட்டின்
சராசரியை விட அதிகம் எனக்
கூறுகிறது.
- In terms of literacy level, Muslims in Gujarat stood at 73.5 percent as compared to the national average of 59.1. While the figure for the urban males was 76, it was 81 for those living in rural areas as compared to the national average of 70 and 62 respectively in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1, Page No. 287]
- Even Muslim women in the urban areas of Gujarat have average literacy rate 5 point higher than the national average whereas their counterparts in rural areas of Gujarat fare even better with a literacy rate of 57 percent as compared to the national average of 43 in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1 b, Page No. 289]
-Also in Gujarat, a greater percentage of Muslims have attained primary, secondary and higher secondary level education compared to the national average and compared to other states. Against the national average of 60.9% (and 42.2% in UP), Gujarat had 74.9% Muslims at the primary level while the percentage is 45.3 at Secondary level as compared to national average of 40.5% and 29.2% in UP. [The Sachar Committee report : Appendix table 4.6 & 4.7, Page No. 295-296-297-298]
-The average years of secondary schooling for Muslim children between age 7 and 16 years is higher in Gujarat at 4.29 years compare to the national average of 3.26 years. The figures in West Bengal, UP and Bihar are 2.84, 2.60 and 2.07 years respectively. The truth is that the Muslim children in Gujarat are benefiting from equal opportunities to access secondary schooling as other children. [The Sachar Committee report : Appendix table 4.2, Page No. 290-291]
The other aspect is the economic well being of Muslims in Gujarat. Here also, the Sachar Committeedispels the myth.
- In terms of per month per capita income, Muslims in the urban areas of Gujarat earn an average Rs 875 which is more than the national average of Rs 804. In contrast, it is Rs 662 in UP, Rs 748 in West Bengal, Rs 811 in Punjab, Rs 803 in Andhra Pradesh and Rs 837 in Karnataka. [The Sachar Committee report : Appendix table 8.2, Page No. 364]
- The story is similar in rural Gujarat where the per capita monthly income of the Muslims 20-25% more than the Muslims living in the rural areas of most other states. It is on an average Rs 668 as compared to the national average of Rs 553. [The Sachar Committee report : Appendix table 8.3, Page No. 365]
- In terms of people living below poverty line, Gujarat had 54% Muslims living below it in 1987-88 while the figure stood at 34% in 2004-2005 showing a healthy pace of improvement. [The Sachar Committee report : Appendix table 8.5, Page No. 367]
- Even in terms of share of Muslims in state employment, i.e, government jobs, it is 5.4% in Gujarat while it is 2.1% in West Bengal, 3.2% in Delhi and 4.4% in Maharashtra. [The Sachar Committee report : Appendix table 9.4, Page No. 370]
இப்படி
எல்லாம் உண்மையாக இருந்தால் நன்மைதான். வெற்றி பெற்ற முதல்வர்
மோடி தேசிய அரசியல் மீது
கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய
அரசியல் என்பது இன்னும் அதிக பன்முகத் தன்மை கொண்டது.கோத்ரா சம்பவம் குறித்து பாரபட்சம் அற்ற நீதியோ,மன்னிப்போ கேட்கும் எண்ணம் திரு மோடியிடம் இல்லை.அதனைக் கடந்து,மறக்க வேன்டும் எனவே கோருவது புரிகிறது.இந்திய பிரதமர் ஆகவேண்டும் எனில் இன்னும் பல இன,மொழி,மத மக்களின் அபிமானம் பெற்றால் மட்டுமே முடியும்.
பாராளுமன்ற தேர்தலில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் பெற்றால் வெற்றி என்னும் போது பாஜக மட்டும் தனியாக 200 இடங்கள் பெற்று கூட்டணி கட்சிகள் 70+ இடங்கள் பெற்றால் மட்டுமே சாத்தியம். கூட்டணி தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புள்ள கட்சிகள், வங்காள திர்ணாமுல் காங்கிரஸ்,பீஹார் ஜதா(நிதிஷ் குமார்),தமிழ்நாடு அதிமுக, ஒரிசா பட்நாயக்,உத்தர் பிரதேஷ் பகுஜன் சமாஜ் போன்றவை உள்ளன.
எனினும் அரசியலில் எதுவும் நடக்கும். மோடியின் குஜராத் வெற்றி 2014 பாராளுமன்ற தேர்தலை ஒரு பரபரப்பு மிகுந்ததாக மாற்றியது மட்டும் உண்மை!!!
இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல நினைப்பது உண்டு.பின்னூட்டத்தில் தொடர்வோம்!!!.
நன்றி!!