Thursday, January 24, 2013

நான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்!!!

I Support Kamal Haasan


வணக்க நண்பர்களே,
இந்திய ஜன்நாயக ,மதசார்பற்ற நமது நாட்டின் சட்டங்கள் மட்டுமே நம்க்கு முதன்மையானது.நமது சமூகத்தில் எழும் சிக்கல்களை சட்டம் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்.

கருத்துகளின் வடிவம் புத்தகம்,பேச்சு,பதிவுகள்,திரைப்படம் என பல வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில் வாழும் நாட்டின் சட்டங்களுக்கேற்றபடி மட்டுமே அனுமதிக்கலாம். சில கருத்துகள் தடை செய்யப் படுகின்றன என்றாலும் அவை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே!!

அந்த வகையில் விஸ்வரூபம் நாட்டின் தணிக்கை சட்டங்களின் படி அனுமதி பெற்ற ஒன்று.ஆகவே படத்தை எதிர்ப்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்கள் என்றால் தணிக்கை சட்டங்களில் வேண்டி மாற்றங்கள் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்தி தேவையான மாற்றம் கொண்டு வரட்டும்.

அதை விட்டு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தொனியில் செயல்படுவதும்,அதற்கு அரசு செவி சாய்ப்பதும் தவறான முன் உதாரணங்களையே ஏற்படுத்தும்.

இப்போது கூட எதிர்க்கும் மதத் தலைவர்கள் நீதிமன்றம் சென்று மட்டுமே தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டுகிறோம். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பாரபட்சம் காட்டாமல் ஒடுக்குவதே நாகரிக‌ சமூகத்தை காப்பாற்றும் வழியாகும்.

நான் கமல் அவர்களை இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்.

என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள்  ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!

நன்றி!!

Movie's Review

58 comments:

  1. நானும் கமல் அவர்களை ஆதரிக்கிறேன் ...

    ReplyDelete
  2. கமலின் பக்த கோடிகளே ,தேசபக்தன் கமல் ,உடன் பதிவிடுங்கள் பல சிக்கல்கள் இனி இல்லாமல்ஆகிவிடும் .
    இனி பசிக்கின்ற மக்கள் இருக்கமாட்டார்கள் .
    விலைவாசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் .
    எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளள்ளலாம்
    வேலைக்கு ஆள் இல்லை இனி அமெரிக்கர்கள் சவுதிகள் இந்தியாவுக்கு வருவார்கள் சாருவாகன் சொல்லிவிட்டார் ,ராஜ் வந்துவிட்டார் எல்லோரும் ஓடோடி வாருங்கள்
    ரிசானாவின் முதலாளி பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்படும் .
    காஷ்மீரிகள் கையில் இனி பூங்கொத்துகளே இருக்கும் ஆப்கானில் புத்தர் சிலைகளை வீதிக்கு வீதி கமலகாசன் மற்றும் திறந்த வயிற்றில் கட்டிபிடித்தவாறு அவரது மகளுடன் அரைகுறை ஆடையில் தோன்றி திறந்து வைப்பார் .இல்லையெனில் கோமணத் துணியுடன் புரட்சிரமாக ,,,,,,
    லிவ்விங் டுகெதர் வகுப்புகள் டிடிஹெசில் நடைபெறும் .மாதகட்டணம் சாதா கட்டணமே .
    ஆனால் மருத நாயகம் படத்தை தேவர் சமுதாயம் எதிர்த்ததால் நிறுத்தியது கலாச்சார தீவிரவாதம் கிடையாது .

    டிஸ்கி விஸ்கி குடிக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. டிஸ்கி .மவளுக்கு அரைகுறை ஆடையில் மவுத் கிஸ் அடிக்கலாமா?இது நமது சோழர் காலத்து தமிழர் கலாச்சாரம் .இது தீவிர வாதகலாச்சாரம் அல்ல தீவர்ற கலாச்சாரம்

      Delete
    2. தவூகீத் அமைப்பினர் ஷகீலாவை பர்தா அணிய விடாமல் தடுத்தது ஏன்?

      Delete
    3. மது,மதம் இரண்டுமே அள்வோடு பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை பிரசினை இல்லை சகோ இப்பூ!!

      Delete
    4. அவுத்து போடும் ஆடும் சகிலா விபச்சார வழக்கில் நீதிமன்றங்களில் ஆஜராகும் பொழுது ஒரு விபச்சார குற்றவாளியாக வருகையில் மட்டும் பர்தா அணிவதை தடுப்பது எங்களது உரிமை .டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகள் உத்ராட்சை மாளிகள் அணிந்து பட்டைநாமம் பூசி சாமியார் போல வந்தாலோ ,கம்யுனிஸ்ட் காரன் போல வ கோடி பிடித்து ஸ்டாலின் லெனின் படங்களை அணிந்துவந்தாலோ அவரவர் எதிர்க்கவே செய்வார்கள்

      Delete
    5. ,சார்வாகன் ///மது,மதம் இரண்டுமே அள்வோடு பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை பிரசினை இல்லை சகோ இப்பூ!!///
      என்ன சார் உளறீங்க ,எங்க மதத்தை உங்களை பின்பற்ற சொன்னோமா?
      அதென்ன மது மதம் இரண்டுமட்டுதானா ?மாது பணவெறி இதெல்லாம் எங்கு போயிற்று?
      கமலின் பணவெறி அல்லவா அவரை அடுத்த மதத்தை சீண்ட வைக்கிறது .இந்தியாவில் உலா ஹிந்துமதவாதத்தை பற்றி கவலைப் படாத இவர் இஸ்லாம் பற்றி பேச என்ன யோக்கியதை .
      இந்த ஜட்டி காரனுக்கு இஸ்லாம் மதம் பற்றி என்னதெரியும்?
      ஆப்கானிஸ்தான் தாலிபான் பற்றி அமேரிக்கா சொல்லுவது உண்மையாகிவிடுமா?
      9/11 நிகழ்ச்சிக்கு அமேரிக்கா சொல்லுவதுதானே வேதம் ?
      பேரழிவு ஆயுதம் என்று பூசணிக்காயை மிஞ்சும் யானை பொய்யை சொல்லிவிட்து ,ஐநா குழு அங்கு ஆஉவ்ய் செய்து பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று சொன்னபிறகும் ஒரு நாட்டை கபளீகரம் செய்து எண்ணை கொள்ளை அடித்து விட்டு பேரழிவு ஆயுதங்கள் என்று நாங்கள் சொன்னது பொய்தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அயோக்கியத்தனம் யாருக்கு வரும்?
      அதைப்போலவே 9/11 இருக்காது என்று உங்களால உறுதிபட கூற முடியா?
      ஒருநாட்டின் இறையாண்மையை மீறி கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வேவு பார்த்தது தீவிரவாதமா?
      அதே சமயத்தில் வடகொரியாவில் வேவு பார்த்த அமேரிக்கா விமானம் சுட்டு தள்ளபப்டவில்லையா?
      இந்தியா அஹிசவாதியா?வடகொரியா தீவிரவாதியா?இல்லை அமெரிக்க தீவிரவாதியா?

      Delete
  3. http://timeforsomelove.blogspot.com/2013/01/blog-post_24.html
    My comment

    காஃபிர் வருண்,

    திரைப்படம் என்பது சமூக நிகழ்வைப் பிரதிபலிக்கும்!!

    உங்களுக்கு ஒரே கேள்வி நேர்மையாக பதில் சொல்லவும்!!

    9/11ஐ நிகழ்த்தியவர்கள் சவுதியை சேர்ந்த தீவிரவாதிகள் என்பது அமெரிக்க அரசின்,உலகின் கருத்து.

    ஆனால் சில மூமின்கள்,தமிழ்மண பதிவர்கள் உள்ளிட்டு அது யூத சதி,அமெரிக்க சி.ஐ.ஏ வின் சதி என கூறுகிறார்கள்.

    இப்போது 9/11 சவுதி அரபிகளின் வேலை என ஒத்துக் கொண்டால் விஸ்வரூபத்துக்கு நிகழ்ந்த கதி உமது பதிவுக்கும் நிகழும்!!நீர் இஸ்லாமிய விரோதி ஆவீர்!!

    9/11 யூத சதி என்றால் அமெரிகாவில் இருந்து மூமின்களுக்கு ஆதரவாக ஒரு வழக்கு போட்டு நிரூபிக்கவும்[ ஹி ஹி அமெரிக்க மூமின் செய்ய மாட்டார்கள் !!]


    9/11 ஐ படமாக எடுத்தால் அரபுகளை தீவிரவாதிகளாக காட்டாமல் இருக்க முடியுமா??

    நன்றி!!

    ReplyDelete
  4. விஸ்வரூபம் படம் எடுத்த கமல்ஹாசனுக்கு ஆதரவு.மத வெறியர்களின் விருப்பத்திற்கு உடன்பட்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
    //என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள் ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!//
    தமிழகத்தில் தலிபான்கள் தலையெடுப்பதை தடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரி,

      பிரச்சினை என்ன்வென்றே தெரியாமல் குதிப்பது நம் மூமின் சகோக்களுக்கு புதிது அல்ல!!.
      தமிழ்மணத்திலேயே எத்தனை பார்த்து விட்டோம். நம்பிக்கையோடு படத்தை போட்டுக் காட்டுகிறார் என்றால் படம் மோசமாக முஸ்லிம்கள் அனைவரையும் சிதரிக்கும் வாய்ப்பு குறைவு.

      மூமின்களைக் கேட்டு படம் த்யாரிக்க வேண்டும் என்றால் ஹி ஹி சினிமாவில் பெண்கள் ஃபர்தா போட்டு மட்டுமே நடிக்க வேண்டும்!!.

      இதிலே தவுகீத்காரங்க ஷகீலா ஃபர்தா போட விடமாட்டேன் என்கிறார்கள்

      http://www.vinavu.com/2008/10/03/shakeela

      இப்படி நிலை அனைவருக்கும் வராமல் இருக்க பதிவிட்டு மத்வாதிகளுக்கு எதிர்ப்பு காட்டுங்கள்!!

      நன்றி!!

      Delete
    2. //மூமின்களைக் கேட்டு படம் த்யாரிக்க வேண்டும் என்றால் ஹி ஹி சினிமாவில் பெண்கள் ஃபர்தா போட்டு மட்டுமே நடிக்க வேண்டும்!!//
      சகோ அவர்களை கேட்டு படம் எடுப்பதானால் பெண்ணே- நடிகையே தேவையில்லை. ஆண்களே பர்தா போட்டு பெண்ணாக நடிக்கலாம்.

      Delete
    3. வேகநரி,கமலகாசன் ஜட்டி காரனாக நடிக்கையில் எங்களை கேட்டு படம் எடுக்க வேண்டாம் .அப்புறம் மருதநாயகம் படத்தை யாரை கேட்டு வெளியிடவில்லை ?

      Delete
  5. மச்சான் சார்வாகன்:

    நாந்தான் உங்க பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கேனே. அப்புறம் எதுக்கு இங்கேயும் அதையே?

    நீங்க காஃபிர் கமலஹாசன் அய்யங்காருக்கு நல்லா சப்போர்ட் பண்ணுங்கோ! நான் யாரு அதை கேட்க?! எப்படியோ ஏழை அவரை இப்படி நீங்க வாழ வச்சா உங்களமாரி கோடிஸ்வரருக்கு ஒரு புண்ணியமாப் போகும்! :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் மச்சான்,

      பின்னூட்டங்கள் நம் பதிவுக்கும் தொடர்பாக இருந்தால் ஒரு பிரதி இடுவது வழக்கம்.

      நான் ஏன் கமல்காசனை விஸ்வரூபம் பிரச்சினையில் ஆதரிக்கிறேன்!!

      1. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் என நான் நினைக்க்வில்லை.ஒரு திறமையான வியாபாரி இப்படி படம் எடுக்க மாட்டான்.9/11 அல்லது கோவைக் கொண்டு வெடிப்பு போன்ற நடந்த நிகழ்வுகளை படமாக எடுக்கும் போது குற்றவாளிகளை வேறு மதத்தவராக சித்தரிக்க முடியாது!!

      2. படம் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்டது.ஆகவே சட்ட ஒழுங்கு பிரச்சினை கிளப்புவதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

      3. படத்தை எதிக்ர்க்க விரும்பும் முஸ்லிம் த்லைவர்கள் தனிப்பட்ட விதத்திலோ ,இணைந்தோ நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதே ஒரு இந்தியக் குடிமகனின் கடமை.

      4.அவ்வளவுதான்!! படம் பார்காமலேயே,என்ன சொல்கிறது என‌த் தெரியாமல் த்லை 'அ ஆ இ ஈ" பார்த்து சொல்லி விட்டார் என போராட்டம் செய்வது நிச்சயம் நல்லது அல்ல!!.

      'அ ஆ இ ஈ" சொல்வது எல்லாவற்றையும் செய்து விடுவார்களா!!

      முகமது(சல்) அவர்கள் பற்றிய காணொளியை கூகிள் நீக்க மறுத்தமைக்கு
      அத்னை புறக்கணிக்க தவுகீத் அண்ண‌ன் பீ.ஜே கோரிக்கை வைத்தார்? இன்னும் மூமின் பதிவர்கள் கூகிள்,யுடுயுபு,ப்ளாக்கர் பயன்படுத்துவது என்ன சொல்கிறது??

      ஆகவெ அந்த விடய்மே ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.

      ஆகவே நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடப்ட்டு எதிர்ப்பினை ஜன்நாயக ரீதியில் மட்டும் காட்ட வேண்டுகிறோம்!!

      கருத்துக்கு எதிர் கருத்து அவ்வளவுதான்!!இதுவே நாகரிகம்!!

      இதில் கமல் உயர் சாதி, பண்க்காரன் என்பது வராது!!
      அவர் படம் குறிப்பிட்ட இனத்தவர் அனைவரையும் தவறாக,குறிபிட்ட உண்மை சம்பவம் சார்ந்து சித்தரிக்கிறதா ? என்பதே பிரச்சினை!.

      நன்றி!!
      '



      Delete
    2. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் என நான் நினைக்க்வில்லை.ஒரு திறமையான வியாபாரி இப்படி படம் எடுக்க மாட்டான்.9/11 அல்லது கோவைக் கொண்டு வெடிப்பு போன்ற நடந்த நிகழ்வுகளை படமாக எடுக்கும் போது குற்றவாளிகளை வேறு மதத்தவராக சித்தரிக்க முடியாது!!
      ஏன் காந்திஜியை கொன்றதை படமாகக்விலை?
      ஏன் இந்திராகாந்திய கொன்றதை படமாக்கவில்லை ?
      ஏன் ராஜிவ்காந்தியை கொன்றது?படமாக்கவில்லை
      குஜராத் முஸ்லிம் பெண்கள் கற்பழிப்பை படமாக்கவில்லை .இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரத்திலும் முஸ்லிம்களே அதிகமதிகமாக பாதிக்கபப்ட்டுள்ளனர் .அவற்றை எல்லாம் படமாக காட்டவில்லை ?
      கோவை கலவரத்தில் முஸ்லிம்கள் பொருளாதாரமும் உயிர்களும் பந்தாடப்பட்டதே .காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் .அதை ஏன் படமாக்கவில்லை ?
      சமுதாய அக்கறை உள்ளவன் ஜட்டியுடன் மக்கள் மத்தியில் தரிசன்ம தருவானா?
      சரிகாவுடன் தறிகெட்ட தறிகெட்ட வாழ்க்கை நடத்துவானா?

      Delete
    3. முட்டாள்,
      ஹே ராம் படம் நீ பார்த்திருந்தால் இப்படி பேச மாட்டாய்?

      மத வெறி பிடித்த உனக்கு இது எல்லாம் எப்படி தெரியப்போகிறது

      Delete
  6. என்ன மாப்ள கூட்டம் அதிகமாயிட்டே போகுது:)

    வருண் நீங்க மெய்யாலுமே அமெரிக்காவில்தான் இருக்கிறீர்களா?

    பிரச்சினையின் மையத்தை தொட முயலுங்கள் அதை விட்டு விட்டு அய்யங்கார் நொய்யங்கார்ன்னு குறுகிய வாதம் பேசுறீங்களே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இராசநட‌

      1).இதுவரை விஸ்வரூபத்தை எதிர்த்தவர்கள் யாரும் அது இஸ்லாமியர்களை எப்படித் தவறாக காட்டுகிறது என சொல்லவில்லை.
      ஒசாமா பின் லேடனுக்கு தொழுகை நடத்தினால் அவனைத் தங்கள் மதத்தினன் என ஏற்பவர்கள் அவனின் செயல்களை திரைபடத்தில் காட்டினால் கொதிப்பது ஏன்?

      2).9/11 சவுதி அரபுகளின் செயல் அல்ல என்னும் மூமின்களின் கருத்தை எத்தனை பேர் ஏற்கிறோம்?

      விஸ்வரூபத்தில் விட்டுக் கொடுத்தால் பல சிக்கல்கள் விஸ்வரூபம் ஆகும் என்பதும் பாகிஸ்தான் ஏன் அழிகிறது உள்ளிட்ட பல் உண்மைகளை அனுபவபூர்வமாக உணர்வோம்!!

      நன்றி!!

      Delete
  7. நடராஜன்:

    தெரியாதா உங்களுக்கு? நான் இப்போ சவுதில அடிமையா இருக்கேன். அங்கே விஸ்வரூபம் ரிலீஸ் ஆகலனு ஒரே டிப்ரெஷன் எனக்கு!

    கமல்ஹாசர் ஹாலிவுட் பக்கத்துல வந்து சமூக சேவை செய்துகொண்டு இருக்காரு.

    ஆமா, நீங்க எங்கே இருக்கீங்க?

    ஜெயாவிடம் விஸ்வரூபத்தை வெளியிடச்சொல்லி வாதாடிக்கிட்டா? தொடருங்கள் உங்க கலைச்சேவையை, நடராஜன்! :)

    ReplyDelete
  8. ***அவ்வளவுதான்!! படம் பார்காமலேயே,என்ன சொல்கிறது என‌த் தெரியாமல் த்லை 'அ ஆ இ ஈ" பார்த்து சொல்லி விட்டார் என போராட்டம் செய்வது நிச்சயம் நல்லது அல்ல!!.***

    நீங்க படம் பாத்துட்டீகளா, மச்சான்??

    இல்லையா??

    பிரச்சினை செய்பவக்ரள், போராடுபவர்கள் எல்லாம் படம் பாதுட்டா! தெரியாதா உங்களுக்கு?

    நீங்க ஒரு ஆள்தான் படம் பார்க்காமல் கமல்ஹாசருக்கு வக்காலத்து வாங்குறப்பிலே இருக்கு, மச்சான்?!!

    ReplyDelete
    Replies
    1. வருண் மச்சான்,
      நான் படம் பார்க்கவில்லை என்பது உண்மை.
      But read reiew!
      http://www.facebook.com/VishwaroopamPDKH/posts/478791522158072
      ***
      ஆனால் 9/11 நிகழ்த்தியது சவுதி அரபுக்கள் என்னும் உண்மையை ஏற்கும் மனது நம் மூமின் சகோக்களுக்கு கிடையாது!!!

      9/11 நிகழ்தியது அரபுக்கள் என்றால் ,அப்படி படத்தில் சித்தரிப்பது தவறாகுமா?

      என்ன சித்தரித்தான் என சொல்லுங்கள்!!

      அலெக்ஸ் பாண்டியனை ஏன் மூமின்கள் எதிர்க்கவில்லை?

      நான் சொல்கிறேன் நாயகன் கார்த்தி சந்தானத்தின் தங்கை 3+ அனுஷ்க கா மொத்தம் நான்கு பெண்கள் மட்டுமே குஜால் பண்ணுவதால் ஹலால்!! ஹி ஹி

      வரும் காலங்களில் மூமின் பெண்ணை ,இந்து நாயகன் காதலித்தால் கூட எதிர்ப்பு காட்டுவாங்க போல தெரியுதே!!

      ஷகீலாவை ஃபர்தா போட விட மறுத்தது துச்சாத்ன வேலையா இல்லையா!!

      நன்றி!!

      Delete
    2. I have included review for Malysia a Muslim country!! in the post!!.

      Delete
    3. "மொத்தம் நான்கு பெண்கள் மட்டுமே குஜால் பண்ணுவதால் ஹலால்!! ஹி ஹி"

      எல்லாம் காம வெறி நபி காட்டிய வழி

      Delete
  9. http://whyevolutionistrue.wordpress.com/2013/01/24/turkish-muslims-butthurt-about-legos-jabba-the-hut-castle-files-suit-for-defamation/

    Turkish Muslims butthurt about Lego’s Jabba the Hut castle; file suit for defamation

    Never underestimate the ability of offended Muslims to make trouble. My friend Florian called my attention to a piece in the Austrian press about, of all things, the Lego game “Jabba the Hutt’s castle” (below).

    ReplyDelete
  10. வருண்! என்னை பீடித்திருப்பது எக்ஸ்பிரஷன் மாத்திரமே!டிப்ரெஷனெல்லாம் உங்க துறை:)

    விஸ்வரூபம்தான் இப்பவே களைகட்டுதே.ஜெயலலிதாகிட்ட அல்ல...நான் Steven spielberg கூட கதை பேசிகிட்டு இருக்கிறேன்:)

    ReplyDelete
  11. நடராஜன்:

    என்னாலான ஒரு சின்ன உதவி உங்களுக்கு!


    Here is a decent review, of that movie, folks!

    ----------------

    This is my take on #Vishwaroopam. -(without giving away anything)

    I thought the movie had a good plot, not a particularly unique plot, but a pretty solid plot. Personally, I think the problem lies with the execution of the plot itself. Till this very second, I have questions about various scenes of the movie. I am also hoping that you guys would watch the movie real quick so that I could raise those questions and hopefully, find answers to them. The execution wasn't bad, but I think that many things could have been neater. It was messy at points, but nothing as bad as Dasavathaaram.

    Saying the movie had nothing to do with religion would be a big lie. However, technically speaking, it didn't represent Islam as a whole. It showed light to a certain group in the religion, that is all. There is really nothing to be sensitive about, I promise.

    To end this, I'd say Vishwaroopam is a pretty okay movie. It could have been executed a bit better. The viewer's interest in the subject matter of the movie really matters. For eg, I was pretty interested (because it was on something that I've spent a lot of time reading about), so I kept my focus on and watched the movie till the end with interest. A few people in the theater though, found it really boring and left the cinema hall halfway. The movie wasn't the most mind blowing movie that I've ever seen, but you can just tell that Kamal Hassan has put in so much of his sweat into it, and to his credit, a lot of it showed through. I'd recommend people to watch the movie, but I can also safely say that NOT everyone will enjoy it.

    ( p.s : Once you guys have watched the movie, can someone please take the time and tell me the purpose of Andrea's role in the movie? I'm still trying to figure it out and it is disturbing me to no end.) ***

    ------------

    Thanks to Ms. Rhubinii Rajendran (@RhubyDooby)

    http://www.twitlonger.com/show/kqegeg

    ReplyDelete
    Replies
    1. Thank you machaan.

      So Movie is about ans[ religious] extremist group!! That is all.

      Who want the movie to be banned are_______ hi hi

      Even the Moslem countries are taking hard measures against religious fundamentalist. e.g algeria
      Thank you

      Delete
  12. @சகா சார்வாகன்,

    கமல் ஒரு ஓவர் ரேட்டட் கலைஞர் என்பது எனது கருத்து. ஆனால் சென்சார் அனுமதித்த படத்தை தடைசெய்வது என்பது சட்டவிரோதம். ஆதலால் அவருக்கு ஆதரவு கட்டாயமுண்டு.கருத்து சுதந்திரத்தில் எல்லா நாடும் முன்னோக்கி போய்கிட்டு இருக்கும் போது முமின் வழக்கம் போல் 8-ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை இழுத்து செல்லுகிறார்கள். இது தமிழ்நாட்டிலும் அவர்களை மேலும் அந்நியப்படுத்தும் என உணரமறுக்கிறார்கள்.


    அமெரிக்காவில் முமின்களும் காபிர் பெயரில் வரும் முமின்களும் தடை கோரி போராடுவதில்லை?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம் வாங்க,
      இதில் நமக்கு கமல் பிடிக்குமா,திரைப்படம் பிடிக்குமா என்ற கருத்து சார்ந்ததே அல்ல!!.

      விஸ்வரூபம் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெற்ற படம். வணிக நோக்கில் தயாரிப்பவன் எவனும் மதத்தை விமர்சிக்கும் படி எடுக்க மாட்டார்கள்.

      படித்த விமர்சனங்களில் இருந்து ஒரு தீவிரவாதிக் குழுவின் செயல்களை படத்தில் காட்டி இருக்க்லாம் எந்த் தெரிகிறது.

      பிடிபடும் தீவிரவாதிகளை மதம் சரியாக பின்பற்றாத்வன் என ஜல்லி அடிப்பவர்கள் அதே போல் சொல்லி விட்டு செவதுதானே!!.

      படத்தில் என்ன விடயம் சர்ச்சைக்குறியது என்பதை படம் பார்த்த முஸ்லிம் த்லைகள் எவரும் எதுவும் தெளிவாக சொல்லாமல் படத்தை தடை செய்ய ஆதரவாளர்களை தூண்டுவது கண்டிக்கத் தக்கது!!.

      பாருங்க சகோ மூமினாதரவு காஃபிர்(?) பதிவர்கள் 9/11 செய்தது மூமின்கள் எனத் தெரிந்தாலும் கூட வெளிப்படையாக கூற மறுக்கிறார்கள். இப்படி காஃபிர்கள் இருக்கும் வரை மூமின்களுக்கு கொண்டாட்டமே!!.

      9/11 ல் ஒரு தீவிரவாதிக் குழு செய்ததை படம் எடுத்தால் தப்பா!!!
      ***

      படத்தை தடை செய்ய குரல் கொடுக்கும் மூமின் தலைவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

      சவுதி சென்று ,வகாபியம் கற்று இங்கு வந்து பரப்பும் குழுக்களுக்கும்,ஏற்கெனவே தர்கா,மசூதிகளில் கோலோச்சிய சுன்னத் ஜமாத் போன்ற குழுக்களுக்கும் இது யார் அப்பா டக்கர் மத பாதுகாவலர் எனப் போட்டி!

      முதலில் முகமதுவை [எப்படியும்] சித்தரிக்ககூடாது என்றவர்கள், இப்போது முஸ்லிமகளையும் சிதரிக்கவோ,விமர்சிக்கவோ கூடாது என்ற இரண்டாம் நிலைக்கு வந்து விட்டார்கள்.

      பிறகு மூமின்களை மதத் தலைகள் மட்டுமே [ஷரியா கொண்டு]பரிபாலனம் செய்வோம் என்பார்கள், பிறகு .. ஹி ஹி இப்படித்தான் பாகிஸ்தான் பிரிந்தது என வரலாறு சொன்ன பாடம்!!

      ஆகவே சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி!!!

      Delete
    2. //பிடிபடும் தீவிரவாதிகளை மதம் சரியாக பின்பற்றாத்வன் என ஜல்லி அடிப்பவர்கள் அதே போல் சொல்லி விட்டு செவதுதானே!!.////

      ஆனால் இந்த படத்தில் அவர்கள் சரியாக மதத்தை பின்பற்றுபவர்களாக காட்டப்படுகிறார்கள் .மதத்தின் வார்த்தைகளை வைத்தே தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதாக காட்டப்படுகிறார்கள் .
      மருதநாயகம் படத்தை பற்றி மூச்சு விட தயங்குவது ஏனோ?
      அந்த படாதில் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக ராமகோபாலன் படத்தி தயாரிபிலே தடுத்துவிட்டாரே ,அப்போது கமலுக்கும் ராமகொபலனுக்கும் என்ன உறவு ?

      Delete
  13. நானும் கமலை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா வணக்கம்,
      நாம் விஸ்வரூபம் தடை விடய‌த்தில் கமலை ஆதரிப்போம்.

      படம் பார்ப்போம்,பிறகு விமர்சிப்போம்!

      படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஆதரிப்போம் ஹி ஹி

      நன்றி!

      Delete
  14. தமிழக அரசின் இந்த நடவடிக்கை நிச்சயமாய் ஒரு மோசமான முன்னுதாரணம்.

    கமலின் கருத்துரிமைக்கு எனது ஆதரவு. அடாவடித்தனம் மற்றும் வன்முறை மூலம் எதிர் குரல்களை நசுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எனது கடும் கண்டனங்கள். இந்த நேரத்தில் அநியாயமாய் கொல்லப்பட்ட தியோ வான் கொஹ் நினைவுக்குவருகிறார். கருத்துரிமைக்கு எதிரான இஸ்லாமிய அடக்குமுறை கலாச்சாரத்துக்கு நாம் குரல் கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிடில் மத அடக்குமுறை கற்காலத்திற்கு நாம் பின்னோக்கி இழுத்து செல்லப்படும் அபாயம் நிஜத்தில் உள்ளது.

    ReplyDelete
  15. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.

    வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.

    தனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமை சாடிய வசனங்கள் இருந்திருந்தால் அந்த பகுதியை நீக்க/ திருத்த கோரலாம்.
      படத்தை முழுமையாக தடை செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்?

      Delete
    2. குரு நாதன், இஸ்லாமிய மதம் மீதும், குரானின் மீதும் மாற்று கருத்துகளை ஒருவர் முன் வைத்தால் அதில் என்ன தவறு? அந்த கருத்தை முன் வைக்க அவருக்கு இந்த சுதந்திர நாட்டில் அனைத்து உரிமையும் உண்டு.

      மேற்கு நாடுகளில், கிறிஸ்துவை பற்றியும், கிறிஸ்துவ மதத்தை பற்றியும் எத்தனையோ மாற்று கருத்துகளை பலர் வைக்க தான் செய்கின்றனர். அவர்கள் கொலை செய்யபடுவதில்லை. அவர்கள் கருத்து சொல்லும் உரிமையை யாரும் வன்முறை பயம் காட்டி நசுக்குவதிலை. ஏன் நம் தமிழ்நாட்டிலேயே பெரியார், இந்து மதத்தையும், இந்து மத கடவுள்களையும் விமர்சிக்கவில்லையா? அவர் சொல்லியதை விரும்பியவர் கேட்டார்கள், விரும்பாதவர்கள் அதை ஒதுக்கி விட்டு தம் வழிபாட்டு வேலைகள் செய்யவில்லையா? அது தானே நாகரிகம். பண்பட்ட நடத்தை.

      இஸ்லாமியருக்கு இந்த நாகரிகமும் பண்பாடும் ஏன் இல்லை என்பதே கேள்வி. கமல் சொல்லும் கருத்து பிடிக்கவில்லையா, எதிர் கருத்தை ஊடகங்கள் மூலம் வைப்பதோ, எதிர் கருத்தை சினிமாவாக எடுப்பதோ செய்யலாமே. கருத்துக்கு பதிலாய் வேறு கருத்துதானே வரவேண்டும்? இப்படி வன்முறை மிரட்டல் விடுப்பது அநாகரிகம் தானே.

      Delete
    3. நண்பர் குருநாதன் மத புத்த‌கங்களில் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள் உண்டு.ஆகவே சீர்திருத்தம் தேவைப்படுவது மத்வாதிகளுக்கு மட்டுமே!!

      மதங்கள் விமர்சிக்கப்படுவதே நாகரிகத்தின் வளர்ச்சி!!
      **
      ஒரு வழியாக படம் பற்றி கொஞ்சம் விவரம் தெரிந்து விட்டது ஆப்கானிஸ்தான் தலிபானை விமர்சித்ததால் இங்குள்ள மூமின்களுக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டதாம்!!

      பாகிஸ்தான் ஏன் நாசமாப் போச்சு என் புரியுதா!!!

      இஸ்ரேல் அரபுகளை கடுமையாக நடத்துவது ஏன் என்பது நன்கு புரியும்!!

      நன்றி!!!

      Delete
    4. சார்வாகன் மதத்தில் நல்ல விஷயத்தை தேடுவது என்பது .மலத்தில் அரிசியை தேடுவதற்கு ஒப்பானது
      இதை நான் சொல்ல வில்லை பெரியார் சொல்லி இருக்கார் .

      Delete
    5. சகோ சிங்கம்,

      நாம் ஆய்வாளர்கள் அந்த மலத்தில் உள்ள வைரஸ்களைத் தானே கண்டுபிடித்து உலகுக்கு காட்டுகிறோம்!!

      நாம் தேடுவது அரிசி அல்ல!!

      கஞ்சா கருப்பா!!

      நன்றி!!

      Delete
  16. சார்வாகன ///1).இதுவரை விஸ்வரூபத்தை எதிர்த்தவர்கள் யாரும் அது இஸ்லாமியர்களை எப்படித் தவறாக காட்டுகிறது என சொல்லவில்லை.
    ஒசாமா பின் லேடனுக்கு தொழுகை நடத்தினால் அவனைத் தங்கள் மதத்தினன் என ஏற்பவர்கள் அவனின் செயல்களை திரைபடத்தில் காட்டினால் கொதிப்பது ஏன்?////
    பின்லாதின ரசியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதையும் ரசியாவுக்கு எதிராக போராடியபொழுது அவருக்கு பணம் ஆயுதம் வழங்கியதையும் அப்போது புரட்சியாளர் என்று சொல்லப்பட்டதையும் ,ரசியர்களை விரட்டிய பின்னர் கார்சாய் ம்போல பொம்மை அரசாக தாலிபான் அரசை நிறுவி கனிம கொள்ளை நடத்தை இருந்ததை தாலிபான்கள் எதிர்த்ததால் இராக்கு பேரழிவு ஆயுதம் கப்சா விட்டது போல 9/11 நிகழ்வு நடத்தி ஆப்கானை கைப்பற்றி பொம்மை அரசு நிறுவி இப்போது ஒசாமா பின்லாதின் தீவிரவாதி என்று சொல்லுவதையும் பாத்தில் சேர்க்கவேண்டும் அல்லவா?நீங்கள் சொல்லுவது போல பின்லாதின் தீவிரவாதியாக இருந்தால் ,அவரை தீவிரவாதியாக்கியது யார்? அமெரீகாவைட்தான் காட்ட வேண்டும்..குர்ஆனை காட்டுவது அயோக்கியத்தனமா இல்லையா?
    நான் பின் லாதினை ஆதரிக்கவில்லை .ஆனால் அவர் அமெரிக்காதிக்கத்தை எதிர்த்து போர்ராடும் ஒரு புரட்சியாளர் .அவரை இஸ்லாத்துடன் புனைத்து உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரை போன்று இருப்பார்கள் என்ற மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் .ஒரு புரட்சியாளன் தனது மனைவியை விபச்ச்சரியாக்குவானா?அந்த விபச்ச்சரிமகன் கமல் அப்படி படம் எடுத்திருக்கிறானே !

    ReplyDelete
    Replies
    1. அப்போ கொலைகாரன் பின் லேடன் குரானை நம்பவே இல்லை.

      Delete
    2. சகோ இப்பூ,
      //பின்லாதின ரசியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதையும் ரசியாவுக்கு எதிராக போராடியபொழுது அவருக்கு பணம் ஆயுதம் வழங்கியதையும் அப்போது புரட்சியாளர் என்று சொல்லப்பட்டதையும் ,ரசியர்களை விரட்டிய பின்னர் கார்சாய் ம்போல பொம்மை அரசாக தாலிபான் அரசை நிறுவி கனிம கொள்ளை நடத்தை இருந்ததை தாலிபான்கள் எதிர்த்ததால் இராக்கு பேரழிவு ஆயுதம் கப்சா விட்டது போல 9/11 நிகழ்வு நடத்தி ஆப்கானை கைப்பற்றி பொம்மை அரசு நிறுவி இப்போது ஒசாமா பின்லாதின் தீவிரவாதி என்று சொல்லுவதையும் பாத்தில் சேர்க்கவேண்டும் அல்லவா?நீங்கள் சொல்லுவது போல பின்லாதின் தீவிரவாதியாக இருந்தால் ,அவரை தீவிரவாதியாக்கியது யார்? அமெரீகாவைட்தான் காட்ட வேண்டும்..குர்ஆனை காட்டுவது அயோக்கியத்தனமா இல்லையா?
      நான் பின் லாதினை ஆதரிக்கவில்லை .ஆனால் அவர் அமெரிக்காதிக்கத்தை எதிர்த்து போர்ராடும் ஒரு புரட்சியாளர் .அவரை இஸ்லாத்துடன் புனைத்து உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரை போன்று இருப்பார்கள் என்ற மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் .ஒரு புரட்சியாளன் தனது மனைவியை விபச்ச்சரியாக்குவானா?அந்த விபச்ச்சரிமகன் கமல் அப்படி படம் எடுத்திருக்கிறானே !//

      உங்களைப் பொறுத்த்வரை அல்கொய்தாவும்,தலிபானும் நல்லவர்களாக இருக்க்லாம். ஒத்துக் கொண்டமைக்கு நன்றி!!.

      விபச்சாரி மகனே என் திட்டியது அல்லாஹ்வே உங்களைக் கூற வைத்தான் என ஏற்கிறேன்.

      சல்மான் ருஷ்டியின் புத்தக்த்தில் முகமது(சல்) அவர்களின் மனைவிகளை இப்படி சொல்லி விட்டார் என உலகே குலுங்கியது!!.பல்ர் இறந்த்னர், சல்மான் ருஷ்டியின் த்லைக்கு விலை !!

      நான் உங்களின் பினூட்டத்தை அப்படியே வெளியிட்டு மன்னிக்கிறோம்.

      இதுவே மூமின்களின் சுயரூபம் விசுவரூபத்தால் வெளிப்பட்டது!!

      காஃபிர்கள் மன்னிப்பதில் சிறந்த்வர் என்பதை மூமின்கள் சிந்திக்க மாட்டார்களா!!

      Thank you

      Delete
  17. மத வெறி மிருகம் வாஞ்சூர் ஒரு அண்ட புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறது.
    "இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. "

    ReplyDelete
  18. //நான் பின் லாதினை ஆதரிக்கவில்லை .ஆனால் அவர் அமெரிக்காதிக்கத்தை எதிர்த்து போர்ராடும் ஒரு புரட்சியாளர்// Super comedy :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராபின்,

      ஹி ஹி தலிபான் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.

      மூமின் நாடுகள் நாசமாய் போவது ஏன் எனப் புரியும்!!

      விசுவரூப எதிர்ப்பாளர்களை கொஞ்ச நாளுக்கு ஆஃப்கான் சுற்றுலா அனுப்பனும்!!.

      திரும்பி வந்தால் ஏக இறைவன் மிக பெரியவன்

      கஞ்சா கருப்பா!!

      நன்றி!!

      Delete
  19. படம் பார்க்கவில்லை, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவு என்றுமே உண்டு, அது கமலாக இருந்தாலும், மலாலாவாக இருந்தாலும் .. ஆகவே ! ஆதரித்து பதிவிட்டுள்ளேன். நாளை தமிழக மதவாதிகளின் ஜாதகங்கள் பதிவாக உள்ளது, எல்லோரும் ஆஜராவுங்கள். !!! :)

    ReplyDelete
  20. லண்டனில் முஸ்லிம் ஏரியாக்களில் ஷரியாவை நடைமுறைப்படுத்தி பெண்கள், ஒரு பாலினத்தவரை கொடுமை செய்த இஸ்லாமியர்கள் கைது .. என்ன தான் அவிங்க ப்ளான் !

    ReplyDelete
    Replies
    1. சகோ இக்பால் செல்வன்,
      உங்க இணையதளத்தில் பின்னோட்டமிட முடியல்ல.ஒருக்க செக் பண்ணுங்க சகோ. அல்லாஹ் விருப்பத்தை, எதை விரும்புகிறானோ யார் அறிவார்.

      Delete
  21. சகோ.சார்வாகன்,
    தமிழ் பதிவுலகில், நமது சகோக்களுக்கு மதம் அல்லாத மற்ற அறிவியல் போன்ற விடயங்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வந்தவர்கள், ஒரு கட்டத்தில் அவர்களை அறியாமலேயே இஸ்லாம் எதிர்ப்பாளர்களாக மாறி விட்டதை அறிவார்கள்.

    அதைப்போல விஸ்வரூபம் விடயமும் கூட. கமல் விரோதிகள் கூட கமலை ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

    நாமும் கூட,இதுவரை கமலை ஆதரித்து ஒரு வார்த்தை சொல்லாத நிலையில், சொல்லக்கூடாத ஹராம்.... ஹராமான வார்த்தையான “நானும் கமலை ஆதரிக்கிறேன்” என்று சொல்லவேண்டிய நிலை வந்துவிட்டது. ”ரஜினி” மன்னித்தருள்வானாக :))))))

    விஸ்வரூபம் பட சர்ச்சை பற்றி
    1) இஸ்லாம் மதம்(மார்க்கம்?), குரான், கொகமது, பற்றியோ தவறாக சொல்லி மத துவேஷம் செய்திருந்தால், படம் நிச்சயமாக தடை செய்யப்பட்ட வேண்டியது ஒன்றுதான்.
    2)மத துவேஷம் பற்றி உன்னிப்பாக கவனிக்கும் தணிக்கை குழு அவ்வாறு இல்லாத நிலையில் படத்தை அனுமதித்துள்ளனர். அவ்வாறு உள்ளது என்று தடை கோருபவர்கள் இதுவரை சொல்லவில்லை.
    3) இஸ்லாமியர்கள் தவறாக சித்திரிக்கபடுகின்றார்கள் என கூறுகிறார்கள். பின் லேடனை பின் லேடனாக காட்டாமல் எப்படி காட்டவேண்டும் என தெரியவில்லை. சரியான சித்தரிப்பு வேண்டுமென்றால், முமின்கள் சரியான சித்த்ரிப்புள்ள ஒரு அழகிய படத்தை எடுக்கலாம். மற்றவர்களை அவ்வாறு செய்ய எதிர்ப்பார்பது சரியல்ல. எல்லாம்வல்ல இறைவன் அதற்கு அருளை பொழிந்து வெற்றி பெற வைப்பார். இறைவனின் உண்மையை சொல்ல இறைவன் ஆதரவு நிச்சயமாக இருக்கும். இறைவனின் உண்மையை ஒரு அல்ப மனிதரான கமல்ஹாசானால் எப்படி மறைக்க முடியும்.
    4) இது ஒரு குழுவின் subjective கருத்துக்கு வழிவகை செய்யும். எங்களை பொறுத்தவரை இந்தப் படம் தவறானது என்று ஆளுக்கு ஆள் கிளம்பிவிடுவார்கள். கலகம் செய்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காட்டி சாதிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் கிளம்பி விடுவார்கள்.
    5) நானறிந்த நண்பர் ஒருவர், இந்துத்துவ பார்ப்பன பாசிச ஆர்ஸ்ஸ் தீவிராவதிகள் சில இடங்களில் குண்டு வைத்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு படமெடுக்க மெனக்கெடுகிறார். விஸ்வரூப பிரச்சனையை பார்த்து, அது எங்கே ஹிந்துக்கள் தவறாக சித்திரிக்க படுகிறார்கள் என்று படத்தை படாதபாடு படுத்தி, போட்ட முதலுக்கே உலை வைத்துவிடுவார்கள் என்று அஞ்சி பின்வாங்கியுள்ளார்.

    எப்படியோ “கோச்சடையானே” தமிழ் திரையுலகத்தை காப்பாற்றுப்பா....எல்லாப்புகழும் ரஜினிக்கே LOL.

    ReplyDelete
  22. points well said on the article.. every year nearly 600-800 movies are released in India, but now the world knows only Vishwaroopam, thanks for the unethical galattas made by fame-searching idiots.. these people - are they aware that they are making themselves looks very bad for performing these stunts..

    ReplyDelete
  23. check out the movie 'Oh My God' (Hindi).. the movie pointed lot of bad and immoral things practised in the society, i think it was well received.. so why all the shout for Vishwaroopam..

    ReplyDelete
    Replies
    1. Dear Yuvaa,
      We had different opinions many times. We forget and move to next issue!!

      Our Muslim brothers are not understanding the reality.Taking a movie on al queda and taliban is hurting their sentiment means , we cant do anything..

      Thank you

      Delete
    2. ya true.. i always want to mention this - thanks for your writings.. your depth of knowledge amazes me.. in the very short span of our lifetime everyone must do something for our future generation.. but looking at how the world is going, it is still a distant dream. a new species of human being will be born when all the castes & religion are abolished.

      I had seen that you are much interested in Evolution study. do watch the movie 'Inherit the Wind', if not already..
      that movie came in 1940s, but the concepts are still valid because its so sad that people are living in that kind of state..

      Delete
  24. நம்ம இப்ராஹிம் நானா எழுதியதை படித்து பகீர் என்று விட்டது.
    //எங்க மதத்தை உங்களை பின்பற்ற சொன்னோமா?//

    இப்போது நிச்சயமாக இப்ராஹிம் நானா ஒரு பெயர்தாங்கி முஸ்லீம்தான் என்பது காபிர் சார்வாகனுக்கு வெளங்கியிருக்கணுமே.

    உண்மையான தூய இஸ்லாத்து தாவாக்களை பெற உடனே அணுகுவீர்

    நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!

    ReplyDelete
  25. நான் கமல் இரசிகன் இல்லை. இப்போ தீவிரமாக கமலை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எல்லாப் புகழும் தீவிரவாத முமீன்களுக்கே. உங்கள் இடுகையை என் பதிவில் வெட்டி ஒட்டியுள்ளேன்.

    ReplyDelete
  26. நான் பொதுவாக படம் பார்ப்பதில் விருப்பம் இல்லாதவன்,பழைய சிவாஜி,ஜெமினி,படங்கள் பார்ப்பது உண்டு,ஆனால் விசுவரூப படத்தை பார்க்கத் தூண்டிவிட்டார்கள் பார்த்தப் பிறகு தவறு என்றால் கண்டனம் தெரிவிப்போம் அதுவரை காத்திருப்போம். அன்றே சொன்னார் பெரியார் பக்தி வந்தால் புத்தி போகும் என்று....

    ReplyDelete
  27. சகோ.சார்வாகன்,

    லோக நாயகரின் படம் வழக்கம் போல் மொக்கையாகி இருக்கும் இந்த முமீன்களின் விளம்பர மோகப்போரட்டத்தால் பிக் அப் ஆகிடுச்சு.

    மேலும் இது போன்ற வேறுபட்ட பட வெளியீட்டால் திஉடூ டிவி தான் சக்கப்போடு போடப்போகுது.

    இந்த முமீன் போராளிகள் தங்கள் இருப்பைக்காட்ட ஒரு போராட்டம் வேண்டும் அது சினிமா சம்பந்தமாந்து எனில் நல்ல விளம்பரம்னு செய்யுறாங்க.

    முமீன்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக இப்படி போராட சொல்லுங்க பார்ப்போம் ,யாரும் வாயக்கூட தொறக்க மாட்டாங்க.

    அரபு நாடுகளில் கஷ்டப்படும் ஏழை முமீன்களுக்கு நல்ல வழிக்கிடைக்க போராட சொல்லுங்கள் ஒருத்தரும் செய்ய மாட்டாங்க.

    அரபுநாடுகளுக்கு ஏஜண்டுகளை நம்பி பணங்கட்டி போய் ஏமாறும் மக்களுக்கு நல்ல வழி காட்டலாம், ஏஜண்டுகள் அனைவரும் இஸ்லாமியர்கள் தான், ஏன் இப்படி பொய் சொல்லி ஏமாத்திக்கூப்பிட்டு போய் கஷ்டப்படுத்துறாங்கன்னு இந்த இஸ்லாமிய அமைப்புகள் அவர்களை ந்லவழிப்படுத்தலாமே ,பல அப்பாவிகளின் கஷ்ட, நீங்குமே?

    இஸ்லாமியர்கள் பலரும் கல்வி நிறுவனங்கள் நடத்துறாங்க,அங்கெயெல்லாம் இஸ்லாமியர்களுக்கு இலவச கல்வி கொடுக்க சொல்லலாம்,ஆனால் காசு கொடுப்பவர்களுக்கு தான் பொறியியல்,மருத்துவ இடம், அப்போ அல்லா தண்டிக்க மாட்டாரா?

    ஆக மொத்தம் குரான் சொல்லும் மார்க்க நெறியெல்லாம் படிக்கமட்டுமே வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அல்ல :-))

    ReplyDelete