Thursday, January 24, 2013

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் நெதன்யாகு ஆட்சி அமைப்பாரா?



Isrel Primie Minister Benjamin Nethanyahu



வணக்கம் நண்பர்களே,

நேற்று இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியாயின.இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு என்பதால் அதன் 120 மக்கள் அவை[Knesset] உறுப்பினர்கள் கட்சிகளின் ஓட்டு சதவீத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ஒரு கட்சி உறுப்பினர்களை பெற குறைந்த பட்சம் 2% ஓட்டு பெற வேண்டும். 61 உறுப்பினரை பெறும் கட்சிக் கூட்டணி[தனியாக ஆட்சி அமைக்கும் சாத்தியம் மிக குறைவு]யில் இருந்து பிரதமர்,மந்திரிகள் நியமிக்கப்படுவர்.


அதிபரும் இந்த 120 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், அது ஒருமுறை மட்டுமே வகிக்கக்கூடிய,7 வருடத்திற்கான, அதிகார பலம் அற்ற பதவி.இப்போதைய‌ இஸ்ரேல் அதிபர் சைமன் பெரஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்ந்த்டுக்கப் பட்டார்.


இஸ்ரேல் அரசியலில் வலதுசாரி,இடதுசாரி என இரு பிரிவுகள் உண்டு. வலதுசாரிகள் இஸ்ரேல் யூதருக்கே என்னும் கொள்கை, தீவிர உலக்மயமாக்கல் கொள்கை  எனலாம்,இடதுசாரிகள் பால்ஸ்தீனம் பிரிவதையும், இஸ்ரேலி அரபுக்களின் உரிமை ,உள்ளிட்டு இடது சாரி பொருளாதாரக் கொள்கையும் முன்னெடுக்கிறார்.

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற வலதுசாரிக் கூட்டணியின் தலைவர்,லிகுத் கட்சியை சேர்ந்த திரு பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி நடத்தி வந்தார்.நேற்று நடந்த தேர்தலில் லிகுத் கட்சி+மற்றும் இஸ்ரேல் பெயிட்னு[இஸ்ரேல் எங்கள் தாய்வீடு]கட்சிக்கு 31 இடம் மட்டுமே கிடைத்தது.சென்ற தேர்தலில் கிடைத்த 42 இடங்களை விட 11 இடங்கள் குறைவாகும். ஆட்சி அமைக்க இன்னும் 30 இடங்கள் தேவை!!

வலது சாரிக் கட்சியான ஹெபயித் ஹெயகுடி 11 இடங்களும், தீவிர யூத அடிப்படைவாத ஷாஸ் 11 இடங்கள் மற்றும் யுனைட்டெட் தோரா யூதம் 7 இடங்களும் சேர்த்து 31+11+11+7=60 இடங்கள் வருகிறது.



மத்திய இடது கட்சினரின் யேஷ் அடிட் 19 இடங்களும்,தொழிலாளர் கட்சி 15 இடங்களும் ஹட்னுவா 6 இடங்கள்,மெரட்ஸ் 6 இடங்கள், மற்றும் கடிமா 2 இடங்கள் சேர்த்தால் 19+15+6+6+2 =48.


இஸ்ரேலி அரபுக்களும் 3 கட்சிகள் நடத்தி மொத்தம் 12 இடம் பெற்று இருக்கின்றார்கள். எனினும் இவர்களை ஒப்புக்கு சப்பாணி போலவே வலது இடது,இரு அணியும் சேர்த்துக் கொண்டதே இல்லை!!!.

Israeli election results graph

Yair Lapid celebrates (23 January 2013)
Yair Labid
யேஷ் அடிட் சென்ற வருடம் தொடங்கிய கட்சி என்பதும் நெதன்யாகுவுக்கு எதிராது அல்ல என்பதும் அதன் தலைவர் யாயிர் லாபிட் கூறுவதில் இருந்து தெரிகிறது.

இஸ்ரேலில் அனைத்து மாணவர்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என கட்டாயம் உண்டு.யூதர்களில் சில அடிப்படை மத்வாதிகள் தங்களின் மதக் கொள்கைக்கு விரோதமானது என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதுவரை இஸ்ரேல் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்றாலும் யேஷ் அடிட் இதனை அமையும் அரசுக்கு ஆதரவு அளிக்க நிபந்த்னை ஆக்கலாம்.

[ நம் ஊரில் கப்பலில் ஏறி போரில் சண்டை போட ஆள் எடுப்பதால், கடல் தாண்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கு என சொல்லி தப்பித்தவர்கள், இப்போது பணம் தேடி கடல் மீது பறக்கும் பரம்பரையாக மாறியது ஞாபகம் வருகிறது.] 

ஆகவே நெதன்யாகு ஆட்சி அமைத்தாலும் அவருக்கு இந்த ஆட்சி மிகுந்த சவாலாகவே இருக்கும்.

பாலஸ்தினததை பொறுத்த்வரை வலது சாரிகளுக்கு அதைப் பற்றி நினைக்கவே பிடிக்காது என்றாலும் யேஷ் அடிட் இரு நாட்டு தீர்வு என்ற கொள்கை உடையவர் என்பதும்,இதனை பேசி சுமுகமாக தீர்க்க ஏதேனும் செய்வார் என்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நல்லதே நடக்கட்டும்!!. இஸ்ரேலின் ஜனநாயக ஆட்சிமுறைக்கு பாராட்டும், மத்தியக் கிழக்கு பிரச்சினைகள் தீர முயற்சிகள் முன்னெடுக்க வாழ்த்துகிறோம்!!.

நன்றி!!

  
  

2 comments:

  1. நல்ல கட்டுரை. பயனுள்ள தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி சார்வாகன்.

    யேஸ் அடிட், நெடன்யாகுவுக்கு ஆதரவளிக்கும் என நீங்கள் எண்ணுவது போல் உள்ளது அலசலின் பிற்பகுதி. பார்ப்போம்.

    நீங்கள் கொடுத்துள்ள கட்சி பட்டியலில், வலதுசாரி கட்சிகள் தைரியமாக வலதுசாரி என்று சொல்லி கொள்வதும், இடது சாரி கட்சிகள், நடு மற்றும் இடது சாரி என்று தயக்கத்துடன் சொல்வதும் வேடிக்கையாய் இருக்கு. உலகம் முழுக்கவே இப்பவெல்லாம் தான் முழுதாய் இடது சாரி என்று சொல்லி கொள்ள கொஞ்சம் தயக்கம் தான் போல.

    // நம் ஊரில் கப்பலில் ஏறி போரில் சண்டை போட ஆள் எடுப்பதால், கடல் தாண்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கு //

    சார்வாகன், இது வெறும் அனுமானமா? இல்லை சண்டைக்கு பயந்து தான் சொன்னார்கள் என்பதற்கு ஏதேனும் சான்று இருக்கா?

    ReplyDelete
  2. வாங்க சகோ கணேசன்,
    இஸ்ரேல் ஒரு வியப்பான நாடுதான், எண்ணெய் இருக்கும் அண்டை நாடுகள் செய்யாத பாலைவனத்தையும் சோலை வனமாக்கி,பொருளாதாரத்தில் முன்னேற்றம்,சூரிய ஒளி தொழி நுடபம் அதிகம் பயன்படுத்தும் நாடு,சுற்றி வரும் எதிரிகளை சமாளிப்பதும் வியப்பான ஒன்று!!

    ஜன்நாயக்த்தினையும், மத சார்பின்மையையும் போற்றி வருவதும் கண்கூடு.ஆட்சி மாற்றம் என்பது மிக இயல்பாக நடக்கும். மத்திய கிழக்கில் வேறு நாடுகளில் ஆட்சி மாற்றம் என்றால் உயிர் பலி மட்டுமே!!.

    ***
    சில சாதியினர் கடல் கடந்து செல்ல மாட்டோம் எனக் கூறியதற்கு புராணம் கூறுகிறது என சொன்னாலும் அதற்கு ஆதாரம் இல்லை.பவுத சமண துறவிகள் கடல்கடந்து சென்று மதம் பரப்பியது போல் வைதீக மதகுருக்கள் செய்யவில்லை.

    இதன் காரணமாக,ஆச்சாரம் கெடுதல்,போரினைத் தவிர்த்தல் உள்ளிட்டு கூறப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவத்தில் சாதிரீதியாக அணிகள் இருந்த்ன. யார் குறைவாக இருந்தார்கள் என்பது அறியாத விடயமா?. பிரிட்டிஷாரால் விவசாயத்திற்காக ,இலங்கை,ஃபிஜித் தீவு உள்ளிட்டு இடப்பெயர்ச்சி செய்யப் பட்ட மக்க்ள் யார் யார் என்பதையும் யொசியுங்கள்!!

    புராணத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்ல பொருளாதார,பாதுகாப்பு காரணம் மட்டுமே இருக்க முடியும்!!.

    யாரும் தங்களின் ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்தி வைக்க மாட்டார்கள்!.

    கடல் கடந்து செல்லல் அப்போது இலாபமாக,பாதுகாப்பாக இல்லை,இப்போது நாம் அறிவோம்.
    மகாபாரதத்தில் பிராமண்ர் ஆன துரோணர் வில்வித்தை குரு என்றாலும் கடந்த சில் ஆயிரம் ஆண்டுகளில் பிராமணர்கள் பெரும்பானமை போரில் ஈடுபடவில்லை. தங்களை மத ஆச்சாரப் பாதுகாவலர் ஆக்கி போரில் ஈடுபடுவதில் இருந்து தப்பித்த்னர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவன் என்ற ரீதியில் அனைவரும் போரில் ஈடுபடும் கட்டாயம் அப்போது இருந்தது போல், இபோது இஸ்ரேலிலும் அனைவரும் போர் பயிற்சி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உண்டு கொழுக்கும் யூத மதகுருக்கள் இதில் இருந்து தப்பிக்க நினைப்பது வியப்பில்லையே!!. இதேதான் அப்போது!!
    ஏன் என்பதை கண்டுகொள்ளல் எளிதே!!


    விவசாயம்,கழிவறை பேணுதல் என்பது இலாபம் ஆனால் அனைத்து சாதியினரும் ஈடுபடுவார் என்பதும் உண்மையே!!!

    http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=3065


    Sections of the Hindu Dharma Shastras, or law books, ban taking a voyage by sea or visiting the lands beyond India. The ancient lawmakers reasoned that travelers could not maintain their daily ritual worship while traveling, and would be polluted by the influence of foreign religion and culture upon arrival at their destination. Today the Hindu disapora has created significant Hindu communities in nearly every country of the world--communities eager for the ministry of their religious leaders and priests. Over the last two hundred years, each Hindu lineage which observed the travel restrictions--and not all of them did historically--has faced the question of keeping or changing a tradition dating back more than two thousand years.

    Thank you!!

    ReplyDelete