வணக்கம் நண்பர்களே,
அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வரும் விளைவுகளில் ஒன்றுதான்.ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்து குடியுரிமை பெறும் நிகழ்வு ஆகும். அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போரின் காயங்களை ஆற்றும் வண்ணம் ,அதற்கு மருந்திடும் வகையில் பல வேற்று நாட்டவருக்கு குடியுரிமை வழங்க முன் வந்தார்கள்.
வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மக்க்ள் குழுக்களை ,பொருளதார முன்னேற்றத் திட்டங்களுக்காக நாடு விட்டு நாடு கொண்டு சென்றதன் பிரச்சினைகளின் மிச்ச்சங்கள் நம் கண்முன்னே இலங்கை மலையகத் தமிழர்கள்,தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ஃபிஜித் தீவு இந்தியர்கள் என விரிகிறது.
இப்படி புலம் பெயர்ந்தவர்களுக்கு சுதந்திரம் பெற்ற நாடுகள் சரியான குடியுரிமை வழங்கவில்லை, அரசியல் அமைப்பு சட்டங்களில் உரிமைகள் வழங்கப் படவில்லை என்பதே பல இனசிக்கல் போராட்டங்களுக்கு காரணம் ஆயிற்று.
இப்பதிவின் நோக்கம் இது அல்ல!!.
குடியுரிமை வழங்கும் சில நாடுகளின் வரையறைகளில் உள்ள இனவெறியை அம்பலப் படுத்துவதே நம் நோக்கம்.
1. அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் தமிழர்கள் உட்பட பல்ருக்கு குடியுரிமை தந்து,சம் உரிமை வழங்கினாலும் அமெரிக்க ஹிஸ்பனோ இனத்த்வரையும்,ஐரோப்பிய நாடுகள் ரோமா இனத்தவரையும் ஒதுக்குகின்றன.யூதர்கள் போல் ரோமா இனத்தவரும் ஹிட்லரால் கொன்று குவிக்கப் பட்டாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை.
நண்பர் கலையரசன் ரோமா இன மக்களைப் பற்றி எழுதிய பதிவு.
2. ஆஸ்திரேலியா,நியு ஜிலந்து போன்ற நாடுகளில் கூட கடந்த நூற்றாண்டில் வெள்ளை இனத்வருக்கே முன்னுரிமை வழங்கப் பட்டது.
எனினும் இப்போது இன வேறுபாடின்றி கல்வி,திற்மை கொண்டோரை குடியுரிமை அளித்து ஏற்கிறது.கன்டா இதில் பாரபட்சம் அற்ற நாடு எனக் கூறலாம்.குடியுரிமை அளிப்பவர்கள் தங்கள் நாட்டுக்கு பலன் இருப்பதால் மட்டுமே அளிக்கிறார். புலம் பெயர்பவர் ஈட்டும் செல்வம் பெருமளவு நாட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப் படுகிறது.குடியுரிமை கோரி செல்பவருக்கும் இதில் பலன் இருப்பதால் இது இருவருக்கும் பலன் அளிக்கிறது.
3. வளரும் நாடுகளில் இருந்தே ,வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு புலம் பெயர்வது இயல்பே.இது சமூக,கலாச்சாரங்கள் கலந்து புதிய சமூக நடைமுறைகள் அமலுக்கு வர உதவுகிறது. இந்தியாவுக்கு குடியுரிமை வேண்டி இலங்கை தமிழர்கள், வங்க தேசகாரர்கள் முயற்சி செய்கின்றனர்..
***
பொதுவாக குடியுரிமை& பல நடைமுறை சிக்கல்கள் பற்றி சொல்லி விட்டோம்.மத்தியக் கிழக்கு நாடுகள் இரண்டின் குடியுரிமை வழங்கும் விதத்தை பார்ப்போம்.
உலகம் செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்வது மத்தியக் கிழக்கின் வழக்கம்.அங்கு நிகழும் அரசியல்,சமூக சிக்கல்கள் உலகையே வளர்ச்சியை நோக்கி செல்ல விடாமல் செய்கிறது என்றால் மிகையாகாது.
இதில் இரு நாடுகளின் குடியுரிமை பற்றி பார்க்கப் போகிறோம்!!.
1.இஸ்ரேல் 2.சவுதி அரேபியா
இஸ்ரேல் இந்த நூற்றாண்டின் மிக வியப்பான நாடு. "சாமி கொடுத்த இடம்" என சொல்லி உலகம் முழுதும் இருந்து வந்த யூதர்கள் கொஞ்சம் இடத்தை விலை கொடுத்து வாங்கியும்,இன்னும் கொஞ்சம் அடித்துப் பிடுங்கி, ஐ.நா ஆதரவோடு ஒரு நாட்டை கட்டி அமைத்தார்கள்.யூதர்கள் எங்க பாட்டன் சொத்துன்னு இஸ்ரேலை சொல்கிறார்கள்.[ஹி ஹி மேலே போட்ட படத்துக்கு தொடர்பு வந்து விட்டது!!!]
இஸ்ரேலின் எதிர்க் கோஷ்டி சவுதி அரேபியா இஸ்ரேலின் இரட்டை சகோதரன் போல் "சாமி கொடுத்த சட்டம்" என சொல்லி,வாஹாபியம் கொண்டு ஆட்டோமன் பேரரசை வெள்ளையர் உதவியுடன் உடைத்து ஒரு நாட்டை இபின் சவுத் வம்சத்தினர் உருவாக்கினர்.போட்டிக் குழுக்களை நாட்டை விட்டு உதைத்து விரட்டி விட்டனர். எண்ணெய் வளத்தை மேலைநாடுகளுக்கு வாரி வழங்குவதும், மத ஆதரவு போக்கினால் இபின் சவுதின் வம்சம் ஆட்சியை நிலைநிறுத்தியது.
சவுதி சொல்கிறது சட்டம் என்கையில்[ பொருத்த்மாக படம் ஹி ஹி]
இஸ்ரேல் யூதர்களுக்கானது என்றாலும் யூதர்கள் யார் என்பது அவர்களுக்கே உள்ள ஒரு சிக்கல்.பல் மொழி பல் இனம் என்பதால் ஒன்றுபடுதல் மிக கடினமான ஒன்றே. அண்டை நாட்டு எதிரிகள் மட்டும்தான் இஸ்ரேலை ஒன்றுபடுத்துகிறார்கள்.
இஸ்ரேலுக்கு மேற்கு கரையையும் தன்னோடு சேர்க்க ஆசை.சேர்த்தால் யூதர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்.நடப்பது ஜனநாயகம் என்பதால் யூதர்களின் எண்ணிக்கையை எப்படியாவது அதிகரிக்கும் கட்டாயம் வந்ததாலும், யூதப் பெண்கள் சுதந்திரமானவர்கள் என்பதால் அதிக குழந்தைகள் பெற மறுப்பதாலும்[2010 population growth rate 1.9%], பாலஸ்தீனர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் கடமையே கண்ணாக ,மக்கள் தொகையை பெருக்கி[population growth rate 3.4%] வருவதாலும் ,தங்கள் ஆதரவாளர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்த்னர்.
யூத மதத்தினர் உலகில் மிக குறைவு. கிறித்தவ மதம் சார்ந்தோருக்கு குடியுரிமை வழங்னால் பிற்காலத்தில் இன சிக்கல் வரும். ஹி ஹி கிறித்தவர்களுக்கு அஞ்சியே யூதர்கள் ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு வந்த்னர். அவர்கள் அழைத்து வரப் படவில்லை.கட்டாயத்தால் இழுத்து வரப் பட்டார்கள்.
யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எப்படியாவது யூதர்களைக் கண்டுபிடித்து குடியுரிமை வழங்க முடிவு செய்தனர்.
அவர்களின் மதபுத்தகத்தில் தொலைந்து போன யூத இனம்[lost tribe] என சில கதைகள் உண்டு. அதற்கு பொருந்தும் வண்ணம் சில் இனத்த்வரைக் கண்டு பிடித்து குடியுரிமை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் கூட மேகாலயா மாநில ஆதிவாசி இனக்குழுவைச் ச்ர்ர்ந்த ஆயிரக் கண்க்கானோருக்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது.
ஆகவே இஸ்ரேலுக்கு குடிபெயர யூத இனத்தை சேர்ந்த்வன்/ள் என நிரூபித்தால் போதுமானது. அது எப்படி சரிபார்ப்பார்கள் என்றால் விக்கிபிடியாவில் படித்துக் கொள்ளுங்கள் பின்னூட்டங்களின் சரி செய்கிறேன்.
யூதர்கள் எங்கு இருந்தாலும் இஸ்ரேல் வந்து தங்கலாம்,குடியுரிமை பெற்றுக் கொள்ள்லாம், மெற்கு கரையை ஆக்கிரமித்து வீடு கட்டிக் கொடுக்கப்படும் என இஸ்ரேல் கருமமே கண்ணாக பாலஸ்தீனர்களின் இடங்களை ,வந்தேறும் குடியினருக்கு அளித்து வருகிறது.
இதுவே இஸ்ரேலிய குடியுரிமையின் நிலைஆகும்.!!
**
இஸ்ரேலின் இரட்டை சகோதரன் சவுதி ஏன் குடியுரிமை வழங்க முன்வருகிறது?
கடந்த சில வருடங்களாக சவுதி பிற நாட்டவ்ருக்கு குடியுரிமை வழங்க முன்வருவது வியப்பான செய்திதான்.
சவுதி பெண்கள் அதிகம் மஹர் கேட்பதால் மட்டுமே முதிர் கன்னிகள் சவுதியில் அதிகம், மஹர் ஏன் அதிகம் எனில் ஆண்கள் எந்த நேரமும் விலக்கு செய்து விடலாம்,இன்னும் சில திருமணம் செய்யலாம் என்பதால் ஒரு பிடிப்பு.பணம் இருக்கும் சவுதிகள் அந்நாட்டின் 4 மனைவிகள் வரை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பதை அமல் படுத்துவதால்,பல் மத்திய தர வர்க்க சவுதிகளுக்கு சவுதி பெண்கள் கிடைப்பது இல்லை.
ஆகவே சவுதி ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை மணமுடிக்க அனுமதி தரும் போது,பெண்களுக்கும் அனுமதி தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
சரி சவுதியை திருமணம் முடித்தால் வேற்று நாட்டவர் குடியிரிமை பெறுவாரா?
இல்லை.சவுதி ஆணை மண முடிக்கும் பெண்ணுக்கு திருமணம் நிலைக்கும் வரை குடியுரிமை உண்டு.பெண்ணை மணமுடிக்கும் வேற்று நாட்டு ஆணுக்கு குடியுரிமை கிடைக்காது.
ஆனால் குழந்தைகளுக்கு குடியுரிமை கிட்ட சில நிபந்த்னைகளுடன் கூடிய வரைமுறைகள் வகுத்து உள்ளனர்.
A)குழந்தை ஆணாக இருந்தால் 10 புள்ளியில் 7 புள்ளி பெற வேண்டும்.
எப்படி?
அ) மேஜர்[வயது] ஆகும் போது சவுதியில் வசிக்க வேண்டும்=1 புள்ளி
ஆ) கல்வியில் பள்ளிப் படிப்பு முடித்து இருக வேண்டும்[சுமார் 12 வது]=1 புள்ளி
இ) தாயின் தந்தை, தந்தையின் தந்தை சவுதிகளாக இருக்க வேண்டும்=6 புள்ளி
இ1) தாயின் தந்தை மட்டுமே சவுதியாக இருந்தால்= 2புள்ளி மட்டுமே
ஈ) சவுதி சகோதரன்,சகோதரி இருப்பின் [இது எப்படி என்றால் தாயின்முந்தைய திருமணம் அல்லது ஏற்கெனவே குடியுரிமை பெற்றும் இருப்பவர்கள்] =2 புள்ளி
மொத்தம்= 10 புள்ளிகள்.
**
B). சவுதி பெண்,பிற ஆண் தம்பதிகளுக்கு பிறந்த பெண் 22 புள்ளியில் 17 புள்ளிகள் பெற்றல் மட்டுமே சவுதி குடியுரிமை பெற முடியும்.
அது என்ன?
அ) சவுதியில் பிறந்து இருந்தால்=2 புள்ளி
ஆ)ஏதேனும் ஒரு உறவு(தந்தை,தாய்,சகோத்ரன்)சவுதி ஆக இருப்பின்=2 புள்ளி
இ) கல்வியில் பட்டப் படிப்பு முடித்து இருக வேண்டும்.=2 புள்ளி
ஈ) குடியுரிமை கோரும் பெண் திருமணத்துக்கு முன் சவுதியில் 10 ஆண்டுகள் வசித்தால்=2 புள்ளி.
உ) திருமணத்தின் பின் ஒவ்வொருவருடத்துக்கும் ஒரு புள்ளிவீதம் அதிக படசம்=10 புள்ளிகள்
ஊ) ஒரு குழந்தைக்கு 2புள்ளிகள் வீதம் இரு குழந்தைகள் வரை அதிக பட்சம்=4 புள்ளிகள்.
மொத்தம் 22 புள்ளிகள்;
ஹி ஹி குடியுரிமை கோரும் பெண்ணின் கணவன் சவுதியாக இல்லாவிட்டால் ,குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப் படும்
ஏழு மலை தாண்டி,ஏழு கடல் தாண்டி 100 கி.மீ ஆழத்தில் உள்ள எறும்பின் கண்ணை நோண்டி ஆடாமல்,அசையாமல் வந்தால் குடியுரிமை கிட்டும் ஹி ஹி!!!
மேலே சொன விடயங்களில் இருந்து தற்காலிகமாக இந்த தலைமுறையில் மட்டும் திருமண உறவை அங்கீகரித்து, அடுத்த தலைமுறையினர் சவுதிகளுக்கிடையே மட்டுமே மண உறவு கொள்ள கட்டாயம் இருப்பது புரியும். அப்படி செய்யாத பட்சத்தில் குடியுரிமை இழப்பர்.
இதில் சரி தவறு நாம் சொல்லவில்லை. இரு நாடுகளுமே தங்களின் சுய பிரச்சினைகளுக்கக குடியுரிமை வழங்குகின்றன.அதே சமயம் இனத் தூய்மை என்னும் கருத்தாக்கம் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
இதுதான் சுடும் உண்மை. இதைப் புரியாமல் கண்ணைமூடிக் கொண்டு எதையும் ஆதரிப்போரே சிந்திக்க மாட்டீர்களா???
நன்றி!!!
நல்ல மனிதாக இருந்தால் மேற்கு நாடுகளில் குடியுரிமை, யூதனாக இருந்தால் இஸ்ரேலில் குடியுரிமை, ஒரு வகாபி முஸ்லிமாக இருந்தால் சவுதியில் குடியுரிமைக் கிடைக்குமா ?! ம்ம்ம் ஹூம் !!
ReplyDeleteவாங்க சகோ,
Deleteயூத்னாக இருந்தால் இஸ்ரேல் ,பாலஸ்தினர்களிடம் இருந்து இடம் பிடுங்கி வீடு கட்டிக் கொடுக்கும்.
பாருங்க சத்தம் இல்லாமல் டென்ட் சிட்டி என கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
**
சவுதி வஹாபி என்றாலும் ,இனக்கலப்பு ஏற்படுவது குறித்து அஞ்சுவது அவர்களின் ஏழுமலை தாண்டி நிபந்த்னைகளில் இருந்தே புரியும்.
பாலஸ்தீனர்கள் சிலருக்கு குடியுரிமை கொடுத்தால் பல்விதங்களில் நன்மை புரியும் என்றாலும் செய்ய மாட்டார்கள்.
சவுதி நாடு வந்தது இப்போது,அரபுகளில் என்ன வித்தியாசம் சவுதிகள் கண்டு பிடிக்கிறார்களோ. இது நம்து சாதிப் பிரிவினை போன்றதே!!
அரபி அல்லாதவ்ர்கள் சவுதியில் குடியுரிமை பெற்று ,தங்களின் மொழி,கலாச்சாரம் காப்பது 100% முடியாத காரியம்!!
சவுதிகளுக்கு வஹாபியம் என்பது அவர்களின் பாதுகாப்பு கவசம் மட்டுமே. உடை அல்ல!!
ஹி ஹி சிந்திக்க மாட்டீர்களா!!!
நன்றி!!
குடியுரிமை குறித்து பல தகவல்கள் அளித்துள்ளீர்கள். அமெரிக்கா ஹிஸ்பனோ இனத்தவரை ஒதுக்கிறது என்பது சட்டப்படி இல்லை. மேலும் இந்த லத்தீனோக்கள் இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பான்மை பெற்று வெள்ளையரை வீழ்த்திட உள்ளார். அதற்கான கடும் முயற்சில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்து வருகிறார்கள்.
ReplyDeleteஅமெரிக்காவில் அனைவரும் சமமே. ஆனால் இந்தியாவில் எப்படி சட்டவிரோதமாக முற்பட்ட வகுப்பினர் நடக்கின்றார்களே அதே போன்றதொரு நினைப்பில் வெள்ளையர் இருக்கிறார்கள். ஆக லத்தீனோக்களோட பிற அனைத்து வகுப்பினரும் இரண்டாம் தர குடிகளாவே நடத்தப்படுகிறார்கள். ஆனால் வெளிப்படையாக தெரியாது, ஏனெனில் எவனாவது வழக்கு போட்டால் பல கோடி அழ வேண்டியிருக்கும். ஆதலால் மறைமுகமாவே ஐரோப்பியரது இனபாசம் இருக்கும். உதாரணமாக வெள்ளையன் குற்றவாளி எனில் தண்டனை சட்டம் லீனியன்டாக வேலை செய்யும். ஆனால் பிற இனத்தவர் எனில் கடுமை காட்டும்.சவுதி பாணிதான்!
இந்தியாவில் சாதி வெறி என எதற்கெடுத்தாலும் கரித்து கொட்டி கண்டபடி ஏசும் அமெரிக்க பதிவர்கள் இதைப் பற்றி எழுத மாட்டார்கள். ;) அமெரிக்க துரைமார்கள் மீதும் அந்த நாட்டின் மீது அவர்களுக்கும் அம்புட்டு பற்று அவர்களுக்கு. ஆனால் கண்டிப்பாக அவர்கள் இன ஒதுக்கீட்டை ஒரு தடவையாவது அவர்கள் அனுபவித்திருப்பார்கள் என உறுதியாக கூற முடியும்! இது மறுத்தால் அவர் அண்டப்புழுகர், ஆகாசபுழுகர் இல்லைன்னா சுருக்கமாக சவுதி மார்க்க பதிவர் போன்றவர் எனலாம்!
சகோ நந்தவனம்,
Deleteநீங்கள் பதிவை மட்டும் அல்ல என மனதையும் படிக்கிறீர்கள். ஹி ஹி நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நானும் யோசித்தேன். கொஞ்சம் அமெரிகாவையும் விமர்சிக்கலாமே என்றுதான் ஹி ஹி.
சட்டப்படி இல்லாத விடயங்கள் நடைமுறையில் இருக்கும் ஒரு விடயமே இது.
இந்தியாவில் இது அதிகம்.சட்டப்படி இன,சாதி,மத உயர்வு தாழ்வு,பாரப்டசம் இல்லை ஆனால்!!!!!
அமெரிக்காவில் ஹிஸ்பனோஃபொபியா ,இந்திய ஃபோபியா,இஸ்லாமிய ஃபோபியா கொஞ்சம் இருக்கு!!
நன்றி!
கனடாவிலும் பிற இனத்தவருக்கு குடியேறும் உரிமை முதலில் மறுக்கப்பட்டது, சீனருக்கு தலைவரி, சீக்கியர் கப்பலை திருப்பி அனுப்பியது, ஜெர்மானியர்களை ஒதுக்கியது. பழைய கதை அது. இப்போது எவரும் வரலாம் என்ற நிலை இருக்கு, வருவோர் பலர் நாட்டைச் சுரண்டவும், கோயில்கள் கட்டவுமே முனைவது வேதனையான உண்மை.
ReplyDeleteமிக்க நன்றி சகோ,
Deleteகுடியுரிமை பற்றி அனைத்து நாடுகளீன் வரலாற்றுரீதியாக ஒப்பீடு செய்தால்,பதிவு பத்தாது.ஆகவே சில விடயங்களை தவிர்த்து விட்டேன்.தகவல்களுக்கு நன்றி!!
மனித இனம் நாகரிகம் நோக்கி செல்வது என்றால் கடந்த கால தவறுகளை ஒத்துக் கொண்டு,பரிகாரம் தேடுவதுதான்.கனடாவின் இப்போதைய சட்டங்கள் பரவாயில்லை
**
நம்ம ஆட்கள் முதலில் காசு தேடுவார்,பிறகு கவுரவம்,கலாச்சாரம் எல்லாம் ஊரில் இருந்து இறக்குமதி செய்வார்.அதோடு பழைய சாதி,மந்திரம்,மாயம் எல்லாம் சேர்ந்து சமூக பிரச்சினைகளை உருவாக்கி மீண்டும் பழைய பொருளாதார நிலைக்கு செல்வார்.
இதுவே உலக் நியதி! ஹி ஹி
நன்றி!!!
இசுரேலை சவுதியுடன் ஒப்பிடுவது சரியில்லீங்க. ஏன்னா யூதர் அல்லாதவரும் இசுரேல் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இயலும். மூன்று வருடம் இசுரேலில் வசிக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம்.
ReplyDeleteயூதருக்கு முன்னுரிமை உண்டு, ஏனெனில் யூதர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு சென்றவர்கள் என கருதப்படுவதால், அவர்கள் திரும்பி வரத்தானே அந்த நாடே உருவாக்கப்பட்டது? இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமைக்கு சுலபமாக விண்ணபிக்கலாமே அது போல.
பாகிஸ்தான் சொறிநாய்கள் மும்பாய் தாக்கிய போது யூத கைக்குழந்தையை காப்பாற்றிய இந்திய பணிப்பெண்ணுக்கு இசுரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது. அக்குழந்தையின் கர்ப்பவதியான தாயையும் தந்தையையும் பாகிஸ்தான் வெறியர்கள் கொன்றுவிட்டார்கள். அந்த 2 வயது குழந்தையை அடித்துள்ளார்கள். அக்குழந்தையை பிற்ப்பாடு இந்திய பெண் காப்பாற்றினார். அவர் இப்போது இசுரேலிய குடிமகளாக மாறி பாட்டி வீட்டில் வளரும் அக்குழந்தையை பார்த்துக் கொள்ளுகிறார்.
http://www.dailymail.co.uk/news/article-1091318/Jewish-mother-killed-Mumbai-attacks-pregnant--son-2-beaten-militants.html
சகோ நந்தவனம்,
Deleteஉங்கள் பார்வை சார்பியல் சார் விடயம்.
சவுதி காஃபிர்களூக்கு வில்லன்.யூதன் அரபுக்களுக்கு மட்டுமே வில்லன்.ஆகவே வில்லனுக்கு வில்லன் நாயகன் ஆவது இயற்கையே.
ஆனால் பாருங்க சவுதிக்கு [பிறர்] உயிரை விட "சாமி கொடுத்த சட்டம்" பெரிது
யூதனுக்கு [பாலஸ்தீன] வாழ்வுரிமையை விட" சாமி கொடுத்த இடம்" பெரிது
மத புத்த்க கதைப்படியும் இருவரும் சகோக்க்ள்.
இங்கு அரபுக்கள் ஆபிரஹாமின் அடிமை மனைவியின் மக்கள்.
**
யூதர் அல்லாத சிலருக்கும் குடியுரிமை கொடுத்தாலும், எப்படியாவது மேற்கு கரை முழுதும் வீடு கட்டி யூதர்களை குடியேற்றாமல் விடமாட்டேன் என் ஊடு கட்டும் அழகே அழகு!!
கேனப் பய ஊரில் கிறுக்குப் பய நாட்டாமை மாதிரி இஸ்ரேல் வண்டி ஜோரா ஓடுது!!
நாட்டாமை இஸ்ரேல் வீட்டை மாத்திக் கட்டு!!
http://www.timesofisrael.com/high-court-okays-dismantling-of-e1-tent-city/
The Israeli High Court reversed on Wednesday its temporary injunction preventing the dismantling of the Palestinian Bab a-Shams tent city located on the controversial strip of land east of Jerusalem known as E1. The court accepted the state’s position, which argued that “there is an urgent security need to evacuate the area of people and tents.”
The state also claimed that Palestinian Authority officials, who were involved in the raising of the tents, meant to stir up riots and protests at the scene. The state lawyers also warned of protests by right wing extremists.
நன்றி!!
நன்றி சகோ. எதிரிகளே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறார்கள்! தனது படைவீரரின் தலைவெட்டி எடுத்து பாக்கிகள் கொன்ற போதிலும் வளவள என வாய்ச்சாவடால் மட்டும் விடும் இந்தியா போல இசுரோல் இருந்திருந்தால் அந்த இடத்தில் புல்தான் (இசுலாமியர்) முளைத்திருக்கும். மத்திய கிழக்கில் கிருத்துவ, யூத,சௌராஷ்ர மதத்தினர் எல்லோரும் பட்டுப்போய் இசுலாமியர் தவிர யாரும் அங்கு வாழ முடியாததே சாட்சி. இசுரேல் அடாவடித்தனம் செய்து எதிரிகளை நொறுக்குவதால்தான் உயிரோடு இருக்கிறது. என்று அந்த போர்குணம் மறைகிறதோ அன்று இசுரேல் மறையும். (அவ்வாறு இல்லாமல் உப்புமாவாக நாம் இருந்ததால்தான் 1000 வருடம் அடிமையாக இருந்தோம், இப்போதும் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளிவர இயலாமல் உள்ளோம்)
Deleteஇஸ்ரேலில் அகதி அந்தஸ்தும் யாரும் கோரலாமாம் .. மனிதாபிமான ரீதியில் பல வடக்கு ஆப்பிரிக்கர்கள் ( முஸ்லிம்கள் உட்பட ) பலரும் அடைக்கலம் கோருவதாகவும் செய்திகளில் கண்டுள்ளேன். சில எத்தியோப்பியர்கள், தெற்கு சூடானியர்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது. எனக்குத் தெரிந்த மராத்தி இந்தியப் பெண் ( இந்து ) தற்சமயம் இஸ்ரேல் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றார் ( மேற்கல்விக்காக அங்கு சென்ற்வர் ) ... இஸ்ரேல் பரவாலைங்க .. வளைகுடாவில் 40 ஆண்டுகளாக உயிரைக் கொடுத்து வேலை செய்த எவருக்கும் குடியுரிமைக் கிடைத்ததாக நான் அறியவில்லை. எவ்வளவு தான் அங்கே பிறந்து வளர்ந்தாலும் அந்நியர் என்ற முத்திரைக் குத்தப்பட்டுள்ளார்கள் பலரும் .. ( இந்தியர்கள் உட்பட ) ... !
ReplyDeleteஆனால் அதே அரபுகள் கனடாவுக்கு வந்து 3 ஆண்டு வசித்து நிரந்தர வதிவுரிமை, குடியுரிமை எல்லாம் பெற்று பெரிய பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் எல்லாம் கட்டிக் கொண்டு வாழ்கின்றார்கள் ( சனிக்கிழமைப் பார்ட்டி கூட்டி(?!!! ) போவது தனிக் கதை ) .... !
ReplyDeleteபரிணாமாக்கள் இப்போது கருத்து முரண்பட்டிருக்கிறார்கள் .ஹிந்த்த்துவா மணம் கமழும் நந்தவனத்தான் அமெரிக்காவை பற்றி உண்மைகளை சொல்லியிருக்கிறார்.அவர்கள் பேசும் ஜனாயகம் ,ஒழுக்கம் சட்டம் தீவிரவாதம் எல்லாமே மற்றவர்களுக்குத்தான் .அவர்களது செயல்பாடுகள் அதற்கு முரணாக இருக்கும் .மீடியாக்களிலும் கொண்டுவரமுடியாது .
அமேரிக்கா கேம்பில் வேலை செய்யும் நண்பர்கள் கூறுவார்கள் .சின்ன விசயத்திற்க் கூட fuck இல்தான் ஆரம்பிப்பார்கள் என்று .அறைகளில் மற்றவர்கள் முன்பும் நிர்வாண கோலத்திலே இருப்பார்கள் .
///எனக்குத் தெரிந்த மராத்தி இந்தியப் பெண் ( இந்து ) தற்சமயம் இஸ்ரேல் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றார் ( மேற்கல்விக்காக அங்கு சென்ற்வர் ) //
//பாகிஸ்தான் சொறிநாய்கள் மும்பாய் தாக்கிய போது யூத கைக்குழந்தையை காப்பாற்றிய இந்திய பணிப்பெண்ணுக்கு இசுரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது.////
இந்த இரண்டு செய்திகளும் ஒன்றாக இருக்குமோ.
மலேசியாவில் ,இந்தோனேசியாவில் தாரளமாக குடியுரிமை வழங்கப் படுகிறதே .
80 க்கு முன் சென்ற மலையாளிகள் சவுதியில் குடியுரிமை பெற்றுள்ளார்கள்
////நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நானும் யோசித்தேன். கொஞ்சம் அமெரிகாவையும் விமர்சிக்கலாமே என்றுதான் ஹி ஹி.////
முஸ்லிம்கள் எதிரியாக கருதும் அமெரிக்காவை விமர்சித்தால் ,முஸ்லிம்கள் சொல்லுவது சரியாகீடும் .
///ஆதலால் மறைமுகமாவே ஐரோப்பியரது இனபாசம் இருக்கும்.///நந்தவனத்தான் கூற்று .
ஆனால் சார்வாகனுக்கு அமெரிக்க மீது என்ன எழவு பாசமோ?
சவுதியின் குடியுரிமை பற்றி பேசும் சாறு,இந்திய ஜனாதிபத்யோ பாதுகாப்பு அமைச்சரோ அமேரிக்கா சென்றால் நிர்வாண சோதனை .ஆனால் அமெரிக்க அதிபர் இந்தியா வருகையில் அவர்களை பாதுகாக்க கூட அமெரிக்க பாதுகாவல் படைதான் .இந்திய பாதுகாவல் படை பூப்பறித்துக் கொண்டு இருக்க வேண்டுமாம் .இது எந்த வகையில் சேர்த்தி?இங்கே இந்திய நாட்டின் கவுரவம் பற்றி துளி கூட பொருட்படுத்தப் படவில்லையே ஏன்?
இஸ்ரேல் குடியுரிமை வழங்குகிறதாம் ,நாலாந்தர குடிகளைவிட கேவலமாக நடத்தப்படுவார்கள் .
சவூதி பில்லியனாராக இருந்தாலும் வெளிநாட்டு ஏழை முஸ்லிம்களுடன் ஒரே பிளேட்டில் உண்ணுகிறானே ,இந்த சமத்துவம் யாரிடம் வரும்?
சகோ இப்பூ,
Deleteஇப்பதிவு உலக் நாடுகளின் குடியுரிமைச் சட்டங்களில் இனவெறி உள்ளதா என அல்சுகிறது.
அதில் இஸ்ரேல்,சவுதி இரு நாடுகளின் சட்டமுமே இனவெறி உள்ளவை என காட்டி இருக்கிறோம்.
சவுதியை விட இஸ்ரேல் யூதர்களை நிபந்தனைகள் இன்றி குடியுரிமை தருவதையும், சவுதிகள் ,முஸ்லிம் ,அரபு என்பதைத் தாண்டி சவுதி இனம் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றி உள்ளனர் என்பதையும் ஆணித்தரமாக காட்டி இருக்கிறோம்.
சவுதிகளுக்கு தங்கள் இனமே,நலமே முக்கியம். சில வேற்று நாட்டு சவுதி புகழ்பாடிகளை வளர்ப்பதும் இது சார்ந்த விடயமே!!
வேற்று நாட்டு வஹாபி சவுதியை போற்றலாம்.
சவுதி பிறரை எதற்கும் கண்டு கொள்ளமாட்டான் என்பதே உண்மை!!
நன்றி!!!
சகோ இப்பூ,
Deleteசான்றுகளின் அடிப்படையில் மட்டுமே விவாதம் செய்ய வேண்டும். நான் சவுதி நாட்டு சட்டங்களை அதன் இணைய தளத்தில் இருந்தே தமிழாக்கம் செய்து பதிவிட்டு உள்ளேன்.
மலையாளிகள் 80க்கு முந்தையவர்கள்[ ஹி ஹி சமீபத்தில் இலை!!!] குடியுரிமை பெற்று இருந்தால் அவர்கள் பற்றிய விவரம்,இபோது எப்படி வாழ்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை பகிரலாமே!!
மிக்க நன்றி!!
http://www.athishaonline.com/2013/01/blog-post_16.html
Deleteசவுதி பிறநாட்டு ஏழை முஸ்லீம்களை எப்படி மதிக்கிறது என்று இங்கு சென்று படித்துப் பார்க்கவும்..
//சவூதி பில்லியனாராக இருந்தாலும் வெளிநாட்டு ஏழை முஸ்லிம்களுடன் ஒரே பிளேட்டில் உண்ணுகிறானே ,இந்த சமத்துவம் யாரிடம் வரும்?//
Deleteமுஸ்லிமாக இருந்தும் அப்பாவிச் சிறுமியின்(ரிசானா) உயிரைப் பறித்த சவுதியிலா சமத்துவம் இருக்கிறது..
சகோ இப்ராகிம் நீங்க எங்கோ கனவுலகத்தில இருக்கிறீங்க போல..
நாட்டில என்ன நடக்குது எண்டும் இடைக்கிடையாவது பாருங்க..
@இப்பூ
ReplyDelete//ஹிந்த்த்துவா மணம் கமழும் நந்தவனத்தான்//
உங்களுக்கு மோப்பநாயை விட நல்ல மோப்ப சக்தி உண்டு போலிருக்கின்றதே? அங்கிருந்தே என் மீது கமழும் மணம் அறிந்து வைச்சுருக்கீர். ஆனால் வகாபியத்தின் நாற்றத்தினை விட ஹிந்துவாவின் நாத்தம் குறைவுதான்.
//நந்தவனத்தான் அமெரிக்காவை பற்றி உண்மைகளை சொல்லியிருக்கிறார்.அவர்கள் பேசும் ஜனாயகம் ,ஒழுக்கம் சட்டம் தீவிரவாதம் எல்லாமே மற்றவர்களுக்குத்தான் .அவர்களது செயல்பாடுகள் அதற்கு முரணாக இருக்கும் .மீடியாக்களிலும் கொண்டுவரமுடியாது .அமேரிக்கா கேம்பில் வேலை செய்யும் நண்பர்கள் கூறுவார்கள் .சின்ன விசயத்திற்க் கூட fuck இல்தான் ஆரம்பிப்பார்கள் என்று .அறைகளில் மற்றவர்கள் முன்பும் நிர்வாண கோலத்திலே இருப்பார்கள் .//
இப்பூ ஆயிரம் இருந்தாலும் அமெரிக்க வெள்ளையர்கள் பிற வெள்ளை இனத்தவரை விட குறிப்பாக அரபிக்களை அல்லது ஐரோப்பியரைவிட மற்ற இனத்தவரை நல்ல முறையில்தான் நடத்துகிறார்கள். வாடிகனில் போப்பாக கறுப்பர் ஆவது கடினம். ஆனால் அமெரிக்க சனாதிபதி ஒரு கறுப்பினத்தவர் அல்லவா? மேலும் அமெரிக்க சட்டம் அப்படி. சவுதிகாரன் மாதிரி ஒப்பனாக பிற இனத்தவரை இழிவுபடுத்தினால் நிச்சயம் மாமியார் வீட்டு சாப்பாடுதான்!
ப்புறம் அமெரிக்கனுக அவுத்துப் போட்டு ஆடுவானுக என்பது ஓவர். இங்கிலீஷ் படம் பார்த்து கண்டபடி உளறக்கூடாது.அமெரிக்கனுக மிகவும் பழமைவாதிகள். ஐரோப்பியரோடு ஓப்பிட்டால் அவனுக 50 வருடமாவது பின் தங்கி இருப்பானுக. உதாரணமாக இளம் வயது பெண்கள் தெரியாத ஆண்களிடம் பேசுவதை தவிர்ப்பார்கள் (சாலையில் சந்திக்கும் அந்நியரிடமும் ஹாய் சொல்லுவது அமெரிக்க வழக்கம்). கல்யாணமான ஆண்கள் பிற பெண்களிடம் மிகவும் சாக்கிரதையாக பழகுவார்கள்.
//இஸ்ரேல் குடியுரிமை வழங்குகிறதாம் ,நாலாந்தர குடிகளைவிட கேவலமாக நடத்தப்படுவார்கள் //
முதலிம் அரபு நாடுகளிடம் முசுலிம் அல்லாதவருக்கு குடியுரிமை தர சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவனை நொள்ளை சொல்லாம்!
@இப்பூ
ReplyDelete//சவூதி பில்லியனாராக இருந்தாலும் வெளிநாட்டு ஏழை முஸ்லிம்களுடன் ஒரே பிளேட்டில் உண்ணுகிறானே ,இந்த சமத்துவம் யாரிடம் வரும்?//
அமெரிக்காவில் இருந்து கொண்டே பல தடவை அமெரிக்க அரசை விமர்சித்துள்ளேன், அதுவும் அமெரிக்க வெள்ளையரிடம். ஒருத்தனும் இதுவரை கடுப்பாகியும் கெட்ட வார்த்தை சொல்லிக்கூட திட்டியதில்லை. ஆனால் சவுதி மன்னர் குறை சொன்னதால் முமினென்றும் பாரமல் பங்களாதேசிகாரன் கேவலப்பட்டது உலகம் அறிந்ததுதானே?
http://www.youtube.com/watch?v=WP_eyEunAPI
இதுதான் சவுதிக்காரன் பிறநாட்டு முசுலீமை நடத்தும் லட்சணம். நீர் நல்லா உடுறீர் கப்ஸா!
அமெரிக்காவிலும் குறைகள் உண்டு. ஆனால் பிற மதத்தவருக்கு எல்லா உரிமையும் குறைந்தபட்சம் சட்டரீதியாகவாவது தரும் அமெரிக்கா ஒரு தலை சிறந்த நாடுதான்.
சகோ.சார்வாகன்,
ReplyDeleteகுடியுரிமைப்பற்றி நல்ல அலசல். இப்படியான குடியுரிமை சட்டங்கள் பண்டைய கிரேக்க,ரோமானிய காலத்திலேயே உண்டு. அப்பொழுதெல்லாம் மிகப்பெரிய தண்டனை, ஒருவரின் குடியிரிமையை ரத்து செய்வது தான், வரலாற்றின் புகழ்ப்பெற்ற ஹிரோடட்டஸ் என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரின் குடியுரிமையை அப்போதைய கிரேக்க மன்னர் பறித்துவிட்டதால் ,பல காலம் ஐரோப்பிய நாடுகளில் அலைந்துள்ளார்.
ஒரு நாட்டில் குடியுரிமை இருந்தால் தான் இன்னொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து குடியுரிமை கோர முடியும், ஒரு நாட்டில் குடியுரிமை ரத்தான நிலையில் ,எந்த நாட்டிலும் போய் குடியுரிமை கோரமுடியாது அக்காலத்தில், அதே சட்டம் இன்றும் தொடர்கிறது, நாம் ஒரு குடியுரிமை கோர இன்னொரு நாட்டின் குடிமகன் எனக்காட்டியாக வேண்டும், டாம் ஹேங்க்ஸ் நடித்த டெர்மினல் படத்தில் இப்பிரச்சினை வைத்து தான் கதை.
அக்காலத்தில் குடியுரிமை குடும்பங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது, குடும்பத்துக்கு வரி என நடைமுறை, குடும்பமோ,குடியுரிமையோ இல்லாதவர்களையே இடியட் என ஆரம்பத்தில் இலத்தினீல் சொல்வார்கள், இப்போ அது முட்டாள் என்றப்பதத்தில் பயன்ப்படுகிறது. மேல் நாட்டில் எல்லாம் குடும்பப்பெயருக்கு முக்கியத்துவம் இருப்பதே இதனால் தான்.
கனடா,சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தினை நிரந்தர முதலீடாக அந்நாட்டில் செய்தாலே குடியுரிமை வழங்குவார்கள் எனப்படித்தேன், தெரிந்தவர்கள் சொல்லவும்.
----------------
நந்தவனம்,
//அமெரிக்காவிலும் குறைகள் உண்டு. ஆனால் பிற மதத்தவருக்கு எல்லா உரிமையும் குறைந்தபட்சம் சட்டரீதியாகவாவது தரும் அமெரிக்கா ஒரு தலை சிறந்த நாடுதான்.//
நீங்கள் சொல்வது உண்மை என நானும் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் நம்ம மக்கள் இல்லைனே சொல்வார்கள்.
வீடு கேட்டால் கூட "சோசியல் ஸ்டியரிங்" செய்துவிடுவார்கள் என படித்துள்ளேன்.
எல்லாநாட்டிலும் இனப்பாசம் உண்டு, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டப்படி செய்யமுடியாது எனவே இலைமறை காயாக செயல்படுகிறார்கள்.
ரொம்ப நாள் முன்னர் படித்தது, ஒரு இந்தியர், தனக்கு இந்தியர் என்பதால் பதவி உயர்வு தரவில்லைனு வழக்குப்போட்டு வெற்றியும் பெற்றுள்ளார். சட்டப்படி பாதுகாப்பு உண்டு, சம உரிமை மறுக்கப்பட்டால் அதனை முறைப்படி போராடி அடையலாம்.
இந்தியாவிலும் சட்டப்படி பாதுகாப்பு இருந்தாலும் அதனை அடைய போராடினால் அனுமார் வால் போல நீண்டுக்கொண்டு போகும், நம் நாட்டில் சட்ட நடைமுறைகள் செயல்படும் வேகம் ஆமை வேகத்தில் உள்ளதே பெரிய பிரச்சினை.
ஹி...ஹி அரபு தேசங்களில் எல்லாம் சட்டப்படிக்கூட பாதுகாப்பு இல்லை, ஆனாலும் மார்க்கப்பந்துகளுக்கு அரபு தேச அபிமானம் குறைவதேயில்லை ;-))
வங்க நண்பர் வவ்வால்.
Delete1. ஒரு நாடு குடியுரிமை சில வெற்று நாட்டவ்ருக்கு வழங்குவது அதன் பொருளாதார,சமூக நலன் சார்ந்து மட்டுமே!!. எனினும் குடியேறுபவர்களுக்கும் இதில் நன்மை உண்டு.
2.அந்தவகையில் மோசமாக இருப்பது மத்தியக் கிழக்கு நாடுகளே.அதிலும் படு மோசம் புண்ணிய பூமி சவுதி.என்னா நிபந்தனை கூழுக்கும் ஆசை,மீசைக்குமாசை.
சவுதி ஆண்கள் தன் நாட்டு பெண்களை மதித்து ஒரு திருமணம் செய்தால் குடியுரிமை பிறருக்கு வழங்க வேண்டிய அவ்சியம் இருக்காது.அவன் பணம் கொடுத்து வாங்கி நுகர்வதால்,அந்நாட்டு பெண்கள் அதிக மெஹர் கேட்க,சவுதி வேறு நாடு பெண்களை திருமணத்திற்கு தேட,நாடு குடியுரிமை வழங்க வேண்டி உள்ளது.
தற்காலிகத் திருமணம் ஆன மிஸ்யார்(சுன்னி) சவுதியில் அதிகம் நடக்க ஆரம்பித்து விட்டது.
சவுதியில் பாலியல் வரட்சியே இந்த குடியுரிமைச் சட்டத்தின் பிண்ணனி!!!
இது நம்ம மார்க்க பந்துக்களுக்கு புரியாது. புரிந்தாலும் ஹி ஹி
சிந்திக்க மாட்டார்களா!!!
நன்றி!!
\\பல்ருக்கு..
ReplyDeleteசம் உரிமை
இனத்த்வரையும்
திற்மை
பல் மொழி பல் இனம்
வந்த்னர்
சில் இனத்த்வரைக்
ச்ர்ர்ந்த ஆயிரக் கண்க்கானோருக்கு
கொள்ள்லாம்
நிபந்த்னைகளுடன்\\
மாமு என்ன இதெல்லாம்? எப்போயிருந்து புள்ளி ராஜாவா ஆனிங்க? இத்தோட 19 தடவை புள்ளி என்ற வார்த்தையை கடைசி பத்து வரிகளில் பயன்படுத்தியிருக்கீங்க. நிஜமான புள்ளி ராஜா நீங்க தான். ஹ.......ஹா.......ஹா.......ஹா.......
வாங்க மாப்ளே தாசு,
Deleteஉமக்கு இப்பதிவில் கருத்து சொல்ல எதுவுமே இல்லை ஹி ஹி.உமக்கும் கிளுகிளு சுவனம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனினும் அறிவுறுத்தலுக்கு நன்றி!! கவனத்தில் கொள்வோம்.
மீண்டும் நன்றி!!!
அமெரிக்கா இஸ்ரேல் கனடா பலருக்கு குடியுரிமை வழங்குகின்றன சவூதி அரேபியா அப்படி வழங்குவது இல்லை என்று குறை சொல்ல கூடாது. சவூதி அரேபியா பரந்த நோக்கம் கொண்டது. இந்தியாவையே சவூதி அரேபியாவாக மாற்றுவதற்க்கு நிறைய தனது பக்தர்களை வைத்திருக்கிறது.
ReplyDeleteசகோ நரி,
Deleteபக்தர்கள் யாருக்கு இல்லை. இன்னும் நித்யானந்தாவிற்கே பக்தர்கள் இருக்கும் போது சவுதிகளுக்கு பக்தர்கள் இருப்பதில் வியப்பு என்ன?
சவுதிக்காரன் அடிமை போல் நடத்தினாலும் ,மிதித்தாலும் மதிக்கும் புகழ்பாடிகளை ஹி ஹி ஒன்றும் செய்ய இயலாது!!
நன்றி!!!
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி சகோ குரு!!
DeleteSorry brother unfortunately my comment deleted plz continue your valuable writing
Deleteமாமு இந்த திருதராஷ்டிரன்னு மகாபாரதத்தில் ஒரு குருடன் இருந்தான். அவன் ஏன் குருடன் தெரியுமா? கண்ணு தெரியாததால் அல்ல, அவன் மகன் துரியோதனன் பண்ணும் அக்கிரமங்கள் அத்தனைக்கும் பாராமுகமாக இருந்ததனால் தான். அதைப் போல தன் நண்பர்களுக்கு வக்காலத்து வாங்கும் போது அவர்கள் எவ்வளவு கேவலமாக சம்பந்தமே இல்லாதவர்களை அதுவும் பெண்களைப் பற்றி எழுதி நோகடித்தார்கள், மற்றவர்கள் வணங்கும் மறை நூல்களை ஏசினார்கள், சக பதிவர்கள் எத்தனை பேரை அழ விட்டார்கள் என்பதையும் ஒரு கணம் யோசிக்க வேண்டும். இதெல்லாம் கண்ணிலேயே தெரியலைன்னா, புத்திர பாசம் கண்ணை மறைத்த திருத்தராஷ்டிரனும் இவர்களும் ஒண்ணுதான். அந்த மாதிரி, நண்பன் செய்யும் அக்கிரமத்தை மட்டும் கணக்கிலேயே எடுக்காத பாரா முகமாய் இருக்கும் திருத்தராஷ்டிரர்களாக ஆகி விடக் கூடாது. வாத்திகள் வாத்திகளாக இருக்கணும், இராமதாஸ் கட்சியின் காடுவெட்டி குரு -கள் ஆகி விடக் கூடாது.
ReplyDeleteமாப்ளே தாசு,
Deleteஉமக்கு மத புத்த்க அறிவு கம்மி.
திருதராஷ்டிரனுக்கு ஏன் கண் இல்லாமல் போனது!!
அரசன் சந்தனுவின் மூத்த மகன் பீஷ்மன் பிரம்மச்சாரி ஆக சபதம் செய்தார்.
பீஷ்மரின் சகோ விசித்திரவீரியன் இறந்து விடுவதால் அவன் மனைவி அம்பிகைக்கு குழந்தை ,நாட்டுக்கு வாரிசு தேவைப்பட்டது.
வேத வியாசர் அம்பிகைக்கு குழந்தை வரம் கொடுக்க [ஹி ஹி அக்கால இ(செ?)யற்கை முறைக் கருத்தரிப்பு]புணரும் போது ,அம்பிகை கண்ணை மூடிக் கொண்டாள்.
ஆகவே திருத ராட்டிரன் குருடன் ஆனான்!!
***
மத புத்த்கத்தில் உள்ள விடயங்களை மறைப்பவர்களே திருதராட்டிரர்களின் வாரிசு!!
After Vichitravirya's death, his mother Satyavati sent for her first born, Vyasa. According to his mother's wishes, he visited both the wives of Vichitravirya to grant them a son with his yogic powers. When Vyasa visited Ambika, she saw his dreadful and forbidding appearance with burning eyes. In her frightened state, she closed her eyes and dared not open them. Hence her son, Dhritarashtra, was born blind. His brother Pandu, the son of Vichitravirya's second wife Ambalika, got the crown of Hastinapur and after the death of Pandu no one could agree on the selection of a king. Duryodhana became the crown prince of Hastinapur and Yudhishthira became the emperor of Indraprastha.
http://en.wikipedia.org/wiki/Dhritarashtra
நன்றி!!
Deleteமாப்ளே,
மதபுத்தகம் அறியாதவன் போற்றுவதும்,அறிந்தவன் விமர்சிப்பதும் உலக நியதி!!
ஒவ்வொரு மத புத்த்கமும் எழுதிய கால தரம் நியாயங்களை மட்டுமே கொண்டு இருக்கும்.
எக்கால்த்துக்கும் பொருந்தும் உண்மை என மனித உரிமை மீறல்களை நியாயப் படுத்துவது தவறு!!
புத்தக்த்தில் இருக்கும் நல்லவை போற்றி,அல்லாத்வை ஒதுக்கினால் போதுமே!!
நன்றி!!!
மாமு, கண்ணு தெரியாமல் திருதராஷ்டிரன் பிறந்தான், அதற்குப் பின்னால் நீங்கள் சொல்லும் கதையும் உண்மை. ஆனாலும் அது ஒரு பொருட்டே அல்ல, அவன் நிஜமான குருடனா எப்போ ஆனான் என்றால், மகன் என்பதற்காகவே அவன் செய்த அட்டூழியங்களைப் பார்த்து புத்திரபாசத்தால் தட்டிக்கேட்காமல் வாழாது கண்ணை மூடி இருந்தான் அல்லாவா, அப்போதான் நிஜமான குருடனானான்!! நன்றி.
Deleteமாப்ளே தாசு உமக்கு மத புத்த்கம் தெரியாது என்பதை மீண்டு மீண்டும் நிரூபிக்கிறீர்.
Deleteதிருதராட்டிரன் கண்ணோடு பிறந்து இருந்தால்,நாடு அவ்னுக்கும்,அவன் மக்களான கவுரவர்களுக்கு மட்டுமே.
ஆனால் அவன் குருடன் ஆனதால்,பாண்டு,அவன் மக்களுக்கும் நாடு பங்கிடப்ட்டது. அதுவும் பாண்டவர்கள் குந்தியின் மகன்களே தவிர பாண்டுவின் மகன்கள் அல்ல.பாண்டவர்களுக்கு அப்பா வேறு வேற!!
பாண்டு அவன் என் சொல்வதே தவறு!!
ஆகவே நாட்டுக்கு உரிமை அற்றவர்கள் பாண்டவர்கள். உம்ம கிருஷ்ன பகவானுக்கு இது கூட புரியலையா!!
அழுகினி ஆட்டம் ஆடி கௌரவ்ர்களைத் தோற்கடித்தான்!!
திருத ராட்டிரன் கண் இல்லாமல் பிறக்க காம வெறி பிடித்த வேத வியாசரே காரணம், போரில் பல்ர் இறக்க கிருஷ்னனே காரணம்!!
கிருஷ்ன பக்தன் நீரும் அழுகுனி ஆட்டம் ஆடுவதில்
வியப்பு என்ன?
ஹி ஹி நம்க்கு திராவிட பாணி விமர்சனமும் வரும்!!!
நன்றி!!
ஊர் உலகத்தை சுத்தி மனுஷன் எப்படி துன்புறுத்தப் படுறான் என்பதை பத்தி பதிவு போட்டு நல்லா ஒப்பாரி வைக்கிறீங்க. உங்க ஆதங்கம் புரியுது, சக மனுஷன் கஷ்டப் படுறத பாத்து அந்த வலியை தன வலியா நினைச்சு துடிக்கிறீங்க. நல்லது தான். அதே சமயம் ஓடறது, பறக்கிறது, நீந்துவது எல்லாத்தையும் புடிச்சு மசாலா அரைச்சு ஒரு வெட்டு வெட்டும் போது அதோட வலி உங்க கணக்கில் சேர்வதே இல்லை. ஆனா, மனுஷன் ஒரு மிருகம்தான், வேறுபாடு இல்லைம்பீங்க.
ReplyDeleteஉங்களுக்கு இளிச்சவா அணிமல்சை போட்டுத் தல்றா மாதிரி அவன் மனுஷனையும் போட்டுத் தல்றான். உங்களால இதுங்கள அழிக்காம வாழ முடியாது, அவனால மனுஷங்களை அழிக்காம வாழ முடியாது. உங்களைப் பொறுத்த வரை திருக்குறள் மாதிரி நூல்களைக் கூட மேற்கோள் காட்ட முடியாது, பியூர் சயன்சைத்தான் நம்புவீங்க. அதனால் ஏன் மனுஷன் மட்டும் உசத்தி, ஏன் மனுஷனுக்கு மட்டும் துடிக்கனும் என்பதற்கு நீங்கள் குவாண்டம் இயக்கவியலை வச்சு விளக்கம் குடுத்தா நல்லாயிருக்கும்.
அப்படி இல்லையா, வாங்க திருக்குறள் படி வாழுங்க, அதுக்கப்புறம் ஒப்பாரி வைங்க,
சிந்திக்க மாட்டீர்களா?
மாப்ளே தாசு,
Deleteநீர் சினமயிக்கு சகோதரன் எனப் புரிகிறது.
வாழ்க வளமுடன்!!
**
இப்பதிவு நாடுகளின் குடியுரிமைச் சட்டங்களில் உள்ள இனவெறி பற்றிப் பேசுகிறது.
உலக சகோதரத்துவம் என முழங்கினாலும்,இனத்தை தாண்டி சிந்திக்காத ஒரு நாட்டுக்கு கூஜா தூக்கி,சமமாக மரியாதையோடு நடத்தும் உண்மையான சகோதரர்களை,நாட்டை விமர்சிக்கும் கோமாளிகளின் வேடத்தை அம்பலப் படுத்துகிறோம்.
நம்க்கு மாமிச உணவு பிடிக்கிறது,நன்கு செரிக்கிறது. உடல் ஒத்துக் கொள்ளும் வரை உண்பேன்.
அவ்வளவுதான். இதில் குற்ற உணர்வு எதுவும் இல்லை!!
நன்றி!!
ஆசிக் அஹமத் அழைக்கிறார்
ReplyDeletehttp://www.ethirkkural.com/2010/11/i.html
ஆசிக் அகமது கிறித்வராக மாறிவிட்டாரா?
Deleteகூப்பிட்டு என்ன கொடுப்பார்?
இயேசு அழைத்தாலே கண்டுகொள்ள மாட்டோம் ,ஆஸிக் அழைத்தால் ஹி ஹி.
அந்த மதாபிமானி சொல்வதை வெட்டி ஒட்டும்.1 ஹூரி கூடக் கிடைக்கும். இஞ்சி இடுப்பழகா!!
நன்றி!!
மொத்தமாக படித்து விட்டு பின்னூட்டமிடலாமென்றிருந்தேன்.பின்னூட்டங்கள் வந்த பின் பின்னூட்ட ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ReplyDeleteசகோ.சார்வாகன்!உங்க பெயர் எனக்கு அறிமுகமான புதிதில் நீங்க பதிவுகளில்,குறிப்பாக காணொளிகள் கலந்த பதிவுகளில் பின்னி எடுத்தாலும் பின்னூட்டப் பகுதி வந்தால் முசுடு மாதிரிதான் இருந்தீங்க.இப்ப பதிவுகள் மட்டுமல்ல பின்னூட்ட பகுதியிலும் அடிச்சு விளையாடுறீங்க.வாழ்த்துக்கள்.
நான் கொஞ்சம் நந்தவனத்தானைக் கண்டுகிட்டு அப்புறமா பதிவுக்கான பின்னூட்டம் போடுறேனே.
நந்தவனத்தான்!உங்க பின்னூட்டத்தில் அமெரிக்க பார்வை என்னைக் கவர்ந்தது.காரணம்,நான் என்னமோ அமெரிக்காவில் உட்கார்ந்துகிட்டு நேரடியாப் பார்க்கிற மாதிரி பதிவுகளிலோ அல்லது பின்னூட்டங்களிலோ ஏதாவது பீலா விடுவேன் அல்லது அமெரிக்கா பற்றி ஏதாவது நோண்டுவேன்.
ReplyDeleteஎன்னை விட அமெரிக்காவை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள் அமெரிக்க தமிழர்கள் மட்டுமே.நானும் பார்க்கிறேன் அது ஏன் அமெரிக்கா பற்றி யாருமே வாய் திறக்கவே மாட்டேங்கிறாங்கன்னு.ஒருவேளை சி.ஐ.ஏக்காரன் பூச்சாண்டி பயமோன்னு கூட நினைத்ததுண்டு.சே!அப்படியெல்லாம் இருக்காது எத்தனை பேர் ஆங்கிலத்திலேயே விளையாண்டுட்டுருக்காங்கன்னு எனக்கு நானே சமாதானப்படுத்திக்குவேன்:)இப்ப இந்த பதிவும் ,உங்க பின்னூட்டமும் படிச்ச பின்புதான் இஸ்லாமிய சவுதி விசுவாசம் மாதிரி தமிழர்களின் அமெரிக்க விசுவாசம்ங்கிற உண்மை விளங்குது:)
உங்க விமர்சனப்பார்வைக்கு வாழ்த்துக்கள்.
சகோ.சார்வாகன்!இப்ப நம்ம ஆட்டத்தை துவங்கலாம்.கர்ணன் பட போஸ்டர் பார்க்கும் போதே பதிவுல என்ன டுவிஸ்ட்டோன்னு நினைச்சேன்.கூடவே சட்டம் என் கையில் போஸ்டர் வந்ததும் விசிலடிக்க தோன்றியது:)
ReplyDeleteஇஸ்ரேல்-பாலஸ்தீனிய இனப்பெருக்கம் மட்டுமல்ல மொத்த இனப்பெருக்கமே கங்கணம் கட்டிக்கொண்டு செய்ய முடியாத ஒன்று.உடல் தேவையின் இச்சை என்ற ஒன்று மட்டுமே அனைத்தையும் முந்தும்.மேலும் இனப்பெருக்கம் ஒரு நாட்டின் சீதோஷ்ண நிலை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.இந்தியா போன்ற தட்பவெப்ப நிலைக்கு குஞ்சு தானாகவே பொறிக்கும்.குளிர்ப்பிரதேசங்களுக்கு கம்பளி கதகதப்பாக இருந்தாலும் கூட சினிமாப்பாட்டுக்கு வேண்டுமானால் மழையும் குளிரும்,கம்பளியும்,உடல் இணைவதும் கவிதை மாதிரி தோன்றலாம்.ஆனால் இனப்பெருக்கம் சமசீதோஷ்ண சூழலை விட மெதுவாகவே இருக்கும்.அரபுதேசங்கள் செம சூடாக இருந்தும் இனப்பெருக்கத்துக்கான நிலமல்ல.அப்படியிருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இனக்கலப்பு பற்றிக் கவலைப்படும் ஒரு தேசம் அதன் மதப்பரப்பலுக்காக ஏனைய இஸ்லாமியர்களையும் சார்ந்து பரந்த கனவு காணும் அவசியமிருக்காது.
இப்ப மறுபடியும் இஸ்ரேல்,பாலஸ்தீனிய இனப்பெருக்கத்துக்கு வருவோம்.நீங்க சொல்ற விகிதாச்சாரம் மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும்.பாலஸ்தீனிய,இஸ்ரேல் மண் பரப்பில் எவ்வளவு இயலுமோ அவ்வளவுதான் இயற்கையாக நிகழும்.நீங்க சொல்ற மாதிரி இனப்பெருக்க திட்டங்களோடு இனப்பெருக்கம் செய்யவேண்டுமென்றால் இஸ்ரேல்காரன் கோழிக்குஞ்சுகள் பொறிக்கிற மாதிரி புள்ள பிறக்க ஏதாவது ஆராய்ச்சி செய்திருப்பான்.
சிந்திக்க மாட்டீர்களா:)
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு பாரதிராஜா படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது சவுதி பில்லினர் ஏழை முஸ்லீமுடன் உணவு உண்கிறார் என்பது:)
ReplyDeleteநாம் உலகையும்,மானுடத்தையும் நேசிக்கும் மனிதன் என்பதால் மத பிற்போக்குத்தனங்களையும் மதம் குறித்த விமர்சனங்களை அடக்கியே வாசித்தோம்.மனித நேயத்தை விட மதம்தான் பெருசு என்கிற கோணத்தில் இருக்கும் கோணல்பார்வையை நேர்படுத்த வேண்டிய அவசியமிருப்பதால் இந்தப் பின்னூட்டம்.
இந்தியாவில் கோயில்களுக்கு தகுந்த மாதிரி கல்லா நிறைவது போலவும் சில கோயில்கள் நன்றாக பராமரிக்கப்பட்டும் சில கோயில்கள் வரலாற்றுத்தொன்மைத் துறையாலோ,அரசாங்கத்தால் அம்போன்னு விட்டு விடும் மாதிரிதான் அரேபிய தேசத்து மசூதிகளும்.ஷேக்குகள் கூடுமிடத்தில் பளிங்கு கல் வேலைப்பாட்டுடன் அழகான மசூதியும்,பஞ்சம் பொழைக்கப் போன ஆட்கள் கூடுமிடத்தில் அதற்கான தகுதியுடனே மசூதிகள் உள்ளன.சகோத்துவம் பேணும் நாட்களான ரம்ஜான் காலத்திலேயே அரபிகள் கடோத்கஜன் சாப்பிடும் அண்டா மூடி சைஸ் பெரிய பாத்திரங்களில் கரூஃப் என்னும் ஒரு ஆட்டையே பிரியாணி சோத்துல முழுப்பூசணியை மறைக்கிற மாதிரி மறைச்சு ரவுண்டு கட்டி சாப்பிடறாங்க.மற்றவர்களுக்கு க்யூவுல நிக்க வைச்சு பிரியாணிப்பொட்டலம்,பழம்,ஐஸ்கிரிம்ன்னு நல்லாவே தருகிறார்கள்.
வெளியூர்க்காரர்கள் கூடும் மசூதிகள் அதற்கான தகுதியுடனே இருந்தாலும் கூட இந்தியாவில் ரோட்டுலேயே மூத்திரம் போகிற அசிங்கம் இல்லாமல் அங்கங்கே மசூதிகள் இருப்பது வரவேற்புக்குரியது.
Deleteகழிப்பறைகள் இருப்பது நன்மைதான். வழிபாட்டுத் தலங்களினால் இந்த ஒரு நன்மையாவது விளைவது மகிழ்ச்சி.
அப்புறம் மெக்கா பார்த்து உச்சா,கக்கா போகக் கூடாது என நபிமொழி உண்டு. அதே நபிமொழியில் நபி காபா பார்த்து உச்சா போனார் என்று வரும்.
அதுக்கு மார்க்க போதைகள் நபி செய்வது அவர் இஷ்டம்,நம்மை மெக்க பார்த்து கக்கா போகக்கூடது சொன்னார் அல்லவா.ஆகவே கழிப்பறைகளே மெக்கா(காபா) பார்த்து இருக்காது.
சுவன் சுந்தரிகள் ஹூரிகளுக்கு கக்கா,உச்சா,மாத விடாய் கிடையாது.
இஸ்லாமும் & கழிப்பறையும் என்றால் பேசுவதற்கு 1000 விடய்ம் இருக்கிறது.
Read this!!
http://dwindlinginunbelief.blogspot.com/2012/01/islam-its-mostly-about-going-to.html
ஹி ஹி நம்மைக் கண்டால் மார்க்க போதைகள் ஓடுவது இத்னால்தான்!!
நம்க்கு மார்க்கம் தெரியும்!!
நன்றி!!
@நந்தவனத்தான்!இந்தியா பயப்படுகிற சுபாவம் கொண்டது என்பதற்கு நேரு காலத்து சீனா ஆக்கிரமிப்பு,இந்திரா காந்தி காலத்தில் லைன் ஆஃப் கண்ட்ரோலை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழையாமல் இருந்தது,வாஜ்பாய் காலத்தில் ராணுவத்தை எல்லைக்கு கொண்டு போய் நிறுத்திக்கொண்டு திரும்பி வந்தது போன்றவற்றில் அழுத்தங்கள்,போரிட்டால் பொருளாதார பின்னடைவு என பலவற்றையும் யோசிக்க வேண்டியிருந்தாலும் சுபாவத்தில் இந்தியா பயந்தாங்கொள்ளி என்பது மட்டுமே அடிப்படை உண்மை.
ReplyDeleteஇந்தியா யார் மீதும் படையெடுத்ததில்லை என்ற மாயத் தோற்றத்தை விட்டு சோழர்களின் படையெடுப்புக்களை புதிய தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுப்போம்.
காரண காரியங்கள் அறிந்து போர் செய்வதோ அல்லாமல் சமாதானம் பேசுவது மட்டுமே சிறந்த ராஜதந்திரமாக இருக்க முடியும்.அதை விடுத்து எப்படி அடித்தாலும் தாங்குவேன் என்ற வெளியுறவுக்கொள்கை Soft state என்ற பிம்பத்தையே இந்தியாவுக்கு தக்க வைக்கும்.
இலங்கையென்ற் எலி கூட ஏறி விளையாடுது.என்னத்த சொல்ல?
ராச நட ,
Delete//இந்தியா யார் மீதும் படையெடுத்ததில்லை என்ற மாயத் தோற்றத்தை விட்டு சோழர்களின் படையெடுப்புக்களை புதிய தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுப்போம்.
//
வரலாற்றை சரியா படிக்கணும், சோழர்கள் படை எடுத்துப்போனார்கள் ,ஆனால் நாட்டை அபகரிக்கவில்லை(அப்படி செய்திருக்கலாம்னு இப்போ தோனுது), போரில் தோற்ற மன்னனை கப்பம் கட்ட சொல்லிவிட்டு ,அம்மன்னனிடமே ஆட்சிப்பொறுப்பை கொடுத்து வந்துவிடுவார்கள்.
இலங்கை,கம்போடியாவில் எல்லாம் இப்படித்தான் செய்தார்கள்.
கம்போடியாவில் அங்கோர் வாட் என்ற கோயிலைக்கட்ட தமிழக கட்டிடக்கலை நிபுணர்களும் உதவினார்கள், சோழ மன்னனின் ஆட்சியை ஏற்ற கம்போடிய மன்னன், பின்னர் தஞ்சை பெரிய கோவிலை விட பெரிய கோவிலை கட்ட வேண்டும் என திட்டம் போட்டு செய்த போது, சோழ மன்னர்கள் யாரும் தடுக்கவில்லை, உதவினார்கள்.
நாகப்பட்டினத்தில் கம்போடிய மன்னன் புத்த விகாரை கட்டியதற்கும் உதவினார்கள், கம்போடிய மன்னன் ஒரே நேரத்தில் ,இந்து,புத்த மதங்களினை பின்ப்பற்றியுள்ளார்கள்.
இப்பொழுதும் கம்போடிய மன்னன் கட்டிய புத்தவிகாரையின் எச்சம் ஆர்க்கியாலஜியின் வசம் ,நாகையில் உள்ளது, கல்வெட்டுக்கள் எல்லாம் உள்ளது.
தமிழ் மன்னர்களின் படை எடுப்புக்கள் போர் மறபுக்குள் உள்ளவை, எதிரி மன்னன் மிக மோசமானவன் என்றால் மட்டுமே , தண்டிப்பார்கள், இல்லை எனில் , சிற்றரசனாக இருக்க அனுபதிப்பார்கள்,. இதனாலேயே ஒரு மன்னர் இறந்ததும், ஆளுகைக்கு கீழ் இருந்த மன்னர்கள் சுதந்திரமாகிவிட்டார்கள்.
இஸ்லாமிய படை எடுப்புக்கள் அப்படியல்ல, ஆணைக்கொன்று விட்டு பெண்ணை மனவியாக்கிவிடுவார்கள்,அதன் மூலம் நாட்டின் உரிமையை கைப்பற்றுவார்கள்.
பாபர் இப்ராகிம் லோடியை கொன்ற பின்னர், லோடியின் அம்மா, மனைவி, சகோதரி என அனைவரையும் மணந்து கொண்டார், எஞ்சிய பெண்களை அவரது மகன் ஹிமாயுன் மணந்து கொண்டார் :-))
ரொம்ப சமத்துவம்:-))
பிற்காலத்தில் இப்ராகிம் லோடியின் அம்மா, பாபருக்கு அர்செனிக் போன்ற விஷம் வைத்து கொன்றார், அதனையே உடல் நலம் பாதித்து பாபர் இறந்தார் என சொல்கிறார்கள்.
அலெக்சாண்டர் காலத்திலேயே (கிமு, 3 ஆம் நூற்றாண்டு) இந்திய மன்னர்கள் போரில் கண்ணியமாக நடந்துக்கொண்டார்கள், அலெக்சாண்டரை போரஸ் மரண அடி அடித்து, உயிருடன் பிழைத்துப்போ என விட்டது தான் உண்மை, ஆனால் அலெக்சாண்டர் போரசுக்கு கருணை காட்டியது போல பிற்காலத்தில் எழுதி வைத்துவிட்டார்கள்.
புளுடார்க் எழுதிய வரலாற்றில் அலெக்ஸாண்டர் தோல்வியுற்றதாக தான் எழுதியுள்ளார்.
அலெக்ஸாண்டர் என எடுத்தப்படத்திலும், அடிவாங்கி சுய உணர்வில்லாமல் விழுவதாக தான் காட்டியிருப்பார்கள், போரில் வென்ற போரசை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தது மேலை உலகம்.
எனவே சும்மா கிசு கிசு படிச்சுட்டு , கதையை சொல்ல இது ஒன்றும் பாட்டி வடை சுட்ட கதையல்ல, வரலாறு :-))
சோழர்கள் காலத்தில் ஏதய்யா இந்தியா? அப்போ சோழ நாடு,பாண்டிய நாடு ,பல்லவ நாடு, சேர நாடுனு எல்லாமே நாடு தான் :-))
Deleteஇந்தியானு உருவான பின் எந்த நாட்டின் மீதும் படை எடுத்து ஆக்ரமிக்கவில்லை சரியோ!!!
சகோ வவ்வால்,
Deleteநமக்கு இது தெரியாதே ,ஹி ஹி மத புத்த்கம் போல் கிளுகிளுப்பாக இருக்கு சுட்டி தரவும். ந்பி(சல்) ஐயே தூக்கி சாப்பிட்டாரே நம்ம பாபர்!!!
//பாபர் இப்ராகிம் லோடியை கொன்ற பின்னர், லோடியின் அம்மா, மனைவி, சகோதரி என அனைவரையும் மணந்து கொண்டார், எஞ்சிய பெண்களை அவரது மகன் ஹிமாயுன் மணந்து கொண்டார் :-))
ரொம்ப சமத்துவம்:))//
இறைவன் மிக மிக பெரியவன்!!!
//பிற்காலத்தில் இப்ராகிம் லோடியின் அம்மா, பாபருக்கு அர்செனிக் போன்ற விஷம் வைத்து கொன்றார், அதனையே உடல் நலம் பாதித்து பாபர் இறந்தார் என சொல்கிறார்கள்.//
முடிவு மட்டும் அதே!! ஹி ஹி
நன்றி!!
சார்வாகன்,
Deleteபாபர் கல்யாணக்கதை எல்லாம் அக்கால பியுசி பாடத்திட்டத்தில் உள்ள வரலாற்று புத்தகத்தில் இருக்கு, எனக்கு ஒருவர் படிக்க கொடுத்தார்,இணையத்தில் தகவல் இருந்தால் சுட்டிக்கொடுக்கிறேன்.
எனக்கு தெரிஞ்வங்க பலரும் எதையாவது கொடுத்து,நீ தான் எல்லா புக்கும் படிப்பியே படினு தள்ளிவிடுவாங்க :-))
அது மாதிரி ஓசியில் கிடைச்சுதேனு பைபிள் கூட படிச்சு வச்சேன் :-))
பாகவதரே,
ReplyDeleteவிலங்கும்,மனிதனும் உனக்கு ஒன்னா?
மனிதனை கொல்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர் மனிதனா? அதே மனித மிருகங்கள் நாளை உம்ம ரத்த சொந்தங்களை கொன்றாலும், இந்த உலகில் விலங்குகளையே சாப்பிடுறாங்க, அதையே நிறுத்த முடியலைனு ,சகஜமாக எடுத்துக்கொள்வீரா?
அசைவம் சாப்பிடுவதை குற்றம் என சொல்லும் நீர் ஏன் அசைவம் சாப்பிடுபவரின் உழைப்பை அனுபவிக்கணும்?
அசைவம் சாப்பிடும் விவசாயி, உழைப்பாளர், கார் ஓட்டுனர், காவல் துறை,ராணுவம்,மருத்துவர் என யாருடைய சேவையும் நீர் அனுபவிக்காதீர்.
உமக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால் வெஜிடேரியன் மட்டும் எனப்பார்த்து கேட்பீரா?
உம்ம வீடு தீப்பிடித்துக்கொண்டால் வெஜிடேரியன் மட்டும் வந்து தீயை அணைக்கனும் என சொல்வீரா?
உம்மை போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கீழ்பாக்கத்தில் தனியாக இடம் ஒதுக்கியுள்ளார்கள், அங்கே போய் குந்தும் :-0)
நம்ம தாசு நம்ம் மாப்ளே,
Deleteஅவரை எதுவும் சொல்லாதீர்கள். இப்போ கரி முட்டைசாப்பிடும் போது தாசு ஞாபகத்துக்கு வருகிறார் ஹி ஹி.
சரியாக கரி துண்ண முடியலை!!!முட்டை தின்னாக்கூட திட்டுரார்!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விதி வலியது!!
நன்றி!!
@ வவ்வால்
Delete\\ மனிதனை கொல்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர் மனிதனா? அதே மனித மிருகங்கள் நாளை உம்ம ரத்த சொந்தங்களை கொன்றாலும், இந்த உலகில் விலங்குகளையே சாப்பிடுறாங்க, அதையே நிறுத்த முடியலைனு ,சகஜமாக எடுத்துக்கொள்வீரா?\\
இந்த மனோகரா பட வசனமெல்லாம் எங்களுக்கும் தெரியுமுங்க, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும், அதை விட்டு விட்டு , சும்மா உதார் விட வேண்டாம். திருக்குறள் திருவள்ளுவர் நாள் பூராவும் வியாக்கியானம் குடுத்துட்டு நாயக்கரி சாப்பிடலாம்னு இங்க வந்து வாதிடக் கூடாது. நீர் இன்னொரு மிருகத்தை அடித்தால் தான் உம்மால் உயிர் வாழ முடியும் என்ற கொள்கையை வகுத்துள்ளீர்கள் . அதை தவறு என்பதை நான் திருக்குறள் அடிப்படையில் சொல்கிறேன், நீர் எந்த அடிப்படையில் அதைச் சரி என்று சொல்வீர்கள் என்பதை இங்கே விளக்க வேண்டும்.
உமது புத்திக்கு மற்ற ஜீவன்களை அடித்து உண்பது உமக்குச் சரி என்றால், இன்னொரு இணத்தை அடிப்பது சரி என்பது வேறோருத்தனுக்குப் படுகிறது, அதை தவறு என்று நீர் எப்படிச் சொல்ல முடியும்? இன்னொரு மனிதனுக்கு வலிக்கும் என்று அழும் வள்ளலார் நீர் என்றால், இன்னொரு மிருகத்தை கொள்ளும்போது அது அடையும் வழிக்கு யார் பதில் சொல்வது? இது தான் நீர் தினமும் போதிக்கும் திருக்குறளின் சாராம்சமா? திருக்குறளில் சொல்லப் பட்டுள்ளதை ஏற்காமல் கற்பனையான உருவத்தை வரைந்து அதை திருவள்ளுவர் என்று சொல்லி வீட்டில் மாட்டி அழகு பார்க்கவும், ஊரைச் சுற்றி அவர் கற்பனை உருவச் சிலையை வைத்து கக்கா உட்கார்ந்து கக்கா போக வசதி செய்யவும் தான் அவர் 1330 குறளை எழுதினாரா? தமிழ் வாத்தி கொஞ்சமாச்சும் சிந்திக்க மாட்டீரா?
மாப்ளே தாசு,
Deleteநேத்து சப்பாத்தி 4 ,மாட்டுகரி கிரேவி சாப்பிட்டேன்.மிகவும் அருமையாக இருந்தது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.மீதியை ஃபிரிட்ஜில் வைத்து இருக்கிறென்.மதியம் சோற்றில் பிசைந்து சாப்பிடுவேன்.
தாசுக்கு தெரியுமா மாமிசத்தின் சுவை ? ஹி ஹி
திட்டுவீரா ,துப்புவீரா?
[இதை துரியோதனன் கர்னணிடம் கேட்ட எடுக்கவோ ,கோர்க்கவோ ஸ்டைலில் படிக்கோணும் ஹி ஹி]
நன்றி!!
\\நேத்து சப்பாத்தி 4 ,மாட்டுகரி கிரேவி சாப்பிட்டேன்.மிகவும் அருமையாக இருந்தது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.மீதியை ஃபிரிட்ஜில் வைத்து இருக்கிறென்.மதியம் சோற்றில் பிசைந்து சாப்பிடுவேன்.
Deleteதாசுக்கு தெரியுமா மாமிசத்தின் சுவை ? ஹி ஹி
திட்டுவீரா ,துப்புவீரா?\\
மாமு நீங்க எந்த கரி வேணுமின்னாலும் சாப்பிடுங்க, நீங்க மிருகங்களை என்னென்ன பண்ணுறீங்களோ, அதையே மனுஷனுக்கும் இன்னொருத்தன் செய்வான், நீங்க மிருகம் மனுஷன் இல்லை என்று சொல்லுவீங்க, அவன் செத்தவன் என்னோட இனம் இல்லை என்பான், அல்லது என் நிறம், மொழி, நாடு, மதம் இல்லைம்பான். ஆக மொத்தத்தில் உங்க ரெண்டு பேத்துக்கும் வித்தியாசம் சுத்தமா கிடையாது. அம்புட்டுதேன்.
வவ்சு!மூன்று பின்னூட்டத்தையும் ஒண்ணாப் படிச்சேனா!நான் எப்பய்யா பாகவதர் ஆனேன்னு எனக்கே சந்தேகம் ! அப்புறமா பார்த்தா அது வேற யாரோ ஒரு பாகவதர்:)
ReplyDeleteமுதல்ப்பின்னூட்ட புள்ளி விபரம் சரி.இரண்டாவது பின்னூட்டம் சேர,சோழ,பாண்டிய.பல்லவர்கள் எங்களுக்கு தெரியாதாக்கும்?நான் சொல்ல வந்தது ஒவ்வொரு பிரச்சினையிலும் இந்தியா பம்முகிறது என்பதுதான்.
ஆமா!வஞ்சிக்கோட்டை வாலிபனோ அல்லது செஞ்சிக்கோட்டை மன்னன் கோட்டை ஒன்று மலை உச்சியில் நின்னுகிட்டிருக்குதே.அவுரங்க சீப்பு,ஆற்காடு நவாப்புன்னு எத்தனை கதை இருக்குது.அதையெல்லாம் விட்டுட்டு சவுதிக்கு ஏன் மாறடிக்கிறாங்க?
@ ராஜ நடராஜன்
Deleteஎன்ன சார் நம்ம கடை பக்கம் வாங்க!!
சகோ வவ்வால்,
ReplyDeleteதமிழ் மன்னர்கள் போர் நெறிகளை கடைப்பிடித்தார்கள் என்பதை நான் ஏற்பது இல்லை. புலவனுக்கு காசு கொடுத்தால் புகழ்ந்து பாடுவான். கல்வெட்டில் அவன் எழுதுவதுதான் கண்க்கு.
அரசர்களின் ஆக்கிரமிப்பு, கொலை,கொளை ,கற்பழிப்பு போன்றவை உலக முழுதும் இருந்த இயல்பு எனவே நான் கருதுகிறேன்.
@வவ்வால், நன்றி
ReplyDeleteசென்ற வருடம் கூட ஒரு இந்திய மாணவர் ஹார்வேர்டு பல்கலையில் அட்மிசன் மறுக்கபட்டதால் இன ஒதுக்கீடு என வழக்கு தொடர்ந்தார். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் நம்மூர் வெண்ணைகள் அவரை பற்றி கீழ்த்தரமாக எழுதின. ஹார்வேர்டில் டிஸ்கிரிமினேசன் இருக்குமா, இவனுக்கு தகுதி இல்லைனா மூடிகிட்டு இருக்க வேண்டியதுதானே என்பது போல. சென்ற மாதம் ஹார்வேர்டில் பணியாற்றும் எகிப்திய நண்பரோடு பியரடித்தபோது இந்த இன ஒதுக்கீடு நடக்கிறது என சொல்லி இந்த லிங்கை கொடுத்தார்.
http://www.theamericanconservative.com/articles/the-myth-of-american-meritocracy/
கொஞ்சம் பெரிய கட்டுரை. Asian-Americans as the “New Jews” என்ற தலைப்பையாவது பார்க்கவும். ஆசிய மாணவர்கள் குறிப்பாக இந்தியர் மற்ற இனத்தவரோடு ஒப்பிடுகையில் நன்றாக படிப்பார்கள்.காரணம் பொதுவாக நன்றாக படித்த இந்தியர் மட்டுமே அமெரிக்காவில் அனுமதிக்கபடுவதாலும், இந்தியர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தருவதாலும். ஆனால் இவர்களுக்கு அட்மிசனில் பாரபட்சம் காட்டுபடுகிறது என்கிறது கட்டுரை.
மேலும் எனக்கு தெரிந்த தமிழர் ஒருவர் 10 வருடம் ஒரு பல்கலையில் வேலைப்பார்த்து விட்டுவிட்டு வேறு பல்கலைக்கு மாறினார். காரணம் அவரது வெள்ளைக்கார பாஸ் (HOD) இன்னொரு வெள்ளையனிடம் சொன்னாராம் "இந்த இந்தியனுக்கு ஒருபோதும் நிரந்தர ஆசிரியர் பணி தரமாட்டேன், நாடு இருக்கும் நிலையில் ஒரு அமெரிக்கனுக்குதான் தருவேன்" -(வெள்ளையனுக்கு என படிக்கவும், அந்த இந்தியரும் அமெரிக்க குடிமகனே,நிரந்தரவாசிகூட அல்ல). இந்த விடயம் அவரை எட்டவே ராசினாமா கடிதம் அளித்துவிட்டார். அவர் என்னிடம் எனது சர்நேம் மாத்திரம் வேறாக இருந்தால் என் தலை எழுத்தே மாறி இருக்கும் என்றார். அவர் கிருத்துவர் - அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் மாதிரி இருக்கும். நான் அவரிடம் சொன்னேன் "ஏங்க உங்கள இப்படி ஏமாத்திக்கறீங்க, அவனுக கிருத்துவ பெயருக்கு மதிப்பு தருவதாக இருந்தால் இங்குள்ள கருப்பினத்தவருக்கு ஏதுமே ஆகியிருக்காது. வேணும்னா மைக்கேல் ஜாகசன் மாதிரி தோலை வெளுக்க வைச்சு ஏதாவது டிரை பண்ணி பாருங்க என்று". வெள்ளையனுக்குள் மட்டும் சர் நேம் எடுபடும். அமெரிக்கா ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டதால் அவனுகள் கைதான் ஒங்கி உள்ளது. பெரும் பணக்கார்கள் இப்போதும் அவர்களே. ஆகவே ஆங்கிலேய சர்நேம் இருந்தால் அட்வான்டேஜ்தான்.
இதுதான் அமெரிக்க நிசம். வழக்கு தொடர்வதில் உள்ள பிரச்சனை...உங்களுக்கு அரசியல் தொடர்பு அல்லது நல்ல சமூக தொடர்பு தேவை. ஏன்னா அமெரிக்காவில் வேலை கிட்ட முன்வேலை செய்த இடத்திலிருந்து சிபாரிசு கடிதம் இருந்தால்தான் வேறு வேலை சுலபமாக கிட்டும். இதெல்லாம் இருந்தும் அமெரிக்கா இந்தியா உட்பட பிற ஆசிய நாடுகளுக்கு பெட்டர்தான்!
நந்தவனம்,
Deleteநானும் இதனை சில இடங்களில் சொல்லிப்பார்த்துட்டேன்,ஆனால் நீங்க சொன்னாப்போல மக்களுக்கு அமெரிக்க விசுவாசம் ஜாஸ்தி தான் போல,நம்ம நாட்டை விட பெட்டரா தான் இருக்கு ,ஆனால் அங்கும் பாகு பாடு உண்டு என்பதை ஏனோ மறைக்கப்பார்க்கிறார்கள்.
அமெரிக்காவிலே வசித்தாலும் ,முக்கியமாக பெண்களைப்பெற்ற பெற்ரோர் அமெரிக்காவை விரும்புவதில்லை :-))
காரணம் என்னனு சொல்லத்தேவையில்லை.
//இஸ்லாமிய சவுதி விசுவாசம் மாதிரி தமிழர்களின் அமெரிக்க விசுவாசம்ங்கிற உண்மை விளங்குது:)//
ReplyDeleteமதபுத்தகத்தை படித்து மதவெறி தலைக்கேறியதால் வரும் அடிமை புத்தி தான் இஸ்லாமியர்களின் சவூதி அரேபியாவுக்கான விசுவாசம்.அதை போய் சுதந்திரம் கொண்ட ஜனநாயக நாட்டோடு ஒப்பிடலாமா? ரிசானாவுக்கு ஷரியா சட்டத்தால் நடந்த கொடுமைக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை இஸ்லாமியர் இம்தியாஸ் கண்டித்துள்ளார் நாகரீக உலகோடு ஒத்துப் போகும் வகையில் ஷரியா சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லியுள்ளார் அமெரிக்க சுதந்திரத்தில் இருந்தபடியால் தான் அவருக்கு நற்சிந்தனை வந்தது.
@ராஜ நடராஜன்
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி. முன்பு என்னுடன் பணிபுரிந்த சீன அமெரிக்க அறிவியலர் ஒருவர் எப்போதும் அமெரிக்காவை குறை கூறி கிண்டலடிப்பார். அவ்வப்போது கதவருகே போய் எட்டி காரிடாரை பார்த்து உள்ளே வந்து, கேர்புல்லா இருக்கனும் சிஐஏ பயலுவ ஒட்டுக்கேட்டுகிட்டு இருந்தாலும் இருப்பானுக என்று சொல்லி சிரிப்பார். உம்ம பின்னூட்டம் அதை ஞாபகப்படுத்தியது.
மற்ற ஆசியர்கள், முசுலிம்கள், மங்கோலியர்கள் ஜப்பானியர்கள் போன்றவர்களின் ராணுவத்தினர் மிக பயங்கரமாக கொடுமை செய்து எதிரிகளை பயப்படுத்தி வைப்பார்கள். நம்ம அரசருங்க நைட்டுல சண்டை போடமாட்டோம், மன்னிப்பு கேட்டா விட்டுவிடுவோம் என்று மாவு மாதிரி சண்டை போட்டதால் தான் பல்பு வாங்கினார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல சோழர்களின் ராணுவமும் இந்த விதமான கொடுமை செய்ததுதான். இன்னும் கொடுரமானவன் என குறிப்பிடும் தாய் அல்லது மலேசிய சொல் தமிழரை குறிப்பது என படித்ததாக ஞாபகம். கொடுமை செய்வது சரியா என எண்ணாதீர்கள். அடுத்தவனிடமிருந்து காக்க, எதிரிகளை ஒடுக்க எதுவும் சரிதான் சண்டை தேவையில்லை என்பதை நாம் மட்டும் உணர்ந்தால் பத்தாதே நம் எதிரியும் உணரவேண்டுமே?- All is Fair in Love and War!
@வவ்வால்
//போரில் தோற்ற மன்னனை கப்பம் கட்ட சொல்லிவிட்டு ,அம்மன்னனிடமே ஆட்சிப்பொறுப்பை கொடுத்து வந்துவிடுவார்கள். இலங்கை,கம்போடியாவில் எல்லாம் இப்படித்தான் செய்தார்கள்.
கம்போடியாவில் அங்கோர் வாட் என்ற கோயிலைக்கட்ட தமிழக கட்டிடக்கலை நிபுணர்களும் உதவினார்கள், சோழ மன்னனின் ஆட்சியை ஏற்ற கம்போடிய மன்னன், பின்னர் தஞ்சை பெரிய கோவிலை விட பெரிய கோவிலை கட்ட வேண்டும் என திட்டம் போட்டு செய்த போது, சோழ மன்னர்கள் யாரும் தடுக்கவில்லை, உதவினார்கள்.//
இலங்கை கிபி 990 - 1070 வரையில் சோழ ஆட்சியின் கீழ்தான் இருந்தது. மேலும் பிற நாடுகளில் சோழ படையெடுப்பு தென்னிந்திய படையெடுப்பு என்றுதானே இப்போது குறிப்பிடப்படுகிறது? இதிலெல்லாம் குறை கண்டுபிடிப்பது ரொம்ப ஓவர்!
அங்கூர்வாட் ஆலயத்தை கட்டியவனும் தமிழன்தான். கம்போடியாவை அப்போது ஆண்ட சூர்யவர்மன் எனும் தமிழ் அரசன், அங்கு எப்படி போய் சேர்ந்தார் என தெரியவில்லை. தமிழ் பிராமணராம் அவர் எனவே சோழனாக இருக்கும் வாய்ப்பு குறைவு. இவரும் அப்போதைய சோழ அரசனும் பிரண்டஸாக இருந்திருக்கிறார்கள். குலோத்துங்கன் சிதம்பரம் கோவிலை பெரிதுபடுத்திய போது சூர்யவர்மன் கம்போடிய கல்லை அனுப்ப அதை பெருமையாக கல்வெட்டில் குறித்துள்ளார் குலோத்துங்கர். மேலும் சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கிறது. இரண்டு குரூப்களும் அப்போது கடுமையாக அடித்துக்கொண்டிந்தாக கூறப்பட்டாலும் அங்கோட்வாட் ஆலயம் விஷ்ணு ஆலயமாகும், சிதம்பரம்....
நண்பர் வவ்வால்,
ReplyDelete//தமிழ் மன்னர்களின் படை எடுப்புக்கள் போர் மறபுக்குள் உள்ளவை, எதிரி மன்னன் மிக மோசமானவன் என்றால் மட்டுமே , தண்டிப்பார்கள், இல்லை எனில் , சிற்றரசனாக இருக்க அனுபதிப்பார்கள்,. இதனாலேயே ஒரு மன்னர் இறந்ததும், ஆளுகைக்கு கீழ் இருந்த மன்னர்கள் சுதந்திரமாகிவிட்டார்கள்.இஸ்லாமிய படை எடுப்புக்கள் அப்படியல்ல, ஆணைக்கொன்று விட்டு பெண்ணை மனவியாக்கிவிடுவார்கள்,அதன் மூலம் நாட்டின் உரிமையை கைப்பற்றுவார்கள் //
இது பிழையான வரலாறு. சோழர் போர் முறைகள் பல முறை மிக மோசமானவையாக தான் இருந்திருக்கிறது. இப்படி தான் பல கல்வெட்டுகள் சொல்கின்றன. John Keay, "India a history" பக்கம் 216இல் "According to a western chalukyan inscription, in Bijapur disctrict, the Chola army behaved with exceptional brutality, slaughtering women, children and brahmans and raping women of decent caste" என்று சொல்கிறார். இவர் சோழரை இழிவுபடுத்த முனையவில்லை. இதற்கு முந்தைய பக்கத்தில் தான் குப்தருக்கு பின் சோழர் தான் இந்தியாவின் மிக சிறந்த சாம்ராஜ்யம் என்று சொல்லியிருப்பார்.
இவ்வளவு ஏன்,சோழகல்வெட்டுகளே எதிரி நாட்டு அரசிகளை பிடித்து வந்த தகவல்களை தருகிறதே. மணிமங்கலம் குறிப்பின் படி
(http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/no_29_manimangalam.html)
இரண்டாம் ராஜேந்திரன்,கொப்பம் போரில் அஹவமல்லனை வென்ற பின்பு, சத்யவை, சங்கபை ஆகிய அரசிகளையும் மேலும் பல பெண்களையும் கைபற்றி வந்ததை சொல்கிறதே.
என்னதான் நம் வரலாறு என்றாலும், நடு நிலைமை கொண்டு பார்க்கவேண்டி இருக்கே.
சார்வாகன்,
நீண்ட நாள் கழித்து உங்கள் வலை பக்கம் வந்தேன். அடேங்கப்பா, எவ்வளவு பதிவுகள், ஆழமான அலசல்கள். மதவாதிகள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் நகைச்சுவையுடன் அறிவியல் சார்ந்து தாங்கள் எழுதி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது அதே சமயம் உங்கள் விடா முயற்சியும் பொறுமையும் மலைப்பை தருகிறது. தொடரட்டும் தங்கள் சேவை.
///நமக்கு இது தெரியாதே ,ஹி ஹி மத புத்த்கம் போல் கிளுகிளுப்பாக இருக்கு சுட்டி தரவும். ந்பி(சல்) ஐயே தூக்கி சாப்பிட்டாரே நம்ம பாபர்!!!///
Delete////பாபர் இப்ராகிம் லோடியை கொன்ற பின்னர், லோடியின் அம்மா, மனைவி, சகோதரி என அனைவரையும் மணந்து கொண்டார், எஞ்சிய பெண்களை அவரது மகன் ஹிமாயுன் மணந்து கொண்டார் :-))
ரொம்ப சமத்துவம்:))/////
இஸ்லாம் மீது ஏற்பட்டுள்ள வெறி எப்படியெல்லாமோ எழுத சொல்லுகிறது .
இதெற்கெல்லாம் வரலாற்று புரட்டு பேராசிரியர் வவ்வால் சுட்டியை காண்பிக்கமாட்டார் .சிலப்பதிகாரம் மாதிரி ஏதாவது இலக்கியத்தில் கூட இதற்கு ஆதாரம் காட்ட முடியாது .
இது பிழையான வரலாறு. சோழர் போர் முறைகள் பல முறை மிக மோசமானவையாக தான் இருந்திருக்கிறது. இப்படி தான் பல கல்வெட்டுகள் சொல்கின்றன. John Keay, "India a history" பக்கம் 216இல் "According to a western chalukyan inscription, in Bijapur disctrict, the Chola army behaved with exceptional brutality, slaughtering women, children and brahmans and raping women of decent caste" என்று சொல்கிறார். இவர் சோழரை இழிவுபடுத்த முனையவில்லை. இதற்கு முந்தைய பக்கத்தில் தான் குப்தருக்கு பின் சோழர் தான் இந்தியாவின் மிக சிறந்த சாம்ராஜ்யம் என்று சொல்லியிருப்பார்.
இவ்வளவு ஏன்,சோழகல்வெட்டுகளே எதிரி நாட்டு அரசிகளை பிடித்து வந்த தகவல்களை தருகிறதே. மணிமங்கலம் குறிப்பின் படி
(http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/no_29_manimangalam.html)
இரண்டாம் ராஜேந்திரன்,கொப்பம் போரில் அஹவமல்லனை வென்ற பின்பு, சத்யவை, சங்கபை ஆகிய அரசிகளையும் மேலும் பல பெண்களையும் கைபற்றி வந்ததை சொல்கிறதே.
என்னதான் நம் வரலாறு என்றாலும், நடு நிலைமை கொண்டு பார்க்கவேண்டி இருக்கே.
நன்றிகள் கணேஷ் .
@இப்பூ
Deleteநானும் சோழர்களின் கொடுமை பற்றி தெரிஞ்சா அளவு எழுதியிருக்கிறேன். என்னை இந்துதுவாங்கறீர். உம்ம அகராதியில முசுலிம் மற்றும் இந்து - இருவரின் கொடுமை பற்றி எழுதுனா அது இந்துதுவா. ஆனா இந்து கொடுமை பற்றி மட்டும் எழுதுனா அது நடுநிலமை... போங்கய்யா நீங்களும் உங்க இசுலாமிய நடுநிலமையும்!
சகோ இப்பூ,
Deleteஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து வென்றால் கொலை,கொள்ளை, கற்பழிப்பு,அடிமைகள் எடுத்தல் என செய்வது சில நூற்றாண்டுகள் முன்புவரை சாதாரண செயல்.
அதையேதான் முகமதுவும் செய்தர் என்ன நான் சொன்னது செய்தது ஆண்டவன் கட்டளை என பீலா விட்டு, அந்த தந்திரத்தை வைத்தே அரசு,ஆட்சி அதிகாரம், காப்பாற்றி வருகிறார்.
முக்மது 6ஆம் நூற்றான்டின் மிக சாதாரண மனிதன். 21ஆம் நூற்றாண்ண்டின் வாழ்வு மாதிரி மனிதன் அல்ல!!.
54 வயது முகம்து 9 வயது ஆயிஷாவுடன் உடலுறவு கொண்டது சரி என்பீர்கள்,காஃபிர் நாட்டில் இப்படி அப்படி அல்ல என்று ஒழுக்க சீலனாக வேடம் போடுவீர்கள். சவுதியில் அரபி சட்டப்படி செய்கிறானே!!.
காஃபிர் நாடுகளில் இருப்பது போல் மூமின்கள், பெரும்பானமை நாடுகளில் இருப்பது இல்லை இரட்டை வேடம். ஆகவேதான் அழிகின்றன.
இது புரிந்து விட்டால் இஸ்லாம் உருப்படும்.காஃபிர்கள் பாதுகாபாக இருப்போம்!!
நன்றி!!
வாங்க நண்பர் கணேசன்,
Deleteகருத்துக்களுக்கு நன்றி.அடிக்கடி வாங்க!!
கணேசன்,
Deleteதகவல்களுக்கு நன்றி!
அக்கால மற்ற தேசங்களின் போர் கொடுமைகளை விட தமிழ் மன்னர்களின் போர்க்குற்றங்கள் அவ்வளவு மோசமானதில்லை என்பதை ஒப்பிட வேண்டும்.
சேர,சோழ,பாண்டிய சாம்ராஜ்யங்கள் இருந்த இடம் தெரியாமல் போனதற்கு காரணமே , பல சிறிய தேசங்களை இணைத்தாலும்,அச்சிற்றரசர்களையே ஆட்சிப்புரிய தொடர்ந்து அனுமதித்தார்கள், எனவே ஒரு பேரரசன் இறந்ததும், அடிமைப்பட்டிருந்த அரசர்கள் தாங்கலாகவே சுதந்திரம் அடைந்து விடுவார்கள், மீண்டும் ஆட்சிக்கு கீழ் கொண்டு வர புதிய அரசன் படை எடுத்து தனது வலிமையை காட்டினால் தான் கப்பம் கட்டுவார்கள்.
அதே சமயத்தில் அரேபிய படை எடுப்புகளின் போது ,அரச வம்சத்தினை முழுதாக அழித்துவிட்டு , புதிய ஆட்சியாளர்களை நிறுவுவார்கள்.
ஒப்பீட்டளவில் இந்திய மன்னர்களின் படை எடுப்பு , கொஞ்சம் மொக்கையானது :-))
// Among the spoil of the battle were many elephants, three of which are mentioned by name (1. 11), the banner of the boar, and two queens by name Sattiyavvai and Sangappai (1. 12).//
நீங்கள் சொன்ன சுட்டியில் இருப்பது இது தான்ம் போரில் யானைகள், மற்றும் பன்றிக்கொடி,இரண்டு அரசிகள் அழிக்கப்பட்டர்கள் என தான் இருக்கு. அக்காலத்தில் ராணிகளும் போர் புரிய வருவதுண்டு, எனவே போர்க்களத்தில் இறந்ததாகவே கருத வேண்டும்.
இளவரசிகளை கைப்பற்றி இருக்கலாம், ஆனால் மணமான அரசகுடும்ப பெண்களை கைப்பற்றியதில்லை, அப்படியே பிடித்தாலும் சிறையில் வேண்டுமானால் அடைத்திருக்கலாம், அப்படி கூட வரலாற்றில் நான் படித்தது இல்லை.
சென்கிஸ்கான்,திமூர் படை எடுப்புக்களைப்பற்றி படித்து பார்க்கவும், அவர்கள் அளவுக்கு கொடுமையான படை எடுப்புக்களை இந்திய மன்னர்கள் செய்ததேயில்லை.
எனவே ஒப்பீட்டளவில் சொல்லியிருப்பதை புரிந்துக்கொள்ளவும்.
ராஜ ராஜேந்திரனின் மருமகன் ,குலோத்துங்கன் ஒரு சாளுக்கிய இளவரசன், எனவே போரில் வென்ற ஒரு அரச பரம்பரையில் இருந்து மாப்பிள்ளை எடுக்கிறார்கள் என்றால் , என்ன பொருள். போர் நடக்கும் போது தான் வன்முறை,பின்னர் உரிய மரியாதைகள் உடனே உறவுகள் தொடர்ந்தது என்பதை அறியலாம்.
Deleteகுலோத்துங்கனே பின்னர் சோழ மன்னனாக ஆட்சிப்புரிந்தான், எனவே பிற்கால சோழர்களை ,குலோத்துங்கன் காலத்திற்கு பின் சாளுக்கிய சோழர்கள் என குறிப்பிட்டார்கள்.
இப்பூ,
Delete//.சிலப்பதிகாரம் மாதிரி ஏதாவது இலக்கியத்தில் கூட இதற்கு ஆதாரம் காட்ட முடியாது .
//
சிலப்பதிகாரத்தில எப்படி ஓய் இருக்கும் :-))
வரலாற்று நூல்களில் இருக்கு, இணைத்தில இருக்கானு தேடியும் போட முடியும்,அப்படியே தேடி சொன்னால் நீர் என்ன சொல்வீர், இதெல்லாம் இஸ்லாமில் சகஜம்னோ,இல்லை ,அப்படி செய்த பாபர் உண்மையான முஸ்லீம் இல்லைனோ சொல்லிட்டு ,அடுத்த பஞ்சாயத்துக்கு போவிர், இதுக்காக நான் வேலை மெனக்கெட்டு தேடி சொல்லணுமா, நீர் வேண்டுமானால் தேடிப்பார்த்து நான் சொன்னது பிழைனு காட்டும் :-))
வவ்வால் 500000 கைதிகதைதான் .உங்களது வரலாற்று புரட்டு
Deleteஇப்பூ,
Delete//வவ்வால் 500000 கைதிகதைதான் .உங்களது வரலாற்று புரட்டு//
அதுக்கு தான் நான் எந்த புத்தகம்னு பேரை சொன்னேன் ,கூகிள் புக்கில் இருக்குனும் சொன்னேன், நீர் படித்துப்பார்த்து இருக்கலாம், அதையெல்லாம் செய்ய மாட்டீர்,அப்புறம் என்ன எழவுக்கு ஆதாரம் காட்டுன்னு சொல்லிட்டு திரியறீர்,
எதை சொன்னாலும் கதைனு தான் சொல்லப்போறீர்,அதுக்கு எதுக்கு சம்பிரதாயமா ஆதாரம் இருக்கானு ஒரு கேள்வி, அடுத்தவன் நேரம் விரயம் செய்வதில் அப்படி ஓர் ஆர்வம்.
சுட்டியோ,புத்தகம் பேரோ சொன்னால் படிச்சு பார்க்கிறவங்க தான் கேள்வி கேட்கனும்,சும்மாச்சுக்கும் கேட்டுக்கிட்டு இருந்தா வாயில சூடு வச்சிடுவேன் சொல்லிட்டேன் :-))
வவ்வால் ,புரட்டு வரலாற்று பேராசிரியரின் சுட்டி ,குட்டியை எல்லாம் ,கணேசன் பொய்யாக்கியுள்ளார் .
Deleteஇல்லை, Spoils என்றால் அழிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. நீங்கள் அந்த சுட்டியில் L .11 ஐ பார்க்கவேண்டும்.
வவ்வால் ,சில வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆதரவு அரசனை புகழ் மனம் போல எழுதிவிட்டால் அது உண்மையாகிவிடுமா? 500000 கைதிகள் எப்படி சாத்தியம் என்றால் பதில் இல்லை1001 ஆம் ஆண்டில் 250000 திர்ஹம்கள் மூன்றே நாளில் பட்டுவாடா.ஆலய மணி அடித்த பசுக்காக தேர்க்காலில் மகனை இட்டு மகனை கொன்ற சோழன் கதைபோல கதைத்திருக்கிறார் ,கஜினி மனன்னின் அடிவருடி .
Deleteவரலாறு என்றால் பாரபட்சமின்றி சொல்லப்பட வேண்டும் .மனம் நிறைய இஸ்லாம் வெறுப்பை வைத்துக் கொண்டு வரலாற்றை தேடினால் spoils என்ற சொல் முஸ்லிம் மன்னர்கள் பற்றி வந்தால் கற்பழித்து கொன்றார்கள் என்று அர்த்தம் வரும் .தனக்கு வேண்டப்பட்ட மன்னர்களாக இருந்தால் அழித்தார்கள் என்று வரும் .தமிழில் இருந்தால் அன்பை அளித்தார்கள் என்று கூட சொல்லுவார்கள் பெண்களை பற்றி வருகையில் spoil என்ற சொல் வந்தால் ,எப்படி பொருள் கொள்ளப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் அதற்கு மாற்றமாக் இந்த வவ்வால் எச்சம் போட்டு கொண்டு சுட்டி காட்டியதாம் மட்டி .
////வாயில சூடு வச்சிடுவேன் சொல்லிட்டேன் :-))////
வன்முறை எங்கே ஆரம்பிக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள் .ஸ்பாயில் அர்த்தத்தை ஸ்பாயில் பண்ணிவிட்டு சுட்டி கொடுக்கிறாராம் .
இப்பூ,
Deleteயானை, கொடி,ராணி என எல்லாம் குறிப்பிட்டு ஸ்பாய்ல் என சொல்வதால் அழித்தார்கள் என பொருள் கொள்ளத்தான் வேண்டும், நீங்கள் யானை வேறு என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது :-))
ஆதாரம் இருக்கான்னு கேட்ப்பிங்க, கொடுத்தால் அது இப்படி , செல்லாதுனு சொல்வீங்க,படிக்கிறத தானே ராச சொல்ல முடியும், நானா போய் எழுதி வச்சேன், இப்போ கணேசன் சொல்வதையும் நான் படிச்சுப்பார்க்கிறேன் என தான் சொல்கிறேன், அதைவிட்டுடு , நீங்க சொல்லும் நூல் எல்லாம் செல்லாதுனா சொல்கிறேன், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாதிரி நோக்கத்துடன் தான் எழுதுவாங்க, அதில் இருந்து சம்பவம் நடந்தது ,ஆனால் அதன் அளவு வேறாக இருக்கலாம்னு எடுத்துக்கொள்ள வேன்டியது தான்.
5 லட்சம் அடிமைகள்னு சொன்னால் ஒரு 50,000 பேராவது அடிமைகளாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என கணிப்பது கடினமா?
நானே தோராயமா 50,000னு சொன்னால் நீர் என்ன செய்வீர் , 5 லட்சம்னு சொன்னதை குறைச்சு ,கஜினி முகமதுவை இழிவுப்படுத்திட்டேன்னு சண்டைக்கு வருவீர் :-))
இப்பூ நான் முன்னரே வாள் முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டதுனு சொன்னேன், இப்போ கணேசன் அவர்களும் சொல்லியிருக்கிறார், ஸ்பாய்ல் என்பது உங்களுக்கு பிடித்திருப்பது போல , வாள் முனையில் இஸ்லாம் பரப்பியதும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.
வரலாற்றில் பல நூல்கள் உண்டு, ஒவ்வொன்றும் தனி தனியாக பலக்கருத்துக்களை முன் வைக்கின்றன, பொதுவாக என்ன என பார்த்து சொல்வது தான், இதை எல்லாம் என்னிடம் மறுப்பதால் என்ன பயன், ஏற்கனவே நூலில் எழுதப்பட்டு பல்லாயிரம் மக்கள் படித்தாச்சு :-))
@தாசு!நீங்க என்னடான்னா மாமுங்கிறீங்க!சகோ.சார்வாகன் வேற மாப்ள உறவு கொண்டாடுறார்.அப்புறமா பார்த்தா அந்த பாட்டுப்பாடி பொண்ணோட சகோதரனா என்று கேள்வியெழுப்புகிறார்.வவ்வாலோ பாகவதரேன்னு பஜனை வேறு.என்னதான் நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியல.
ReplyDeleteநான் சில பதிவர்களின் கருத்துக்களோடு ஒட்டிக்கொண்டிருந்தாலும் யாரையும் போகிற போக்கில் மட்டுமே வாசிக்கிறேன்.உங்களை கடைசியா இந்துத்வாவையும்,இஸ்லாமியத்தையும் இணைக்கிற அக்பர் வேலையின் போது பார்த்தது.கண்ணில் பட்டீங்கன்னா அவ்வப்போது ஹாய் சொல்வேன்.இப்ப அழைத்த மரியாதைக்கு ஒரு ஸ்பெஷல் விசிட் அடிக்கிறேன்.நன்றி.
சகோ இராசநட,
ReplyDeleteஉங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.ஆங்கிலத் திரைப்படம். ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றவாளியை கைது செய்து நெடுந்தூரம் அழைத்து செல்ல வேண்டும். இருவரும் கைகளை இணைத்து விலங்கு இட்டுக் கொள்வார்.நீண்ட தூரம் என்பதால் பல்வகைகளில் சார்ந்து ,சேர்ந்து பல விடயம் செய்ய வேண்டி உள்ளது. முதலில் பிடிக்காமல் செய்தாலும், அப்படியே ஒரு நட்பு உருவாகி கடையிசில் நீதிமன்றத்தில் அவனுக்காக உதவி,வாதாடி வெளியே கொண்டுவந்து விடுவார்.
நம்ம தாசு அப்படி நம்மை காப்பாற்ற ஒரு ஐஸ் வைக்கிறேன் ஹி ஹி. நான்குற்ற வாளி[ ஹி ஹி நாம் யோக்கியன் இல்லை சகோ] ,தாசு நல்ல போலிசு[சூப்பர் மேன்]!!!
தாசு கொள்கை நம்க்கு சிக்கல் இல்லாத விடயம்.கர்ம வினையின் படி செயலுக்கேற்ப அடுத்த பிறவி. நம்ம இப்பூவின் தோலை மாற்றிக் கருக்கும் நரகம் அல்ல.இப்பூவுக்கு குஜால் சொர்க்கம் கிட்டுமா?மிகவும் அரும்பாடுபடுகிறார். ஹி ஹி
ஆகவே தாசின்[இந்து மதம்] விடயத்தில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை!!.
இந்து மதம் analog சிஸ்டம். ஆனால் ஆபிரஹாமியம் digittal சிஸ்டம்,
ஹி ஹி
இன்று பாலஸ்தீனர்கள் என்று சொல்லப்படும் யாரும் பாலஸ்தீனர்கள் அல்ல. முந்தைய பாலஸ்தீனர்கள் அனைவரும் யூதர்கள். இப்போதைய பாலஸ்தீனர்கள் அனைவரும் உமர் இஸ்ரேலை ஆக்கிரமித்த பின்னர் வந்த அரபியர்கள். அப்போதும் கூட இஸ்ரேலில் யூதர்களே அதிகம் இருந்தார்கள். மிகச்சமீபமாக துருக்கி ஒடாமான் பேரரசு, இஸ்ரேலிலிருந்து யூதர்களை துரத்தவும், அங்கு அரபியர்களை குடியேற்றவும் முனைந்து அதன் demographyஐ மாற்றியது. அதனால்தான் இஸ்ரேலில் யூதர்கள் குறைந்தார்கள். அரபியர் அதிகமானார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் ஐரோப்பாவில் செட்டில் ஆனார்கள். அவர்களே இருநூறு ஆண்டுகளுக்குள் திரும்ப வந்தார்கள்.
ReplyDeleteஇஸ்ரேலில் வாழும் அரபியர் அனைவரும் வந்தேறிகள்.
காககககே நம்ம அரபியர்கள்ட்ட சொல்லிக்கிறார். உலகம் நம்மோடது. போய் அள்ளுன்னு. அதனால்தான் கருப்பர்கள் ஆண்ட எகிப்தில் இன்று கருப்பர்களே இல்லை. எல்லாரையும் துரத்தியாச்சு. இப்ப அரபியர்கள்தான் மெஜாரிட்டி. மௌரிட்டானியாவுல கூட அரபியர்கள் கீழ கருப்பர்கள் அடிமையா வாழறாங்க..(மௌரிட்டானியாவில் இன்னமும் அடிமைமுறை ஒழிக்கவில்லை.)
யா காகககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்!
எதுக்கும் இருக்கட்டுமின்னு இங்கண ஒரு பிட்டு போட்டுக்கிறேன்.
நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!
பார்த்து நீங்களும் நபிவழிகளை பாராட்ட வாங்க...
சார்வாகன் ,பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் இல்லை .இப்போது எந்த 15 வயதுக்கு குறைந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் .///சவுதி பெண்கள் அதிகம் மஹர் கேட்பதால் மட்டுமே முதிர் கன்னிகள் சவுதியில் அதிகம்,///இதுவும் உங்கள் கூற்றே
ReplyDelete/////காஃபிர் நாட்டில் இப்படி அப்படி அல்ல என்று ஒழுக்க சீலனாக வேடம் போடுவீர்கள். சவுதியில் அரபி சட்டப்படி செய்கிறானே!!.////
சவுதியில் முதிர் கன்னிகள் அதிகம் என்று ஒருபக்கம் .இன்னொரு பக்கம் இளவயது பெண்களை திருமணம் செய்கிறர்கள்
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130117149578
ReplyDeleteMarriages of convenience
A way to escape poverty, family troubles for many
Last Updated : Thursday, January 17, 2013 4:01 PM
Saudi Gazette report
JEDDAH — A marriage of convenience between a man and woman is solemnized in Saudi Arabia with only two witnesses, which is the minimum number required by the Shariah, in attendance. The union is not authenticated by a court or government body and it is almost always used to achieve personal gains, a local daily reported.
While the legal and religious validity of such a union is in doubt, men and women are turning to marriages of convenience for a variety of reasons.
One woman, who spoke on condition of anonymity, said she was married at the age 16 to a man who was 25 years her senior. The marriage did not last long as the man’s first wife forced him to divorce her. The woman went on to remarry twice again.
“After my third marriage failed, I decided to live independently and moved out of the family house. A friend suggested that I seek a marriage of convenience and I married a businessman in the presence of two witnesses. Less than a month later, he divorced me,” she said.
An Arab woman who comes from a poor background said she had entered into marriages of convenience with five Saudi men so she could live a decent life and avoid committing sins.
The men in such marriages are typically well off, over the age of 35 and married to at least another woman.
“They could be prominent officials or business figures and usually seek divorced, beautiful expatriate women,” said a Jeddah-based matchmaker.
Some of the men have family problems and seek marriages of convenience to escape their troubles but some of them are in it for other reasons.
"I have received marriage requests from an Arab man who had been married six times and an Indonesian man who just ended his 12th marriage," said the matchmaker.
“The women who agree to such marriages are either divorced with children or considered too old for marriage. We have scouts who go to places where large groups of women gather, such as wedding halls, salons and gyms. Once a woman matches a client’s requirements, they will approach the woman and broach the subject with her,” she added.
Dr. Ghazi Al-Mutairi, a professor at the Islamic University of Madinah, said marriage of convenience is subject to personal views, interpretations and motives but stopped short of calling it illegal.
Faisal Shaikh, a judge in Madinah, on the other hand said such a union is illegal as it does not require one to obtain approval of the woman’s legal guardian.
Dr. Fawziyah Al-Subhi, assistant professor of psychology at Taibah University, said women who resort to such marriages often end up with psychological problems and warned that the risk of catching sexually transmitted diseases was higher.
“Contrary to common belief, such marriages exploit people in bad situations and make women feel insecure. Pregnancies from such a union will lead to illegal abortions or children who cannot obtain a legal status,” she said.
சகோ இப்பூ,
ReplyDeleteமேலே சொன்னதைப் படிக்கவு சவுதி கெஜட் ஆதார பூர்வ த்கவல். ஒரு நாட்டில் சட்டம் என்பது பணம் உள்ளவர்களால் வளைக்கப் படும் என்பதற்கு இந்தியாவோ,சவுதியோ வித்தியாசம் இல்லை.
ஒரு கணக்கு சவுதி 100 ஜோடி ஆண் பெண் இருக்கிறார்கள்.
இதில் 10% பணம் இருப்பவன் 4 பெண்களை அதிக மெஹர் கொடுத்து திருமணம் செய்தால் மீதி உள்ள 60 பெண்களுக்கு 90 ஆண்கள் எப்படி பத்தும்.
காஃபிர் பெண்கள் இருந்தால் மத மாற்றலாம்,அல்லது பாலியல் அடிமையாக ஆண்டவன் சட்டம் அனுமதி தருகிறது. சவுதியில் இப்போது இதற்கு வாய்ப்பு குறைவு.
மீதம் உள 60% பெண்களும் அந்த 10% பண்கார சவுதி கோட்டாவில் இடம் கிடைத்து பணம் கிடைக்காதா எனவே பார்க்கின்றனர்.
ஆகவேதான் சவுதி மத்திய த்ர வர்க்கம் வேறு நாட்டு பெண்களை மணமுடிக்கும் சூழல் ஏற்பட்டது.
அப்படி நிறைய நடந்தால் சவுதி இனம் காணாமல் போய்விடும் என்பதால் இந்த கோணத்தனமான சவுதியின் இனவெறி குடியுரிமை சட்டங்கள்!!
சரியா!!
இன்னும் கேள்வி கேட்கலாம்!!
நன்றி!!!
http://gulfnews.com/opinions/columnists/misery-of-marriages-of-convenience-1.697374
ReplyDeleteMisery of marriages of convenience
This recent phenomenon rests on religious leaders who have sanctioned every twisted form of relationships
By Tariq A. Al Maeena, Special to Gulf NewsPublished: 00:00 October 17, 2010
The "misfar" marriage refers to a union contracted so that a woman may cohabitate with her foreign "husband" for the period of time he is visiting a foreign country.
Reports in the Saudi press recently spoke of growing concerns over the number of children fathered by Saudi males during their trips abroad, and abandoned for all practical purposes. And while these overseas paternal distribution of genes are not necessarily restricted purely to Saudis, the number of wives and children left behind is of alarming proportions.
At a conference in Egypt, Aiman Abu Akeel, chairman of the Maat Foundation for Peace and Development, stated that the majority of men who visit Egypt looking for misfar (tourist) marriages tend to be Saudi, followed by Iraqis, and that the women they marry are predominantly younger than them. The misyar or marriage of convenience within the country's borders became very popular after it was sanctioned by some of our religious shaikhs. It was basically a licence to have multiple partners without much guilt or expense. It was soon followed by the misfar and other concoctions as well.
The "misfar" marriage refers to a union contracted so that a woman may cohabitate with her foreign "husband" for the period of time he is visiting a foreign country. These women are usually divorced after a short period which ranges from a week to a month. It is natural that most of these women who are married off come from deprived backgrounds, and for most of them, they have very little say in the matter.
In Egypt, the parents receive up to 4,000 Egyptian pounds from the visitors for sanctioning their approval for a limited time marriage. Most of these girls are below 16 years of age, and do not understand that they are being treated like commodities.
திரு வவ்வால்,
ReplyDelete//நீங்கள் சொன்ன சுட்டியில் இருப்பது இது தான்ம் போரில் யானைகள், மற்றும் பன்றிக்கொடி,இரண்டு அரசிகள் அழிக்கப்பட்டர்கள் என தான் இருக்கு. அக்காலத்தில் ராணிகளும் போர் புரிய வருவதுண்டு, எனவே போர்க்களத்தில் இறந்ததாகவே கருத வேண்டும்.//
இல்லை, Spoils என்றால் அழிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. நீங்கள் அந்த சுட்டியில் L .11 ஐ பார்க்கவேண்டும்.
"At that time (the Chola king) captured in battle satrubhayamkara, Karabhadra, Mulabhadra and many (other) excellent elephants of noble breed, horses of lofty gait, herds of camels, the victorious banner of the boar and the other insignia of royalty, the peerless Sattiyavvai, Sangappai and all the other queens, a crowd of women, and other (booty) which he (viz., Ahavamalla) had abandoned on that battle-field, and performed the anointment of victory."
பிடித்து வந்ததாக சொல்லபட்டிருக்கும். தெளிவாகவே அரசிகள் (இளவரசிகள் அல்ல) என்றே இருக்கும். சாளுக்கிய கல்வெட்டில் இந்த நிகழ்ச்சியை பற்றி, இரண்டாம் இராஜேந்திரன் "மஹா பாதகன்" என்று சொல்லியிருப்பர்.
//ஆனால் மணமான அரசகுடும்ப பெண்களை கைப்பற்றியதில்லை, அப்படியே பிடித்தாலும் சிறையில் வேண்டுமானால் அடைத்திருக்கலாம், அப்படி கூட வரலாற்றில் நான் படித்தது இல்லை.//
உதாரணம் பல உண்டு. "south indian inscriptions" by Eugen பார்த்தீர்கள் ஆனால், இராஜாதிராஜன் இலங்கை படையெடுப்பின் போது வீர சாலமேகனின் தமக்கை, மனைவியை பிடித்து வந்தது மட்டுமின்றி, தாயின் மூக்கையும் அறுத்ததாக கல்வெட்டை கொண்டு சொல்வார்.
//ராஜ ராஜேந்திரனின் மருமகன் ,குலோத்துங்கன் ஒரு சாளுக்கிய இளவரசன், எனவே போரில் வென்ற ஒரு அரச பரம்பரையில் இருந்து மாப்பிள்ளை எடுக்கிறார்கள் என்றால் , என்ன பொருள்.//
நீங்கள், இரு வேறு சாளுகியரை குழப்பி கொள்கிறீர்கள். கீழை சாளுக்கியர் (eastern chalukyas) ஆந்திராவில் வெங்கியை தலை நகராய் கொண்டு ஆண்டவர். இவர்கள் சோழருக்கு மிக இணக்கமானவர். பெண் கொடுத்து பெண் எடுத்து பல தலை முறையாய் சம்பந்தி உறவு. குலோத்துங்க இவ்வழியில் வந்தவன். குலோத்துங்கன் நடத்திய கலிங்க போருக்கு முக்கிய காரணமே தனது ஆந்திர சாளுக்கிய சொந்தங்களை ஒரியர் தாக்கியதை தண்டிக்கவே. ஆனால் மேலை சாளுக்கியர் (western chalukyas) வேறு. இவர்கள் கர்நாடகத்தை ஆண்டவர். மேலை சாளுக்கியர் சோழரின் பரம வைரிகள். இவர்களுக்கும் சோழருக்கும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் அவ்வபோது போர்கள். இவற்றில் ஒன்று தான் இரண்டாம் ராஜேந்திரன் வென்ற கொப்பம் போர். மேலை சாளுக்கியர் சோழரால் பலமுறை தோற்கடிக்கபட்டு வலுவிழந்து அழிந்தனர். அதே சமயம் இவர்களுடன்ஆன தொடர் போர்கள் சோழ சாம்ராஜ்யத்தையும் வலுவற்றதாக ஆக்கி, சோழரின் அழிவிக்கு வழி வகுத்தது.
//சென்கிஸ்கான்,திமூர் படை எடுப்புக்களைப்பற்றி படித்து பார்க்கவும், அவர்கள் அளவுக்கு கொடுமையான படை எடுப்புக்களை இந்திய மன்னர்கள் செய்ததேயில்லை//
உண்மை. ஆனால் காரணங்கள் உண்டு.செங்கிஸ் கானின் முறை scorched earth. மேய்ச்சல்காரரான மங்கோலியர் (pastoral people) நாகரீகத்தை பெரிதாய் மதிக்கவில்லை, மேலும் நாடு பிடிப்பது மட்டுமே குறி. சோழரின் குறி வேறு. எதிரி நாட்டை பூண்டோடு அழிக்காததும் காரணத்தோடே. வென்ற நாடுகளை கொண்டு கடல் வாணிபத்திற்கு சுங்கம் வசூலித்து. அந்த செல்வத்தை கொண்டு சோழநாட்டை வளமாக்கி, பல கோயில் கட்டி என்று பல வேலைகள். பிற்கால சோழர் நிச்சயம் மொக்கை ஆட்கள் அல்ல. ஆனால் எதிரிகளை விட்டு வைக்கும் போது சாம்ராஜ்யம் நிலைக்க வேறு strategies வேண்டும்,.ரோமரிடம், பிற்கால ஐரோப்பியர் இடம் இருந்த தேச பற்று போன்ற strategies. அது நம் ஆட்களிடம் இருந்ததில்லை. தனி மனிதருக்காக தளபதிகளும், சிப்பாய்களும் போரிட்டனரே இன்றி ஒரு குடியருசுக்காக அல்ல. அதுவே நம் வீழ்வுக்கு முக்கிய காரணம்.
வவ்வால் நான் இஸ்லாமிய அக்கிரமங்களை நியாயப்படுத்த இவற்றை சொல்லவில்லை. அவர்கள் கத்தி முனையில் மதம் பரப்பினார்கள். நம்மவரும் கத்தி எடுத்தவர் தான். ஆனால் மதம் பரப்பவில்லை, மதத்திற்காக கத்தி எடுக்காதது நல்லதா கெட்டதா தெரியவில்லை.
கணேசன்,
Deleteமேலை,கீழை சாளுக்கியர்கள் இருவரும் பங்காளிகள் என்ற வகையிலும், இரு பிரிவும் சோழர்களின் சிற்றரசர்களாக செயல்ப்பட்டார்கள் என்ற வகையிலுமே சொல்லியிருக்கிறேன், இராஜேந்திர சோழன் காலத்தில் விந்திய,சாத்புராவுக்கு தெற்கே முழுவதும் சோழ சாம்ராஜ்யம் இருந்தது.
இருவகை சாளுக்கியர்களுமே சோழர்களிடம் தோற்று அடங்கி இருந்தவர்கள்,ஆனாலும் அவ்வபோது தன்னாட்சி பெற முயன்று சன்டை நடப்பது வழக்கம். அதே திருமண பந்தமும் இருந்தது என்பதை பொதுவாகவே சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் சொன்ன கல்வெட்டுக்கள் குறித்தும் படித்துப்பார்க்கிறேன், south indian inscriptions" by Eugen இன்னூல் இன்டெர்நெட் ஆர்கைவிஸில் உள்ளது , படித்துப்பார்க்க வேண்டும். நான் பெரும்பாலான நூல்களை பிடிஎஃப் ஆக அங்கு தான் படிக்கிறேன்.
தங்களை இழிவாக பேசியவர்களின் மூக்கினை அறுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது, திருமலைநாயக்கர் காலத்தில் மைசூர் படையினை வென்ற பின் மூக்கறுத்துள்ளார்கள், திருமலை சேதுபதி எனப்படும் ராமநாதபுரம் பாளையக்காரர் தான் , அப்போழுது திருமலைநாயக்கருக்காக போர் புரிந்தது.
நீங்கள் சொன்னது போல சில சம்பவங்களும் உண்டு,ஆனால் வெறும் மகிழ்ச்சிக்காக ,மற்றும் மதம் மாற சொல்லி எல்லாம் கொலை செய்யவில்லை.
போர் அறிவிப்பு செய்து போர் தொடுப்பது ,சரணடைந்துவிட்டால் ,மன்னிப்பது எல்ல்லாம் உண்டு, ஆனால் இஸ்லாமிய படை எடுப்புகளின் போது சரணைய சொல்ல்விட்டு கொலை செய்வார்கள், அவுரங்க சீப்புக்கு பின் வந்த பருக் சிய்யார், பந்த பகதூருடன் சன்டையிட்டார், ஒருகட்டத்தில் பந்தா பகதூர் உடனான முற்றுகை முடிவில்லாமல் நீளவே, சரணடைந்தால் மன்னிப்போம் என சொல்லிவிட்டு ,சரணைந்தவர்களை பிடித்து சித்திரவதை செய்து கொன்றார்கள்.
// நான் இஸ்லாமிய அக்கிரமங்களை நியாயப்படுத்த இவற்றை சொல்லவில்லை. அவர்கள் கத்தி முனையில் மதம் பரப்பினார்கள். நம்மவரும் கத்தி எடுத்தவர் தான். ஆனால் மதம் பரப்பவில்லை, மதத்திற்காக கத்தி எடுக்காதது நல்லதா கெட்டதா தெரியவில்லை.//
நீங்கள் அப்படி சொல்லவில்லை,பொதுவாக சொல்கிறீர்கல் என தெரியும், நீங்கள் சொன்ன வாள்முனையில் மதம்ப்பரப்பினார்கள் என்பதை கூட மார்க்கப்பந்துக்கள் ஏற்க மாட்டார்கள் :-))
தமிழ் மன்னர்கள்,இந்திய மன்னர்கள் அறமின்றி போர் செய்தது வெகு சிலவே, ஆனால் இஸ்லாமியப்படை எடுப்புகளில் அறம் என்பதே இருக்காது. எனவே ஒப்பீட்டளவில் தான் நான் சொலவது. போர் என்றாலே கொடுமை தானே!
நண்பர் சார்வாகன்,
ReplyDelete//An Arab woman who comes from a poor background said she had entered into marriages of convenience with five Saudi men so she could live a decent life and avoid committing sins.//
//“The women who agree to such marriages are either divorced with children or considered too old for marriage. We have scouts who go to places where large groups of women gather, such as wedding halls, salons and gyms. Once a woman matches a client’s requirements, they will approach the woman and broach the subject with her,” she added.//
இவை இந்த மத சட்டங்களின் கோமாளித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கோமாளித்தனம் என்றாலும், இப்படி இந்த மதத்தால், இந்த பெண்கள் படும் அவதி வருத்தம் அளிக்கிறது. பாருங்கள், வறுமையை சமாளிக்க இந்த பெண்கள் இதை எல்லாம் செய்யவேண்டி இருக்கு. சம உரிமை மற்றும் வேலை வாய்ப்பு இருந்தால், இவர்கள் தாமாகவே வாழவாவது முடியும்.
சகோ கணேசன்,
Deleteஉலகில் பாலியல் சிக்கல்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வித்மாக வெளியே தெரிகிறது.
சட்டம் எப்போதும் பணம்,அதிகாரம் படைத்த்வர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும்.அதற்கு இந்தியா,சவுதிஉள்ளிட்டு அமெரிக்கா போன்ற அப்பா டக்கர் நாடுகளும் வித்தியாசம் இல்லை.
பெண்கள் ,சொந்தக் காலில் நிற்கும் படியாக வந்த பின் திருமணம், குறைந்த கல்வியில் வாழ்வாதாரம் கிடைக்கும் வண்ணம் செய்தாலே,எந்தப் பெண்ணும் சுயமரியாதையோடு பிழைப்பாள்.ஆண்களை சார்ந்து வாழ வேண்டி இருக்காது.
இதில் சவுதியில் மத அடிப்படைவாதிகள் பெண் தனியாக செல்லக்கூடாது, வாகனம் ஓட்ட்க கூடாது,ஓட்டு கிடையாது என சட்டம் பொடுவதும், ஒரு ஆண் 4 மனைவி ஒரே சமயத்தில் செய்ய அனுமதி, ஒரு மனைவி அனுமதி இன்றியே இன்னொரு திருமணம்[ஆனால் ஒரே சமயத்தில் மொத்தம் 4 மனைவிகள் மட்டுமே] போன்ற்வை தவறாக பயன்படுட்தப் படாமல் இருக்குமா?
இந்தியாவில் சட்டத்தினை மீறினால் தப்பிக்க்லாம்.சவுதியில் சட்டமே துஷ்பிரயோகம் செய்ய மிக எளிது.
ஆக்வே எழும் சில சிக்கல்களை சவுதி உணர்வதே வெளிவரும் செய்திகள்,குடியுரிமை சட்ட திருத்தல்கள்.
பெண்ணுக்கு சம உரிமை வழங்காத்வரை,பல தார மணம் தடுக்கப்படாத வரை
சவுதியில் பாலியல் சிக்கல்கள் அதிகரிக்கும். எண்ணெய் தீர்ந்தல் அரசு கவிழும். நிலை இன்னும் படு மோசம் ஆகும்.
நடப்பதை பார்க்கத்தான் போகிறோம்.
நன்றி!!!
சார்வாகன் ////54 வயது முகம்து 9 வயது ஆயிஷாவுடன் உடலுறவு கொண்டது சரி என்பீர்கள்,காஃபிர் நாட்டில் இப்படி அப்படி அல்ல என்று ஒழுக்க சீலனாக வேடம் போடுவீர்கள். சவுதியில் அரபி சட்டப்படி செய்கிறானே!!.///
ReplyDeleteநான் கேட்டது இதுபற்றித்தான் .சமகாலத்தில் அது தவறாக கருதப் படாததாலும் ,பெண்கள் பற்றிய மார்க்க செய்திகள் தனது காலத்திற்கு பிறகும் அதிக காலம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஆயிசா [ரலி] அவர்களை மனம் செய்ததை தாங்கள் எவ்வளவுதான் கொச்சை படுத்த ஆசைபட்டாலும் அதனால் ஒன்றும் எதிர் விளைவுகள் ஏற்படாது.முகம்மது நபி[ஸல்] அவர்கள் விரும்பியவாறு ஆயிசா [ரலி] அவர்கள் அதிக காலம் வாழாவிட்டாலும் அதிகமான் நபி வழி [செய்திகளை அறிவித்ததில் 2 ஆம் இடத்தில் இருந்தார்கள் என்றால் தனது பண்கள் நபி[ஸல்] அவர்கள் எதிர் பார்த்தவண்ணம் செவ்வனே செய்திருந்தார்கள் .இளவயதில் போரிலும் கலந்து கொண்டு மற்றும் பல நிர்பந்த சூழ் நிலைகளில் தகுந்த ஆலோசனை வழங்கியது ,முகம்மதுநபி[ஸல்] அவரகளுடன் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை அர்த்தமுடையதாக இருந்திருக்கிறது என்பதை நற்சிந்தனை யாளர்களால் உணர முடியும்.
பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் இல்லை என்ற பெண்ணுரிமை சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பால்ய விவாகத்தை தவிர்க்கும் நடவடிக்கையை முதலில் இஸ்லாமே நடைமுறைப்படுத்தியது
அரேபியாவில் 9 வயது பெண்களுக்கு திருமணம் நடப்பது போல எழுதியுள்ளீர்கள் .இன்னொரு இடத்தில் அங்கெ முதிர்கன்னிகள அதிகமாக இருப்பதாகவும் எழுதுகிறீர்கள் .
///இதில் 10% பணம் இருப்பவன் 4 பெண்களை அதிக மெஹர் கொடுத்து திருமணம் செய்தால் மீதி உள்ள 60 பெண்களுக்கு 90 ஆண்கள் எப்படி பத்தும்.////
90 ஆண்களுக்கு 60 பெண்கள் எப்படி பத்தும் என்று இருக்க வேண்டும்.
பெண்கள் அதிகமாக மகர் கேட்பதால் முதிர் கன்னிகள் இருக்கிறார்கள் என்றால் இப்போது அங்கெ இளவயதில் திருமணம் இல்லை என்பதை மறைக்க முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்தை காட்டி ,இப்போது நடப்பது போல எழுதுவது ஏன்?
பெண்கள் அதிக மகர் கேட்பதால் அவர்கள் சுய விருப்பபடி திருமணம் செய்கிறார்களா?இல்லையா?
ஏழை பெண்கள் திருமணம் இன்றி தவிக்க வேண்டிய அவசியமில்லை .மகரை குறைத்துக் கொண்டால் போதும் .
சகோ இப்பூ,
Deleteநான் சொல்வது உங்களுக்கு புரிகிறது.
சவுதிப் பெண்கள் மஹரை குறைப்பதை விட, பண்க்கார சவுதிகள் ஒரு திருமணம் மட்டும் செய்ய சொல்ல மனம் வரவில்லையே!!.
இது நாயகன் அவனை நிறுத்த சொல்,நான் நிறுத்தரேன் பாணியில் படிக்கோனும்
சவுதி ஆணை மனைவியின் எண்ணிக்கையை குறைக்க சொல்
நான் மஹர் தொகையை குறைக்கிறேன் என என் சவுதி சகோதரிகள் சொல்கிறார்கள்!!
சிந்திக்க மாட்டீர்களா!!!
நன்றி!!!
@வவ்வால்,
ReplyDeleteசோழர்களும் (ஓரளவுக்கு) நபிவழியில்தான் நடந்துள்ளனர்.
அடைப்புக்குறி முக்கியம் :)
//நான் கேட்டது இதுபற்றித்தான் .சமகாலத்தில் அது தவறாக கருதப் படாததாலும்// முகமது, காட்டுமிராண்டி காலத்திற்கு மட்டுமே ஏற்றவர் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி!
ReplyDelete//ஆயிசா [ரலி] அவர்களை மனம் செய்ததை தாங்கள் எவ்வளவுதான் கொச்சை படுத்த ஆசைபட்டாலும் அதனால் ஒன்றும் எதிர் விளைவுகள் ஏற்படாது// தாத்தா பேத்தியை திருமணம் செய்ததை நியாயப்படுத்த நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் யாரும் எற்றுக்கொள்ள மாட்டார்கள்.