The full sky is seen in the Fermi telescope map; gamma-ray sources abound along the central, galactic plane
வணக்கம் நண்பர்களே,
அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளின் மீதான [அள்வீட்டு] சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்ற புரிதல் மட்டுமே அதன் பன்முகத் தனமையை சரியாக அறிய முயல்வதின் அத்தாட்சி.
அறிவியலின் விளக்கங்கள் கிடைக்கும் சான்றுகளுக்கு ஏற்றபடி மாறும் என்பதும், எந்த விதியும் நிரந்தரம் அல்ல.ஒவ்வொன்றும் எல்லைகளுக்கு உடப்ட்டது, எல்லைகளைத் தாண்டும் போது புதிய விளக்கம் வருவதே அறிவியலின் பரிணாம வளர்ச்சி ஆகும்.
அந்த வகையில் பி.பி.சி ல் படித்த ஒரு கட்டுரையின் தமிழாக்கத்தை இப்பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கருப்பு பொருள் என்பது ஈர்ப்பு விசையின் அறியாக் காரணி என்பதே இப்போதைய அறிவியல் கருதுகோள். அதாவது நெடுந்தூர விண்மீன் திரட்டு[கால்க்சி]களின் ஈர்ப்பு விசையினால் நிகழும் அசைவுகளை ஐன்ஸ்டினின் விதி கொண்டு அள்விடும் போது வரும் தவறின் காரணி கருப்பு பொருள் அளிக்கும் ஈர்ப்பு விசை என்பதே கருதுகோள்.
அதாவது எளிமையாக சொன்னால் ஈர்ப்பு விசை அளவிடும் போது 10 நியுட்டன் வருகிறது. ஐன்ஸ்டினின் விதிப்படி கண்க்கிட்டல் 8 நியுட்டன் வருகிறது. இந்த மீதி 2 நியுட்டனை ஈர்ப்பு விசையாக அளிப்பது கண்ணுக்கு புலப்படா, இபோது உள்ள பொருள்களில் இருந்து வித்தியாசமான கருப்பு பொருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பிரபஞ்சத்தில் 25% கருப்பு பொருள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Dark_matter
http://en.wikipedia.org/wiki/Dark_matter
தமிழ் திரைப் படங்களில் காரை காலில் கட்டி நாயகன் நிறுத்துவதை பார்த்து இருப்பீர்கள்,ஆனால் கயிறு நாயகனின் பின்னால் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருக்கும் .அப்படி!! ஹி ஹி. தமிழர்களுக்கு திரைப்படம் சொல்லி விளக்கினால் எளிதில் புரியும் .
இங்கே சூப்பர் ஸ்டார் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்துவதில் மறைந்து என்ன இருக்கிறது என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும் என்னும் தத்துவ தாத்பரியம் மட்டும் அல்லாமல்,ஈர்ப்பு விசையின் காரணி கண்ணுக்குத் தெரியா கயிறால் கட்டி இருக்கும் ஒரே ஏக இறைவன் இடியப்ப பூதனார் என்பதன் ஆணித்தரமான நிரூபணமும் ஆகும்.
இவர்தான் அவர்!!!
இவர்தான் அவர்!!!
1930ல் இருந்து இந்த கருப்பு பொருளை உறுதிப்படுத்த முயற்சிகள் முன் எடுக்கப் படுகின்றன.
சரி ஐன்ஸ்டினின் விதிப்படி ஈர்ப்பு விசை கணக்கிட்டால்தானே வித்தியாசம் வருகிறது, அளவீட்டு சான்றுகளுக்கேற்ப புதிய ஈர்ப்பு விசைக் கொள்கை வடிவமைக்கலாமே என்று கேட்பவர்களுக்கு வாழ்த்துக்கள், அம்முயற்சிகளும் நடக்கின்றன.
இப்பதிவில் சொல்லும் ஒரே விடயம் ஃபெர்மி தொலை நோக்கி எனப்படும் அதி ஆற்றல் காம்மா[இது வேற!!] கதிர்களை காணும் கருவி இப்போது கருப்பு பொருள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
பிரப்ஞ்சத்தை இத்தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது பதிவில் காட்டப் பட்ட படம் போல் மத்தியில் அதிக Gamma ஒளியும்,மத்தியில் இருந்து ஓரங்களுக்கு குறைந்து வருவது போன்ற படம் கிடைத்தது.
இது கருப்பு பொருள் இருக்கும் சாத்தியத்தை குறிக்கிறது என சில அறிவியலாளர்கள் வாதிடுகின்றார்.
Fermi has been a tremendous success at examining some of the most high-energy processes in the cosmos, publishing a catalogue filled with details of the spinning neutron stars known as pulsars, and a wide array of "active galactic nuclei" - probably supermassive black holes.
But outside the Fermi team, the focus shifted in early 2012, when a pair of papers on the Arxiv preprint server suggested hints of dark matter within Fermi's data, which are publicly available.
எனினும் இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்க பல படிகள் செல்லவேண்டும்.
ஐன்ஸ்டினின் விதி மாறுமா,இல்லை கருப்பு பொருளை ஃபெர்மி தொலைநோக்கி உறுதி செய்யுமா என்பதை காலம் முடிவு செய்யும்
http://fermi.gsfc.nasa.gov/
http://en.wikipedia.org/wiki/Fermi_Gamma-ray_Space_Telescope
இப்பதிவில் சொல்லும் ஒரே விடயம் ஃபெர்மி தொலை நோக்கி எனப்படும் அதி ஆற்றல் காம்மா[இது வேற!!] கதிர்களை காணும் கருவி இப்போது கருப்பு பொருள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
பிரப்ஞ்சத்தை இத்தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது பதிவில் காட்டப் பட்ட படம் போல் மத்தியில் அதிக Gamma ஒளியும்,மத்தியில் இருந்து ஓரங்களுக்கு குறைந்து வருவது போன்ற படம் கிடைத்தது.
இது கருப்பு பொருள் இருக்கும் சாத்தியத்தை குறிக்கிறது என சில அறிவியலாளர்கள் வாதிடுகின்றார்.
Fermi has been a tremendous success at examining some of the most high-energy processes in the cosmos, publishing a catalogue filled with details of the spinning neutron stars known as pulsars, and a wide array of "active galactic nuclei" - probably supermassive black holes.
But outside the Fermi team, the focus shifted in early 2012, when a pair of papers on the Arxiv preprint server suggested hints of dark matter within Fermi's data, which are publicly available.
எனினும் இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்க பல படிகள் செல்லவேண்டும்.
ஐன்ஸ்டினின் விதி மாறுமா,இல்லை கருப்பு பொருளை ஃபெர்மி தொலைநோக்கி உறுதி செய்யுமா என்பதை காலம் முடிவு செய்யும்
http://fermi.gsfc.nasa.gov/
http://en.wikipedia.org/wiki/Fermi_Gamma-ray_Space_Telescope
நன்றி!!
வணக்கம் சகோ,
ReplyDeleteநலம் என்று நம்புகிறேன்.
படத்தில் உள்ளது உண்மையில் நமது பிரபஞ்சமா?
//ஈர்ப்பு விசை அளவிடும் போது 10 நியுட்டன் வருகிறது. ஐன்ஸ்டினின் விதிப்படி கண்க்கிட்டல் 8 நியுட்டன் வருகிறது. இந்த மீதி 2 நியுட்டனை ஈர்ப்பு விசையாக அளிப்பது கண்ணுக்கு புலப்படா, இபோது உள்ள பொருள்களில் இருந்து வித்தியாசமான கருப்பு பொருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பிரபஞ்சத்தில் 85% கருப்பு பொருள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள்.//
ஒளி இருந்தால் தான் ஒரு பொருள் கண்ணுக்கு புலப்படும். எனவே போதிய ஒளியின்மையால்தான் அவற்றை நாம் காணமுடிவதில்லை. எனவே அவற்றை கருப்பு பொருள் என்கிறோம் என்று சொல்லலாமா சகோ?
சகோ புரட்சிமணி வாங்க,நலமா?
Deleteநமது புலன்களுக்கு மட்டும் அல்ல, இப்போது உள்ள அறிவியல் உபகரணங்களுக்கும் புலப்பாடாத,ஆனால் ஈர்ப்புவிசை அளிக்கும் பொருளே கருப்பு பொருள். ஆகவே இருளில் இருப்பதால் தெரிவதில்லை என்பது அல்ல.நம்முடைய ஒரு பழைய பதிவில் இருந்து சில விவரங்கள். நேரம் இருப்பின் படியுங்கள்
http://aatralarasau.blogspot.com/2012/04/dark-matter-energy.html
கருப்பு பொருள்
இதை பற்றியும் ஒன்றும் தெரியாது.பேரண்டத்தில் பார்க்க முடியாத பல பருப் பொருள்கள் உள்ளன.நமது பேரண்டத்தில் 25% கருப்பு பொருள் உள்ளது என்பதை ஏற்கென்வே குறிப்பிட்டோம்.
கருப்பு பொருள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட என்னவாக இருக்கமுடியாது என்பதை அறிவியல் தெளிவாகவே வரையறுக்கிறது.
[நாமும் இதே போல் கடவுள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட என்னவாக இருக்கமுடியாது அடித்துக் கூற இயலும்.]
இப்படி கருப்பு பொருள் என்னவாக் இருக்க முடியாது என்ற வரையறைகள்
1. விண்மீன்கள்,கோள்கள் போல் கண்ணுக்கு தெரிவது இல்லை.இப்படி கண்னுக்கு தெரியாத பொருள்கள் 25% இருந்தாகவேண்டும் என பரிசோதனைகள் கூறுகின்றன.
2.கண்னுக்கு தெரியாத, ஆனால் பரிசோதனையில் கண்டுபிடிக்கக்கூடிய பேரியான் போன்ற அணு துணை துகள்களால் ஆன பருப்பொருள்களும் அல்ல.இவைகளை வெப்பக் கதிவீச்சு உள்வாங்குதலின் மூலம் கண்டறிய முடியும்
3.கருப்பு பொருள் எதிர் பருப்பொருள் அல்ல. பருப்பொருள் எதிர் பருப்பொருளுடன் இணைந்தால் காமா கதிர்கள் வெளிப்படுவதை உணர முடியும்.
4.இது கருந்துளையும் அல்ல.கருந்துளைகளை பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.எப்படி எனில் இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Gravitational_lens
இப்படி ஒளியை ஈர்த்து வளையச்செய்யும் தன்மை உடைய இந்த நான்குவகை தன்மை பொருள்களிலும் அடங்காத வகைதான் கருப்பு பொருள்.இப்படிப்பட்ட பொருள்கள் 25% பேரண்டத்தில் இருக்கவேண்டும் என்பதே கணிப்பு .
Thank you!!
சகோ மணி,
Deleteநம்மை சுண்டி இழுக்கும் படிமுக்மது(சல்) அவர்களைப் பற்றி பதிவு போட்டு,நம்ம பங்காளிக கூட மீண்டும் வாய்க்கால் தகராறு ஏற்படுத்துவது சரியா? .எப்படி பங்காளி என்றால் நான் யூத கைக்கூலி என்றால் ,அவர்கள் அரபு கைக்கூலி என்றால் பங்காளிதானே ஹி ஹி[ அரபுக்களும் யூதர்களும் பங்காளிகள்!!]
இதோ அங்கே வருகிறேன்.
நன்றி!!!
\\இபோது உள்ள பொருள்களில் இருந்து வித்தியாசமான கருப்பு பொருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பிரபஞ்சத்தில் 85% கருப்பு பொருள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள்.\\
Deleteமாமு நீங்க இந்த பதிவில் 85% அப்படின்னு சொல்லியிருக்கீங்க பழைய பதிவில் 25% சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது, இந்த ரெண்டு பதிவுக்கும் நடுவுல அறிவியல் ரொம்ப தூரம் போயிடுச்சா, இல்லை அத்தனை வருஷம் கழிச்சு நீங்க பதிவு போட்டீங்களா?!!
வாங்க மாப்ளே தாசு அது 25% தான், தட்டச்சின் போது நிகழ்ந்த பிழை,திருத்தி விடுகிறேன். நன்றிகள்.
Deleteகருப்பு பொருள் 25% கருப்பு ஆற்றல் 70%, அறிந்த பருப்பொருள் 5% என்பதே இபோதிய கருதுகோள்.
நன்றி!!
அரபுகளும் யூதர்களும் பங்காளிகள் கிடையாது .நமது பழைய பங்காளிகளே பங்காளிகள் [வங்காளிகள் ]
Deleteசகோ இப்பூ
Deleteவந்துட்டீங்களா!!
அப்பாடா!!.
என்ன சகோ இப்ராஹிமுக்கு(ஆப்ரஹாம்) இரு மகன்கள்,1. இஸ்மவேல் அரபு வம்சத்த்வர் இந்த வம்சத்தில்தான் நமது உயிரினும் மேலான அன்புக்குரிய இறுதி இறைத்தூதர் முகமது(சல்) அவர்களை உதித்தார்கள்,
2. இன்னொரு மகன் ஈசாக்கின் வழி வந்தவர்களே யூதர்கள்.
அப்போது யூதர்கள்,அரபுகள் பங்காளிகள்தானே!!
அப்புறம் நான் யூத கைக்கூலி,நீங்கள் அரபி(சவுதி) கைக்கூலி என்றால் நாம் இருவரும் பங்காளிதானே!!.ஆகவேதான் சகோ என மிக்க அன்புடன் அழைக்கிறேன்!!
சிந்திக்க மாட்டீர்களா!!
நன்றி!!
சகோ சார்வாகன்,
Delete//இப்படி ஒளியை ஈர்த்து வளையச்செய்யும் தன்மை உடைய இந்த நான்குவகை தன்மை பொருள்களிலும் அடங்காத வகைதான் கருப்பு பொருள்.இப்படிப்பட்ட பொருள்கள் 25% பேரண்டத்தில் இருக்கவேண்டும் என்பதே கணிப்பு .//
கண்ண மூடினா ஒளி தெரியனும். இது ஒருவகை ஆன்மிகம். இதுதான் எனக்கு தெரியும். மற்றபடி அறிவியலை உங்கள் பதிவின் மூலமாக புரிந்துகொள்ள முயல்கிறேன்.
நன்றி
Delete//கருப்பு ஆற்றல்
பேண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஒருவகை ஆற்றல் என்பதே இதன் வரையறுப்பு.//
//1.பேராண்டம் விரிவடைதலின் வேகம் அதிகரிப்பின் காரணியாக வரையறுக்கப்படுவது கருப்பு ஆற்றல் இது பேரண்டத்தில் 70% உள்ளது.
2.பரிசோதனைகளால் அறியப்படாத ஈர்ப்பு விசையின் காரணி கருப்பு பொருள்.இது பேரண்டத்தில் 25% உள்ளது.//
சகோ எனக்கு ஒரு சந்தேகம் பேரண்டம் என்பது பிரபஞ்சம் தானே? அதை முழுவதுமா ஆராய்ந்துவிட்டார்கள்? பின்ப எப்படி 70% 25% என்ற கணக்கு?
கருப்பு பொருள் என்று உண்மையில் இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது அந்த பொருளை அறிய அறிவியல் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று சொல்லலாம்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கு என்ன ஆதாரம்?சகோ
நன்றி
சகோ புரட்சிமணி,
Deleteஉங்கள் கேள்விகளில் உள்ள ஆர்வம்,தேடலின் உத்வேகம் எனக்குப் பிடிக்கிறது.
இயற்கையின் நிகழ்வுகள் எளிதானவை,இயல்பானவை.நான் இயற்கை என்கிறேன்,நீங்கள் இறைவன் என்கிறீர்கள். எனினும் அறிவியலை விள்க்கும் பொது இப்போதைய நடைமுறையில் ஏற்கப் பட்ட கொள்கைகள் சார்ந்தே பதில் அளிக்க முடியும்.ஆயினும் இயற்கை நிகழ்வுகளின் மீத்னான சான்றுகளின் விள்க்கமே அறிவியல் என்னும் போது பல் விள்க்கம் சாத்தியம். அதில் அதிகம் பொருந்துவதே நடைமுறைக்கு வரும்.
நான் அறிந்த்வரை உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்
1./சகோ எனக்கு ஒரு சந்தேகம் பேரண்டம் என்பது பிரபஞ்சம் தானே? அதை முழுவதுமா ஆராய்ந்துவிட்டார்கள்? பின்ப எப்படி 70% 25% என்ற கணக்கு?//
கிடைத்த தொலைநோக்கி ஒளி படிமங்கள்[பழைய கால் ஒளி] மூலம் காலம்,நகர்வு கணக்கீடுகள்,செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் பொருந்தும் விள்க்கம் .
இதுவும் இப்படி அள்வீடுகள் எடுக்க இயலும் பிரப்ஞ்சம். பிரபஞ்சம் முழுதும் நமக்கு தெரியாது!!.
அறிந்தது கொஞ்சம் அறியாதது மிக மிக.....அதிகம்!!!
Known universe!!
2.//கருப்பு பொருள் என்று உண்மையில் இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது அந்த பொருளை அறிய அறிவியல் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று சொல்லலாம்.//
மிக சரியான புரிதல். நியுட்டனின் விதியின் தவறுக்கு விடை ஐன்ஸ்டினின் விதி.
ஐன்ஸ்டினின் விதியின் தவறுக்கு விடை கருப்பு பொருளா இல்லை புதியா விதியா என காலம் பதில் சொல்லும்.
அனைத்தும் அளவீட்டு சான்றுகளின் மீதே கட்டப்படும் விதிகள் ஆகும்!!.
சான்றுக்கு முரண் ஆகும் விதி தூக்கி எறியப்ப்ட்டு புதிய விதி வருவதே இயல்பு!!
சான்றுகளின் எல்லை மீறும் போது புதிய விதி வரும்.
அல்லது சகோ உங்கள் பாணியில்!!
அத்ர்மம் எல்லை மீறும் போது அவதாரம் வரும் ஹி ஹி!!
**
3.//பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கு என்ன ஆதாரம்?சகோ //
இதற்கும் மேலே சொன்ன சாண்றுகள் குறிப்பாக சிவப்பு விலக்கம் எனப்ப்டும் அளவுகளே பிரபஞ்சம் விரிவடைவதை உறுதி செய்த்ன. நீங்கள் விரும்பினால் இதற்கு ஒரு பதிவு இடுகிறேன்.
http://en.wikipedia.org/wiki/Redshift
Red shifts are attributable to Doppler effect familiar in the changes in the apparent pitches of sirens and frequency of the sound waves emitted by speeding vehicles; an observed redshift due to the Doppler effect occurs whenever a light source moves away from an observer. Cosmological redshift is seen due to the expansion of the universe, and sufficiently distant light sources (generally more than a few million light years away) show redshift corresponding to the rate of increase of their distance from Earth.
நன்றி!!
//நீங்கள் விரும்பினால் இதற்கு ஒரு பதிவு இடுகிறேன்.//
Deleteநேரம் கிடைக்கும்பொழுது பதிவிடுங்கள். தங்கள் விளக்கத்திற்கு நன்றி சகோ
மாமு, கருப்பொருள் பூமியில் இருக்கா இல்லையா? பதில் சொல்லாமல் பம்பினால் மூஞ்சி மேல குத்துவேன்.............
ReplyDeleteமாப்ளே தாசு பூமியில் மட்டுமல்ல சூரியக் குடும்பத்தில் இருப்பதற்கே இதுவரை சாண்ருகள் இல்லை.ஏன் எனில் நியுட்டன்,ஐன்ஸ்டினின் விதிகளின் படி கணக்கிடப்படும் ஈர்ப்பு விசைக்கும்,அள்விடப்படும் விசைக்கும் வித்தியாசம் மிக ,மிக குறைவு.
Deleteமுதன் முதலில் ஈர்ப்பு விசையின் கணக்கீடு,அளவீடு வித்தியாசம் இல்லா சான்று எனில் இந்த ஃபெர்மி தொலை நோக்கியின் காமா கதிர்களின் மாறுபட்ட குவியல்களாகும்.
பதிவின் முதல் படம் பாருங்கள்!!!.
ஆகவே கருப்பு பொருளை இந்த தொலைநோக்கியின் காமா கதிர் அளவீடுகள் உறுதிப்படுத்தலாம், இல்லையேல் புதிய ஈர்ப்பு விசைக் கொள்கை வரலாம்!!
நன்றி!!!
\\பூமியில் மட்டுமல்ல சூரியக் குடும்பத்தில் இருப்பதற்கே இதுவரை சாண்ருகள் இல்லை.ஏன் எனில் நியுட்டன்,ஐன்ஸ்டினின் விதிகளின் படி கணக்கிடப்படும் ஈர்ப்பு விசைக்கும்,அள்விடப்படும் விசைக்கும் வித்தியாசம் மிக ,மிக குறைவு.\\ இங்க தான் பிரச்சினையே. நாம் இருப்பது மில்கி வே [Milky way] கேளக்ஷி. இதுவும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டம். அதெப்படி இதனுள் மட்டும் கரும்பொருள் இல்லாமல் போகும்? மற்ற கேளக்சிகளில் மையத்தில் இருந்து வெளியில் செல்லச் செல்ல விண்மீன்களின் வேகம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை, அதனால் தானே கரும்பொருள் இருக்கிறது என்றார்கள்? மில்கி-வே-யில் மட்டும் எதிர்பார்த்த அளவே குறைகிறதா? அல்லது சூரிய குடும்பத்தில் மட்டும் தனியாக கரும்பொருள் இர்ல்லாத இடமாப் போச்சா?
Deleteமாப்ளே தாசு,
Delete1. நியுட்டனின் விதியின் தவறுக்கு விடை ஐன்ஸ்டினின் விதிகள்.நியுட்டனின் விதி பூமியில் ஈர்ப்பு,இயக்கங்களை மிக சரியாக கணித்தாலும், பூமி தாண்டி சென்றால் த்வறு ஆகிறது. கணிப்புக்கும் அள்வீட்டுக்கும் வித்தியாசம். உம்ம பதிவு கூட வியாழன் நகர்வு கண்டுபிடிப்பதில் த்வறு என விள்க்கினீர் அல்லவா?
ஐன்ஸ்டினின் விதி காலக்சி தாண்டி[ ஒரு எ.கா விற்காக] சென்றால் ஈர்ப்பு விசை,நகர்வு கணிப்பதில் பிழை வருவதற்கு காரணி கருப்பு பொருளா,புதிய விதியா என்பதே இபோதைய ஆய்வு!!
ஆகவே இங்கு ஏன் கருப்பு பொருள் இல்லை எனக் கேட்பதை விட,இங்கு ஏன் [நியுட்டன்,ஐன்ஸ்டினின்]விதி சரியாகவும் தொலைதூரங்களில் பிழை தருவதும் ஏன் என்பதே சரியான கேள்வி!!
நன்றி!!
ஈர்ப்பு விசை இருமடியின் தலைகீழ் விகிதத்திலேயே தான் குறைய வேண்டுமா? ஏன் அது மும்மடிக்கு தலைகீழ் விகிதத்தில் குறையக் கூடாது? [அய்யய்யோ தலைகீழ் விகிதம் என்ற பதத்தை இரண்டு தடவை உபயோகப் படுத்திட்டேனே, அதற்க்கு காப்பிரைட்டு போட்டவரு சண்டைக்கு வந்திட்டா என்ன பண்றது மாமு??!! இருமடிக்குப் பதில் [ஐயப்பன் இருமுடி இல்லை!!] 1.5 மடி, 3,4,5, 5.5 எது வேண்டுமானாலும் இருந்திருக்கலாமே? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? அது ஏன் 2?
ReplyDeleteமாப்ளே தாசு,
Deleteகூலூம்ப்ஸ் ன் மின் காந்த ஈர்ப்பு கூட தூரத்தின் இருமடிதான். நியுட்டனின் ஈர்ப்பு விசையும் தூரத்தின்இருமடிதான்,பருங்கள் ஒரெ மாதிரி இருக்கும்.
ஆனால் ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதி தூரத்தின் இருமடிக்கு ஈர்ர்புவிசை எதிர்விகிதத்தில் இருப்பதை ஆமோதிக்கிறதா? சொல்லுங்கள் ஆதாரத்துடன். இன்னும் விவாதிப்போம்.
Kindly see this!
http://en.wikipedia.org/wiki/Two-body_problem_in_general_relativity
Thank you
மாமு சுட்டி பார்த்தேன், புரியவில்லை முடிஞ்சா ஒரு எளிய விளக்கம் தரவும். கூளும்ஸ் விதியில் 2 இல்லாவிட்டால் இடி விழும்போது metal enclosure உள்ளே இருப்பவனுக்கு Electrical ஷாக் பாதுகாப்பு இருக்காது, செத்திடுவான். அவனுக்கு ஒன்னும் ஆவதில்லை அதனால் ஈசிய நிரூபிக்கலாம். ஆனால் பொருளீர்ப்பு விசையில் எதைஎதையோ சொல்லி பம்மாத்து பண்றானுங்க. If possible pl give a simple explanation of the above.
Deleteசார்வாகன், கருப்பு பொருள், கருப்பு ஆற்றல் என்றால் என்னன்னு கொஞ்சமாவது புரியுது. ஆனால், நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிற இருமடி, மும்மடி எல்லாம் என்னன்னு சுத்தமா விளங்கலை :( . கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா? ஏற்கனவே, வேற பதிவில சொல்லபட்டிருக்குன்னா அந்த பதிவின் லிங்க் இருந்தா கொடுங்க ப்ளீஸ்.
Delete@Ganesan
Deleteஇருமடி என்றால் SQUARED என்று அர்த்தம். ஒரு பொருள் M நிறை இருந்தால், அதில் இருந்து R தொலைவில் இன்னொரு பொருள் m நிறையுடன் இருப்பின் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை= GMm/R^2. G= CONSTANT. இங்கே விசை R -ன் இருமடிக்கு தலைகீழ் விகித்தத்தில் குறைகிறது என்கிறோம். கரணம் R^2 [R SQUARED] பகுதியில் [DENOMINATOR] வருகிறது.
மாப்ளே,
Deleteநீங்கள் சொல்லும் இருமடி என்றல் ஸ்கொயர் என தெரியாத? நாமும் தமிழ் மூலம் படித்தவர்கள்தான்.
நான் சொல்வது நியுட்டனின் விதிப்படி ஈர்ப்பு விசை பொருள்களில் நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், தூரத்தின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் உள்ளது சரியா!! அதாவது.
F=G*m1*m2/r^2.
ஆனால் நியுட்டனின் விதிக்கு மாற்றாக வந்த ஐன்ஸ்டினின் விதியில் ஈர்ர்பு விசை எப்படி கண்க்கிடப்படுகிறது?
இது சுலபம் அல்ல,சிக்க்லான வகைக்கெழு சமன்பாடுகள்.அதற்கான சுட்டிகளே கொடுத்தேன். இவற்றை எளிமைப் படுத்தி ஐன்ஸ்டினின் விதி மூலம் ஈர்ப்பு விசை கண்க்கிடுதல் பற்றி ஒரு எ.கா கொடுத்து ஒரு பதிவு இட வேண்டும்.
see this!!!
http://physics.stackexchange.com/questions/2684/how-do-i-calculate-the-aparent-gravitational-pull-with-general-relativity
இதற்கு அதிக கணித அடிப்படை தேவை என்பதால் யோசிக்கிறேன்.
நன்றி!!
\நீங்கள் சொல்லும் இருமடி என்றல் ஸ்கொயர் என தெரியாத?\\ மாமு, கணேசன் தெரியலைன்னு கேட்டார்னு சொன்னேன், நீங்க ஏன் நடுவுல பூந்துக்கிட்டு கன்பியூஸ் பண்றீங்க?
Delete\\இதற்கு அதிக கணித அடிப்படை தேவை என்பதால் யோசிக்கிறேன்.\\ யாருக்கு? அதெல்லாம் பரவாயில்லை பின்னூட்டத்தில் போடுங்க.
சகோ கணெசன்,
Deleteமாப்ளே தாசு விள்க்கி விட்டார் என்றாலும் நாமும் கொஞ்சம் விளக்குவோம்.
1. மேலே எறியப்பட்ட பொருள் கீழே விழ புவி ஈர்ப்பு விசையே காரணம் என ஐசக் நியுட்டன் கண்டறிந்தார். இதே விசையே கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும். பிரபஞ்சத்தில் உள்ள வ்ண்மீன்கள்,காலக்சிகள் ஆகியவற்றின் இஅயக்த்திற்கு காரணம் என்றும் விள்க்கினார்.
இரு பொருள்கள் ஒன்றின் மீது ஒன்று ஏற்படுட்தும் ஈர்ப்பு விசையின் சூத்திரமாக நியுட்டன் கூறியது என்ன?
நியுட்டனின் விதிப்படி ஈர்ப்பு விசை பொருள்களில் நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், தூரத்தின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் உள்ளது சரியா!! அதாவது.
F=G*m1*m2/r^2.
2. பூமி தாண்டி ஈர்ப்பு விசை, இயக்கம் நியுடனின் விதி கொண்டு கணக்கிடும் போது பிழை வந்தது[அளவீடு,சூத்திரம் கொண்டு கண்க்கீடு வித்தியாசமே பிழை]
ஆகவெ மாற்றாக ஐன்ஸ்டின் விதி வந்தது.
3. காலக்சி தாண்டி ஈர்ப்பு விசை, இயக்கம் ஐன்ஸ்டினின் விதி கொண்டு கணக்கிடும் போது பிழை வந்தது, இபோது இருவாய்ப்பு
அ). அறியாப்[கருப்பு] பொருள் ஒன்று ஈர்ப்பு விசை அளிக்கிறது.
ஆ) ஐன்ஸ்டினின் விதிக்கு மாற்று தேவை!!
அவ்வளவுதான் சகோ.இந்த பதிவில் ஃபெர்மி தொலை நோக்கி இந்த விசை கண்க்கீட்டு பிழை தவிர வேறு ஒளி[காம்மா கதிர்] சான்று கொடுப்பதாக கூறி இத்ன மூலம் கருப்பு பொருளை நிரூபிக்க புது முயற்சிகள் தொடங்கி உள்ளன.!!
காலம் மட்டுமே பதில் சொல்லும்.
இதுதான் நடந்தது!!
நன்றி!!
நன்றி!!
மாப்ளே,
Deleteஒரு வகைக்கெழு சமன்பாட்டை[differential equation] பின்னூட்டத்தில் தீர்ப்பீரா,எளிமைப்படுத்தியே சூப்பர் கம்ப்யுட்டர் வைத்து தீர்க்கிறார்கள். நான் கொடுத்த சுட்டியை தமிழாக்கம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். படித்துப் பாரும். டென்சார் கால்சுலஸ்[முப்பரிமாண கணிதம்] அடிப்படை தேவை!!.
http://en.wikipedia.org/wiki/Tensor_calculus
In mathematics, tensor calculus or tensor analysis is an advanced extension of vector calculus to more general mathematical objects called tensor fields (tensors which change throughout space and with time).
Tensor calculus has many real-life applications in physics and engineering, including stress analysis, continuum mechanics, electromagnetism (see mathematical descriptions of the electromagnetic field), and general relativity (see mathematics of general relativity).
http://en.wikipedia.org/wiki/Mathematics_of_general_relativity
The mathematics of general relativity refers to various mathematical structures and techniques that are used in studying and formulating Albert Einstein's theory of general relativity. The main tools used in this geometrical theory of gravitation are tensor fields defined on a Lorentzian manifold representing spacetime
எனக்கு கொஞ்சம் தெரியும் என்றாலும், தமிழில் எளிதில் சொல்ல இன்னும் அதிக முயற்சி தேவை!!
ஐன்ஸ்டினின் வகைகெழு சமன்பாடுகளை தமிழில் எழுதுவது இலட்சியம் என்றாலும் எளிமையாக்க நம்மால் இன்னும் முடியவில்லை. முயற்சி தொடர்கிறது!!
This explanation is a very simple one!!
http://physics.stackexchange.com/questions/2684/how-do-i-calculate-the-aparent-gravitational-pull-with-general-relativity
நன்றி!
தாஸ். விளக்கத்திற்கு நன்றி!! உங்களின் கருப்பு பொருள் ஏன் பூமியில்/சூரிய மண்டலத்தில் இல்லை கேள்வி அருமை. அதற்கு சார்வாகனின் பதில் வந்தாலும் விடையில் ஏதோ ஒரு நெருடல் இருக்க தான் செய்கிறது.
Deleteசார்வாகன், என்னுடைய கேள்விக்கு உங்களின் மேல் விளக்கத்திற்கும் நன்றி. முழு பதிவின் சாரத்தை எளிமையாக அதேசமையம் சுருக்கமாகவும் சொல்லி இருந்தது ரசிக்கும்படி இருந்தது. "pithiness" அவ்வளவு சுலபமாக வருவதில்லை. உங்களுக்கு நன்றாக வருகிறது!!
\\உங்களின் கருப்பு பொருள் ஏன் பூமியில்/சூரிய மண்டலத்தில் இல்லை கேள்வி அருமை. அதற்கு சார்வாகனின் பதில் வந்தாலும் விடையில் ஏதோ ஒரு நெருடல் இருக்க தான் செய்கிறது. \\ அதுதான் இல்லை, அவர் வேற எதுக்கொதான் பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு, இந்த கேள்விக்கு பதில் சொல்ல வில்லை, டபாய்ச்சிட்டார்!! இப்போ நான் அவரு மூஞ்சி மேல குத்தவேண்டியது தான் பாக்கி!!
Deleteமாப்ளே தாசு,
Deleteபிரபுபாத பேராண்டி!!. யார் சொன்னது சரி என்பது படிப்பவர்களுக்கு புரியும்.
அதுவரைக்கும் கருப்பா இருப்பதெல்லாம் கருப்பு பொருள் என சொல்லும்!! ஹி ஹி
இப்படியே இருங்கோ !!! விளங்கிடும் நன்றி!!
மாமு, நான் என்ன நீங்க கப்சா விடுறீங்கன்னு எப்படியாச்சும் proof பண்ணனும்னு கங்கணம் கட்டிகிட்டி அலையுறேன்னு நினைச்சுட்டீங்களா?
Deleteஎனக்கு இப்பவும் அந்த சந்தேகம் இருக்கு, தீரவில்லை. கரும்பொருள் சூரிய குரும்பத்தில் இருக்கா இல்லையா? ஏன் என்பதற்கு காரணம் ஏற்கனவே சொல்லிட்டேன்:
***** நாம் இருப்பது மில்கி வே [Milky way] கேளக்ஷி. இதுவும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டம். அதெப்படி இதனுள் மட்டும் கரும்பொருள் இல்லாமல் போகும்? மற்ற கேளக்சிகளில் மையத்தில் இருந்து வெளியில் செல்லச் செல்ல விண்மீன்களின் வேகம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை, அதனால் தானே கரும்பொருள் இருக்கிறது என்றார்கள்? மில்கி-வே-யில் மட்டும் எதிர்பார்த்த அளவே குறைகிறதா? அல்லது சூரிய குடும்பத்தில் மட்டும் தனியாக கரும்பொருள் இர்ல்லாத இடமாப் போச்சா?*****
எனக்கு சந்தேகம் வந்துச்சு அதைத் தான் உங்க கிட்ட கேட்டேன். இதுக்கு நீங்க விடை குடுத்தீங்களா? தெரியலைன்னா தெரியளைன்னாவது சொல்லித் தொலைங்க, சும்மா நோண்ட மாட்டேன், அதை விட்டுட்டு என் மேல அபாண்டமா பலி சுமத்தக் கூடாது. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்களே!!
நீங்க சிந்திக்கவே மாட்டீங்க போலிருக்கு!!
ReplyDeleteDear Das Kindly see this!!
http://en.wikipedia.org/wiki/Linearized_gravity
Linearized gravity is an approximation scheme in general relativity in which the nonlinear contributions from the spacetime metric are ignored, simplifying the study of many problems while still producing useful approximate results.
**
http://en.wikipedia.org/wiki/Classical_theories_of_gravitation
Alternatives to general relativity are physical theories that attempt to describe the phenomena of gravitation in competition to Einstein's theory of general relativity.
There have been many different attempts at constructing an ideal theory of gravity. These attempts can be split into four broad categories:
Straightforward alternatives to general relativity (GR), such as the Cartan, Brans–Dicke and Rosen bimetric theories.
Those that attempt to construct a quantized gravity theory such as loop quantum gravity.
Those that attempt to unify gravity and other forces such as Kaluza–Klein.
Those that attempt to do several at once, such as M-theory.
Thank you
சார்வாகன் ,////அப்புறம் நான் யூத கைக்கூலி,நீங்கள் அரபி(சவுதி) கைக்கூலி என்றால் நாம் இருவரும் பங்காளிதானே!!.ஆகவேதான் சகோ என மிக்க அன்புடன் அழைக்கிறேன்!!///
ReplyDeleteஉங்களை நான் யூத கைக்கூலி என்று சொல்லியிருக்கேனா?
எனக்கு அரபு நாடு ஒன்றும் தரவில்லையே ,எனது பையன் பைலட் பயிற்சி முடித்து வேலை இல்லாமல் இருக்கிறான் அதற்கு கூட ஓரிரு அரபுகளிடம் முயற்சி செய்தும் பெப்பே காட்டிவிட்டானே ,பிறகு எங்கிருந்து கைகூலி கிடைக்க போகிறது
நீலப்படம் பார்த்தாலே கண்ணைக் கட்டுதே!யப்பே இரட்டை வசனமா தெரியுதே!நான் பெர்மியை சொன்னேன்:)
ReplyDeleteஹாலிவுட் ஜிம்மிக்ஸை விட வந்தால் லாரி இல்லைன்னா மசுருன்னு தன் நீண்ட தலைமுடியால் அந்தக் காலத்து நடிகர் ஆனந்தன் உடல்வாகில் ஒருவர் லாரி இழுத்ததை பார்த்த அனுபவம் எனக்குண்டு.
சகோ.இப்ராஹிம் ஷேய்க் முகமது!கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் பொதுவில் ஒருவர் பிரச்சினை சார்ந்த கருத்துக்கள் வெளியாகும் போது கருத்து பகிர்வது நல்லதென நினைக்கின்றேன்.
ReplyDeleteஉங்கள் மகனை பைலட் வரை உயர்த்தியதற்கு வாழ்த்துக்கள்.பொதுவாக பைலட் பயிற்சியாளர்கள் எவ்வளவு பறந்திருக்கிறார்கள் என்ற தகுதியின் அடிப்படையிலேயே கோ பைலட்டுகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் குறிப்பாக மும்பாய் போன்ற இடங்களில் பயிற்சி வகுப்புக்கள் நிகழ்கின்றன.கூடவே மெம்பராக உள்நுழைவு தேவை.இந்தியாவில் முதலில் முயற்சி செய்வது நல்லது.அரேபிய ஷேக்குகள் மட்டுமல்ல உலக அளவில் பயணம் செய்வது பின்புதான் இயலும்.
9/11 உலகம் சார்ந்த பரந்த நோக்கில் உருவாகும் விளைவுகள் ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்பதையும் உங்கள் பின்னூட்டம் மூலம் அறிகிறேன்.
இன்று இல்லாவிட்டாலும் நாளை இந்தியாவில் பைலட் பதவி உங்கள் மகனுக்கு கிட்டும் சாத்தியங்கள் இருக்கின்றன.முயற்சியை கை விட வேண்டாம்.