Saturday, March 23, 2013

பேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது!!!



\
This image unveiled March 21, 2013, shows the cosmic microwave background (CMB) as observed by the European Space Agency's Planck space observatory. The CMB is a snapshot of the oldest light in our Universe, imprinted on the sky when the Universe was just 380 000 years old. It shows tiny temperature fluctuations that correspond to regions of slightly different densities, representing the seeds of all future structure: the stars and galaxies of today.
CREDIT: ESA and the Planck Collaboration 

வணக்கம் நண்ப‌ர்களே,

நாம் வாழும் பூமி, பேரண்டத்தில் மிக மிக...மிக சிறிய பகுதி என்பதை அறிவோம். ஏற்கெனெவே ஒரு பதிவில் பேரண்டத்தின் வயதை எப்படி கணக்கிடுவது என அறிந்தோம்.



அதன்படி நமது பேரண்டத்தின் வயது 1370 கோடி ஆண்டுகள் என கணக்கிடப் பட்டு இருந்தது.அறிவியல் என்பது தொடர்ந்த அளவீட்டு சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்பதை ,அது குறித்து கற்கும் போது மன‌தில் கொள்வது மிக அவசியம்.புதிய சான்றுகளின் மீது ஏற்கெனவே உள்ள கணிப்புகள் பரிசோதிக்கபட்டு, அவசியம் எனில் விள‌க்கங்கள் மாற்றியமைக்கப் படும்.

அறிவியலின் இத்தன்மைதான் அதனை உறுதிப் படுத்துகிறது. சென்ற வாரம் பேரண்டம் தோன்றியது இன்னும் 8 கோடி வருடங்களுக்கு முன் எனக் கூறுகிறார்கள். அதாவது இபோதைய பேரண்டத்தின் வயது சான்றுகளின் படி 1370+10=1380 கோடி ஆண்டுகள் அல்லது 13.82 பில்லியன் ஆண்டுகள்[தோராயமாக].


பேரண்ட விரிவடைதல் என்பதும் பரிணாமம் போல் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வு ஆகும். பரிணாம சான்றுகள் உயிரினப் படிம‌ங்கள் போல், பேரண்ட அக்கால நிலை கணக்கிட ஒளிப்படிமங்கள் கொண்டே கணக்கிடுகிறார்கள்.

முதலில் தொலை நோக்கி கொண்டு விண்மீன் திரட்சிகளின்[galaxy] நகரும் வேகம் ,சிவப்பு விலக்கம் கொண்டு கண்க்கிட்டவர்கள் இப்போது துணைக்கோள்களின்[sattelite] உதவியுடன் எடுக்கப்படும் பழைய ஒளிப்படிம‌[fossilized light] புகைப்படங்கள் மூலம் முந்தைய பேரண்டம் எப்படி இருந்தது எனக் கணக்கிடுகிறார்கள்.

காஸ்மிக் நுண்ணலை பின்புலத்தை[Cosmic Microwave Background  கணக்கிடும் வகையில் இந்த புகைப் படங்கள் எடுக்கப்படுகின்றன.

ப்ளான்க் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்களின் மூலம் 380,000[சுமார் 4 இலட்சம்] ஆண்டுகள் முந்தைய பேரண்டத்தின் நிலை அறிய முடிந்தது. இது ப்ளான்க் விண்கலம் பற்றிய விக்கி சுட்டி.  


On 21 March 2013, the European-led research team behind the Planck cosmology probe released the mission's first all-sky map of the cosmic microwave background.[17] The map suggests the universe is slightly older than thought. According to the map, subtle fluctuations in temperature were imprinted on the deep sky when the cosmos was about 370,000 years old. The imprint reflects ripples that arose as early, in the existence of the universe, as the first nonillionth (10-30) of a second. Apparently, these ripples gave rise to the present vast cosmic web of galaxy clusters and dark matter. The team estimates the universe to be 13.798 ± 0.037 billion years old, containing 4.9% ordinary matter, 26.8% dark matter and 68.3% dark energy.[18] Also, the Hubble constant was measured to be 67.80 ± 0.77 (km/s)/Mpc.

இந்த புகைப்படத்தின் மீதான ஆய்வுகள் பேரண்ட வயதை சிறிது அதிகப்படுத்தியது[13.798 ± 0.037 billion years].

கருப்பு ஆற்றலின் அளவைக் குறைத்து[68.3%],கருப்பு பொருளின்[26.8%] ,அறிந்த பொருளின்[4.9%] அளவு வீதங்களை சிறிது மாற்றியுள்ளன.

இதெல்லாம் எப்படி எனில் புகைப்படம் என்பது காஸ்மிக் நுண்ணலைகளின் அலைநீளம் சார்ந்த கணக்கீடுகளின் அடிப்படையில்தான்.

சரி இதுகருப்பு பொருள்,கருப்பு ஆற்றலை உறுதிப்படுத்தி இருக்கிறது என சொல்ல முடியுமா? என்றால் , மீண்டும் மீண்டும் அறிவியல் என்பது "தொடர் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்" என்பதை ஞாபகத்தில் இருத்தவும்.கருப்பு பொருள்&ஆற்றல் குறித்த நம் முந்தைய பதிவு.


ஐன்ஸ்டினின் விதிகள் அடிப்படையில் ஏற்படும் பிழையின்  காரணி கருப்பு பொருள்,கருப்பு ஆற்றல் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த விளக்கம் என்பதால் இதுகுறித்து தெளிவாக இப்போது சொல்ல முடியாது.

இந்த 380,000 ஆண்டு பேரண்டத்தின் புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்டதில் மிகப் பழமையானது ஆகும். இன்னும் இதுகுறித்த மேலதிக தகவல் கிடைத்தால்[ஆய்வுக் கட்டுரைகள்] நம் தளத்தில் பகிர்ந்து விவாதிப்போம்!!!

நன்றி!!!

4 comments:

  1. இப்போதைக்கு பேரண்டத்தின் வயது 1380 கோடி ஆண்டுகள் என்று நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராபின்,

      இன்ஸா அல்லாஹ்

      நன்றி!!!

      Delete
  2. மாமு இதுவே குத்து மதிப்பு, இதுல அக்கியூரசி வேறயா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாப்ளே தாசு,
      குத்துக்கு மதிப்பு இருக்கா? ஹி ஹி!!

      இப்படித்தான் தட்டுத் தடுமாறி கிடைக்கும் சான்றுகளை வைத்து, விளக்கம் கொடுத்து போய்க் கொண்டே இருப்பதுதான் அறிவியல்!!

      பெரிய அளவில் பேரண்டம் தேடும்போதும் ,மிகசிறிய அளவில் அணுவின் உள் நோக்கும்போதும் சான்று கிடைப்பது அரிதாகிறது!!!

      சான்று பெறும் தொழில் நுடபம் சார்ந்தே சான்று கிடைக்கும் நிகழ்த்கவு!!!

      சான்றின் மீது மட்டுமே அறிவியல் வளரும்!!!

      " அன்றே கூறினார் ஆண்டவன் " என்றெல்லாம் சொல்லவே முடியாது!!!

      ஒருவேளை பரிணாமத்திற்கு எதிரான ஆதாரம்,சான்று கிடைத்தாலும் அதனைப் [தமிழில்]பதிவிடுவதில் நாமே முதல் ஆளாக இருப்போம்!!!


      நன்றி!!!

      Delete