இப்போதைய பேரண்டவியலில்
அறிவியலில் ஏற்றுக் கொள்ள்ப்பட்ட கொள்கையாக்கம் "அதிகரிக்கும்
வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்" என்பதுதான். பேரண்டத்தின் விரிவடையும் வேகம் அதிகர்ப்புக்கு
காரணம் அதில் உள்ள கருப்பு பொருள் என்னும் கொள்கையாக்க விளக்கம்,ஆய்வுகளுக்கு 2011 இயற்பியல் நோபெல் பரிசும் வழங்கப்பட்டது.
சரி கருப்பு ஆற்றல்& கருப்பு பொருள் என்றால் என்ன?
மேலே குறிப்பிட்ட சுட்டியின் தமிழாக்கம் அளிக்கிறோம். 90களின்
தொடக்கத்தில் பேரண்டம் விரிவடைவது குறித்து அறிவியலில் ஒருமித்த கருத்தாக்கம் ஏற்கப்பட்டது. அது சார்ந்து இந்த பேரண்டம்
எவ்வளவு காலம் விரிவடையும்?அதற்கு ஒரு எல்லை உண்டா என்பதும் விடையளிக்க முற்பட்டனர்.
இரு வாய்ப்புகள்
1.ஒரு அள்வு விரிவாக்கதின் பின் பேரண்டத்தின் ஆற்றல் அடர்த்தி
அதனை மீண்டும் சுருங்க வைக்கும் அள்வு இருக்க்லாம்.
அல்லது
2.அதன் ஆற்றல் அடர்த்தி மிக குறைவாக இருந்து பேரண்டம் எப்போதும்
விரிவடைந்து கொண்டே இருக்கலாம்.
இரண்டு வாய்ப்புகளிலும் கால்ப்போக்கில் விரிவடையும் வேகம்
ஈர்ப்பு விசையால் குறைய வேண்டும் என்பது கணிப்பு. ஆனால் விரிவடையும் வேகம் குறைவாதாக்
பரிசோதனை அள்வுகளில் தெரியவில்லை. இப்பேரண்டம் முழுதும் பருப்பொருள்[matter] உள்ளது ஈர்ப்பு விசை என்பது
அனைத்தையும் இழுக்கிறது. ஈர்ப்பு விசை என்பது ஒன்றை நோக்கிய மற்றொன்றின் பரஸ்பர இழுப்பு
மட்டுமே இது விலக்கு விசை அல்ல என்பதை புரியவேண்டும்.
1998ல் ஹூபில் தொலை நோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வு அள்வுகள் தூரத்தில் உள்ள வெளித்
திரள்களின் நடசத்திரவெடிப்பு(சூப்பர் நோவா)களின் விலகும் வேகத்தை கண்க்கிட்டது.
இப்போதைய வேகத்தை விட கடந்த காலத்தில் பேரண்டம் குறைவான்
வேகத்தில் விரிவடைந்தது என்பதுதான் இந்த பரிசோதனையின் முடிவு.
இந்த விரிவடைதலின் வேக அதிகரிப்பை எப்படி விள்க்குவதென்ற
முயற்சியில் மூன்று கருதுகோள்களை முன் வைக்கின்றனர்.
1.ஐன்டினின் ஈர்ப்புவிசை மற்றும் அண்டவியல் மாறிலி சார்ந்த
விளக்கம்.
2. பேரண்டம் முழுதும் ஒரு அறியா திரவம்
போன்ற பருப்பொருள் நிறைந்து உள்ளது.
3. ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசைக் கொள்கை
தவறு மாற்றுக் கொள்கை தேவை.
இதன் விடை இன்னும் சரியாக அறியப்படவில்லை எனினும் இப்படி
விரிவடையும் வேகம் அதிகரிப்பின் காரணம் எது என்ற கேள்விக்கு விடையாக கருப்பு ஆற்றல் என வரையறை செய்தனர்.
கருப்பு ஆற்றல்
பேண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஒருவகை
ஆற்றல் என்பதே இதன் வரையறுப்பு.கடவுளை அறிய முடியுமா என்றால் அறிய முடியாததுதான் கடவுள்
என்ற குழப்பமான மதவாதிகள் விளக்கம் போல் உள்ளதா.மன்னிக்கவும்
அறிவியலின் வரையறுப்பு இதுதான்.
அறிவியலின் வரையறுப்பை நினைவு கூற வேண்டுகிறேன். இயற்கையின் நிகழ்வுகளை விளக்குவதே
அறிவியல்.இயற்கை நிகழ்வுகளை அதன் காரணிகளாக
பகுத்து ,அவற்றுக்கு இடையே தொடர்புகளை நிறுவுவதும் ,அதன் மூலம் கணிக்கும் விடயங்களை ஆய்வுரீதியாக்
உறுதிப்படுத்துவதும் இதன் அங்கங்கள் என அனைவரும் அறிவோம்.
இங்கு இயற்கை நிகழ்வான பேரண்ட விரிவடைவின் வேகம் அதிகரித்தல்
உறுதி செய்யப்பட்ட உண்மை என்வே கொள்ளலாம்.
பேரண்டத்தின் விரிவடையும் வேகம் குறையாமல் அதிகரிப்பதின்
காரணியாக கருப்பு ஆற்றல் என்ற ஒன்று இருக்க
வேண்டும் என்ற கருது கோளின் படி இந்நிகழ்வு விளக்க ஏதுவாக உள்ளது.எனினும் இதன் மூலம்
கணிக்கபடும் விடயங்கள் ஆய்வு ரீதியாக் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இது முழுமையாக்
ஏற்கப்படும்.
பேரண்டத்தில் 70% கருப்பு ஆற்றலும் 25% கருப்பு பொருளும் இருப்பதாக
கணிக்கப்பட்டு உள்ளது.மீதம் உள்ள 5%
தான் அனைத்து
வெளித்திரள்களும்[galaxy],விண்மீன்கள்[stars],கோள்கள் சேர்ந்த அளவு.அதில் பூமி ஒரு தூசி.
ஆகவே நாம் அறிந்த பேரண்டம் மிக சிறிய அளவு மட்டுமே.சில
அறிவியலாளர்கள் இந்த கருப்பு ஆற்றலை வெற்றிடத்தின் ஒரு தன்மையாகவும் வரையறுக்கிறார்கள்.
வெற்றிடம் என்பது உண்மையில் சூன்யம் அல்ல என்ற் கருத்தை முதலில் வெளியிட்டவர் ஐன்ஸ்டின்.
வெற்றிடம் அதன் அளவை அதிகரிக்க முடியும் என்பதை அதன் தன்மையாக வரையறுத்தார் ஐன்ஸ்டின்
அதாவது அறிவியலில் உள்ள கருதுகோள்கள் பெரும்பாலானவை தத்துவம்
போலவே இருக்கும். ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதி கொள்கையாக்கத்தில் அண்டவியல் மாறிலி[cosmological constant] என்று ஒன்று உண்டு.இது பற்றி ஒரு தனிப் பதிவு இட்டு
விடுவோம்.
வெற்றிடத்தில் ஆற்றலும் இருக்கும் என்பது ஐன்ஸ்டினின்
இன்னொரு கணிப்பு.
ஐன்ஸ்டினின் முதல்
கணிப்பின்படி வெற்றிடம் விரிவடையும் போது அதன் ஆற்றலும் அதிகம் தோன்றுகிறது.இந்த ஆற்றல்
வெற்றிடத்தை அதிகரிக்கும் வேகத்தில் விரிக்க
,விரிவடைதலின் எல்லை அண்டவியல் மாறிலியின்
அளவின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
இந்த கருப்பு ஆற்றலின் இன்னொரு விள்க்கம் குவாண்டம் பருப்பொருள்
கொள்கையாக்கதின் அடிப்படையில் ஆனது.அதாவது வெற்றிடம் என்பதில் பல பருப்பொருள்கள் தோன்றுவதும்,மறைவதும் மிக இயல்பான விடயம்.அப்ப்டி
உள்ள வெற்றிடத்திற்கும் கணிக்கப்பட்டகருப்பு ஆற்றலுக்கும் தொடர்பினை கண்க்கிட்டு பார்த்த
போது தவறு அதிகம் வந்ததால் இதனை கைவிட்டு விட்டார்கள்.
இன்னொரு விளக்கமான் ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசை கொள்கை முற்று முழுதும் த்வறு
இதற்கு மாற்றுக் கொள்கை கண்டுபிடிக்கப்படவேண்டும்.இது பேரண்டம் விரிவடைகிறதா என்பதையே
சந்தேகத்திற்கு உள்ளாக்கும். ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசை கொள்கை சூரிய குடுப்பம்,வெளித்திரள் ஆகியற்றின் இயக்கங்களை
மிக சரியாக் விள்க்குவதால் மாற்றுக் கொள்கைக்கு இந்த இயக்கங்களையும் விள்க்கி ,விரிவடைதலின் வேகம் அதிகரித்தலையும்
விள்க்க வேண்டிய தேவையும் உள்ளது.
ஆகவே கருப்பு ஆற்றல் என்பது வெற்றிடத்தின் தன்மையா? ,ஒரு அறியா பருப்பொருளா? அல்லது
மாற்று ஈர்ப்பு விசைக் கொள்கை தேவையா? என்பதில் ஏதேனும் ஒன்றின் மூலம் விடையளிக்கப்படலாம்.இப்போதைக்கு
விடை தெரியா கேள்வி.
கருப்பு பொருள்
இதை பற்றியும் ஒன்றும் தெரியாது.பேரண்டத்தில் பார்க்க
முடியாத பல பருப் பொருள்கள் உள்ளன.நமது பேரண்டத்தில் 25% கருப்பு பொருள் உள்ளது என்பதை ஏற்கென்வே குறிப்பிட்டோம்.
கருப்பு பொருள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட என்னவாக
இருக்கமுடியாது என்பதை அறிவியல் தெளிவாகவே வரையறுக்கிறது.
[நாமும் இதே போல் கடவுள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட
என்னவாக இருக்கமுடியாது அடித்துக் கூற இயலும்.]
இப்படி கருப்பு பொருள் என்னவாக் இருக்க முடியாது என்ற வரையறைகள்
1. விண்மீன்கள்,கோள்கள் போல் கண்ணுக்கு தெரிவது
இல்லை.இப்படி கண்னுக்கு தெரியாத பொருள்கள் 25% இருந்தாகவேண்டும் என பரிசோதனைகள்
கூறுகின்றன.
2.கண்னுக்கு தெரியாத, ஆனால் பரிசோதனையில் கண்டுபிடிக்கக்கூடிய
பேரியான் போன்ற அணு துணை துகள்களால் ஆன பருப்பொருள்களும் அல்ல.இவைகளை வெப்பக் கதிவீச்சு
உள்வாங்குதலின் மூலம் கண்டறிய முடியும்
3.கருப்பு பொருள் எதிர் பருப்பொருள் அல்ல. பருப்பொருள் எதிர்
பருப்பொருளுடன் இணைந்தால் காமா கதிர்கள் வெளிப்படுவதை உணர முடியும்.
4.இது
கருந்துளையும் அல்ல.கருந்துளைகளை பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.எப்படி எனில்
இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஒளியை ஈர்த்து வளையச்செய்யும் தன்மை உடைய
இந்த நான்குவகை தன்மை பொருள்களிலும் அடங்காத வகைதான் கருப்பு பொருள்.இப்படிப்பட்ட பொருள்கள்
25% பேரண்டத்தில் இருக்கவேண்டும் என்பதே
கணிப்பு .
மேலே சொன்னது எதுவுமே புரியவில்லை என்றாலும் கவலையில்லை.நம்
பாணி ஒரு வரி விள்க்கம்!
1.பேராண்டம் விரிவடைதலின் வேகம் அதிகரிப்பின் காரணியாக வரையறுக்கப்படுவது
கருப்பு ஆற்றல் இது பேரண்டத்தில் 70% உள்ளது.
2.பரிசோதனைகளால் அறியப்படாத ஈர்ப்பு விசையின் காரணி கருப்பு
பொருள். இது பேரண்டத்தில் 25% உள்ளது.
இதைதான் கட்டுக் கதை என்று குறிப்பிடுகிறீர்களா என்றால்
இல்லை.கடந்த சில வாரங்களுக்கு முந்தைய ஒரு செய்தி குறித்தே பதிவு எழுத விரும்பினேன்.நாம்
ஒரு பதிவு எழுதும் போது அது முழுமையாக இருக்க வேண்டும் என்பதல் கருப்பு ஆற்றல்&
கருப்பு பொருள் பற்றியும்
எளிமையாக விள்க்க வேண்டியதாயிற்று.
சரி செய்திக்கு செல்வோம்.
Serious Blow to Dark
Matter Theories? New Study Finds Mysterious Lack of Dark Matter in Sun's
Neighborhood
ஐரோப்பிய லா சில்லா சதர்ன் ஆயவக்த்தில்[European Southern Observatory's La Silla Observatory] உள்ள சக்தி வாய்ந்த MPG/ESO 2.2-metre தொலைநோக்கி மூலம நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்ட 13,000
ஒளிவருடங்கள் தூரம்
உள்ள விண்மீன்களின் இயக்கங்கள் கண்டறியப்பட்டன. இந்த புதிய தகவல்கள் அடிப்படையில் சூரியனுக்கு
அருகில் உள்ள இடத்தின் எடை ,கன பரிமாணத்தின் அடிப்படையில்
கண்டறியப்பட்டது.இந்த கன்பரிமாணமானது இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்ட அள்வைகள் போல்
4 மடங்கு ஆகும்.
இபோது அறியப்பட்ட பருப்பொருள்களின விண்மீன்கள், காற்று,தூசி
முதலியைவை தவிர்த்த எடை கருப்பு பொருளின் எடையாக இருக்கும் என்பதே கருத்தாக்கம்.
"The amount of mass that
we derive matches very well with what we see -- stars, dust and gas -- in the
region around the Sun," says team leader Christian Moni Bidin
(Departamento de Astronomía, Universidad
de Concepción , Chile ).
ஆனால் மிச்சம் மீதி எடை மிக மிக குறைவு.அதாவது இல்லை என்றே
கூறிவிடலாம்.இதுதான் அங்கே நிகழ்ந்தது.
சரி இத்னால் கருப்பு பொருள் என்பதே இல்லை என்று கூற முடியாது
என்றாலும், சூரியனுக்கு அருகில் உள்ள அளக்கப்பட்ட இடத்தில் இல்லை என்ப்து உறுதி.கருப்பு பொருள்
பூமியை ஊடுருவி செல்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையிலும் பல சுரங்க ஆய்வகங்கள் நிறுவப்ப்ட்டு
அத்னை உண்ர முடியுமா எனனும் ஆய்வுகளிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
சரி இதெல்லாம் 5% பேரண்டத்தில் ஒரு சிறு பகுதியில்தானே
ஆய்வு செய்து இருக்கிறோம்.இந்த 5% தாண்டி ஆய்வுகள் நிகழும் போது மட்டுமே உறுதியாக கூற இயலும்
என்றாலும் இதிலும் கருப்பு பொருள்&ஆற்றல் கொஞ்சமாவது கண்டறிந்தால்
மட்டுமே இது இருப்பதன் சாத்தியம் உண்டு.
5% அறியப்பட்ட பேரண்டத்திலும் கருப்பு பொருள் அல்லது கருப்பு
ஆற்றல் கொஞ்சமாவது உணரப்பட முடியும் என்ற தேடல் தொடர்கிறது.
காணொளியில் கருப்பு பொருள் ,கருப்பு ஆற்றல் பற்றி அருமையாக விளக்குகிறார்கள் கண்டு
களியுங்கள்!.
நன்றி
Thanks google
எனக்கு ஒரு தகவல் இன்னும் விளங்கவில்லை, வெளித்திரள்கள் மோதல் (galaxies collapse) என்கிறார்கள், ஒவ்வொரு வெளித்திரளும் ஒவ்வொரு வினாடியும் 70 கிமீ வரை விலகிச் செல்லும் போது மோதல் என்பதற்கான வாய்ப்புகள் வெடிப்பு மையத்திலிருந்து தொலைவில் உள்ள வெளித்திரள் மெதுவாகவும், அதன் கீழுள்ளவை வேகமாகவும் நகர்ந்தால் தான் வாய்ப்பே. மற்றபடி பக்கங்களில் இருப்பவை எப்படி மோதிக் கொள்ளும் என்றே தெரியவில்லை. பேரண்டம் தடிமனான தட்டை வடிவம் என்னும் போது கீழிருந்து மேலே உள்ள வெளித்திரள்கள் ஒன்றில் ஒன்றை மோதுகின்றன என்றும் சொல்லப்படவில்லை. குழப்பமாக இருக்கிறது.
ReplyDelete//5% அறியப்பட்ட பேரண்டத்திலும் கருப்பு பொருள் அல்லது கருப்பு ஆற்றல் கொஞ்சமாவது உணரப்பட முடியும் என்ற தேடல் தொடர்கிறது.//
இரவில் இருந்து பகலையும் பகலில் இருந்து இரவையும் பிரித்தோம் என்று எங்கள் பூனையார் மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது, இதிலிருந்து தெரிவது என்ன ? இரவு என்றால் கருப்பு, கருப்பு என்பது கருப்பு ஆற்றல், இதைத்தான் பூனையார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். சிந்திப்பவர்களுக்கு அதில் நற்சான்று இருக்கிறது.
வாங்க சகோ கோவி
ReplyDeleteGalaxies collapse என்றால் வெளித்திரல் ஒரு கருந்துளையாக மாறுவதோ அல்லது கருந்துளையால் மு ற்று முழுதாக உள்ளே இழுக்கப்படுவது என பொருள்கொள்ளலாம்.எனினும் நீங்கள் வெளித்திரல் மோதல்[galaxy collision] என்றே குறிப்பிட்டதால் அதனையே விள்க்க முயல்கிறேன்.
வெளித்திரல் மோதல்[galaxy collision] என்பது குறித்த விக்கிபிடியா சுட்டி
http://en.wikipedia.org/wiki/Interacting_galaxy
.இதில் என்ன கூறுகிரார்கள் என்றால் இரு அல்லது அதற்கு மேற்பட்ட வெளித்திரல்கள் அவைகளின் ஈர்ப்பு விசையானது விரிவடையும் ஆற்றலைவிட அருகில் வரும் போது அவை இணைந்து விடலாம். மோதல் என்பதை விட ஒன்று படுதல் என்றே குறிப்பிடுகிறார்கள்.இது பல பில்லியன் ஆண்டுகள்க்கு ஒருமுறை நடைபெறும் வாய்ப்பு என்றே கூறுகிறார்கள்.
Interacting galaxies (Colliding galaxies) are galaxies whose gravitational fields result in a disturbance of one another. An example of a minor interaction is a satellite galaxy's disturbing the primary galaxy's spiral arms. An example of a major interaction is a galactic collision.
நமது பால்வீதி மண்டலமும் இன்னொரு வெளித்திரலோடு இணையலாம் என கணிக்கிறார்கள்.
Astronomers have estimated that our galaxy, the Milky Way galaxy, will collide with the Andromeda galaxy in about 4.5 billion years. It is thought that the two spiral galaxies will merge to become an elliptical galaxy.[2][3]
உங்களின் கேள்வி என்ன எனில் எப்படி மோதல் ஏற்படும் வாய்ப்பு என்றுதானே கேட்கிறீர்கள். சரியாக வடிவமைக்கப்பட்டு இருந்தால் மோதல் நிகழாது,இது ஒருவகை சீரற்ற விரிவடைவு என்பதால் அனைத்து வெளித்திரல்களும் ஒரே வேகத்தில் ஒன்றுக்கொன்று ஈர்ர்பு விசையால் பாதிக்காத அள்வில் செல்லும் என்பதற்கு எந்த உறுதி மொழியும் இல்லை.
நம் பதிவில் கூட சொல்ல மறந்த ஒரு விடயம்.பாருங்கள் பெருவெடிப்பில் இருந்து கொஞ்ச நேரம் ஒளியை விட அதிகமான வேகத்தில் விரிவடைந்தது பேரண்டம.பிறகு 5 பில்லியன் ஆண்டுவரை வேகம் குறைந்த விரிவாக்கம்,பிறகு அப்போது இருந்து இப்போது வரை அதிகரிக்கும் வேக விரிவாக்கம்.இப்படி நிகழும் போது வெளித்திரல்கள் மோதும் வாய்ப்ப்பு உள்ளதென்றே கருதலாம்.
உங்கள் கேள்விக்கு விடைக்கான பல வாய்ப்புகளையும் சைன்டிஃபிக் அமெரிக்கனில் அலசுகிறார்கள்.பாருங்கள்.
http://www.scientificamerican.com/article.cfm?id=how-can-galaxies-collide
நன்றி
அண்டம் விரிவாக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கட்டுரை மூலம்,(நான் கொமண்டைங்ஞ்சம் மரக) ஓரளவு புரிந்துகொண்டேன். (நான் கொமண்டைங்ஞ்சம் மரக) நல்ல அறிவியல் விஷயங்களை அழகான தமழில் சொல்கிறீர்கள். சுஜாதாவின் கட்டுரைகளை படிப்பது போல் உணர்கிறேன்.தொடர்க உங்கள் பணி
ReplyDeleteஅண்டம் விரிவாக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கட்டுரை மூலம், ஓரளவு புரிந்துகொண்டேன். (நான் கொஞ்சம் மர மண்டைங்க) நல்ல அறிவியல் விஷயங்களை அழகான தமழில் சொல்கிறீர்கள். சுஜாதாவின் கட்டுரைகளை படிப்பது போல் உணர்கிறேன்.தொடர்க உங்கள் பணி
ReplyDeleteகொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் வகுப்பை விடறதாயில்ல:)
ReplyDeleteநமது புரபெஸர் இரண்டு நாட்கள் வரவில்லை என்றால் ஒரு மாணவர் கூட்டமே அவர் பின்னால் நிற்கிறதே!!!
ReplyDeleteவாங்க சகோ இராஜநடராஜன்,
ReplyDeleteநலமா!
இதில் என்ன தடுமாற்றம் அறிவியலாளர்கள் கருபு ஆற்றல்,கருப்பு பொருள் என்பதை விரிவடைதலின் வேக அதிகரிப்பு,புலப்படாத ஈர்ப்பு விசைக்கும் காரணியாக காட்ட முயற்சிக்கிறார்கள்.இதுவரை பலன் ஏதுமில்லை அவ்வளவுதான்.
&&&&&&&&&
நிறைய பேச வேண்டும் என்றே நெஞ்சம் விரும்புகிறது எனினும் ஈழத் தமிழர் வாழ்வு வல்லரசுகளின் அரசியல் போட்டி ஆகிவிட்ட நிலையில் நம் வாழ்வை நாம் முடிவெடுக முடியாது என்பதே கசப்பான உண்மை.நிலை மாறுமா என்பதே கேள்வி.நாம் இப்படி கதைத்து மொக்கை போடும் சுதந்திரம் என் ஈழ சகோதரனுக்கும் கிடைக்குமா என்று வழி தேடுங்கள் என்றால் பழைய கதைகளை பேசியே காலம் தள்ளும் வீண் விவாதங்களில் சிக்க மனமில்லை.
ஆகவேதன் உங்களின் கடந்த சில பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை.சும்மா குற்ற உணர்வில் ஒரு சுய விள்க்கம்
நன்றி
வாங்க நண்பர் முரளிதரன்,
ReplyDeleteஇதெல்லாம் மிகவும் எளிதான விடயங்களே .என்ன கொஞ்சம் தொடர்ந்து இப்படிப்பட்ட விடயங்களின் தகவல்களை அறிய வேண்டும் அவ்வளவுதான்.பாருங்கள் பெரிய அறிவியல் மேதைகளுக்கும் கருப்பு பொருள் கருப்பு ஆற்றல் பற்றி எதுவுமே தெரியாது.ஆகவே நாம் அனைவருமே ஒரே அள்வுதான்.அடிக்கடி வாங்க!.கேள்வி கேட்பதே கற்றலின் தொடக்கம்.கேள்வி நிறைய கேளுங்கள்.விடை கிடைக்கிறதோ இல்லையோ புரிதல் விரிவடையும்.
அடிக்கடி வாங்க
வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்,
நம் போன்ற அலைவரிசை உடையவர்களும் உண்டு என்பதால் எப்படியாவது பதிவிடவே முயல்கிறோம்.தேவையற்ற விடயங்களை விட்டு விலக வேண்டும் என்றாலும் சில விடயங்களை விமர்சிக்காமல் இருக்க முடிவது இல்லை.
அதிகம் அறிவியல் சார்ந்தே எழுதவேண்டும் எனவே விரும்புகிறேன்.பரிணாம எதிர்ப்பு விமர்சனக்களுக்கு பதில் அளிக்க இயலுமா என்ற தேடலில் மட்டுமே மாற்றுக் கருத்து அளிக்கிறோம்.
ஒரு பரிணாம் விமர்சன பதிவுக்கு மறுப்பு இடும் போது ஏற்படும் தேடலின் உறசாகமே தனிதான்.
பரிணாம் எதிர்ப்பு பதிவு வந்து நாளாகி விட்டதால் போர் அடிக்கிறது.
எப்படி வரலாம் என்ற சில கணிப்புகளும் உண்டு. ஹி ஹி
நன்றி
எளிமையான விளக்கத்திற்கு நன்றி நண்பரே,
ReplyDeleteகருப்பு பொருள், ஆற்றல் இரண்டுமே பிடிபடாமல் இருந்தது. இரண்டும் ஒன்று என்ற எண்ணமும் தோன்றியது. சில சமயம் அது ஒரு exotic விடயம் என்றும் தோன்றியது. தெளிவுக்கு நன்றி.
அப்பொழுதே, டார்த் வேடர் உங்கள் மீது கருப்பு ஆற்றல் பரவட்டும் என்று சொல்லியிருந்தார்.
கருப்பு பொருள், ஆற்றல் ஒரு கட்டுகதை என்ற மறுமொழி எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் அது டார்த் வேடர் கொள்கைக்கு ஒத்துப் போவதால் விட்டுவிட்டேன். -:)
வாங்க நண்பர் நரேன்,
ReplyDeleteநமது அறிவியல் விள்க்கம் அனைவருக்கும் பிடிக்கிறது,மத அறிவியல் விள்க்கங்கள் பல்ருக்கு பிடிக்கிறது.சமூக அறிவியல் விள்க்கங்கள் பிடித்தவர்கள் ஒத்துக் கொள்வது இல்லை,பிடிக்காதவர்கள் எதிர்க்கிறார்.
நமக்கு அனைத்துமே அறிவியல் சார்ந்த தேடல் அவ்வள்வுதன்!
&&&&&&&
சரி உங்களுக்கு பிடித்த மத அறிவியல்
கருப்பு ஆற்றல்&பொருள் கலந்த மத அறிவியல் பிரச்சார மாதிரி பாருங்கள்
http://www.speed-light.info/miracles_of_quran/seven_heavens.htm
அதாகப்பட்டது அறிந்த பொருள்(Normal matter 4_5)% போல் அறியாப்பொருள் Dark matter 6 மடங்கு[சுமார்25 % ] .ஆகவே மொத்த ஏழு உலகங்களில் இதுதான் மீதம் உள்ள 6 சொர்க்கம்[உலகம்,பேரண்டம்] அருமையான பிரச்சாரம் என கொஞ்சம் புள்ளி விவரங்களை சரியாக மாற்றினால் முடிந்தது.ஹி ஹி
இதனை டார்த் வேடருக்கு மாற்றித் தர நம்மால் இயலும்.
முந்துங்கள்!!!!
சார்வாகன்
நிறுவனர்& தலைவர்
சார்வாக அறிவார்ந்த வடிவமைப்பு (மத அறிவியல்) மையம்.
தமிழ்நாடு