கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில்
வைத்த கதையாய் ஏப்ரல் 23ஆம் தேதியில் இருந்து சாதி வாரிக் கண்க்கெடுப்பு எடுக்கப் போகிறார்களாம்.இது
எந்த விதத்திலாவது உதவியாக் இருக்கும் என நமக்குத் தோண்றவில்லை.
இட ஒதுக்கீடு சாதிரீதியாக் பிரித்து அளித்தால் அனைவரும்
முன்னேறுவார் என்ற கருத்து உண்டு என்றாலும் இட ஒதுக்கீடு என்பது மட்டும் அனைத்தையும்
தீர்க்கக் கூடிய சர்வ ரோஹனி அல்ல என்பதும்,அதனை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பது நம்
கருத்து.என்ன ஒவ்வொரு சாதியிலும் ஒரு உயர் வகுப்பினர் உருவாகி அவர்களுடைய சந்ததியினர்
மட்டும் இட ஒதுக்கீட்டின் பலனை அறுவடை செய்வார்கள்.
கல்வி சுகாதாரம் இரண்டும் இலவசம் ஆக்கப்பட்வேண்டும்.ஒரு
மாவட்டத்தில் வாழ்பவர்கள் அவர்களுக்குறிய அனைத்து வாழ்வாதாரங்கள்,அரசு சம்பந்தப்பட்ட வேலைகள்
அனைத்தையும் அதிக பட்சம் மாவட்டத் தலை நக்ர் அள்விலேயே முடிக்கும் அளவு செய்தால் பெரு நகரங்களை நோக்கிய மக்களின்
இடப்பெயர்வு தடுக்கப்படும்.அரசின் மக்கள் நலப் பணிகள் வெளிப்படையாக கண்காணிக்கும் படி
இருந்தால் ஊழலும் குறையும்.ஒருவர் ச்ட்டமன்ற
உறுப்பினர் அல்லது பாரளுமன்ற உறுப்பினராக் குறிப்பிட்ட காலம் மட்டுமே பணியாற்றலாம்
என மாற்ரம் ஏற்படுவது பல் புதிய தலைவர்கள் தோன்ற வழி வகுக்கும்.வாரிசு அரசியலை ஒரு
அள்வுக்கு தடுக்கும். கொண்டுவருவது
இதையெல்லாம் விட்டு விட்டு சாதி வாரிக் கண்க்கெடுப்பு
என்பது எதில் போய் முடியும்?
'அ 'சாதி 15% இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.அப்போது அவர்களின் தலைவனாக
பல சாதித்தலைவர்கள் முயற்சி செய்து சாதி உணர்வைத் தூண்டுவார். உடனே 'அ' அல்லாதவர்கள் அதற்கு எதிராக திரும்புவர்.இம்மாதிரி
கண்க்கெடுப்பு ஏற்கெனவெ ஒரு அள்விற்கு அரசு கணித்தே வைத்து இருக்கும்.அதனால்தான் சரியாக
ஒரு தொகுதியில் பெரும்பான்மை இன வேட்பாள்ரையே அனைத்து கட்சிகளும் நிறுத்தும்.
இபோதைய இட ஒதுக்கீடு கூட ஆங்கிலேயர் ஆட்சிக் கால்த்தில் எடுக்கப்பட்ட ஒரு கண்க்கீட்டின்
அள்விலேயே வழங்கப் படுகிறது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகிறேன் என கருத்து திரிபு
செய்ய வேண்டாம்.பல சமூக ஒடுக்குதலினால் ஒடுக்கப்ப்ட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இபோது
நடைமுறையில் உள்ளது.அதனை நாம் கொஞ்சம் கொஞ்சமாக் அது தேவையில்லை என்னும் நிலையை நோக்கி
செல்ல முடியுமா என பாருங்கள் என்றே கூறுகிறோம்.
இப்போது இந்த கண்க்கீடு மூலம் இட ஒதுக்கீடு விகிதங்கள்
மாற்றப் பட்டால் சமூக முரண்கள் அதிகம எழலாம்.இந்த கண்க்கீடுகள் இந்த அள்வில் நிற்காது.
உலகின் பல நாடுகளில் இப்படி கணக்கீடுகள் எடுத்து அடையாள
அட்டையிலேயே மதம்,இனம்,மொழி குறிக்கப்பட்டதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
வாழும் இடம்,சூழல் சார்ந்த சொந்தக் காலில் நிற்கக் கூடிய எளிய இலவச கல்விமுறை ,அனைவருக்குமே வேலை வாய்ப்பு வழங்க இயலாத அரசுகள் இப்படி மக்களை பிரித்து மோதவிட்டு வேடிக்கை
பார்ப்பது வரலாற்றில் சாதாரணமான ஒன்று என்றாலும் இது தேவையற்ற தவிர்க்க கூடிய ஒரு
விடயம்.
மனிதர்கள் கண்க்கெடுப்பின் போது "சாதி இல்லை என்ற
4 ஆம் பிரிவை"
தேர்வு செய்ய வேண்டுகிறோம். சாதி மறுப்பு மனிதர்களின் எண்ணிக்கைதான் தமிழ்நாட்டின் மக்கள் தொகை என நாம் ஏற்கிறோம்.
நன்றி
டார்வினிசம் பற்றிய அருமையான கட்டுரைகள் வந்தன. மிக நன்றாக இருந்தது. தற்போதைய பதிவுக்கும் Social Darwinismக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?
ReplyDeleteதன்னை கீழ்மைப்படுத்தி சலுகைகளை பெற மக்கள் விழையும் போது எரியும் தீக்கு எண்ணெய் வார்த்தது போலிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.இது ஒரு முடிவற்ற மோதலுக்கு ஆரம்பம்தான்.
ReplyDeleteசமூக அக்கறை என்பதும் பரிணாமத்தின் வழிதான்.
சகோ.சார்வாகன்,
ReplyDeleteநல்ல கருத்து,சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் களையப்பட வேண்டும், சமத்துவ நிலை இருக்குமானால் இத்தகைய இட ஒதுக்கீடுகள் தேவை இல்லை, ஆனால் சமத்துவமற்ற சூழல் நிலவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதும் இருக்கும் சூழலில் அவர்களை அடையாளங்கண்டு மேம்படுத்த அளவுகோளாக என்ன பயன்ப்படுத்தலாம்? சரியான முறையில்லாத சூழலில் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே அரசு பயன்ப்படுத்தும் தேர்வு முறையாக இருக்கிறது.
இப்போது அனைவரும் போட்டிப்போடுவதால் கணக்கெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமேல் பாருங்கள் செத்து போன தாத்தா,பாட்டி பெயரை எல்லாம் சேர்த்து அவங்க அவங்க சாதி எண்ணிக்கையை கூட்டி காட்டப்போறாங்க. ஏன் எனில் நிறைய பேரோட ரேஷன் கார்டில் செத்துப்போனவங்க எல்லாம் உயிரிரோட இருக்காங்க. :-))
வாக்காளர்ப்பட்டியலிலும் பல டிக்கெட் வாங்கின வாக்காளர்கள் இருக்காங்க. அவங்க பேரில் கள்ள ஓட்டுப்போடப்படும்.
ஆதார் அடையாள அட்டை வந்தா தான் எத்தனை பேர் உயிருள்ள வாக்காளர்கள் /மனிதர்கள் நாட்டில் இருக்காங்க என்று தெரிய வரும்.
இப்படி சாதிவாரியாக கணக்கெடுப்பது ஆபத்தான செயல்தான். சாதி வேறுபாடுகள் சிறிது சிறிதாக மறையும் நிலையை நோக்கி நகர முயற்சிப்பதே ஒன்றுபட்ட வலுவான சமுதாயம் உருவாவதற்கு சரியான வழி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்வாகன்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/
சாதீய ஏற்றத்தாழ்வை போக்க வேண்டும், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கம்.
ReplyDeleteசாதிவாரிக் கணக்கெடுப்பினை எதிர்ப்பதும் சாதி இல்லை என்று சொல்வதும், சாதி ஆதிக்கத்திற்கு துணை போகும் சதியே ஆகும்.
http://arulgreen.blogspot.com/
சாதி வாரிக் கண்க்கெடுப்பு என்பதே சாதிகளை கட்டி காத்து பிரிவினைகளை மேலும் வளர்க்கும். பதிவுக்கு நன்றி சகோ.
ReplyDelete//உலகின் பல நாடுகளில் இப்படி கணக்கீடுகள் எடுத்து அடையாள அட்டையிலேயே மதம் இனம் மொழி குறிக்கப்பட்டதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்//
இந்தியாவில் மட்டுமே இப்படி நடப்பதாக நான் அறிந்தேன். முன்னேறிநாடுகளில் பெயர், பிறந்த திகதி, பிறந்த ஊர், Nationality மட்டுமே அடையாளம்.
//சாதீய ஏற்றத்தாழ்வை போக்க வேண்டும், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கம்.//
ReplyDeleteஅருள்!சாதிக்கட்சிகள் தோன்றியதும் கூட சமூக நீதியை நிலை நாட்டவேண்டுமென்ற நோக்கோடுதான் கொண்டு வரப்பட்டது.நடைமுறையில் நிகழ்ந்தவை என்ன?
சாதிவாரிக் கணக்கெடுப்பு நிச்சயம் எதிர் விளைவுகளை உருவாக்கும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteமுந்தைய பின்னூட்டம் இரண்டு முறை என்பதால் என்னால் நீக்கப்பட்டது.
ReplyDeleteவங்கி,ஓட்டு,காவல்துறை,நீதித்துறை,கல்வி,பஞ்சாயத்து யூனியன்,வியாபாரம்,தனி மனித தகவல் பதிப்பு,பிறப்பு,இறப்பு இன்ன பிற அனைத்துக்கும் தேவையான ஒன்று 12 முதல் 14 இலக்கங்கள் கொண்ட கணினி மயமாக்கப்பட்ட Civil Idendity Card முறையே எளிதானதும் இந்தியாவின் எதிர்காலத்துக்கு உகந்ததுமாகும்.
சார்வாகனின் பூணூல் அவரையறியாமல் வெளியே தெரிகிறது. இனிமேல் கொஞ்சம் சட்டையை மொத்த துணியில் போட்டு கொண்டால் பூணூல் வெளியே தெரிய வாய்ப்பில்லைங்கண்ணா..! :-)
ReplyDeleteசார்வாகனின் பூணூல் அவரையறியாமல் வெளியே தெரிகிறது./////
ReplyDeleteஉண்மையை பேசுபவனின் வாயை கட்ட மதவாதிகளும, பகுத்தறிவாதிகளும் சொல்லும் மலிவான பேச்சு.
தான் மேல்சாதி என்ற எண்ணம் ஒரு பிரிவினருக்கு இருக்கும் வரையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டும். ஒரு கட்டத்தில் அவர்களாகவே முன்வந்து உயர்சாதி என்று ஒன்றுமில்லை, எல்லாரும் ஒன்றுதான் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அப்போது இட ஒதுக்கீடுக்கு அவசியம் இருக்காது.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteமுத்லில் சில விடயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன்.
1. இபோது உள்ள (பி.சி),(எம் .பி.சி).. போன்ற பல சாதி மதப்பிரிவுளை உள்ளடக்கிய இட ஒதுக்கீட்டினால் சில பலன்கள் கிடைப்பதை மறுக்கவில்லை.ஆயினும் இப்படி இட ஒதுக்கீடு மட்டும் சர்வரோஹ நிவாரணி அல்ல என்பதுதான் நம் கருத்து.இப்போதுள்ள நிலை இன்னும் ஒரு 50+ ஆண்டுகளுக்கு தொடரும் என்பதே நம் கணிப்பு.
எனினும் அனைவருக்கு இலவச ப்யனுள்ள எளிய கல்விமுறை,வாழ்வாதாரம் உறுதி செய்யப்படல் இட ஒதுக்கீட்டின் தேவையை குறைக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
2.இபோது எடுக்கப்படும் சாதி ரீதியான கண்க்கெடுப்பின் மூலம் வரும் விளைவுகளை அவதானித்தே எதிர்க்கிறோம்.இத்னை இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக் திரித்து காட்டுவது நான் எதிர் பார்த்ததுதான்.
3. இபோதுள்ள இட ஒதுக்கீடும் முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது.இப்போது மக்கள் தொகை அதிகரிப்பின் படி விகிதாச்சாரம் அதுவும் சாதி ரிதியாக் அளிக்கப்படுகிறது என்றால் அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?
4.அரசியல் சாதிக் கண்க்கீட்டின் அடிப்படையில் மாறும் என்பதும் பிரிவினைகளை அதிகப்படுத்தும் என்பதையே வலியுறுத்துகிறோம்.
இனி உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கிறேன்
நண்பர் சதுக்க பூதம்
ReplyDeleteடார்வினியம் என்பது வாழ்க்கைக் கோட்பாடு அல்ல.சில இயற்கை நிகழ்வுகளுக்கு பொருந்துகிற விள்க்கம் அளிக்கும் இபோதைய உயிரின் தோற்றத்தை விள்க்கும் அறிவியல் கொள்கை(பரிணாம செயலாக்கம்).
&&&&&&
டார்வினியம்=இயற்கைத் தேர்வு+ சிறுமாற்றங்கள் உயிரினங்களை ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து வகை உயிரினங்களையும் தோற்றுவித்தது.அதில் மனிதர்களாகிய நாமும் ஒரு துளி அவ்வளவுதான்!.
இந்த சாதிரீதியான கண்க்கீடு வேண்டாம் என்பது என் கருத்து .சொல்லவில்லை
&&&&&&
நண்பர் சந்துரு
நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டீர்கள்.இந்த சாதிரீதியான கண்க்கீடு இப்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் ஒதுகீட்டை கூட பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
&&&&&&&&
சகோ வவ்வால்
சரியாக் சொன்னிர்கள்.இபோதுள்ள இட ஒதுக்கீட்டை மாற்றும் முயற்சி இந்த சாதி கண்க்கீட்டு முறை என்பதும்.மாற்றங்களை அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதனையே வலியுறுத்துகிறேன்
ஒரு சின்ன கண்க்கு
இப்போது மூன்டு குழுவினர்
அ=10%
ஆ=20%
இ=30% பெற்று வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம்
கண்க்கிட்டின் பிறகு
அ=15%
ஆ=10%
இ=35% என்று மாறினால் குழப்பம் வருமா இல்லையா என்பதே நம் கேள்வி?
&&&&&&&&
நன்றி சகோ மாசிலா
சாதி வேறுபாட்டை ஒழிப்பதற்கு பதில் கூர்மைப்படுத்துகிறார்களே என்பதே நம் கவலை.இது சமூக முரணாக் மாறி விடக் கூடாது என்பதுதான் நம் கருத்து
சகோ அருள்
ReplyDeleteஉங்களோடு சூழலியல உள்ளிட்ட பல விடயங்களில் நம்க்கு உடன்பாடு ஒத்த கருத்து இருந்தாலும்,இந்த சாதிரீதியாக கண்க்கீடு சமூக முரண்களுக்கே வித்திடும் என்றே கூறுகிறேன்.
சமூக நீதி என்பது இப்படி இடக்கீட்டை எப்படி பிரித்து அளிப்பது என்பதை மட்டும் யோசிக்காமல் எப்படி வாழவாதாரம் சார்ந்த இலவச கல்வி அனைவருக்கும் வாழும் இடங்களிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்றே கூறுகிறேன்.
இது இட ஒதுகீடு தேவையற்ர சூழலை கால்போக்கில் ஏற்படுத்தலாம்.
இபோதுள்ள இஅட ஒதுகீட்டு நடைமுறையே இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தொடரட்டும்,அனைவருக்குமான இலவச தரமான் கல்வி நொக்கி சிந்திப்போம் எனவே கூறுகிறேன்
வருகைக்கு நன்றி
&&&&&&&&&
நண்பர் குயிக் ஃபாக்ஸ்,
ஐரோப்பிய நாடுகளிலும் குடியுரிமை வழங்கும் போது இம்மாதிரி கண்க்கீடுகளை பதிகிறார்கள் எனினும் இதன் மீது பாரபட்சம் கடைப்பிடிக்கப் படுவது இல்லை.
இலங்கையில் அடையாள அட்டைகளில் இனம் குறிப்பிடப் படுகிறது.இன்னும் பல் மத ஆட்சி நாடுகளீலும் இமாதிரி நடைமுறை உள்ளது.
அங்குள்ள நிலைமை நாம் அறிவோம்!
வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி
&&&&&&&&
சகோ இராஜ நடராஜன்
என் உள்ளக் கருத்தை அப்படியே சொல்லி விட்டீர்கள் நன்றி.நாம் சாதி மறுத்த தமிழர்கள்.தமிழ் தாய் மொழி என்பதால் மட்டுமே தமிழர்களே தவிர நாம் யாருகும் குறைவானவர்களோ ,உயர்ந்தவர்களோ அல்ல!
நன்றி
&&&&&&&&
வாங்க சகோ சுவனன்
அருமையான் கருத்துகள்.சாதிரீதியான் கண்கீட்டினை சுவனப்பிரியன் ஆதரிப்பதால் என் கருத்து சரியானது என உறுதி செய்யப் பட்டது.
நாம் நீங்கள் குறிப்பிடும் குழுவை சேர்ந்தவன் அல்ல.நாம் எந்த இனக் குழுவோடும் அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புவது இல்லை.நான் ஹோமோ சேஃபியன் இனமாக் அறிவியலால் வரையறுக்கப் படுபவன்.எனக்கு சரியாக தெரிந்த ஒரே மொழி என் தாய் மொழி தமிழ் அவ்வள்வுதான்.அதனால் மட்டுமே தமிழன்!.
மிக்க நன்றி
&&&&&&&&
சகோ யந்திரம்
சகோ சு.பிக்கு நன்றி சொல்ல்வேண்டும்.மதவாதிகள் சாதிரீயான கண்க்கீட்,இதன் மீதான இட ஒதுகீட்டு மாற்றங்கள்,சமூக முரண்கள் அவர்கள் பணியை எளிதாக்கும் என்பதால் ஆதரிப்பதில் வியப்பில்லை!
நன்றி
&&&&&&
சகோ இராபின்
நான் இந்த சாதி கணக்கீட்டின் மூலம் இபோதைய இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்வது சமூக முரண்களுக்கு விட்திடும் என்றே கூறுகிறோம். இபோதைய இட ஒதுக்கீடு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தொடரட்டும்.அதே சமயம் இப்படி இட ஒதுகீட்டின் தேவையை நீக்க ஆவண செய்யுங்கள்,இது சர்வ ரோக நிவாரணி அல்ல எனவே கூறுகிறோம்.
கருத்துகளுக்கு நன்றி
இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர். 1. பட்டியல் இனத்தவர் (SC), 2. பழங்குடி இனத்தவர் (ST), 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே). ஆனால், சாதிவாரியாக புள்ளி விவரம் இல்லை என்பதுதான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட தடையாக இருந்தது.
ReplyDeleteஅரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது. இதன் கீழ் அமைக்கப்பட்ட கலேல்கர் குழு, மண்டல் குழு - ஆகிய இரண்டு அறிக்கைகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரின.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும்.
எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு மிக மிக அவசியமானது.
சகோ அருள்
ReplyDeleteநான் இப்போதுள்ள இட ஒதுகீடே தொடரட்டும்.அனைவருக்கும் இலவச தரமான கல்வி,வாழ்வாதாரம் உறுதி செய்யப் படல் சார்ந்த நடைமுறைகளை நோக்கி ப்யணிப்போம் என்கிறேன்.
சாதிரீதியான கண்கீட்டின் மூலம் என்ன செய்ய விழைகிறீர்கள்?
என்பதை கொஞ்சம் கூறுங்கள்
ஏற்கனவே பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST) என்பது மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்படுகிறது.
ReplyDeleteமதவாரியாகவும், தாய்மொழி வாரியாகவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதனால் எல்லாம் கேடுகள் எதுவும் நேரவில்லை.
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு கல்லூரியிலும் "யார் எந்த சாதி?" என்பது வெளிப்படையாக அறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சாதிக்கு எனவும் தனி திருமண தகவல் மையங்கள், இணையதளங்கள் இயங்குகின்றன. தனி சுயம்வரங்கள் நடக்கின்றன. மிகவும் முன்னேறியவர்கள் படிக்கும் ஆங்கில நாளிதழ்களில் சாதிவாரியாக வரன் தேடும் விளம்பரங்கள் வருகின்றன.
-- இப்படி ஊரறிந்த ஒரு ரகசியம், வெறும் கணக்கெடுப்பால் பெருங்கேடாக மாறிவிடாது.
சார்வாகன் said...
ReplyDelete// //சாதிரீதியான கண்கீட்டின் மூலம் என்ன செய்ய விழைகிறீர்கள்?// //
ஒவ்வொரு சாதியின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பதை அறிய சாதிவாரிக் கணக்கெடுப்பு உதவும்.
ஒவ்வொரு சாதியின் நிலைக்கு ஏற்ப - கல்வி, வேலை வாய்ப்பு, கடன் வசதி, அரசின் ஒப்பந்தப் பணிகள், சிறப்பு முன்னேற்றத் திட்டங்கள் போன்ற பலவற்றையும் வகுத்து அளிக்க முடியும்.
சச்சார் குழு அறிக்கை இசுலாமியர்களின் தேவையைப் பட்டியலிடுவது போல, தனிப்பட்ட சாதி அல்லது ஒரே நிலையில் உள்ள சாதிகளின் தொகுப்பிற்கு தேவையான முன்னுரிமைகளை வகுக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்.
சகோ அருள்
ReplyDeleteநான் கேட்ட கேள்விக்கு பதில் கூறவில்லை.இந்த சாதிரீதியான கண்கீட்டால் இபோதைய இடஒதுக்கீட்டை மாற்றப் போகிறீர்களா இல்லையா?
அப்படி மாற்றினால் இப்போதைய இடஒதுகீட்டு பயனாளி குழுக்களில் சிலர் பயன் அடையலாம் ,சிலர் பாதிக்க்ப்படலாம்.
இது சாதிரீதியான் அரசியலை ஊக்குவிக்கும்! சமூக முரண்களை கூர்மைப் படுத்தும் என்பதுதான் நம் கருத்து!
விளைவுகளை பார்த்தே நம் விவாதத்திற்கு முடிவு கிடைக்கும்!
பார்க்கத்தானே போகிறோம்!
நன்றி
சார்வாகன் said.
ReplyDelete// //சாதி மறுப்பு மனிதர்களின் எண்ணிக்கைதான் தமிழ்நாட்டின் மக்கள் தொகை என நாம் ஏற்கிறோம்// //
சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!
சாதி மறுப்பு மனிதர்கள் என்று கூற விரும்புகிறவர்கள் சுயமரியாதையுள்ள, நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஆனாலும், சாதி மறுப்பு மனிதர்களில் பலவகையான மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதால் - அவர்களின் அறிவு, நேர்மை, நாணயம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாறுபடக்கூடும். அதனை பின்வருமாறு பிரிக்கலாம்:
1. பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்.
இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை. ஏனெனில், "பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்" கணக்கெடுக்கப்பட்டாலும் கணக்கெடுக்காமல் போனாலும் - அவர்களுக்கு புதிதாகக் கிடைக்க எதுவும் இல்லை.
மற்ற சாதியினரின் உரிமைகளை ஏற்கனவே அபகரித்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதால் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது இவர்களுக்கு மிகச் சாதாரணமானதுதான்.
எனவே, பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினரின் நேர்மையில் சந்தேகம் இல்லை.
2. பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)
இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை.
ஏனெனில், "பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)" ஏற்கனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வலுக்கட்டாயமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது சமூக பொருளாதார நிலை குறித்து தெளிவான புள்ளி விவரங்கள் உள்ளன. எனவே, இவர்கள் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதால் ஒரு பாதிப்பும் இல்லை.
எனவே, பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST) நேர்மையில் சந்தேகம் இல்லை.
3. பிற்படுத்தப்பட்ட சாதியினர் (MBC/BC).
இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதுதான் ஆபத்தானது. இதனால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான நிலை அறியப்படுவது தடைபடும். அதனால், சமூக நீதிப்போராட்டத்திற்கு கேடு நேரும்.
"MBC, BC பிற்படுத்தப்பட்ட சாதியினர்" தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது ஏமாளித்தனத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். இவர்கள் மேல்சாதிக் கூட்டத்தின் தந்திரத்தால் இப்படிப் பேசக்கூடும். இந்த அறியாமை போக்கப்பட வேண்டும்.
இல்லை, இல்லை - நாங்கள் மனமறிந்து சுய நினைவோடுதான் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுகிறோம் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC), பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பினர் கூறுவார்களேயானால், அவர்கள் "நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம்" உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
MBC அல்லது BC வகுப்பினர் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது தாம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதற்கு முன்பாக -
1. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.
2. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் கல்வி இடங்களை பெற்றிருந்தால் அந்த படிப்புச் சான்றிதழை கிழித்து எறிய வேண்டும் (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்). அந்த சான்றிதழால் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்
3. இப்போது கல்லூரிகளில் MBC, BC இடஒதுக்கீட்டில் படிக்கும் தமது குடும்ப மாணவர்களை படிப்பைக் கைவிடச் சொல்ல வேண்டும். (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்).
4. இனி எல்லா இடங்களிலும் தம்மை "பொதுப்பட்டியல் (OC)" பிரிவினைச் சேர்ந்தோர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். தப்பித்தவறிக் கூட MBC, BC என்று குறிப்பிடக் கூடாது. (தெம்பிருந்தால் அரசிடம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்ற தனி பிரிவினைக் கோருங்கள்)
--இதையெல்லாம் செய்துவிட்டு அதன்பிறகு MBC மற்றும் BC பிரிவினர் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று தாராளமாக குறிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
அதை விட்டுவிட்டு, MBC, BC வகுப்புகளுக்கான உரிமைகள் மட்டும் வேண்டும், ஆனால், நாங்கள் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று வெளிவேடமிட்டு துரோகம் இழைக்காதீர்.
சாதியை மறுக்கும் MBC, BC பிரிவினரே, கொஞ்சமாவது சூடு சொரணையுடன் நடந்து கொள்ளுங்கள்
சார்வாகன் said.
ReplyDelete//நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறவில்லை.இந்த சாதிரீதியான கண்கீட்டால் இபோதைய இடஒதுக்கீட்டை மாற்றப் போகிறீர்களா இல்லையா?
அப்படி மாற்றினால் இப்போதைய இடஒதுகீட்டு பயனாளி குழுக்களில் சிலர் பயன் அடையலாம் ,சிலர் பாதிக்க்ப்படலாம்.//
இப்போதைய சாதிரீதியான இடஒதுக்கீட்டில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே. எனவே, சரியில்லாததை, நியாயமில்லாததை மாற்றித்தானே ஆக வேண்டும்.
இபோதைய இடஒதுக்கீட்டிற்கு மாறாக, தந்தைப் பெரியார் கோரிய "வகுப்புவாரி விகிதாச்சார பிரதிநிதித்துவம்" தேவை.
ஒவ்வொரு சாதி அல்லது ஒரே நிலையில் உள்ள சாதிகளுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தேவை. அதாவது 100% இடஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் தேவை.
அதே போன்று பின் தள்ளப்பட்டுள்ள நிலைக்கு ஏற்ப முன்னுரிமைத் திட்டங்களும் அவசியம்.
இதனால் "பயனாளி குழுக்களில் சிலர் பயன் அடையலாம் ,சிலர் பாதிக்க்ப்படலாம்" என்றால் - அது நியாயம் தானே. அளவுக்கதிகமாக பயன்பெறுபவர் பாதிக்கப்படுவதில் என்ன தவறு?
//ஐரோப்பிய நாடுகளிலும் குடியுரிமை வழங்கும் போது இம்மாதிரி கண்க்கீடுகளை பதிகிறார்கள்//
ReplyDeleteஎந்த மாதிரியான கணக்கீடுகள் சகோ? ஒரு இந்தியருக்கு ஒரு தாய்லாந்து காரர்களுக்கு குடியுரிமை வழங்கினோம் என்று கணக்கிற்க்கு பதிந்து வைப்பார்கள் மற்றும்படி ஒருவர் குடியுரிமை பெற்றவுடன் உ-ம் ஒரு இந்தியர் சுவிஸ்லாந்து குடியுரிமை பெற்றவுடன் அவருடைய Nationality சுவிஸ்லாந்துகாரர் என்றே அடையாளஅட்டையிருக்கும். பிறந்த இடம் சென்னை,இந்தியா என்றிருக்கும். சாதி என்று ஒன்றுமில்லை. அவுஸ்ரேலியாவிலும் இதே முறை தான்.
//இலங்கையில் அடையாள அட்டைகளில் இனம் குறிப்பிடப் படுகிறது//
சகோ இலங்கையில் அடையாள அட்டைகளில் பெயர், வேறு பெயர்கள், ஆண்/பெண், பிறந்த திகதி, பிறந்த இடம், தொழில், வதியுமிடம் இவைகள் மட்டுமே குறிப்பிடபடுகிறது.
சாதிரீயான கண்கீடுகள் பிளவுகளை மோசமாக்கும் என்பதால் மதவாதிகள் கொண்டாடுவதில் வியப்பில்லை சகோ.
சகோ அருள்
ReplyDeleteஅருமையான வாதங்கள்,
1. இட ஒதுக்கீடு பெறத் தகுதி இல்லாதோர்ர், அட்டவனைப் பிரிவினர் சாதி மறுப்பது சரி என்கிறீர்கள்.
இதனை ஏன் எப்படி என்று விள்க்க முடியும் என்றாலும் படிக்கும் நண்பர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
2.ஆனால் இட ஒதுக்கிட்டில் பயன்பெறும் பிற இனத்தவர் சாதி மறு(ற)க்க கூடாது என்கிறீர்கள்.
அதாவது சாதியினால் பயன் உண்டு என்றால் பற்றிக் கொள், பல்னில்லை என்றால் தூக்கி எறிந்து விடு என்ற விள்க்கம் அருமை.
அப்படி சாதி மறுக்கும் இடைப்பட்ட பிரிவினர் ஏஎற்கெனவே அடைந்த இட ஒதுக்கீட்டின் பலன்களை நீக்க வேண்டும்.
அப்படி செய்யத் தேவையில்லை தம் குழந்தைகளுக்கு சாதி குறிப்பிடாமல் கல்வி,காதல் திருமணம் செய்யவே வலியுறுத்துகிறோம்.ஏனென்றால் இட ஒதுக்கீட்டால் முன்னேறியவர்கள் மற்றவ்ர்களுக்கு அதை அளிப்பதுதான் நியாயம்.
மாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக் வர வேண்டும் எனவே கூறுகிறோம்.
காதல் கலப்பு மணங்கள் மூலமே சாதி மறுப்பு என்பதையும் கூறுகிறோம்.நான் இட ஒதுக்கீட்டில் கல்வி பெற்றவன் என்பதை கூற தயக்கம் இல்லை.
என் ஒரே குழந்தைக்கு சாதிரீதியான் இட ஒதுக்கீடு தேவையில்லை சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன் என்பதை கூறுகிறேன்.
&&&&&&&&
அப்புறம் நான் சொன்ன சரியான கொள்கைக்கு வந்து விட்டீகள்.
இபோதுள்ள இட ஒதுக்கீடு சரியில்லை ஏன்? அபோது எடுக்கப்பட்ட மக்கள் தொகை விகிதாச்சாரம் மாறிவிட்டது.
இபோதுள்ள மக்கள் தொகை விகிதாச்சாரம் படி சாதிகளிடையே பிரிக்கப்பட வேண்டும்.
இன்னும் 10 வருடம் கழித்து மக்கள் தொகை சாதி விகிதம் மாற மாற இட ஒதுக்கீட்டின் விகிதமும் மாறும்.
விகிதாசார அரசியல் சாதி ரீதியாக மக்களை ஒன்றினைப்பதும் அவைகளுக்கு இடையேயான் போராட்டமாக் மாறும் என்பது அறிவியலும் வரலாறும் கூறும் உண்மை.
“எந்த சாதி அதிக மக்கள் தொகை அதிகரிப்பு செய்ய இயலுமோ அதுவே இட ஒதுக்கீட்டில் அதிக பலன் பெறும்”(.இயற்கைத் தேர்வு??????)
இது பிரச்சினைக்கு வழி வகுக்காது என எனக்குத் தொன்றவில்லை.
நன்றி
ஜாதிரீதியாக சலுகைகள், ஜாதிரீதியான வேலை வாய்ப்பு ஆகியவற்றை அரசாங்கம் கொடுக்கும்போது ஜாதிவாரியான வாக்கெடுப்புதானே சரியானது?
ReplyDeletehttp://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
5 Ansar
21 Dekkani Muslims
69 Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)
77 Mapilla
114 Sheik
119 Syed
இதில் சையது, ஷேக் இருவரும் பெரும் பணக்காரர்கள். பட்டாணிகள் என்று ஒரு ஜாதியும் உண்டு. அது இன்னும் பெரிய பணக்காரர்கள். லெப்பைகள் பெரும்பாலும் ஏழைகள். ஆனால் இருவருமே ஒரே இட ஒதுக்கீட்டின் கீழ் வருகிறார்கள். யாருக்கு இடம் கிடைக்கும்? ஷேக்க்குகளையும் சையதுகளையும் வெளியேற்றினால்தான் மற்ற முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால், ஏமாந்த முஸ்லீம்களை இப்படி ஜாதிவாரியாக குறிக்க வேண்டாம்,. வெறுமே முஸ்லீம் என்று உங்கள் ஜாதியை குறியுங்கள் என்று சையதுகளும் ஷேக்குகளும் கூறி வருகிறார்கள். இதில் யாருக்கு பயன்?
தலித்துகளிலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள் திருமணம் கூட செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மரைக்காயரோ ராவுத்தரோ கூட ஒரு தலித் முஸ்லீமை திருமணம் செய்யமாட்டார். அப்படி இருக்கும்போது சையதோ அல்லது ஷேக்கோ பட்டாணியோ திருமணம் செய்வார்களா? நாசுவ முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்க நாசுவ முஸ்லீம்களில் படித்த ஆட்களே இல்லை என்னும்போது அவர்களுக்கு என்னவென்று சலுகைகள் கொடுக்க முடியும்?
நாசுவ முஸ்லீம்களது மோசமான நிலையை ஒரு கணக்கெடுப்பவர் குறித்துகொள்வார். ஆனால் அவர் தன்னை முஸ்லீமாக அடையாளப்படுத்திகொண்டால் அதன் மூலம் பலனடையப்போவது ஷேக்குகளும் சையதுகளும் மரைக்காயர்களும்தானே?
சாதி ஒழிய வேண்டும் என்பது தேவையான நிலைப்பாடு. ஆனால், நடப்பு நிலையை கணக்கிலெடுத்துகொள்ளாமல் சாதி ஒழிப்பு பேசினால் அதில் பலனடையப்போவது ஏற்கெனவே பலனடைந்தவர்கள்தான்.
இப்ப சந்தடி சாக்கில இட்ட ஒரு துலுக்கனின் பின்னூட்டதத்தைப்பற்றி பார்க்கலாம். சரி உனது குரானின உளறலின்படி அல்லா தானே அனைத்தையையும் தீர்மானிக்கிறான். அப்படி எனில் இந்த ஏற்ற தாழ்வு அனைத்துன் அவனின் விருப்பப்படியே தான் நடக்கிறது? மூளைசெத்துபோகாமல் இருந்தால் யோசித்துப்பார்க்கவும்.
ReplyDeleteசகோ த்மிழன்
ReplyDeleteநாம் அனைவரையும் ஒன்றக்கி இருப்பதை ப்குத்துண்டு வாழ சொல்கிறோம்.இதில் மனிதர்களை பிரித்து கொடுப்பதில் விகிதாச்சாரம் பேசுபவர்களோடு விவாதிக்கிறோம்.
இப்படி பிரித்து கொடுத்தல் கூட ஒன்றும் நிகழாது,பிரச்சினைகள் பிரிவினைகள் அதிகரிக்குமென்வே கூறுகிறோம்.சாதி ஒழிய வேண்டும் என்கிறோம்.
உயர்வு தாழ்வு பிறப்பு அடிப்படையினால் அல்ல.அனைவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து இலவச கல்வி கொடுத்தால் இட ஒதுக்கீடு தேவையற்று போய்விடும் என்றே கூறுகிறோம்.
நம்ம சகோக்களை அப்புறம் பார்க்கலாம்.எங்கே போகிறார்கள்?
நன்றி
@சார்வாகன், ஆம் நண்பரே, நான் வேண்டுவதும் அதைத்தான். இந்த உலகத்தில் அனைத்து மக்களும் , அனைத்து மதத்தவரும் நல்லபடியாக, தேவையானது கிடைத்து மகிழ்ச்சியுடன் , கஷ்டமில்லாமல் இருக்கவேண்டும் என்பதுவே.கஷடப்படர துலுக்கனுக்கு உதவ முன்னால் இருப்பதுவும் நானே.
ReplyDeleteஜாதிரீதியாக சலுகைகள், ஜாதிரீதியான வேலை வாய்ப்பு ஆகியவற்றை அரசாங்கம் கொடுக்கும்போது ஜாதிவாரியான வாக்கெடுப்புதானே சரியானது?
ReplyDeletehttp://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
5 Ansar
21 Dekkani Muslims
69 Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)
77 Mapilla
114 Sheik
119 Syed
இதில் சையது, ஷேக் இருவரும் பெரும் பணக்காரர்கள். பட்டாணிகள் என்று ஒரு ஜாதியும் உண்டு. அது இன்னும் பெரிய பணக்காரர்கள். லெப்பைகள் பெரும்பாலும் ஏழைகள். ஆனால் இருவருமே ஒரே இட ஒதுக்கீட்டின் கீழ் வருகிறார்கள். யாருக்கு இடம் கிடைக்கும்? ஷேக்க்குகளையும் சையதுகளையும் வெளியேற்றினால்தான் மற்ற முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால், ஏமாந்த முஸ்லீம்களை இப்படி ஜாதிவாரியாக குறிக்க வேண்டாம்,. வெறுமே முஸ்லீம் என்று உங்கள் ஜாதியை குறியுங்கள் என்று சையதுகளும் ஷேக்குகளும் கூறி வருகிறார்கள். இதில் யாருக்கு பயன்?
தலித்துகளிலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள் திருமணம் கூட செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மரைக்காயரோ ராவுத்தரோ கூட ஒரு தலித் முஸ்லீமை திருமணம் செய்யமாட்டார். அப்படி இருக்கும்போது சையதோ அல்லது ஷேக்கோ பட்டாணியோ திருமணம் செய்வார்களா? நாசுவ முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்க நாசுவ முஸ்லீம்களில் படித்த ஆட்களே இல்லை என்னும்போது அவர்களுக்கு என்னவென்று சலுகைகள் கொடுக்க முடியும்?
நாசுவ முஸ்லீம்களது மோசமான நிலையை ஒரு கணக்கெடுப்பவர் குறித்துகொள்வார். ஆனால் அவர் தன்னை முஸ்லீமாக அடையாளப்படுத்திகொண்டால் அதன் மூலம் பலனடையப்போவது ஷேக்குகளும் சையதுகளும் மரைக்காயர்களும்தானே?
சாதி ஒழிய வேண்டும் என்பது தேவையான நிலைப்பாடு. ஆனால், நடப்பு நிலையை கணக்கிலெடுத்துகொள்ளாமல் சாதி ஒழிப்பு பேசினால் அதில் பலனடையப்போவது ஏற்கெனவே பலனடைந்தவர்கள்தான்.
சகோ ஷாகிர்
ReplyDeleteஇபோதைய சூழலில் சாதி என்பது பெரும்பானமையான் ம்க்களால் ஒரு முக்கியமான் விடயமாக் ஏற்கப்ப்டுவது உண்மையே.சாதிரீதியான் ஒடுக்குமுறை சிலரின் மீது காலம் கால்மாக் இருந்ததும் உண்மையே!.
இவர்களை தூக்கி விட இட ஒதுக்கீடு என்ற அளவில் உண்மையாக் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் கிடைத்தால் மிகச்சரி.ஆனால் சாதியின் அள்விற்கு பிரதிநித்தித்துவம்,அதுவும் மக்கள் தொகைக்கு ஏற்ப (அடிக்கடி) மாற்றுவோம் என்பது குழப்பம் , பல சமூக சிக்கல்களை உருவாக்கும்.
கணக்க்டுப்பு நடந்து வெளீயானாலே எத்தனை பேர் அத்னை சரியானது என் ஏற்பார்கள்?
இப்போது 90% தமிழர்கள் ஏத்ன்னும் ஒரு விதத்தில் இட ஒதுக்கீட்டுக்குள்தான் இருக்கிறார்கள்.இந்த 90% மக்களுக்கு வேறு வகையில் விகிதாச்சாரம் வழங்கவே இக்கண்க்கெடுப்பு.
கல்வி என்பது வியாபாரமாகி விட்டது.காசு இருப்பவன் நினைத்த கல்வியை எளிதில் பெற இயலும். அரசு கல்வி நிலையங்கள் குறைவு .அங்கு மட்டும் இட ஒதுக்கீடு குறைந்த அள்வினருக்கு பலன் அளிக்கிறது.இப்படி செய்வது பிரச்சினைகளை தீர்க்காது.
வேண்டுமானல் அரசு கல்வி நிலையங்களில் பொது பிரிவு,பிற்படுத்தப்பட்ட பிரிவு ,அட்டவனைப்பிரிவு மதிப்பெண்களின் வித்தியாசம் அதிகம் இருக்காது.
பொறியியல் படிப்பு என்பது கிடைப்பது மிக எளிதான விடயம் என்பதால் மெடிகல் மட்டும் அலசுவோம்.
http://www.thehindu.com/education/article2004505.ece
The total number of medical seats available under the State government is a mere 1,653 (excluding 635 additional seats surrendered by self-financing colleges).
2011ஆம் ஆண்டில் மருத்துவ படிபிற்கான் மதிப்பெண் குறியீடு அலகு PCB=(இயற்பியல்/2)+(வேதியியல்/4)+(உயிரியல்/4) இது மொத்ம் மதிப்பெண் 200 ஐ அடிப்படையாக வைத்து கண்க்கிடப்படுகிறது.
2011ல் இந்த குறியீட்டு அலகில் 195க்கு மேல் எடுத்தவர்கள் 3000+
This year, the number of students who have scored above 195 marks has nearly doubled as compared to last year. A total of 3,317 students have scored over 195 marks as against 1553 students in 2010.
எந்த பிரிவு மாண்வராக் இருப்பினும் 180 குறைவாக பெற்று படிப்பில் சேருவது கடினம்.இச்சூழலில் இடங்களை அதிகரிக்காமல் மாத்தி போடு திருப்பி போடு என இடஒதுக்கீட்டை மாற்றுவதில் என்ன பயன்?.
மாத்தி போட்டால் 180க்கு பதில் 179 மதிப்பெண் பெற்ற மாண்வர் வரலாம் அவ்வள்வுதான்.மதிப்பெண்கள் சார்ந்த கல்விமுறை என்பதும் ஒரு விமர்சனத்திற்கு உரிய கல்விமுறை என்றாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை.
மாத்திப் போடாதீர்கள் அரசு கல்வி நிலையங்களை அதிகப்படுத்தி அனைவருக்கும் இலவச கல்வி அளியுங்கள் என்றுதானே சொல்கிறோம்..
நன்றி
சகோ ஷாகிர் நாம் இபோதுள்ள இட ஒதுக்கீடே இன்னும் கொஞ்ச நாளைக்கு தொடரட்டும் இலவச தர்மான் கல்வி வழங்க வழி பாருங்கள் என்றே கூறுகிறோம்.
ReplyDeleteஅனைத்து பிரிவு வன்னியர்களையும் அருள் திரட்டுவதுபோல் அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் நம் சகோக்கள் திரட்டுவதில் வியப்பில்லை.
இந்த கணக்கீட்டின் படி எத்தனை குழுக்களாக இட ஒதுக்கீடு பிரிக்கப்பட வேண்டும்? எப்படி இருந்தாலும் ஒரு குறிபிட்ட சாதி அல்லது மதம் சார்ந்த இட ஒதுக்கீடு என்பது சாதியை மிகப் பெரிய ஆய்தம் ஆக்கி விடும்.
பாருங்கள் தன் சாதி மக்கள் தொகையை அதிகப் படுத்துபவர்கள் அனைத்து உள் பிரிவினரையும் சேர்க்கின்றார்.அவர்களுக்கிடையே மண் உறவு இல்லாத போது அவர்கள் எப்படி சரி சமாக வ்கைப்படுத்த முடியும்.ஏற்கெனெவே சாதிப் பிளவு ஆகி விட்டது.(கோவேறு)கழுதை நமக்கு எங்கு சுத்தினாலும் நம்க்கு பரிணாமமே தெரிகிறது.
இந்த சிக்கல்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருப்பது இருக்கட்டும் அதனையும் தேவையற்றது ஆக்க வழி நாடுங்கள் எனவே கூறுகிறோம்.
சாதி ரீதியாக கணக்கெடுப்பது சொந்த செல்வில் சூனியம் மட்டுமே!
நன்றி
சாதிகள் ஒழிய வேண்டும்; இதை பலர் வாயால் மட்டும், சிலர் மனத்தாலும் வாயாலும், சிலர் மனத்தால் மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் படிப்போரில் ஒவ்வொருவரும் தம் நிலையை எண்ணி சரி பார்க்கட்டும்.
ReplyDeleteநான் சாதி வாரி ஒதுக்கீட்டால் பயன் பெற்றவன் இல்லை. ஆனால் சமூக அக்கறை மிகக் கொண்டவன்; சமூகத்தைப்பற்றி எண்ண, கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டா எனத் தெரியவில்லை.
அரசின் பணமும், கருவிகளும், கட்டுமானமும் அனைவரின் கூட்டுரிமை என்ற ரீதியில் என் எண்ணங்கள்:
1 சாதிகள் ஒழியும் வரை (ஓர் நூற்றாண்டு குறைந்தது) இப்போது இருக்கும் ஒதுக்கீடு முறை ஆயிரம் ஓட்டைகளுடன் தொடர்வதை விட, சாதி வாரி கணக்கு எடுத்து அதை ஓரளவு சீர் செய்ய முயல்வதே சரி. அதனால் பலன் அனுபவிக்கும் அல்லது தம் சீரிய பங்கை விட அதிகம் பயன் பெரும் கூட்டங்கள் எதிர்க்கும்; மோதல்கள் நிகழும் தான். அதைத் தவிர்க்க முடியாது.
2 சாதிகளை வைத்து அரசியல் செய்யும் கட்சி தலைவர்களுக்கு அவர்களின் சரியான இடம் காட்டப்படவேண்டும்.
3 மண்டல் கமிஷனால் அறிமுகப்படுததப்பட்ட கிரீமி லேயர் - பொருளாதார மேல்தட்டு - அணுகுமுறை தாழ்த்தப்பட்ட குடியினர் பழங்குடியினர், (SC ,ST ) இடையேயும் வருவதே சரியாகும். அதற்கு முன்னோடியாக சாதி வாரி கணக்கு எடுக்கப்பட்டு பொருளாதார, சமுதாய வகைகளை அறிவது சரியே எனத் தோன்றுகிறது .
சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/04/blog-post_16.html
சார்வாகன் said...
ReplyDelete// //பாருங்கள் தன் சாதி மக்கள் தொகையை அதிகப் படுத்துபவர்கள் அனைத்து உள் பிரிவினரையும் சேர்க்கின்றார்.அவர்களுக்கிடையே மண் உறவு இல்லாத போது அவர்கள் எப்படி சரி சமாக வ்கைப்படுத்த முடியும்.// //
அகமண முறை இல்லாதவர்களை ஒரே சாதியாகக் கூறவேண்டும் என்று நான் கேட்கவில்லை. வன்னியர்கள் எல்லோரும் அகமண முறைக்கு உள்ளேதான் வருகிறார்கள். நான் "படையாட்சி" எனும் உட்பிரிவை சேர்ந்தவன். என் சகோதரர் மனைவி "வன்னியர்" உட்பிரிவை சேர்ந்தவர். எனது மனைவி "சோழனார்" உட்பிரிவை சேர்ந்தவர்.
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் "கவுண்டர்" பிரிவை சேர்ந்தவர். அவரது துணைவியார் "ரெட்டியார்" உட்பிரிவை சேர்ந்தவர்.
-- இப்படியாக எல்லா வன்னியர்களிடையேயும் அகமண முறைதான் உள்ளது. சில ஊர்களில் சில நிலபரப்புக்கு உள்ளே அல்லது வெளியே திருமணம் செய்ய மாட்டோம் என்கிற வழக்கம் உண்டு. அது சாதி அடிப்படையில் இல்லை.
வன்னியர்களில் சில பிரிவினர் பயன்படுத்தும் அதே பெயர்கள் மற்ற சாதியினரும் பயன்படுத்தும் பெயராக இருப்பதால் - குழப்பத்தை தவிர்க்க ஒரே பெயரை குறிப்பிட கோருகிறோம்.
எடுத்துக்காட்டாக, கவுண்டர் (கொங்கு கவுண்டர்), ரெட்டியார் (தெலுங்கு ரெட்டியார்), நாயக்கர் (தெலுங்கு நாயக்கர்), பிள்ளை (வெள்ளாளப் பிள்ளை) என்கிற குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அரசின் கணக்கெடுப்புக்கு உதவ வேண்டும் என்பதே எனது கருத்து.
சகோ நெற்குப்பை தம்பி& சகோ அருள்
ReplyDeleteஇப்போதுள்ள இட ஒதுகீடானது 1931 வரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கண்கீட்டை அடிப்படையாக் கொண்டது,80 வருடம் கடந்த நிலையில் மக்கள் தொகை விகிதம் மாறியதால் இட ஒதுக்கீட்டு விகிதத்தை மாற்ற சொல்கிறார்கள்.
நாம் கேட்கும் ஒரே கேள்வி
1.இந்த கண்கீடுகளை வைத்து மிக சரியாக என்ன செய்யப் போகிறார்கள்?
இக்கேள்வியின் பதில் தவிர அனைத்து விடயங்களும் இங்கே விவாதிக்கப் பட்டன.
அ)நான் முற்போக்காளனா?
இல்லை ஒரு சாதாரண மனிதன்
ஆ)பெரியார் விகிதாச்சார பிரதி நிதித்துவம் சொல்லி இருக்கிறார்.
அவர் சாதி மறுப்பு திருமணம் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
....
&&&&&&&&&
கல்வி,தொழிற் கூடங்கள் தனியார் மயம் என்ற சூழலில் இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தாது.
பெரும்பானமை கல்வி,வேலை வாய்ப்பு என்பது தனியாரை சார்ந்தே உள்ள சூழலில் என்ன செய்யப் போகிறார்கள்?
என் கணிப்பு சாதி,மத அரசியலை ஊக்குவிக்கும் செயல் தவிர எதுவும் செய்யாது இச்செயல்.
நிச்ச்சயம் சாதிரீதியான கண்க்கெடுப்பு நடக்கும்,அதன் மீது என்ன செய்யப் போகிறார்கள்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சம் பொறுத்து பார்போமே!
//ஒவ்வொரு சாதியின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பதை அறிய சாதிவாரிக் கணக்கெடுப்பு உதவும்.ஒவ்வொரு சாதியின் நிலைக்கு ஏற்ப - கல்வி வேலை வாய்ப்பு கடன் வசதி அரசின் ஒப்பந்தப் பணிகள் சிறப்பு முன்னேற்றத் திட்டங்கள் போன்ற பலவற்றையும் வகுத்து அளிக்க முடியும்//
ReplyDeleteஉதாரணத்திற்க்கு- எனது பெற்றோர்களின் பொருளாதார நிலை என்ன?
அவர்களால் என்னை மேற் கொண்டு உயர் கல்வி படிக்க வைக்க முடியுமா?
எனது பெற்றோரின் 12 மத வருமானங்கள் பரிசீலக்கபடும். எனது பெற்றேர்களால் பொருளாதாரரீதியாக முடியவில்லை என்று தெரிந்தபின் அரசே மேற்கொண்டு உதவும். அதேபோல் ஒவ்வொரு குடிமகனிடனுக்கும் அவர்களில் மேற் கொண்டு படிப்பிதற்கான தகுதிகளை கொண்டிருந்து மேற் கொண்டு படிக்க விரும்பும் ஒருவன் மேற்கொண்டு படிக்க வசதி இல்லையாயின் பொருளாதாரத்தில் பின் தங்கிய அந்த குடிமக்களுக்கு மிக குறைவான வட்டியில் கடன் வசதிகள் என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் முன்னேற்ற வாழ்வுக்காக வசதிகள் உதவிகள் செய்து அரசால் தரப்படுவது முன்னேறிய மேற்குலகு ஜனநாயக நாடுகளில் நடை பெறும் மிக சிறப்பான நடைமுறைகள்.
இங்கே எங்கேயுள்ளது கேவலமான கற்பனையான பிழைப்புவாதிகளின் சாதி முறைகள்.கேவலமான அசிங்கமான சாதி கொடுமைகளை நிராகரிப்போம்
வணக்கம் நண்பரே,
ReplyDeleteநல்ல அவசியமான பதிவு. இதை பற்றி எனது சில எண்ணங்கள்...
1) சாதியை தற்போதுள்ள சூழ்நிலையில் உடனடியாக மந்திரக்கோலை வைத்து ஒழிக்க முடியுமா, என்றால் முடியாது. சாதி என்பது இந்திய மக்களின் நாடி நரம்புகளில் குடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம். அது நரகத்திற்கு போனாலும் சொர்க்கத்திற்கு போனாலும் தொடரும். சாதி கொடூரங்கல் மறைய இன்னும் இரு நூற்றாண்டுகள் ஆகும் என நினைக்கிறேன். கலப்பு திருமணங்கள், சமூகசூழ்நிலைகள், நகரமயமாதல் போன்ற காரணங்களால்.
2) இந்தியாவில் எந்த சாதிதான் அவர்கள் முன்னேறிவிட்டது என்று சொல்லும்??. எல்லோரும் தாங்கள் பின்தங்கியவர்கள் என்று சொல்லுவார்கள். சச்சார்sachar கமிஷன் போல அனைத்து சாதிகளுக்கும் ஒவ்வொரு கமிஷனை வைத்தால், அதன் பரிந்துரைகள் போல அனைத்து சாதிகளுக்கும் பரிந்துரை செய்யப்படும். அதனால் ஒரு சாதி பின் தங்கியது எனறு சொல்ல கமிஷன் அமைக்க அதன் எண்ணிக்கை முக்கியம்.
3) ஒரு சாதியின் முன்னேற்றம் என்பது அரசு வேலைவாய்ப்புகள் தான் என்பது இன்றைய அளவுகோளாக அரசியல்வாதிகள் சுட்டிகாட்டுகிறார்கள். எமது சாதியின் தொகை இவ்வளவு ஆனால் அரசு அதிகாரிகளில் நாங்கள் குறைவாக உள்ளோம் என்று அனைத்து சாதிகளும் சொல்கிறார்கள் பிரிதிநிதத்துவம் கேட்கிறார்கள். அதனால் எந்த சாதியினர் அதிகமாக இருக்கின்றார்கள் என தெரியவில்லை?
4) சாதி எண்ணிக்கை வைத்துக்கொண்டு, விகிதாச்சாரபடி அரசு வேலைவாய்ப்புகளில் உரிய பங்கினை பெற்றால் முன்னேறிவிட்டது என்று அர்த்தமாகி விடுமா என்று தெரியவில்லை. எல்லா பயன்களும் இந்த இந்த சாதிகளுக்கு என்று பிரித்து கொடுக்கும் நிலை வந்தால் சிரிய சாதிகள் காணாமல் போய்விடுமே? உதாராண்மாக தமிழநாட்டில் 40 அரசாங்க இடங்கள் காலியாக இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால், பெரிய சாதிகள் கைப்பற்றும் சிறிய சாதிகளுக்கு ஒன்றுமே கிடைக்காது. அதனால் அப்போதும் இப்போது இருக்கின்ற நிலைப் போல(BC. MBC etc) சாதிகள் ஒரு குழுக்களாக் ஆக்கப்படும்.
5) சாதி கணக்கு என்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. கணக்கை வைத்து சமூகம் முன்னேற்றத்தை செய்துவிடலாம் என்பது சரியல்ல. சாதி கணக்கு எடுத்தப்பின் தான் விவகாரமே ஆரம்பிக்கும், பிரச்சனகள் உருவாகும். இது சில தேர்தலில் தோற்ற சாதி தலைவர்களுக்கு ஒரு வரபிரசாதம்.
6) இப்போது இருக்கின்ற முறையே சிறந்தது. தரமான இலவச கல்வி மற்றும் மனிதவள தகுதியை அளித்தாலே போதும் முன்னேருவதற்கு. அதை ஏனோ அரசாங்கங்களால் செய்ய முடியவில்லை.
வாங்க நரேன்
ReplyDeleteநீங்கள் சொல்வதைத்தான் சொல்கிறேன்
இந்த சாதிக் கண்கீட்டின் பேரில் இட ஒதுகீட்டு விகிதாச்சாரத்தை மாற்றுவேன் என்கிறார்.எப்படி என்று தெளிவாக் சொல்லாமல் இருப்பதுத்தான் சிக்கல்.
எந்த ஒரு குறிபீட்ட சாதிக்கும் மட்டும் இட ஒதுகீடு அளிபது என்பது மிக பெரிய பிரிவினையை உண்டு பண்ணிவிடும் என்ப்து நம் கணிப்பு.
வேண்டுமானால் கண்கீட்டின் பேரில் இட ஒதுக்கீட்டு பயனாளி குழுக்களில்
மொத்தம் 10(ஒரு கண்க்கிற்காக) குழுக்க்ளாக் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து இபோதுள்ள நடைமுறை போல வே செய்ல் படுத்துவோம் என்றாலும் இது பயனாளிகளில் ஒரு அல்லோகேசன் அவ்வள்வுதான்!
கிழிந்த போர்வையை இழுத்து,இழுத்து பலர் போர்த்த முயல்வது போல்,கல்வி வேலை வாய்ப்பு தனியார் மயமாகும் போது இந்த நடைமுறை என்ன செய்ய இயலும்?
அனைவருக்கும் இலவச தரமான் கல்வி கொடுங்கள் என்றால் அதை பற்றி வாயை திற்க்க யாருக்கும் மனதில்லை!
நாம் இரக்சியம் சொல்கிறோம் இந்த சாதி ரீதியான் கண்க்கீடு எதற்கு என்று?
இது எங்கே செல்லும் என நான் சொல்லுகிறேன் ,இது சட்டமன்றம், பாரளுமன்ற தேர்தல் முறையில் ஓட்டு சதவீத அடிப்படையில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்னும் முறைக்கு இட்டு செல்லும்.
சாதி ஓட்டு 10% இருந்து அதில் பாதி 5% பெற முடிந்தால் தமிழ்நாட்டில் 10+ சட்டமன்ற உறுப்பினர்,2 பாராளுமன்ற உறுப்பினர் தனித்து நின்றாலே குறைந்த பட்சம் கிடைக்கும் என்ப்தால் பலரும் போட்டி போட்டு கூட்டணி அனைவரும் அமைப்பார்.வாரிசுகளுக்கு கொண்டாட்டம்.மத்திய மந்திரி ஆகும் வாய்ப்பு அதிகம்!! ஹி ஹி அவ்வள்வுதான்!
சாதி முன்னேற்றமாவது புடலங்காயாவது!
இதை செய்ய சமூக நீதி பெரியாரின் வெங்காயம் எல்லாம் வரும்!!!!
சாதீய அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் !
ஹா ஹா ஹா
நன்றி!
நண்பா நரேன், நம்பர் ஒன் எண்ணங்கள். அவ்வளவும் உண்மைகள்.
ReplyDeleteஎன்ன சகோ சார்வாகன் இவ்வளவு நடந்துடுச்சா? :)
ReplyDeleteநல்ல பதிவு....
என்னுடைய கருத்து என்னன்னா ஜாதிய தூக்கிட்டு பொருளாதரத்த அடிப்படையா வச்சி இட ஒதுக்கிடு தரனும் என்பதுதான். இதில் சில நடைமுறை சிக்கல் இருந்தாலும் அதை களைய வழிகளை கண்டுபிடிப்பது பெரிய விடயம் அல்ல.
நான் சொல்வது சரிதானே சகோ? :)
வாங்க சகோ புரட்சிமணி,
ReplyDeleteஎப்படியும் சாதி கண்க்கு எடுக்கப் போகிறார்கள்.சரி என்ன செய்கிறர்க்ள் என்பதை பார்க்க நம்க்கு மிக்க ஆவல்.
&&&&&
அதை விடுங்க ஏன் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது?
நல்ல வேலை வாய்ப்பு உல்ள இடங்கள் குறைவு.போட்டியிடுவோர் அதிகம்.பெரும்பாலும் போட்டியானது 1:10 க்கு மேல் செல்லும்.100 பேர் போட்டி
இட்டால் 10 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.
அனைவருக்கும் அரசு வேலை சாத்தியம் இல்லை.அப்படியெனில் விவசாயம் தொழில் துறை இலாப்மாக் வளர்ச்சி பெற்றால் மட்டுமே சாத்தியம்.
நாம் சொல்வது ஏன் 100பேருக்கும் கிடைக்கும் வண்ணம் வேலை வாய்புகளை உருவாக்க முடிவது இல்லை.
மனித சக்தி ஏன் முழுதாக பயன் படுத்தப்படுவது இல்லை?.
ஏன் சிறு தொழில் தொடங்கும் அள்விற்கு நம் மாண்வர்கள் தயார் செய்யப் பௌவது இல்லை.
அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது வாழ்வாதாரம் அனைத்து குடிமக்ன்களுக்கும் அளித்தே ஆகவேண்டும்.
எப்படி என்பதை பல்விதங்களில் விவாதிக்க்லாம்,சில செயல்முறைகளை பரிசோதித்து பார்க்க்லாம்.
இதை செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது அறியாமல் இருக்கும் கொஞ்ச அரசு வேலைகளுக்கு சாதிரீயாக் பிரித்து அளித்தால் சரியாக் போய்விடும் என்பவர்களை என்ன செய்வது?இதற்காக அனைவரும் ச்ண்டை போடுவதா!
எல்லாம் அரசியல்! வாரிசுகளுக்கு மந்திரி பதவிக்காக் எதுவும் செய்பவன் தங்களுக்கு நன்மை செய்வான் என எப்படி மக்கள் நம்புகிறார்கள்?
நம்க்கு விள்ங்க மாட்டேன் என்கிறது.
நன்றி சகோ
நீங்கள் சொல்வது சரிதான் சகோ, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
ReplyDeleteதொழில் தொடங்க நமது அரசாங்கமும் சரி, சமுதாயமும் சரி ஊக்கப்படுத்துவதில்லை. நமது இளைங்கர்களுக்கு அதற்க்கான தைரியமும் வருவதில்லை. அப்படியும் சிலர் செய்தாலும் சொந்த தொழில் செய்பவருக்கு எவனும் பொண்ணு தரமாற்றான் சகோ. ஒன்னு அரசாங்க வேலை வேணுமாம் அல்லது நிரந்தர தனியார் வேலை வேண்டுமாம்.
என்னத்த சொல்ல....
இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதற்குள்ளே ஒரு காமெடி பைட்....
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/04/17.html
எனது மறுமொழி அங்கே....
...........................................
தலைவர் அருள்.
கணக்கு எடுக்கும் முன்பே இப்படி ஒரு பிர்ச்சனையா???
/////
வன்னிய சமூகத்தினர் பலவிதமான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில பெயர்கள் மற்ற சாதியனராலும் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, வன்னியர்கள் பயன்படுத்தும் "ரெட்டியார்" பெயரை தெலுங்கு ரெட்டியார் சமூகத்தினரும், "நாயக்கர்" பெயரை தெலுங்கு நாயுடு சமூகத்தினரும், "கவுண்டர்" பெயரை கொங்கு கவுண்டர் சமூகத்தினரும், "பிள்ளை" பெயரை வெள்ளாளர் சமூகத்தினரும், "வாண்டையார்" பெயரை முக்குலத்தோர் சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர்.
//////
நீங்கள் சொன்ன சாதி பட்டப் பெயர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற வகையில் உள்ள சாதி பெருமைக்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
இந்த பட்டப் பெயர்களை உடைய மற்ற சாதியினர், எங்கள் பட்டப் பெயரை வன்னியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று உங்கள் கூற்றுக்கு எதிராக அவர்கள் சொல்லலாம் அல்லவா?
இந்தப் பட்டப் பெயர்கள் Sanskritisation ஆல் வந்தது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
சாதி ஆதிக்கம் கொடுமை என்பது நமது சமுதாயத்தில் நிதர்சனமாக இருக்கும்போது, அதை களைந்து சமூக நீதி ஏற்பட பல காரணிகளில் ஒன்று சாதியும் இருக்க வேண்டும். சாதிதான் இருக்க வேண்டும் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல.
முதல் படியாக சாதி பெருமை என்னும் மனக்கோட்டை கட்டுவதை கலையலாமே?
................................................
நண்பர் நரென்,
ReplyDeleteஇந்த சாதி என்பதும் பல் உள் பிரிவுகளை உடையது.சரியாக சொன்னால பலருக்கு சாதி என்பது ஒருவகை தூரத்து உறவுமுறை மட்டுமே.கிராமங்களில் திருமண சம்பந்தம் பேசும் போது எப்படியாவது தலைமுறை ரீதியான உறவு முறை இருக்கிறதா என்று பார்க்காமல் செய்ய மாட்டார்கள்.இதற்கு பல் குறியீடுகள் அவர் வம்சம் ,கோத்திரம் என்று பயன்படுத்துவது நம்க்கு பரிணாம் பொது முன்னோர்[common ancestor],ஜெனெடிக் மார்க்கர்[genetic markers] பற்றி ஞாபகப்படுத்தும்.
என்னைப் பொறுத்தவரை படித்த முன்னேறிய ஆட்கள் அரசியல் இலாபத்துக்காக் சாதி பிரச்சினையை கிள்ப்புகிறர்கள்.
சாதி உட்பிரிவினர் கூட அவர்களின் பிரிவைத் தாண்டி யோசிக்க மாட்டார்கள்.இப்படி அனைத்து உட்பிரிவினரும் ஒன்று என்ற கொள்கையாக்கத்திற்கு ஆதாரம் கேட்டது அருமை.
சாதி என்பதன் தோற்றம் பரவல் குறித்த ஆய்வுகளை திரு அம்பேத்கார் செய்தார்,பல கட்டுரைகளும் எழுதினார் அதனை அனைவருக்கும் பகிர்வதை விட தலித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவ்ர்களுக்கு அரசியல் இலாபமே முக்கியம்.
சாதி=பிறப்பின் அடிப்படையில் மக்கள் கூட்டம் சேர்த்தல்
மதம்=கொள்கை அடிப்படையில் மக்கள் கூட்டம் சேர்த்தல்
இரண்டும் ந்ம்மை பொறுத்தவரையில் ஒன்றுதான் எனினும் மதத்தைவிட சாதி பிரிவினை மிக ஆபத்தானது.
நன்றி
நரேன்
ReplyDeleteஅந்த சாதி ப்ட்டப் பெயர்களுக்கு காப்பிரைட் வைத்துள்ளது யார்?
ஆதாரப் பூர்வமாக் நிரூபிக்க சொல்கிறோம்!
நமக்கு உண்மை தெரிஞ்சாகனும்!
அப்புறம் கொஞ்சம் வரலாறு
இந்த யூதர்கள் ஏதோ "கேனப்பய ஊரில் கிறுக்குப் பய நாட்டாமை" என்ற வழியில் இஸ்ரெல் அமைத்து விட்டாலும் அவர்களுக்கும் நாம் ஒரே இனம என்று எப்படி சரியாக நிரூபிப்பது என்ற குழப்பம் வந்தது.ஏன் எனில் பலரும் வந்து நானும் யூதன் என குடியுரிமை கேட்கிறார்கள்.என்வே மரபணு பரிசோதனை செய்ய்லாம் என முடிவு செய்து, வந்து சேர்ந்த பல நாட்டு யூதர்களுக்கும் செய்து பார்த்தால் கிடைத்தது அதிர்சி!!!!!!
அனைவரின் மரபணுவும் அவர்கள் வாழ்ந்த நாட்டு மக்களின் மரபணுவோடு ஒத்துப் போனது.இஸ்ரேலில் காலம் காலமாக் வாழ்ந்த யூதர்களின் மரபணு பாலஸ்தீனர்களுடன் ஒத்துப்போனது.சத்தம் போடாமல் அந்த ஆய்வை மூடிவிட்டார்கள்.ஏதோ குத்து மதிப்பாக உறவுமுறை ஆவணங்கள் வைத்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கி வருகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Jews
இந்த விக்கிபிடியா படித்தாலே புரியும் என்றாலும் இது கொஞ்சம் பாலிஸ் பண்னப் ப்ட்டது.
இதெ போன்ற பல் ஆய்வுகள் தென்னிந்திய சாதிகளிடையே மானுடவியல் ஆய்வாளர்களால் நடத்தப்ப்ட்ட பல ஆய்வுகளும்ம் இது போன்ற முடிவுகளையே கொடுக்கின்றன.அது பற்றி எழுதலாம் என்றாலும் விருப்பம் இல்லை.
நன்றி!!!!!!!!!!
சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/04/blog-post_24.html
வணக்கம் நண்பர் அருள்
ReplyDeleteஉங்களின் பதிவு தொடுப்பிற்கு நன்றி
பதிவு படித்தேன்.
மூன்று விடயங்களில் மாறுபடுகிறேன்
1.நான் முற்போக்காளன என்பதெல்லாம் கிடையாது.உண்மையை தேடும் ஒரு எளிய மனிதன்.
2. திரு கி.வீரமணி தமிழர்களின் தலைவர் என்பது ஏற்க முடியாது .குறைந்த பட்சம் எனக்கு தலைவர் இல்லை.அப்ப்டியானால் நான் தமிழனே இல்லை என்று சொல்ல உங்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறேன்.
3.பதிவில் ஜாதி என்ற சொல்லை பயன் படுத்தியது.
முதல் இரு விடயங்களை பற்றி விவாதிக்க நேரம் இல்லை சாதி என்ற சொல்லையாவது பயன்படுத்தி "ஜாதி" என்னும் சொல்லை ஒழிக்க முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆகவே முதலில் ஜாதி என்னும் சொல்லையாவது ஒழிப்போம்!
மற்றபடி இங்கு அனைவரும் நலம்.அதே போல் தங்கள் நலம் நாடும்
சார்வாகன்
யூதர்கள் குடியுரிமை விண்ணப்பித்தவர்களிடம் யார் யூதர்கள் என்று மரபணு பரிசோதனை செய்தது ஒகே என்பது எனது கருத்து சகோ. ஆனால் தமிழர்களை சாதிவாரியாக பிரித்து கணக்கெடுப்பு நடத்துவது என்ன ஒரு கேவலம். ஒரு பின்னோட்டத்தில் படித்தேன் "நமது வன்னியர் இனம்" என்று ஒருவர் மிக பெருமையாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் தமிழ் இனமும் மிக மிக சிறு பான்மையாக தெலுங்கர் இனம் மற்றும் வேறு இனங்கள் வசிப்பது தான் உலகுற்கு தெரியும். எப்போதிலிருந்து வன்னி என்றொரு இனம் குடியேறியது? பல சாதி பெருமைகள் கதைக்கும் பின்னோட்டங்கள் நண்பர் நரேன் புரட்ச்சிமணியின் கருத்துக்களுக்கு பின் நீக்கபட்டது என்று எண்ணுகிறேன்.
ReplyDelete//வீரமணி தமிழர்களின் தலைவர் என்பது ஏற்க முடியாது .குறைந்த பட்சம் எனக்கு தலைவர் இல்லை.//
எனக்கும் அவர் தலைவர் இல்லை. தமிழர்களுக்கு எத்தனை தலைவர்கள் சகோ? வெளிநாடுகளில் சிலருக்கு தமிழ் அன்னை ஜெயலலிதாவே தலைவி.
சாதிவாரி கணக்கெடுப்புக்குபின் வரும் விளைவுகளை - முன்கூட்டியே அறிய...மருத்துவர் இராமதாசின் அறிக்கை;; சாதிவாரி கணக்கெடுப்பை நியாயமாக நடத்த வேண்டும்.
ReplyDeleteதற்போது எங்களுடை சாதி மக்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள் என்று கூறி, தமிழ்நாட்டின் மக்கள் தொகையை 50 கோடியை எட்ட வைத்துவிட்டார்கள் நமது சாதி தலைவர்கள்.
கணக்கெடுப்பிற்கு பின்னால் தங்கள் சாதி மக்கள் தொகை சிறியதாக இருந்தால், கணக்கெடுப்பு சரியாக நியாயமாக செய்யப்படவில்லை என்று ஒரே போடு போட்டு பிரச்சனைகளை உருவாக்குவார்கள். மாற்று சாதியினர் சதி என்பாரகள்.
இன்னும் இதைப் போல பல கேலி கூத்துகளை மக்கள் பார்த்து பரவசபட போகிறார்கள்.
வீரமணி திராவிடத்தை ஆதரித்து பேசுவதை நண்பர் அருள் மேற்கோள் காட்டி திராவிட கொள்கை சரிதான் என்று வன்னியர் தலைவர் மருத்துவர் இராமதாசுக்கு சொன்னால் நலம்.
முஸ்லீமில் ஜாதிகள் இல்லை என ஏன் ஒரு பொய்யை பரப்புகின்றனர். இதோ இணைப்பு.
ReplyDeletehttp://www.indianmuslimobserver.com/2012/04/mandalisation-of-muslim-politics-in.html
http://newindian.activeboard.com/t36847612/muslim-world/
பீகாரிலும் உத்தர்பிரதேசத்திலும் கீழ்ஜாதி முஸ்லீம்கள் இணைந்து வெற்றியாம்.
தலித் முஸ்லீம்கள் மற்றும் அனைத்து பிரிவுகளும் சரியாக விசாரித்து பதிவிடவேண்டும்.