Sunday, April 1, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம் பகுதி 11:வில்லியம் டெம்ப்ஸ்கியின் கேள்விகள்வணக்கம் நண்பர்களே,

நாம் அறிவார்ந்த வடிவமைப்பின் இன்ன்னும் ஒரு முக்கிய நாயகன் வில்லியம் டெம்ப்ஸ்கி  பற்றியும் சில பதிவுகள் எழுதுவோம்.

இவர் பற்றிய ஒரு சுருக்கமான் வாழ்வுக் குறிப்புகள்.

கணிதம் தத்துவம்,இரண்டிலும் முனைவர் பட்டம்,பல புத்தகங்கள்,ய்வுக் கட்டுரைகள், பரிணாம் கொள்கை விமர்சனத்திலும் தனக்கெனெ ஒரு பாணி என்று வலம் வரும் வித்தியாசமான் மனிதர்.


Education

Ph.D. philosophy University of Illinois at Chicago (1996)
MDiv. Princeton Theological Seminary (1996)
M.A. philosophy University of Illinois at Chicago (1993)
Ph.D. mathematics University of Chicago (1988)
S.M. mathematics University of Chicago (1985)
M.S. statistics University of Illinois at Chicago (1983)
B.A. psychology University of Illinois at Chicago (1981)[1]

Associations

Discovery Institute—senior fellow
Wilberforce Forum—senior fellow
International Society for Complexity, Information, and Design —executive director
Progress in Complexity, Information, and Design—general editor
Foundation for Thought and Ethics—academic editor
American Mathematical Society
Evangelical Philosophical Society
American Scientific Affiliation[1]


இவர் கருத்துகள் பற்றி வரும் பதிவுகளில் அறிவோம் எனினும் இவர்  மாணவர்களுக்காகஒரு 10 கேள்விகளை வடிவமைத்து உங்கள் ஆசிரியரிடம் கேளுங்கள் என வெளியிட்டதின் மொழியாக்கம் மட்டும் இப்பதிவில் அளிக்கிறோம். அவருடைய கேள்விகளின் மூலச்சுட்டி இங்கே


1. DESIGN DETECTION. If the universe, or some aspect of it, is intelligently designed,how could we know it? Do reliable methods for detecting design exist? What are they? Are such methods employed in forensics, archeology, and data fraud analysis?Could they conceivably detect design in biological systems?

வடிவமைப்பு கண்டுபிடித்தல்: ஒருவேளை பிரப்ஞ்சமோ,அல்லது அதன் ஒரு தன்மையோ அறிவார்ந்த வடிவமைப்பாக இருந்தால், அதனை நாம் அறிய முடியுமா? வடிவமைப்பை உறுதி செய்யக்கூடிய நம்பகத் தன்மை வாய்ந்த அறிவியல் முறைகள் உள்ளதா?அவை என்ன?. அந்த முறைகள் தடயவியல்,தொல்லியல், தகவல் தரவு மோசடி துறைகளின் பயன்பாட்டில் உள்ளதா? உயிரியல் அமைப்புகளிலும் வடிவமைப்பு இருப்பதை அவை கண்டறிய முடியுமா?

2. RELEVANCE OF SETI. The search for extraterrestrial intelligence (SETI) is a
scientific research program that searches for signs of non-human intelligence from
distant space. Should biologists likewise search for signs of non-human intelligence
in biological systems? Why or why not?

வேற்றுக் கிரக அறிவார்ந்த உயிர்கள் தேடுதலின் முக்கியத்துவம்: இது வேற்றுக் கிரகங்களில் மனிதன் அல்லாத அறிவார்ந்த உயிர்கள் இருக்க்லாம என தேடிவரும் அறிவியல் ஆய்வு ரீதியான துறை.. இதேபோல் உயிர் அமைப்புகளிலும் இப்படி மனிதன் அல்லாத அறிவார்ந்த உயிர்களின் பங்கு உள்ளதா என ஏன்(இல்லாமல்) ஆய்வு செய்யக் கூடாது?

3. BIOLOGY’S INFORMATION PROBLEM. What explains the origin of complex information-rich patterns in biological systems? Could biological systems exhibit informational patterns that cannot be adequately be explained by natural selection and other material mechanisms? What would such patterns look like?

உயிரியலில்  பொதிந்த உன்னத தகவலகள்:: உயிர் அமைப்புகளில் உள்ள உயர் தகவல் தொழில் நுட்பம்,உன்னத வடிவமைப்புகள் இவைகளின் தோற்றம் குறித்து எப்படி விள்க்க முடியும்?. இயற்கைத் தேர்வு மற்றும் இதர பரிணம் செய்லாக்கங்களினால் பொருந்தும் படி விளக்க இயலாத சிக்கலான உயிர் அமைபுகளின் தக்வல் அமைப்புகள் உள்ளதா? இந்த அமைப்புகள் எப்படி இருக்கும்?

4. MOLECULAR MACHINES. Can you give examples of structures in the cell that resemble machines designed by humans? Does the complexity of these molecular machines rival artifactual machines made by humans? Is there any solid evidence that such machines could have arisen apart from actual design?

மூலக்கூறு இயந்திரங்கள்: மனிதனால் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் போல் உள்ள செல் அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டு தர இயலுமா? இவை மனிதனின் இயந்திர வடிவமைப்புடன் போட்டியிடவில்லையா?.இதில் இருந்து இவை வடிவமைக்கப் பட்டு இருக்க்லாம் என்பதன் உறுதியான் சான்றாக‌ இல்லையா?

5. IRREDUCIBLE COMPLEXITY. Are there complex biological systems whose parts are all indispensable for the systems to perform their functions? If so, are such “irreducibly complex” systems evidence of intelligent design? If not, why not?

எளிமைப்படுத்த இயலாத சிக்க்லான வடிவமைப்பு(எ.சி.வ): உயிர் அமைப்புகளில் அனைத்து[ஒவ்வொரு] பாகங்களும் இன்றியமையாத,  சிக்கலான் வடிவமைப்பு கொண்ட குறிபிட்ட பணி செய்யும் அமைப்பு  உள்ளதா? இப்படி இருப்பின் இவை வடிவமைப்புக்கு ஆதாரம் அல்லவா?. இப்போது இல்லை எனில் ஏன் எப்போதாவது இருக்க கூடாது.

6. REUSABLE PARTS. Human designers reuse designs that work well. Life forms likewise reuse of structures that work well (the camera eye, for example). Is this evidence for common descent, evolutionary convergence, common design, or a combination of these? How do we decide among these options?

பொறியாளர்கள் சரியான் வெற்றிகரமான் வடிவமைப்புகளை பல் இடங்களில் பயன்படுத்துவார்கள்.இது போல் உயிர்களிலும் சில பொதுவான் வடிவ‌மைப்புகள் உள்ளன. இது எதற்கு  ஒரே(பொது) முன்னோர்,அல்லது பரிணாம் ஒருங்கினைவு அல்லது ஒரே(பொது) வடிவமைப்பு) க்கு சான்றளிக்கிறதா????


7. REVERSE ENGINEERING. In trying to understand biological systems, molecular biologists need to “reverse engineer” them. In other words, they start with functional biological systems and then use their knowledge of engineering to determine how the systems could have been designed and built. Is this evidence that the systems were engineered to begin with?

பிரித்தறியும் பொறியியல்: ஒரு உயிர் அமைப்பை அறிய அதனை பகுதி ரீதியாக் பிரித்து அறிவதே நடைமுறையில் உள்ள மூலக்கூறு அறிவியல் முறை ஆகும். முழு அமைப்பில் இருந்து இது எப்படி வடிவமைக்கப்ப்ட்டு இருக்க்லாம் என்றே பிரித்து அறிய முயல்வதால்,இது அவ்வமைப்புகள் படைக்கப்ப்ட்டு இருக்கலாம் என்பதன் சான்றாகுமா?

8. PREDICTIONS. Do intelligent design theory and neo-Darwinian theory make different predictions? Consider, for instance, junk DNA. For which of the two theories would the idea that large stretches of DNA are junk be more plausible? Which theory is more likely to look for unknown uses of seemingly useless biological structures?

அறிவியல் கணிப்புகள்;அ.வ கொள்கை,பரிணாம் கொள்கை இவற்றின் கணிப்புகள்  வேறுபடுகிறதா?.எடுத்துக் காட்டாக ஜீனோமில் பெரும்பானமை ப்யன்படாத(குப்பை) டி என் ஏ என்ற கருத்தில் இரண்டும் வேறுபடுகின்றன்.இதில் எந்த கொள்கை இபோதைய ப்யனற்ற(கருதப்படும்)  உயிர் அமைப்புகளின் எதிர்கால ப்யன்பாடு குறித்து சரியாக முனைப்பு காட்டுகிறது?

9. FOLLOWING THE EVIDENCE. What evidence would convince you that intelligent design is true and that neo-Darwinism is false? Could such evidence even exist?What would it look like? If no such evidence exists or indeed can exist, how can neo-Darwinism be a testable scientific theory?

9.ஆதாரம் காட்டும் வழி : எந்த ஆதாரம் நியோ டார்வினியம் த்வறு,அ.வ கொள்கை சரியானது என உங்களை நம்ப வைக்கும்?நியோ டார்வினியம் எப்படி அறிவியரீதியாக் பரிசோதிக்கப்பட்ட கொள்கை ஆகும்?

10. IDENTIFYING THE DESIGNER. Can we determine whether an object is designed without knowing anything about its designer? If an unidentified intelligence was responsible for designing biological systems, how could we know it?

10. ஒரு அமைப்பு வடிவமைக்கப் பட்டதா என வடிவமைப்பாளரை பற்றி எதுவுமே அறியாமலேயே உறுதி செய்ய இயலுமா? ஒரு அறியா ,அறிவார்ந்த சக்தி இந்த உயிர் அமைப்புகளின் வடிவமைப்புக்கு காரணம் எனில் அதனை கண்டறிய இயலுமா?

XXXXXXX

இக்கேள்வி அனைத்தும் எ.சி.வ கொள்கை போலவே உள்ளதே என்றால் பாராட்டுக்கள் நம் தொடரை ஒழுங்காக் படித்து வருகிறீர்கள்.

எ.சி.வ என்று பரிணம் கொள்கையின் படி எதுவும் இருக்க இயலாது.டி என் ஏவின் சிக்க்லான் வடிவமைப்பு எப்படி வந்தது என்பது ஆய்வில், உள்ள ஒரு விடயம்.இது தவிர அனைத்து உயிர் அமைப்புகளுக்கும் பரிணாம வரலாறு உண்டு.வேதியியலில் ஒவொரு மூலக்கூறும் ஒவ்வொரு வடிவத்தில் இருப்பது இயல்பான விடயமே,எனினும் டி என் ஏவின் செய்லாக்கம்,தன்னை பிரதியெடுக்கும் அமைப்பு என்பதுதான் பிரச்சினை.


இந்த கேள்விகளுக்கு விள்க்கமோ,மறுப்போ எதுவும் தேவையில்லை,தேவை எனில் பின்னூட்டத்தில் விவாதிப்போம்!,பரிணாம் எதிர்ப்பு கொள்கையாளர்களின் சில கேள்விகளை மொழியாக்கம் செய்து அளித்தேன் அவ்வளவுதான்!

பரிணாம் எதிர்ப்பாளர்கள் அ.வ என்று கொள்கையாக்கம் மூலம் எதையும் விள்க்கு முயல்வது இல்லை ,அதைவிட பரிணாம் கொள்கையை எப்படியாவது குழப்பி,தவறாக‌ காட்ட  முடியுமா என்வே முயல்கிறர்கள் என்பதை அறியலாம்.

இருப்பினும் பரிணாம் எதிர்ப்பும்,மத படைப்பியலும் ஒரே சம்யத்தில் செய்ய இயலாது என்பதையும் கேள்விகள் நிரூபிப்பதுதான் நான் குறிப்பிட விரும்பும் கருத்து.

பரிணாம எதிர்ப்பாளர் கூட‌ மத படைப்பியல் கொள்கையை சீந்துவது இல்லை!


நன்றி

1 comment:

 1. கேள்விகளை மட்டும் கேட்கச் சொன்ன டெம்ஸ்கி அதற்கான பதில் வெளியிட்டாரா?

  எந்தக் காலத்தில் பரிணாம எதிர்ப்பாளர்கள் இதுதான் இப்படித்தான் என்று தெளிவாக் பேசினர்? So No Answrs!!!!!!

  அவர்கள் பிரபஞ்ச தோற்றம் பற்றி பேசுவர் இல்லையேல் முத‌ல் செல் எப்படி வந்தது என்பார்கள்.எல்லா விவாதங்களும் கேள்விகளும் இதில் போய்த்தான் முடியும்.

  அவர்களுக்கு கேடக மட்டும்தான் தெரியும்.எனினும் நாம் இந்த கேள்விகளை அலசுவோம்.முதல் கேள்வி

  பிரபஞ்சம்[அல்லது அதில் ஏதோ ஒரு தன்மை] வடிவமைக்கபட்டு இருந்தால் அறிய முடியுமா?

  வடிவமைப்பு என்பது குறிப்பிட்ட பணிக்காகவே அதன் ப்குதிகள் தயாரிக்கப்பட்டு, இணைத்து அந்த பணியினை நிறைவேற்றுவதுதான்.

  ஒரு வேளை பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டது என்றால் எதற்காக என்ற கேள்வி மிக இயல்பாக வரும்.

  மனிதனுக்காக மட்டும் என்றால் பிரபஞ்சத்தின் பிற இடங்களில் உயிர்கள் உள்ளதா என்பதும் அடுத்த‌ கேள்வி வரும்.

  பிற இடங்களில் உயிர்கள் கண்டு பிடிக்கப்படாததால் இப்பிரபஞ்சத்தில் மிகச்சிறிய‌ தூசி போன்ற பூமியில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளாக‌ மட்டும் வாழும் ஹோமோ சேஃபியனுக்காக் இவ்வளவு வேலை செய்வது அறிவார்ந்த செயலா?

  சரி அதை விடுவோம்
  *******

  இக்கேள்விக்கு இப்பிரபஞ்சம் என்பது ஒரு தொடர் இயக்கத்தில் ஒரு ப்குதி மட்டுமே என்பதும் பெரு விரிவாக்கத்தின் முன் என்ன நடந்து இருக்கலாம் என்பது கருதுகோள்களாக்வே மட்டுமே உள்ளன என்பதையும் கருத்தில் கொள்ல வேண்டும்.

  பெரு விரிவாக்கப் புள்ளியில் அனைத்தும் உள்ளே வடிவமைக்கப்பட்டு இருந்தது என ஆய்வுரீதியாக உறுதி செய்ய இயலாது,எனினும் முன் கூறியபடி பூமி, பூமிக்குத் தேவையான‌ சூரியன்,சந்திரன்… என மிக எளிமையாக இருந்தால் மனிதனுக்காக் படைக்கப்பட்டது என அடித்துக் கூறலாம்.

  ஆனால் சிக்கலான அமைப்புகளை படைப்பாக காட்டி குழப்புவதை தவிர எதுவும் கூற இயலாது.

  பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து விரிவடைந்து பல் கேலக்ஸி,நட்சத்திரம்,கிரகங்கள் ... தோன்றுவதும்,ஒரு செல் உயிரினத்தில் இருந்து அனைத்து உயிர்களும் தோன்றுவதும் ஒத்த விடயங்களே.

  இதில் முன்னதை ஏற்பதும்,பின்னதை எதிர்ப்பதும் நகைச்சுவை மட்டுமே!

  இக்கெள்வி [வழக்கம் போல்]ஒரு குழப்பம் ஏற்படுத்தும்,ஒரு முடிவுக்கு வர இயலா கேள்வியே தவிர வேறில்லை.
  இம்மாதிரி கேள்விகளை அ.வ[ID] கொள்கையாளர்கள் மிகவும் விரும்புவது இய்ல்பே!

  ReplyDelete