நித்தியானந்தா என்னும் ஆன்மீக பிரச்சாரகர் சர்ச்சைக்குறிய
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி புகழ்
பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது எதிர்கால மதுரை ஆதினமாக பதவி ஏற்கிறார் என்பது செய்தியை
அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கொண்டே கேட்க வெண்டி உள்ளது.
அரசியலிலும் ஆன்மீகத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும்
என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இதை என்னைசொல்வது என்றே தெரியாததால் பதவி ஏற்பு குறித்த காணொளிகளை மட்டும் வழங்குகிறோம்.பிற
மாநில மொழி காணொளிகளை சேர்த்து வழங்குகிறோம்.
சகோதர சகோதரிகளே ஆன்மீக(மத) பிரச்சாரகர்களிடம் எச்சரிக்கையாக்
இருக்கவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
நன்றி
In English
Kannada
Telugu
இந்து மத ஆர்வலர் -:) நண்பரே...
ReplyDeleteமதுரை ஆதினத்துக்கு இனிமேல் “நித்யா” ஆனந்தம் தான். LOL.
மதுரை ஆதனத்தின் பாரம்பரியத்தையே சிதைத்து விட்டது. முன்னர் கொலை கடத்தல் குற்றச்சாட்டுகளால் விழுந்தது இப்போது குழிக்குள் சென்றுவிட்டது.
தமிழ் சினிமா படங்களில் வரும் காமெடி காட்சிகள் போல இருக்கிறது. விவேக் சில நேரங்களில் சாமியார்களை கலாய்ப்பாரே அதேப்போல.
ஆனாலும் இந்த காட்சிகள் நமது சுவனப்பிரியனுக்கு பேரானந்தத்தை தந்தது ஒரு ஆறுதல் விடயம்.
துஷ்டணைக் கண்டால் தூர ஓடு. சாமியார்களை கண்டால்- நமது மில்கி வே கேலக்ஸியை விட்டு.. தூர ஓடு ஓஓஓஓஒடுடுடுடுடுடு.
வாங்க சகோ நரேன்
ReplyDeleteநாம் சாதி மத பிரச்சாரகர்களை எதிர்ப்பது அவை மக்களை சுரண்டி பிழைப்பதும்,பிரிவினை ஏற்படுத்துவதால் மட்டுமே.அதில் நம்க்கு பாரபட்சம் கிடையாது.இப்படி நித்தி மாதிரி ஆட்களையும் நம்பி செல்லும் மக்களை காணும்போது மிக்க அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுகிறது.
பாருங்கள் ஆடிப்பாடும் அனைவருமே குறைந்த பட்சம் மத்திய தர கல்வி கற்றவர்களே ,வெளிநாட்டினர் கூட உண்டு.
இது ஏன் எனில் மன் அழுத்தம்,ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை&அன்பு இன்மை உடபட் பல் சமூக பொருளாதார காரணங்களை கூறலாம்.
இப்போது நித்தி ஆர்வலர்(ஹி ஹி) ஒருவரிடம் விவாதித்தால் அவர் என்ன சொல்வார்?.
நித்தியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போட்டி பிரச்சாரகர்களின் சதி,எங்கள் நித்தி அங்கீகரித்த புத்தகங்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா என்று கேட்டால் எப்படி இருக்கும்?
இப்படி ஆடுகிறார்களே என்றால் அதற்கும் தத்துவரீதியாக ஒரு விள்க்கம் சொல்லி விடுவார்கள்.
ஒருவேளை நித்தி குழு பல்கி பெருகினால் இன்னும் 100 வருடம் கழித்து அப்படித்தான் சொல்வார்கள்.இச்செய்திகள் அனைத்தும் ______ இனத்தவரின் சதி என்று!.
நித்தியும் பிற மததவரின் சதி என்றே இப்போதும் கூறுகிறார்.
தவறுகளை நியாயப் படுத்துபவனும் அதே தவறை செய்கிறான் என்றே கூறுகிறோம்.
நித்தி போன்றவர்கள் வரலாற்றில் ஒதுக்கப் படவேண்டியவர்கள்.
"இதுதான் இந்தியா" பிரச்சாரத்தில் நித்தியும் சேர்ந்து விடுவாரா!!!!!!!
கன்னட தெலுங்கு தொலைக்காட்சி சகோதரர்கள் விழிப்புணர்வு செய்தி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்!
நித்த்யின் பதவி ஏற்புக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம்!
நன்றி
நீங்கள் இதுபோன்ற பதிவுகள் எழுதுவது ஆச்சரியமாக இருந்தாலும், சமூகத்துக்கு ஆரோக்கியமானது. வெல்டன் சார்.
ReplyDelete''''/நித்தி போன்றவர்கள் வரலாற்றில் ஒதுக்கப் படவேண்டியவர்கள்./'''
சரியாக சொன்னிர்கள்.
இன்னும் சரியாக சொல்வோம்.
மதுரை ஆதீனம் போன்ற பதவிகளும் இந்துக்களால் ஒதுக்கப்பட வேண்டியவை.
மட்டுமல்ல,
சொத்துக்காக சோரம்போன மதுரை ஆதினத்துக்கும் நமது மிகக்கடும் கண்டனங்களை பதிவு செய்வோம்.
அன்புள்ள நண்பரே உங்களின் அறிவியல் பதிவுகளுக்கு நான் தீவிர வாசகன் கணிதத்தை பற்றி நீங்கள் செய்யும் பதிவிடலை எனது வகுப்பு மாணவர்களுக்கு சொல்லி வருகிறேன் . காம களியாட்டம் நாடத்தும் ஆண்மீக புரோக்கர்களிடமிருந்து மக்களை விழிப்படையச்செய்யும் பதிவை வெளியிட்டு உள்ளீர்கள் வாழ்துகள்
ReplyDeleteHe, Niththi, is making the news. People or his devotees are jumping in joy. Unbelieveable.....
ReplyDeleteThanks for sharing :)
சகோ யு எஃப் ஓ
ReplyDeleteநாம் மனிதர்களை பாதிக்கும் எந்த விடயத்தையும் எதிர்க்கிறோம்.இந்து மதத்தின் நிறுவனபடாத தன்மைதான் அதன் பலம்.அதனாலதான் பல மாற்றங்களையும் சீர் திருத்தங்களையும் எளிதில் ஏற்க முடிகிறது.யாருக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி வணங்கலாம்.
இந்த நெகிழ்வான தன்மையை பயனபடுத்தி நித்தி போன்ற சில மூளைச்சலவை கோமாளிகள் தங்களின் நிறுவன்ப் படுத்தப்ப்ட்ட அமைப்புக்குள் ஆள் சேர்ப்பது மிக ஆபத்தானாது.
இறை நம்பிக்கை இல்லையெனில் நல்லது.இருந்தால் தனிப்பட்ட உண்மையறியும் தேடலாக மட்டும் இருக்க வேண்டும் என்றே கூறுகிறோம். இப்படிப்பட்ட கோமாளிகளிடம் சிக்கி அரிய வாழ்வை இழக்க வேண்டாம் எனவே கூறுகிறோம்.
சரியாக சொன்னீர்கள் நித்தியின் குரு மதுரை ஆதினத்திற்கும் கண்டனம்.
நன்றி
&&&&&&
வணக்கம் ஆசிரியர் சகோ குரு
நம் பதிவு உங்கள் மூலம் மாணவர்களை சென்றடைவது மிக்க மகிழ்ச்சி.கணிதம் பற்றி அதிகம் எழுதுவோம்.
இம்மாதிரி விடயங்களை எழுதாமல் தவிர்க்கலாம் என்றாலும் உண்மை அறிவதும் கற்றலே.
&&
நன்றி.
சகோ இரதி
நித்தி சிஷ்ய கோடிகள் ஆனந்த பரவச நிலையில் மெய் மறந்து ஆடுவதை பார்க்கும் போது என்ன சொல்வது,செய்வது என்றே புரியவில்லை.நம் சுற்றம் நண்பர்களுக்கு எடுத்துரைத்து பாதுகாக்க முயற்சிக்க்லாம்.
நன்றி
சகோ சார்வாகன்!
ReplyDeleteசிறந்த பகிர்வு. இது போன்று பல இடங்களிலும் எதிர்ப்பு வந்தால்தான் இது போன்ற நபர்கள் மக்களை வழி கெடுப்பதில் இருந்து தடுக்க முடியும்.
வாங்க சகோ சுவனன்
ReplyDeleteஉங்கள் பதிவு மூல்மே நமக்கு தகவல் தெரிந்தது.வழக்கம்போல் அதனை சரி பார்ர்க்க செய்திக் காணொளி பார்த்தால் அதிர்ச்சி.மதுரை ஆதின பதவியை காசு கொடுத்தோ வேறு ஏதோ ஒருவிதத்தில் நித்தி பெற்றது கூட நம்க்கு ஆச்சர்யம் இல்லை.இன்னும் நித்தியை நம்பி பல இளைய தலைமுறை இவனை பின்பற்றுவதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி.
இதனை எப்படி சரி செய்வது என்றே சிந்திக்க வேண்டும்.நித்யானந்தவை எந்தவிதத்திலும் நியாயப் படுத்துவதும்,ஆதரிப்பது தவறு என்பதால் உங்களுடன் இந்த விடயத்தில் 100% ஒத்துப் போகிறேன்.
பின்னூட்டம் இடும் நண்பர்க்ள் கூட நித்தியை வேறு யாருடனும் ஒப்பிட்டு பிரச்சினையின் தீவிரத்தை திசை திருப்ப வேண்டாம் என வேண்டுகிறேன்.
இந்த சிஷ்யர்கள் கூட்டத்தில் என் சகோதர்னோ சகோதரியோ இருந்தால் எப்படி வருந்துவேனோ அந்த மன்நிலையில் மட்டுமே இப்பதிவை வெளியிடுகிறோம்.
நன்றி
நித்யானந்தா மாதிரி ஆட்கள் மத தலைவராக வரும் அநியாயத்தை கண்டித்து பதிவிட்ட சகோவுக்கு நன்றி.
ReplyDeleteபக்த கோடிகளிலிலே உண்மையாகவே வெள்ளை இன பெண்களும் நிற்கிறார்கள். நம்மை நோக்கி அலை அலையாக மேற்குலக பெண்கள் வருகிறார்களென்று எவரும் பதிவெழுதி மானத்தை வாங்காதது பெரிய ஆறுதல்.
சகோ குயிக்ஃபாக்ஸ் வாங்க,
ReplyDeleteகாணொளியை முதலில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் போகவில்லை.மேற்குலகப் பெண்களையும் தமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போட வைத்த நித்தியின் மகிமைதான் என்னே!.
நம் கேள்வி எல்லாம் இந்த ஆளுக்கு இன்னும் எப்படி கூட்டம் சேருது?.
நித்தி காசு கொடுத்து கூட்டியது அல்ல கூட்டம் .
நித்திக்கு காசு கொடுத்துக் கூடும் கூட்டம்!!!!!!!.
நித்தியும் ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு வியப்பு விருந்து அளிப்பதில் தவறுவது இல்லை.
இக்காலத்திலேயே ஒருவரின் மீது இப்படி வெறித்தன்மான் பற்றுக் கொண்ட கூட்டம் உருவாகும் போது கடந்த கால நிகழ்வுகளில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கும்.
கொடுமை!!!!!!!!!!!
நன்றி
ஒன்னுமே புரியல உலகத்தில.என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
ReplyDelete//நித்தி மாதிரி ஆட்களையும் நம்பி செல்லும் மக்களை காணும்போது//
ReplyDelete//நம் கேள்வி எல்லாம் இந்த ஆளுக்கு இன்னும் எப்படி கூட்டம் சேருது?.//
எனக்கு ஒண்ணுமே புரியலை இது போல் மனிதர்கள் பின்னால் திரியும் கூட்டங்களைப் பார்த்தால் சிரிப்பு வருது; ஆனால் பதில் தெரியலை
எல்லோருக்கும் ‘குத்தாட்டம்’ போடும் ஆசை இருக்கும்போலும்! ‘மனிதக் கடவுள்லள்” இந்த ஆசையை நன்கு நிறைவேற்றுவார்கள் போலும்!
ReplyDeleteகடைசி காணொளியில் ‘வாராரு வராரு நித்யா சாமி வாராரு’ பாட்டு செம!!! ஆட ஆசையா வருதுங்க ,,,
நண்பரே,
ReplyDeleteஇந்திய சமூகத்தில் மன சம்பந்த பிரச்சனைகளுக்கு, மன நோய் மருத்துவர்களை அனுவது பல காரணங்களால் நடைமுறையில் இல்லாததால், சாமியார்கள் பெருகி, முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், அவர்களை நோக்கி ஓடுகிறார்கள். இந்த மன அழுத்தம் மற்றும் பிரச்சனகளுக்கு முக்கிய காரணம் கூட்டு குடும்பம் சிதைந்ததுதான் என்ற எண்ணத் தோன்றுகிறது.
நமக்கு சிரிப்பு மூட்டும் நித்யானந்தா எப்படி நித்யமாக non-stop சிரிக்கிறார் என தெரியாது!!!!!. ஆண்கள் ஆடுவதை ஏன் காட்டவில்லை???
நித்யானந்தா மதுரை ஆதினம் ஆனதுக்கு கண்டனம் தெரிவித்தால், கண்டனத்துக்குதான் கேவலம். கண்டனம்கூட தெரிவிக்க தகுதியற்ற சம்பவம் அது.
//நித்யானந்தா மதுரை ஆதினம் ஆனதுக்கு கண்டனம் தெரிவித்தால், கண்டனத்துக்குதான் கேவலம்//
ReplyDeleteஎன்னமாய் போட்டு தாக்குறாங்கப்பா!
நித்தி நம்ம ஆளு தானே, அதனாலே அவர் புனிதர், நல்லவர் அவரை பற்றிய குற்றசாட்டுகள் எல்லாமே அமெரிக்கன்,யூதர்கள் சதி என்று எல்லாம் சொல்ல வேண்டிய பரிதாபமான நிலமை கிடையாது. காபிர் என்று பெருமையாக சொல்லி தலை நிமிர்ந்து நிற்க்க முடியுது.
சகோ.சார்வாகன்,
ReplyDeleteகலி முத்திடுத்துனு பெரியவா சொல்வாளே அதான் இது :-))
சாமியார்களுக்கு தான் இது பொற்காலமா இருக்கு ,அதுவும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு செம மச்சம் , போறாங்க உச்சம்!
அறிவியல்,நாத்தீகம் ,பகுத்தறிவு புண்ணாக்கு எல்லாம் பேசி என்னக்கண்டோம் ஒரு குட்டி கூட எட்டிப்பார்க்கவில்லையே... பேசாம நானும் ஒரு மடம் ஆரம்பிச்சு , நெட்ல பல ஆன்மீக சமாச்சாரம் படிச்சு பிரசங்கம் செய்து கல்லா கட்டலாம்னு பார்க்கிறேன் , எதாவது மார்கெட் போன நடிகை சிஷ்யையா சேராமலா போயிடும் ... வரிங்களா ஒரு மடம் ஆரம்பிக்கலாம் கூட நரேனையும் பங்குதாரர் ஆக்கிடலாம் :-))
சகோ!நீங்களும் ஜோதியில கலந்துகிட்டிங்களாக்கும்.
ReplyDeleteஇப்பத்தான் வவ்வாலுக்கு என்ன கொடுமை சார் இது பதிவு போட்டு விட்டு வந்தேன்.
இப்ப இன்னுமொரு என்ன கொடுமை சார் இது சொல்லிக்கிறேன்:)
வணக்கம்
ReplyDeleteநண்பர்கள் முரளி,தருமி அய்யா,வவ்வால்,நரேன்,குயிக்பாக்ஸ்,மற்றும் இராஜநடராஜன்
முதலில் எனக்கு இந்த காணொளி பதிவு வெளியிட விருப்பமே இல்லை எனினும் இது குறித்த ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதல் மட்டுமே!.
சில விடயங்களை தெளிவு படுத்தி விடலாம்.
1.இந்த மாதிரி நிறுவனப்படுத்தப் பட்ட ஆன்மீக நிறுவனங்களும் ஒரு வகை மூளைசலவை மதமாற்றப் பிரச்சாரமே செய்கின்றன.இந்து மதத்தில் நெகிழ்வுத் தனமையால இது மதம் சார்ந்த விடயமாக் பார்க்கப்படும் அபாயம் அதிகம்.நித்தி போன்றோருக்கு அங்கீகரமாக ஒரு மடத் தலமை (சரியான பெயர்) வழங்கப்படுவது கடந்தகால விடயங்களை நியாயப்படுத்துகிறது.
2.ஒருவெளை நித்தி குற்றம் அற்றவர் (வாய்ப்பே இல்லை!!! ஹி ஹி அதனால்தான் இந்த கூத்து) என்றாலும் கூட அதனை தவறு என நிரூபிக்கும் வரையில் இப்படி விளம்ம்ப்ரம் தேடாமல் இருக்கலாம்.
இது ஏன் நிகழ்கிறது என்றால் எதார்த்த வாழ்வின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல்,மனம் விட்டு பேச யாரும் இல்லாதவர்களே இப்படிப்பட்ட ஆன்மீக நிறுவனங்களை நாடி செல்கின்றார்.ஒருவித மன நோய் போன்றது இவர்களின் நம்பிக்கை.எந்த ஒரு நிருபணமும் இவர்களிடம் எடுபடாது.இந்த ஆன்மீக விளக்கம்,வாழ்வுமுறை எனக்கு வேறு இடத்தில் கிடைக்காத மன உணர்வுகளை வழங்குகிறது என்பது மட்டும் அவர்களுக்கு போதும்.இந்த மன் உணர்வு பெற இயலாத அற்ப மனிதர்கள் நம்மை புரிய முடியாது என்பதே அவர்கள் எண்ணம்.
சகோ நரேன் குறிப்பிட்டபடி கூட்டுக் குடும்பவாழ்வு குலைந்ததும் ஒரு காரணம்.ஒருவேளை பெற்றோரிடம் சொல்ல முடியாத பிரச்சினைகலை தாத்தா,பாட்டி, மாமா ,சித்தப்பா,சித்தி ,அத்தை போன்றவர்களின் சொல்லி தீர்வு கண்டது எல்லாம் போய் விட்டது.
அனைவருக்கும் எங்கும் எதிலும் போட்டி,போட்டியில் வெல்ல எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நட்பையும் சிதைக்கிறது. நாம் பள்ளி ,கல்லூரிகளில் படித்த போது இருந்த நட்பு நெருக்கம் இபோது இருப்பது போல் தெரியவில்லை.
சரியான பெற்றோர்,ஆசிரியர்கள், சமுக ஆர்வலர்கள் பலரும் சேர்ந்தால் மட்டுமே இம்மாதிரி பிரச்சினைகளை தீர்க்க இயலும்.இம்மூவரில் உள்ள பிரச்சினைகளே இம்மாதிரி ஆன்மிக நிறுவனங்களை உருவாக்குகிறது.
நன்றி
ஓகே திசை திருப்பிவிட்டேன் போலிருக்கு.இப்போதுதான் நீங்கள் எழுதியிருந்ததை படித்தேன்.
ReplyDeleteமறுமொழி பதிந்திருந்தால் நீக்கிவிடுங்கள்
வாங்க சகோ இ.சா
ReplyDeleteஉங்கள் மறுமொழி ஒன்றும் இல்லை.நம் வேண்டுகோள் இந்த பதிவுக்கு மட்டும்தான்,ஏறற நீங்கள் உட்பட்ட அனைவருக்கும் நன்றி .சகோ மதுரன் தாவா சகோக்களை பின்னி விட்டார்.அங்கேதான் அழகிய முறையில் விள்க்கி விட்டீர்களே சகோ!
நன்றி