Wednesday, April 11, 2012

சுனாமி செயல்பாடுகள் பாதுகாப்பு பற்றி அறிவோம்:காணொளி




வணக்கம் நண்பர்களே
சுனாமி வரவில்லை என் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடும் வேளையில் இது பற்றி கொஞ்சம் விடயம் அறிவதும் இன்றியமையாதது.

சுனாமி என்னும் ஜப்பானிய மொழி வார்த்தையை ஆழிப் பேர‌லை அல்லது கடற்கோள் என மொழியாக்கம் செய்ய்லாம். இக்காணொளி சுனாமி ஏன் நடக்கிறது ? அதற்கான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்குகிறது.

பூமியின் அடுக்குகளான டாக்டோனிக் தக்டுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி த்ள்ளுவதுதான பூகம்பம்.சுனாமி இரண்டின் காரணமாக இக்காணொளியில் கூறுகின்றனர். சுனாமி என்பது க்டலுக்கு அடியில் ஏற்படுவெதே வித்தியாசம்.இது 25,000 மடங்கு ஹிரோசிமா அணு குண்டை விட சக்தி வாய்ந்தது என்வும் கூறுகின்றனர்.

பசிஃபிக் கடலில் பல முன் அறியும் கருவிகளை அமரிக்க அரசு பொருத்தி உள்ளதும் இது கண்காணிக்கப்பட்டு சாட்டிலைட் மூலம் எளிதில் த்கவல்கள் பெற்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

இந்திய பெருங்கடலில் இப்படி அமைப்பு இல்லை என்பது மிக வருத்ததிற்கு உரிய விடயம்.

இயற்கை சீற்றம் என்பதை தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்து அதில் இருந்து மக்களை காப்பதே முக்கிய நோக்கமாக் நாடுகள் நினைக்கவேண்டும்.சுனாமி பாதிப்பை குறைக்க நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு,த்கவல் பரிமாற்றம் மிக அவசியம்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான் ஒன்று என்பதை அனைவரும் உணர்ந்து தகுந்த எதிர் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாருங்கள் காணொளியை இன்னும் பல் விவரங்கள் அறீவீர்கள்!

நன்றி
ஆவணப்படம்


சுனாமி பற்றி தகவல்கள்

10 comments:

  1. சகோ.சார்வாகன்,

    நல்லக்காணொளி, முன்னை டிஸ்கவரியில் பார்த்துள்ளேன், இந்திய கடல்ப்பரப்பிலும் மிதவைகள் போடப்போவதாக முன்னர் கபில் சிபல் சொன்னார் என்னாச்சு என தெரியவில்லை.

    ReplyDelete
  2. சகோ.சார்வாகன்!வவ்வால் நான் போற இடத்துக்கெல்லாம் முந்திக் கொள்கிறார்:)

    இந்த முறை இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை பரிட்சார்த்தமாகவே செயல்பட்டிருக்கிறது. எனவே முன்கூட்டியே உலகம் முழுவதும் தகவல் போய் சேர்ந்துள்ளது.

    சரியான நேரத்தில் வந்த விழிப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. சுனாமி பற்றி நிறைய எழுதுங்க சுகோ. ஏக இறைவனை வணங்காததினால் அவர் கோபமடைந்து மனிதர்களுக்கு எச்சரிக்கைவிட தொடங்கிட்டானாம் என்று ஏக இறைவன் குழுவினர் மிரட்டல்விட தொடங்கியாச்சு. இந்த ஏக இறைவன் இந்தளவு பயங்கரவாதியாக இருக்கிறாரே!!!
    எனது கணனியில் கோளாறுகரணமாக காணொளியை பார்க்க முடியல பின்பு பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. வாங்க நண்பர் வவ்வால்& இராஜராஜன்

    சுனாமி குறித்த விழிப்புணர்வு,பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம்.நம் அரசியல் த்லைகள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி சுற்று சூழல் குறித்த நடவடிக்கைகளே முக்கியம் என உணர்ந்தே ஆக‌ வேண்டும்.
    இயற்கை சீற்றங்களை தவிர்க்க முடியாது என்றாலும் பாதிப்புகளை குறைப்பதில் கவன செலுத்தலாம்.

    &&&&&&&
    நண்பர் குயிக்ஃபாக்ஸ்

    அவர்கள் சொல்வதை அவர்கள் முயற்சித்து பார்ப்பதில் நம்க்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை.காஃபிர்களை மட்டும் சுனாமி அழித்தால் பரவாயில்லை ஏக் இறைவன் பக்தர்களும் சேர்ந்து பதிக்கப்படுவது ஏன்?


    உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோநேசியா!.

    அவர்களை மட்டுமாவது அவர்கள் நம்பிக்கை காப்பாறினால் கூட நமக்கு மகிழ்வே!

    ReplyDelete
  5. அன்பின் சார்வாகன், உங்களுக்கு சில தகவல்கள். மற்றும் நிறைய இணைய சுட்டிகள். ஆகையால் பொறுமையாக படித்து பார்த்து உணரவும்.

    //இந்திய பெருங்கடலில் இப்படி அமைப்பு இல்லை என்பது மிக வருத்தட்திற்கு உரிய விடயம்.//

    அமைப்பு உண்டு. ஆனால் அதன் செயல் தகுதி தான் கேள்விக்கு உரியதாக உள்ளது. அதன் இணைய தள முகவரி

    http://tsunami.incois.gov.in/ITEWS/HomePage.do

    இதை www.incois.gov.in தளத்திலிருந்து அணுக இயலாது. ஏன் இணைப்பு தரவில்லை என தெரியவில்லை. மேலும் இதில் எங்களுடையதைப் போல (www.iibc.in/itws/) செல்லிடபேசி வழியாக எச்சரிக்கை செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் இது வரை தகவல் கிடைத்தது இல்லை. நண்பர்களும் முயற்சித்து விட்டு இதை கைக்கழுவி விட்டார்கள். இதற்கிடையில் இந்த அமைப்பிற்க்கு பிளாட்டினம் ஐகான் அவார்ட் நம்ம 2G புகழ் ஆ.ராசா காலத்தில் கொடுக்கப்பட்டது. http://tsunami.incois.gov.in/ITEWS/awards7.jsp


    ஆனால் இந்த அணுகு முறையை நாங்கள் http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/37 இங்கே 28 Apr 2005 02:22 AM IST அன்றே சொல்லி அதை சொந்த காசில் இங்கே (www.iibc.in/itws/)கடந்த 7 வருடமாக நடைமுறை படுத்தியும் வருகிறோம். அது கடந்து வந்த பாதைகளை பற்றி இங்கே (http://jayabarathan.wordpress.com/2010/04/16/chile-earthquake-2/) உள்ள பின்னூட்டத்தில் காணலாம். இதைக்கொண்டு எரிமலை வெடிப்பை கூட அது வெடிக்கும் முன்பே அறிய இயன்றது. அது இங்கே http://en.wikipedia.org/wiki/Talk:Nabro_Volcano .


    தவிர இயற்கை தீவிரவாதியானால் அனைத்தும் அதற்கு அடங்கித்தான் ஆகவேண்டும். அது தாக்க தொடங்கினால் சாதி, மதம், இனம், மொழி என எது பற்றியும் கண்டுகொள்ளாமல் அனைவரையும் சகட்டு மேனிக்கு தாக்கிவிடுகிறது. ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் சிலரையாவது காப்பாற்றலாம். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் கை கோர்த்து செயல்படவிருப்பமா?

    ReplyDelete
  6. சகோ முகமது இஸ்மாயில்

    தகவல்களுக்கு மிக்க நன்றி.காணொளியில் குறிப்பிட்ட சில் விவரங்களை மட்டுமே குறிப்பிட்டேன்.இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் என்னாலான உதவிகளை செய்ய தயார்.

    நன்றி

    ReplyDelete
  7. இப்பதான் மெக்ஸிகோவில் M 7.0 (Pre Mag) விற்கு ஒரு பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. அளவு மாறபட வாய்ப்பு உள்ளது. http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/Quakes/usc00090z0.php

    ReplyDelete
  8. சகோ இஸ்மாயீல்

    நீங்கள் குறிப்பிட்ட இணைய தளத்தில் அலைபேசி மூலம் பதிவுசெய்தால் குறுஞ்செய்தி மூலம் த்கவல் உடனெ கிடைக்கும் அப்படித்தானே!.
    செய்து விடலாம்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  9. தேவையான நேரத்தில் தேவையான பதிவு. சுனாமி பற்றிய தகவல்களை எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருக்கும் விதத்திலும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  10. சகோ கீத மஞ்சரி
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete