Saturday, March 31, 2012

DNA வின் கதை:காணொளி




வணக்கம் நண்பர்களே ,

தமிழர்கள் ஆவண்ப்படம் பார்க்கும் வழக்கம் ஏற்படுத்திக் கொள்வது பல் விதங்களில் பயன்படும்.நமது செல்லில் உள்ள DNA என்னும் அமில கட்டமைப்புத் தொகுப்பில் நம்மைப் பற்றிய பல விடயங்கள் உள்ளது என்பதை அறிவோம்.. இக்காணொளிகள் DNA பற்றிய பெரும்பாலான் விடயங்களை அருமையாக விள்க்குகின்றன.

இந்த காணொளிகள் ஐந்து பகுதிகள் உடையது.

பகுதி 1;டி என் ஏவின் வடிவமைப்பு எப்படி ஒரு இரட்டை சுருள்[double helix] போல் உள்ளது என்ற ஆய்வுத் தேடலை விவரிக்கிறது. James D. Watson,  Francis Crickஆகியோர் இக்கண்டுபிடிப்பிற்காக் 1953ல் நோபெல் பரிசு பெற்ற்னர்.இக்கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது,இன்னும் சிலரின் பங்களிப்பு மறக்கப்பட்டது ஏன் என்பதை முதல் பகுதி விள்க்குகிறது.

பகுதி 2 ,இந்த  DNA வில் சிறிது மாற்றி அமைத்து மருத்துவம் செய்ய இயலுமா என்ற ஆய்வுகள் குறித்து விள்க்குகிறது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் உற்பத்தி,பயோடெக்னால்ஜி என்னும் புதிய துறை  உருவாதல் பற்றியும் விள்க்குகிறது.

பகுதி 3 ல் க்ரெய்க் வென்ட்டர் உள்ளிட்ட சில அறிவியலாளர்கள் மனிதனின் ஜீனோமை ஆவணப்ப்டுத்தும் முயற்சி 13 வருடங்களக் நடைபெற்றது பற்றி கூறுகிறது.இதில் ஜேம்ஸ் வாட்சனின் பங்கு பற்றியும் கூறுகிறது.

ப்குதி 4ல் கேன்சர்[cancer] எனபடும் கட்டுப்படாத அபரித திசு வளர்சி நோயை குண்ப்படுத்த முடியுமா என்ற ஆய்வுகள் பற்றி விள‌க்குகிறது.

புகுதி 5: இது கொஞ்சம் விவகாரமான விடயம்.க‌ருவில் வடிவமைக்கப்பட்ட மனிதன்[Genetically engineered human/anaimals],விலங்குகள் உருவாக்குதல் பற்றி விவாதிக்கிறது. இது இப்போதும் அறிவியல் உலகில் விவாதத்தில்  தொடரும் விடயம்.

காணொளி பாருங்கள்.இது குறித்த கருத்துகளை விவாதிப்போம் !!!!
நன்றி















2 comments:

  1. அருமையான காணொளிகள் நண்பரே,
    என்ன பார்க்க அதிகம் நேரம் தேவைபடுது. இரண்டு பாகம் தான் முடிந்தது.

    இந்த ஆராய்ச்சின் பின் உள்ள உழைப்பு, நபர்கள், அவர்கள் செய்த உத்திகள் பிரிமிப்பை ஏற்படுத்துகின்றது.

    முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. வாங்க நண்பர் நரேன்
    பாருங்கள் ஒரு விடயத்தை கண்டுபிடித்து உறுதி செய்ய என்ன பாடுபடுகிறார்கள்?.அதில் எவ்வளவு போட்டி,ஏமாற்ரு வேலைகள் நடைபெறுகின்றன?.எனினும் இப்படிப்பட்டதில் வெற்றி பெறுவதே அறிவியலின் மகுடம் சூடுகிறது.
    ,ஒவ்வொரு அறிவியல்கொள்கையுமே இயற்கையின் நிகழ்வுகளை,உள்ளிருப்புகளை வரையறுக்க முயல்கின்றன.எது அதிகம் பொருந்தும் கொள்கையோ,ஆய்வு ரீதியாக் உறுதி செய்யப்படும் கொள்கையோ அது ஏற்கப்ப்டும்.

    இதில் சில கோமாளிகள் எங்கள் புத்த்கத்தில் அன்றே இது சொல்லப்பட்டு உள்ளது என்பதை கேட்டால் நம்க்கு வரும் எரிச்சல் இருக்கிறதே சொல்ல முடியாது.

    ஹா ஹா ஹா

    நன்றி

    ReplyDelete