Tuesday, March 6, 2012

பரிணாம கொள்கை மறுப்பாளர்களுக்கு ஒரு ஆலோசனை!!!!!!!!





Darwin's (Galapagos) Finches 





வணக்கம் நண்பர்களே இவ்வருட தொடக்கத்தில் இருந்து பரிணாம கொள்கையின் மாற்றாக் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] குறித்து தொடர் கட்டுரை எழுதி வந்தோம்.அதன் முக்கிய கொள்கையாக்கமான எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] பற்றியும் அறிந்தோம். பிறகு அதன் இன்னொரு முக்கியமான்  வில்லியம் டெம்ஸ்கியின் பரிணாம் செயலாக்க முறைகளின் மீது கணித ரீதியான் விமர்சனம் வரும் பதிவுகளில் அறிவோம்.

கடந்த சில பதிவுகளில் பரிணாம கொள்கை எதிர்ப்பு கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தோம் ஆகையால்  அ.வ‌ தொடர்  கொஞ்சம் தடை பட்டதற்கு வருந்துகிறோம்..

இப்பதிவில் பரிணாம எதிர்ப்பாளர்கள் தங்கள் விவாதத்தின் நிலை என்ன என்பதை தெளிவாக் கூறாமல் குழப்புவதையே நோக்கமாக் கொண்டு கேள்வி கேட்பதை அறிந்தாலும்,அவர்களின் நிலையை தெளிவு படுத்தவே இப்பதிவு.

பரிணாம கொள்கை[பிற கொள்கைகள் போல்] விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை..பரிணாம கொள்கையின் தந்தை திரு சார்லஸ் டார்வினே தனது உயிரினங்களின் தோற்றம் புத்த்க்கத்தின் 6ஆம் அத்தியாயம் பரிணாம் கொள்கையின்  கொள்கையின் சிக்கல்கள் பற்றியே எழுதி இருக்கிறார்

1.ஒரு உயிர்ன குழுவில் இருந்து வேறு ஒரு(சில) உயிரின குழு[க்கள்] பரிணமித்தால் ஏன் அதிகமான் இடைப்பட்ட படிமங்கள் கிடைக்கவில்லை?. ஏன் உயிரின குழுக்கள் சரியாக் இயல்பாக குழப்பமின்றி வரையறுக்கப் பட்டது போலவே தோன்றுகின்றன?


Firstly, why, if species have descended from other species by insensibly fine gradations, do we not everywhere see innumerable transitional forms? Why is not all nature in confusion instead of the species being, as we see them, well defined?


2. வவ்வால் போன்ற வித்தியாசமான் குணங்கள் கொண்ட உயிரினம் ,வேறு குணங்கள் கொண்ட உயிரினத்தில் இருந்து பரிணமித்து இருக்க முடியுமா?ஒட்டகச் சிவிங்கியின் வால்,உயிரினங்களின் கண் போன்ற சிக்க்லான் அமைப்பு கொண்ட உறுப்புகள் இயற்கத் தேர்வினால் வடிவமைக்கப் பட்டு இருக்க முடியுமா?


Secondly, is it possible that an animal having, for instance, the structure and habits of a bat, could have been formed by the modification of some animal with wholly different habits? Can we believe that natural selection could produce, on the one hand, organs of trifling importance, such as the tail of a giraffe, which serves as a fly-flapper, and, on the other hand, organs of such wonderful structure, as the eye, of which we hardly as yet fully understand the inimitable perfection?


3.ஒரு உயிரினத்தின் தனிப்பட்ட‌   குணங்களை இயற்கத்தேர்வினால்  மாற்ற‌ முடியுமா? கணித மேதைகளின் அற்புதமான கண்டுபிடிப்புகள் போன்ற தெனீயின் சிக்க்லான் கூடு கட்டும் குணத்தை[திறனை]  குறித்து நாம் என்ன சொல்ல முடியும்?


Thirdly, can instincts be acquired and modified through natural selection? What shall we say to so marvellous an instinct as that which leads the bee to make cells, which have practically anticipated the discoveries of profound mathematicians?


4.தங்களுக்குள் இனவிருத்தி செய்யக் கூடிய உயிரினத்தை[fertile] பெறும் உயிரின‌ங்களின் குழுக்கள் அவ்வாறு இனவிருத்தி செய்யக் கூடிய உயிரினத்தை .தங்களுக்குள் உருவாக்க முடியாதது ஏன்?
[குதிரை+கழுதை=கோவேறு கழுதை[மலடு] பற்றியே கூறுகிறார்.]


Fourthly, how can we account for species, when crossed, being sterile and producing sterile offspring, whereas, when varieties are crossed, their fertility is unimpaired?


இபோது பரிணாம் கொள்கையின் மீதான பல விமர்சனங்களின் பிதாமகன் யார் என்பதை அறிந்து இருப்பீர்கள்.இக்கேள்விகளுக்கு பின் வந்த அறிவியலாளர்கள் விடையளித்து விட்டார்கள். நம் முந்தைய பதிவுகளில் கூட விவாதித்து இருக்கிறோம்.டார்வினுக்கு பிறகு பல இடைபட்ட படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும்,பல் சிக்க்லான வடிவமைப்புகள் எளிமைப்ப்படுத்தப் பட்டதும் ,மூலக்கூறு அறிவியலின் முன்னேற்றமும் இவைகளுக்கு விடை அளித்து விட்டன!!!!!.

.அவரால் சில [சிறு] பரிணாம எடுத்துக் காட்டுகளாக கலாபாகஸ் தீவின்  பறவைகளின் பல் வகைகள் உருவாதல்,நாய்களில் பல வகைகளின் சில வகை ஓநாய் முன்னோர்கள்,மயில்களின் தோகை வளர்ச்சி போன்றவை அப்புதக்த்த்தில் ஆய்வு ரீதியான் சான்றுகளாக் குறிப்பிடுகிறார்.  

இத்னை விரிவு படுத்தியே அனைத்து உயிரினங்களும் ஒரே முன்னோரில்[common ancestor] இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்ற கொள்கையை வடிவமைத்தார்.அதன் காரணிகளாக இயற்கைத் தேர்வு,சிறு மாற்றங்கள் என்று சரியாக்வே மிக பொருந்தும் வகையில் வடிவமைத்தாலும் அது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது.

டார்வினின் இந்த சுய விமர்சனம் ஒவ்வொரு அறிவியலாளரும்[இதர கொள்கையாளர்களும் ]பின்பற்ற வேண்ட விடயம்.சுய விமர்சனம் என்பது அறிவியலின் ஒரு த்ன்னை சரிபார்க்கும் செயல்முறை என்பது அனைவரும் அறிவோம். மதவாதிகள் விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்தை வர்லாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்களும்,இப்போதைய சில நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.நாம் பரிணாமத்தின் மீதான அறிவியல் ரீதியான‌ விமர்சனங்களை வரவேற்கிறோம். பதில் அறிந்தவரை அளிக்க முயற்சிக்கிறோம்!!!!!

இப்போதைய மூலக்கூறு அறிவியலின் முன்னேற்றத்தால் பரிணாமம்  எப்படி நடக்கிறது என்பது சரியாக் விள்க்கப்பட்டு விட்டது. பரிணாம்த்தை சோதிக்கும் நிரூபிக்கும் சிலஆய்வுரீதியான பரிசோதனைகள் நடப்பதும் அது குறித்தும் சில பதிவுகள்  எழுதுவோம்.

இன்னும் சில விடயங்கள் பரிணாம் எதிர்ப்பு நண்பர்கள் அறியத் தருகிறேன்.நிச்சயமாக [பெரும் Macro evolution] பரிணாம மாற்றங்கள்  100% நிரூபிக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை மட்டுமே வலியுறுத்துகிறோம். இந்த 150+ வருடங்களில் பரிணாமத்திற்கு எதிரான் ஆதாரம் எதுவுமே இல்லை என்பதால்தான் முதலில் எதிர்த்த அறிவியல் உலகம் பிறகு உயிரின தோற்ற கொள்கையாக் ஏற்றது.உலகின் பல பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப் படுகிறது.இன்னும் பல் கேள்விகள் விடையளிக்கப் ப‌ட வேண்டும்.. அக்கேள்விக்கான் விடைகள் விவாதமாக பல ஆய்வுக் கட்டுரைகள் ஆய்விதழ்களில் வெளிவருகின்றன.

விமர்சகர்கள்  தாங்களின் சரியான‌ நிலை என்ன என்பதை அறிந்து விவாதிப்பது பதிவு படிக்கும் நண்பர்களுக்கு நன்மை பயக்கும்.சிறு பரிமாணம் என்பதை அவர்களும் எதிர்க்க முடியாது இது ஆய்வு ரீதியாக் உறுதிப் படுத்தப்பட்ட விடயம்.

பரிணாம் எதிர்ப்பாளர்கள் சிறு பரிமாணம்[micro evolution] என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்பதால் இதனை எதிர்ப்பது இல்லை.அவர்களின் வாதம் எல்லாம் இந்த சிறுமாற்றங்கள் ஒரு உயிரின தொகுதிகளுள்ளேயே மட்டுமே வித்தியாசமான் சந்ததிகளை,உருவாக்க முடியும்.ஒரு குழு உயிரினங்களுக்கு ஒரே [அதே குழுவை சேர்ந்த]முன்னோர் என்பதையும் ஆய்வுப்பூர்வமாக் அறிய முடிவதால் இதனையும் எதிர்ப்பது இல்லை.இதற்கு எடுத்துக்காட்டாக சில  வகை ஓநாய்களில் இருந்து பரிணமித்த‌ நாய்களின் பரிணாம் வளர்ச்சி அறியலாம்.சில ஆயிரம் ஆண்டுகளில் அதன் குணம் ,உடல் அமைப்புகள்,பல் வகைகள் போன்றவை மாறியது கண்கூடு.





ஆகவே அவர்கள் இயற்கைத் தேர்வும்,சிறுமாற்றங்கள் ஒரு உயிரினக் குழுவை இன்னொரு உயிரின குழவாக் மாற்றாது[பெரும்பரிமாணம்] என்ற நிலைப்பாட்டில் விவாதிப்பது நனமை பயக்கும்.அவர்கள் இது குறித்தே விவாதிப்பது பல் தக்வல்கள் பகிர உதவும் என்பதே நம் வேண்டுகோள். பரிணாமம் நண்பர்கள்,எதிர்ப்பாளர்கள் அதிகம்[ சரியான] கேள்வி கேட்பதையே விரும்புகிறோம்.

ஆகவே படைப்பியல் தாதாக்களின் கருத்தை பரிணாம் விமர்சகர்கள் அறியத் தருகிறோம்.

 

Microevolution

Microevolution is a quantum of evolution that is supported by observations of living organisms. It describes the varieties that develop within a population, which are due to changes in genefrequency over time. The term microevolution typically refers to the small scale changes in organisms within the same species, which can lead to a subspecies or even new species. Such evolution is consistent with the creationist view and supports the diversification of the Biblical kinds following the flood of Noah.
It is however, important to note that the variation observed in living organisms is limited. This has been exemplified by centuries of domestic breeding history. There are today many varieties of dogs, but they remain dogs. There are many variations of livestock such as horses or cows, but again they are simply varieties of distinct kinds. This diversification does not necessarily or inherently lead one to the concept that all living creatures came from a common ancestor. An atheistic philosophy was responsible for such a conclusion.
Microevolution is distinguished from macroevolution, which is a larger scale change that results in the formation of higher taxanomic groups. It should however, be noted that many creationists caution against using the term or terms when debating.
Scientific American draws the following distinction:
Microevolution looks at changes within species over time—changes that may be preludes to speciation, the origin of new species. Macroevolution studies how taxonomic groups above the level of species change. Its evidence draws frequently from the fossil record and DNA comparisons to reconstruct how various organisms may be related.[3]

பரிணாம் கொள்கை சொல்வது அனைத்தும் தவறு என்பது அவர்களின் [மத பிரச்சார‌வாதம் உள்ளிட்ட அனைத்து] வாதங்களை முற்று முழுதாக் தவறாக்கி விடும். நாம் விவாதிப்பது பல விடயங்களை பல்ருக்கும் பயனளிக்கும் வகையில் பகிரும் என்பதை நம்புபவர்கள்.

ஆகவே


1.சிறு மாற்றங்கள் [ஒரு உயிரின குழுவில்]பல்வேறு வகைகளை உருவாக்குகிறது.

2.அதில் சூழலுக்கு பொருந்துபவை பெருகுகின்றன.பொருந்தாதவை அழிகின்றன்.

3.மாற்றம் என்பது ஒரு உயிரின தொகுதிகளுக்குள் மட்டுமே நடக்கிறது.

எனபதுதான் [பெரும்] பரிமாண எதிர்ப்பாளர்களின் சரியான வாதமாக இருக்க முடியும்.

என்ன நண்பரே சேம்சைட் கோல் போட்ட மாதிரி சொல்கிறீர்கள் என்றால்,இந்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் வருவதே இன்னும் பல் தக்வல் பகிர ஆவண செய்யும் ,பெரும் பரிமாண்மும் ஐயந்திரிபர நிரூபிக்க சான்றளிக்க இப்போது  முடியுமா என்ற தேடலை ஏற்படுத்தும் என்பதுதான்.

டார்வினின் இயற்கைத் தேர்வும்,சிறுமாற்றங்களும் சிறு பரிமாணத்தை மட்டும் ஏற்படுத்தும் என்பது டாக்கின்ஸ் எவ்வளவு ஆத்திகரோ அவ்வளவுதான் உண்மை!!!!!!ஹி ஹி ஹி.

ஒரு உயிரின குழுவின் சரியான் வரையறுப்பே இருக்க முடியாது[species problem] என்னும் போது ஒரு உயிரின குழுவிற்கு உடப்ட்ட மாற்றம் சிறுபரிமாணம் ஆக மட்டுமே இருக்க முடியுமா என்பதை நண்பர்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

சரி மீண்டும் அடுத்த பதிவில் இருந்து அ.வ[ID] கொள்கைக்கு வருவோம்..விவாதங்களுக்கு இடையில் பதில் அளீப்போம்!!!!!!!!

நாம் மிகவும் இரசித்து பார்த்த இன்னொரு காணொளி!கண்டு களியுங்கள்!





நன்றி!!!!!!!!!!!!!!!!
Thanks Google

4 comments:

  1. படிமம் (fossils) எடுப்பதும் டார்வினின் வேலை எனக் கருதுகிறார்கள் இந்த மத வெறி பிடித்தவர்கள்.ஏதோ இயற்கை தன்னிச்சையாக எடுத்த படிமங்களில் கூட டார்வினின் தியரி நிரூபிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எல்லவற்றிர்க்கும் படிம ஆதாரம் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமானது.ஒரே தாய் தகப்பனுக்கு பிறக்கும் குழந்தைகளில் எத்தனை மாற்றங்கள் உள்ளது என்பதை உணர்ந்தால் போதும் டார்வினின் தியரியை ஏற்றுக் கொள்ளலாம். அச்சடித்தாற்போல் ஏன்அத்தனையும் இல்லை.

    ReplyDelete
  2. வாங்க நண்பர் சந்துரு,
    டார்வினின் கொள்கை அவர் வாழ்ந்த காலத்தில் பல் அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்வில்லை என்பதும் காலப்போக்கில் கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்ததால் மட்டுமே ஏற்ருக் கொள்ளப்ப்ட்டது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
    நீங்கள் கூறிய தலைமுரைரீதியா சிறு மாற்றங்கள் கூட சிறு பரிணாம்த்தின் நிரூபணம்தான். பரிணாம் எதிர்ப்பாளர்கள் சிறு பரிணாம்த்தை முதலில் ஒத்துக் கொண்டாலே பெரும் பரிணாம்ம் என்பதை வேறுபடுத்தி பார்க்க முடியாது என்பதும் அனைவருக்கும் புரிந்து விடும்.சில ஜீன்கக்ளில் ஏற்படும் மாற்றங்கள் சிறு பரிணாம்த்தையோ அல்லது பெரும் பரிணாம்த்தையோ ஏற்படுத்தலாம்.

    பரிணாம் எதிர்பாளர்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு விடையளிப்போம்.இந்த 10,000 வருடங்களில் மனிதர்களின் உருவம்,பண்புகள் குறித்து எந்த மாற்றமும் ஏற்பட வில்லையே ஏன்?
    மாற்றமே இல்லை என்பது இல்லை.மனிதர்கள் அதே ஹோமோசேஃபியனாக கடந்த 10,000 வருடங்களாக் இருக்கிறார்கள் என்பதை மட்டும் ஒரு அளவிற்கு கூறலாம்.
    மனிதர்கள் கடந்த 10000 வருடங்களாக்வே நாகரிகங்களை ஏற்படுத்தி ஒன்றாக் வாழ்வது நாம் வரலாற்றில் படித்த உண்மை.ஒரு தலைமுற‌க்கு 25 வருடம் என்று வைத்தால் மொத்தம் 400 தலைமுறைகளில் என்ன மாற்றம் காண முடியும்.நாம் சராசரியாக் சுமார் 50 சிறு மாறறங்களை நமது பெற்றோரிடம் இருந்து பெறுகிறோம் எனில் இந்த 10,000 வருடங்களில் வெறும் 20,000 மாற்றங்கள் அதிக பட்சம் இருக்க முடியும்.மனிதன் டி என் ஏ வில் 2.9 பில்லியன் அமில அமைப்புகள்[base pairs] உள்ளன்.அவற்றில் இம்மாற்றங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?.சிம்பன்சி 98% நம்து ஜீனோமுடன் ஒத்துப் போகிறது அல்லது2 %[60 மில்லியன் அமில கட்டமைப்புகள்] வித்தியாசம் உள்ளது.இபோது புரியும் என நினக்கிறேன்.ஒருவேளை 1 மில்லியன் தலைமுறைகள் தாண்டினால் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.மாற்றங்கள் தொடர்சியாக் ஏற்பட்டால்தான் பெரும்பரிமாணம் நிகழும் வாய்ப்பு, அல்லது மாற்றங்கள் சுழற்சியாக்[cyclic] நடந்தால் சிறு பரிணாமம் மட்டுமே நிகழும் வாய்ப்பு.
    http://www.archaeology.org/0803/etc/conversation.html
    How many new mutations have occurred in the human genome over the past 50,000 years?
    We were able to count around 3,000 new adaptive mutations for Europeans around the same number in west Africans and east Asians.
    So, it varies by ethnicity?
    Just a bit. There are mutations that occurred in Europe that haven't spread everywhere else and the same is true for the other populations.
    How do you figure out how old a mutation is?
    Well in our case, we were studying the data from the international HapMap project, which allows us to look at linkage between sites in the human genome. Linkage between genes decays over time, so the more time passes by the less genes tend to be linked together, so we can use the number of links between haplotypes, or gene variations, to estimate how long ago they started to increase in frequency. So, that gives us a way to date how long ago selection starts.
    What are the biggest evolutionary changes in humans over the last 50,000 years?
    Well, there have been lots of trends. During the past 20,000 years and particularly the past 10,000, body size shrank a little bit, brain size shrank quite a lot, and tooth size reduced. The European and Asian genes that lighten skin color are pretty recent. Digestive things have changed, like the ability for adults to consume milk.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. காணொளிக்கு நன்றி நண்பரே.

    I.D. ஆதரவாளர்கள் (தமிழ்மண பதிவர்கள்) கீறல் விழுந்த ரெக்கார்டு போல கேள்விகள் கேட்டு பதிலகளும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல ஆகிவிட்டது.

    இந்த பதிவை பார்த்தவுடன், வடிவேலுவின் இந்த காமெடிதான் நினைவுக்கு வந்தது.


    http://www.youtube.com/watch?v=rgANpyU48cw

    ReplyDelete
  4. வாங்க நண்பர் நரேன்,
    நாம் கேட்பது இரு கேள்விகள் மட்டுமே

    1.சிறு(மைக்ரோ) பரிமாணம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.ஒரு குழு உயிரிஅங்களுக்கு ஒரு முன்னோர்.இத்னை ஏற்றால் 90% டார்வினின் கொள்கையை ஏற்பதாகி விடும்.அப்ப்டி சிறு பரிமாணம் அடைந்த அக்குழுவில் ஏதோ இரு உயிரினங்கள் தங்களுக்குள் இனவிருத்தி செய்ய இயலாமல் போனால[not able to produce fertile offspring] அவை வேவ்வேறு உயிரினங்கள்.

    2.உடல் அமைப்பு,உடல் உறுப்புகள் என்பது ஜீன்கள் மூலம் [கரு வளர்ச்சியின்] வடிவமைக்கப்படுகிறது என்றால் ஜீன்களில் ஏற்படும் மாற்றம் உறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்தும் வாய்ய்பு உண்டா? இல்லையா?

    சிறு மாற்றம் முன்னேற்றம் ஏற்படுத்துமா என்றால் ,பல்வேறு வகையான‌ உயிரினங்களை கொண்ட குழுவில் சூழலுக்கு பொருந்தும் மாற்றங்கள்தான் முன்னேற்றம்.
    நாம் ஒரு கிராமப்புறபள்ளியில் படித்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அப்பள்ளியில் முதலிடம் 90% ஆக இருக்க்லாம்.பள்ளியின் சராசரி மதிப்பெண் 65% ஆக இருக்கும் போது 90% அதிக முன்னேற்றம்.இதே மதிப்பெண் ஒரு மிக சிறந்த பள்ளியின் சராசரி 95% முன்பு முனேற்றம் அல்ல.
    ஆகவே முனேற்றம் என்பது சூழலை பொறுத்தது.

    ReplyDelete