Thursday, April 11, 2013

பூமி சூரியனை சுற்றுகிறதா? நம்பலாமா?



Pages from 1550 Annotazione on Sacrobosco's Tractatus de Sphaera, showing the Ptolemaic system.

வணக்கம் நண்பர்களே,

பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற‌ விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது  பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை.

நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம்.

டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தில் சுற்றி வருவதை இரண்டுபரிமாணத்தில் கற்பனை செய்து தவறு என்கிறோம்.

ஆனால் அதே போல் சூரியனை மையமாக கொண்டு கோள்கள் சுற்றுவதையும், சில கோள்களுக்கு துணைக்கோள்கள் அதனை சுற்றுவதையும் இப்படியே இருபரிமாண வரைபடமாக சரி என‌ மனதில் கற்பனை செய்கிறோம். 

டாலமியின் கொள்கை சார் கணக்கீடுகளும் சரியாக சூரியன், கோள்கள்,துணைக் கோள்களின் இயக்கம்,பாதை கணிக்க முயன்றது என்றால் எப்படி அது தவறாகும்??.

பூமியில் இருந்து சூரியன்,கோள்களின் இயக்கம் பார்த்தால் எப்படி தெரியும்?
இதுதான் டாலமியின் வரையறுப்பு!!

ஒவ்வொரு கோளும் [பூமி உட்பட்டு] சூரியன் சிறிய வட்டத்தில் சுற்றி ,சுருள் போல் பெரிய வட்டத்தில் சுற்றுகின்றன என்பதே அவரின் சரியான விளக்கம். எந்த கோளையும்,சூரியனையும் மையமாக காட்ட முடியும்!!!!!!!!!!!!!

The basic elements of Ptolemaic astronomy, showing a planet on an epicycle with an eccentric deferent and an equant point.
https://en.wikipedia.org/wiki/Geocentric_model

அங்கிருந்து பார்க்கும் போது முப்பரிமாணத்தில்  சூரியன் இதர கோள்கள் சுருள்கள் போல் மேலும் ,கீழும் செல்வது புரியும். காணொளி பாருங்கள்.




மையம் என்பது மாறுவது புரியும்.சூரியன் ,கோள்கள் ஒவ்வொன்றும் சிறிய வட்டத்தில்[epicycle] சுற்றி, பெரிய வட்டத்தில்[Deferent] செல்வது போல் டாலமியால் விளக்கி அதற்கும் சமன்பாடுகள் வகுக்க முடிந்தது. அச்சமன்பாடுகள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கோள் எங்கு இருக்கும் என அப்போது துல்லியமாக கணக்கிட முடிந்தது. இன்றும் சோதிடத்தில் இம்முறையே பின்பற்றப் படுகிறது.


இங்கு சிக்கல் என்னவெனில்  நாம் சூரியக் குடும்ப வெளியில் இருந்து சூரியன் கோள்களின் இயக்கத்தை இரு பரிமாணத்தில் மட்டுமே பார்ப்பதுதான் சிக்கல்.

நமது கேலக்சிக்கு[பால்வீதி மண்டலம்] வெளியில் இருந்து பார்த்தால் டாலமி சொல்வது போல் தெரியுமாம்!!!

இப்போது சொல்லுங்கள் பூமி சூரியனை சுற்றுகிறது என்பது சார்பியல் கருத்துதானே!!!

டாலமி எழுதிய தி அல்மகஸ்ட்[Almagest] என்னும் புத்த‌கம்[ஆங்கில மொழியாக்கம்] இங்கே தரவிறக்கி படியுங்கள். 

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியாவில் வசித்த டாலமி அப்புத்த்கம் கிரேக்க மொழியில் எழுதினார். பல கணித சூத்திரங்களின் எளிய நிரூபணமும் தந்து இருக்கிறார்.

இந்த ஆவணப் படம் இதனை நன்கு விளக்குகிறது.





ஆகவே டாலமியின் புவி மையக் கொள்கை என்பது முற்றிலும் தவறானது அல்ல.அவரின் பேரண்ட மாதிரியை விட கோபர்நிகசின் மாதிரி துல்லிய்மான கணக்கீடுகளை தந்ததால் மட்டுமே அது கைவிடப் பட்டது. ஏறத்தாழ 1200 வருடங்கள் டாலமியின் கொள்கையே ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில்  கற்பிக்கப்பட்டது. இதன் அரபி மொழி பெயர்ப்பில் இருந்துதான், ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது.


 Ptolemy's authority was preferred by most medieval Islamic and late medieval European astronomers.
..
The first translations into Arabic were made in the 9th century, with two separate efforts, one sponsored by thecaliph Al-Ma'munSahl ibn Bishr is thought to be the first Arabic translator. By this time, the Almagest was lost in Western Europe, or only dimly remembered in astrologicallore.
..
During the 16th century, Guillaume Postel, who had been on an embassy to the Ottoman Empire, brought back Arabic disputations of the Almagest, such as the works of al-KharaqīMuntahā al-idrāk fī taqāsīm al-aflāk ("The Ultimate Grasp of the Divisions of Spheres", 1138/9).[7]

அது மட்டும் அல்லாமல் அவரின் கணித பங்களிப்புகளும் போற்றத் தக்கவை!!!.

http://galileo.rice.edu/sci/theories/ptolemaic_system.html

Ptolemy was able to account for the motions of heavenly bodies within the standards of observational accuracy of his day. The idea was to break down the complex observed planetary motion into components with perfect circular motions. In doing so, however, Ptolemy violated the cosmological and physical rules of Aristotle. The excentric and epicycle meant that planetary motions were not exactly centered on the Earth, the center of the cosmos.


டாலமியின் புவிமைய, கோபர்நிகசின் சூரிய மையக் கணக்கீடுகள் அடிப்படையில் பூமி,சூரியன், இன்னொரு கோள் ஆகியவற்றின் நகர்வுகளைக் காட்டும் அருமையான ஜாவா சித்தரிப்பு!!!
http://web.cortial.net/bibliohtml/epiclc_ja.html




நன்றி!!

Friday, April 5, 2013

பரிணாம அடிப்படைகள் 2:டார்வினுக்கு முந்தைய கொள்கைகள்!!




தொடரின் முந்தைய பகுதி


பரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1

வணக்கம் நண்பர்களே,

பரிணாம அறிவியல் என்பது ஒரு கடல் என்பதும்,இப்போது அதிவேகமாக‌ வளர்ந்து வரும், அதிக ஆய்வுகள் வாய்ப்புகள் உள்ள துறை என்பதால் அது குறித்து தமிழர்களிடம் ஈடுபாடு ஏற்படுத்தவே நாம் முயல்கிறோம்.

பரிணாமத்தின் அடிப்படைகள் பகுதி 1 ல் பரிணாமம் என்றால் என்ன என்பதை அறிந்தோம்.இப்பதிவில் காலரீதியாக பரிணாம கொள்கை எப்படி மாற்றங்களின் ரீதியாக உருவானது என்பதை அறிவோம்.

பரிணாமம் என்பது உயிரின குழுக்களின் தலைமுறை ரீதியான [சூழல் சார்?] மாற்றம் என்பதை நினைவில் இருத்துவோம்.பரிணாமம் என்பது அறிவியலில் உயிரின தோற்ற,பரவலை விளக்கும் கொள்கையாக ஒருமித்து ஏற்கப் பட்டாலும், அது நுட்பமாக எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்க பல கருத்தாக்கங்கள் இடையே போட்டி உண்டு.   

அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை, சான்றுகள் அடிப்படையில் விளக்கம் அளித்தல் என்பதால் , உயிரினங்கள் எப்படி தோன்றின, எப்படி பூமியில் ஒவ்வொரு  இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உயிரின‌ங்கள் உள்ளன என்பது பல ஆயிரம் வருடங்களாக பல அறிஞர்கள் விடை அளிக்க முயன்ற கேள்வி.


18 ஆம் நூற்றாண்டு வரை  உலகம் என்பது சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு படைக்கப்பட்டது என்னும் மத புத்தகத்தின் ஒரு சார்பு விளக்கமே பல அறிவியலாளர்களினாலும் ஏற்கப் பட்டு வந்தது.

கிடைத்த பல படிமங்கள் எல்லாம் , நோவா கால வெள்ளப் பெருக்கில் மடிந்தவை என்னும் கருத்திலும், அவை வித்தியாச‌மான இருப்பதை ட்ராகன்,இராட்சசன் போன்ற விந்தையான மந்திர தந்திரக் கதைகளின் விளக்கமாக கருதப் பட்டன.


ஆத்திகர்களுக்கு "எல்லாம் அவன் செயல்" என்னும் ஒரு விளக்கம் போதுமானது என்றாலும் அறிவியலுக்கு போதாது,சான்றுகளின் அடிப்படையில் இயற்கைக்கு உடபட்ட விளக்கமாக உயிரின தோற்ற பரவலை விளக்க முயன்றனர்.

படிமங்களை சேகரிக்கும் வழக்கம் வரத் தொடங்கியது.


பண்டைக் காலத்தில் கூட படிமங்கள் ஏற்கெனவே வாழ்ந்து மறைந்த உயிரினங்களுடையது என சில அறிஞர்கள் அறிந்து இருந்தனர்.

ஒரு உயிரினம் என்பது குறிப்பிட்ட உடல் அமைப்பு,பண்புகள் கொண்ட மாறா அமைப்பு என்னும் கருத்தே நிலவியது.

அந்தக் கொள்கையின் நேர் எதிர் கொள்கைதான் பரிணாமம்.

ஒரு உயிரினம் என்பது மாறும் அமைப்பு,பண்புகள் கொண்டது என்பதே பரிணாம கொள்கையின் அடிப்படை.அந்த தொடர் மாற்றங்கள் ஒரு உயிரினக் குழுவை நீண்ட காலத்தில்,பல தலைமுறைகளில் சில உயிரினக் குழுக்களாக பிரிக்கிறது என்பதே சரியான பரிணாம புரிதல்.

தொல் உயிரியல்[paleontology] என்னும் துறை  மறைந்த உயிரின‌ங்களின் படிம ஒப்பீட்டு அறிவியலாக உருவெடுத்தது. ஜார்ஜ் குவியே(August 23, 1769 – May 14, 1832) ன்னும் அறிஞரின் விலங்கின தொகுதிகள்[The animal kingdom] புத்தகம் வெளிவந்ததை தொடக்கமாக சொல்லலாம். உயிரின‌ங்கள் மறைதல்[extinction] என்பதை முதலில் சான்றாக்கியவர்  இவர்தான்.

Georges Cuvier.png
Jean Léopold Nicolas Frédéric Cuvier (August 23, 1769 – May 14, 1832), known as Georges Cuvier, was a French naturalist and zoologist.

பரிணாமத்தில் எப்படி ஒரு ஒரு உயிரியில் இருந்து புதிய உயிரின‌ங்கள் பிரிந்து  தோன்றுகிறதோ அது போல் உயிரின‌ங்கள் மறைவதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் மறைந்து விட்டன. அவற்றில் சிலவற்றின் படிமங்கள் மட்டுமே நமக்கு கிட்டின.

பெரும்பாலும் உயிரின மறைவு குறித்து மதவாத பரிணாம எதிர்ப்பாளர்கள் கருத்து சொல்லவே மாட்டார்கள், என்பதால் ஜார்ஜ் குவியேவின் கருத்துக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.ஜார்ஜ் குவியே பரிணாம கொள்கை ஏற்கவில்லை என்றாலும், படிம வரலாற்றில் புதிய உயிரினங்கள் திடீரென தோன்றுவதை ஆவணப் படுத்தினார்.[இதன் விளக்கம் நிறுத்திய நிலைத்தனமை[punctuated equilibrium]ன 1972ல் திரு ஸ்டீஃபன் ஜே கோல்ட் விளக்கினார்].ஒருவேளை படிமங்களின் வயது, படிம ஒப்பீட்டு அறிவியல் சாதன‌ங்கள் அப்போது இருந்திருந்தால், இன்றைய பரிணாமக் கொள்கையை அப்போது சரியாக திரு குவியே வரையறுத்து இருப்பார். 

In his Essay on the Theory of the Earth, he did say that "no human bones have yet been found among fossil remains"

அப்போது மனிதனின் மூதாதையர் படிமங்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.


ஆகவே ஜார்ஜ் குவியே ,படிம வரலாற்றின் படி திடீரெனெ புதிய‌ உயிரின‌ங்கள் தோன்றுவதையும், திடீரெனெ மறைவதையும் ஆவணப் படுத்தினார். அவருக்கு கிடைத்த படிமங்களின் படி முன்னோர் என எதையும் வகைப் படுத்தவில்லை. என்றாலும் அறிவியல் உலகில் மாறும் உயிரின கொள்கை,மாறா உயிரினக் கொள்கை  என்னும் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஜார்ஜ் குவியே தனது ஆய்வுகள் மாறா உயிரிகள் பற்றி விளக்குவதாக நினைத்தாலும், அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இடைப்பட்ட உயிரின படிமங்கள்[Transitional fossils] மாறும் உயிரின‌ங்கள் பற்றிய‌ சான்றானது. திரு குவியே காலத்தில் பரிணாம கொள்கை விளக்கமாக திரு லாமார்க் அவர்களின் கொள்கை முன் வைக்கப் பட்டது. எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் பொ.ஆ.1905 ல் கதிரியக்கம் மூலம் கால அளவீடு செய்யும் முறையை கண்டறிந்தார். அதன் மூலமதான் படிமங்களின் வயது, பூமியின் வயது கண்டறிய முடிந்தது.

Jean-baptiste lamarck2.jpg
லாமார்க் (Jean-Baptiste Lamarck,1 August 1744 – 18 December 1829) ஒரு உயிரினம் தன் வாழ்நாளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ,தலைமுறைரீதியாக கடத்தப்பட்டு மாற்றம் நிகழ்கிறது[Transmutation of species] என்னும் பரிணாம கருத்தாக்கம் வெளியிட்டார்.ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டமைதான் ,இக்கொள்கை சார்ந்து இவரது முக்கியமான் எ.கா ஆகும்.

இப்படி மாற்றம் நிகழும் கால அளவு பற்றி சொல்வில்லை ஏன் எனில் படிமங்களின் காலம் கணிக்கும் தொழில் நுட்பம் அப்போது இல்லை. பரிணாமம் என்பது அப்போது சில ஆய்வாளர்களால் ஏற்கப் பட்டாலும்,பரிணாமம் நிகழும் விதமாக லாமார்க் கூறியது பற்றி பலருக்கு ஐயம் இருந்தது. வெய்ஸ்மான்(August Weismann 17 January 1834 – 5 November 1914) என்னும் ஆய்வாளர், சில பரிசோத்னைகள் மூலம் ஒரு உயிரியின் வாழ்நாளில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு செல்ல ஒரு தடுப்பை தாண்ட வேண்டும் என் நிரூபித்தார். அதன் பெயரே வெய்ஸ்மான் தடுப்பு [weismaan barrier] என பெயர் இடப்பட்டது.

ஆனால் இப்போது கதிர் இயக்கங்கள் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள், தலைமுறைரீதியாக கடத்தப் படுவ‌தும்,சில வைரஸ்கள்[retro virus] ஜீனோமில் இணைவதும் கூட ஆவணப் படுத்தப் பட்டு உள்ளதால்,லாமார்க்கியமும் பரிணாம நிகழ்வில் பங்காற்றுகிறது என்பதே சரி.

ஒரு கருதுகோளைப் பரிசோதிக்க தேவைப்படும் தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்தே அறிவியலில் முன்னேற்றம் ஏற்படும். பலரால் தொடர்ந்து பரிசோதிக்கப்படும் என்பதால் ஒரு தவறான விளக்கம் நீடிப்பதன் வாய்ப்பு குறைவு.    பரிணாம நிகழ்வு பற்றிய ஒரு கொள்கையை முதலில் வரையறுத்தவர் லாமார்க் என்பதும், ஒரு உயிரி,அத‌ன் முன்னோர் என வகைப்படுத்தலும் இவரின் குறிப்பிடத் தக்க ஆய்வுகள் ஆகும்.

லாமார்க் சிக்கலான அமைப்பு உடைய உயிரிகள், எளிய அமைப்பு கொண்ட உயிரிகளில் இருந்து தோன்றி இருக்கலாம் என்னும் கருத்தை முதலில் கூறியவர்.



இப்போது பரிணாம கொள்கையின் சூழல் என்ன?

1. ஜார்ஜ் குவியேவின் உயிரின மறைவு[extinction] என்பது சான்றாகி விட்டது.

2. பரிணாமம் என்பது லாமார்க்கியம், மாறா குறிப்பிட்ட பண்புடைய உயிரிக் கொள்கையுடன் ஒப்பிடப் பட்டு பல விவாதங்கள்,ஆய்வுகள் நடக்கின்றன.


பெரும்பாலும் சூழல் நாயகர்களை உருவாக்குகிறதே தவிர, நாயகர்கள் சூழலை உருவாக்குதல் விதிவிலக்குகள் மட்டுமே!!!.

இந்த சூழலில் பரிணாம கொள்கைக்கு ஆதரவாக சான்று தேடிப்[27 December 1831 to 2 October 1836, ] புறப்பட்டார் சார்லஸ் டார்வின்.சார்லஸ் டார்வினின் தாத்தா[Erasmus Darwin (12 December 1731 – 18 April 1802) ] எரெஸ்மஸ் டார்வின் பரிணாம கொகையை வரையறுக்க முயன்றவர்களுள் ஒருவர் என்பதால், இதில் வியப்பு இல்லை.  


திரு குவியே,திரு லாமார்க்,எரேஸ்மஸ் அல்லாமல் பல ஆய்வாளர்கள் பங்காற்றி இருந்தாலும், இபோதைய பரிணாம அறிவியலில் பங்காற்றும் கொள்கைகளின் வரலாறு மட்டும் சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

அடுத்த பதிவில் யார் இந்த சார்லஸ் டார்வின் ? பரிணாம கொள்கையில் அவர் பங்களிப்பு என்ன? அவை எப்படி பரிசோதிக்கப்பட்டன? அவர் புத்தகம் ஆர்ஜின் ஆஃப் ஸ்ஃபீசிஸ் என்ன சொல்கிறது?இன்றும் ஏன் பரிணாம எதிர்ப்பு மதவா[வியா]திகள் இவரை கண்டபடி விமர்சிக்கிறார்கள்?? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!!!

இபோது திரு டார்வினுடன் சான்றுகளைத் தேடி பயணத்தை தொடங்குவோம்!!!

நன்றி!!!