வணக்கம்
நண்பர்களே,
நாத்திகம்
,ஆத்திகம் என்றால் நன்கு அறிந்த வியம்தானே இதில் என்ன எளிய விள்க்கம் என்கிறீர்களா!!.
தமிழ்நாட்டில் நாத்திக இயக்கங்கள் பல காலமாக செயலாற்றி ஆட்சியை கைப்பற்றினாலும், கோயில்களில்
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதிதாக சாமியார்களும் , மத பிரச்சாரங்களும் ஒவ்வொரு
இடத்திலும் இணையத்திலும் எதிரொலிக்கிறது. ஆகவே
ஏன் இப்படி சூழல் நிலவுகிறது என்பதை அறிய வேண்டும்.
நாம்
நாத்திகம் ஆத்திகம் என்பதை எளிதில் விளங்குவோம்.
நாத்திகம்
என்பது சமஸ்கிருத நாஸ்திக் என்னும் சொல்லின் தமிழ் வடிவம்,தமிழாக்கம் என்றால் இறை மறுப்பாளர்
என் பொருள் கொள்வோம்.ஆனால் முதலில் நாஸ்திக் என்றால் நான்கு வேதங்களை ஏற்க மறுப்பவனே
என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டது.
nastika refers to the non-belief of Vedas rather
than non-belief of God.[5] However, all these schools also rejected a notion
of a creationist god and so the word nastika became strongly associated with them.
இந்த
வரையறையில் பார்த்தால் ஆத்திகர்களில் பல வகைகள் உண்டு என்பதும்,ஒரு குழுவிற்கு ,மற்றவர்
அனைவரும் நாத்திகரே எனப்புரியும்.ஆத்திகர் என்பதும் சமஸ்கிருத ஆஸ்திக் என்னும் சொல்லின்
தமிழ் வடிவமே, இறை நம்பிக்கையாளர் என தமிழாக்கம் செய்யலாம்.
The Sanskrit term Āstika ("pious,
orthodox") refers to the systems of thought which admit the validity of
the Vedas Technically,
in Hindu philosophy the term Āstika refers only to acceptance of authority
of Vedas, not belief in the existence of God.
ஆனால்
இங்கும் ஆத்திகர் என்பது வேதங்களை ஏற்பவனே தவிர இறை நம்பிக்கையாளன் அல்ல!!!.
ஒரு
சொல்லின் பயன்பாடும் பரிணாம வளர்ச்சி அடையும் என்பதால் ,அவற்றின் பொருளும் மாறுவதில்
வியபில்லை.
சரி
இப்போது ஆத்திகர் என்றால் என்ன சொல்லலாம்
சில
புத்தகங்கள்,சில மனிதர்களின் இயற்கைக்கு மேம்பட்ட செயலை ஏற்பவர்கள் எனலாம்.
நாத்திகர்
என்றால் இயற்கைக்கு மேம்பட்ட செயல் எப்போதும் சாத்தியம் அற்றது என ஏற்பவரே.
நாத்திகம்
என்பதே இயற்கையியல் எனலாம்.
காணொளியின் வாக்கியங்களை தமிழாக்கம் செய்கிறேன்.
1..நம்
முன்னால் ஒரே ஒரு உலகமே அறிவியலால் வரையறுக்கப் பட்டதாக உள்ளது என்பதை புரிந்து அறிவோம்.இதில்
நாமும் ஒரு அங்கமே!!!
[அதாவது
வேறு உலகங்கள் சொர்க்கம் ,நரகம் உள்ளிட்டு இல்லை]
2.
இயற்கையியல்[naturalism] என்பது ஒரு வாழ்வியல் தத்துவம்,வழிகாட்டி ஆகும்.இது அதி இயற்கையியல்[super
naturalism] என்னும் இயற்கைக்கு மேம்பட்ட செயலின் எதிர் தத்துவம் ஆகும்.
3.
நமக்கு ஆன்மா உள்ளது என்பது நம்மிடையே
உள்ள பொதுவான ஆத்திக கருத்து. பவுத்தம் போன்ற சில நாத்திக கொள்கைகளும் இத்னை ஏற்கின்றன.
ஆனால்
இது நம்பிக்கையின் மீது மட்டுமே அமைந்த வாழ்வியல் தத்துவம் ஆகும். இதனை பரிசோதிக்க
முடியாது. உயிர்(ஆன்மா) என்பதும் உடலின் ஒரு தன்மையே . இதுவே மனிதன் மீதான இயற்கையியல்
சார்ந்த பார்வை ஆகும் .
4.
நாம் யார் என்பது தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி ஆகும். பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள்
ஒன்றுடன் ஒன்று வினை புரியும் விதத்தை விதிகளாக சான்றுகள் மூலம் நாம் வரையறுக்கிறோம்.
இந்த விதிகளும் எல்லைகளுக்குட்பட்டவை.நமது சான்றின் எல்லைகள் விரிவடையும் போது
விதிகளும் மாறும்.
எ.கா
நாம் பூமியை தாண்டி எதையும் அளவிட முடியாமல் இருந்து இருந்தால் நியுட்டனின் விதிகள்
மட்டுமே இயக்கவியல்,ஈர்ப்பு விசைக்கு போதும்.ஆனால் அதையும் தாண்டி பல ஒளி வருடங்க்ள்
தொலைவில் உள்ள பொருள்களை அளவீட்டு சான்றுகள் ஆக்க முடியும் போது ,அச்சான்றுகளை விளக்க ஏதுவாக ஐன்ஸ்டின் தனது அறிவியல்
விதியை வடிவமைத்தார்.
சான்றுகளின்
மீதே அறிவியல் விதிகள் கட்டமைக்கப் படுகின்றன.அறியும் இயற்கையின் எல்லைக் கேற்ப விதிகளும் மாறுகின்றன.
ஆகவே
இயற்கை என்பதும் நம் அறியும் திறனுக்கேற்ப விரிவடைகிறது.அளவீட்டு சான்றுகளால் அளவிட
முடியும் எதுவும் இயற்கையே!!.
மனிதன்
உள்ளிட்ட உயிரினங்களின் மாற்றங்களுக்கும் விதிகள் உண்டு. நாம் இயற்கையின் ஒரு அங்கமாக இணைந்து இருக்கிறோம். இது எதார்த்தமான
உண்மையே அன்றி மாய தொடர்பு அல்ல.
சில
எறும்புகள் ஒரு பெரிய ரொட்டித் துண்டை இழுக்கும்
போது,ஒவ்வொன்றும் ஒரு திசையில் இழுத்தால், ரொட்டி முடி்வு திசையில் நகரும்.அனைவருக்கும்
எதிரான அனைவரின் போராட்டம் என்பதற்கு இந்த எ.கா நன்கு பொருந்தும்.
இயற்கையோடு
வாழும் வாழ்வில் சில போட்டிகள்,வாழ்வதற்கான போராட்டம்,சூழலுக்கேற்ற மாற்றம் என்பதே
நமது பரிணாம வரலாறு ஆகும். [இதை
சொல்பவர் கார்ல் சேகன்].
இபோது
நம் ஆத்திக சகோக்கள் வைக்கும் வாதம் எல்லாம் படைப்பு என்றால் படைப்பவன்,இருந்தாக வேண்டும்.[First
cause argument]
விதிகள்
இருப்பதால் இதனையும் அறிவார்ந்த சக்தி(கள்) ஒழுங்காக நமக்காக வடிவமைத்து இருக்கிறது[Fine
tuning argument]. என்பதைத் தவிர நாத்திகர்களுடன் விவாதத்தில் வைக்க மாட்டார்கள்.
ஆனால்
தங்களைப் பின்பற்றுபவர்களிடம் இது சரி அது தவறு சட்டம் போட்டு, அது ஆட்சி அதிகாரச்
சட்டமும் ஆ(க்)கும் அபாயமும் இருக்கிறது. சில மத ஆட்சி நாடுகளில் பிற மதங்கள் தடை செய்யப்
படுகின்றன.மத் ரீதியாக பாரபட்சம் சட்டங்களில் உண்டு. அதையும் சிலர் [தமிழ் பதிவுலகிலும்]
நியாயப் படுத்துகிறார்.
இயற்கை
என்பது ஒரு தொடர் இயக்கத்தில் இருக்கிறது நாம் கடந்த கால்த்தின் நிகழ்வுகளை சான்றுகள்
மூலம் பொருந்தும் விளக்கம் கொண்டே கணிக்கிறோம். சான்றுகள் இல்லாக் காலத்தை நம்மால்
கணிப்பதில் பல சிக்கல்கள் உண்டு.
உயிரின
தோற்ற வளர்ச்சியை பரிணாம கொள்கை விளக்குகிறது, அனைத்து உயிரினங்களும் 350 கோடி ஆண்டுகளுக்கு
முன் இருந்து ஒரு செல் உயிரிகளில் இருந்து கிளைத்து தழைத்வையே. மனிதன்(ஹோமோ சேஃபியன்)
பரிணமித்தது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன், மனிதனும் ,சிம்பன்சியும் ஒரே முன்னோரில்
இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். ஹோமோ என்னும் பேரினத்தில்[genus] சுமார் 20 மனித இனங்கள்
தோன்றி,அதில் ஹோமோ சேஃபியன் மட்டும் இன்றுவரை வாழ்கிறோம். மனிதன் 20,000 ஆண்டுகளுக்கு
முன்பே விவசாயம் அறிந்து ஒரே இடத்தில் வாழ முற்பட்டான்.அதன் பிறகே இந்த நாகரிகம்,மதம்,அரசியல்
வரலாறு அனைத்துமே!!!.
நாம்
நம்மால் எது சரியாக அறிய இயலுமோ அதனை ஒத்துக் கொள்வதும், இப்போதைய விடை தெரியா விடயங்களை
அறிய முயல்கிறோம் என்பதே உண்மை. அறிந்த பின் அது இயல்பான விடயம் ஆகி விடுகிறது.
அப்படி
அறிவால் அறிந்த உண்மைகளை அன்றே வேதத்தில் கூறினார்
ஆதிமூலம் என்னும் (பொய்)பிரச்ச்சாரம் ஒரு ஏமாற்று வேலையே.
வேதங்கள்
தோற்றம் பற்றிய கதைகளுக்கும் வரலாறு,மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.இதனை உணர்ந்தாலே மதபுத்தகங்கள் மதிக்கப்
படாது.
ஆத்திகர்களில்
மத புத்தகவாதிகளே முழு மூச்சாய் எதிர்க்கப் பட வேண்டியவர்கள். மத புத்தக்ங்களில் ஒரு
குழுவை உயர்வாகவும்,இதர குழுக்களை மோசமானவர்களாகவும் காட்டி ,தனது குழுவை இறைவன்
தேர்ந்தெடுத்தார் என்பதுதானே இன்றுவரை வன்முறை மத்திய கிழக்கில் நடக்க காரணம்.
தன்னை
வணங்காதவர்களை நித்திய நரகத்தில் இட்டு பொசுக்குவேன் என்பவர் மத சார்பின்மை ஜனநாயக்த்தில்
நம்பிக்கை இல்லாதவ்ர் அல்லவா!! ஹி ஹி
இப்படிப்பட்ட
கடவுளை நம்புபவர்கள் எப்படி மத சார்பின்மை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு ஏற்பர்?தங்களின் பாரபட்ச மத சட்டம் அமல்படுத்த வழியில்லை எனப்போடும் வேடம் இது.
***************
நாத்திகம் என்பது சான்றுகள் அடிப்படையில் பரிசோதித்து மட்டுமே உண்மைகளை ஏற்பது.
உண்மை
என்பது ஒன்றை ஒன்று சாராத பல பரிசோதனைகளில்,மாறும் சூழலுக்கும் வெற்றி பெற வேண்டும்.
சான்றுகளுக்கு
பொருந்துவதே உண்மை.
ஆத்திகம்
என்பது அம்மத நம்பிக்கையாளருக்கு ஊக்கமூட்டும் ஒரு தத்துவம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
அவர்கள் பிறரை விட கடவுளினால் விரும்பப் பட்டு ஏற்கப்படுவதாக நினைக்கிறார்கள்.வாழும் சூழலுக்கு தகுந்த்வாறு போடும் இரட்டைவேட முகமூடிகள் கோமாளித்தனம் போல் தெரிந்தாலும் ஆபத்தானது.!!!
மரணத்திற்கு
பின்னும் இன்ப வாழ்வு வாழ நினைக்கும் கொள்கைகளை நகைச்சுவை என்று மட்டுமே சொல்வோம்.
ஆத்திகர்கள்
தங்கள் மதத்திற்காக எதையும் செய்யும்,நியாயப் படுத்தும் மனநிலையில் இருக்கிறார்கள்
என்பது நாம் நடத்திய விவாதங்களில் நன்கு புரியும்.
ஆத்திகர்கள் இணைவதாக நடிப்பதே அவர்களின் கொள்கையில் உண்மையில்லை என்பதை உணர்ந்து இருப்பதையே காட்டுகிறது.
அனைத்து மதங்களும் ஒன்றுதான் என நம்
பதிவுலக வஹாபி சகோக்கள் சொல்லி விட்டால் நம்வேலை பாதி முடிந்தது.
நாம்
மதங்களை எதிர்ப்பது இரு காரணங்களுக்காக மட்டுமே!!
1.
அதி இயற்கையியல்[Super natural இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை அறிதல்,சாதகமாக செயல்பட வைத்தல்] என
சொல்லி ஏமாற்றுதல்.
2.
மத அடிப்படை அரசியலமைப்பு சட்டங்கள்.
சரி
எல்லோரும் நாத்திகர் ஆவது கடினம் என்பதால் ஆத்திகர் (உலக முழுதும்) இப்படி இருக்க
வேண்டும் என்பது நம் விருப்பம்.
.
ஆத்திகத்தில் தத்துவம் இருக்கிறது, அது காட்டும் வாழ்வுமுறை பிடித்திருக்கிறது, அரசு
அமைப்பில் ஜனநாயகம்,மத சார்பற்ற மனித உரிமைச் சட்டங்களே வேண்டும் என்னும் ஆத்திகர்கள்
மட்டும் உருவானால் மகிழ்ச்சி!!!
நமக்கும்
அவர்களுக்கும் வித்தியாசம் மிக குறைவே.உலக
ஆத்திகர் அனைவரும் இணைந்து வந்து நம்மோடு விவாதித்தாலும்
சரியே!!
ஆனால்
சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம்.
கேள்விகள்
விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..
டிஸ்கி: ஒரு மிகப் பெரிய தன்னிலை விளக்கமும்
சில சமூக பிரச்சினைகள் சார்ந்து கொடுப்பது அவசியம் ஆகிறது. விவாதத்தில் வரும் கருத்துகள் சார்ந்து முயற்சிப்போம்.
நன்றி