Tuesday, October 30, 2012

நான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி


Prophet Nuh a.s
 

வணக்கம் நண்பர்களே,
 
பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து வருவதால் நாமும் தொடர்ந்து எத்ர்வினையாற்றும் சூழல் உருவாகிறது. சகோ ஆஸிக் அகமது ஆர்ச்சியோராப்டர் மோசடி பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.பரவாயில்லை நடுநிலையோடு எழுதி இருக்கிறார். இதனை நாம் மறுக்கப் போவது இல்லை.

நாம் எதிர்வினையாற்றுவதே அறிவியல் செய்திகளை விமர்சிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழில் அறியும் நண்பர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதுதான்.

ஒரு சர்சைக்குறிய கருத்து இடப்படும் போது அதன் மறுபக்கம்,பன்முகப் பார்வைகள் அறிவது உண்மை நாடும் பகுத்தறிவாளர்களின் கடமை ஆகும். இது மட்டுமே உண்மை,மாற்றுக் கருத்துகள் அனுமதிக்கப்படாது என கூறுவது யாராக இருப்பினும் தவறே.

அந்த வகையில் இப்பதிவில் ஒரு வித்தியாசமான பறக்கும் டைனோசார் பற்றி அறிவோம்.பரிணாமவியலில்  தெரபோட் டைனோசார் ல் இருந்தே பறவைகள் உருவானதே என்பதே இப்போதைய ஏற்கப்படும் கொள்கை. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் அளித்தல் என்பதும்,அவ்விளக்கத்தின் மூலம் செய்யப்படும் கணிப்புகள் எந்த அளவுக்கு மெய்ப்படுத்தப் படுகிறவோ அவ்விளக்கத்தின் நம்பக்த்தன்மை,ஏற்பு அதிகரிக்கும்.

சான்றுகள் மாறும் போது விளக்கமும் மாறும்.இதில் அறிவியலில் எந்த பிரிவும் விதிவிலக்கு அல்ல.அந்த வகையில் பரிணாம வளர்ச்சியில் டைனோசாரின் முன் இரு கைகளில் இறகு முளைத்தே இறக்கைகளாக மாறியது என்பதே இப்போதைய அறிவியல் கொள்கை அனைத்து பற்வைகளுக்கும் இரு இறக்கைகள்,இரு கால்கள் உண்டு,

பல புராணக் கதைகளில் சில விலங்குகள் நான்கு கால்களுடன் இரு இறக்கைகளுடன் காணப்படும். பரிணாமத்தின் படி இது சான்றுகள் அற்ற ஏற்கப் படாத ,சாத்தியமற்ற‌ விடயம் ஆகும்.

இந்திய புராண காமதேனு


இஸ்லாமிய  புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.


சீன புராணக் கதை ட்ராகன்!!!

 

மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் நாலுகால் விலங்குகள் பற்றி பல புராணக் கதைகளில் உண்டு. 

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மைக்ரோராப்டர் என்னும் டைனோசார் படிமத்தில் நான்கு இறக்கைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதாவது பின்னங்கால்களிலும் இறகுகள் உண்டு.

இது தெர்போட்[theropod] டைனோசாரிடம் இருந்து பறவைகள் தோன்றின என்னும் கொள்கையை மாற்றுமா என்பதே விவாதம். இதை ஏன் கூறுகிறோம் என்றால் ஏற்கெனவே உள்ள கருத்துக்கு சற்று மாறான் சான்று கிடைத்தாலும் அதையும் பரிசீலித்து ஏற்கும் அறிவியல் என்பதை வலியுறுத்தவே செய்கிறோம். இந்த நான்கு இறகு டைனொசார் ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்கலாம், அல்லது பறவைகளின் தோற்றத்திற்கு மாற்று விளக்கம் அளிப்பினும் ஏற்கப்படும்.






கிடைக்கும் சான்றுகளை  பலர் ஒருவரை ஒருவர் சாராமல் ஆய்வு செய்து ஒத்த ஒருமித்த கருத்துகள் வருவதையே அறிவியல் உலகம் விரும்புகிறது.

ஒருவேளை எவரேனும் தவறு செய்தால் பிடிப‌டுவது இதனால்தான். ஆகவே பில்ட்டௌன் மேன்,ஆர்ச்சியோராஃப்டர் என ஒரு சில மோசடிகளை சொல்லி பரிணாம எதிர்ப்பாக காட்டுவது நகைப்புக்குரியது.

ஆகவே தவறான படிமங்களை நிரூபித்தால் அறிவியல் உலகம் ஏற்கும் என்பதால் இருக்கும் படிமங்கள் அனைத்தையும் தவறென்று நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள பரிணாம் எதிர்ப்பாளர்களை வேண்டி விரும்பி கேட்கிறோம்.

ப‌டிம‌ங்க‌ள் அனைத்தும் தவ‌றாகி விட்டால் ப‌ரிணாம‌ம் இல்லாமல் போய் விடும்.ப‌ற‌க்கும் டைனோசார்க‌ள் என்ப‌து டை‌னோசாரின் ஒரு உயிரிக் குழு என்றாலே ப‌ரிணாம‌ம் புரிந்துவிடும்.

அளவில‌ பெரிய‌ டைனோசார்க‌ள் உருஅளவில் குறையும் சிறுப‌ரிணாம‌மும்[micro evolution] ம‌தவாதிக‌ளால் எதிர்க்க‌ முடியாது. ஆக‌வே ப‌றவைக‌ள் என்ப‌து ஒரு வ‌கை சிறிய‌ டைனோசார்க‌ளே!!!.

இன்னும் கூட டைனோசார்கள் பறவைகளாக பரிணமித்த விடயமும் இச்சுட்டிகளில் விளக்கப் படுகிறது.

Nine links in the transition from dinosaurs to birds

http://www.talkorigins.org/indexcc/CC/CC214.html


************

இன்னும் அந்தப் பதிவில் உள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு பிடிக்கிறது.

//இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். //

 
அறிவியல் ஒன்றும் புனிதப் பசு அல்ல, புகழ்வெறி பண ஆசை கொண்டவர்கள் எங்கும் எதிலும் இருப்பது போல் இயல்பானது. ஆனால் அறிவியலில் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அமபலப் படுத்தப்படுவது போல் பிற வாழ்வியல் சார் விடயங்களில் நடப்பது இல்லை.

ஏதேனும் படிமத்தை யாரும் ஆய்வு செய்ய விருப்பப் பட்டால் அது நடக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் பல நாடுகளில் அகழ்வாய்வு செய்தால் தங்கள் குட்டுகள் அறியப்படும் என மறுப்பார்கள்.செய்திகளும் வராது!!!

ஆகவே அறிவியலில் சில மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான், அதன் சரி பார்க்கும் செய்லாக்கமான ஒன்றை ஒன்று சாரா ஆய்வுகளின் மூலம் ஒத்த ஒருமித்த கருத்துகள் எட்டப்படுதல் என்பது தவறுகளை நீக்கி சரியான பாதையில் நடத்துகிறது.

இப்போது  நாமும் ஒரு மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.ஆனால் சகோக்கள் ஏற்க மாட்டார்கள் என்ன அது.

பைபிளில் நோவா என்ரும் குரானில் நூஹ் என்றும் அழைக்கப்படும் இறைத்தூதர் கால்த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதாவது அன்பு மிக்க கடவுள் தன் சொல் கேளாதவர்களை அழிக்க ஏற்படுத்தினார்.

அதில் இருந்து கடவுளின் அடியார்  நோவா(நூஹ்)மற்றும் அவர் குடும்பம்  ஒரு கப்பல் செய்து அந்த கப்பலில் பல விலங்குகளையும் ஏற்றி தப்பிக்க வைத்தார் எனக் கூறுகின்றன மதபுத்தகங்கள்.

சரி இந்த வெள்ள‌ப் பெருக்கு ஆனது உலக முழுதும் என்பதே பொதுவான கருத்து ஆகும்.ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்போது இஸ்லாமிய பிரச்சாரகர்கள், இது நூஹ்(நோவா) வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது என்று  பொய் சொல்கிறார்கள்.

பாருங்கள் அண்னன் ஜாகிர் நாயக் என்ன கூறுகிறார்?? ‌



குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!

ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!

அறிவியலில் மோசடிகள் நடப்பது அபூர்வம்,அப்படிநிகழ்ந்தாலும் அது கண்டுபிடிக்கப்படும்,நீக்கப்படும்.ஆனால் மதவாதிகளின் புராணக் கதை மோசடிகள் மறைக்கப்படுகிறது.காலம் காலமாய் தொடர்கிறது!!!!!!!
 
நோவா கப்பல் கதைக்கு ஆதாரம் கிடையாது,ஏதோ அராஃபத் மலையில் கிடைத்த கப்பல் என்பதும் மோசடி வேலையே!!!.பதிவின் தொடக்கத்தில் உள்ள படம்!!
 
http://www.wnd.com/2010/04/146941/

இது பற்றிய நம் முந்தைய பதிவு ஒன்று.
நோவா கப்பல் கதை உண்மையா?

ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
நன்றி

ப்ரோட்டா ,ப்ரோட்டீன் ,பரிணாமம் தொடர்பு என்ன?



[பரிணாம ஆதாரங்களைப்] பார்க்காதே

[பரிணாம விளக்கங்களைக்] கேட்காதே
[பரிணாமம் மறுக்க] மத புத்த்கம் படி!!



வணக்கம் நண்பர்களே,


நம்மை எப்போது நினைத்து வாழ்த்தும் மார்க்க சகோக்களே, பரிணாமம் கற்க ஆதரவளிக்கும் நண்பர்களே மீண்டும் ஒரு பரிணாம விளக்கப் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி.



நமது அன்புக்கும், பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய பதிவுலக மார்க்கமேதை அண்ணன் சுவனப் பிரியன் பரிணாமம் கற்க ஆரம்பித்தது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. நாளொறு மேனியும் பொழுதொறு வண்னமாய் அழகிய முறையில் பரிணாம எதிர்பதிவுகள் எழுதி வருகிறார். நாமும் இதற்கு மறுப்பு எழுத என்றும் விரும்புவதால் அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம். முதலில் அவரின் இப்போதைய பதிவின் சாரத்தை அறிவோம்.
http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_7859.html

1.1.// நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்? //


புரதம்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புரதம் (Protein) என்பது அதிக மூலக்கூறு எடையுள்ள, அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் வளர்சிதைமாற்றங்களில்உதவும் நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ விளங்குகின்றன. வேறு சில புரதங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, உயிரணுகளின் வடிவத்திற்குக் காரணமான கலசட்டகத்தை (Cytoskeleton) உருவாக்குவது புரதங்கள் ஆகும். அக்ரின் (actin), மயோசின் (myosin) எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்பிறபொருளெதிரிகள், ஈந்தணைவிகளின் சேமிப்பு மற்றும் உயிரணுக்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.


எளிதாக புரியவேண்டுமெனில் புரதம் என்பது நமது செல்லில் உள்ள ஒரு வேதிப் பொருள். அது பல செயல்களை செய்கிறது. .


இருப்பினும் நம் அண்ணன் கேள்வி ப்ரோட்டினை இப்படி அறிவோடு செயலாற்ற வைத்தது யார்? என்ற கேள்வியில் ப்ரோட்டின் என்பது ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] இது பரிணமிக்க இயலாது என்பதே சரியான பரிணாம எதிர்ப்பு வாதம்.




பொதுவாக ப்ரோட்டினின் உள்ள அமிலக் கூட்டமைப்பின் நிகழ்தகவு மிக,மிக... குறைவு என்ற வாதமே வைக்கப்படும். ஆனால் அண்ணன் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பதோடு நிறுத்திக் கொண்டார்.சரி அதில் கணிதம் வருவதால் அண்ணன் ஒதுங்கி விட்டார்!!!.எனினும் அதற்கும் விளக்கம் இந்த காணொளியில் உண்டு.






ப்ரோட்டின் என்பது வேதிப் பொருள் என்பதால் அதன் குணத்திற்கேற்ப இங்குகிறது என்று மட்டுமே அறிவியல் சொல்ல இயலும்ப்ரோட்டின் எப்படி இயங்குகிறது என்பதைக் கூறுவதே அறிவியல்.ஏன் ப்ரோட்டின் இப்படி இருக்கிறது என்பது தத்துவம்.

ஆகவே தத்துவரீதியாக கூறினால் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பது தவறான கேள்விஇது முதல் காரணி வாதத்தின்[First cause argument] ஒரு மாறுபட்ட வடிவமே.அதாவது படைப்பு என்றால் படைக்கும் சக்தி அவசியம்,ஆனால் அப்படைக்கும் சக்திக்கு இன்னொரு படைப்பு சக்தி தேவையில்லை என்பதுதான்.
அப்படி எவ்வகையிலும் அறிய இயலா சுயம்புவான படைப்பு சக்தி என்பதை ஏற்பவர்கள்,ஏன் அறிய இயலும் ப்ரோட்டினும் சுயம்புவாக தோன்றியது என்பதை ஏற்க கூடாது???
***************
2.//ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லைஇது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.//

ப்ரோட்டின் என்பது ஒரு வேதிப் பொருள் அதில் பல வகையான அமைப்புகள் உள்ளன.உருவான முதல் செல்லிலேயே இந்த ப்ரோட்டின்கள் தயாரிக்கும் வண்ணம் இருந்திருக்க வேண்டும்.அறிவியலின் அபியோஜெனெசிஸ் ன் படி உயிரற்ற வேதிப்பொருள்களில் இருந்து முதல் செல் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருதுகோளே ஏற்கப்பட்டு அதன் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.

பரிணாமத்திலும்
 வடிவமைப்புகள் இயற்கைத் தேர்வினால் காலப் போக்கில் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் மாற்றியமைக்கப்படுவது இயல்பே.இயற்கைத் தேர்வின் படி உடலில் உள்ள ஒரு உறுப்போ,அல்லது வேதிப்பொருளோ ,அதன் செயல் பயன் அளித்தால் மட்டுமே நீடிக்கும்பாதிக்கும் செயல்கள் தீர்வில் நீக்கப்படும்ஒருவேளை இரைப்பை இப்படி தான் சுரக்கும் அமிலத்தால் அதுவே பாதிகப்பட்டால் அந்த உயிரி தேர்வில் நீக்கப்படும்ஆகவே ப்போது வாழும் உயிரிகள்,உறுப்புகள் அனைத்தும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்று நீக்கப் படாதவைஇது படைப்பு போன்ற மாயை தருவதில் வியப்பு ஒன்றுமில்லை.

இந்தக் கேள்விதான் அண்ணன் ப்ரோட்டினை ப்ரோட்டா மாதிரி நினைக்கிறார் என்னும் அரிய உண்மையை நாம் அறியத் தந்தது.

பாருங்கள் ப்ரோட்டா மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறதுவீச்சு பரோட்டா,கொத்து பரோட்டாசில்லி பரோட்டா,சிக்கன் பரோட்டா என பலவகைகளிலும் பரிணமித்து உள்ளதுகுரானிலும் அல்மைதா என ஒரு அத்தியாயமே உண்டு.
Sura Al-Ma'ida (Arabicسورة المائدة‎, Sūratu al-Mā'idah, "The Table" or "The Table Spread with Food") is the fifth chapter of the Qur'an, with 120 verses

ப்போது முதல் செல்லில் இருந்து தோன்றிய அனைத்து உயிரி,தாவர வகைகளின் செல்ஜீனோம்ப்ரோட்டின் ஆவணப் படுத்தப் பட்ட விவரங்கள் இருக்கிறது என்றால் பரிணாம மரத்தின் படி ஏற்பட்ட‌ மாற்றங்கள் ப்ரோட்டின்களின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் உருவாக்கி உள்ளதா என்பதை அவதானிக்கலாம்.

ஆனால் ஏற்கெனெவே வாழ்ந்து மறைந்த உயிரிகளின் படிமம் மட்டுமே உள்ளது.வாழும் உயிரிகளின் ஜீனோம் கண்டறியப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒவ்வொரு உயிரியின் ஒவ்வொரு செல்லையோ அல்லது அதில் உள்ள ப்ரோட்டின்களையோ ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியுமா?அப்படி நடக்கும் ஒப்பீடு ஆய்வுகளும் பரிணாமத்திற்கு எதிராக இல்லை.

நாம் ஏற்கெனவே சொன்னபடி மதவாதிகள் எபோதும் சான்றுகள் குறைவாக உள்ள‌ விடயங்களையே விவாதங்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதற்கு ப்ரோட்டின் மீதான பரிணாம எதிர்ப்பும் ஒரு .கா!!.


3.//ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம்
இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவாஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?..இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.//


எனினும் அண்ணன் விடாப்பிடியாக ப்ரோட்டினை படைத்தது யார் எனக் கேட்கிறார்? அதனைவிட ப்ரோட்டின் படைப்பாளி யாராக இருக்க முடியாது என்பதை நாம் எளிதில் விளக்க முடியும்.

இந்த இரைப்பையில் உள்ள அமிலம் ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல் பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறது. ஆகவே பன்றிக் கரி உண்பதை தடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்து இருக்க முடியாது!!!!!.

வெஜெடேரியக் கடவுள்களும் ப்ரோட்டின் படைப்பாளியாக இருக்க முடியாது.!!!!!!!!!!.

அனைத்து வகை மாமிச உணவையும் அங்கீகரித்து, படையலை ஏற்றுக் கொள்ளும் கடவுள் மட்டுமே ப்ரோட்டின் படைப்புக்கு உரிமை கொண்டாட முடியும்.!!!!!!!!

சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி அவர்களுக்கே ப்ரோட்டின் படைப்பாளி ஆகும் வாய்ப்பு ((மட்டுமே!!) அதிகம் என கூறுகிறேன்.


4.//அல்புமீனைப் பற்றியும்ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லைபரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏகுரோமசோம்கள்புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும்இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.//

இது மேலே கூறிய வாதங்களின் தொகுப்பு. நாம் கூறுவது என்ன??? பரிணாம கொள்கைக்கு ப்ரோட்டீன்கள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் எதிராக முடியாது. ஏன் எனில்[ சில விதிவிலக்குகளைத் தவிர‌ ] வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் அமைப்பு மட்டுமே நமக்கு தெரியும்.ப்ரோட்டின்கள் புதிதாக கூட உருவாக்குகிறார்கள்.இயற்கையிலும் இதேபோல் உருவாகி இருப்பதில் வியப்பில்லை.


பரிணாமம் நடைபெற ஜீனோமில் மாற்றம் ஏற்பட வேண்டும்,அந்த மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களில் பிரதிபலிக்கும். ஆகவே பரிணாமம் நடைபெறவில்லை எனில கீழ்க்கண்டவை நிரூபிக்கப்படவேண்டும்.

a). ஜீனோம் மாறுவது இல்லை.


b). இம்மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களை பாதிப்பது இல்லை.


ஏற்கெனெவே நமது பதிவில் போலி ஜீன்கள் பற்றி அலசி இருக்கிறோம்.அதாவது முதலில் ப்ரோட்டின் தயாரித்து பிறகு
 பரிணாம மாற்றத்தால்[mutations] தயாரிக்க இய்லாமல் போன ஜீன்களே இவை.

ஆகவே நாம் முடிவாக என்ன கூறுகிறோம்.

1.இந்த ப்ரோட்டின் மீதான பரிணாம விமர்சனம் என்பது முதல் செல் எப்படி வந்தது என்ற கேள்வியின் மறு உருவமே!!!.முதல் செல் தோன்றியபோதே அது ப்ரோட்டின் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.

2.பரிணாமம் என்பது ஒரு செல் உயிரிகளில் இருந்து அனைத்து உயிரிகளும் பரிணமித்த‌ன என்பதையே விளக்குகிறதே அன்றி, எப்படி முதல் செல் அல்லது உயிர் உருவானது என்பது பற்றி அல்ல.ஒரு செல் உயிர்கள், பலசெல் உயிர்களானதும்,அதில் இருந்து கடல்வாழ் கேம்பிரியன் என்று தொடங்கி இப்போதைய மனிதன் உள்ளிட்ட வாழும் உயிரிகள் வரை பரிணமித்தன.இதில் 99% வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் பற்றிய விவரங்கள் மட்டுமே ஆவணப் படுத்தி உள்ளார்கள்.இதை வைத்து பரிணாமத்திற்கு ஆதரவு ப்ஸூடோஜீன்கள் கண்டறியப்பட்டதே அன்றி எதிராக எதுவும் இல்லை. 
3. இரைப்பையில் உள்ள அமிலம்,உள்ளிட்ட சில உறுப்புகளின் தனித்திற்னுக்கு விடை ஒருவேளை அவை சரியாக சூழலுக்கு ஏற்றபடி இயங்காவிட்டால் அந்த உயிரியே இயற்கைத் தேர்வின் படி அழிந்து இருக்கும்.

இம்மாதிரி கேள்விகள் ஒரு உறுப்பு, ஒரு செயல்,குணம் எப்படி பரிணமித்தது என்பவை பெரும்பாலும் குழப்பும் நோக்கில் கேட்கப்படுபவையே. உயிரிகள் பரிணமிக்கும் போது அதில் ஏற்படும் மாற்றங்களில் மெலே சொன்ன விடயங்கள் அடங்கிவிடுகின்றன.

உறுப்புகள்,செயல்,குணம் சார்ந்து பரிணாம வளர்ச்சி ஆய்வுக் கட்டுரைகள் உண்டு.பரிணாமக் கடலில்  மீன் பிடிக்க பல மில்லியன் விடயங்கள் உண்டு. கற்றது கைம்மண் அள்வு, கல்லாதது உலகளவு என்பதை நாம் அறிந்து இருக்கிறபடியால் நம் விளக்கங்கள் பொதுவாக் கேள்விகளின் பொருளற்ற தன்மையை விளக்குவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.

ப்ரோட்டா மைதாவில் இருந்து பரிணமித்தது போல் ப்ரோட்டினுக்கு முன்னால் என்ன என்பதே அண்ணன் கேள்வி!!!. இப்போது நமது பதிவின் தலைப்பு விளங்கி இருக்கும். அண்ணனின் கேள்வியை பாராட்டி ஒரு நகைச்சுவை காணொளி!!!. 



அண்ணன் அடுத்த பதிவு போட்டதும் மீண்டும் மறுப்போம்!! நன்றி