Thursday, March 1, 2012

எய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்!!!!!!
கடந்த சில பதிவுகளில் பரிணாம எதிர்ப்பாளர்கள் அளிக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். சென்ற பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் படிம வரலாறு,இடைப்பட்ட படிமங்கள் பற்றி  கருத்து கூற மாட்டேன் ஆனால் பரிணாம் செயலாக்கம்  பற்றி மட்டுமே கேள்வி கேட்பேன் என்றார்.ஏற்கெனவே மதம் பற்றியும் எதிர் கேள்வி கேட்டால் ஓடி விடுவார்கள்  என்பதாலும், கேள்வி[பொன்?] முட்டை போடும் வா()த்தை அறுக்க விரும்பாமல் அதற்கும் சம்மதித்து விவாதத்தை தொடர்ந்தோம்.


பரிணாம் செயலாக்கம் பற்றி விள்க்கியது சரியாக் இருக்கும் போல் தெரிகிறது அதை பற்றி எதுவும் கூறாமல் சிறு மாற்றங்கள்[mutations] எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது ,என்ற கருத்து கூறினார்.

அதற்கு நாம் எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் CCR5 என்னும் சிறுமாற்றம் இது ஐரோப்பிய மேற்காசிய 10% மக்களிடம் காண்ப்படுகிறது என்னும் ஆய்வுக்க்ட்டுரை அளிதோம். இந்த சிறுமாற்றம்  7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாக அக்கட்டுரை கூறுகிறது.

வைரஸ்களிலும் சிறுமாற்றம் ஏற்பட்டு அவைகள் மருந்தை விட சக்தி பெற்று வருவதை பரிணாமம் என பரிணாம எதிர்ப்பாளர் ஏற்கமாட்டார் என்றாலும் அது பற்றி ஆய்வு செய்யாமல் எவரும் நோய்களுக்கு மருந்து தயாரிக்க முடியாது.


இது பற்றி ஆய்வு செய்யும் ஒரு குழு.


வைரஸ் சக்தி பெறுவது வைரசுக்கு நீடித்து வாழ உதவுவதால் அதற்கு முன்னேற்றம்தான்.இதை எதற்கு சொல்ல வேண்டும் அவர் சொன்ன கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்றாலும் பல் தகவல்கள் பகிர்வது நல்லதுதானே!.

டார்வின் மருந்தியல் என்ற துறையே இபோது வளர்ந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் நலம். சரி கேள்விக்கு போகலாம்!.


நாம் காண்பித்த இரு சிறுமாற்ற நிகழ்வுகள் முன்னேற்றம் அல்ல என்கிறார் நண்பர். நாம் கூறியது இந்த இயற்கையாக ஏற்பட்ட  CCR5 சிறுமாற்றம் ஐரோப்பிய,மேற்காசிய மக்களிடம் எய்ட்ஸ் கிருமி எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தி உள்ளது.ஆகவே இந்த சிறுமாற்றம்  செயற்கையாக ஏற்படுத்தி எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலான சில மருந்துகளும் உண்டு.


நண்பர் இப்படி சிறுமாற்றம் உள்ளவர்களுக்கு ஒரு வைரஸ் [West Nile virus] மூலம்  பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்ற அறிவியல் கட்டுரை அளித்தார்.

நாம் யார் எது சொன்னாலும் முதலில் காது கொடுத்துக் கேட்போம்.எய்ட்ஸ் என்பது கொடுமையானவைரஸ் கிருமி என்பது அனைவருக்கும் தெரியும்.அப்போது அந்த West Nile virus வைரஸ் எய்ட்ஸ் கிருமியை விட  கொடியதாக் இருந்தால் மட்டுமே சாதிக் சொன்னது சரி.

நண்பர் சாதிக் கூறியது இதுதான்!

//இந்த mutationஆல் ccr5 receptor பழுதடைவதால் HIV கிருமி T cell க்குள் நுழைய முடிவதில்லை. இதனால் HIV கிருமி தாக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். இதனால் பாதகமும் ஏற்படுகிறது. இந்த mutation T cell உடைய செயல்பாட்டை (நோய் எத்ர்ப்பு சக்தி) பாதிக்கிறது. இந்த mutation உள்ளவர்களுக்கு West Nile virus என்ற கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.//

முதலில் சாதிக் காட்டிய சுட்டியில் இருந்து சிலவற்றை பார்ப்போம். கட்டுரை ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழாக்கம் அளிக்கிறோம்.த்வறு இருப்பின் சுட்டிக் காட்ட அன்போடு அழைக்கிறோம்.இவை அனைத்தும் சாதிக் காட்டிய சுட்டியில் இருந்தே

http://www.niaid.nih.gov/news/newsreleases/2006/pages/ccr5.aspx


A )People who lack a cell surface protein called CCR5 are highly resistant to infection by HIV but may be at increased risk of developing West Nile virus (WNV) illness when exposed to the mosquito-borne virus, report researchers from the National Institute of Allergy and Infectious Diseases (NIAID), part of the National Institutes of Health (NIH).

மனிதர்களில் CCR5 சிறுமாற்றம் கொண்டவர்கள்  கிருமிக்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருப்பது உண்மை என்றாலும் இவர்கள் West Nile virus (WNV) வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு கடித்தால் அந்த வைரஸ் நோய் பெறும் வாய்ப்பு அதிகம். இத்னை National Institute of Allergy and Infectious Diseases (NIAID),ஆய்வாளர்கள் அறிவித்தனர்

B)// The findings may have cautionary implications for physicians who are treating HIV-positive individuals with experimental CCR5-blocking drugs, say the scientists.//

இது எய்ட்ஸ் நோய்க்கு CCR5 சிறுமாற்றம் செயற்கையாக மருந்து மூலம் ஏற்படுத்தி குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை தாக்கங்களை ஏற்படுத்தலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

C)// Most people inherit two normal copies (one from each parent) of the gene that codes for CCR5 protein. About 1 percent of North American whites, however, have a mutation in both copies (are homozygous) and thus do not produce any CCR5. These individuals have the good fortune of being highly resistant to HIV infection and otherwise seemed to suffer no ill effects from the absence of this receptor protein, scientists noted. But the new research by Dr. Murphy’s team suggests that lacking CCR5 may not be an unalloyed good after all.//

வட அமெரிக்க வெள்லையின மக்களில் 1% இந்த two copies CCR5 சிறுமாற்றம்  பெற்று உள்ள்னர்.இவர்களுக்கு எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி உள்ளதும்,இவர்கள் சாதாரணமாக இருப்பதும் இப்போது இந்த ஆய்வினால்  கேள்விக்கு உள்ளாக்ப்பட்டு உள்ளது.அதாவது இந்த two copies CCR5 சிறுமாற்றம் முற்று முழுதும் நல்லது அல்ல.

D)//Dr. Murphy and his colleagues determined that 4.5 percent of 247 WNV-positive samples from Arizona were from patients who had two copies of the CCR5 mutation. In contrast, a control group of 145 WNV-negative blood samples showed 0.7 percent were from people who had two copies of the CCR5 mutation—a number in line with the expected 0.8 to 1 percent range believed to be present in all North American whites. Next, the researchers analyzed the WNV-positive samples from Colorado and determined that 4.1 percent of the entire set of 148 samples came from individuals homozygous for the CCR5 mutation. Among those Coloradans who provided WNV-positive samples and who self-reported their race as white, the percentage of homozygous individuals was 8.3.//

பரிசோத்னையில் அரிஜோனா மாநிலத்தில் 4.3 %,[from sample of 247]கொலராடோ மாநிலத்தில் 4.1% [from sample of 148], வெள்ளையின மக்களில் 8.3% [from no data] two copies  CCR5 சிறுமாற்றம் கொண்டவர்கள் வெஸ்ட் நைல் விரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


அச்சச்சோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த சிறுமாற்றம் உல்ளவர்களுக்கு எய்ட்ஸ் வராமல் போனாலும் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பது தெரியாமல் கூறிவிட்டோமா!.அவ்வளவுதான் அதிலும் நண்பர் சாதிக் இந்த வைரஸ் பற்றி  நமக்கு பற்றி கூறி இருப்பதால் இது எய்ட்சை விட கொடிய வைரஸ் என உலகில் கண்டுபிடித்தவர் டாக்டர் சாதிக்தானே!

இந்த வைரசும் பரிணாம் வளர்ச்சியில் உருவானதாக விக்கிபிடியா கூறினாலும் அவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றே கூறுவார் என்பதும் அறிந்ததே.


சரி மருந்தே இல்லாத நோயா என்றால் AMD 3100 மருந்து எய்ட்ஸ்+ வெஸ்ட் நைல் வரஸ் நோய்க்கும் பயனளிக்கும் என்கிறார்கள்.சரி அது என்ன என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறு மாற்ற‌த்தை CXCR4 செயற்கையாக் உருவாக்குகிறது என்கிறார்கள்.

இதனை வைத்து மனித்னின் எய்ட்ஸ்க்கு தடுப்பூசி போல் கண்டுபிடித்து விடுவார்கள் போலும் தெரிகிறது.

Background: Recently, an HIV-infected individual with leukemia received a bone marrow transplant from a ccr5?32 homozygous donor, a mutation that naturally confers resistance to HIV infection. Nearly 3 years post-transplant, this individual's viral load remains undetectable in the absence of ART. Our long-term goal is to recapitulate this success, by genetically disrupting the HIV co-receptors CXCR4 and CCR5 to engineer HIV-resistant CD4+ T cells for autologous transplant.

ஆகவே  CXCR4 க்கும் ஒரு கெடுதல் கண்டு பிடிக்க சாதிக்கை வேண்டுகிறோம்


சிறு மாற்றங்கள் நிறைய கைவசம் இருப்பதால் இன்னும் நிறைய பதிவு எழுத உதவி புரிய வேண்டுகிறோம்.

சிறு மாற்ற‌ம் நம்மை ஏமாற்றாது!!!!!!!!!!!!!.

சரி சாதிக் அந்த CXCR4 சிறு மாற்றத்திற்கு  ஒரு கெட்ட பெயர் ஏற்படுத்துவதில் மும்முரமாகி விடுவார். நாம் வெஸ்ட் நைல் வைரஸ் பற்றி இன்னும் கொஞ்சம் விவரம் அறிவோம்.


இந்த சுட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்  அமெரிக்காவில் ம‌ட்டும் கண்க்கீடு வைத்து உள்ளார்கள்.2011 ல் இருந்து 2012 ஜன்வரி 10வரை அமெரிக்காவில் மொத்தம் 690 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் இறந்து விட்டார்கள்.


இந்த வைரஸ் ஒரு வருடத்தில் அமெரிக்காவின் 30 கோடி மக்கள் தொகைக்கு 600+ ஆட்களை பாதித்து, 40+ ஆட்களை கொல்கிறது.கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தினால் இது இன்னும் குறையலாம்.ஆனால் எய்ட்ஸ் என்பது இன்னும் உயிர்க் கொல்லி நோய் அதற்கு மருந்தாக் இந்த இரு சிறுமாற்றங்களும் பயன் படுகின்றன என்பதுதான் உண்மை.

ஆகவே வெஸ்ட் நைல் வைரஸ் வரும் வாய்ப்பு குறைவு,

வந்தாலும் குணப்படுத்தி விடலாம்.

இது எப்படியெனில் டாக்கின்ஸ் மதம் சாராத கடவுள் இருப்பதற்கு சிறு நிகழ்தகவு அளித்தது சுவனப்பிரியனுக்கு ஆத்திகமாக தெரிந்ததோ அதுபோல் CCR5 சிறுமாற்ற‌ம் எய்ட்க்கு எதிர்ப்பு சக்தி அளித்தாலும் எங்கேயோ,எப்போதாவது வரும் ,அதிகம் பாதிக்காத WNV வைரஸ் அந்த சிறுமாற்றம் உளள் வரை பிறரை விட அதிகம் பாதிக்கும் வாய்ப்பு  என்பது இவருக்கு மோசமான் விளைவாக் தெரிகிறது.எனக்கு இருவர் சிந்தனைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இது CCR5 க்கு மட்டுமே CXCR4 ல் இந்த குறைபாடு கூட கிடையாது.இதிலும் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்க அன்போடு பரிணம் எதிர்ப்பாளர்களை வேண்டுகிறோம்.

இன்னும் டாக்டர்  சாதிக்கின் இரு கேள்விகள் இருக்கின்றன.  அதற்கும் பதில் அளிப்போம்.

http://www.videojug.com/interview/hiv-treatment-and-combinations

நன்றி!!!!!!!!!!!!!!

25 comments:

 1. சகோ.சார்வாகன்,
  அஷ்டலக்கடி கொய்யா!(வணக்கம்)

  வாத்து பிரியாணி இல்லைனாலும் வாத்து முட்டை கிடைச்சா போதுமே:-))

  ஆஃப்ப் பாயில்/ஃபுல் பாயில்/ஆம்ப்லெட் னு போட்டு சாப்பிடலாம்.

  மேற்கு நைல் கிருமி பொல்லாத கிருமியா இருக்கும் போல.ஆனாலும் பரிணாம எதிர்ப்பாளர்களை அந்த க்ருமி ஒன்னும் செய்யாது, ஏன்னா அந்த கிருமி மூளைய தான் தாக்குமாம் :-))

  இந்தியாவில் டெங்கு,சிக்குன் குனியா,காலராவுக்கு எல்லாம் நிறைய பேரு சாவுறாங்க அப்போ அதெல்லாம் ஏமகுறைப்பு (எய்ட்ஸ்)நோய் கிருமியை விட அதி பயங்கரமான கிருமியா இருக்கும் போல!

  சென்னைல மேற்கு கூவம் வைரஸ்னு ஒன்னு இருக்காம் அது பத்தி அந்த அறிஞருக்கு ஏதாவது தெரியுமானு கேட்டுப்பாருங்க :-))

  ஜமாலக்கடி கிர் கிர்!(இறைவன் சன்மானம் அளிப்பானாக)

  ReplyDelete
 2. சகோ, ஆசியாவில் அதிகமானவருக்கு பசு பால் ஒத்து கொள்ளாமை (Lactose) இருப்பதிற்க்கும் ஐரோப்பியர்களிடம் இந்த பிரச்சனை குறைவாக இருப்பதும் பரிணாம செயற்பாடுகளுக்குட்பட்பதா?

  ReplyDelete
 3. வாங்க சகோ வவ்வால்

  ஏற்கெனவே டாக்கின்ஸ் விடயத்தில் பிரியாணி போன சோகமே இன்னும் ஆறவில்லை .ஆகவே வாத்துகளை வைத்தாவது முட்டை போட வைத்து பிழைப்பை நடத்தலாம் என்றுதான்.
  நாமும் ஔவைப் பாட்டி ஒன்று,இரண்டு என்று வகைப்படுத்தி பாடியது போல் கேள்வி பதில் தெளிவாக் வெளியிட்டாலும் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்வே வகை தேடுகிறார்கள்.
  இபோது ஏன் மூலக்கூறு அறிவியலின் மீது நம்பிக்கையோடு குழப்புகிறர்கள்?.

  1. சிறுமாற்றம் மூலம் ஏதேனும்[அல்லது பல] உடல் உறுப்பு உருவாகியுள்ள்து நிரூபிக்க வேண்டும்.
  2. அதில் நல்ல [உறுப்புகளை] மாற்ற‌ம் மட்டும் இயற்கைத்தேர்வின் மூலம் நீடிப்பதையும் சன்றுகள் மூலம் விள்க்க் வேண்டும்.

  இயற்கையில் இவை நடக்க பல மில்லியன் ஆண்டுகள்
  ஆகும் என்பது அறிந்தும்,இந்த ஜீனோம் இபோதுதான் மனிதன்[2003 CE],சிம்பன்சிக்கு[2005 CE] முடித்து இன்னும் வாழும் உயிரின‌ங்களுக்கும் செய்து வருகிறார்கள் இச்சுட்டியில் ஆயிரக்கணக்கான் உயிரின தொகுதிகளுக்கு செய்து முடித்ததாக சில செய்திகள்,தகவல்கள் உண்டு.

  http://www.genomesize.com/statistics.php

  Number of species/subspecies available: 4972 (3231 Vertebrates, 1741 Non-Vertebrates)
  Smallest animal genome size: 0.02pg, Pratylenchus coffeae, Plant-parasitic nematode
  Largest animal genome size: 132.83pg, Protopterus aethiopicus, Marbled lungfish

  http://en.wikipedia.org/wiki/Chimpanzee_genome_project
  The results of the chimpanzee genome project suggest that when ancestral chromosomes 2A and 2B fused to produce human chromosome
  சரி உறுப்பு கேட்கிறார்களே என்று fruit fly சிறுமாற்ற ஆய்வுக்கூடத்தில் இறக்கை form , வண்ணம் மாறுகிறதே புதிதாக் வருகிறதே, என்றால் அதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறார்கள்.
  http://www.exploratorium.edu/exhibits/mutant_flies/mutant_flies.html

  பிறகு இது பற்றி கருத்துகூறாமல் எப்ப்டி சிறுமாற்றத்தால் புது உயிரினம் வரும் என்று நிரூபி என்பார்கள்.
  உயிரின தொகுதி[spices] என்பதன் வரயறுப்பே மிக சரியானதாக் இருக்க முடியாது அது fuzzy என்றால் காதில் விழாதது போல் இருப்பார்கள்.எந்த இரு வெவ்வேறு உயிரிங்கள் இனவிருத்தி செய்து இன்விருத்தி செய்யக்கூடிய உயிரினத்தை உருவாக்க முடியவில்லையோ அவைதான் என்றாலும் புன் முறுவல் புரிகிறார்.
  அவர்களுக்கு வேறு உயிரினம் என்றால் மனிதனுக்கு முன்னேற்றமாக் மூன்றாவ்து கண் அல்லது மோப்ப சக்தி மாதிரி சூப்பர்மேன் ஆக்கும் ஒரு செயல் சிறுமாற்றம் மூலம் உடனே நிகழ வேண்டும்.
  ***********
  ச்ரி நாம் வேறு விவாதிப்போம்

  மனித சிம்பன்சி உடல் அமைப்பு,உறுப்புகளில்
  வித்தியாசம் என்ன உள்ளது?

  இரு கால்களில் நடக்கும் மனிதனின் செயல்.
  கை கால் களின் உருவ அமைப்பு
  இடுப்பு எலும்புகளின் அமைப்பு
  A downside of the evolution of efficient bipedalism in humans is that it resulted in changes in the pelvis which unfortunately included a narrower birth canal in females. As a consequence, giving birth is a more difficult and riskier process for us than for most other mammal species. During delivery, human babies must partially rotate laterally twice during their passage through the oval birth canal in order for their comparatively large heads and then their broad shoulders to make it through. This is usually a long, tiring, and painful process for the mother as well as a risky one for her baby. Because of this, human mothers generally seek help from a "midwife" for the delivery. Other primates give birth without assistance. A partial evolutionary solution to this birth difficulty for humans was fetuses being born at a less mature stage, when their bodies are smaller. The trade off is that human newborn babies are more vulnerable.
  With the exception of these differences, we are quite similar to the African apes anatomically and genetically, especially to the chimpanzees and bonobos. Humans have 46 chromosomes in their cells while all of the great apes have 48. In reality, this difference is not as great as it would initially seem because the human chromosome 2 is a fusion of ape chromosomes 12 and 13 with most of the same genes.

  மற்ற படி எந்த உறுப்பும் புதிதாக மனிதன்,சிம்பன்சியில் வித்தியாசம் இருக்கிறதா என அறிந்த நண்பர்கள் கூறலாம்.

  http://anthro.palomar.edu/primate/prim_8.htm


  நன்றி

  ReplyDelete
 4. மனிதனின் குழந்தை பிறப்பு சிம்பன்சியை விட கடினம்.இது ஒரு unintelligent design க்கு எடுத்துக்காட்டு.

  http://www.magma.ca/~jonas/biped.htm

  Bipedalism, or the ability to walk on two legs, and the ensuing development of intelligence have made procreation seriously dangerous business for humans. Because walking on two legs requires a narrower pelvis, the amount of room left for the passage of a baby is significantly reduced. The problem is magnified by the fact that the evolution of our brains has resulted in huge noggins. The end result is bigger babies, smaller holes to push them out of. Beautifully designed for childbirth, my ass.
  The flipside of this kink in our physical evolution is modern medicine. Without any health care whatsoever, 1 in 50 women will die of pregnancy complications. But thanks to medical intervention, in North America the actual maternal mortality rate is around 1 in 3,700 (WHO 1996). Modern obstetrics is thus in itself a curious evolutionary adaptation to our physical shortcomings. The heat is off us to evolve into better birthing machines. Instead, our huge noggins allow us to build the technology that will do the job for us.
  One in five babies in Canada are now delivered by caesarian section (CIHI 2004), although it is impossible to gauge what proportion of those are necessary from a survival point of view. But the fact remains, women who are particularly ill-designed for natural childbirth are no longer being ‘selected out’ of the gene pool, a process that Darwin argued results in the evolutionary adaptation of a species

  ஒரு வேளை 4 கால் மனிதர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு குழந்தை பிறப்பு எளிதாக்வே இருப்பது முன்னேற்றம் எனினும் மூளை வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்ற பரிணாம் அற்வியலின் ஊகமும் சரிதான்.துருக்கியில் ஒரு குடும்பத்தின்ர் 4 கால்களில் நடக்கின்றனர்.மூளை வளர்ச்சியும் அதிகம்கிடையாது

  http://news.nationalgeographic.com/news/2006/03/0308_060308_all_fours.html

  Born with a genetic brain abnormality, two of the sisters and one of the brothers are thought to have only walked on all fours their entire lives. The two other siblings can walk upright for short distances.

  ReplyDelete
 5. நண்பரே, போன பதிவில் சரியான அத்தாட்சி தந்தும் நம்ப மாட்டேன் என்கிறீர்கள். இது தேவையா, கடைசியில் pharmacology-யையும் அறிமுகப்படுத்தி படிக்கவைத்துவிட்டீர். பள்ளிக்கூடத்தில் படிக்காமல் போனதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும்.

  எய்ட்ஸ் நோயா அல்லது அது ஒரு நிலையா????

  ReplyDelete
 6. நண்பர் நரேன்

  அது எச் ஐ வி[HIV postiive] வைரஸ் உடலில் உள்ள நிலை அனைவருக்கும் புரியும் வண்ணம் அப்ப்டி எய்ட்ஸ் என்றே குறிப்பிட்டேன்.ஏற்கெனவே ஒரு பதிவில் ஐ ஐ வி தான் எய்ட்ஸ்க்கு காரணம் என்னும் கான்ஸ்பைரேசி theory கூட விவாதிட்தோம் என எண்ணுகிறேன்.
  **********
  நாம் என்ன செய்வது நரேன்? அவர்கள் கேட்கும் கேள்விகளில் உள்ள் தந்திரங்களை அம்பலப்படுத்த வேறுவழியில்லை.இருப்பினும் technical names கூடுமான்வரை தவிர்க்கிறேன்.மிகுந்த எளிமையாக் சொல்ல நினைக்கிறேன்.அவர்க்ள் இன்னும் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.ஒரு துறை சாராத நான பதில் அளிக்க முடியா கேள்வி இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை.இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி ம்யுட்டேஷனில் ஒரு புதிய சிறந்த உயிரினம் ஆய்வகத்தில் உருவாக்கி காட்ட சொல்கிறர்கள்.அப்ப்டி காட்டினால் இது செயற்கை முறை,இயற்கையில் இப்படி நிகழவே நிகழாது என்றும் கூறுவார்கள் என அடித்துக் கூறுகிறேன்.
  I know them very well!!!!!!!!!!!!!
  Hi Hi

  ReplyDelete
 7. நண்பர் குயிக்ஃபாக்ஸ்
  நீங்கள் குறிப்பிட்ட பால்,லேக்டோஸ் ஒவ்வாமை இரண்டுமே வித்தியாசமான்வை.இது குறித்த் ஆய்வுக் கட்டுரை சுட்டி.இதில் சொல்வது நம் டி என் ஏ வில் உள்ள லேக்டோஸ் ஜீனில் உள்ள இரு விடயங்கள் என கண்டறிந்து உள்ள்னர்.இது மரபியல் ரீதியாந்து என்பதும் பலருக்கு உள்ளது என்பதும் உண்மையே,இது 10,000 ஆண்டுகளுக்கு முன் பரிணமித்து இருக்க்லாம் என கட்டுரை கூறுகிறது.
  இன்னும் இதில் இருந்து மனிதர்கள் பல்வேறு வகைகளாக பல விதங்களில் வேறுபடுவதும் அறியலாம்
  http://www.scientificamerican.com/article.cfm?id=scientists-uncover-geneti
  Now new research, published in the February issue of the journal Nature Genetics,has finally revealed the long-sought genetic basis for lactose intolerance. The findings could hasten the development of reliable diagnostic tests for the disorder.
  Studying the DNA of nine extended Finnish families, Leena Peltonen of the University of California, Los Angeles, and colleagues discovered two DNA variants located outside the lactase gene itself that correspond to lactose tolerance and intolerance. Importantly, lactose-intolerant members of the Finnish families shared the same DNA variant found in lactose-intolerant individuals from Germany, Italy and South Korea, among others, which suggests to the researchers that lactose intolerance has ancient roots. Indeed persistent lactase activity, they say, may have only evolved with the advent of dairy farming, around 10,000 years ago.
  Thanks

  ReplyDelete
 8. எனக்கு தெரிந்து நிறைய அமெரிக்கர்கள் (ஐரோப்பிய வம்சத்தவர்கள்) lactose free பால் வாங்குவதை பார்த்து உள்ளேன் (ஒவ்வாமை காரணமாக). வெகு சில இந்தியக் குழந்தைகளுக்கும் lactose ஒவ்வாமை உள்ளதால் அவர்களும் lactose free பால் வாங்குவதை பார்த்து உள்ளேன்.

  ReplyDelete
 9. சகோ சார்வாகன், தகவலுக்கு நன்றி.

  குறும்பன், நான் நினைக்கிறேன் ஆசியன் பலர் ஒவ்வாமை தங்களுக்கிருப்பத தெரிஞசுக்காம இருக்கிறார்களென்று.

  ReplyDelete
 10. சார்வாகன் என்னுடைய கேள்வியை புரிந்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்

  இதோ ஒரு காமடி
  //பரிணாம் செயலாக்கம் பற்றி விள்க்கியது சரியாக் இருக்கும் போல் தெரிகிறது அதை பற்றி எதுவும் கூறாமல் சிறு மாற்றங்கள்[mutations] எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது ,என்ற கருத்து கூறினார்.//

  பரிணாமம் mutations மூலம் நிகழ்வதாக கூறியதால், அந்த mutations புதிதாக என்ன உறுப்பை உருவாக்கி இருக்கிறது என்று கேட்டிருந்தேன். இதுவரைக்கும் எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

  ccr5 mutation பற்றி ஏற்கனவே இங்கு விளக்கியாச்சு

  //என்னுடைய கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதிலளித்ததற்கு நன்றி.

  உங்களுடைய ஆதாரங்களை ஆராய்வோம்

  //இந்த mutations மூலமாக பரிணாமம் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன ? Mutations மூலமாக ஒரு புதிய செயல்பாடுள்ள உறுப்பு (functional organ) உருவானதற்கான ஒரு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்//

  என்னுடைய இந்த கேள்விக்கு 2 ஆதாரங்களை கொடுத்துள்ளீர்கள்

  1. ccr5 mutation
  http://en.wikipedia.org/wiki/CCR5

  இங்கு நடப்பது என்ன?
  மனிதனின் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் T cells என்ற வகை உண்டு. இந்த T cell உடைய‌ வெளிப்பகுதியில் ccr5 receptor என்ற பகுதி உள்ளது. இந்த T cell சரியாக செயல்படுவதில், ccr5 receptor க்கும் பங்கு உண்டு. HIV கிருமி தாக்கும் இரு வகை receptor களில் இதுவும் ஒன்று. இந்த mutationஆல் ccr5 receptor பழுதடைவதால் HIV கிருமி T cell க்குள் நுழைய முடிவதில்லை. இதனால் HIV கிருமி தாக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். இதனால் பாதகமும் ஏற்படுகிறது. இந்த mutation T cell உடைய செயல்பாட்டை (நோய் எத்ர்ப்பு சக்தி) பாதிக்கிறது. இந்த mutation உள்ளவர்களுக்கு West Nile virus என்ற கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  http://www.niaid.nih.gov/news/newsreleases/2006/pages/ccr5.aspx

  சரி இது நான் கேட்ட ஆதாரமா என்று பார்ப்போம்.

  இந்த mutation புதிய உறுப்பை (functional organ) உருவாக்கியதா?
  அல்லது புதிய செல்லை உருவாக்கியதா ?
  அல்லது ஒரு செல்லின் புதிய receptorயாவது உருவாக்கியதா?

  எதுவேமே இல்லை!!! மாறாக ஒரு functional receptorஐ பழுதடைய செய்துள்ளது.


  2. புதிய மனிதன் ?
  இந்த mutation நகைச்சுவை ஆதாரமா என்று தெரியவில்லை?

  இந்த 44 குரோமோசோம் மனிதன் , மனிதன் இல்லையாம், எனவே பரிணாமம் நிரூபணமாகிவிட்டதாம் !!!
  பரிணாமத்தின் ஆதாரங்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
  சரி 44 குரோமோசோம் உயிரினத்தை மனிதன் அல்ல, புதிய விலங்கு என்றே வைத்துக்கொள்வோம் (zooவில் அடைப்பார்களா என்று தெரியவில்லை). இதனால் பரிணாமம் நிரூபணமாகுமா?

  இந்த mutation புதிய உறுப்பை (functional organ) உருவாக்கியதா?
  அல்லது புதிய செல்லை உருவாக்கியதா ?
  அல்லது ஒரு செல்லின் புதிய receptorயாவது உருவாக்கியதா?

  எதுவுமே இல்லை!!! மாறாக இனவிருத்தி வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு உயிரினத்தை (?)உருவாக்கி உள்ளது.

  இந்த சுட்டியில் 45 குரோமோசோம் மனிதன்/விலங்கு, 47 குரோமோசோம் மனிதன்/விலங்கு பற்றிய விளக்கம் உள்ளது. முடிந்தால் இவற்றையும் உங்கள் பரிணாமத்திற்கான (நகைச்சுவை) ஆதாரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

  http://www.biology.iupui.edu/biocourses/N100/2k2humancsomaldisorders.html

  அடுத்து இன்னொரு ஆதாரம் கொடுத்துள்ளீர்கள்
  //எதற்கும் இங்கும் விரும்புபவர்கள் பார்க்கலாம் சிறுமாற்ற ஆய்வுக்கூடம்.இதில் பலவித் ஆய்வுகளை fruit fly மீது நடத்துகிறார்கள்
  http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp//

  இங்கேயாவது எதாவது ஆதாரம் இருக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.
  fruit fly (drosophila)என்ற ஒருவகை ஈயின் மீது ஒரு நூற்றான்டாக மரபியல் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். சில வாரங்களிலேயே பல தலைமுறைகளை உருவாக்கும், மரபியல் ஆராய்ச்சிக்கு ஏற்ற உயிரினம் இது.
  http://en.wikipedia.org/wiki/Drosophila_melanogaster
  இந்த fruit flyல் ஒரு mutation / பல mutation மூலம் ஒரு புதிய functional wing/ ஏதாவது உறுப்பு உருவானதற்கான ஆதாரம் உண்டா ? ஒரு நூற்றாண்டு ஆராய்ச்சியில் எதுவும் கிடைக்கவில்லையா ?

  இதில் இந்த துறை புதியது என்ற சமாளிப்பு வேறு. படிமங்களைப்பற்றி கேட்கும் போது "பாதுகாக்கப்படவில்லை" என்று சமாளிப்பதைப் போல்.//

  ReplyDelete
 11. அடுத்து கமென்ட் பகுதியில் இன்னொரு மிகப்பெரிய ஆதாரம்
  //ஒரு சிறு மாற்றத்தில் ஒரு புது உறுப்பு விட்டலாச்சார்யா படம் போல் உருவாக்கி காட்ட வேண்டும் என்ற் சாதிக்கின் எதிர்பார்ப்பு பரிணம்த்தின் படி த்வறானது.//

  இதை ஆரம்பத்திலேயே கூறியிருந்தால் , இந்த விவாதமே அவசியம் இல்லாமல் போயிருக்கும்.

  சரி ஒரு சிறு மாற்றத்தால் (mutation ) எதைத்தான் உருவாக்கி காட்ட முடியும்?
  ஒரு உறுப்பு வேண்டாம் ஒரு functional cell உருவாக்கி காட்ட முடியுமா?

  உங்களுடைய 2 ஆதார்ங்கள் எதையுமே உருவாக்கி காட்டவில்லையே. ஏற்கனவே இருப்பதை பழுதாக்கிதானே காட்டி இருக்கிறது.

  இந்த ஆதாரங்களை வைத்து தான் கண் உருவானது, கால் உருவானது, கை உருவானது, இறக்கை உருவானது என்று பரிணாம கற்பனை உலகில் மிதக்கிறீர்களா ?  //அறிவியல் ஒரு கருத்தை உறுதிப்படுத்த பல சோதனைகள் சான்றுகள் மீது நடத்தியே ஆகவேண்டும்.அதுபோல் இந்த சிறுமாற்ற நிகழ்வுகளின் மீதான் பரிணாம் செயலாக்கம் இன்னும் பல கதவுகளை திற்க்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.//

  இதுவரைக்கும் எந்த‌ கதவையும் திறந்த மாதிரி தெரியவில்லை.
  பதிவின் ஆரம்பத்தில் ஒரு படம் இருக்கிறதே, அந்த படத்திற்கான ஆதாரம் என்ன ? எந்த உயிரினத்தில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது?

  உண்மையிலேயே "தமிழ் கூறும் நல்லுலகு பரிணாம அறிவு" பெற வேண்டுமென்றால் சிறு மாற்றம் (mutation ) பற்றி விளக்குங்கள். ஒவ்வொரு உயிரினங்களிலும் நீங்கள் கூறக்கூடிய "favorable mutation" எத்தனை சதவீதம்"unfavourable mutation" எத்தனை சதவீதம் என்று பட்டியலிடுங்கள். பிறகு அந்த படத்தின் / பரிணாமத்தின் உண்மை நிலவரம் தெரிந்து விடும்.

  படிம ஆதாரங்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தீர்கள்.
  ஒரு உயிரின குழுவை, இன்னொரு உயிரின குழுவாக மாற்ற பரிணாமத்தின் அடிப்படையான natural selection + random mutationக்கு ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். நிரூபித்து விட்டால் பிறகு படிம ஆதாரங்களை (இருந்தால்) துணை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளலாம். இதுதான் என்னுடைய கருத்து. ஒரு படிமத்தைக் காட்டி கற்பனைக் கதை சொல்வதுபோல் mutations விஷயத்தில் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

  ஒரு மணி நேரம் ஒரு வீடியோவை கஷ்டப்பட்டு பார்த்து (என்னுடைய நெட் கனெக்சன் slow), ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏமாறுவ்தால்தான் , வீடியோ ஆதாரம் வேண்டாம் என்று கூறினேன். வீடியோவில் ஏதாவது புதிய ஆதாரம் இருந்தால் கூறுங்கள், பார்க்க முயற்சி செய்கிறேன்.

  மற்றபடி நானும் முல்லா நசுருதீன் கதையை (ஏற்கனவே தெரிந்திருந்தாலும்) ரசித்தேன் .
  ஒரு சந்தேகம். உயிரில்லாத molecules குட்டி போட்டு first cell உருவானது என்று நம்புபவரா நீங்கள். பரிணாமம் இதைப்பற்றி பேசவில்லை என்று தப்பித்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறீன்.

  http://en.wikipedia.org/wiki/Abiogenesis

  ReplyDelete
 12. மனிதனை விலங்காக மாற்றி பரிணாமத்தை நிரூபிக்கும் பரிணாம அறிஞர்.

  http://aatralarasau.blogspot.in/2012/02/blog-post_27.html

  ReplyDelete
 13. வாங்க சகோ சாதிக்
  என்னங்க புது பின்னூட்டம் போடுவீங்கன்னு பார்த்தால் அதையே வெட்டி ஒட்டு விட்டீர்கள்.சரி நான் முதலில் இருந்து நடந்தது எல்லாம் தொகுத்து கூறுகிறேன்
  **********
  1.நீங்கள் கேட்ட கேள்வி பரிணாம் செய்லாக்க்ம எப்படி நடக்கிறது?

  அ)இனவிருத்தியின் போது நடக்கும் டி என் ஏ பிரதியெடுப்பின் போது சிறுமற்றங்கள்[random mutations] நிகழ்கிறது.அவை பல்வேறு வகை[varieties] வித்தியாசங்கள் தோற்றுவிக்கின்றன. அவ்ற்றில் சில நல்ல மாற்றங்களையும்,சில கெட்ட விளைவுகளையும்,பெரும்பாலானவை நியுட்ரலாக‌ வித்தியாசம் மட்டும் அளிக்கிறது.
  Mutation
  Mutation, a driving force of evolution, is a random change in a population's gene pool. It is a change in the nature of the DNA in one or more chromosomes. Mutations give rise to new alleles; therefore, they are the source of variation in a population.
  Mutations may be harmful, but they may also be beneficial. For example, a mutation may permit organisms in a population to produce enzymes that will allow them to use certain food materials. Over time, these types of individuals survive, while those not having the mutations perish. Therefore, natural selection tends to remove the less-fit individuals, allowing more-fit individuals to survive and form a population of fit individuals


  ஆ) இந்த பல்வேறு வகைகளில் இயற்கை சூழலுக்கு பொருந்துவது, தாக்குப் பிடிப்பது நீடிக்கிறது.பொருந்தாதது அழிகின்றது.நல்லது கெட்டது எல்லாம் இயற்கை தேர்ந்தெடுப்பதுத்தான் இயற்கைத் தேர்வு[natural selection].இயற்கையை பொறுத்தவரை மனிதன் பிற உயிர்களை விட‌ உயர்ந்தவன் அல்ல.உலகில் வாழும் எண்ணற்ற் உயிர்களில் ஒன்று அவ்வளவுதான்!!!!!!!!!
  Natural selection
  Clearly, the most important influence on evolution is natural selection, which occurs when an organism is subject to its environment. The fittest survive and contribute their genes to their offspring, producing a population that is better adapted to the environment. The genes of less-fit individuals are eventually lost. The important selective force in natural selection is the environment.
  http://www.cliffsnotes.com/study_guide/Mechanisms-of-Evolution.topicArticleId-8741,articleId-8637.html

  http://scidiv.bellevuecollege.edu/rkr/biology160/lectures/pdfs/EvolutionMechanisms160.pdf
  (contd)

  ReplyDelete
 14. 2. சிறுமாற்றங்களில் முன்னேற்றம் நடக்காது.

  பரிணாம் வளர்ச்சி என்பது மில்லியன் ஆண்டுக் கணக்கில் நடக்கும் நிகழ்வு. இருப்பினும் பல்வேறு வகைகள் சிறுமாற்றங்களால் உருவாக்கப்படுவதையும் அதில் இயற்கைச் சூழலை பொறுத்து சில கெடுதலாக் இருப்பதும்,சில முன்னேற்றமாக்வும் இருப்பதற்கு மட்டும் இப்போதே நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே சான்று தர இயலும்.

  இதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த என்னும் CCR5 சிறுமாற்றம் கொண்ட ஐரோப்பிய ,மேற்காசியாவில் வாழும் 15% மக்களுக்கு எச் ஐ வி கிருமி எதிர்ப்பு சக்தி இருக்கிறது. எச் ஐ வி கிருமி தோன்றி 50 வருடம்தான் ஆகிறது.ஆனால் ஏற்கெனவே நிகழ்ந்த ஒரு வித்தியாசமான் குழு இத்னை எதிர்கொள்ளும் சக்தி உடையதாக் உல்ளது. ஒரு 1400 வருடம் முன் எய்ட்ஸ் கிருமி உருவாகி இருந்தால் இப்போது அந்த குழுவின் வம்சா வழியினர் மட்டுமே உயிர் வாழ்ந்து இருப்பர்.இது முன்னேற்றமான ஒன்றா இல்லையா!!!!!!!
  இந்த CCR5 சிறுமாற்றம் செயற்கையாக ஏற்படுத்தும் மருந்தும் தயாரிக்கப்பட்டு பயன்படுட்தபடுகிரது என்பதைஅயும் சுட்டினேன்.

  இதற்கு நீங்கள் இந்த CCR5 சிறுமாற்றம் கொண்டவர்கள் சாதாரண மனிதர்களை விட கொசுவினால் பரவும் வெஸ்ட் நைல் வரைஸ் எனும் கிருமியினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக் கூறிரீர்கள்.அது எச் ஐ வி கிருமியை விட சக்தி குறைந்தது எனவும் சான்றுகள் காண்பித்தாயிற்று.இருப்பினும் இன்னொரு எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் CXCR4 சிறுமாற்ரமும் கொடுத்தோம்.

  இப்போது இந்த சிறு மாற்றங்கள் முன்னேற்றமா இல்லையா என்பதை ஆம்/இல்லை என்றே கூற அன்போடு பணிவாக் வேண்டுகிறோம்.

  (contd)

  ReplyDelete
 15. @ sadiq
  3) 44 குரோமோசோம் மனிதன் ஆரோக்கியமாக்வே இருக்கிறார்.இவர் இன்னொரு வகை மனிதர் சரியா?.இவர் முன்னேற்றமா இல்லையா என்பதை இயற்கை மட்டுமே தெர்ந்தெடுக்க முடியும்.நாம் அறிவியல்,மருத்துவ ரீதியாக பல முன்னேற்றங்களை கண்டுபிடித்ததால் மட்டுமே பல பேரழிவுகளில் இருந்து தப்பினோம்.இந்த 100 வருடங்களில் பெருகிய மக்கள் தொகை,சராசரி வயது அதிகரிப்பு ஆகியவை இவற்றின் சான்று ஆகும்.
  http://en.wikipedia.org/wiki/File:World-Population-1800-2100.png

  மனிதன் இன்னும் ஏன் பரிணாம் வளர்ச்சி அடைவதில்லை என்பது பொதுவான் கேள்வி இதற்கும் ஒரு பதிவு இடுவோம்!.

  4).சிறுமாற்றங்கள் ஒரு உறுப்பை விட்டாலாச்சார்யா படம் போல் உருவாக்கி காடவேண்டும் என்ற உங்கள் ஆசை மிக நியாயமானது.இது அடுத்த் பதிவு சான்றளிக்கும்.

  இப்போது இந்த எச் ஐ வி எதிர்ப்பு சக்தி உருவாக்கிய இரு சிறுமாற்றங்கள்[CCR5 & CXCR4] முன்னேற்றமா இல்லையா என்ற கேள்விக்கு நீங்கள் நாடினால் ஆம்/இல்லை என்றே பதில் கூற மிக்க அன்போடும்,பாசத்தோடும்,பணிவோடும் வேண்டுகிறோம்.
  விடை தெரிந்தும் கூறாமல் மௌனம் கலைந்ததால் முருங்கை மரம் வழக்கம் ஏறவும் உங்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறோம்.ஏனெனில் நாம் மனித உரிமை ஆர்வலர். விருப்பம் இல்லாத ஒன்றை செய்ய சொல்ல விரும்ப மாட்டோம்!!!!!!

  ReplyDelete
 16. Examples of Beneficial Mutations and Natural Selection
  http://www.gate.net/~rwms/EvoMutations.html
  ***********
  http://www.talkorigins.org/faqs/mutations.html

  ReplyDelete
 17. http://abcnews.go.com/Health/MedicineCuttingEdge/story?id=7231487&page=1#.T1FPhYfdkqw

  Super Strong Kids May Hold Genetic Secrets

  ABC News Medical Unit
  April 2, 2009
  Every new child has a few surprises, but imagine bringing home an adopted baby to find he was born with a super strength beyond the biological limits of most humans.

  ReplyDelete
 18. My comment on

  http://mukundamma.blogspot.com/2012/03/blog-post.html
  வண்க்கம் சகோ
  அருமையான் பதிவு&பகிர்வு.இது அந்த புத்த்கம் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது.இது உண்மையாக் இருக்கும் வாய்ப்பு உண்டால் என்பது பிற்குதான் சொல்ல முடியும் எனினும் ஒரு த்வ்ல் பகிர்கிறேன்
  உல்கில் முதல் ஆண்[Y chromosome male] கண்டறியும் சோதனை இந்த 'ஒய்' குரோமோச்சொம ஆண்வாரிசு தலைமுறை தலைமுறையாக் உள்ளவர்களை தேடியபோது [atmost]142,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்க மனிதர் என கணடறிந்தனர்.ஆனால் ஆதிபெண் [மைட்டோகான்டிரியல் ஈவ்] ஆண்வாரிசு தலைமுறை தலைமுறையாக் உள்ளவர்களை தெடியபோது 150,000 to 200,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என கண்டறிந்தனர்.அதாவது தலைமுறை தலைமுறையாக் பெண் வழி தொடர்பு ஆண்வழித் தொடர்பை விட அதிக காலம் நீடிப்பது கூட நீங்கள் பகிர்ந்த விடயத்திற்கும் தொடர்புள்ளதோ என் எனக்கு தோன்றுகிறது.

  In human genetics, Y-chromosomal Adam (Y-MRCA) is the most recent common ancestor (MRCA) from whom all living people are descended patrilineally (tracing back only along the paternal lines of their family tree). Many studies report that Y-chromosomal Adam lived as early as around 142,000 years ago [1] and possibly as recently as 60,000 years ago.[2] All living humans are also descended matrilineally from Mitochondrial Eve who is thought to have lived earlier about 190,000 - 200,000 years ago. Y-chromosomal Adam and Mitochondrial Eve need not have lived at the same time.

  http://en.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam
  http://en.wikipedia.org/wiki/Mitochondrial_Eve

  நன்றி
  இது கூட மனித இனத்தின் எதிர்கால பரிணாம வளர்ச்சியாக இருக்க்லாம இப்ப்டி ஒரு சூழல் ஏற்படும் எனில் ஆண்களின் ஒய் குரோமோச்சொம் சேகரிக்கப்பட்டு .செயற்கை முறையில் கரு உண்டாக்கி விடுவார்கள்,குளோனிங் முறை கூட நடைமுறைக்கு வ‌ரலாம்.ஒரு மத விஜ்ஜானி ஆண்,பெண் 1:1 விகிதம் காத்துவருவது அவர்கள் குல தெய்வம் என்று கூட[வழக்கம் போல்] நகைச்சுவை பதிவு போட்டு இருந்தார்.
  ha ha ha

  ReplyDelete
 19. Adam's Curse - A Future Without Men
  A Story of Sex, Genetics & the Extinction of Men
  Review
  http://genealogy.about.com/cs/geneticgenealogy/fr/adams_curse.htm
  Are men an endangered species? According to Bryan Sykes, the answer is yes. A cross between scientific journal and science fiction novel, his new book, "Adam's Curse," explores the fascinating science of sex and gender, in an engaging, highly-readable format. Some of the sensitive issues and surprising theories presented in this book obviously invite controversy, but it's still a captivating read.
  No more dirty bathrooms with the toilet seat up! Taking a look 125,000 years into the future, leading genetic scientist Bryan Sykes has concluded that men, slowly but surely, are headed for extinction.
  Written in anecdotal style, his recent book, "Adams Curse: A Future Without Men," is inciting controversy with its startling theory that the male of the species will only last for another 5000 generations before irreparable damage done to the Y-chromosome consigns him to the history books. Sykes uses his own research to show that the all-important male Y-chromosome is degenerating as it advances through evolution, rendering men infertile with increasing frequency, and the female X-chromosome (mDNA), which has a "twin" and can repair itself to minimize bad mutations, is slowly taking over. In other words, women are winning the evolutionary battle of the sexes.
  By rendering men infertile, isn't the female chromosome also architecting its own destruction? Sykes addresses this issue as well, saying that men could be rescued with "massive intervention," but it would be quite possible to survive without them.
  "We could survive as a species with no men at all by arranging fertilizations not between sperm and egg, but rather between one egg and another, and the techniques for that are already here." Sykes actually goes so far as to envision a world made up entirely of women - a world where even lesbian couples could have babies with genes coming from both parents. At this point he quips, "It is almost certain to happen and, unlike human cloning, I doubt there would be serious ethical objections. Men are now on notice."
  Controversially, Sykes also speculates on the answers to such questions as: Is there a genetic cause for men's greed, aggression, and promiscuity? Is there such a thing as a male homosexual gene? Some of his theories are surprising, and many are likely put forth, at least in part, to invite debate and controversy.
  An entertaining and insightful read, "Adams Curse" is a book of theories, not facts, obviously written with "bestseller" in mind. Bryan Sykes, professor of genetics at Oxford University, is certainly an intelligent man, doing a remarkable job of presenting complex theories in a way that the average lay-person can grasp, but he also can't seem to resist a bit of grandstanding.
  "Impressing females is a costly business, as many of you know," he says, as he describes the efforts of the male of many species to cajole or coerce females into accepting their sperm.
  Unchauvinistically, Bryan Sykes even proclaims a benefit from men's extinction and the lifting of Adam's Curse. When sperm no longer fight one another for access to eggs, he says, the "destructive spiral of greed and ambition fueled by sexual selection diminishes, and the sickness of our beautiful planet eases." Sounds good, although a bit far-fetched. A lot can happen in 125,000 years.
  While it could benefit from more discussion of alternative theories, "Adam's Curse" is both educational and enlightning - a book that makes you question, wonder, and want to learn more.

  ReplyDelete
 20. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற முன்னே
  ற்ற சிறுமாற்ற‌ம் CCR5

  நம் எப்போதும் எதிர்க்கருத்துகளை மதிப்பவர்கள்.பெரும்பாலும் அவர்கள் கூறுவது உண்மையா என்று பார்க்க தேடி அறிபவர்கள்.இந்த சிறுமாற்றம் பற்றி சாதிக் இது இருந்தால் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் வரும் வாய்ப்பு வரும் என வழக்கமான பூச்சாண்டி காட்டினார். ஆம் /இல்லை என்ற கேள்விக்கு மதவா(வியா)திகள் எப்போதும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.. நாம் பரிணாம் எதிர்ப்பின் மிகப்பெரிய தாதாவான கிரியேஷன் மினிஸ்டரிஸ் தள்த்திற்கு சென்று இது பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்த்தோம்.ஒரு இன்ப அதிர்ச்சி அவர்கள் இது நல்ல சிறுமாற்றம் என்று சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.அதற்கு Nature ஆய்விதழ் கட்டுரையை காட்டி விள்க்கி இருக்கிறார்கள்.ஆனாலும் இது பரிணாமத்திற்கு சான்றாக முடியாது என்றும் வழக்கமான் பல்லவியை பாடியிருந்தார்கள்.

  CCR5-delta32: a very beneficial mutation
  http://creation.com/ccr5delta32-a-very-beneficial-mutation
  Moreover, this mutation can be advantageous to those individuals who carry it. The virus HIV normally enters a cell via its CCR5 receptors, especially in the initial stage of a person becoming infected.5 But in people with receptors crippled by the CCR5-delta32 mutation, entry of HIV by this means is blocked, providing immunity to AIDS for homozygous carriers and greatly slowing progress of the disease in heterozygous carriers.6–8
  Up to 20%8 of ethnic western Europeans carry this mutation, which is rare or absent in other ethnic groups. To date over 10,000 specific disease-causing mutations of the human genome have been identified.20 In contrast, only a handful of beneficial mutations have been discovered, none of which involve an increase in genetic information as required by evolution. All this is highly consistent with the biblical account of a very good creation21 followed by the Fall,22 and a subsequent six millennia23 of cumulative physical degeneration.24 However, it clashes irreconcilably with the evolutionary view that the accumulation of mutations over time brings about upward evolution (increasing functional complexity).
  In God’s original creation, before the Fall and the Curse, the CCR5 receptor would not have constituted an entryway for pathogens.

  http://www.nature.com/gene/journal/v5/n6/full/6364113a.html
  ஆகவே சாதிக் இந்த சிறு மாற்றம் பற்றி அறியவில்லை,அல்லது தெரிந்தே வழக்கம் போல் உண்மையை மறைக்கிறார்.
  இது அவர்களின் வழக்கமான் செயல் என்பதை அனைவரும் அறிவோம்!!!
  (contd)

  ReplyDelete
 21. இப்போது கிரியேஷன் மினிஷ்ட்ரி ஆட்களுக்கும் சேர்த்து பதில் சொல்லிவிடலாம்.
  என்ன சொசொல்கிறார்கள்!!!!!!!

  1.இந்த சிறுமாற்றம் பரிணாம் வளர்ச்சி தராது.

  2. பரிணாம‌ம் எப்போதும் முன்னேற்ற திசையிலேயே நகரும்.
  ***************

  முதலில் 2ஆம் கேள்விக்கு பதில் அளிப்போம்.இயற்கை மத‌ கடவுள் அல்ல வண்ங்குபவனுக்கு நன்மையும் வண்ங்காதவனுக்கு தீமை செய்ய!!!!!!!!!!!.

  சூழல் மாறிக் கொண்டே இருக்கும். வாழ முடியும் உயிரினங்கள் வாழலாம்,முடியாதவை அழியும் அவ்வளவுதான்.

  ஒரு 2000 ஆண்டுகளுக்கு முன் 44 குரோமோசோம் உள்ள மனிதர்களுக்கோ அல்லது நாலு காலில் நடக்கும் மூளை குறைவான துருக்கிய மனிதர்கள் போன்றவர்களுக்கோ இந்த சிறுமாற்றம் நிகழ்கிற‌து என்று வைத்துக் கொள்வொம். எய்ட்ஸ் நோய் பெரும் அள்வில் பரவும் போது இவர்களே தேர்வில் வெற்றி பெறுவார்கள்.அவர்களில் இருந்து வேறு வகையான் பரிமாண வளர்ச்சி நடக்க்லாம்.44 குரொமோச்சொம் மனிதர்கள் இனவிருத்தி திறன் குறைவு என்றாலும்,4 கால் மனிதர்கள் அப்படி அல்ல!!!!!!!.

  இந்த இயற்கைத் தேர்வு என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.இயற்கை சூழல் மாறும் போது தேர்வும் மாறும்.பல‌ வகை வலிய டைனோசார்கள் அழிந்து சிறு உயிரினங்கள் எப்படி தப்பியது?. டைனோசார்கள் மட்டும் நீடித்து இன்றுவரை வாழ்ந்து இருந்தால் பாலூட்டிகள் இவ்வளவு வளர்ச்சி அடைந்தே இருக்க முடியாது. மனிதன் வந்திருக்கும் வாய்ப்பே குறைவு.ஒரு உயிரின் பல்வீனாம் இன்னொரு உயிருக்கு பலம் ஆகிறது.அதுவும் சூழல் பொறுத்தே பலம்,பல்வீனம் வரையறுக்கப்படும்.அப்போதைய சூழலில் எது பல்மோ அதுதான்.நிலத்தில் யானை என்றால் நீரில் அதைவிட முத்லை பல்சாலி!

  ஆகவே இபோதைய சூழலில் முன்னேற்றமாக இருப்பது எப்போதும் இருக்கும் என்பது கிடையாது.ந்ம்முடைய அறிவு வளர்ச்சிதான் இயற்கையிடம் இருந்து நம்மை காப்பற்றி கொண்டு இருக்கிறது.

  ஆகவே சிறுமாற்றங்கள் பல் வகைகளை உருவாக்குகிறது,அது குரோமோசோம் சார்ந்த மாற்றம்[chromosome mutations&speciation] என்றால் அது வேறு உயிரினத்தை உருவாக்கும் வாய்ப்பு அதிகம்!!!!!!!!!

  http://www.pnas.org/content/102/suppl.1/6535.full
  http://evolution.berkeley.edu/evolibrary/article/history_18

  http://www.preservearticles.com/2011080810290/what-is-the-role-of-of-chromosomal-mutation-in-evolution.html

  ReplyDelete
 22. //இப்போது இந்த சிறு மாற்றங்கள் முன்னேற்றமா இல்லையா என்பதை ஆம்/இல்லை என்றே கூற அன்போடு பணிவாக் வேண்டுகிறோம்.//

  முன்னேற்றமா இல்லையா என்று இப்போது உறுதியாக கூற முடியாது. எல்லா கேள்விகளுக்கும் ஆம்/இல்லை என்று கூற, அறிவியல் அவ்வளவு எளிதானது அல்ல.

  இந்த‌ CCR5 mutation HIV கிருமிக்கு எதிராக ஒரு புது antibodyயோ அல்லது புது receptor உருவாக்கி இருந்தால் அதை முன்னேற்றம் என்று எளிதாக ஏற்றுக்கொள்ள்லாம். ஆனால் இந்த mutation ஏற்கனவே செயல்பாட்டிலிருந்த T cell receptor ஐ பழுதாக்கி இருப்பதால் இதனால் என்ன விளைவுகள் உருவாகலாம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இதைத்தான் அறிவியல் உலகமும் செய்து கொன்டிருக்கிறது.

  ஆய்வுகளில் பலவிதமான முடிவுகள் கிடைக்கின்றன‌

  HIVஐப் போல rheumatoid arthritis என்ற மூட்டுவலி நோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்ற இந்த ஆய்வு கூறுகிறது.

  http://www.nature.com/gene/journal/v7/n3/abs/6364298a.html


  நான் ஏற்கனவே west nile virus என்ற கிருமி பாதிப்பு கூடிய வாய்ப்பு அதிகம் என்று கூறியிருந்தேன்.

  மற்றும் சில நோய்களும் வர அதிகம் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

  பித்த பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

  http://www.mendeley.com/research/ccr5-delta32-polymorphism-associated-gallbladder-cancer-susceptibility/

  primary sclerosing cholangitis என்ற கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

  http://www.nature.com/gene/journal/v5/n6/full/6364113a.html

  multiple sclerosis என்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய் அதிகம் வரும் வாய்ப்பு உள்ளது.

  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15080861

  hepatitis-C என்ற கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
  http://www.thebodypro.com/content/art20728.html

  இந்த தகவல்கள் அனைத்தும் ஆய்வு நிலையிலேயே உள்ளதால் , பல முரண்பாடான முடிவுகளும் கிடைக்கின்றன. எனவே இவை இறுதியான முடிவு அல்ல.

  சார்வாகனின் வாதப்படி இந்த mutation ஒரு முன்னேற்றம் என்று ஏற்றுக்கொன்டாலும் இது என் கேள்விக்கு பதில் ஆகாது.

  மீண்டும் என்னுடைய கேள்விக்கு வருகிறேன்

  mutations மூலம் செயல்படும் (functional) ஒரு புது உறுப்போ அல்லது உறுப்பின் ஒரு பகுதியோ உருவானதற்கு ஆதாரம் உண்டா ?


  இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. ஒரு வேளை கேள்வி புரியவில்லையா என்று தெரியவில்லை.

  உதாரணத்தின் மூலம் விளக்கிகிறேன். mutationக்கு ஒரு மாளிகையை உருவாக்கும் ஆற்றல் உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் ஒரு செங்கலை உருவாக்கியதற்கான ஆதாரத்தையாவது கொடுங்கள் என்று கேட்கிறேன்.
  நீங்கள் ஒரு செங்கலை உடைத்ததற்கான ஆதாரத்தை கொடுக்கிறீர்கள். இப்போது புரிகிறதா.

  கேள்விக்கான சரியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 23. நண்பர் சாதிக் வாங்க!!!!!!!!
  // சார்வாகனின் வாதப்படி இந்த mutation ஒரு முன்னேற்றம் என்று ஏற்றுக்கொன்டாலும் இது என் கேள்விக்கு பதில் ஆகாது.//
  விவாதம் என்றால் சொல்வதையே திருப்பி திருப்பி சொலவ்து அல்ல.முன்னேற்றம் என்பதை சாதிக் ஆகிய நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டால் முடிந்தது
  ஒரு விடயத்தில் மகிழ்சி முன்னேற்றம் என்பது சூழலை பொறுத்தது என்பதை சொல்லாமல் சொல்லி விடீர்கள்.
  *******
  1.ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு புதிய உறுப்பை உருவாக்க முடியும் என்பதற்கு அறிவியல் சான்றோடு ஒரு பதிவு இடுவேன் என்று ஏற்கென்வே கூறிவிட்டேன்.எப்படியும் இந்த 10 நாட்களில் இடுவேன்.இது எழுதினால் அதிக விவாதம் வரும் என்பதையும் அறிவேன்.ஆகவே அ.வ தொடரில் இன்னும் 5 பதிவுகள் எழுதி முடித்து விட வேண்டும் என்ற முனைப்புதான்.
  //உதாரணத்தின் மூலம் விளக்கிகிறேன். mutationக்கு ஒரு மாளிகையை உருவாக்கும் ஆற்றல் உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் ஒரு செங்கலை உருவாக்கியதற்கான ஆதாரத்தையாவது கொடுங்கள் என்று கேட்கிறேன்.
  நீங்கள் ஒரு செங்கலை உடைத்ததற்கான ஆதாரத்தை கொடுக்கிறீர்கள். இப்போது புரிகிறதா.

  கேள்விக்கான சரியான பதிலை எதிர்பார்க்கிறேன்.//

  இல்லை உடனே என்றால் உடல் உறுப்புகளை உருவாக்கும் ஹாக்ஸ் ஜீன்களில் ஏற்படும் சிறுமாற்ற‌ங்கள் மீது விவாதிப்போம்.கொஞ்சம் எளிமைப்படுத்தி எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.
  http://en.wikipedia.org/wiki/Hox_gene
  http://evolution.berkeley.edu/evolibrary/article/mutations_05
  ***
  2.) அப்பதிவில் விவாதிப்போம் அப்போது நீங்களும் இருகேள்விகளுக்கு விடையளீக்க வேண்டும்.

  அடுத்த பதிவுக்கு வாஙக்

  a) சிறு பரிமாணம்[micro evolution] வரையறுத்து அதனை ஏற்கிறீர்களா என கூறவும், ஏற்றால் உயிரின் குழுக்களின் வண்ண வேறுபாடு,கண்களின் அமைப்புகள்,சில உறுப்புகளின் வளர்ச்சியின் அள்வு மாறுபடுவதன் காரணம் சிறு மாற்ற‌ம் என்பதை ஏற்கிறீர்களா ?
  Genetic mutation makes those brown eyes blue
  Scientists find that blue-eyed individuals have a single, common ancestor
  http://www.msnbc.msn.com/id/22934464/ns/health-health_care/t/genetic-mutation-makes-those-brown-eyes-blue/#.T1eKDsDdkqw

  b) உயிரினத்தின் மிக சரியான சரியான் வரையறுப்பு[species problem] பற்றி உங்கள் கருத்து.
  http://en.wikipedia.org/wiki/Species_problem
  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. நண்பர் சாதிக்
  நான் என்ன முயற்சிக்கிறேன் என்பதை உங்களுக்கும் இதர நண்பர்களுக்கும் விள்க்க கடமைப்பட்டு உள்ளேன்.
  1.சிறுமாற்றங்கள் ஒவொரு உயிரினத்திலும் பல்வேறு வகைகள் உருவாக்குகின்றன.இதனை சிறு பரிமாணம் என்று கூறலாம்.ஒரு உயிரின குழுவிற்கு ஒரு முன்னோர்.

  Each species have different varieties.The reason for this is the mutations in the genes.

  எ.கா நாய்களின் பல வவகைளுக்கு சில வகை ஓநாய்களே முன்னோர்.மனிதர்களில் பல்வேறு வகையான தோற்றம்,வித்தியாசம் ஆகியவற்றுக்கும் சிறு மாற்றங்கள் ஏற்படுதும் சிறு பரிமாண் வளர்ச்சியே
  http://www.nature.com/nmiddleeast/2010/100303/full/nmiddleeast.2010.118.html
  http://www.biomedcentral.com/1741-7007/8/16

  சில வகை ம்யுட்டேஷன்கள் இரத்தப் பிரிவையே மாற்றலாம் என்று கூட இங்கே சொல்கிறார்கள்.ஆகவே ம்யுட்டேஷன்கள் பல் வகை குறைந்த படசம் பல உயிரின வகைகளை ஒரு வகை உயிரினத்தில் இருந்து உருவாக்குகிறது என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்..
  ********
  The Blood Group Antigen Gene Mutation Database
  The Blood Group Antigen Gene Mutation Database (BGMUT) was set up under the aegis of the Human Genome Variation Society (HGVS) in 1999. It documents variations in genes that encode antigens for human blood groups. It thus is a locus-specific mutation database (LSDB) that covers multiple genes. The database was compiled and has been curated by Olga O. Blumenfeld, PhD, Department of Biochemistry, Albert Einstein College of Medicine, New York, NY, and Santosh K. Patnaik, MD, PhD, Department of Thoracic Surgery, Roswell Park Cancer Institute, Buffalo NY. In 2006, this website moved to the NCBI to become part of dbRBC where it has been under the direction and additional curatorship of Wolfgang Helmberg, MD, Department of Serology and Transfusion Medicine, Medical University of Graz, Austria. Many who are expertsin the study of blood group systems have contributed to the development of this database by providing, among other things, information on the systems and the alleles.
  In addition to documenting genetic variations, this site also provides information on the blood group systems, the genes that encode them, the serological phenotypes, etc. Blood group systems for which genes or genetic variations have yet to be identified are also documented. For some systems, information on non-human orthologous genes is also made available.
  To cite this database, please refer to - Blumenfeld OO, Patnaik SK. Allelic genes of blood group antigens: a source of human mutations and cSNPs documented in the Blood Group Antigen Gene Mutation Database. Human Mutation. 2004 Jan; 23(1):8-16.

  http://www.ncbi.nlm.nih.gov/gv/mhc/xslcgi.cgi?cmd=bgmut/home

  ReplyDelete
 25. @sadiq
  2.இரண்டாம் கட்டம் ம்யுட்டேஷன்ஸ் புதிய உடல் உறுப்பையோ அல்லது உறுப்பில் சில மாற்றத்தையோ உருவாக்க முடியும் என நிரூபித்தல்[இதற்கு தனிப்பதிவு இடுவதாக் கூறிவிட்டேன்].
  http://www.thetech.org/genetics/ask.php?id=342
  Is it true that in earlier times humans were all O blood type (in ABO blood group) and that A, B and AB blood type occurred later by mutation of the O blood type gene?

  January 13, 2010


  Even though O is the most common,
  A came first.
  No this probably isn't the way it happened. Most likely A came first. And then mutations in the original A gene caused B and O to appear.

  One way scientists figured this out was by using something called coalescence analysis. Basically, this is where you compare DNAs and figure out when they used to be the same.

  From this kind of analysis scientists concluded that A came first. Then, about 3.5 million years ago, the A gene mutated in someone and blood type B was born. The same thing happened about a million years ago for O blood type. So O is actually the most recent blood type.

  3.ஒரு உயிரினத்தின் வரையறுப்பு என்பது அத‌ன இனவிருத்தி செயது இன்விருத்தி செய்யக்கூடிய உயிரினத்தை உருவாக்கும் தனமையை சார்ந்து இருக்கிறது.அதாவது இரு உயிரினங்கள் இனவிருத்தி செய்ய முயற்சித்து முடியாமலோ அலல்து இனவிருத்தி செய்யக்கூடிய சந்ததியை[fertile offspring] உருவாக்க முடியாமலோ போனால் மட்டுமே அவை வெவ்வேறு உயிரினங்கள்.

  Where two different species can interbreed and always produce fertile offspring, it is an indication that they are very closely related. For example, members of the genus Canis can all interbreed and produce fertile young - this includes wolves, coyotes, jackals, dingos and domestic dogs. According to the old system, which classifies any two animals that can interbreed and produce fertile offspring as the same species, this would make a wolf and a jackal the same animal, which is clearly not the case - this classification is too simplistic. Physically, behaviourally and genetically, these are different animals, but they are related closely enough to be able to produce fertile young.
  [இது பற்றி மூன்றாம் கட்டம் அதாவ்து A)mutations உருவாக்கிய பல் வகைகளில்,B)சில வகைகள் மாறிய or புதிய உறுப்புகள் பெற்று C) முன்னோர் உயிரினத்துடன் இஅன்விருத்தி செய்ய இயலாம்ல் போனால் புதிய உயிரினம் தோன்றியதாக் பொருள்]


  we are in the first stage.OK!!!!!!!!!!

  ReplyDelete