Wednesday, March 14, 2012

பூமியின் வரலாறு:காணொளிகளபரிணாம் கொள்கையின் முக்கிய காரணியாகிய இயற்கைத் தேர்வு என்பது புவியியல் சூழல் சார்ந்தது.புவி சூழலும்,பரிணாமும் இரட்டையர்கள் என்றால் மிகையாகாது. மனிதர்கள் உட்பட பல மில்லியன் தாவரங்கள்,உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது.

அதனால் பலவகை உயிரினங்கள் பெருகின, ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது.

இக்காலகட்டங்களில் புவியின் இயற்கைத் தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது.

இக்காணொளிகள் இங்கு குறிபிட்ட பல் விடயங்களை நன்கு விள்க்குகின்றன்.கண்டு களியுங்கள்.இயற்கையை நேசிப்போம்,பாதுகாப்போம்!


4 comments:

 1. //உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.//

  மிகவும் குறைவாக இருக்கிறதே. ஆமாம் இப்படி புள்ளி விபரங்களை எல்லாம் அறிவியல் சொல்வதால் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? எனக்கென்னமோ கணக்கில் எங்கோ கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

  வேதங்கள் சொல்லும் இந்த உலகம் தோன்றி டிரில்லியன் வருடங்கள் ஆனது என்பதை உங்களால் ஏற்றுகொள்ள முடியுமா? முடியாது என்றே கருதுகிறேன். ஏனெனில் அது வேதம், இது அறிவியல்.

  காணொளி என்ன விளக்கம் சொன்னாலும், இது இப்படித்தான் என ஒருவர் தீர்மானித்து விட்டால் அதை சுற்றியே எண்ணங்கள் பரவும் என்பது எனது அபிப்ராயம். தவறு இருப்பின் மன்னித்து கொள்ளவும்.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே,
  //மிகவும் குறைவாக இருக்கிறதே. ஆமாம் இப்படி புள்ளி விபரங்களை எல்லாம் அறிவியல் சொல்வதால் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? எனக்கென்னமோ கணக்கில் எங்கோ கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. //

  1.5 பில்லியன் (150 கோடி)ஆண்டுகள் எனக்கு குறைவான் கால்மாக தெரியவில்லை.
  இதுவும் இபோதைய சூழலே நீடித்தால் என்ன நடக்கும் என்ற எதிர்கால் ஊகிப்பு[extrapolative prediction].வேறு ஏதேனும் இத்னை மாற்றக்கூடிய நிகழ்வுகள் நடக்காது என்ற கற்பிதத்தில்[assumption] உருவானது.
  ஆகவே இப்படி ஏதும் நிகழ்ந்தால் இதுதவறு ஆகலாம்.எனினும் ஆவணப்படுத்தப் பட்ட நாகரிக மனிதனின் வாழ்வு சுமார் 10,000+ வருடங்க்ள் மட்டுமே எனும்போது 150 கோடி பெரிய விடயமே!.அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
  //வேதங்கள் சொல்லும் இந்த உலகம் தோன்றி டிரில்லியன் வருடங்கள் ஆனது என்பதை உங்களால் ஏற்றுகொள்ள முடியுமா? முடியாது என்றே கருதுகிறேன். ஏனெனில் அது வேதம், இது அறிவியல்.//
  பெரு விரிவாக்க தொடக்க நிலையில் இருந்து இபோது வரை 13.7 பில்லியன் வருடம் என்வே அறிவியல் உறுதிப்படுத்தி உள்ளது.அதற்கு முன் காலம் கிடையாது என்பது ஐன்ஸ்டினின் கொள்கை.ஆனல் இப்போது சில் கருதுகோள்கள் பெரு விரிவாக்கத்திற்கு முன் என்ன நடந்து இருக்க்லாம் என்பதை முன் வைக்கின்றன.
  1. பெரும் சுருங்குதல்(big crunch):இதனை பொறுத்தவரை பிரபஞ்சம் விரிவடையும் ,ஒரு எல்லைக்கு பிறகு சுருங்கும்,பிறகு விரியும்......
  2. பல் பிரபஞ்ச கொள்கை(Multiverse) எண்ணற்ர பிரபஞ்சங்கள் உண்டு,ஒரு பிரபஞ்சம் தோன்றுவதும் மறைவது,மிக இயல்பான விடயங்களே.இப்போது நம் பிரபஞ்சத்தில் தினமும் பல நட்சத்திரங்கள் அழிவதும்(சூப்பர் நோவா)இயல்பாக இருப்பது போல்!
  http://curious.astro.cornell.edu/question.php?number=644
  .இத்னை கணித்தே பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறிந்தனர்.
  ஆகவே பிரபஞ்சம் ட்ரில்லியன் ஆண்டுகள் பழமை என்பது உண்மை ஆகும் வாய்ப்புகளும் உண்டு,ஆனால் இதே பூமி அவ்வளவு நாள் இருக்குமா என்பதே சந்தேகமே!
  http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_Universe
  நன்றி:

  ReplyDelete
 3. அருமையான காணொளி நண்பரே.

  இதை பார்க்கும்போது கார்ல் சாகனின் Cosmos புத்தகம் படித்த ஞாபகம்தான் வந்தது. அருமையான புத்தகம்.

  http://www.angelfire.com/blog2/endovelico/CarlSagan-Cosmos.pdf

  மூன்று வாரங்கள் முன் நமது தமிழகத்து ஐன்ஸ்டின்(அண்ணன் பி.ஜே) ஏதோ ஒரு டி.வியில், இரும்பையும் எறக்கினோம் என்று ஒரே போடு போட்டு கொண்டிருக்க, தம்பிமார்கள் வாய் பொளந்து பார்த்து கொண்டிருப்பதை நானும் வாய் பொளந்து பார்த்து கொண்டிருந்தேன்.

  இரும்பு பூமியில் உற்பத்தியாவதற்கு வாய்ப்பே இல்லை அது வேற்று கிரகத்திலிருந்துதான் வந்திருக்கு வேண்டும் என விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் என அண்ணன் விஞ்ஞானி சொல்ல. அது இணையத்து தம்பிமார்களால் பரப்ப பட்டுள்ளுதா என்று தெரியவில்லை.

  இந்த காணொளியை பார்த்தால் உலகம் உருவாவதற்கு இரும்புதான் முக்கிய காரணம் என்று புலப்படுகிறது.

  ReplyDelete
 4. வாங்க நரேன்,

  நீங்க அருஞ்சொல் பொருள் கற்றுக் கொள்ள வேண்டும்.

  எறக்கினோம் என்றால் வானத்தில்(எங்கே?????) இருந்து,

  பூமியை விரித்தான் என்றால் [ஜாகிர் நாய்க்கின் நெருப்புக் கோழி முட்டை என்பது த்வறாகி விட்டது ஹி ஹி]பூமி அடுக்குகள் நகர்ந்து கண்டங்களாக் பிரிதல்,

  வானம் என்றால் பிரபஞ்சம்,மேகம்,சொர்க்கம்

  பூமி என்றால், பூலகம்,நீர் தவிர்த்த நிலம், வாழும் இடம் என்று போட்டுத் தாக்கட்டும் நம்க்கு ஆட்சேபனை இல்லை.இப்படி தாக்குவதுதான் தாக்கியா

  இதற்கு உண்மையான் விள்க்க்ம அவர்களைத் தவிர அனைவருக்கும் தெரிந்து இருக்கும் போது இது நல்ல நகைச்சுவை விருந்து! ஹா ஹா ஹா

  இருந்தாலும் தவுகீத் அண்ணனை பாராட்டாமல் இருக்க முடியாது.அவர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் தலையாட்டும் படி சிஷ்யர்களை இக்காலத்திலும் செய்ய முடிந்தால் அக்காலத்தில் எப்படிஅவ்ர்களின் முன்னோர்கள் ஏற்று இருப்பார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக் கண் முன்னே நடத்திக் காட்டிய பெருமகன் அல்லவா அண்ணன்!

  நான் அவர் விசிறி! ஹி ஹி!!!

  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/
  அண்ணனின் கருத்தாகிய இதையும் படியுங்கள்!!!!.என்ன சொல்கிறார் என்பது புரியும்!!!!!!!
  நன்றி

  ReplyDelete