Tuesday, February 26, 2013

தாசின் பரிணாம பதிவு: தேவையான விளக்கங்கள்&திருத்தங்கள்
வணக்கம் நண்பர்களே,

தமிழ்பதிவுலகில் பரிணாமம் மீதான விமர்சனங்களையும்,மதம் சார் ஆட்சி என்பதையும் தொடர்ந்து விவாதித்து விமர்சித்து வருகிறோம். நம்ம மாப்ளே தாசு பரிணாம எதிப்பு பதிவு எழுத முயற்சி செய்கிறார் என்பதால், ஒரு ஆசிரியராக அவர் எழுதிய பதிவில் தேவையான திருத்தங்களை இப்பதிவில் செய்வோம்.

 A)முதலில் தலைப்பு: பரிணாமம் அறிவியல்தானா?

இதில் இரு சொற்கள் பரிணாமம் ,அறிவியல் இருக்கிறது. இதன ஏற்கப்பட்ட வரையறை சொல்ல வேண்டும் ,ஆனால் சொல்லவில்லை. ஆகவே நாம் சொல்லி விடுவோம். அறிவியல் விடயங்களை சொல்லும் போது சுட்டிகள் கொடுக்க வேண்டும்.அவர் செய்யவில்லை நாம் செய்வோம்?விக்கிபிடியா தகவல்களே போதுமானது.

அ) பரிணாமம் என்பதன் வரையறை என்ன?


Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations. Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins

பரிணாமம் என்பது தலைமுறைரீதியாக கடத்தப்படும் மாற்றங்களினால் உயிரின குழுக்களில் ஏற்படும் உரு அமைப்பு,ஜீனோம், ப்ரோட்டின் மாறுதல்கள் ஆகும்.இத்னால்  380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்தன.  ஆகவே பரிணாமம் என்பது உயிரின தோற்ற,வளர்ச்சி,பரவல் வரலாறு. இதன் சான்றுகள் 

1.காலரீதியான உருமாற்றம் கொண்ட படிமங்கள்.

2.ஜீனோம் மாற்றம் தலைமுறைரீதியாக ஏற்படுகிறது. இதனால் உரு அமைப்பு மாற்றம்[Morphological Change],ஒரு உயிரின குழு இணைந்து இனவிருத்தி செய்ய இயலா சிற்றின‌ங்களாக பிரிதல்[speciation] என்பவையும் சான்றாக ஆவணப் படுத்தப்பட்டு உள்ளது.


**
ஆ)அறிவியல் என்பதன் வரையறை என்ன?

//விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?

ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.   //

தாசும் அறிவியல் பற்றி சொன்னாலும் ,சான்று என்பதைப் பற்றியே சொல்லவில்லை.

http://en.wikipedia.org/wiki/Science

Science (from Latin scientia, meaning "knowledge") is a systematic enterprise that builds and organizes knowledge in the form of testable explanations and predictions about the universe.

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் பரிசோதனை மீது உறுதிப் படுத்த படக் கூடிய , விளக்கம் ,கருதுகோள் உருவாக்கும் கட்டமைப்பு.ஒரு நிகழ்வை அளவீடுகளாக்கி, காரணிகளாக பகுத்து, கட‌ந்த நிகழ்கால அளவிடப் பட்ட சான்றுகளுக்கு விளக்கமும், எதிர்கால நிகழ்வுகளுக்கு கருதுகோளும் கொடுப்பதே அறிவியல்.

**
B) பரிணாமம் எப்படி அறிவியலாக ஏற்கப் படுகிறது?.

Observation

சான்றுகளின் படி பிரப்ஞ்சம் தோன்றியது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். முதல் ஒரு செல் உயிரி படிமத்தின் காலம் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ளிட்டு,பூமியின் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகை உயிரின‌ங்கள் வாழ்ந்தன என்பதை சான்றாக்கி உள்ளனர்.

அதுவும் ஒரு கால கட்ட உயிரினத்திற்கும், அடுத்த கால கட்ட உயிரினங்களுக்கும் உரு அமைப்பில் தொடர்பு இருந்தாலும் சிறு அளவு மாற்றமும் இருந்ததும் ஆவணப் படுத்தப் பட்டது.

Theory

ஆகவே ஒரு கால கட்ட உயிரினங்கள் சூழல் சார்[natural selection],சாரா[ random genetic drift] மாற்றங்களினால் தலைமுறைரீதியாக மாற்றம் அடைகிறது என விளக்கம் அளிப்பது பரிணாம கொள்கை. நிகழ்வுக்கான விளக்கமே அறிவியல். விளக்கத்திற்கு சான்று தேடுவது அல்ல!!.

Testing

கடந்த 50ஆண்டுகளில் மூலக்கூறு அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால், மனிதன் உள்ளிட்ட பல் உயிரின‌ங்களின் ஜீனோம் குறியீடுகளாக ஆவணப்படுத்தப் பட்டது.

தலைமுறைரீதியாக ஜீனோம் ம்யுட்டேஷன் என்ப்படும் மாறுதல் அடைவதும், இந்த ஜீனோம் மாற்றங்கள் உருமாற்றம், சிற்றினங்கள் ஆக பிரிதல் என்பதும் ஆயவக பரிசோத்னைகளில் உறுதிப்படுத்தப் பட்டது.

Conclusion

ஆகவே பரிணாமம் அறிவியல் ஆகும்.
**
C) பரிணாமத்தை எப்படி தவறான விளக்கமாக‌ அறிவியல்ரீதியாக நிரூபிப்பது?

பரிணாமம் என்பதே காலரீதியான ,தலைமுறை ரீதியான மாற்றம் ஆகும்.ஒரு செல் உயிரில் இருந்து இன்றைய உயிரிகள் வரை முன்னோர்,வழித்தோன்றல் என்ற தொடர்பாக பரிணாம மரம் உண்டு. இதன் கடந்தகால சான்றுகள் படிமங்கள்தான். இதுவரை கிடைத்த‌ படிமங்கள் இந்த பரிணாம மரத்தின் கருதுகோள், விளக்கம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்க‌வில்லை.

ஒருவேளை இனிமேல் கிடைக்கும் படிமங்கள் பல இதற்கு மாறாக இருப்பின் பரிணாம மர விளக்கம் கைவிடப்படும். இது முதலில் நடந்தால் மட்டுமே பரிணாமம் பொய்யாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எ.கா ஹோமோ சேஃபியன் என்னும் மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்பது இப்போது ஏற்கப்பட்ட பரிணாம விளக்கம்.  சிம்பன்சியும், மனிதனின் முன்னோரும் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பொது முன்னோரில் இருந்து பிரிந்தனர்.அதன் பிறகு மனிதனின் ஹோமோ பேரினத்தில்[Genus] 20 வகை மனித இனம் தோன்றி, ஹோமோ சேஃபியன் மட்டும் மிஞ்சியது. ஒரு ஹோமோ சேஃபியன் படிமம் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் கிடைக்கும் பட்சத்தில் இந்த விளக்கம் தவறாகிவிடும்.

உயிரின‌ங்களின் மறைவு என்பதும் பரிணாம நிகழ்வுதான்.பல உயிரின‌ங்கள் இன்றும் மறைவதும் கூட இதன் சான்றே!!

ஜீனோம் மாற்றம் உறுதியான படியால்,இத்னால் உருமாற்றமோ, சிற்றினம் ஆதலோ[speication] நடைபெறவே முடியாது என் நிரூபிக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிக மிக மிக ...குறைவு!!!

ஆகவே படிம ஆதாரம்,ஜீனோம் ஆய்வு மட்டுமே பரிணாம கொள்கையின் மீது கேள்வி எழுப்ப முடியும்!!!

ஆகவே பரிணாமம் என்பது அறிவியல் என விளக்கி விட்டோம்.விளக்கம் முடிந்தது, இப்போது திருத்தம்!!
***

மாப்ளே தாசின் பதிவுக்கு செல்வோம்.

a) // 1859 ஆம் ஆண்டு ஒரு ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும் இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார்.//

தவறு பரிணாம் கொள்கை டார்வினுக்கும் முந்தையது. பரிணாமத்தின் முக்கிய காரணி இயற்கைத் தேர்வு[natural selection] என்பதே டார்வின்& வால்ல‌ஸ் ஆகியோரின் விள்க்கம் ஆகும்.அதற்கு முந்தைய லாமார்க்கியம் பற்றி இச்சுட்டியில் பார்க்கவும். 


Lamarckism (or Lamarckian inheritance) is the idea that an organism can pass on characteristics that it acquired during its lifetime to its offspring (also known as heritability of acquired characteristicsor soft inheritance). It is named after the French biologist Jean-Baptiste Lamarck (1744–1829), who incorporated the action of soft inheritance into his evolutionary theories as a supplement to his concept of an inherent progressive tendency driving organisms continuously towards greater complexity, 


b)//எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா?  பாதி தவளை-பாதி மீன்?  பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்?   இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!!  எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைத உயிரினங்கள் எதுவும் இல்லை.... மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது  ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை.   மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.//

இங்கேதான் நிற்கிறார் தாஸ்!!ஒரு உயிரினம் முழுமை அடைந்தது என அறிய முடியாது, வாழும் சூழலுக்கு பொருந்தினால் வாழும் அவ்வளவுதான். இப்படி இடைப்பட்ட உயிரின‌ங்கள் என்பது தவறான கணிப்பு!!.இப்போதைய உயிரினம் மட்டும் முழுமை அடைந்தவை என்பது தவறான புரிதல்.ஒவ்வொரு கால கட்ட உயிரினமும் முழுமை அடைந்தவைதான்.

இவருக்கு இந்த பதிவு!!


c). வாழும் மஹ்தி ஹாரூண் யாஹ்யா உலகம் தோன்றி 7000 வருடம் ஆகிறது என்னும் கொள்கை கொண்டவர். அவரின் விளக்கத்தை தாசு ஏற்கிறாரா?


In his work Al-Burhan fi Alamat al-Mahdi Akhir az-Zaman, Al-Muttaqi al-Hindi, one of the Ahl al-Sunnah scholars told in 8 hadiths that the life span of this world is 7000 years .
...
“THE LIFE OF THIS COMMUNITY WILL EXCEED 1,000 YEARS, YET BE LIMITED TO 1,500 YEARS.”

One of the greatest Islamic scholars al-Suyuti made this statement after examining the hadith.

“THE LIFE OF MY COMMUNITY WILL NOT EXCEED 1,500 YEARS.”

We are now in the year 1431 Hijri calendar. That is 1431 years have passed from the life span of the community since our Prophet (saas). So then how much will the life span of the Islamic community pass the year 1500?
By numerogically examining a hadith told by our Prophet regarding the End of Times, Bediuzzaman has made the calculation that the acceptance time of the Islamic community, that is their victorious time will end in year 1506 hijri calender, meaning that it will not exceed 1500 years as told in the hadith.

1506 Hijri=2086 உலகம் அழியுதுங்கோ!!!

d). பில்ட் டௌன் மேன் படிமம் மோசடி மட்டும் உண்மை. இதுபற்றி பல பதிவுகளில் விவாதித்து விட்டோம். 

தாசின் பதிவில் சொல்ல்ப்படும் விடயங்கள் அனைத்தும் ம[னி]தாபிமானி ஆஸிக்கின் பதிவில் இருக்கும், நாம் ஏற்கெனவெ அலசிய விடயங்களே!!

நாம் ஒவ்வொரு விடயத்தையும் ,ஒன்றன் பின் ஒன்றாக சான்றுகள் அடிப்படையில் அலச முயல்கிறோம். கேள்வி கேட்டு குழப்ப முயல்பவர்களை சமாளிக்க பெரிதாக சிரமப்படத் தேவையில்லை.

இப்பதிவில் பரிணாமம் ஏன் அறிவியல் ஆக உள்ளது? இதனை தவறு என நிரூபிக்கவும் வழி காட்டி இருக்கிறோம்.

இது இல்லாமல் பரிணாமத்தின் 380 கோடி வருட வரலாற்றில், கோடிக் கணக்கான உயிரின, உறுப்பு வகைகளில் கேள்வி கேட்பது எந்த ப‌யனையும் தராது.கேட்கும் கேள்விக்கு சான்று இருப்பின் விளக்கமும் ஆய்வுக் கட்டுரைகளில் இருக்கும்.

என்றாலும் தாஸ் உலகின் உயிரியல்,ஆய்வகங்கள், பல்கலைக் கழகங்களில் பரிணாமம் ஏற்கப்பட்டு, கற்பிக்கப்படுவதை ஒத்துக் கொண்டு,பதிவிலும் சொல்லி இருக்கிறார்ர்.

//150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக விளங்கி வருகிறது.//

மிக்க நன்றி. மார்க்க பந்துக்கள் முழு ஒட்டகத்தை பிரியாணியில் மறைக்கும் கூட்டம் என்பதால் இதையும் ஒத்துக் கொள்ளவில்லை.பரிணாமம் என்பதே தங்களின் மதத்தை ஒழிக்க வந்த [வழக்கமான] சதிக் கோட்பாடு என்றே சித்தரிக்கின்றனர். ஹி ஹி

ஆகவே மாப்ளே தாசை பாராட்டுகிறோம்!!


இப்பதிவைப் படிக்கும் நண்பர்களை தாசின் பதிவையும் படித்து ,விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம், பின்னூட்டத்தில் பதில் அளிப்போம்.

நன்றி!!


Facts Of Evolution (Cassiopeia Project)

Saturday, February 23, 2013

தீவிரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவோம்!!


This figure is an illustration of the aim, principles and framework of Building Resilience Against Terrorism: Canada's Counter-terrorism Strategy.

வணக்கம் நண்பர்களே,

நமது சகோதர ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்திய  சொந்தங்களுக்கு அஞ்சலியும்,தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கிறோம்.

உலகின் பல் நாடுகளில் இப்படி பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் வாழ்கிறோம். இந்தியாவிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது கசப்பான உண்மை.

இது காவல்துறை,உளவு அமைப்புகள் விசாரணை செய்து ,நீதிமன்ற வழக்காகி, அது வழங்கும் தண்டனை என செல்வது வழக்கம் என்றாலும்,நாம் இப்பதிவில் எப்படி பொதுமக்கள் தங்களைப் தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாப்பது,மேற்கொள்வது பற்றிய கனடா அரசின் செயல்முறை விள்க்கம் பற்றியே பார்க்கப் போகிறோம்.

பிடிபடும் குற்றவாளிகள் மீதான ,விசாரணை,நிதிமன்றம் ஆகியவற்றின் மீது
நமக்கு நம்பிக்கை இருக்கிறது. இதன் மீது சதிக் கோட்பாடு விளக்கம் அளிக்கும் மாமேதைகள் விசாரணை,நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆக்க பூர்வமாக கவனம் செலுத்தி தங்கள் தரப்பு விளக்கத்தை அங்கு அளிக்க வேண்டுகிறோம்.நீதி மன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்!!

இனி பதிவுக்கு செல்வோம்.

 ஆங்கிலத்தில் உள்ள கட்டுரை இங்கே உள்ளது. கட்டுரையின் முக்கிய பகுதிகளை மட்டுமே தமிழாக்கம் செய்கிறோம். அவசியம் எனில் பின்னூட்டத்தில் தொடர்வோம்.
**
ஒரு அமைப்பு, இயக்கம் என்றால் அதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அதுபோல் இந்த தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்புக்கும் ஒரு நோக்கம் வேண்டும் அது என்ன?

[கட்டுரையில் கனடா என்னும் இடங்களில் நாம் இந்தியா என எடுக்கிறோம்]

The overarching goal of the Strategy is: to counter domestic and international terrorism in order to protect Canada, Canadians and Canadian interests.

"இந்திய,இந்தியர் நலன்களை உள்நாட்டு,வெளிநாட்டு தீவிரவாதத்தில் இருந்து பாதுகாத்தல்"

இந்தியா,இந்தியர் நலன் தாண்டிய சிந்தனைப் போக்கு உடைய யோக்கியர்கள், ஒழுக்க சீலர்கள் பற்றி இப்போது தவிர்த்து விடுவோம். இந்தியா என்னும் நட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும், இந்தியாவின் இயல்பை விரும்பும் அப்பாவி குடிமகன்கள் பற்றி மட்டுமே கவலைப் படுவோம்.

A)தீவிரவாத அச்சுறுத்தல்[The Terrorist Threat]

தீவிரவாத தாக்குதல் நடப்பதையும், இனிமேலும் நடக்கும் சாத்தியத்தையும் ஒத்துக் கொள்ள் வேண்டும்.இதில் பல இன,மொழி,மத,சாதி,நக்சல் போன்ற இயக்கங்கள் தொடர்பு இருக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்ள் வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தீவிரவாத இயக்கம், செயல் நடைபெறுவதே  உண்மை என இதுவரை நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் இருந்து அறிய முடியும். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.B)தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை [Addressing the Threat]

தீவிரவாத கருத்தாக்க பிரச்சாரமும் எதிர்கொள வேண்டிய அடிப்படை விடயம் ஆகும். எங்கு இந்திய,இந்தியர் நலனுக்கு, அரசியல் அமைப்பு சட்டத்தின் ஜன்நாயக,மத சார்பற்ற தன்மைக்கு விரோதமாக கருத்துப் பிரச்சாரம் கண்டால் அதனை  அடையாளம் கண்டு முடிந்த்வரை எதிர்ப்பு கருத்தில் காட்ட வேண்டும். தீவிரவாத  கருதாக்கமே  எண்ணத்தில் உருவாகி ,சொற்களால் பரப்பப் பட்டு, செயலில் பரிணமிக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.

ஆகவே தீவிரவாத கருத்தாக்கங்களை,பரப்புரைகளை எதிர்ப்பதே முதல் செயல்!!!

இது பொதுமக்களின் பங்கு செயல் எனில் அரசு தன் பங்கிற்கு, இந்திய,இந்தியர் நலன் சார் உலக் அரசியல், நட்பு நாடுகளுடன் தீவிரவாதம் குறித்த தகவல் பரிமாற்றம், தேடப்படும் குற்றவாளிக்ளை ஒப்படைத்தல்/கைது செய்தல்,விரைந்த வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை உள்நாடு/வெளிநாட்டில் செயல் படுத்த வேண்டும்.

இதில் அரசின் செயல் நான்காக பகுக்கப் படுகிறது அவையாவன.!!!

1.வருமுன் காத்தல்: தீவிரவாத செயல்களை தூண்டும் விடயங்களை கண்டு, தவிர்த்தல். ஈடுபடும் வாய்ப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்தல், தகவல்கள் ஆவணப் படுத்தப் படுதல் போன்றவை .தீவிரவாத பரப்புரைக்கு அடிப்படையான சமூகப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு தீர்க்க முயல வேண்டும்.

Prevent 
Activities in this area focus on the motivations of individuals who engage in, or have the potential to engage in, terrorist activity at home and abroad. The emphasis will be on addressing the factors that may motivate individuals to engage in terrorist activities
**
2.கண்டறிதல்: தீவிரவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளோரை கண்டறிந்து, தொடர்ந்த கண்காணிப்பில், த்கவல்களை ஆவணப் படுத்தல் அவசியம்.சமூகத்தின் ஒவ்வொரு குழுவிலும் இத்தகவல் பெற , உளவுத் துறை நன்கு ஆட்களைப் பயிற்றுவித்து கண்காணிக்க வேண்டும்.கிடைக்கும் தகவல் சரியானதா எனவும் பல முனைகளில் இருந்து உறுதி செய்ய வேண்டும். 

Detect 
This element focuses on identifying terrorists, terrorist organizations and their supporters, their capabilities and the nature of their plans. This is done through investigation, intelligence operations and analysis, which can also lead to criminal prosecutions. Strong intelligence capabilities and a solid understanding of the changing threat environment is key. This involves extensive collaboration and information sharing with domestic and international partners.
**
3.வசதிகளை மறுத்தல்

தீவிரவாத செயல் என்பதற்கும் பணம்,ஆள்,உள்ளிட்டு  பல விடயங்கள் அவசியம் ஆவதால், பண பரிமாற்றம் உள்ளிட்டு, வாகன விற்பனை, போன்ற பல விடயங்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். தீவிரவாதத்திற்கு தேவையான வசதிகளை மறுப்பதே இச்செயல் ஆகும்.

Deny 
Intelligence and law enforcement actions can deny terrorists the means and opportunities to pursue terrorist activities. This involves mitigating vulnerabilities and aggressively intervening in terrorist planning, including prosecuting individuals involved in terrorist related criminal activities, and making Canada and Canadian interests a more difficult target for would-be terrorists.
**
4.செயல்படுதல்:

நடைபெறும் சாத்தியம் உள்ள ஒரு [தீவிரவாத]செயல் நடக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு தீவிரவாத செயலுக்கு எதிர்வினையாற்றும் விதம் பற்றி அறிந்து, அச்சூழலில் இருந்து விரைவாக இயல்பு நிலைக்கு சமூகம் திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Respond 

Terrorist attacks can and do occur. Developing India[Canada]’s capacities to respond proportionately, rapidly and in an organized manner to terrorist activities and to mitigate their effects is another aspect of the Strategy. This element also speaks to the importance of ensuring a rapid return to ordinary life and reducing the impact and severity of terrorist activity.


ஆங்கிலக் கட்டுரை மிகவும் நீளமாக இருப்பதால் சுருக்கம் மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்.பாமர பொதுமக்களாகிய நாமும் ,தீவிரவாத கருத்து பரப்புரைகளில் நம் உறவு & நட்பு சாராமல் கண்காணிப்பதும். இந்திய நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதை மேற்கொள்வதும், வலியுறுத்துவதுமே பிரச்சினைகளை தீர்க்கும் முதல் பணி.

பல இன,மொழி,மத 120 கோடி மக்கள் ஒன்றாக வாழும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது கடினமே என்றாலும், தீவிரவாதம் என்பதை எதன் காரணம் ஆகவும் நியாயப் படுத்தக் கூடாது.

நம்முடைய சுற்றுப்புறங்களில் நடக்கும் பிரச்சினைகளை குழுவாக இணைந்து தீர்ப்பது, அது பெரிய பிரச்சினை ஆகாமல் பாதுகாக்கும்.அரசு மட்டுமே அனைத்தும் செய்து விட முடியாது.

குடுமபக் கட்டுப்பாடு[இரு குழந்தைகள் மட்டுமே], சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குறைந்த நுகர்வு,விவசாயம் சார் பொருளாதாரம், தேர்தல் சீர்திருத்தங்கள்,பொது சமூக சட்டம் என் ஆரோக்கியமான சிந்தனை வளர்ந்தால் மட்டுமே அனைவருக்கும் குறைந்த படச வாழ்வாதாரம் என்னும் திசையில் நகர முடியும்.

அதை விட்டு 

வானுலக சொர்க்கம் தனை நாடி
இந்த வாழ்கையை இழந்தவர்கள் கோடி

என்னும் கோமாளிகள் போல் நம்மவர்கள் யாரும் ஆக வேண்டாமே!!!

தீவிரவாதம் ஒழிப்போம், ஜன்நாயக மத சார்பின்மை காப்போம்!!!


நன்றி!! 

Kapap - Israeli Counter Terrorism TrainingMonday, February 18, 2013

இலங்கை சிங்கள அடிப்படைவாத இயக்கம் பொதுபலசேனா ஹலால் பொருள்களுக்கு எதிர்ப்பு!!வணக்கம் நண்பர்களே,சகோதரர்களே,
இலங்கை என்று சொல்லும் போதே நம் மன‌தில் ஒரு சோகம் வந்து ஒட்டுவது தவிர்க்க முடியாது என்றாலும், நடப்பது நம் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு தீர்வு தராதா எனவே எதிர்பார்க்கிறோம்.

சிங்கள அடிப்படைவாதம் பேசும் அரசியல் கட்சிகளே அங்கு ஆட்சி செய்ய முடியும் என்னும் சூழல் நிலவுவதால், ஆளும் இராஜபக்சேவை மாற்ற‌ வேண்டும் எனில் அதை விட இனவாதம் பேசும் கட்சிதான் செய்ய இயலும். இது அரசியலின் அடிப்படை விதி.

அந்த வகையில் பொதுபலசேனா என்னும் சிங்கள அடிப்படைவாத இயக்கம் இலங்கையில் வலிமை பெற்று வருகிறது.

அவர்கள் இலங்கை முஸ்லிம்களை எதிர்க்கும் போக்கை கடைப்பிடித்து, அதன் முதல் படியாக அவர்கள் பயன்படுத்தும் ஹலால் பொருட்கள் மீது த்டை விதிக்க கோருகின்றனர். நேற்று மஹாராகமா நகரில் நடைபெற போராட்டத்தில் 
பேசிய புத்த பிக்குகள் மார்ச் 31 க்குள் இந்த பொருள்களுக்கு த்டை விதிக்க வேண்டும் என கெடு விதித்து உள்ளனர்.

இஸ்லாமில் உணவு, உடை உள்ளிட்டு பல கட்டுப்பாடுகள் உண்டு என நாம் அறிவோம். உணவு வகைளில் அனுமதிக்கப்பட்டது என முத்திரை தாங்கி வருவதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.இது மற்றவர்களுக்கு கட்டாயம் இல்லை.

பொதுபலசேனா முஸ்லிம்களை குறிவைத்து விமர்சிப்பதும்,எதிர்ப்பதும் அரசியல் மட்டுமே!!.

இதற்கு கொஞ்சம் காலம் பின்னால் சென்று பார்க்க வேண்டும். வடகிழக்கில் தமிழர்களிடையே மத ரீதியான பிளவு,வன்முறைகள், முஸ்லிம்கள் துரத்தப் பட்டமை ஆகியவ்ற்றை இராஜபக்சே அரசு சாதுர்யமாக பயன்படுத்தி, இனப்பிரச்சினையை ,தீவிரவாதிப் பிரசினையாக காட்ட முடிந்தது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் போரில் வெற்றி பெற்றது. எதிர்க்க யாரும் இல்லாமல் இராஜாங்கம் நடத்தி வந்தார் இராஜபக்சே.

அவரை பெரும்பானமை சிங்கள மக்கள் ஆதரிக்கும் வரை அசைக்க முடியாது,தமிழர்களை எதிர்த்து அரசியல் இராஜபக்சேவை விட யாரும் செய்ய முடியாது என்பதால், பொதுபலசேனா முஸ்லிம்களை எதிர்க்க முடிவு செய்தது எனக் கொள்ளலாம்.

முஸ்லிம்களோடு ,கிறித்தவர்களையும் எதிர்ப்பது இந்த கணிப்பை உறுதிப் படுத்துகிறது. மேலும் இராகபக்சே உள்ளிட்ட பல சிங்கள‌ அரசியல் தலைகள் கிறித்தவ பிண்ணனி கொண்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.


பாமர மக்களுக்கு இன,மத,மொழி வெறி கிடையாது என்றாலும் மத,இன வாதம் பேசும் அரசியல்வாதிகள் குறுகியகாலத்தில் இதனை தூண்டுவதில் வல்லவர்கள் என்பதே வரலாறு சொல்லும் பாடம்!!! 
  
From

இலங்கையில் ஹலால் முறைமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு கோரியிருக்கிறது.
ஒரு மாத காலத்துக்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கொழும்பு மகரகமவில் நடந்த அந்த அமைப்பின் வருடாந்த கூட்டம் ஒன்றின் போதே அந்த அமைப்பு இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்று கூறிய அந்த அமைப்பின் செயலாளர் ஒருவர், உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியதாக அந்தக் கூடத்துக்குச் சென்ற எமது செய்தியாளர் ஒருவர் கூறினார்.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அங்கு பேசிய பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றியுள்ளார்.
**

இந்த பொதுபலசேனா மட்டும் அல்ல, இனவாத அரசு இராஜபக்சேவை புறக்கணித்து  அனைத்து தமிழ், சிங்கள மக்கள் இன,மொழி,மத பேதம் மறந்து பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டுகிறோம்!!

மக்களுக்கு தேவை வாழ்வாதாரம், சுயமரியாதை மட்டுமே பிரச்சினைகள் அல்ல!!
Sunday, February 17, 2013

பூமிப் பந்து: பெரிய வட்டம்: குறுக்குப் பாதை:2!!!


வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் பூமியின் இரு இடங்களின் அட்ச,தீர்க்க கோடு ஆயத் தொலைகள் கொண்டு அப்புள்ளிகள் இடையே உள்ள தூரம் கணக்கிடும் முறை அறிந்தோம். இப்பதிவில் சென்ற பதிவின் தொடர்சியாக அந்த சூத்திரம் வந்த கணித அடிப்படைகள் அறிவோம்.

சென்ற பதிவில்  ஒரு இருபரிமாண தளத்தில் இருபுள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த படச தூரம் நேர் கோடு எனில் முப்பரிமாணத்தில் வளைகோடு அதாவது குறிப்பாக கோளத்தில் வட்ட வில் ஆகும். இது எப்பூடீ என நாமாவது சிந்திப்போம்.

ஒரு நேர்கோட்டை முடிவிலி புள்ளிகளின் தொடராக கூறலாம்.
ஒரு இரு பரிமாண தளத்தை முடிவிலி இணையான நேர்கோடுகளின் தொடராக கூறலாம்.


ஒரு முப்பரிமாண தளத்தை முடிவிலி இணையான வட்டங்களின் தொடராக கூறலாம்.இப்போது ஏன் கோளத்தின் இருபுள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த பட்ச‌ தூரம் வட்ட வில் எனப் புரியும். அப்படி எனில்  சமன்பாடுகளால்[equations]  வரையறுக்கப்படும் 4 பரிமாண தளத்தில் ஒரு பொருள் பயணிக்கும் பாதை அறிவது சுலபம் தானே!!!

அதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகள். அதை அப்பாலிக்கா பார்ப்போம். இப்போது சென்ற பதிவின் சூத்திர விளக்கம் மட்டும் அறிவோம்.
**
ஒரு வட்டவில்லின் நீளம் அறியும் சூத்திரம் நாம் அறிவோம். வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டம்(D) போல் 'π '[pi] மடங்கு என அறிவோம்,முழு வட்டம் என்றால் 360 டிகிரி, வட்டவில் என்பது அதில் ஒரு பங்கு என்பதால் வட்டவில்லின் நீளம் 
n=வில்லின் கோணம்
S=(n/360)*π.*D

D=2r
r=Radius[ஆரம்]

S=(n/360)*π.*2r=(n*π/180)*r

n(degree)*π/180=n(radian)

S=r*n(radian)

ஆகவே வில்லின் கோணம் அறிந்து அதனை ஆரத்தால் பெருக்கினால் வட்டவில்லின் நீளம் கிடைக்கும். முழுவட்ட ரேடியனின் மதிப்பு 2π(=360 degrees) என ஞாபகப் படுத்துவது நன்று!!
**

வெக்டர் கணித அடிப்படைகளில் இருந்து இரு வெகடர்[ திசை கொண்ட மாறி(லி)] இடையே உள்ள கோணம் கீழ்க்கண்ட சூதிரம் மூலம் அறியலாம். இடைப்பட்ட கோணத்தின் கொசைன்[cosine] மதிப்பு  அதன் டாட்[scalar product] பெருக்கலை, மட்டுகளின்[modulus] பெருக்கலின் மதிப்பால் வகுக்க கிடைப்பது ஆகும்.

http://en.wikipedia.org/wiki/Dot_product

இரு புள்ளிகள் முப்பரிமாணத்தில் [x1,y1.z1],[x2,y2,z2] என எடுப்போம்
ஓரின பெருக்கல் [dot or scalar product] அல்லது திசையிலி பெருக்கல் என்படும் முறை ஆகும்.

Scalar Product=(x1*x2+y1*y2+z1*z2)

Modulus=sqrt[(x12+y12+z12)*(x22+y22+z22)]=R2

ஒரு கோளத்தின் ஆரம்(மட்டு) என்பதன் மதிப்பு எந்த புள்ளியிலும் சமமே.
R=Radius of sphere

So


cos(Δσ)=(x1*x2+y1*y2+z1*z2)/R2

The relation between geocentric spherical and geocentric Cartesian coordinates is: 

From the figure It is derived!!
x1=R cos(λ1).cos(φ1) , x2=R cos(λ2).cos(φ2)

y1=R sin(λ1).cos(φ1)  , y2=R sin(λ2).cos(φ2)

z1=R sin(φ1 , z2=R sin2)
By substituting and simplifying

x1*x2+y1*y2+z1*z2=R2[cos(φ1) *cos(φ2)* cos(λ12)+ sin(φ1) *sin(φ2)]


or

Cos(Δσ)=[cos(φ1) *cos(φ2)* cos(Δλ12)+ sin(φ1) *sin(φ2)]

λ12λ12


Distance =R*Δσ(in Radians)

நன்றி!!

Thank toSaturday, February 16, 2013

பூமிப் பந்து: பெரிய வட்டம்: குறுக்குப் பாதை!!!


வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் பூமியின் இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரம் அறியும் முறை கற்போம்.

இது எதற்கு என்றால் சார்பியலை கணிதம் மூலம் கற்றல் செய்கிறோம் அல்லவா, அதில் ஒரு அடிப்படை என வையுங்கள். மெதுவாக சென்று அனைத்தையும் இணைப்போம்!!

ஒரு வரைபடத் தாள் இரு பரிமாணம் உள்ளது அதில் இரு புள்ளிகள் இடையே உள்ள குறைந்த பட்ச தூரம் என்ன என்றால் அனைவருக்கும் சூத்திரம் தெரியும்!!

முதல் புள்ளி=[x1,y1]

இரண்டாம் புள்ளி=[x2,y2]

தூரம்=
  d = \sqrt{(x_2-x_1)^2 + (y_2-y_1)^2}.[Two dimension]

d = \sqrt{(x_2-x_1)^2 + (y_2-y_1)^2+ (z_2-z_1)^2}[Three Dimension]

Proof for two dimension


**
சரி இதுதான் தெரியுமே என்கிறீர்களா!!

இப்போது நம் பூமிப் பந்தில் ஒரு இடத்தை இரு ஆயத்தொலைகளான அட்சக் கோடு[latitude] ,  தீர்க்க கோடு [Longitude] மூலம் குறிக்கிறோம். 

இப்போது பூமிப் பந்தில் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த பட்ச தூரம்  அறிவது எப்படி?

இரு பரிமாண சமதளத்தில் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த பட்ச தூரம் நேர் கோடு எனில், முப்பரிமாண கோளத்தில் குறைந்த பட்ச தூரம் என்பது பெரிய வட்ட வில்[Great circle arc] ஆகும்.

பெரிய வட்டம் எனறால் இந்த இருபுள்ளிகளையும் இணைக்கும் வண்ணம் கோள[பூமி] மைய‌த்தில் இருந்து வரையப்படும் வட்டம் ஆகும்.[எப்பூடீ சகோ என்றால் சிந்திக்க மாட்டீர்களா??!!]

இது கோளத்தை(பூமியை) இரண்டாக பிரிக்கும்.

http://en.wikipedia.org/wiki/Great_circle

இதில் அட்சக் கோடு(latitude) என்பது பூமியின் மீது கிடைமட்டமாக கிழக்கில் இருந்து மேற்கு செல்லும் கற்பனைக் கோடுகள் ஆகும்.நிலநடுக்கோடு என்பது 0 டிகிரி, வடதுருவம் 90 டிகிரி ,தென் துருவம் ‍டிகிரி ஆகும்.

இது φ என்னும் குறியீட்டால் அறியப் படுகிறது . -90=<φ=<90 degrees.


இதில்  தீர்க்க கோடு [Longitude] என்பது பூமியின் மீது மேல் கீழாக‌ வட துருவத்தில் இருந்து தென் துருவம் செல்லும் கற்பனைக் கோடுகள் ஆகும்.

இது λ என்னும் குறியீட்டால் அறியப்படுகிறது . -180=<λ=<180 degrees.

லண்டன் ராயல் ஆய்வகம் வழி செல்லும் கிரீன்விச் தீர்க்க கோடு 0 டிகிரி ஆகும்.நேரமும் இதன் அடிப்படையில் கண்க்கிடப் படுகிறது. கிழக்கு, வடக்கு நேர் எண் மதிப்பும்[positive], மேற்கு, தெற்கு எதிர் எண் [negative]மதிப்பும் கொடுக்கிறோம்.


இப்போது பூமியின் இரு இடங்களின் அட்ச ,தீர்க்க கோடு மதிப்பு அறிந்தால் அவைகளுக்கு இடையே உள்ள தூரம் காணும் சூத்திரம் அறிவோம்.

 \phi_s,\lambda_s;\ \phi_f,\lambda_f\;\! என்பவை தொடங்கும்(Starting), சேரும்(Final) இடங்களின் அட்ச,தீர்க்க கோடுகள் ஆகட்டும்.
;இடைப் பட்ட கோண அளவு  \Delta\widehat{\sigma}\;\!, காணும் சூத்திரம்
{\color{white}\Big|}\Delta\widehat{\sigma}=\arccos\big(\sin\phi_s\sin\phi_f+\cos\phi_s\cos\phi_f\cos\Delta\lambda\big).\;\!
\Delta\widehat{\sigma}\;\! unit is Radian[ PI Radians=180 degrees]


Δλ=λs- λf
கோண அளவு ரேடியன்களின் உள்ள போது ஆரத்தை பெருக்கினால் தூரம் கிட்டும்.


d = r \, \Delta\widehat{\sigma}.\,\!


r = 6,371,009 metres

Worked example

For an example of the formula in practice, take the latitude and longitude of two airports:
  • Nashville International Airport (BNA) in Nashville, TN, USA: N 36°7.2', W 86°40.2'
  • Los Angeles International Airport (LAX) in Los Angeles, CA, USA: N 33°56.4', W 118°24.0'
First convert the co-ordinates to decimal degrees
  • BNA: \;\phi_s=36.12^\circ \quad\lambda_s=-86.67^\circ\;\!
  • LAX: \;\phi_f=33.94^\circ \quad\lambda_f=-118.40^\circ\;\!
Plug these values into the spherical law of cosines: \cos\Delta\widehat{\sigma}=\sin\phi_s\sin\phi_f+\cos\phi_s\cos\phi_f\cos\Delta\lambda\,\!
\Delta\widehat{\sigma} comes out to be 25.958 degrees, or 0.45306 radians, and the great-circle distance is the assumed radius times that angle:


r\,\Delta\widehat{\sigma}\approx 6372.8 \times 0.45306 \approx 2887.26\mbox{ km}.\;\!

இப்பதிவில் சொல்லியது மிகவும் எளிதான தோராய[approximate] கணக்கீட்டுமுறை. பூமியை ஒரு கோளமாக[Sphere] அனுமானித்தே இந்த சூத்திரம் வடிவமைக்கப் பட்டது.

இந்த சூத்திரம் எப்படி வந்தது என ஒருவராவது விரும்பினால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்!! 

நன்றி!!!


Wednesday, February 13, 2013

நரேந்திர‌ மோடிக்கு ஆதரவு பெருகுகிறதா?

வணக்கம் நண்பர்களே,

நாம் மதம் என்னும் விடயத்தின் அரசியல் தாக்கம், ஆளுமை குறித்து கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் இந்துத்வம்,இஸ்லாமிய மதவாதிகள் அவர்கள் சமூகங்களின் பெறும் மதிப்பு குறித்தும் அவ்வப்போது அலசுகிறோம்.

இந்துத்வம் என்பது பாஜக'வின் வரையறையின் படி இந்தியாவின் இந்து கலாச்சாரம் அடிப்படையில் ஒரு நாட்டைக் கட்டியமைப்பதே ஆகும். 

http://en.wikipedia.org/wiki/Hindutva

 According to a 1995 Supreme Court of India judgement the word Hindutva could be used to mean "the way of life of the Indian people and the Indian culture or ethos"

இந்துத்வா குறித்த பலரின் பார்வை வித்தியாசப்படும் அதை பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!


திரு நரேந்திர மோடி மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற போதும் அந்த வெற்றி குறித்து விவாதித்தோம். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான் மத வன்முறைகளுள் ஒன்று 2002 ல் குஜராத்தில் நடந்து அதில் 1000+ மக்கள் இறந்ததும் ,அதன் காரணமாக மோடி சிறுபானமை எதிர்ப்பாளர் என விமர்சிக்கப்படுவதும் நடைமுறை உண்மையே.

சென்ற ஞாயிறு(11/2/2013) குஜராத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் 74 மொத்த இடங்களில் 47 நகர்மன்றங்களில் வெற்றி பெற்றது.

Gujarat Municipality Election Results 2013 have been declared. 

- BJP swept the polls winning 47 out of 75 Municipalities including Salaya Nagarpallika, Danduka, Sanand, Rajula, Lathi, Kodinar, Mansa,

- In Muslim dominated Salaya, BJP had announced 24 Muslim candidates. All the 24 Muslim candidates have won the election 

- Congress has won 9 Nagarpalika viz Chalala, Dhanera, Choorvad, Lunavada, Dhrol, Radhanpur, Ranavav, 

- Independents have won 6 Nagarpalika viz., Mahudha, Chaklasi, Kheda, Dakor, Kutiana, Anklav

- 12 Municipalities have hung assembly with no one getting clear majority. Viz., Vijapur, Karjan, Tharad, Bavala, Visavdar, Mangrol


இதில் சலாயா,ஜாம் நக‌ர் நகரின் வசிக்கும் 33,000 மக்களில் 90% முஸ்லிம்கள். இந்த நகரில் அனைத்து 27 பஞ்சாயத்துகளையும் பாஜக வென்றது வியப்பை ஏற்படுத்துகிறது.

Religions in Salaya
ReligionPercent
Hindus
  
14%
Muslims
  
85%
Jains
  
0.8%
Others†
  
0.2%
Distribution of religions
Includes Sikhs (0.2%), Buddhists (<0.2%).


பாஜக' வின் சார்பில் 24 முஸ்லிம்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னொரு நல்ல விடயம். மோடிக்கு உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து உள்ளது,அதாவது முன்பு விமர்சித்த சில மேலை நாடுகள் இப்போது நட்புக் கரம் நீட்டுகின்றன.

இவை ஏன் என்பதே நம் கேள்வி!!!

1)90% முஸ்லிம்கள் நகரில் பாஜக' வெற்றி அதற்கு கிடைத்த சிறுபானமையினரின் அங்கீகாரமா? இல்லையா?2) ஏன் திடீரென வெளிநாடுகள் மோடியை நோக்கி நட்புக் கரம் நீட்டுகின்றன?
நாம் இப்பதிவில் கேள்வி மட்டுமே கேட்கிறோம்.

அனைவரின் பதில்களை மட்டுமே வேண்டுகிறேன்!!
நன்றி!!!