Monday, February 4, 2013

நண்பர் நம்பள்கியின் சமூக கேள்விகளுக்கு மதவாதிகளின் பதில்கள்!!!
நண்பர் நம்பள்கி நமக்கு பிடித்த பதிவர்களுள் ஒருவர். நடிகவேள் எம்.ஆர் இராதா பாணியில் சமூகம் சார்ந்த விடயங்களை கிண்டலாக தீர்வு சொல்வது நமக்கு மிகவும் பிடிக்கும்.

பாவம் அவருக்கு மதவாதிகளைப் பற்றி தெரியாமல் நேர்மையாக கேள்வி கேட்கிறார்.இறைவன் மட்டும் அல்ல,அவரின் தொண்டர்களும் [எதையும், எப்போதும் தெளிவாக] பேச மாட்டார்கள் என அறியாத அவரை நினைத்து நகைக்கிறேன்!!

அவருக்கு இந்த வேலை வேண்டாம் அதற்கு நான் இருக்கிறேன் என சொன்னாலும், அவர் முதன் முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகக் கூடாது என இந்து,இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வழியில் பதில் அளிக்கிறேன்.

பதிவினைப் படிக்கும் நண்பர்கள் நீங்களும் பதில் அளிக்கலாம் பின்னூட்டத்தில்!!

ஒருவேளைபதில் அளித்தால் கேள்வி எண் போட்டு அ) எனில் இஸ்லாம் ஆ)எனில் இந்து என கொள்ளவும்.
 இனி பதிவுக்கு செல்வோம்!!சகோ நம்பள்கி,

இப்படி தெளிவான நேர்மையான கேள்விகளுக்கு மதவாதிகளிடம் இருந்தோ, அவர்களுக்கு ஒத்து ஊதும் ,திராவிட,இடதுசாரி ஆட்களிடம் இருந்தோ பதில் வராது.

நாம் இஸ்லாம்,இந்து மதவாதிகள் சொல்லும் பதிலை சொல்கிறோம்!! சரி பார்த்து மதிப்பெண் போடவும்!.

இதில் அ) இஸ்லாமிய பதில்கள் ஆ) இந்துத்வ பதில்கள்

1)அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய[இந்து] சமூகம் முயற்சி எடுத்ததா? 

அ)ரிசானாவின் குடும்பத்தினர், இலங்கை அரசு மூலம் முயற்சி எடுத்தனர். மதவாதிகள் எவரும் சவுதி தூதரகத்தை முற்றுகை இட்டோ, சவுதியிலோ எந்த போராட்டமும் நடத்தவில்லை, நடத்தவும் முடியாது,

ஆ) இந்துப் பெண்ணாக இருந்தால்  ,முஸ்லிம் நாட்டில் கொல்லப் பார்க்கிறர்கள் என கடை விரித்து இருப்பார்கள். ஆனால் இங்கே குடும்ப கவுரவம்,சாதி ,கற்பழிப்பில் சாதி பார்த்து போராடுவார்கள் 

2)மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்[இந்து] பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா?

அ).சவுதியில் பலர் நல்லவர் என்றாலும் சில பெயர்தாங்கிகள் மதத்திற்கு களங்கம் விளைவிக்க இப்படி செய்கிறார்கள்.அங்கு சென்றால் சில இடங்களில் பாலியல் வன்முறை நடக்கும் என்பதால் முஸ்லிம் பெண்களை அங்கே அனுப்பாதீர்!!!

ஆ)இதற்குதான் பெண்ணை வீட்டை விட்டே அனுப்பக் கூடாது!!.விதிப்படியே எல்லாம் நடக்கும்!

 3).பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய[இந்து] அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? 

அ)பெண்கள் தனியாக செல்லக்கூடாது என மார்க்கம் கூறுகிறது. இது அறிந்தும் செல்பவர்கள்தான் ஆபத்தில் சிக்குவது கண்கூடு. மார்க்கத்தை மீறும் பெண்களை அவர்கள் குடும்பமே கண்டிக்க வேண்டும்!!!


ஆ) பணம் சம்பாதிக்க சென்று விட்டு,குத்துதே குடையுதே என்றால் எப்படி? சம்பாதித்து யாருக்கு கொடுக்கிறாய்?.வீட்டில் இருந்தால் ஏன் இப்படி?

4)பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்[இந்து] பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன?

அ) ஒரு சில பெண்கள் பாதிக்கப்படுவது உண்மை என்றாலும் இதை வைத்து மார்க்கத்தை தவறாக காட்ட முயலும் உங்களின் நடுநிலை முகமூடி காணாமல் போய் இந்துத்வ முகம் தெரிகிறது. மார்க்கம் பெண் த‌னியாக செல்லக் கூடாது எனவே கூறுகிறது. எப்படி சவுதி தனியாக செல்லலாம்??!!


ஆ) இதுவே இந்து நாடாக இருந்தால் நடக்க விடுவோமா!! ஊடு கட்டி விடுவோம்!!நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை ,பாதுகாக்கும்,போற்றும் சட்டங்கள் கொண்டு வருவோம்!!உடனே மீட்போம். போலி மத சார்பின்மை ஆட்சிகளின், சிறுபான்மை ஆதரவால்தான் இப்படி நிகழ்கிறது.

5)இஸ்லாமிய[இந்து] சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?

அ) உங்களுக்கு மார்க்கமோ, அது சொன்ன அரபி மொழியோ தெரியாது!!.பிறகு எப்படி கருத்து கூற முடியும்!!. மார்க்கத்தில் அனைத்துமே 100% சரியே. சிலர் தவறாக செய்யும் செயலுக்கு மார்க்கத்தை எப்படி குறை சொல்ல முடியும்? முஸ்லிம்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்,ஆனால் மார்க்கத்தை விமர்சித்தால் நடப்பதே வேறு !! 

ஆ) வேதங்களில் சாதி,உயர்வு தாழ்வு இல்லை.சனாதன தர்மம் என்றால் சர்வ தர்ம சம‌பாவ என அனைவருக்கும் நீதி என்பதே சரியான புரிதல். சாதி இருக்கட்டும், உயர்வு தாழ்வு மட்டும் போகட்டும் என முயற்சி செய்வது தெரியவில்லையா!!

ஏன் எப்போதும் இந்து மதத்தை மட்டும் விமர்சித்து, சிறுபான்மை மத கொடுமைகளைக் கேட்பது இல்லை? அவனைக் கேட்காத நீ என்னையும் கேட்காதே!! 

ந‌ன்றி!!

41 comments:

 1. “Burkas for babies”: Saudi cleric’s new fatwa causes controversy
  Sunday, 03 February 2013
  http://english.alarabiya.net/articles/2013/02/03/264031.html

  By MOHAMMAD ALYOUSEI
  AL ARABIYA

  A Saudi cleric has called for all female babies to be fully covered by wearing the face veil, commonly known as the burka, citing reports of little girls being sexually molested.

  In a TV interview on the Islamic al-Majd TV, which seems to date back to mid-last year, Sheikh Abdullah Daoud, stressed that wearing the veil will protect baby girls. The Sheikh tried to back his assertion with claims of sexual molestation against babies in the kingdom, quoting unnamed medical and security sources.

  Recently picked up on social media, Sheikh Dauod’s statement prompted wide condemnation from his fellow Saudis on Twitter. Some tweeps called for the Sheikh to be held accountable because his ruling denigrates Islam and breaches individual privacy.

  Sheikh Mohammad al-Jzlana, former judge at the Saudi Board of Grievances, told Al Arabiya that Dauod’s ruling was denigrating to Islam and Shariah and made Islam look bad.

  Jzlana urged people to ignore unregulated fatwas and explained that there are special regulations set by the Saudi authorities to administer religious edicts and appoint those who are entitled to issue them.

  He said that he feels sad whenever he sees a family walking around with a veiled baby, describing that as injustice to children.

  ReplyDelete
 2. Turn court expert சார்வாகன் வாழ்க!

  ஹி...ஹி நீர் தான் சிறந்த வக்கீல், யாருக்கு வேண்டுமானாலும் ஆஜர் ஆகலம் :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் வவ்வால்,

   இதில் அறிய வேண்டியது!!!
   மதவாதிக்கு தன் சட்டங்கள்,வாதங்களில் உள்ள ஓட்டைகள்,குளறுபடிகள் நன்கு தெரியும். வடிவேலு மாதிரி என்ன கையப் பிடித்து இழுத்தியா? என திருப்பி திருப்பி கேட்டால் கேட்பவன் பொறுமை இழந்து தவறாக வாதிடுவான் இல்லை நிறுத்தி விடுவான்!!

   நீ மட்டும் யோக்கியமா? எனவும் கேட்கலாம்!!

   ஆகவே மதவாதிகளின் குரு வடிவேலுதான்!!!

   நன்றி!!!

   Delete
 3. ரிசானாவின் நீதிக்காக குரல் கொடுத்தவர்கள் இந்துக்கள்,கிறிஸ்தவர்கள்,பௌத்தர்கள்,இடதுசாரிகள், நாத்திகர்கள்,மனிதத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் குறைந்த அளவிலான இஸ்லாமியர்களுமாவார்.
  இலங்கையில் உள்ள இஸ்லாமிய மதவாதிகளிடம் ஒரு நேர்மை இருந்தது ரிசானாவுக்கு அநீதி தான் நடந்துள்ளது.ரிசானா குழந்தையை கொலை செய்திருக்க மாட்டார் ஆனால் எமக்கு இஸ்லாமிய சட்டத்தையோ சவூதி அரேபியாவையோ குறை சொல்ல அனுமதியில்லை என்றார்கள் ஆனால் தமிழக இஸ்லாமிய மதவாதிகள் மதவெறி பிடித்து அலைகிறார்கள் ரிசானாவை கொலைகாரி என்றார்கள் தனது நாலு மாத குழந்தைக்கு பால் கொடுக்க ஆர்வம் இல்லாத அரபு தாய்க்காக வருந்தினார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரி,

   தவூகீத்(பி.ஜே) வின் ரிசானா த்லையை வெட்டியது ஏன்? விளக்க பொதுக் கூட்டத்தில் அப்பெண் என்ன யோக்கியமா? என கேவலமாக பேசியது, இவர்கள் மனிதர்களா என்வே யோசிக்க வைக்கிறது!!

   இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் காஃபிர் அரசியல்வாதிகள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்!!!

   நன்றி!!

   Delete
 4. சிறு வயதில் மயிலாப்பூர் P.S. High School மைதானத்தில் ஒரு 128 கிரிக்கெட் டீம் விளையாடும்; அதில் எங்க டீமும் கட்டாயம் ஒன்னு. அதே மாதிரி, உலகமும் ஒரு பரந்த மைதானம்; வாங்க, இங்கு எல்லோரும் அடிச்சு ஆடலாம்..!

  ReplyDelete
  Replies
  1. சகோ நம்பள்கி,
   நமக்கு ஆட்டம் மிகவும் பிடிக்கும்!!

   என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே
   ன் அதில் தவறேனே

   என்னும் அலிபாபாவும் 40 திருடர்களும் படப் பாடலை உங்களுக்கு சமர்ப்பிகிறேன்.

   http://www.youtube.com/watch?v=ghcaG6cgAjE

   Enjoy!!

   Thank you

   Delete
 5. முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்களே !! எல்லாத்துக்குமே ஒரே பதில்தான். இவுளுக ஒழுக்கமா இருந்தா ஏன் அப்படியெல்லாம் நடக்கப் போகுது. அதான் எல்லாத்துக்கும் பதிலே.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தமிழானவன், இவுளுக பர்தா போட்டு கொண்டு தான் கண்டிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்ய வேண்டும். அல்லது இஸ்லாமிய ஆண்களுக்கு கெட்ட எண்ணம் வந்துவிடும். அப்படி பர்தா போட்டு வேலை செய்யும் போதும் பாலியல் கொடுமைகள் செய்கிறார்களே!

   Delete
  2. @ bro tamil
   தவுகீத்(பி.ஜே)கூட்டத்தில் பேசி விட்டார்களே!! ஹி ஹி

   Delete
 6. //முஸ்லிம்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்// பின்லேடன், முல்லா ஓமர் போன்ற புரட்சியாளர்களை விமர்சித்தாலும் கண்டு கொள்ளமாட்டீர்களா?

  ReplyDelete
 7. சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதா நம்ம மார்க்க மேதைகளிடம் தான் கற்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சகோ இராபின் உங்களுக்கு அடைப்புக்குறி தந்திரம் புரிய மாட்டேன் என்கிறது!!

   பிரச்சினையில் இலாபம் மத்வாதிகளூக்கு, பிரச்சினை பாமர முஸ்லிம்களுக்கு.

   (பாமர) முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும்.... என படிக்கோணும்!!

   காஃபிர்களுக்கு விள்க்கம் சொல்லியே ஓய்ந்து விட்டேன்!!


   நன்றி!!

   Delete
 8. சகோ!நீங்கதான் காணொளி வித்வானாச்சே:) அதனால் தேடிப்பாருங்கள். சவுதி தலைவெட்டியின் பேட்டியை ஒரு தொலைக்காட்சி கேள்வி கேட்டு வெளியிட்டிருந்தது.

  Cold blooded என்பதற்கான அர்த்தம் எந்த விதமான சலனமும் இல்லாமல் பேசியதில் உணர முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட,

   அந்த தலை வெட்டி தடித் தாண்டவ்ராயன் பேட்டி பார்க்காமல் இருப்பேனா!!!

   அதென்னமோ மத்வாதிகள் பெரும்பாலோனோர் நல்லா உடல் பருத்து கொழுத்து இருக்கிறார்கள்!!.

   சும்மா சோறு கிடைத்தால் அப்படித்தான்!!

   நாம் அறியும் விடயங்களில் அதிகபட்சம் யு/ஏ சான்றிதழ் பெறுப‌வை மட்டுமே தணிக்கை செய்து பதிவிடுகிறோம்!!

   நன்றி!!!

   Delete
 9. //அந்த தலை வெட்டி தடித் தாண்டவ்ராயன் பேட்டி பார்க்காமல் இருப்பேனா!!!//

  pl give the link ...

  ReplyDelete
 10. வாங்க தருமி அய்யா,

  பாருங்க இணைப்பை, என்னமோ சமையல்காரன் பேட்டி போல் மிக இயல்பாக விளக்குவதை!!
  http://www.youtube.com/watch?v=UxmBp23W6nc

  நாம் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறோம். தமிழ்மண சவுதி புகழ்பாடிகளை அந்நாடே ஏற்பாடு செய்கிறது என!!. யார் கேட்கிறார்? அதிலும் அந்த குழுக்களின் சொல்லை வேத வாக்காக எடுக்கும் தமிழக அரசியல்வாதிகளே நமக்கு பிரச்சினை!!

  என்ன கொடுமை இங்கு நடக்குமோ!!

  மத சார்பின்மை என்றால் மதங்களை அரசியலில் இருந்து ஒதுக்குதல் எனப் பொருள்.ஆனால் மத்வாதிகளூக்கு பணிந்து போதல் என செய்தால் என்ன ஆகுமோ?

  நன்றி!!

  ReplyDelete
 11. https://plus.google.com/u/0/106341662855918746617/posts

  ஜனவரி 13-இல் டெல்லியில் கூலி தொழில் செய்யும் கணவனை பார்ப்பதற்காக பயணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது 10 வயது மகன் மற்றும் இரு உறவினர்களுடன் நடந்தே டெல்லிக்கு செல்ல முடிவெடுத்த ஏழைப் பெண்ணின் பயணத்தின் போது சிலரின் வன்புணர்ச்சியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக மரத்தில் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்.

  இச்செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.

  பெண்களுக்கு பாலியல் பிரச்சனைக்கான எதிர்ப்புகள் என்பது வர்க்கம் சார்ந்த சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும் சமூகத்தில் நாம் இருக்கிறோமென்றால் பெண் உரிமையாவது; புண்டை உரிமையாவது. இந்த வக்கற்ற அரசாங்க அதிகார போகத்தில் இனியும் ஏழைப் புண்டைகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை இந்திய மூவண்ண தேசிய துணியில் அடக்கம் செய்து தேசியத்தை அவமானப்படுத்து..

  ReplyDelete
  Replies
  1. தமிழச்சி ,உங்களது கோபத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்த கொச்சையான சொற்களை பயன்படுத்தியுள்ளீர்கள்.இந்த கொச்சையான சொற்கள் குற்றத்தின் கொடுமையை குறைத்துவிடும் .லூட்டி அடிக்கும் கல்லூரி மாணவி இரவில தனது நண்பருடன் பாசத்துடன் ஆபாசத்தையும் கலந்ததால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி கொல்லப்பட்டது மட்டும் தான் இந்தியாவில் நடந்த ஒரே நிகழ்வு போல கொதித்தவர்கள் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
   இலங்கை பெண்ணை சவூதி அரசு கொலைகுற்றம் சுமத்தி கொன்றதற்காக கண்ணீரை வெள்ளமென பொழிந்தவர்களை காணோமே !

   Delete
  2. சகோ இப்பூ வாங்க!

   //https://plus.google.com/u/0/106341662855918746617/posts

   ஜனவரி 13-இல் டெல்லியில் கூலி தொழில் செய்யும் கணவனை பார்ப்பதற்காக பயணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது 10 வயது மகன் மற்றும் இரு உறவினர்களுடன் நடந்தே டெல்லிக்கு செல்ல முடிவெடுத்த ஏழைப் பெண்ணின் பயணத்தின் போது சிலரின் வன்புணர்ச்சியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக மரத்தில் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்.

   இச்செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.

   பெண்களுக்கு பாலியல் பிரச்சனைக்கான எதிர்ப்புகள் என்பது வர்க்கம் சார்ந்த சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும் சமூகத்தில் நாம் இருக்கிறோமென்றால் பெண் உரிமையாவது; பு___ உரிமையாவது. இந்த வக்கற்ற அரசாங்க அதிகார போகத்தில் இனியும் ஏழைப் பு___கள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை இந்திய மூவண்ண தேசிய துணியில் அடக்கம் செய்து தேசியத்தை அவமானப்படுத்து..//

   ஸலாம்.நீங்கள் பிரச்சினையை புரிய வேண்டும்.

   சவுதி மட்டும் அல்ல இந்தியா உள்ளிட்டு எந்த நாடுகளிலும் எந்தவிதமான குற்றமும் நடக்கும்.

   குற்றவாளி பிடிபட்டு கொடுக்கப்படும் தண்டனை, அந்நாட்டு சட்டப்படி மட்டுமே!!

   பாருங்கள் டெல்லி சம்பவத்தில் ஒரு குற்றவாளி 18 வ்யதுக்கு குறைவானவன் என்பதால் வெறும் 3 வருடத்தில் வெளி வந்து விடுவான் என்பதே இப்போதைய இந்திய குற்றவியல் சட்டம்.


   ஆனால் சவுதி ஷரியா சட்டத்தின் படி பெற்றோர் குழந்தையை கொன்றால் தண்டனை இல்லை!!.இரத்தப் பணம் கொடுத்து வெளி வந்து விடலாம்!!

   பிரச்சினை புரிகிறதா!!!

   *
   இந்திய சட்டதை மாற்றூம் வழிகள் உண்டு. ஷ்ரியாவை மாற்ற முடியுமா?
   காலத்துக்கு ஏற்றபடி சீரமைக்க முடியுமா? என்பதே கேள்விகள்!!

   ஆண் பெண் பாலியல் உறுப்பு பெயர்களை ஏன் திட்ட பயன்படுத்துகிறோம் என மார்க்க ரீதியில் விள்க்க முடியுமா?

   நன்றி!!

   Delete
 12. http://shariaunveiled.wordpress.com/2012/02/25/islamic-law-allows-parents-to-murder-their-children/

  Iran:

  Article 220 of the Iranian Criminal Code states: If a father “or his male ancestors kill their children, they will not be prosecuted for murder.” Likewise, article 1179 of the Civil Code states, “Parents have the right to punish their children within the limits prescribed by law.”[23]

  Pakistan:

  Under Pakistani law, families can escape punishment by following a few simple steps: a brother ‘confesses’ to having killed his sister. His father ‘forgives’ him, or accepts blood money.

  Palestinian Authority Area:

  In Palestinian territories, a murder is regarded as less serious if it is an honor killing, and thus honor killers receive from six to twelve months’ jail. This stems from Jordanian legislation from 1960.[25]

  Jordan:

  Article 340 of the Jordanian Penal Code affirms that “he who discovers his wife or one of his female relatives committing adultery with another, and he kills, wounds or injures one or both of them, is exempt from any penalty… he who discovers his wife, or one of his female ascendants or descendants or sisters with another in an unlawful bed and he kills, wounds or injures one or both of them, benefits from a reduction of penalty.” In addition to this, Article 98 of the Penal Code allows a reduced sentence if a perpetrator kills in a “fit of fury”.[25]

  Syria:

  Article 548 of the Syrian Legal Code states: “1: He who catches his wife, or one of his ascendants, descendants or sister committing adultery (flagrante delicto) or illegitimate sex acts with another and he kills or injures one of both of them benefits from an exemption of penalty. 2: He who catches his wife, or one of his ascendants, descendants or sister in a suspicious state (attitude equivoce) with another and he kills or injures one of both of them benefits from an exemption of penalty.”[25]
  Yemen:

  In Yemen, the law makes allowances for honor killings. Article 232 of the Yemeni Penal Code rules that: “if a man kills his wife or her alleged lover in the act of committing adultery or attacking them causing disability, he may be fined or sentenced to imprisonment for a term not exceeding one year.”[25]

  Morocco:

  Morocco too sanctions honor killings in its penal code. Article 418 states: “Murder, injury and beating are excusable if they are committed by a husband on his wife as well as the accomplice at the moment in which he surprises them in the act of adultery.[25]

  Egypt:

  “Article 17 of Egypt’s Penal Code allows judges to decrease sentences in murder cases if they decide that the murder’s condition merits it. As a result, a sentence can be as little as six months’ duration. In Article 277 of the Penal Code, a man can commit adultery only within his marital home. A woman is adulterous within or outside of the home, and need not be caught “in the act” for a husband to use the defense of inflamed emotions.[25]

  ReplyDelete
 13. http://revuse.wetpaint.com/page/Reliance+of+the+Traveller%3A+On+Killing+Offspring

  Reliance of the Traveller: On Killing Offspring
  By Kamala
  July 3, 2010

  What does Islamic law dictate as punishment for a parent who kills his or her child?

  Consider Reliance of the Traveller: A Classic Manual of Islamic Sacred Law:

  It is certified by Al-Azhar University as a translation that "corresponds to the Arabic original and conforms to the practice and faith of the orthodox Sunni Community...":
  ...
  In Book O, titled "Justice," in section 1, "Who is Subject to Retaliation for Injurious Crimes," section o1.1 reads, "Retaliation is obligatory ... against anyone who kills a human being purely intentionally and without right...":  However, o1.2 clarifies (above) that "The following are not subject to retaliation" and then lists — after the lovely, egalitarian "Muslim for killing a non-Muslim" and "Jewish or Christian subject ... for killing an apostate" — "(4) a father or mother (or their fathers or mothers) for killing their offspring, or offspring's offspring":

  ReplyDelete

 14. இந்திய ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில் சவூதி அரசுடன் ,குற்றவிக்தம் மிக குறைவாக இருக்கிறது
  நான் கேட்பதுநமது இந்திய ஏழை பெண்ணும் ,அவளை பாதுகாக்கக தவறிய காவல்துறையும் சட்டங்களும் அதை மூடி மறைக்கும் அரசும் இவற்றை விட நமக்கு இலங்கை பெண்ணும் சவூதிஅரசையும் விமர்சிப்பதுதான் முக்கியமா?

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் சட்டங்களை மாற்ற முடியும்!!. ஷரியாவில் முடியுமா?

   இந்தியாவில் சட்டத்தை ஏமாற்றுகிறார். சௌதியில் சட்டமே ஏமாற்றுகிறது!!

   ஆகவே.................

   Delete
 15. //ஆனால் சவுதி ஷரியா சட்டத்தின் படி பெற்றோர் குழந்தையை கொன்றால் தண்டனை இல்லை!!.இரத்தப் பணம் கொடுத்து வெளி வந்து விடலாம்!!////

  ஆனாலும் எப்போதோ எங்கேயோ ஒன்றாக நிகழ்ந்ததாக இருக்கலாம் .அந்த தாய் மன்னிக்காவிட்டால் தகப்பன் கொல்லப்படுவான் .அப்படியும் நடந்திருக்கும் .தண்டிக்கபப்ட்டவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள் பட்டியல் இருந்தால் அதை ஒப்பு நோக்கி விளக்கினால் அது அறிவுடமையாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் மார்க்கபந்து ibbu!
   //அந்த தாய் மன்னிக்காவிட்டால் தகப்பன் கொல்லப்படுவான் .//

   தாய்க்கு தலாக் கொடுத்து விட்டான் கொலைகார சவுதி!!

   நீங்கள் சொன்ன கோடூரனுக்கு தண்டனை அளிக்க விடாமல் செய்வது இதுதான்!!

   It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, “No father should be killed (executed) for killing his son.” (At-Tirmidhi)

   சஹீஹான ஹதித் எனவே ஏற்கலாம். ஏன் எனில் சவுதி ஷரியாவில் இது சேர்க்கப்பட்டு அதன் படியே இந்த வெறியன் தப்பினான்!!

   இப்ப சொல்லுங்க!! குற்றவாளி தப்பிக்க எது காரணம்?

   http://answers.yahoo.com/question/index?qid=20110510105509AAoQG8Q

   Sharia Law and it's rule that a mother or father gets no punishment for killing children?

   So, in the Sharia Law Manual, Umdat 'al Salik, under section o1.2, it says that a person is not to be punished for killing thir children or their children's children. In the case of murder, the punishment is either a) retaliation wherein a family member can kill the murderer, or b) they can accept blood money (in certain situations).

   O1.2

   The following are not subject to retaliation:

   -1- a child or insane person, under any circumstances (O: whether Muslim or non-Muslim.

   -2- a Muslim for killing a non-Muslim;

   -3- a Jewish or Christian subject of the Islamic state for killing an apostate from Islam (O: because a subject of the state is under its protection, while killing an apostate from Islam is without consequences);

   -4- a father or mother (or their fathers or mothers) for killing their offspring, or offspring's offspring;

   -5- nor is retaliation permissible to a descendant for (A: his ancestor's) killing someone whose death would otherwise entitle the descendant to retaliate, such as when his father kills his mother. [back to top]


   Blood money would not be applicable either in the case of a parent killing their child, correct? So in essence, per Sharia, there is no punishment for a parent killing their child except possibly the need to offer expiation to Allah

   அல் அஜார் பல்கலைகழக் சட்ட புத்தக்ம் இங்கெ பார்க்கலாம்!!.

   http://revuse.wetpaint.com/page/Reliance+of+the+Traveller%3A+On+Killing+Offspring

   Reliance of the Traveller: On Killing Offspring

   Thank you!

   Delete
  2. ////சஹீஹான ஹதித் எனவே ஏற்கலாம். ஏன் எனில் சவுதி ஷரியாவில் இது சேர்க்கப்பட்டு அதன் படியே இந்த வெறியன் தப்பினான்!

   இப்ப சொல்லுங்க!! குற்றவாளி தப்பிக்க எது காரணம்?///


   வாழ்த்துக்கள் சார்வாகன்! சரியான கேள்வி இதற்கு சுவன பிரியன் என்ன பதில் சொல்ல போகிறார் என்று தான் தெரியவில்லை

   Delete
 16. @Ibrahim Sheikmohamed http://www.tamilcnn.org/archives/132543.html


  இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்

  ReplyDelete
 17. http://www.examiner.com/article/saudi-arabia-islamic-cleric-rapes-tortures-kills-daughter-pays-fine

  Fayhan al-Ghamdi, the victims father and a popular Islamic preacher who has made numerous television appearances promoting Islam, confessed to the heinous crime. Ghamdi told Saudi officials he used cables and a cane on his five-year-old daughter, leaving her with multiple injuries, including a crushed skull, broken ribs and left arm, extensive bruising and burns. In addition, one of Lama’s fingernails had been torn off. Hospital staff reports the child’s rectum had been torn open and the abuser had attempted to burn it closed.

  Reports indicate the father had doubted his five-year old daughter's virginity.

  Lama al-Ghamdi died last October. The amount her father was fined for the brutal rape, torture and murder, would have been doubled if Lama had been male. In Saudi Arabia, Islamic law is interpreted to be that a father cannot be executed for murdering his children, nor can husbands be executed for murdering their wives.


  Human rights activists point out that judicial leniency towards male abusers and murderers reflects the highly problematic nature of the male guardianship system in Saudi Arabia. Currently all women in Saudi Arabia are considered minors, and all are automatically assigned to the care and judgment of their most immediate male relative. This system of male guardianship gives the male relatives the power to sell girls legally into child marriages and to ban adult women from work, travel and obtaining medical operations.

  ReplyDelete
 18. கற்பழிப்பு ,விபச்சாரம் ஆகியவற்றுக்கு மன்னிப்பு இல்லை .இஸ்லாத்தை அசிங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்ட அவதூறுகள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   இப்படி கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்வதையே திருப்பி திருப்பி சொல்லி எந்த ப‌யனும் இல்லை. சவுதி நீதிமன்றத்தில் சொன்ன ஒரு தீர்ப்பின் அடிப்படையில் விமர்சிக்கிறோம்.

   நீதிபதி அங்கு உள்ள சட்ட அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்க முடியும்!!

   குரான் 2.178, 5.45 உயிரிக்கு உயிர் ,அல்லது இரத்தப் பணம் பெற்று மன்னிக்கலாம் எனக் கூறுகின்றன.

   ஆனால் திர்மிதி ஹதித் மகன்/மகள் கொன்றமைக்கு பெற்றோர் கொல்லப்படக் கூடாது என்க் கூறுகிறது.

   இது சவுதி நடைமுறைக் குற்றவியல் சார் வழக்கு மட்டுமே!!

   அக்குழந்தையின் எகிப்திய தாயை, அந்த கொலைகாரன் மண விலக்கு செய்து விட்டான். ஆகவே அப்பெண்ணுக்கு தண்டிக்கும் அதிகாரம் இருப்பது போல் தெரியவில்லை.

   உறவினர் மன்னிக்க, இரத்தப்பணம் 200,000 ரியால் கொடுத்து வெளி வந்து விட்டான்.

   நாம் சொல்வது கொல்லப்பட்டவரின் உறவுகள் மன்னிக்கும் வாய்ப்பு தவறாக பயன்படுத்தப் படும் என்பதையே சுட்டுகிறோம்.

   இப்போது அத்தாய், தன் கணவனை மன்னித்தால் ஒன்றுமே செய்ய முடியாது!!!

   நம் நாட்டு சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு. அது போல் மட்டுமே!!

   இந்த மன்னிக்க ,தண்டிக்க உறவுகளுக்கு வாய்ப்பு அளிப்பதை தவிர்த்து அரசே
   தண்டனையை முடிவு செய்தால் போதுமானது!! ஆனால் அது குரானுக்கு விரோதம் என நினைப்பதுதான் சிக்கல்!!

   மதம் மனதுக்கு மட்டுமே, சட்டத்திற்கு அல்ல!!

   ஆகவே இக்கால குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகள் என அறிந்து உள்ள‌ சட்ட சிக்கல்களை ஒத்துக் கொண்டு அதனை தீர்ப்பதே முறை!!

   நன்றி!!

   Delete
  2. கற்பழிப்பு விபச்சாரம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை .இந்தியாவை அசிங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தீய சக்திகளால் வெளியிடப்பட்ட அவதூறுகள் மட்டுமே உலாவருகின்றன.

   Delete
 19. http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_5915.html

  ReplyDelete
 20. http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_89.html

  ReplyDelete
  Replies
  1. சகோ ரியாஸ் வாங்க,
   சகோ இப்பூவுக்கு சொன்ன பதிலைப் படிக்கவும். குமாரி ஆயிஷா அவருக்கு பிடித்த மதம் மாறியதற்கு நாம் கருத்து சொல்ல விருமப்வில்லை.

   ஆயினும் அவர் ஷரியா சட்டம் மிகவும் பிடித்து மாறினேன் என சொல்லவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். ஒவ்வொரு மதத்திலும் சில நல்ல கோட்பாடுகளும் உண்டு. சிக்கல்களும் உண்டு.

   நல்ல விடயங்களை சூழல் பொறுத்து மதம் மாறுபவர்களும், மத சிக்கல்களினால் துன்புறுபவர்களும் உண்டு!!

   கொல்லப்பட்டவன் உறவினருக்கு இரத்தப் பணம் பெற்றுமன்னிக்கும்/ தண்டிக்கும் உரிமை கொடுப்பது பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படும் சாத்தியம் அதிகம்!!

   ஏற்கென்வே குரானில் உள்ள அடிமை முறை, ஜிஸ்யா வரி போன்றவை கைவிடப் படவில்லையா!! சவுதியில் உள்ள ஷரியாவில் சிக்கல்கள் உள்ளன‌
   அவ்வளவுதான்!!

   சிக்கல்களை தீர்க்கும்படி சிந்திக்க மாட்டீர்களா!!


   நன்றி!!

   Delete
 21. ஹி ஹி ஹி ஒரு ஆயிஷாவுக்காக இவ்வளவு குதுகலிக்கிறாங்களே எத்தைனை மூமீன்கள் காபிர்களாக மாறுகிறார்கள் என்பதை அறிந்தால் இவர்கள் இதயம் தாங்குமா?
  நித்தியின் வெள்ளை இன பக்தைகளையே நாம் கண்டு கொள்வதில்லை.

  ReplyDelete
 22. Muslims's respnse to this issue

  http://www.islamkalvi.com/portal/?p=8006

  தனது மகளை கொலை செய்த கொடூர தந்தையின் கதை
  எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

  - அபூ அப்துர்ரஹ்மான்
  சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஹான் அல் காம்தி என்பவர் தனது மகளை கொலை செய்த விவகாரம் ஊடகங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது. அவர் மதப் போதகர் என்பதும், தனது ஐந்து வயதேயான மகளை மிக மோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப் படாமல் விடுதளையாகியுள்ளமையே சர்ச்சைக்கான காரணம்.

  இவர் தனது குழந்தையான லமா அல் காமிதியை மிகவும் கொடூரமாக தண்டித்ததை ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் அக்குழந்தை மீது இவருக்கு ஏற்பட்ட சந்தேகமே. அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

  இவரின் கொடூர தண்டனைகளே குழந்தை லாமாவின் மரணத்துக்கு காரணம் என்பதை வைத்திய அறிக்கயை வைத்து நீதி மன்றம் உறுதி செய்தது.

  தந்தை பிள்ளையை கொலை செய்தால் அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப் படமாட்டாது என்பது இஸ்லாமிய சட்டம். அதற்காகவே குருதிப் பணத்தை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. எனினும் வேறு நியாயமான காரணங்கள் இருப்பின் அதற்காக மேல் முறையீட்டுக்கான உரிமை குழந்தையின் தாய்க்கு வழங்கப் பட்டுள்ளது.

  அவர் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தார் எனும் தகவல் மேற்கு ஊடகங்களின் மூலம் உண்மைக்கு மாற்றமான திரிபு படுத்தப்பட்ட செய்தி என்பதை அரபு ஊடகங்களின் செய்திகளைப் படிப்பவர்கள் மிக எளிதில் உணர்ந்து கொள்வர். அதே நேரத்தில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றறிந்த மார்க்க அறிஞர் இல்லை. முன்னாள் அனுபவமுள்ளவர் என்ற வகையில் சிகரட், குடி மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை அரபு மொழி ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன.

  குழந்தை மீதுள்ள எல்லை மீறிய அக்கறையே அவரை இக்கொடூர செயலில் தள்ளிவிட்டுள்ளது என்பது அவர் கூறும் காரணத்திலிருந்து புலப்படுகிறது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அவருக்கு குழந்தை மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் உருவான கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் காட்டுமிராண்டித் தனமாக குழந்தையை தாக்கியுள்ளார். இது தண்டிக்கப் படவேண்டிய குற்றச் செயலே. இதற்கு காரணம் அவர் வாழ்ந்து பழக்கப் பட்டுள்ள கடந்த கால வாழ்க்கையாகும். படிப்பினைக்காக அரபு ஊடகமொன்றில் வெளியான வாழ்க்கை அவரின் வரலாற்றை இங்கே தருகிறேன்,

  ReplyDelete
  Replies
  1. பைஹான் அல் காமிதியின் தந்தைக்கு இரண்டு குழந்தைகள் மூத்தவர் இவரும், இவரின் தம்பி முஹம்மத் அல் காமிதியுமாவர். இவருக்கு 1 வருடமும் மூன்று மாதங்களே ஆன நிலையில் இவரின் தாய் தந்தையருக்கு தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவரின் தந்தை செய்த குற்றமொன்றுக்காக சிறை வைக்கப்படுகிறார். இவரின் தாயோ மறுமணம் முடித்து வேறு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறார்.

   இப்படியாக அநாதரவாக்கப் பட்ட இவரை இவரின் பாட்டியும், சகோதரரை வேறொரு உறவினரும் பொறுப்பேற்கின்றனர்.

   சரியான பாசத்தை பெரும் வாய்ப்பு அவருக்கு அங்கே கிடைக்கவில்லை; காட்டுமிராண்டித் தனமாக நடாத்தப் படுகிறார். எதற்கெடுத்தாலும் அடி, உதை… இப்படியாக நரக வாழ்க்கையே அவர் வாழ்ந்துள்ளார்.

   ஒன்பது வயதை அடைந்த காமிதி தனது தாயிடம் சேர வேண்டும் என்று எண்ணி தாயை தேடி அலைந்துள்ளார். தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதும் அவரிடம் செல்லவே அங்கே தாயின் கணவர் இவரை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் அநாதை இல்லத்தில் தஞ்சமடைய வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார். அங்கே தனது 13 ம் வயது வரை வாழ்கின்றார்.

   அங்கிருந்து வெளியான பிறகு தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் மது, போதைக்கு அடிமையாகி இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கிறார் பைஹான் அல் காமிதி. இப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் எதிர் பாராமல் தனது சகோதரர் முஹம்மத் அல் காமிதியை சந்திக்கிறார். அவரை பொறுப்பெடுத்த உறவினர் நல்ல முறையில் பராமரித்துள்ளார்.

   தனது தம்பியை சந்தித்த களிப்பில் இருந்த இவருக்கு இன்னுமொரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கும் என்பதை இவர் உணர்ந்திருக்கவில்லை. அதுதான் அவரின் தம்பி முஹம்மத் வீதி விபத்தில் பலியாகி விட்டார் எனும் செய்தி.

   இப்படியாக காலம் கடத்தி வந்த இவர் ஒரு நாள் ரமலான் மாதத்தில் தனது காரில் இருக்கும் போது போதனைக்குரிய பாடல் ஒன்றை கேற்கிறார். இதனால் தாக்கமடைந்த இவர் தனது கடந்த கால சீரழிந்த வாழ்வை நினைத்து கைசேதப் பட்டு சீர் திருந்தி தனது வாழ்வை மாற்றிக் கொள்கிறார். எல்லா தீய பழக்கங்களையும் தூர எரிந்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை தனது 26 வது வயதில் ஆரம்பிக்கிறார் பைஹான் அல் காமிதி. தான் வாழ்ந்த முற்றிலும் இருள் சூழ்ந்த வாழ்க்கை யாரும் வாழக் கூடாது என்பதற்காக வாலிபர்களுக்கு அறிவுறுத்த ஆரம்பிக்கிறார். இதனால் பிரபல்யம் அடைந்த இவரை சில உள்நாட்டு தொலைக் காட்சி நிறுவனங்களும் இவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடாத்தியுள்ளன.

   இதுதான் இவரின் கதை! மற்றபடி ஊடகங்கள் சொல்லுவது போன்று பெரிய மதபோதகர் இல்லை.

   கரடு முரடான பாதையை கடந்து வந்த இவர் மீண்டும் அதே பாதையை நோக்கியே பயணித்துள்ளார். அது தான் உண்மை!

   பிள்ளைகளின் நலனில் அக்கறைக் கொள்ளாமல் விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதியினருக்கும், பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கண்டிக்கும், தண்டிக்கும் பெற்றோருக்கும் இது பெரும் பாடமாகும். குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உரிய பாசம் வழங்கப் படாத போது அவர்கள் பெரிய வயதை அடைந்து விட்ட போதும் அது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

   Delete
 23. சவூதி சரியா சட்டம் "தனக்கு வந்த ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி" என்பது போல்தான் இருக்கின்றது. என்ன கொடுமட சரவணா.....

  ReplyDelete
 24. //பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கண்டிக்கும், தண்டிக்கும் பெற்றோருக்கும் இது பெரும் பாடமாகும்//
  அப்போ இனி பர்தா அணியாத பெண் பிள்ளைகளை அடித்து துன்புறுத்த மாட்டார்களா? குரான் படிக்காத பிள்ளைகளை அடித்து துன்புறுத்த மாட்டார்களா?

  ReplyDelete
 25. சகோ, மிகவும் அருமையான பதில்கள் :)

  ReplyDelete