Friday, March 29, 2013

மூன்று வகை நம்பிக்கைகள்!!வணக்கம் நண்பர்களே,

நம்பிக்கை இல்லா மனிதர் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டு. அப்படி பிறரை பாதிக்காமல் நம்பிக்கைகள் தனிப்ட்ட வகையில் கொள்ள உரிமையும் உண்டு.

இப்பதிவில் நம்பிக்கைகள் அதன் வகைகள் குறித்து அறிவோம்.

நம்பிக்கை என்றால் என்ன?


Belief is the psychological state in which an individual holds a proposition or premise to be true.
ஒருவர் ஏற்கும் கொள்கை,கோட்பாடு உண்மை,சரி என நம்பும் மனநிலை.

சகோ இராபின் எப்போது  நாத்திகம்,பரிணாமம் என்பதும் நம்பிக்கையே என் நம்மோடு வாதிடுவார். பரிணாமம் என்பதற்கும் நாத்திகம் என்பதற்கும் தொடர்பு இல்லை, இரண்டும் வெவ்வேறு தளங்கள் என நாம் சொன்னாலும் அவரோ, இன்னும் சிலரோ ஏற்கப் போவது இல்லை!!.

இருந்தாலும் சகோ இராபினின் கூற்றும் உண்மைதான். ஆனால் நம்பிக்கைகளின் மூன்று வகை உண்டு என்பதால் ,அதில் ஆத்திகம்,நாத்திகம்,அறிவியல்[ப‌ரிணாமம்!] எந்த வகையில் வருகிறது என்பதை இப்பதிவில் அறிவோம்.

நம்பிக்கைகளின் மூன்று வகை,

1. சான்று சாரா நம்பிக்கை

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

முதலில் சான்று என்றால் ஏதோ ஒரு வகையில் அளவிட,கணக்கிட உணர முடியும் விடயம் எனக் கொள்ளலாம். இதனை பெரும்பான்மை ஏற்கும்,ஒருவரும் மறுக்க இயலா வண்ணம் இருக்கும். எ.கா பூமி ஏறத்தாழ கோள வடிவம் உடையது.விமானத்தில் பயணம் செய்த எவரும் ,இதனை எளிதில் உணர்ந்து இருப்போம்.ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதனை அறியாமல் இருந்தார்கள்.

1. சான்று சாரா நம்பிக்கை

இது பெரும்பாலும் ஆத்திகம் சார்ந்தது.மத புத்தகம் சொல்வதை ,சான்றுகள் ரீதியாக பார்க்க மறுத்தல்.மத புத்தகம்,சான்று முரண்படும் என்றாலும் இது வேறு,அது வேறு என சொல்லி,மத புத்கத்திற்கு சான்று தேவையில்லை, இது நம்பிக்கை சார் விடயம் என சொல்லி விடுவார்.

ஒரு நகைச்சுவை எ.கா வேண்டும் எனில் உலகம் தோன்றி 7000 ஆண்டு ஆனது என சொன்ன ஒரு படைப்புக் கொள்கையாளரிடம் ,பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? என் கேட்கப் பட்டது.

அதற்கு அவர் இவை எல்லாம் சாத்தான் என் போன்றவர்களை சோதிக்க காட்டும் மாய வலை என்று சொல்லி விட்டார் ஹி ஹி!!

இப்படி நம்புபவர்களை எதுவும் மாற்றுவது மிக கடினம். இவர்கள் அப்பாவிகள்தான், ஆனால் மதத்திற்காக எதையும் தியாகம் செய்யும் வண்ணம் இருப்பதால் தனக்குதானே அல்லது,பிறருக்கு தீமை விளையும் சாத்தியம் மிக அதிகம்.

பிரார்த்த‌னை மூலம் வியாதி குணப்படும் என நம்பி மோசம் போவது, பல மோசடி மதவாதிகளுக்கு பணம் அனுப்பி ஏமாறுவது , சூனியக்காரிகள் என் பலரை தீ வைத்து எரித்த கொடுமைகள்  ,பிற மதத்த‌வரின் உரிமைகளை மறுத்தல் என பல வகைகளில் துன்பம தரும் கொள்கை இது. 

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

உலகில் எப்போதும் விடை தெரியா கேள்விகள் அனைத்து துறைகளிலும் உண்டு. மனித சமூகத்தில் தொடர் விடை தேடுதலால் மட்டுமே முன்னேற்றம் வந்தது என்பதால் இயற்கையை அறியும்,முயற்சி தொடர்கிறது.

எப்படி பிரபஞ்சம் தோன்றியது? முதல் உயிர் எப்படி தோன்றியது போன்ற கேள்விகள் மதம்,தத்துவம்,அறிவியல் என் பல் துறைகளுக்கும் பொதுவான கேள்விகள்.

மதத்தின் படி அனைத்தும் அவன் செயலே என்பார்.தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாக சரியாக இருந்தால் போதும், ஆனால் அறிவியலுக்கு சான்று அவசியம்,அச்சான்றின் மீதான விள்க்கம்,கணிப்பு என தொடர்கதை ஆக செல்லும்.

இந்த இரண்டாம வகை நம்பிக்கையாளர்கள் ,விடை தெரியா கேள்விக்கெல்லாம் வித்தகனே காரணம் என்பார்.

விடை தெரிந்த கேள்வியை தவிர்ப்பார், ஒரு கேள்வியின் விடை சமீபம் ஆனால், கடவுள் வேறு கேள்வியின் விடையாக இடம் பெயர்வார்.


இவர்கள் மத புத்தகம் நம்பி ஏற்றாலும், கடவுளின் இருப்புக்கு இயற்கையின் மகத்துவமே காரணம் என்க் காட்டுவார்!!!

இந்தவகை வாதங்களை நன்கு வரையறுத்தவர் 15 ஆம் நூற்றாண்டு கிறித்துவ பாதிரி அக்கினோ ஆவார்.

http://en.wikipedia.org/wiki/Quinque_viae

அ) முதல் காரணி வாதம்[படைப்புக்கு படைப்பவன் அவசியம்]

ஆ) ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட பிரபஞ்சம்.

இ) விடை தெரியா கேள்விகளின் விடை வித்தகனே

ஈ) கடவுள் இல்லை என நிரூபிக்க முடியாமையால் கடவுள் உண்டு

என இயற்கையின் மீதான விவாதங்களில் செல்வதில் மத புத்த்கம் மீதான ஆய்வுகளை தவிர்க்கலாம்.

ஏன் எனில்

மத புத்தகம் கூறும் பெரும்பாலான கதைகளுக்கு,  அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.

மத புத்த்கம் மூல நூல்களின் மொழியாக்கம் போன்றவற்றுக்கும் மொழியியல் சான்றுகள் இல்லை.  

ஒரு பழைய புத்தகம் இப்படி சொல்கிறது என்றால் அதே போன்ற சொற்கள்,வாக்கியங்கள் ஏற்கெனவே உள்ள அதே மொழி புத்தகங்களில் அதே விதத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்க வேண்டும். அதன் இலக்கண நூல்கள்,அகராதி போன்றவை நூல் எழுதப்பட்ட காலத்திற்கு முந்தையது ஆக இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இருக்காது!!!

பெரும்பாலும் முந்தைய மொழிபெயர்ப்புகளை இபோது சுட்டுவதையே தவிர்ப்பார்.

ஆகவே இப்படி மத புத்தகம் சாராமல் மதம் காப்பாற்றும் ஒரு முயற்சியே இந்த இரண்டாம் வகை நம்பிக்கை.

விவாதங்களில் இவர்கள் கேள்வி கேட்பதையே விரும்புவார், நிரூபணத்தை எதிர் குழு மட்டுமே தர வேண்டும். எதிர் குழு ஒரு விடயத்தை 99% நிகழ்தகவுடன் சரி எனக் கூறினால்,இவர்கள் ஆகவே 1% தவறு.எங்கள் தரப்பு நிரூபிக்க அவ்சியம் இன்றி வெற்றி என குத்தாட்டம் போட ஆரம்பித்து விடுவார்!!!

பெரும்பான்மையான மத பிரச்சாரவாதிகள் இந்த நம்பிக்கையாளர் ஆக இருப்பார்.முதல் வகை நம்பிக்கையாளர்களுக்கு வழி காட்டி ஆவார்!!!

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

அறிவியல் என்பது இயற்கையை அறியும் இயல் என்பதால், தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் என்பதை நம் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நாத்திகம் என்பதும் கடந்த ,நிகழ் கால சான்றுகளின் மீது பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம், அதன் மீதான கணிப்புகளை எதிர்கால சான்றுகளின் அடிப்படையில் பொருந்தும் வண்ணம் விளக்கங்களை மாற்றி அமைக்கிறோம்.

விடை தெரியா கேள்விகளின் விடை எந்த அளவு அளிக்கப் பட்டு உள்ளது என்பதை சான்றுகளின் அடிப்படையில் பரிசோதித்து ஏற்கிறோம்.

பிரப்ஞ்சம் தோன்றியது 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் என்பதை கணிப்பாக ஏற்கிறோம். அதற்கு முந்தைய சூழலும் கூட சில கணிப்புகள் குவாண்டம் இயக்கவியல்,ஸ்டிரிங் தியரி அடிப்படையில் உண்டு.  அதன் பரிசோத்னை முடிவுகளுக்கு காத்து இருக்கிறோம்.

பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது ஆனால் நிலை மாறுகிறது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கணிப்பு!!!.

[பரிசோதனையின் படி] சூன்யம்[nothing] என ஒன்று இருக்கவே முடியாது,ஆகவே முடிவிலியும்[infinite] இருக்க முடியாது.

There is always something instead of nothing!!

பிரபஞ்சம் சூன்யத்தில் இருந்து தோன்றியது என் விளக்கும் பேரா லாரன்ஸ் க்ராஸ் அவர்களின் உரை!!


Universe from nothing!!

**
பரிணாமத்திலும் 380 கோடி ஆண்டு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களின் கிழைத்து தழைத்து பரிணமித்தன என்பதற்கு பல பரிசோத்னை சான்றுகள் உள்ளன என்பதும், முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது இப்போது பரிசோதனையின் படி விடை தெரியா கேள்வி எனவும் ஒத்துக் கொள்கிறோம்.

இந்த மூன்றாம் வகை நம்பிக்கை நாத்திகர்,அறிவியல் ஆய்வாளர்கள் கொள்ளும் சான்றின் மீதான கணிப்பு ஆகும். ஒருவேளை தவறு ஆனாலும் அடுத்த பொருந்தும் விளக்கம் ஏற்பதில் தயக்கம் இல்லாதவர்கள்.  

பரிணாமக் கொள்கை டார்வின் காலத்தில் இருந்து சான்றுகளின் படி பல மாறுதல்களை கண்டு உள்ளது.

பரிணாம மாற்றத்தின் காரணி இயற்கைத் தேர்வு மட்டுமே, அதுவும் மாற்றம் படிப்படியாக நிகழும் எனவே டார்வின் கணித்தார்.

ஆனால் இயற்கைத் தேர்வு[natural selection] அல்லாமல் சீரற்ற மரபு விலகலும்[random genetic drift] முக்கிய காரணி ஆக ஏற்கப் படுகிறது,படிப்படி[gradual] மாற்றம் மட்டும் அல்லாமல், நிறுத்திய நிலைத்தனமையும் [punctuated equilibrium] மாற்றமாக ஏற்கப் படுகிறது.

விளக்கம் மாறலாம், ஆனால் சான்றுகள் மாறாது.புதிய விளக்கம் பழைய ,புதிய சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.

ஆகவே நாத்திகர்களின் நம்பிக்கை சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே மாறும். ஆத்திகர்கள் சான்றளிக்கப் பட்ட மத புத்தக விரோத விடயங்களை ஒதுக்கி விடுவார்கள். நம்பிக்கைகளை சான்றின் அடிப்படையில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனை ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்!!!

பரிணாமமும் மதம் கூறும் படைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என் ஒத்துக் கொள்ளக் கூட அஞ்சும் பரிணாம எதிர்பார்களர்களை பதிவுலகில் அறிந்து இருக்கிறோம் அல்லவா!!! 

இந்த மூன்று வகைகளும் ஒன்றை ஒன்று சாராமல் இருக்க அவசியம் இல்லை.இந்த முதல் வகை,இரண்டாம் வகை கொஞ்சம் தொடர்பு இருக்கலாம், அதேபோல் இரண்டாம்,மூன்றாம் வகை கூட தொடர்பு இருக்க்லாம்.இப்படி Fuzzy!!


இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல உண்டு!!

பின்னூட்ட விவாதங்களின் மேல் அடுத்த பதிவு எழுதுவோம்!!

நன்றி!!! 

Monday, March 25, 2013

அநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா?வணக்கம் நண்பர்களே,

பரிணாம விமர்சன பதிவுகளுக்கு விளக்கம் கொடுக்கும் வேலையை,தமிழ் பதிவுலகில் செய்து வருகிறோம். இதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றால் யோக்கியதை உள்ள யாரும் செய்ய முயற்சி செய்யாததால் என தந்தை பெரியார் போல் பதில் சொல்லி பதிவை தொடங்குவோம்.

பரிணாம எதிர்பாளர்கள் வைக்கும் எதிர்வாதங்கள் அனைத்துமே அடிப்படையில் இரு கேள்விகள் மட்டுமே?

1. முதல் செல் உயிரி எப்படி வந்தது?

2. ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுமா?

இந்த இருகேள்விகளும் கூட அதுக்கு முன்னால் என்ன? என்ற கேள்வியின் கடந்தகால,எதிர்கால கணிப்பை நோக்கிய திரிபுக் கேள்விகளே!!!

முதல் செல்லுக்கு முன்னால் என்ன என்பது இப்போது சான்று இல்லை என்பதால் கேட்கிறார்கள்.

ஒருவேளை இப்போது ஆய்வகத்தில் செயற்கை உயிரி உருவாக்கினாலும், முதல் செல் உயிரியும் 100% அப்படித்தான் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள். இது போல் அதுவும் உருவாகி இருக்கலாம் என மட்டுமே சொல்வார்கள். கடந்த கால சூழலைக் கிடைக்கும் சான்றுகள் மூலம் மட்டுமே கணிக்க முடியும்.ஆகவே சான்றுகள் இருந்தால் விளக்கம் கிடைக்கும்.அந்த விளக்கத்தின் மீதும் எழும் கேள்விகளின் விடைக்கும் சான்றுகள் அவசியம்.இப்படி சான்று விளக்கம்,சான்று,... என தொடர் பயணமே அறிவியல்.

ஒரு உயிரி சில உயிரிகளாக பிரியும் சிற்றினம் ஆதல்[speciation] நிகழ்வு என்பது பல மில்லியன் ஆண்டுகளில் நடக்கும் என்பதால் இப்போதே  கேட்கிறார்கள்.

எத‌ற்கு எளிமையாக சான்று கொடுக்க முடியாதோ,அந்த இண்டு இடுக்குகளில்
கடவுளைத் திணிப்பது மதவாதிகளின் வழக்கம்.

http://en.wikipedia.org/wiki/God_of_the_gaps

God of the gaps is a type of theological perspective in which gaps in scientific knowledge are taken to be evidence or proof ofGod's existence. The term was invented by Christian theologiansnot to discredit theism but rather to point out the fallacy of relying on teleological arguments for God's existence.

ஒரு விடை தெரியா கேள்விகள் விடை அளிக்கப்படும் போது , எழும் பல கேள்விகளுக்கு விடையாக கடவுள் இடம் பெயர்வார் என்பது ஆன்மீகம் நீடிக்கும் வழியாகும்.

பரிணாமம் என்பது 380 கோடிஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்து தோன்றின என்பது ஆகும்.

இதன் சான்றாக

1. மறைந்த,வாழும் உயிரிகளின் படிம வரலாறு,ஒப்பீட்டு ஆய்வுகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட பரிணாம மரம்!!

2. வாழும் உயிரிகளின் ஜீனோம் மீதான ஆய்வுகள்.

இப்போது படிமம் குறித்த பரிணாம எதிர் விமர்சனங்கள் வருவது இல்லை.

ஜீனோம் என்பது 1953ல் கண்டறியப் பட்டதில் இருந்து 2001ல் மனிதனின் ஜீனோம் குறியீடுகள் ஆவணப் படுத்தப்பட்டது வரை பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜீனோம் மாறுவது ஆவணப் படுத்தப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் ,அதன் விளைவாக ஏற்படும் உருமாற்றம், சிற்றினமாதல் பொன்றவை மீது அதிக ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன.

Genome research History from 1990 CE

1990's Genome projects are begun. The yeast genome is complete in 1996, and the C. elegans genome is done in 1998.

1990's DNA microarrays are invented by Pat Brown and colleagues.

1990's DNA fingerprinting, gene therapy, and genetically modified foods come onto the scene.

1995 Automated sequencing technology allows genome projects to accelerate.

1996-7 The first cloning of a mammal (Dolly the sheep) is performed by Ian Wilmut and colleagues, from the Roslin institute in Scotland.

2000 The Drosophila genome is completed. The Arabidopsis genome is completed. The human genome is reported to be completed.

2001 The sequence of the human genome is released, and the "post-genomic era" officially begins.

2009 Controversies continue over human and animal cloning, research on stem cells, and genetic modification of crops.

நம்மிடம் [ஒரு சில விதிவிலக்குகள் தவிர] வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே உள்ளன.இதில் இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் ஜீனோமின் மூல வேதிப்  பொருள்கள் ஒன்றே என் உறுதி செய்துள்ளனர்.

ஒத்த உருஅமைப்பு கொண்ட,பரிணாம மரத்தில் ஒரே மூதாதையர் கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பு இருப்பதும் ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

எ.கா ஆக மனிதன்(ஹோமோ சேஃபியன்) சிம்பன்சி ஆகிய வாழும் உயிரிகளை எடுப்போம். இவை இரண்டும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு பிரிந்தன என இப்போதைய பரிணாம அறிவியல் விளக்கம் ஆகும்.

அந்த பொது முன்னோரின் ஜீனோம் நம்மிடம் கிடையாது. மனிதன்,சிம்பன்சி இடையே 98% ஜீனோம் ஒற்றுமை உண்டு.அதாவது 2% வித்தியாசமும் உண்டு.

அப்படி வித்தியாசம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு உயிரி ,சில உயிரிகளாக விலகி பிரிய முடியும்.

பரிணாம விமர்சன பதிவில் மறுப்பு சொல்ல ஒன்றும் இல்லை.
அ)ஒவ்வொரு வாழும் உயிரியின் ஜீனோமிலும் , சில குறிப்பிட்ட வகை ஜீன்கள் 10 _30% வரை உள்ளன. அது எப்படி என்பதே அவர் பதிவு.

இதை மாற்றி சொன்னால்

ஆ)அதாவது 70_90% ஜீன்களுக்கு பரிணாம விளக்கம் இருப்பது போல் இவற்றுக்கு இல்லை என்பது ஏன் என்கிறார்.

ஆ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி விளக்கம் அளிக்க முடிகிறது.

அ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியவில்லை.

அவரிடம் நாம் எப்போதும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்??

இரு உயிரிகள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது? என்பதுதான்.

இங்கும் கொஞ்சம் மாற்றி கேட்கிறோம்!! 

இரு ஜீன்கள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது? என்பதுதான்.

ஜீன்கள் என்பவை ப்ரோட்டின் தயாரிக்கும் ஜீனோமின் பகுதி. ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறு பரிணாமத்தை ஏற்படுத்துகிறது. குரோமோசோம் அளவு ஜீனோம் மாற்றங்கள் பெரும் பரிணாமத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு பிரச்சினையாக நாம் கருதுவது ஒரு புதிய ஜீனை ஆய்வகத்தில் உருவாக்கி, அதுபோல் இயற்கையில் ஜீனோமில் நிகழ்கிறது என்றாலும், பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏற்கெனெவே வேதிப் பொருள்களால் செயற்கை ஜீனோம் வடிவமைத்து, அதனை செல்லினுள் வைத்து புதிய உயிரி உருவாக்கிய க்ரைக் வெண்டரின் கருத்தை கூற்று சுற்றுதல் முறையில் பரிணாம மர எதிர்ப்பு விமர்சனமாக காட்டுகின்றனர்.

வைரஸ்,பாக்டீரிய மீது ஆய்வு மேற்கொள்ளும் பரிணாம ஆய்வாளர்கள் குழு,பரிணாம மர கட்டமைப்பில் புதிய கருத்தினை முன் வைக்கின்றனர்.

ஜீன்களின் பரிணாம வரலாறு அடிப்படையில் பரிணாம மரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறனர். வைரஸ்கள் போன்றவை உயிரிகளின் ஜீனோமில் இணைய முடியும் எனவும் சில வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைரஸ் தாத்தா பதிவில் ஏற்கெனெவே இந்த டி நேவோ[de nova] என்னும் திடீர் படைப்பு பற்றியும் விவாதித்து இருக்கிறோம். 


ஜீன்கள்பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்துபிற மேம்பட்ட[மனிதன் போன்றஉயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறதுஇது மனிதக்குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..

 இது டி நோவா[???????????] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவதுசாத்தியம் என்பதை விள்க்குகிறது.  ஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையேஇணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்."


ஒரு புதிய ஜீன் என்றால் எப்படி வரையறுப்பது??? அனைத்து ஜீனோம்களும் ஒரே வேதிப் பொருள்களால் ஆனவை. ஜீன் என்பது தயாரிக்கும் ப்ரோட்டின் வைத்து  ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.  

ஒரு புதிய ஜீன் தோன்றுகிறது என்றால், அது ஏற்கெனவே உள்ள ஒரு ஜீன் பிரதி எடுக்கப்பட்டு[gene duplication] சில மாற்றங்களுக்கு உள்ளாவது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து.

ஒரு ஜீன் மனிதனின் ஜீனோமில் இருக்கிறது என்றால், சிம்பன்சி ஜீனோமில் கொஞ்சம் மாறுதலுடன் இருக்கிறது எனப் பொருள்.

இப்போது ஒரு ஜீன் அடைந்த மாற்றங்களினால், இதர உயிரி ஜீன்களுடன் உறவு,தொடர்பு பொருத்த இயலவில்லை.இதனை அநாதை ஜீன்கள் என அழைக்கின்றனர்.மதவாதிகள் எப்போதும் வார்த்தை விளையாட்டு, கூற்று சுட்டுதல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த சொல்லை வைத்து கயிறு திரிப்பதில் வியப்பு இல்லை.


முதலில் அறிவியல் கற்பவர்கள்,சான்று என்பதை உணர்வதும்,அத்னை அளவீடாக்கி பொருந்தும் விளக்கம் அளிப்பதும் அறிவியல் என்பதையும், நாம் ,நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிய‌ சான்றுகளைத் தேடுகிறோமோ தவிர நமக்காக அனைத்து சான்றுகளும் தயாராக இருக்கிறது என நினைப்பது பேதைமை என உணர வேண்டும்.

பரிணாமத்தின் மீது வைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் சார் விமர்சன‌ங்களுக்கு விள்க்கம் எப்போதும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரை தெளிவாக அநாதை ஜீன்கள் உருவாவது ஏன் என்பதை நன்கு விளக்குகிறது.


இக்கட்டுரை இரு ஆய்வுக் கட்டுரைகளை எடுத்து இந்த அநாதை ஜீன்கள் எப்படி வந்து இருக்கலாம் என விளக்குகிறது.

1. ஜீன் பிரதி எடுத்தல் மூலம் பிறக்கும் ஜீன், ஏற்படும் மாற்றங்களின் சுவடுகள் அழிந்து விடுதல்.

Khalturin et al. (1) suggest that “once a certain evolutionary time has elapsed” sequence similarity to the ancestral gene will be erased. Mutational erasure is clearly possible over time.  Marshall et al. (4) tried to quantify the idea in 1994, concluding that after about 10 million years, genes mutated into pseudogenhood could no longer be revived by mutation (but retain enough sequence to still be recognized as pseudogenes).

2. ஜீனோமின் ப்ரோட்டின் தயாரிக்காத பகுதியில்[Non coding genome or Junk genome] ஏற்படும் மாற்றங்கள், இப்படி ஜீன்களை உருவாக்கி இருக்கலாம் எனக் கருத்தாக்கம் வைக்கின்றனர்.இதற்கு ஆதரவாக கடந்த 5 ஆண்டுகளில் பல ஆய்வுக கட்டுரைகள் வெளிவந்து உள்ளன.

Tautz (2) provide a step-by-step scenario for de novo gene creation.  These authors recognize the stretched plausibility of such ideas, given the seemingly miniscule probability that functional genes—with strongly advantageous effects—could arise this way.  


இப்போது இந்த இரு கருதுகோள்களும் பரிசோதிக்க பட்டே ஏற்கப்படும்.

எப்படி பரிசோதனை நடக்கும்??.

இனவிருத்திக் காலம் குறைவான நுண்ணுயிர்களின் ,தொடர் தலைமுறைகளின் ஜீனோம் தொடர்ந்து ஆவணப் படுத்தபட்டு அதில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றால் விளக்கம் கிடைக்கும்.

1.ஜீன் பிரதி எடுத்தல் மூலம் ஒரு புதிய‌ ஜீன் தோன்றி, ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்கு பின் தோன்றிய சுவடு இல்லாமல் போதல்.மாற்றம் அடைந்த ஜீன்கள் தொடர்ந்து மாறுபட்ட ப்ரோட்டின் தயாரித்தல்.

2. ஜீனோமின் ப்ரோட்டின் உருவாக்காத பகுதியில் இருந்து, புதிய ஜீன் உருவாகி ப்ரோட்டின் த்யரித்தல்.

இரண்டும் நடக்குமா இல்லை, ஏதேனும் ஒன்று மட்டும் சரியா என்பது ,எதிர்காலத்தில் அறிவோம்.

இப்படிப் பட்ட கேள்விகளின் மீதுதான் முதுகலை/முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்.

ஜீனோம் மாறுகிறது,அது உருமாற்றம் ஏற்படுத்துவது நன்கு அறிந்த விடயம்,ஜீனோமின் மாற்றம் சூழல் சார்ந்தும், சாராமலும் நடப்பதும் அறிந்த விடயம்.நுண்ணுயிர்களில் ஏற்பட்ட ஒரு உயிரி ,சில உயிர்களாக பிரிவதும் ஆவணப் படுத்தப்ப்ட்ட விடயம்.

விடை தெரிந்த கேள்விகளில் இருந்தே பரிணாமம் குறித்த புரிதல் எளிதில் கொள்ள இயலும்.

நாம் இதுதான் மேண்டில் என சொல்லி ,இதில் இருந்து வெளிச்சம் வருகிறது என சொல்கிறோம், அவர்களை மேண்டிலை உடைத்து நம்மீது பழி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஹி ஹி!!!
வளர்ச்சி அடையும் ஒவ்வொரு கொள்கையிலும் உள்ள விடை தேடும் கேள்விகள் பரிணாமத்திலும் உண்டு.இந்த அநாதை ஜீன்களின் கேள்விக்கு விடை வந்தால்,மதவாதிகள் மீண்டும் முதல் செல் எப்படி வந்தது என்பார்!!!

பரிணாமம் என்பது உயிரின வரலாறு மட்டும் அல்ல,உயிரற்ற பொருள்களின்
பரிணாம வளர்ச்சி பெரு விரிவாக்க கொள்கை, மொழிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியே

தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகள் ஒரே மூல மொழியில்[proto dravida] இருந்து தோன்றியது என்பது ஏற்கப்பட்ட கருதுகோள் என்றாலும், அதற்கு சொல் ஒப்பீட்டில் உள்ள ஒற்றுமை பயன்படுகிறது, அப்படி ஒப்பிட முடியா சொல்லை விளக்குவது கடினம்.அதுபோல்தான் இந்த அநாதை ஜீன்கள் விடயம். 

விளக்கம் கொடுக்கலாம்,ஆனால் சான்று மட்டுமே மெய்ப்பிக்கும்.

ஜீனோம் அறிவியலில் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வாளர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த மதவாதிகளின் ஒரே கேள்வி அற்ற பதில் இதுதான்!!!

"மதபுத்தகம் கூறும் அநாத இரட்சகன்,ஆபத்பாந்தவன், ஆதிமூலம் ஆகிய ஆண்டவனின் ஆட்சியை,சட்டங்களை உலகெங்கும் கேள்வி கேட்காமல் ஏற்கும் வண்ணம் சாம, தான,பேத ,தண்ட வழிகளை பின்பற்றுவோம்" என்பதுதான்

உலகில் யாரும் அநாதை இல்லை!!!.ஒருவரின் பெற்றோர் அறிய  இயன்றால் நல்லது, இல்லை எனில் வானத்தில் இருந்து வந்தார் எனவா சொல்வோம்!!!

சிந்திக்க மாட்டீர்களா!!!!

மதபுத்தகம் கூறுகிறது!!!!!!!!!!!  

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

எதிர்க் குரல் பதிவு முழுக்க முழுக்க இந்த கட்டுரை அடிப்படையில் மட்டுமே எழுதப் பட்டு இருந்தாலும் முடிவுரையை விட்டுவிட்டதை அறிய முடியும். நாம் முடிவுரை&தமிழாக்கம் கொடுத்து நிறைவு செய்வோம்.

http://ccsb.dfci.harvard.edu/web/export/sites/default/ccsb/publications/papers/2013/All_alone_-_Helen_Pilcher_New_Scientist_Jan_2013.pdf


We still have a lot to learn about orphan  genes, but we are now starting to trace their
ancestry. And it looks as if we couldn’t find the families of most orphans because they don’t
really have families. The raw DNA from which they sprung can be traced, but as genes they
are the first of their kind. In this sense, the term orphans may be a misnomer. Perhaps
they ought to be renamed Pinnochio genes–non-genes carved by chance and natural
selection into proper, “living” genes.

அநாதை ஜீன்கள் பற்றி நாம் அறிய வேண்டியவை பல உள்ளன, என்றாலும் அதன் தோற்றம் பற்றியே அதிகம் தேடுகிறோம்.அவைகளுக்கு மூதாதையர் இல்லாது போல் இருப்பதால் நம்மால் மூதாதையர் காண இயலவில்லை. ஜீனோமின் எந்த பகுதியில் இருந்து இந்த அநாதை ஜீன்கள் வந்தது என நம்மால் சொல்ல முடியலாம்,ஆனால் இவை ஒரு தனித்துவ வகை ஜீன்கள்.ஆகவே அநாதை என் சொல்வது தவறான சொல் வழக்கு என்பதால் பின்னாச்சியோ ஜீன் என அழைக்கலாம். அதாவது ஜீன்களாக இல்லாத ஜீனோமின் ஒரு பகுதி, சூழல் சார்[natural selection],சாரா[chance] விளைவால், ஜீனாக மாறி விட்டது.பின்னாச்சியோ என்றால் ஒரு கதையில் வரும் மரப் பொமமை மனிதனாக மாறிவிடும்,அது பொய் சொல்லும் போது மூக்கு வளரும் என கதை நகரும்.
http://en.wikipedia.org/wiki/Pinocchio

he was created as a wooden puppet but dreamed of becoming a real boy. He has also been used as a character who is prone to telling lies and fabricating stories for various reasons....Pinocchio is known for having a short nose that becomes longer when he is under stress (chapter 3), especially while lying.

பரிணாம எதிர்ப்பாளர்களின் மூக்கு வளருமா!!! ஹி ஹி
நன்றி!!!

Saturday, March 23, 2013

பேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது!!!\
This image unveiled March 21, 2013, shows the cosmic microwave background (CMB) as observed by the European Space Agency's Planck space observatory. The CMB is a snapshot of the oldest light in our Universe, imprinted on the sky when the Universe was just 380 000 years old. It shows tiny temperature fluctuations that correspond to regions of slightly different densities, representing the seeds of all future structure: the stars and galaxies of today.
CREDIT: ESA and the Planck Collaboration 

வணக்கம் நண்ப‌ர்களே,

நாம் வாழும் பூமி, பேரண்டத்தில் மிக மிக...மிக சிறிய பகுதி என்பதை அறிவோம். ஏற்கெனெவே ஒரு பதிவில் பேரண்டத்தின் வயதை எப்படி கணக்கிடுவது என அறிந்தோம்.அதன்படி நமது பேரண்டத்தின் வயது 1370 கோடி ஆண்டுகள் என கணக்கிடப் பட்டு இருந்தது.அறிவியல் என்பது தொடர்ந்த அளவீட்டு சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்பதை ,அது குறித்து கற்கும் போது மன‌தில் கொள்வது மிக அவசியம்.புதிய சான்றுகளின் மீது ஏற்கெனவே உள்ள கணிப்புகள் பரிசோதிக்கபட்டு, அவசியம் எனில் விள‌க்கங்கள் மாற்றியமைக்கப் படும்.

அறிவியலின் இத்தன்மைதான் அதனை உறுதிப் படுத்துகிறது. சென்ற வாரம் பேரண்டம் தோன்றியது இன்னும் 8 கோடி வருடங்களுக்கு முன் எனக் கூறுகிறார்கள். அதாவது இபோதைய பேரண்டத்தின் வயது சான்றுகளின் படி 1370+10=1380 கோடி ஆண்டுகள் அல்லது 13.82 பில்லியன் ஆண்டுகள்[தோராயமாக].


பேரண்ட விரிவடைதல் என்பதும் பரிணாமம் போல் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வு ஆகும். பரிணாம சான்றுகள் உயிரினப் படிம‌ங்கள் போல், பேரண்ட அக்கால நிலை கணக்கிட ஒளிப்படிமங்கள் கொண்டே கணக்கிடுகிறார்கள்.

முதலில் தொலை நோக்கி கொண்டு விண்மீன் திரட்சிகளின்[galaxy] நகரும் வேகம் ,சிவப்பு விலக்கம் கொண்டு கண்க்கிட்டவர்கள் இப்போது துணைக்கோள்களின்[sattelite] உதவியுடன் எடுக்கப்படும் பழைய ஒளிப்படிம‌[fossilized light] புகைப்படங்கள் மூலம் முந்தைய பேரண்டம் எப்படி இருந்தது எனக் கணக்கிடுகிறார்கள்.

காஸ்மிக் நுண்ணலை பின்புலத்தை[Cosmic Microwave Background  கணக்கிடும் வகையில் இந்த புகைப் படங்கள் எடுக்கப்படுகின்றன.

ப்ளான்க் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்களின் மூலம் 380,000[சுமார் 4 இலட்சம்] ஆண்டுகள் முந்தைய பேரண்டத்தின் நிலை அறிய முடிந்தது. இது ப்ளான்க் விண்கலம் பற்றிய விக்கி சுட்டி.  


On 21 March 2013, the European-led research team behind the Planck cosmology probe released the mission's first all-sky map of the cosmic microwave background.[17] The map suggests the universe is slightly older than thought. According to the map, subtle fluctuations in temperature were imprinted on the deep sky when the cosmos was about 370,000 years old. The imprint reflects ripples that arose as early, in the existence of the universe, as the first nonillionth (10-30) of a second. Apparently, these ripples gave rise to the present vast cosmic web of galaxy clusters and dark matter. The team estimates the universe to be 13.798 ± 0.037 billion years old, containing 4.9% ordinary matter, 26.8% dark matter and 68.3% dark energy.[18] Also, the Hubble constant was measured to be 67.80 ± 0.77 (km/s)/Mpc.

இந்த புகைப்படத்தின் மீதான ஆய்வுகள் பேரண்ட வயதை சிறிது அதிகப்படுத்தியது[13.798 ± 0.037 billion years].

கருப்பு ஆற்றலின் அளவைக் குறைத்து[68.3%],கருப்பு பொருளின்[26.8%] ,அறிந்த பொருளின்[4.9%] அளவு வீதங்களை சிறிது மாற்றியுள்ளன.

இதெல்லாம் எப்படி எனில் புகைப்படம் என்பது காஸ்மிக் நுண்ணலைகளின் அலைநீளம் சார்ந்த கணக்கீடுகளின் அடிப்படையில்தான்.

சரி இதுகருப்பு பொருள்,கருப்பு ஆற்றலை உறுதிப்படுத்தி இருக்கிறது என சொல்ல முடியுமா? என்றால் , மீண்டும் மீண்டும் அறிவியல் என்பது "தொடர் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்" என்பதை ஞாபகத்தில் இருத்தவும்.கருப்பு பொருள்&ஆற்றல் குறித்த நம் முந்தைய பதிவு.


ஐன்ஸ்டினின் விதிகள் அடிப்படையில் ஏற்படும் பிழையின்  காரணி கருப்பு பொருள்,கருப்பு ஆற்றல் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த விளக்கம் என்பதால் இதுகுறித்து தெளிவாக இப்போது சொல்ல முடியாது.

இந்த 380,000 ஆண்டு பேரண்டத்தின் புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்டதில் மிகப் பழமையானது ஆகும். இன்னும் இதுகுறித்த மேலதிக தகவல் கிடைத்தால்[ஆய்வுக் கட்டுரைகள்] நம் தளத்தில் பகிர்ந்து விவாதிப்போம்!!!

நன்றி!!!

Wednesday, March 20, 2013

பரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்!!!


.
வணக்கம் நண்பர்களே,

இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து இருந்தாலும் பரதேசி படம்  ஒரு பாதிப்பு ஏற்படுத்தியது என்பதால் அந்த பாதிப்பை பதிவாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவே இப்பதிவு.

வரலாறு,அறிவியல் என்பவை மனிதனை கடந்தகால நிகழ்வுகளில் இருந்து கற்று,நிகழ்காலத்தில் வாழ்ந்து,எதிர்காலத்தினை கணிக்கும் விடயங்கள் என்பதால் இரண்டிலும் ஆர்வம் உண்டு.

நமது வரலாறை ஆவணப் படுத்தும், பாமர மக்களிடையே கொண்டு செல்லும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே. அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு முதல் பாராட்டினைத் தெரிவிக்கிறோம்.

ஒரு மக்கள் குழுவின் ,மூன்று கால கட்ட வரலாற்றினை படம் சொல்கிறது.

1. தென் தமிழக சாலூர் கிராமத்தில் வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிக்குழுவின் எதார்த்த வாழ்வு. வறுமை இருந்தாலும், உழைப்பு சுரண்டப் பட்டாலும், சுதந்திரமாக ,மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழல் முதலில் காட்டப் படுகிறது.
ஒரே சாதிக்குள்ளும் பொருளாதாரம் சார்ந்து ஏற்றத் தாழ்வு இருப்பதும் நாயகனுக்கு, நாயகியை திருமணம் செய்ய மறுக்கும் தாயின் மனநிலையாக காட்டப் படுகிறது.

அவர்களின் வாழ்வாதாரம் சார் சூழல் சரியாக காட்டப் படவில்லை என்பதே நம் கருத்து. விவசாய பண்ணைகளில்,செங்கல் சூளைகளில் கூலிகளாக இருப்பவர்களின் வாழ்வில் படத்தில் காட்டப்பட்ட சுதந்திரம் கூட‌ கிடைக்குமா என்பது கேள்விக்குறியதுதான்.இந்த சூழலில் கூட குறைந்த கூலி,பாலியல் சுரண்டல் முதலானவை நடந்தது,இன்றும் கூட பல கொத்தடிமை மீட்பு போன்ற செய்திகளில் படிக்கிறோம்.கூலி  உயர்வு கேட்ட மக்களை குடிசையோடு கொளுத்திய சம்பவங்களும் வரலாறு.2.இச்சூழலில் இருந்து பொருளாதார முன்னெற்றம் வேண்டி கங்காணி என்னும் ஏமாற்றுப் பேர்வழியின் பேச்சை நம்பி, கூட்டமாக சில மாதம் நடந்தே மூணார் தேயிலைத் தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர். வரும் வழியில் சிலர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் போதே ,அவர்களை அப்படியே விட்டுவிட்டு செல்வது வரும் துன்பத்திற்கு இலேசான முன்னோட்டமாக எடுக்கலாம்.

தேயிலை என்பது சீனாவில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப் பட்டு வந்தது, வெள்ளையருக்கு இது பற்றி 17 ஆம் நூற்றாண்டில் தெரிய வந்ததும், இதனை உலக முழுதும் அறிமுகப் படுத்தி,ஒரு சந்தையை உருவாக்கி வெற்றி கண்டனர். சீனா தெயிலைக்கு போட்டியாக மலை சார் நிலங்களில் காட்டை அழித்து ,தேயிலைத் தோட்டம் உருவாக்கினர்.எப்போதும் சீன,மேலை நாடுகள் வியாபார,ஆதிக்க போட்டி பலரின் துன்பங்களுக்கு குறிப்பாக தமிழர்களின் துயரத்திற்கு காரணம் ஆவதை என்ன சொல்வது?.அந்த தேயிலைத் தோட்டங்களுள் ஒன்றுதான் படத்தில் காட்டப் படுகிறது.

இலாபம் அதிகரிக்க வெண்டும் எனில், வேலை செய்யும் தொழிலாளிகளின் உழைப்பை அதிகம் சுரண்டினால் மட்டுமே சாத்தியம் என்பதால் , அவர்களின் உழைப்பிற்கு மிக குறைந்த கூலி,அதுவும் வருட முடிவில் மட்டுமே கிடைக்கும் என சொல்லப் படுகிறது.

உணவு,வாடகை,மருத்துவம்,வட்டி என மிச்சம் மீதி எதுவும் மிஞ்சாது ,கடனில் எப்போதும் இருக்கும் படி சூழலில் தொடர்ந்து உழைத்தாக வேண்டும்.

உழைப்பில் உடல் குலைந்து ,ஆரோக்கியம் தொலைத்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்.

இப்படியே புதிதாக கூலிகள் வருவதும்,அங்கேயே பலர் உழைத்து சருகாகி மடிவதும்,தொடர்கதையாக நாடு சுதந்திரம் வரை நடந்தது.

இன்றும் கூட இந்திய,இலங்கை மற்றும் கென்யாவில் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மோசம் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. டீ'ன் விலையில் 1% மட்டுமே தொழிலாளர்களுக்கு இன்றும் செல்வதாக சொல்வது உரைக்கும் உண்மை.


சுதந்திரத்தின் பின் சில தொழிலாளர் உரிமைகள் பற்றி சட்டம் கொண்டு வரப் பட்டாலும், அவை நடைமுறைக்கு வராது. இச்சட்டங்கள் கங்காணி போல் தொழிலாளர் நல அலுவலர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.
Plantations Labour Act, 1951


3. மதமாற்ற பிரச்சினை: இப்போது புலம் பெயர்ந்த,ஒடுக்கப்பட்ட சாதிக் குழுவுக்கு, உழைப்புச் சுரண்டல் அல்லாமல் மதமாற்ற‌ப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுகிறது.

இச்சூழலை படத்தில் , மத மாற்றப் பிரச்சாரகன் கங்காணியை விட மோசமானவன் என்னும் ஒரு வாக்கியத்தில் மட்டும் காட்டி நம் கணிப்புக்கு கதையின் போக்கை விட்டுவிட்டு படத்தை முடித்து விடுகிறார்கள்.
***

முதலாளிகளின் மதமும், பிரசாரகரின் மதமும் ஒன்றாக இருப்பதாலும், இந்த மத மாற்றம் தொழிலாளிகளை மதரீதியாக பிரிக்கும் என்பதால் இது அனுமதிக்கப்டுவது மட்டும் அல்ல ஊக்குவிக்கப் படும். முதலில் மதம் மாறும் சிலருக்கு சில பொருளாதார வசதிகள் கிட்டும். இது கூட ஒருவகை விளம்பரமே. தொடர்ந்து மாறுபவர்களுகு பெயர் மட்டுமே மாறும், வேறு எதுவும் மாறாது.பெயர் மாறினாலும், ஒடுக்கப்படும் மக்கள் இடையே சில தலைமுறைகளில் பிரிவு நிரந்தரம் ஆகும்.

தமிழர்களில் மதம் மாறிய பெரும்பான்மையோரின் நிலை, இந்து சமூக ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலைக்கு ஒப்பாக இருப்பது இதன் நிரூபணம் ஆகும். 

வாழ்வாதாரம் சார் போராட்டங்கள் திரிந்து மதம்,இனம் சார் பிரிவினைகளாக பரிணமித்தால் ஆயுதம் கொடுத்து போராக மாற்ற‌  வல்லூறுகள் பல உண்டு. முரண்பாட்டின் காரணி உணவு கொடுக்க மறுப்பவன், ஊரை அழிக்கும் ஆயுதம் கொடுப்பது ஏன் என போரிடும் இரு சகோதரக் குழுக்களும் உண்ர மாட்டார்கள்.நம் சாதி, மதம் சேர்ந்த்வன் ஆண்டாலும் நமக்கு எதுவும் செய்ய மாட்டான் என மக்கள் உணராத வரை இந்த ஏமாற்று வேலை தொடரும்.

ஆனாலும் மதம்,சாதி சார்ந்த பிரச்சினைகளில் , தனது ஒடுக்குதலையும் மறந்து ,கூட ஒடுக்கப்படும் சொந்த சகோதரர்கள் என்பதையும் மறந்து, தன் மத எஜமானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பல சமயங்களில் பதிவுலகில் கண்டு இருக்கிறோம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இதுபோல் ஆசை வார்த்தை காட்டி கூட்டி செல்லும்  கங்காணிகளும் உண்டு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி சென்றோர், பல வருடம் உழைத்து வீணாகப் போக வேண்டியதுதான். அங்கு சென்றால் அப்படித்தான்,போகாமல் ஊரில் இருக்க வேண்டியதுதானே என மதம் சார்ந்து சுரண்டலுக்கும் ஆதரவாக கூக்குரல் இடும் சகோக்களும் உண்டு.அந்த இடம் பூலோக சொர்க்கம், அங்கே தேவதூதர்கள் போல் எஜமான்கள் என்னும் பரப்புரைகள் பலவும்  படித்து இருக்கிறோம் அல்லவா!!!


சுரண்டும் எஜமானர்கள், கங்காணியாக மத்திய தர வர்க்கம், சுரண்டப்படும் விவசாயி,கூலித் தொழிலாளர்கள் என வைத்து பார்தாலும் சரிதான்.

முடிவாக சொல்வது மத்திய தர வர்க்க [பதிவுலக] கங்காணிகளே சுரண்டும் எஜமானை விட, சுரண்டப்படும் சகோதரனுக்கு குரல் கொடுங்கள் என்பதே!!!!!!!!!!!

கானா பாலாவின் இப்பாடல்(ம்) நம்க்கு மிகவும் பிடித்து விட்டது. இப்போது முணுமுணுக்கும் பாடல் இதுதான்.

கேளுங்கள்!!!!!!!!இப்பாடலை மதமாற்றப் பிரச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக எடுத்து இருந்தாலும், அப்பாட்டில் வரும் பாமர மக்களின் இசை பறை ஒலி இவற்றுக்கு தீர்வு வராதா?? என நம்மைப் பார்த்து கேட்பதாகவே உணரலாம்.மனிதர்களின் பிரச்சினைகளை,மனிதர்களாகிய  நாம்தான் சுமுகமாக தீர்க்க வேண்டும்.

ஆகவே பரதேசியின் பறை ஒலி ஓங்கி ஒலிக்கட்டும்!!!!

நன்றி!!! 

Friday, March 15, 2013

அறிவியலின் இருமுகத் தன்மைவணக்கம் நண்பர்களே,

இணையத்தை பயன்படுத்தும் பெரும்பான்மையோர் அறிவியல் பாடம் பள்ளியில் படித்து இருப்போம். ஏதோ சில விதிகள், வாயில் நுழையா பெயர்கள்,சூத்திரங்கள்,வரையறுப்புகள் என பலருக்கு எரிச்சல் ஊட்டிய பாடம் ஆகவே இருந்து இருக்கும். அறிவியல் என்பது என்ன? என்ற கேள்விக்கு சரியாக விடை சொல்வது கடினமே!!. பல பொருந்தும் வரையறுப்புகள் உண்டு,எங்கு குறிப்பிடுகிறோமோ அதற்கு தக்கபடி அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அறிவியல் என்பது அறியும் இயல் என தமிழில் சொல்கிறோம்,இயற்கையை ,அதன் நிகழ்வுகளை அறியும் இயல் என விளங்கலாம். இயற்கை என்பது என்ன என் அடுத்த கேள்வி வரும்.

இப்படி தொடர் கேள்விகளுக்கு விடை அளிப்பதும் அறிவியலே.இயற்கை என்றால் நாம் அறிந்த,உணர்ந்த விடயம் என்றாலும் இதன் மேலும் கேள்விகள் வரும்.

1.அறியாத/உணராத‌ விடயம் அறிவியல் இல்லையா?

2. அறிய இயலா /உணர இயலா  விடயம் அறிவியல இல்லையா?

முதல் கேள்வி சரியானது, புதிதாக் அறியும்,உணரும் விடயங்கள் அறிவியல் என்றாலும் சான்றுகள் வரும் வரை ஏற்கப் படாது.

இரண்டாம் கேள்வி குயுக்தியான தந்திரம் கொண்டது. முந்தைய கேள்விக்கு ஆம் எனில் இதுவும் உண்மையாக இருக்கலாமே என வாதிட முடியும்.

முதல் கேள்வி சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் உண்மை ஆகும். இரண்டாம் கேள்வி என்றுமே  சான்றுகள் அடிப்படையில் உண்மை ஆகாது.இதில் ஒரு சிக்கல் என்ன்வெனில் பொய் என்றும் சான்றுகள் காட்ட இயலாது.இந்தவகை விளக்கங்கள் போலி அறிவியலை கொண்டு வந்து விடும்.

ஆகவே அறிவியல் என்பது கிடைத்த அளவீட்டு சான்றுகளின் விளக்கம்.அந்த விளக்கத்தின் மீதான கணிப்புகள் எதிர்கால சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.இப்படியே அறிவியல் ஒரு தொடர்கதை....

இது ஒரு அளவுக்கு பிரச்சினை இல்லாத விளக்கம் என்றாலும் சான்று என எதை ஏற்பது? என்பது இன்னும் அதிக சிக்கலான விடயம்.

ஆகவே அறிவியல் என வரையறுப்பதில் உள்ள சிக்கல்களை உணரவேண்டும்.
*

இப்பதிவில் அறிவியலின் இரு முகங்களை பார்க்கப் போகிறோம்.திருவிளையாடல் படத்தில் புலவ‌ர் தருமி[நடிகர் நாகேஷ் நம்ம அய்யா அல்ல] , புலவ‌ர் இறையனாரிடம்[ சிவனின் அவதாரம்]பல கேள்விகளை கேட்பார், அதில் ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள் பற்றியே அதிக கேள்விகள் வரும்.இதில் கவனிக்க வேண்டியது கேள்விகள் ஒன்ன்றுக்கொன்று முரண்படுவது போல்,பதில்கள் முரண்படாது,அதிக பட்சம் தொடர்பு அற்று இருக்கும்.

பிரிக்க முடியாதது என்னவோ? - தமிழும் சுவையும்; 
பிரியக் கூடாதது? - எதுகையும் மோனையும்;

சேர்ந்தே இருப்பது? - வறுமையும் புலமையும்; 
சேராதிருப்பது? - அறிவும் பணமும்

சொல்லக் கூடாதது? - பெண்ணிடம் ரகசியம்; 
சொல்லக் கூடியது? - உண்மையின் தத்துவம்

பார்க்கக் கூடாதது? - பசியும் பஞ்சமும்; 
பார்த்து ரசிப்பது? - கலையும் அழகும்

இதை ஏன் சொல்கிறோம் என்றால் கேள்விகள் என்பது தேடல், முரண்படும் கேள்விகளின் விடைகள் முரண்பட அவசியம் இல்லை என்பதுதான். ஆத்திகம்,நாத்திகம் கூட விடையற்ற கேள்விகளுக்கு விடை தேடும் முறைகள் மட்டுமே!!!
**

அறிவியலில் அறிந்த விடயம்,அறியா விடயம் என இரு விதம் உண்டு என அறிவியலின் வரையறுப்பில் அறிகிறோம்.

அறிந்த என்றால் ஒரு அறிவியல் விதி என எடுத்துக் கொள்வோம்.

ஒரு அல்லது சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இயற்கை நிகழ்வை, அதன் காரணிகளாக பகுத்து, அவ்ற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஒரு விதி ஆக்குகிறார்கள். நமது பள்ளி ஆய்வகங்களில் அதனை பரிசோதித்து ,ஆய்வு முடிவுகளை ஆவணப் படுத்துகிறோம்.

ஒரு வகுப்பில் ஒரே பரிசோதனையை பலர் செய்யும் போது , முடிவுகள் கொஞ்சம் மாறுபடும். இந்த வித்தியாசங்கள் ஒரு அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த விதியை சரியாக பரிசோதித்து இருக்கிறோம்.அல்லது அந்த விதி மாற்றப்பட வேண்டும்!!!

அறிவியலின் படி இரு அளவுகள் சமம் எனில் அதன் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதே.

சரி ஏன் வித்தியாசம் வருகிறது?

பலர் ஒரு பரிசோதனையை ஒரே இடத்தில் செய்தாலும்,பயன்படும் பொருள்களின் நிலை சார்ந்து வரலாம்,அதாவது சூழல் சார்ந்து வரலாம். பொருள்களின் தன்மைகளும் சூழல்,காலம் பொருத்து மாறும்.அளவீட்டுக் கருவிகளின் தரம் மாறலாம். 

எப்படி இருந்தாலும் ஒரு பரிசோதனையை பலர் செய்யும் போது வித்தியாசம் வருவது இயல்பு. அந்த வித்தியாசம் அதிகரிக்கும் சூழல் வரும் போது,புதிய காரணிகள் விதிகளில் சேர்க்கப்படும்,விதி மாறும்.

ஆகவே ஒரு விதியில் சரியாக அளவிடும் மாறா தன்மை[Deterministic],மாறும் தன்மை[chance] இரண்டும் உண்டு.இந்த மாறும் அளவுகள் குறைவாக இருக்கும் வரை விதி ஏற்கப்படும்.

இதையே இருமுகத் தன்மை என்கிறோம்.

http://dualityscience.com

Duality also refers to phenomena having a twofold nature and characterized by states that are mutually exclusive. 

Rule= Deterministic +Chance

விதியின் மாறா பகுதியின் காரணிகள் நன்கு வரையறுக்கப்பட்டவை, நன்கு பரிசோதிக்க முடியும்,மாறும் பகுதி புதிய  அல்லது சில விளக்க இயலா காரணிகளால் இருக்கலாம்.

http://plato.stanford.edu/entries/determinism-causal/


இந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.

இந்த இருமுகத் தன்மை இந்த மூன்றுக்கும் பொருந்துவது மட்டும் அல்ல,இந்த கொள்கைகள் கொண்டும் அறிவியலின் இருமுகத் தனமையை விளக்கலாம்.

சார்பியல்=மாறா விடயம் ஐன்ஸ்டினின் விதிகள், மாறும் விடயம் கருப்பு பொருள் இருப்பு சார்ந்து இதன் அளவீட்டு நிரூபணத் தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகிறது.

குவாண்டம் இயக்கவியல்= நிகழ்த்கவு சார்ந்து அறியும் விடயம், ஒரு செயலின் வேகம்,இடம் ஆகியவற்றை நிகழ்த்கவு சார்ந்தே அளவிட முடியும் என்பது மிக சரியாக அறிவியலின் இருமுகத் தன்மையை விளக்குகிறது.

பரிணாமம்= மாறா விடயம்[deterministic] =சூழல் சார் மாற்றம் இயற்கைத் தேர்வு

மாறும் விடயம்[chance]=சூழல் சாரா மாற்றம், சீரற்ற மரபு விலகல்[Random Genetic Drift].

பரிணாம அறிவியல் ஆய்வாளர்களில் ஒரு செயல் இயற்கைத் தேர்வினால் நடந்ததா இல்லை,சீரற்ற மரபு விலகலா என் குடுமிப் பிடி சண்டை அடிக்கடி நடக்கும்.

மாறா விடயத்தை சரியாக கணிக்க முடியும் அளவுக்கு, மாறா விடயங்களை கணிப்பது விளக்குவதில் சிக்கல் உண்டு.

ஆகவே அறிவியல் விதிகளும் சூழல் பொறுத்து மாறும்.ஒவ்வொரு விதியும் சரியாக இருக்க நிகழ்தகவு உண்டு.

சூழல் என்னும் போது சார்பியல்,மாறும் என்பது பரிணாமம்,அதன் நிகழ்த்கவு என்பது குவாண்டம் ஆகும்.

அறிவியலில் ஒரு புதிய விளக்கம் அளிக்கும் போது அறிவியல் ஆய்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மட்டுமே செயல்படுவார்.

ஏன் எனில் அவர்கள் இந்த இருமுகத் தன்மையை உணர்ந்து இருப்பதால்.

பாருங்கள் சென்ற வருடம் ஹிக்ஸ் போசான் ஆய்வில் ,கண்டுபிடிக்கப்பட்ட‌
போசானைப்  தொடர்ந்து பரிசோதித்து வந்த ஆய்வாளர்கள் நேற்று அது போசானாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என உறுதியாக் சொல்வதாக தெரிவிக்கின்றனர். ஹி ஹி.


Scientists at the Large Hadron Collider say the particle outlined in July 2012 looks increasingly to be a Higgs boson.
The Higgs, long theorised as the means by which particles get their mass, had been the subject of a decades-long hunt at the world's particle accelerators.

ஹிக்ஸ் போசான் ஒரு பொருளுக்கு நிறை எப்படி வருகிறது என்பதை விளக்குகிறது.இதன் மீது இன்னும் பல ஆய்வுகள் நடக்கும் போது அதிக விவரம் தெரியலாம்.

எடை கொடுக்கும் என்றால் மந்திரம் போல் எடை வருமா? என பரிசோதிப்பது அல்ல,அப்படி எளிய முறையில் விளக்க முடியுமா என இப்போது தெரியாது.

அணு உடைப்பான் அமைப்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பொருந்தும் விளக்கமாக போசான் துகள் இருப்பு சாத்தியம் அதிகம் என உறுதி செய்யப் படுகிறது.

அதன் மேல் விவாதம்,ஆய்வுக் கட்டுரை,பலரின்  பல பரிசோதனைகள் என சில வருடங்கள் செல்லும். பிறகு உறுதியானால் பிரபஞ்ச புதிரின் அடுத்த கட்டம் செல்வார்கள்.    

அடுத்த பதிவில் போசான் துகள் என ஒருமித்து கருத்து உறுதியானால்  என்ன ஆய்வுகள் தொடரும் என விவாதிப்போம்.

அப்புறம் இதையும் சொல்லி விடுவோம்!!!

"அவனே எடையை அளிக்கிறான்" அல்லது "அனைத்தையும் அளிக்கிறான்"என்பது போன்ற மத புத்தக வசனம் கொண்டு  ஹிக்ஸ் போசான் மத அறிவியல் வித்தை காட்டும் மத வாதிகள் கொஞ்சம் பொறுத்து செயல்பட அறிவுறுத்துகிறோம்.

அறிவியல் விதி வரும் முன்னே, மத அறிவியல் வசனம் வரும் பின்னே!!!

ஹி ஹி நாமே ஆலோசனை கொடுத்து விட்டோமா!!

நன்றி!!

Wednesday, March 13, 2013

தந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quote Mining] என்னும் குருட்டுவாதம்
வணக்கம் நண்பர்களே ,

சென்ற பதிவில் திருப்பி திருப்பி சொல்லும் சுற்று வாதம்[circular argument] பற்றி ஒரு எ.கா வுடன் அறிந்தோம். இப்பதிவில் இன்னும் ஒரு வாதம் பற்றி அறிவோம்.

மனிதர்களில் பலர் பலவிதமான் கருத்துக்களை கொண்டு இருத்தல் இயல்பே,இது அவர் பிறந்த ,வளர்ந்த சூழல், கல்வி சார்ந்தது என்பதல் பல முரண்பாடான கருத்துகள் உலகில் இருப்பதில் வியப்பு இல்லை.

ஆத்திகம் ,நாத்திகம்
முதலாளித்துவம்,பொது உடமை
ஜனநாயகம், மன்னராட்சி
மத சார் ஆட்சி,மத சார்பின்மை ஆட்சி

என பல ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் சார் விவாதம் நாம் வாழ்வில் கண்டு,அறிந்து இருக்கிறோம்.

இதில் மதவாதிகள் ஆத்திகர் என்னும் வேடம் பூண்டு,நாத்திகர்களுடன் நடத்தும் விவாதங்கள் அதிகம் நடைபெறுகிறது.

ஆத்திகம்,ஆன்மீகம் என்பதற்கு சான்று இல்லாமையால்,நாத்திகர்களின் தவறுகள் எதையாவது தோண்டி அதன் மூலம் வெற்றி பெற மதவாதிகள் முயல்வது அந்த விவாதங்களில் காண முடியும்.

சென்ற பதிவில் மதவாதிகள் தங்களின் நம்பிக்கையை நிறுவ சுற்றுவாதம் பயனப்டுத்துவர் எனக் காட்டினோம்.

கேள்வி:கடவுள் உண்டு என் எப்படி சொல்கிறாய்?

பதில்: மத புத்தகம் சொல்கிறது

கேள்வி: மத புத்தகம் சொலவது எப்படி சரியாகும்?

பதில்: இதில் அறிவியல் இருக்கிறது. இன்று ஒரு கண்டுபிடிப்பு வந்தால்,அந்த பொருள் வரும் வசனம் மறுநாள் காட்டுவோம்.

கேள்வி: ஏன் முன்னரே சொல்லக் கூடாது?.

பதில் :முடியும் என்றாலும், பிறகு சொன்னால்தானே உங்களுக்கு புரியும். ஹி ஹி. கண்டுபிடிப்பு வரவரத்தான் எங்களுக்கே வசனம் சரியாக புரிகிறது.

கேள்வி: மத புத்தகம் வழங்கப்பட்டவர் பொய் சொல்லி இருக்கலாமே!!

பதில்: மத புத்தகம் அப்படி சொல்லவில்லை.இதில் உள்ளது போல் சில அத்தியாயம், நாங்கள் ஏற்கும் வண்ணம் தர  முடியுமா?
*
இந்த வாதங்களில் இருக்கும் வெற்றுத் தன்மை எளிதில் புரியும், இதுதான் அதுதான் இது என் சுற்றி சுற்றி வருவது எதையும் முடிவுக்கு வரவிடாது.

ஒருவேளை எதிர்காலத்தில் வேறு வழியின்றி  பரிணாமம் ஏற்க வேண்டும் என்றாலும் ,அது ஏற்கெனெவே சொல்லி இருக்கிறது என்ற தொனியில் மட்டுமே சொல்லி ஏற்பார்.இப்போதைய பரிணாம எதிர்ப்பில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வை பார்க்க முடியும்.  

மத்வாதிகளுக்கு தங்கள் தரப்பின் சான்றின்மை நன்கு தெரியும் என்பதால் ஆம்/இல்லை கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பர். தங்கள் தரப்பு நிலைப்பாட்டை சொல்ல மறுப்பர். .இப்பதிவில் கூற்று சுட்டுதல்[quote mining] என்னும் வாதம் பற்றி அறிவோம்.
**

மதவாதிகள் பயன்படுத்தும் ஒரு கோமாளித்தனமான வாதம் கூற்று சுட்டுதல்[Quote mining] என்பதாகும்.

நாத்திகர் தரப்பு அறிஞர் ஒருவர் ஏதோ ஒரு காலகட்டத்தில், குறிப்பிட்ட சூழலில் சொன்னது இப்போதைய சூழலுக்கு தவறாகத் தெரிவதால், அவர் சொன்னது அனைத்தும், நாத்திகர் சொல்வது அனைத்தும் தவறே என்பதுதான் இந்த கூற்று சுட்டுதல் வாதம்.


Quote mining is the deceitful tactic of taking quotes out of context in order to make them seemingly agree with the quote miner's viewpoint or to make the comments of an opponent seem more extreme or hold positions they don't in order to make their positions easier to refute or demonize.[1] It's a way of lying. 

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சொன்னதை,அனைத்து விடயங்களுக்கு சொன்னதாக் திரித்து தங்கள் வாதத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சி.

மனிதர்கள் சூழல் சார் கைதிகள். ஒருவர் வாழும் சூழல் சார்ந்து மட்டுமே முடிவு எடுக்க,வாழ‌ முடியும். எனினும் சில கருத்து,அறிவுரை கூறும் போது அச்சூழலை மேம்படுத்தும் விதமாக சொல்வது உண்டு.இவை எதிர் காலத்தில் சூழல் சார்ந்து ஏற்க(நிராகரிக்க)ப்படும்.

ஒருவர் ஒரு பிரச்சினையில் கொண்ட நிலைப்பாடு என்ன என்பதை அவரின் வாழ்வு,செயல் சார்ந்து மட்டுமே அவதானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கூற்றினை மட்டும் சொல்லி அவரின் அனைத்து கருத்துகளையும் தவறாக காட்டுவது ஏமாற்றுவேலை ஆகும். 

ஒருவர் பல கருத்துகளை,பல சூழல்களில் சொல்லி இருக்கிறார்,சில நிலைப்பாடுகள் எடுத்து இருக்கிறார்.ஒரு அறிஞ‌ரின் ஒரு பிரச்சினை சார் கருத்துகளில் ஒரு கூற்றினை மட்டும் எடுப்பது சரியல்ல. அது எந்த சூழலில் சொல்லப்பட்டது,அதற்கு முந்தைய பிந்தைய நிலைப்பாடுகள் அனைத்தையும் சார்ந்து விமர்சிக்க வேண்டும்.

நம்ம மாப்ளே தாசின் பதிவில் பெண் திருமணம் செய்ய வேண்டாம், கருப்பையை எடுக்க வேண்டும்.ஆண் எனவே பெண் அழைக்கப்பட வேண்டும் என பெரியார் கூறினார் என் விமர்சித்து பதிவு இட்டார்.

அவரின் பதிவில் இருந்து
**
1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! 

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.
**

பெரியாரின் காலத்தில் பால்ய விவாகம்,தேவதாசி முறை,பலதாரமணம்,சொத்துரிமை இன்மை, விதவைக் கோலம் போன்றவை இந்து சமூகத்தில் மிக இயல்பாக இருந்தது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பெண் ஏன் அடிமை ஆனாள் என்னும் நூலில் தனது பெண் விடுதலைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து கூறுகிறார்.

அந்நூலில் பெண்களின் அக்கால நிலை குறித்து அவர் அடையும் கவலை,அடையும் கோபம் போன்றவை நன்கு அப்புத்த்கத்தில் வெளிப்படுகின்றன்.

புத்தகம் இங்கே தரவிறக்கி அனைவரும் படியுங்கள். ஒரு மனிதன் சுமார் 90 வருடங்களுக்கு முன் இந்த கொள்கைகள் கொண்டு இருப்பது வியப்புதான்.


முகப் புத்தக கண்க்கு கொண்டு தரவிறக்கலாம்.

பால்ய விதவைகளின் எண்ணிக்கை 1921ல் மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் சில இலட்சங்களில் இருந்ததையும் அப்புத்த்கத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் 10 வயதில் விதவைக் கோலத்தில் வாழ்நாள் முழுதும் கழிப்பதை பார்க்கும் ஒருவருக்கு வரும் கோபம்தான் பெரியாரின் அக்கருத்து. இப்படி திருமணம் செய்யாவிட்டால் என்ன,குழந்தை பெறாவிட்டால்தான் என்ன்? என்பது எனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை.பெண் ஆணுக்காக பணியாற்ற படைக்கப் பட்டவள் அல்ல.ஆணைக் கவரும் வண்ணம் உடை உடுத்தாமல் ஆண் போல் முடி வெட்டி, ஆடை அணிவதில் தவறு என்ன?

அதே காலத்தில் வாழ்ந்த காந்தி,  இவ்விடயத்தை ஒரு பிரச்சினை கருதி பலமுறை எழுதி இருக்கிறார்.


807. Widow-remarriage is no sin—if it be, it is as much a sin as the marriage of a widower is .All widowhood is not holy. It is an adornment to her who can observe it. If this sister has the courage, then let her speak out her mind to her uncle and brothers and seek their help. It they cannot assist in the marriage, then the sister will have to quit their house and take refuge in some widow-remarriage institution.
–(Translated from the Hindi Navajivan of 9-5-29.)

808. Some Brahman students told me that they cannot follow this principle, that they cannot get Brahman girls sixteen years old, very few Brahmans keep their daughters unmarried till that age, the Brahman girls are married mostly before 10, 12 and 13 years. Then I say to the Brahman youth, ‘Cease to be Brahman if you cannot possibly control yourself. Choose a grown up girl of 16 who became a widow when she was a child. If you cannot get a Brahman widow who has reached that age, then go and take any girl you like. And I tell you that the God of the Hindus will pardon that boy who has preferred to marry out of his caste rather than ravish a girl of twelve.’ –YI, 15-9-27, 314..

பாவம் திரு காந்தி பழமைக்கும்,நியாயம் இரண்டுக்கும் இடையில் தள்ளாடியாவது உண்மை சொல்கிறார்.

ஒருவரின் கருத்து இன்றும் சிலரை பாதிக்கும் போது அது விமர்சித்தால் சரி. ஏதோ ஒரு சூழலில் சொல்லும் கூற்றை திரித்து அது எப்போதும் பொருந்துவது போல் காட்டுவது தவறு.

தந்தை பெரியாரின் மீதான அவதூறுகள் அன்றில் இருந்து இன்றுவரை தொடர்வதே அவர் தமிழ் சமூகத்தின் மீது எழுப்பிய தாக்கமே.

ஒரு மனிதன் வாழும் கால நடைமுறைகளை விமர்சிப்பதும்,மாற்ற முயல்வதும் சமூக புரட்சிக்கு வித்திடுகிறது.

ஒரு மனிதர் வாழும் கால சூழல் சார்ந்து கருத்து சொல்வதும் இயல்பே.

பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

நாமும் அதைத்தான் மனிதர்களை மதம் ,இனம்,மொழி சார்பற்று சமமாக நடத்தாத மதம், அரசு அமைப்புகள் தேவையில்லை எனவே கூறுகிறோம்.

பெண்களின் மக்கள் தொகை குறைவதால், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும்,சில சமயம் நாடு விட்டு நாடு சென்றும் பெண் தேடும் வழக்கம் இன்று வந்த சூழலை நண்பர் நம்பள்கி பதிவிட்டார்.

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக மாறுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்பதன் பொருள் இதுதான்.பெண்ணை மதிக்காத மதம்,சமூகம் அழியும் என்பதையே பெரியார் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஆகவெ கூற்று சுட்டும் முறையில்  பெரியாரை விமர்சிக்கும் முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் அவரின் எழுத்துகளை தேடிப்பிடித்து பதிவிட வசதியாக இருக்கும்.

பெரியாருக்கு சிலை வைத்து மாலை போடுவதால் மூட நம்பிக்கை என்கிறார்கள்.இன்றும்  சாமி சிலைக்கு அனைவரும் கருவரை சென்று மாலை போட முடியாத சூழலில் வாழ்கிறோம். இன்னும் சில உயர் சாதி சாமியார்கள் சாதி சார்ந்தே ஆசிர்வாத முறையும் இருக்கும். அதற்கு பெரியார் சிலைக்கு யாரும் மாலை போடலாம் என்பது பரவாயில்லை.

சிலைக்கு மரியாதையை விட அவரின் எழுத்துகளைப் படிக்கலாமே 
என்பதே நம் யோசனை.

பெரியார் மீது விமர்சனம் வைக்க அவர் காலத்தில் வாழ்ந்த  உத்தமர்களின் கருத்துகளை சொல்லி விமர்சிப்பது உத்தமம்.

நம் தாசு மதிக்கும் இஸ்கான் குரு பிரபுபாத பெண் 16 வயதுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என் வலியுறுத்துகிறார்.

http://www.prabhupadavani.org/main/Walks/MW045.html

Pusta-krsna: In the Bhagavatam, you said that by the age of sixteen, a girl should be married, or twenty-four for a man. We were just reading that...

Prabhupada: That is the maximum.

Pusta-krsna: We were just reading that.

Prabhupada: The point is that supposing this twenty to thirty-six years is nice age... For women. But before twenty years, she is sacked, and her health is broken. What she'll produce, children? Because this is... The girls, from twelve years, thirteen years, nowadays, they begin sex.[Geneva, June 7, 1974]இக்கால பெண்கள் 12 வயதிலேயே கெட்டுப் போவதால் சீக்கிரம், அதிகபட்சம் 16 வயதுக்குள் திருமணம் முடிக்க பிரபுபாத வலியுறுத்துகிறார்.

1974 ல் பிரபுபாத சொல்வது சரியா? 1930 ல் பெரியார் சொல்வது சரியா??

இது கூற்று சுற்றுதல் ஆக இருக்கும் வாய்ப்பினை நாம் மறுக்கவில்லை. எனவே தாஸ் திரு பிரபுபாத இக்கருத்திற்கு மாற்று சொல்லி இருக்கிறார் என மறுப்பு பதிவு இடுவார் என எதிர் நோக்குகிறோம்.நன்றி!!!

Monday, March 11, 2013

"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை"

வணக்கம் நண்பர்களே,

நகைச்சுவைப் பதிவு இடுவதில் வஹாபிகளுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை மீண்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ம(னி)தாபிமானி என்ப்படும் பதிவர் நிரூபித்து உள்ளார்.


அறிவியல் என்பது என்ன என்பதை உணர மாட்டோம், பரிணாம அறிவியலை மறுத்தாலும் , அது குரானைப் பொய்யாக்கும் என்றால் பம்மி விடுவது, ஒரு உயிரினம் என்பதை எப்படி வரையறுப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என பல்விதங்களில் நகைச்சுவை காட்டி வரும் வஹாபி சகோ ஆஜிக் அகமதின் லேட்டஸ்ட் பதிவிற்கு மறுப்பு சொல்ல நாத்திகர் என்னும் இடத்தில் வஹாபிகள் என்ப் போட்டால் போதுமானது.

நாம் மூமின்களிலும் எதார்த்த சூழல் சிந்திக்கும் சூஃபிக்கள் இருப்பதால் வஹாபிகளின் வரட்டுத்தன பிரச்சாரம் மட்டுமே எதிர்த்து வாதம் வைக்கிறோம்.

சவுதி அரச மதம் வஹாபியியத்தை விளம்பரம் செய்ய அங்கிருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என அறிவோம்.

சவுதி அரசை விமர்சிக்கும் எந்த செயலும் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதும்,சில தினங்களுக்கு முன்பு சில் ஜனநாயகப் போராளி அரபு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

Saudi Arabia jails two prominent activists

Founding members of the banned Saudi Civil and Political Rights Association are sentenced to 10 years in prison.

A Saudi Arabian court has sentenced two prominent political and human rights activists to at least 10 years in prison for offences that included sedition and giving inaccurate information to foreign media.
Mohammed Fahd al-Qahtani and Abdullah Hamad are founding members of the banned Saudi Civil and Political Rights Association, known as Acpra, that documents human rights abuses.
Qahtani was sentenced to 10 years. Hamad was told he must complete the remaining six years of a previous jail term for his political activities and serve an additional five years.
They will remain in detention until a judge rules on their appeal next month.

பரம்பரை அரச உரிமை என்பது மதத்தின் படி தவறானது என சொல்லும் தைரியம் உள்ளவர்கள் சவுதியில் இருக்க முடியாது. இதுதான் வஹாபியியம்.

சரி பதிவுக்கு செல்வோம்.

 **

சவுதி அரசின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட இயற்பியல் ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் திருப்பி திருப்பி அதுதான் இது, யூதன் இட்டுக் கட்டியது  என்னும் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an Muslim, I know very good scientists who aren't Muslims

அறிவியல் நீங்கள் முஸ்லிமாக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் முஸ்லிம்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது ஆன்மீகத்திற்கான‌ வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முஸ்லிம் அல்லாதவர்களே. 

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 
**

நாம் மாற்றிய சேர்த்த சொற்களை சிவப்பில் காட்டி இருக்கிறோம். மதவாதிகள் மத(ட) புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு ஏமாற்று வேலை என்றாலும், அறிவியல் மதத்தை விட உயர்ந்தது என்பதால்  , அறிவியல் போல் மத புத்தகம் எனக் காட்டி இணை வைத்தாலும், காஃபிர் என்னும் சொல்லை நாத்திகர் என மொழி ஏமாற்றம் செய்தாலும் வஹாபியியத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாது!!.


அறிவியல் என்றால் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்

நாத்திகம் என்றால் சான்று இல்லாத விடயத்தை ஏற்க மறுத்தல்!!!

இன்னும் இங்கே படியுங்கள்!!!

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்மதம் நிரூபிக்க அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் வேண்டும். அப்படி எதுவுமே எந்த மதத்திற்கும்,குறிப்பாக‌ வஹாபியியத்திற்கு இல்லை என கூறுகிறோம்.மதத்திற்கு வரலாற்று சான்றுகள் இருந்தால் பதிவுகள் இட்டு விவாதிக்க வேண்டுகிறோம்.

மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.

முதலில் ஒருமித்த மத புத்தக[குரான்] மொழியாக்கம், ஒரே விளக்கம், துணைப்புத்தகங்ளில்[ஹதித்] மிச்சம் மீதி வடிகட்டிய தகவல்களில் ஒருமித்து கருத்து ஏற்பட்டால் மட்டுமே இஸ்லாம் ஒரே மதம் என ஏற்க முடியும். ஆகவே இஸ்லாம் என்பதை ஒரு குழு மதப் பிரிவுகள், மூலம் ஒன்றா என பரிணாம பாணியில் வினவுகிறோம். 

**
அறிவியலாள‌ர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சீர்தூக்கி பார்த்து சான்றுகளின் அடிப்படையில் ஏற்கப்படும்.அறிவியலாளர்களின் ஆய்வு மட்டுமே பரிசோதித்து ஏற்று கற்க மட்டுமே.அது தவிர்த்து அறிவியலாளர்களின் செயல்களைப் பின்பற்றுதல் முட்டாள்தனம்.

இராக்கெட் விட நல்ல நேரம் பார்த்து இராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் உண்டு.இயற்கைப் பாழாக்கும் தொழில் நுடபம், மனித சமூக அழிக்கும் ஆயுதங்களை வடிவமைக்கும் விஞானிகளும் உண்டு.

அறிவியல் என்பது சமூக நலனுக்கு,பாம‌ரனுக்கும் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அது தவிர 'அஆஇஈ' செய்தார் எல்லோரும் செய்வோம் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.எங்கள் 'அஆஇஈ' செய்தார்,அதனைக் கேள்வி கேட்காமல் ,பின்பற்றுவோம், பின்பற்ற முடியாத அருவறுப்புகளை வேண்டா வெறுப்பாக நியாயப் படுத்துவோம் என்பதுதானே வஹாபியம்.

உலகில் அதிக விஞ்ஞானிகள் யூதர்களே,அப்படி எனில் அது மட்டுமே சரியான மதமா??
ஆகவே அறிவியல் ஆய்வாளர்களின்  இறை நம்பிக்கை சார்ந்து , மதம் நாடுவது என்றால் யூதம் மட்டுமே சரி!!

வஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா??!!!.

**

பரிணாமம் உண்மை என்றால் வஹாபியியம் பொய்யாகி விடும் என்பதால் , அதனைக் காப்பாற்ற ஆஸிக் அகமது  மீண்டும் பரிணாம எதிர்ப்பு  பதிவு மட்டுமே அடிக்கடி எழுத வேண்டுகிறோம்.ஹி ஹி நாமும் மறுப்பு உடனே  இடுவோம்.

 மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் வழக்கம் போல் சொல்லாமல் போனால் கிடைக்கும் பலனின் எண்ணிக்கை[ ஹி ஹி அவங்கதான்} ஒன்று குறைந்து விடும்.

சகோதரி ரிசான நஃபீக்கின் கொடூர தண்டனைக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு பயந்த  காட்டு மிராண்டி சவுதி அரசு ,பொது இடத்தில் மக்கள் கூட்டம் முன் தலை வெட்டும் தண்டனைக்கு பதில் தூக்கு, துப்பாக்கியால் சுடுதல் என தனியான இடத்தில் தண்டனை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது என்பது நல்ல செய்தி

Saudis 'consider nullifying' public beheading

Saudi daily Al-Watan says that a ministerial committee is considering fatal shootings as an alternative.A ministerial committee is looking into formally dropping public beheadings as a method of execution in Saudi Arabia, a local newspaper has reported.
The authoritative daily Al-Watan said in its Sunday edition that the ministerial committee was considering fatal shootings as an alternative.
There was no official confirmation immediately available of the newspaper's report.


மாற்றம் ஒன்றே மாறாதது,சூழல் பொறுத்து மாற மறுக்கும் எதுவும் அழியும் என்பதே பரிணாம விதி!!மதவாதிகள் விவாதத்தில் சுத்தி வளைத்து மூக்கைத் தொடு என்னும் திருப்பி திருப்பி சொல்லும் ஒரே வாதம்[ circular reasoning ] தவிர்த்து எதையும் சொல்ல மாட்டார்கள் . அது பற்றி கொஞ்சம் அறியுங்கள்!!!

Circular reasoning (also known as paradoxical thinking[citation needed] or circular logic), is alogical fallacy in which "the reasoner begins with what he or she is trying to end up with".[1] The individual components of a circular argument will sometimes be logically valid because if the premises are true, the conclusion must be true, and will not lack relevance. Circular logic cannot prove a conclusion because, if the conclusion is doubted, the premise which leads to it will also be doubted.[2]Begging the question is a form of circular reasoning.[3]


இந்த புத்தகம் சொல்வதால் , கடவுள் உண்மை.

சரி புத்தகம் எப்படி உண்மை ஆகும்?

ஏன் எனில் அது கடவுளிடம் இருந்து வந்தது!! ஹி ஹி


This is circular argument!!!!


நாம் நம் மத்வாத சகோக்கள் யாரையாவது முன்னிலைப் படுத்தினால், அவர் பரிணாம கொள்கை மீது என்ன கருத்து கொண்டு இருக்கிறார் என கண்டறிவோம். அந்தவகையில் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கை உடைய ஆத்திகர்களை நாம் கன்டு கொள்வது இல்லை.

ஹம்ஸாவின் பரிணாமம் சார் கருத்து , அது அறிவியலில் ஒருமித்து சான்றளிக்கப்ப்ட்டு ஏற்கப் பட்ட கொள்கை என் ஏற்பதனைக் காட்டுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு சரியாக புரிய வைக்க முயற்சிக்க‌வில்லை என மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்.  Over the past few decades there has been a growing discourse on science, evolution and its compatibility with Divine revelation. This discourse can be summarised in the following way: the theory of evolution has been established as a scientific fact therefore a believer in a particular revealed text, such as the Qur’an, must reconcile evolution with their holy book. If there is no hope for reconciliation there are three main outcomes: the religious text is discarded, evolution is renounced, or a hope for a better understanding of the religious text and evolution in the future. However, in this growing discussion there is a hidden premise. This premise is that science produces certainty, evolution is fact and science is the only way to establish or verify truth claims. This premise is assumed in the popular discussion amongst many religious people, popular scientists and even the media, and by not bringing this premise to the forefront of the debate many Muslims (and fellow theists) have been left confused and disheartened.

...
Since revealed texts are certain and science cannot produce certain knowledge, revealed texts will always supersede science if there is a need for reconciliation and if there are irreconcilable differences. For the Muslim, this revealed text is the Qur’an, and this text can be established as a Divine book outside of the method and philosophy of science using deductive arguments.

அப்புறம் சமர் சால்ட் அடித்து, குரான் இறைவன் வேதம் என்பதால், அவசியம் என்றால் மட்டும் , பரிணாம கொள்கையோடு சமரசம் செய்து கொள்வோம் என் சொல்வது நகைச்சுவை. அதாவது குரான் சொல்வது பரிணாமத்துக்கு முரண்,ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்ல துணிவு இல்லாமல் ஹம்சா நழுவுகிறார்.


அதாவது பரிணாமத்தை ஏற்றே ஆக வேண்டிய சூழல் வந்தால், ஹி ஹி குரானின் பொருளை வழக்கம் போல் மாற்றி அதுதான் இது என  காட்டுவோம் என்பதை மார்க்க சிந்த்னையில் உரைக்கும் ஹம்சா நன்றாக கல்லா கட்ட வாழ்த்துகிறோம். 


நன்றி!!!  !!!!