Showing posts with label பிரபஞ்சம். Show all posts
Showing posts with label பிரபஞ்சம். Show all posts

Friday, March 29, 2013

மூன்று வகை நம்பிக்கைகள்!!



வணக்கம் நண்பர்களே,

நம்பிக்கை இல்லா மனிதர் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டு. அப்படி பிறரை பாதிக்காமல் நம்பிக்கைகள் தனிப்ட்ட வகையில் கொள்ள உரிமையும் உண்டு.

இப்பதிவில் நம்பிக்கைகள் அதன் வகைகள் குறித்து அறிவோம்.

நம்பிக்கை என்றால் என்ன?


Belief is the psychological state in which an individual holds a proposition or premise to be true.
ஒருவர் ஏற்கும் கொள்கை,கோட்பாடு உண்மை,சரி என நம்பும் மனநிலை.

சகோ இராபின் எப்போது  நாத்திகம்,பரிணாமம் என்பதும் நம்பிக்கையே என் நம்மோடு வாதிடுவார். பரிணாமம் என்பதற்கும் நாத்திகம் என்பதற்கும் தொடர்பு இல்லை, இரண்டும் வெவ்வேறு தளங்கள் என நாம் சொன்னாலும் அவரோ, இன்னும் சிலரோ ஏற்கப் போவது இல்லை!!.

இருந்தாலும் சகோ இராபினின் கூற்றும் உண்மைதான். ஆனால் நம்பிக்கைகளின் மூன்று வகை உண்டு என்பதால் ,அதில் ஆத்திகம்,நாத்திகம்,அறிவியல்[ப‌ரிணாமம்!] எந்த வகையில் வருகிறது என்பதை இப்பதிவில் அறிவோம்.

நம்பிக்கைகளின் மூன்று வகை,

1. சான்று சாரா நம்பிக்கை

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

முதலில் சான்று என்றால் ஏதோ ஒரு வகையில் அளவிட,கணக்கிட உணர முடியும் விடயம் எனக் கொள்ளலாம். இதனை பெரும்பான்மை ஏற்கும்,ஒருவரும் மறுக்க இயலா வண்ணம் இருக்கும். எ.கா பூமி ஏறத்தாழ கோள வடிவம் உடையது.விமானத்தில் பயணம் செய்த எவரும் ,இதனை எளிதில் உணர்ந்து இருப்போம்.ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதனை அறியாமல் இருந்தார்கள்.

1. சான்று சாரா நம்பிக்கை

இது பெரும்பாலும் ஆத்திகம் சார்ந்தது.மத புத்தகம் சொல்வதை ,சான்றுகள் ரீதியாக பார்க்க மறுத்தல்.மத புத்தகம்,சான்று முரண்படும் என்றாலும் இது வேறு,அது வேறு என சொல்லி,மத புத்கத்திற்கு சான்று தேவையில்லை, இது நம்பிக்கை சார் விடயம் என சொல்லி விடுவார்.

ஒரு நகைச்சுவை எ.கா வேண்டும் எனில் உலகம் தோன்றி 7000 ஆண்டு ஆனது என சொன்ன ஒரு படைப்புக் கொள்கையாளரிடம் ,பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? என் கேட்கப் பட்டது.

அதற்கு அவர் இவை எல்லாம் சாத்தான் என் போன்றவர்களை சோதிக்க காட்டும் மாய வலை என்று சொல்லி விட்டார் ஹி ஹி!!

இப்படி நம்புபவர்களை எதுவும் மாற்றுவது மிக கடினம். இவர்கள் அப்பாவிகள்தான், ஆனால் மதத்திற்காக எதையும் தியாகம் செய்யும் வண்ணம் இருப்பதால் தனக்குதானே அல்லது,பிறருக்கு தீமை விளையும் சாத்தியம் மிக அதிகம்.

பிரார்த்த‌னை மூலம் வியாதி குணப்படும் என நம்பி மோசம் போவது, பல மோசடி மதவாதிகளுக்கு பணம் அனுப்பி ஏமாறுவது , சூனியக்காரிகள் என் பலரை தீ வைத்து எரித்த கொடுமைகள்  ,பிற மதத்த‌வரின் உரிமைகளை மறுத்தல் என பல வகைகளில் துன்பம தரும் கொள்கை இது. 

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

உலகில் எப்போதும் விடை தெரியா கேள்விகள் அனைத்து துறைகளிலும் உண்டு. மனித சமூகத்தில் தொடர் விடை தேடுதலால் மட்டுமே முன்னேற்றம் வந்தது என்பதால் இயற்கையை அறியும்,முயற்சி தொடர்கிறது.

எப்படி பிரபஞ்சம் தோன்றியது? முதல் உயிர் எப்படி தோன்றியது போன்ற கேள்விகள் மதம்,தத்துவம்,அறிவியல் என் பல் துறைகளுக்கும் பொதுவான கேள்விகள்.

மதத்தின் படி அனைத்தும் அவன் செயலே என்பார்.தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாக சரியாக இருந்தால் போதும், ஆனால் அறிவியலுக்கு சான்று அவசியம்,அச்சான்றின் மீதான விள்க்கம்,கணிப்பு என தொடர்கதை ஆக செல்லும்.

இந்த இரண்டாம வகை நம்பிக்கையாளர்கள் ,விடை தெரியா கேள்விக்கெல்லாம் வித்தகனே காரணம் என்பார்.

விடை தெரிந்த கேள்வியை தவிர்ப்பார், ஒரு கேள்வியின் விடை சமீபம் ஆனால், கடவுள் வேறு கேள்வியின் விடையாக இடம் பெயர்வார்.


இவர்கள் மத புத்தகம் நம்பி ஏற்றாலும், கடவுளின் இருப்புக்கு இயற்கையின் மகத்துவமே காரணம் என்க் காட்டுவார்!!!

இந்தவகை வாதங்களை நன்கு வரையறுத்தவர் 15 ஆம் நூற்றாண்டு கிறித்துவ பாதிரி அக்கினோ ஆவார்.

http://en.wikipedia.org/wiki/Quinque_viae

அ) முதல் காரணி வாதம்[படைப்புக்கு படைப்பவன் அவசியம்]

ஆ) ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட பிரபஞ்சம்.

இ) விடை தெரியா கேள்விகளின் விடை வித்தகனே

ஈ) கடவுள் இல்லை என நிரூபிக்க முடியாமையால் கடவுள் உண்டு

என இயற்கையின் மீதான விவாதங்களில் செல்வதில் மத புத்த்கம் மீதான ஆய்வுகளை தவிர்க்கலாம்.

ஏன் எனில்

மத புத்தகம் கூறும் பெரும்பாலான கதைகளுக்கு,  அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.

மத புத்த்கம் மூல நூல்களின் மொழியாக்கம் போன்றவற்றுக்கும் மொழியியல் சான்றுகள் இல்லை.  

ஒரு பழைய புத்தகம் இப்படி சொல்கிறது என்றால் அதே போன்ற சொற்கள்,வாக்கியங்கள் ஏற்கெனவே உள்ள அதே மொழி புத்தகங்களில் அதே விதத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்க வேண்டும். அதன் இலக்கண நூல்கள்,அகராதி போன்றவை நூல் எழுதப்பட்ட காலத்திற்கு முந்தையது ஆக இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இருக்காது!!!

பெரும்பாலும் முந்தைய மொழிபெயர்ப்புகளை இபோது சுட்டுவதையே தவிர்ப்பார்.

ஆகவே இப்படி மத புத்தகம் சாராமல் மதம் காப்பாற்றும் ஒரு முயற்சியே இந்த இரண்டாம் வகை நம்பிக்கை.

விவாதங்களில் இவர்கள் கேள்வி கேட்பதையே விரும்புவார், நிரூபணத்தை எதிர் குழு மட்டுமே தர வேண்டும். எதிர் குழு ஒரு விடயத்தை 99% நிகழ்தகவுடன் சரி எனக் கூறினால்,இவர்கள் ஆகவே 1% தவறு.எங்கள் தரப்பு நிரூபிக்க அவ்சியம் இன்றி வெற்றி என குத்தாட்டம் போட ஆரம்பித்து விடுவார்!!!

பெரும்பான்மையான மத பிரச்சாரவாதிகள் இந்த நம்பிக்கையாளர் ஆக இருப்பார்.முதல் வகை நம்பிக்கையாளர்களுக்கு வழி காட்டி ஆவார்!!!

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

அறிவியல் என்பது இயற்கையை அறியும் இயல் என்பதால், தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் என்பதை நம் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நாத்திகம் என்பதும் கடந்த ,நிகழ் கால சான்றுகளின் மீது பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம், அதன் மீதான கணிப்புகளை எதிர்கால சான்றுகளின் அடிப்படையில் பொருந்தும் வண்ணம் விளக்கங்களை மாற்றி அமைக்கிறோம்.

விடை தெரியா கேள்விகளின் விடை எந்த அளவு அளிக்கப் பட்டு உள்ளது என்பதை சான்றுகளின் அடிப்படையில் பரிசோதித்து ஏற்கிறோம்.

பிரப்ஞ்சம் தோன்றியது 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் என்பதை கணிப்பாக ஏற்கிறோம். அதற்கு முந்தைய சூழலும் கூட சில கணிப்புகள் குவாண்டம் இயக்கவியல்,ஸ்டிரிங் தியரி அடிப்படையில் உண்டு.  அதன் பரிசோத்னை முடிவுகளுக்கு காத்து இருக்கிறோம்.

பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது ஆனால் நிலை மாறுகிறது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கணிப்பு!!!.

[பரிசோதனையின் படி] சூன்யம்[nothing] என ஒன்று இருக்கவே முடியாது,ஆகவே முடிவிலியும்[infinite] இருக்க முடியாது.

There is always something instead of nothing!!

பிரபஞ்சம் சூன்யத்தில் இருந்து தோன்றியது என் விளக்கும் பேரா லாரன்ஸ் க்ராஸ் அவர்களின் உரை!!


Universe from nothing!!

**
பரிணாமத்திலும் 380 கோடி ஆண்டு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களின் கிழைத்து தழைத்து பரிணமித்தன என்பதற்கு பல பரிசோத்னை சான்றுகள் உள்ளன என்பதும், முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது இப்போது பரிசோதனையின் படி விடை தெரியா கேள்வி எனவும் ஒத்துக் கொள்கிறோம்.

இந்த மூன்றாம் வகை நம்பிக்கை நாத்திகர்,அறிவியல் ஆய்வாளர்கள் கொள்ளும் சான்றின் மீதான கணிப்பு ஆகும். ஒருவேளை தவறு ஆனாலும் அடுத்த பொருந்தும் விளக்கம் ஏற்பதில் தயக்கம் இல்லாதவர்கள்.  

பரிணாமக் கொள்கை டார்வின் காலத்தில் இருந்து சான்றுகளின் படி பல மாறுதல்களை கண்டு உள்ளது.

பரிணாம மாற்றத்தின் காரணி இயற்கைத் தேர்வு மட்டுமே, அதுவும் மாற்றம் படிப்படியாக நிகழும் எனவே டார்வின் கணித்தார்.

ஆனால் இயற்கைத் தேர்வு[natural selection] அல்லாமல் சீரற்ற மரபு விலகலும்[random genetic drift] முக்கிய காரணி ஆக ஏற்கப் படுகிறது,படிப்படி[gradual] மாற்றம் மட்டும் அல்லாமல், நிறுத்திய நிலைத்தனமையும் [punctuated equilibrium] மாற்றமாக ஏற்கப் படுகிறது.

விளக்கம் மாறலாம், ஆனால் சான்றுகள் மாறாது.புதிய விளக்கம் பழைய ,புதிய சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.

ஆகவே நாத்திகர்களின் நம்பிக்கை சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே மாறும். ஆத்திகர்கள் சான்றளிக்கப் பட்ட மத புத்தக விரோத விடயங்களை ஒதுக்கி விடுவார்கள். நம்பிக்கைகளை சான்றின் அடிப்படையில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனை ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்!!!

பரிணாமமும் மதம் கூறும் படைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என் ஒத்துக் கொள்ளக் கூட அஞ்சும் பரிணாம எதிர்பார்களர்களை பதிவுலகில் அறிந்து இருக்கிறோம் அல்லவா!!! 

இந்த மூன்று வகைகளும் ஒன்றை ஒன்று சாராமல் இருக்க அவசியம் இல்லை.இந்த முதல் வகை,இரண்டாம் வகை கொஞ்சம் தொடர்பு இருக்கலாம், அதேபோல் இரண்டாம்,மூன்றாம் வகை கூட தொடர்பு இருக்க்லாம்.இப்படி Fuzzy!!


இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல உண்டு!!

பின்னூட்ட விவாதங்களின் மேல் அடுத்த பதிவு எழுதுவோம்!!

நன்றி!!! 

Saturday, March 23, 2013

பேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது!!!



\
This image unveiled March 21, 2013, shows the cosmic microwave background (CMB) as observed by the European Space Agency's Planck space observatory. The CMB is a snapshot of the oldest light in our Universe, imprinted on the sky when the Universe was just 380 000 years old. It shows tiny temperature fluctuations that correspond to regions of slightly different densities, representing the seeds of all future structure: the stars and galaxies of today.
CREDIT: ESA and the Planck Collaboration 

வணக்கம் நண்ப‌ர்களே,

நாம் வாழும் பூமி, பேரண்டத்தில் மிக மிக...மிக சிறிய பகுதி என்பதை அறிவோம். ஏற்கெனெவே ஒரு பதிவில் பேரண்டத்தின் வயதை எப்படி கணக்கிடுவது என அறிந்தோம்.



அதன்படி நமது பேரண்டத்தின் வயது 1370 கோடி ஆண்டுகள் என கணக்கிடப் பட்டு இருந்தது.அறிவியல் என்பது தொடர்ந்த அளவீட்டு சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்பதை ,அது குறித்து கற்கும் போது மன‌தில் கொள்வது மிக அவசியம்.புதிய சான்றுகளின் மீது ஏற்கெனவே உள்ள கணிப்புகள் பரிசோதிக்கபட்டு, அவசியம் எனில் விள‌க்கங்கள் மாற்றியமைக்கப் படும்.

அறிவியலின் இத்தன்மைதான் அதனை உறுதிப் படுத்துகிறது. சென்ற வாரம் பேரண்டம் தோன்றியது இன்னும் 8 கோடி வருடங்களுக்கு முன் எனக் கூறுகிறார்கள். அதாவது இபோதைய பேரண்டத்தின் வயது சான்றுகளின் படி 1370+10=1380 கோடி ஆண்டுகள் அல்லது 13.82 பில்லியன் ஆண்டுகள்[தோராயமாக].


பேரண்ட விரிவடைதல் என்பதும் பரிணாமம் போல் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வு ஆகும். பரிணாம சான்றுகள் உயிரினப் படிம‌ங்கள் போல், பேரண்ட அக்கால நிலை கணக்கிட ஒளிப்படிமங்கள் கொண்டே கணக்கிடுகிறார்கள்.

முதலில் தொலை நோக்கி கொண்டு விண்மீன் திரட்சிகளின்[galaxy] நகரும் வேகம் ,சிவப்பு விலக்கம் கொண்டு கண்க்கிட்டவர்கள் இப்போது துணைக்கோள்களின்[sattelite] உதவியுடன் எடுக்கப்படும் பழைய ஒளிப்படிம‌[fossilized light] புகைப்படங்கள் மூலம் முந்தைய பேரண்டம் எப்படி இருந்தது எனக் கணக்கிடுகிறார்கள்.

காஸ்மிக் நுண்ணலை பின்புலத்தை[Cosmic Microwave Background  கணக்கிடும் வகையில் இந்த புகைப் படங்கள் எடுக்கப்படுகின்றன.

ப்ளான்க் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்களின் மூலம் 380,000[சுமார் 4 இலட்சம்] ஆண்டுகள் முந்தைய பேரண்டத்தின் நிலை அறிய முடிந்தது. இது ப்ளான்க் விண்கலம் பற்றிய விக்கி சுட்டி.  


On 21 March 2013, the European-led research team behind the Planck cosmology probe released the mission's first all-sky map of the cosmic microwave background.[17] The map suggests the universe is slightly older than thought. According to the map, subtle fluctuations in temperature were imprinted on the deep sky when the cosmos was about 370,000 years old. The imprint reflects ripples that arose as early, in the existence of the universe, as the first nonillionth (10-30) of a second. Apparently, these ripples gave rise to the present vast cosmic web of galaxy clusters and dark matter. The team estimates the universe to be 13.798 ± 0.037 billion years old, containing 4.9% ordinary matter, 26.8% dark matter and 68.3% dark energy.[18] Also, the Hubble constant was measured to be 67.80 ± 0.77 (km/s)/Mpc.

இந்த புகைப்படத்தின் மீதான ஆய்வுகள் பேரண்ட வயதை சிறிது அதிகப்படுத்தியது[13.798 ± 0.037 billion years].

கருப்பு ஆற்றலின் அளவைக் குறைத்து[68.3%],கருப்பு பொருளின்[26.8%] ,அறிந்த பொருளின்[4.9%] அளவு வீதங்களை சிறிது மாற்றியுள்ளன.

இதெல்லாம் எப்படி எனில் புகைப்படம் என்பது காஸ்மிக் நுண்ணலைகளின் அலைநீளம் சார்ந்த கணக்கீடுகளின் அடிப்படையில்தான்.

சரி இதுகருப்பு பொருள்,கருப்பு ஆற்றலை உறுதிப்படுத்தி இருக்கிறது என சொல்ல முடியுமா? என்றால் , மீண்டும் மீண்டும் அறிவியல் என்பது "தொடர் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்" என்பதை ஞாபகத்தில் இருத்தவும்.கருப்பு பொருள்&ஆற்றல் குறித்த நம் முந்தைய பதிவு.


ஐன்ஸ்டினின் விதிகள் அடிப்படையில் ஏற்படும் பிழையின்  காரணி கருப்பு பொருள்,கருப்பு ஆற்றல் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த விளக்கம் என்பதால் இதுகுறித்து தெளிவாக இப்போது சொல்ல முடியாது.

இந்த 380,000 ஆண்டு பேரண்டத்தின் புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்டதில் மிகப் பழமையானது ஆகும். இன்னும் இதுகுறித்த மேலதிக தகவல் கிடைத்தால்[ஆய்வுக் கட்டுரைகள்] நம் தளத்தில் பகிர்ந்து விவாதிப்போம்!!!

நன்றி!!!

Wednesday, January 30, 2013

சார்பியலின் அடிப்படை லோரன்ஸ் மாற்றி சமன்பாடு[Lorrenz Transformation]




வணக்கம் நண்பர்களே,

ஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா பதிவில் , நமது அன்புக்கும்,பாசத்துக்கும் உரிய மாப்பிள்ளை, ஆன்மீக செம்மல், தமிழ்மண  கீதோபதேசிகர் ஜெயதேவ் தாஸ் ஐன்ஸ்டினின் பொது சார்பியலின் கணித சமன்பாடுகளை பின்னூட்டத்தில் விளக்க சவால் விட்டார். அதாவது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகள் அடிப்படையில் ஈர்ப்பு விசை, இடப் பெயர்ச்சி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதே கேள்வி. நியுட்டனின் விதியின் படி சுலப‌மாக கண்க்கிட முடியும் என்றாலும் ,ஐன்ஸ்டினின் விதிப்படி எப்படி என்பது மிகவும் அருமையான கேள்வி.

நியுட்டனின் விதி எளிய சூத்திரம் படம் பாருங்கள்!!


ஈர்ப்பு விசை காணும் சூத்திரம் படங்களில் விளக்கப்பட்டது. பூமியை நோக்கி விழும் பொருள் 'g' என்னும் முடுக்கத்தில் பூமியை நோக்கி விழுகிறது, தூரத்திற்கும்,நேரத்திற்கும் உள்ள தொடர்பினை இப்படி கூறலாம்.

g=GM/R^2=9.81 m/s^2

Distance s = 1/2 g t2     

Velocity v = g t
  

நியுட்டன் விதி பற்றி சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்.

***

ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கொள்கை பிரபஞ்சத்தை கால வெளி அமைப்பாக[space time structure] வரையறுக்கிறது. அந்த கால வெளியின் அமைப்பை சமன்பாடுகள் ஊடாக ,அதில் ஏற்படும் மாற்றமே கால&இடப்பெயர்சி என வரையறுக்கிறது.

நமக்கு எதையும் மேலே சொன்னது போல்  பொத்தாம் பொதுவாக, பட்டும் படாமல் மேலோட்டமாக  சொல்வதில் விருப்பம் கிடையாது.

தெளிவாக புரிந்து கணக்கீடு செய்யும் வண்ணம் மட்டுமே விளக்கம் வேண்டும் என்பதும், வரும் மாறுபட்ட கருத்துகள் ஆவணப் படுத்தி ஒவ்வொன்றுக்கும் வரி விடாமல் பதில் அளிக்க வேண்டும் என்பதும் நம் கொள்கையே!!.

ஆகவே சார்பியல் பற்றி கணிதரீதியாக விளக்கும் ஒரு முயற்சி, தொடர்ந்து எழுதுவேனா என்பதை விட, ஒவ்வொரு பதிவிலும் ஒரு குறிப்பிட்ட அடிப்படை விடயத்தை விளக்குவது என முடிவு செய்து இருக்கிறேன்.

இந்த பதிவில் கால வெளி என்றால் என்ன என்பதையும் ,அதன் மீது செய்யப்படும் லோரன்ஸ் மாற்றம் பற்றியும் அறிவோம்.

ஒரு வகுப்பில் பாடம் எடுப்பது என்றால் அதில் உள்ள மாணவர்கள் ஏற்கெனெவே இப்பாடத்துக்கு  தெவையான அடிப்படை விடயங்கள் அறிந்து இருப்பார்கள் என்னும் நம்பிக்கையில் மட்டுமே பாடத்தை தொடங்குகிறோம்.

ஆனால் ஒரு பொதுவான இணையத்தில் கணிதரீதியாக சொல்ல முயலும் போது இந்த நம்பிக்கை கொள்ள இயலாது. எனினும் ஒரு 10வது படித்தவர் புரிந்து கொள்ளும் அளவில் எழுத வேண்டும் என்பதே நம் முயற்சி , வழக்கம் போல் விவாதித்து, சீர் திருத்தி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

சந்தேகங்கள் எதனையும் பின்னூட்டத்தில் கேளுங்கள்!!. இயன்ற வரை பதில் அளிப்பேன்!.

சரி முதலில் கால வெளி என்றால் என்ன என அறிவோம்.

காலம் என்றல் நேரம், வெளி என்றால் இடம். ஒரு இடத்தை எப்படிக் குறிப்போம். ஜி.பி. எஸ் பயன்படுத்தும் காலம் என்பதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தை அதன் அட்சக் கோடு ,தீர்க்க கோடு [Latitude and Longitude ] வெட்டும் இடம் எனவும், இதில் காலமும் மாறும் என்பதை நாம் அறிவோம்!!.

இதன் அடிப்படை  க்ராஃப் தாள்[Graph Sheet] எனப்படும் வரைபடத்தாளில்  புள்ளிகள் குறித்தல். இவை  கார்டிசியன்[Cartesian] ஆயத் தொலைகள் என்ப்படும். க்ராஃப் தாள் இரு பரிமாணம் கொண்டது அதாவது இரு செங்குத்தான அச்சுகளை[X,Y] அடிப்படையாக கொண்டு, புள்ளியின் செங்குத்து தூரங்கள் அளவில் புள்ளிகள் குறிக்கப் படுகின்றன‌.
      
 
இரு பரிமாணம்                                                 முப்பரிமாணம்


இப்போது லோரன்ஸ் மாற்றம் பற்றி மட்டுமே அறிய முயல்வோம்!!

சார்பியலைப் பொறுத்தவரை அடிப்படை என்னவெனில் நமக்கு நாம் 100% நல்லவர்கள், நம்மிடம் எப்படி பிறர் நடப்பதாக நினைக்கிறோமோ அது சார்ந்தே  அவர்கள் பற்றிய மதிப்பீடு வருகிறது!!

அது போல் பிரப்ஞ்சத்தில் உள்ள  ஒரே இயகத்தில் உள்ள தளத்தின்[plane] ஒவ்வொரு புள்ளிக்கும் ,[தள] ஆதாரப் புள்ளி சார்ந்து  முப்பரிமாண ஆயத்தொலைகள் 3, கால அளவு உண்டு.

Space Time ST=[x,y,z,t]


எ.கா ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் உங்கள் இருக்கையின் S6, 36 என்றால் இரயிலில் உங்கள் இடம் குறிக்கிறது.

இப்போது இன்னொரு இயக்கத்தில் உள்ள  தளத்தின் புள்ளிகள் வேறு கால்வெளியில் இருக்கும்.

ST1=[x',y',z',t']

இப்போது ஒரு இயக்க தளத்தில் இருந்து இன்னொரு  இயக்க தளத்தின் இயக்கம் கணக்கிடும் போது  கால வெளியின் மாற்றம் லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள் ஆகும்.



மேலெ காட்டப் பட்டுள்ள தளத்தை[Frame or Plane] எடுப்போம். இதில் நிலையான தளம் இரயில் ப்ளாட்ஃபார்ம் என எடுப்போம், நகரும் தளம் இரயில் என எடுப்போம்.

எளிதாக இருக்க இரயில் 'X' திசையில் மட்டும் நேராக செல்வதாக எடுப்போம்.

இப்போது லோரென்ஸ் சமன்பாடுகள்  இப்படி இருக்கும்!!!!


                                          
Direct Transformation                                         Reverse Transformation

இதில் என்பது v இரயிலின் வேகம், c என்பது ஒளியின் வேகம் ஆகும்.
 c=3x10^8 m/s[ approx]


c = 299,792,458 ± 1.2 m/s


நீங்கள் நிற்கும் இடத்தை ஆரம்ப புள்ளி[Origin] எனக் கொண்டால் 10 வினாடி கழித்து
இரயில் இயக்கம்  உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

x=0,y=0,z= 0, t=10 , v=108 km/hour எனில் x',y',z',t'=?

v=30m/sec

x'=-300.0000000001 mts[ - indicates direction]
y'=0
z'=0
t'=10.00000000000001

இப்போது இரயிலில் இருந்து உங்கள் இயக்கம் கணக்கிட்டால்

x'=0
y'=0

z'=0
t'=10

x=300.0000000001 mts[ - indicates direction]
y=0
z=0
t=10.000000000000011

Approximate calculations!!


வியப்பாக இல்லை!!

உங்களுக்கு 10 வினாடி இரயிலில் உள்ளவருக்கு உங்களைப் பொறுத்து சிறிது மாறுபட்டு வருவது சார்பியலின் அடிப்படை.

வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் இரயில் ஒளியின் வேகத்தில்  60% செல்கிறது என எடுப்போம்.
v=0.6 c


x'=-6*c/0.8=--7.5*c mts=-21.6*10^8 mts



y'=0



z'=0



t'= 10/0.8=12.5 seconds!!!


இன்னும் நிறைய விடயம் உண்டு என்றாலும் இப்போது இத்தோடு நிறுத்துகிறேன்!

வரும் கேள்விகளை ,பதில்களை அடுத்த பதிவாக்குகிறேன்

இந்த சூத்திரம் எப்படி வந்தது?. இதைக் கொண்டு ஒளியின் வேகத்தை மீறவே முடியாது என நிரூபிக்க முடியும் என்பதையும் அடுத்த பதிவில் பர்ப்போம் லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள் புரிந்தத என்பது மட்டுமெ நம்து கேள்வி!!

விவாதிப்போம்!!

நன்றி



Saturday, December 29, 2012

அண்டவெளி ஊடுருறுவல் துளை [worm hole] என்றால் என்ன?






வணக்கம் நண்பர்களே,
சகோ ஜெனில் வார்ம் ஹோல்[worm hole] பற்றி ஒரு பதிவு எழுத முடியுமா என ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டு இருந்தார். சரி உருப்படியாக எழுதுவோம் என கொஞ்சம் விவரங்கள் தேடி பதிவிடுகிறேன்.

முதலில் இதற்கு சரியான தமிழ்பதம் என்ன என யோசித்து அண்டவெளி ஊடுறுவும் துளை எனப் பெயரிட்டேன். விக்கிடியாவில் உள்ள பெயர் நம்க்குப் பிடிக்கவில்லை. சரி பின்னூட்டங்களில் இதனை விவாதிப்போம்.

வார்ம் ஹோல் என்றால் என்ன? விக்கிபிடியாவில் இருந்து வரையறை செய்வோம்.
In physics, an Einstein-Rosen Bridge (or wormhole) is a hypothetical topological feature of spacetime that would be, fundamentally, a "shortcut" through spacetime.

இது ஐன்ஸ்டின்[Albert Einstein ] ,ரோசன்[Nathan Rosen ]  ஆகியோரின் வெளிநேரம்[spaceime] பற்றிய‌ 1935 ஆம் வருட‌ கருதுகோள் ஆகும். வெளிநேரம் ஊடே செல்லும் குறுக்கு வழி ஆகும். இதன் மூலம் ஒளியை விட வேகமாக பயணிக்க இயலும். இது கருதுகோள் மட்டுமே என்பதால் பரிசோதிக்கக் கூடிய சான்றுகள் இதுவரை இல்லை.

ஒரு எளிய எ.கா எனில் பூமியின் மேற்பரப்பு வளைந்து இருப்பதால் ,இரு தொலை தூர ஊர்களுக்கு சுரங்கம்  வெட்டி,அதன் மூலம் நேர் கோட்டில் பயணம் செய்தால் சீக்கிரம் சென்று விட முடியும் அல்லவா அது போல்தான். ஒளியும் [ஈர்ப்பு விசையால்]வளைந்து பயணம் செல்லும் என்பதும் நாம் அறிந்ததே.


Wormhole illustration

A beam of light traversing a path between two points in curved space-time can take longer to complete the journey than a hypothetical spaceship taking advantage of a wormhole’s shortcut connection between the two distinct regions of space-time.

கொஞ்சம் கற்பனைக் குதிரையை தட்டி எழுப்புங்கள். அதாவது இந்த பிரபஞ்சமே ஒரு ஏதோ ஒரு வடிவத்தில் பல பரிமாணங்களில் உள்ளது. அதில் எல்லைப் புள்ளிகள் ஒன்றுக் கொன்று இடையே ,இந்த வார்ம் ஹோல்களால் இணைக்கப் பட்டு உள்ளன. ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு ஒளியைவிட வேகமாக பயணிக்க முடியும்!!.

அது எப்படி? நிரூபிக்க முடியுமா? என கேட்காதீர்கள்!!. நான் சொன்ன‌ விவரங்கள் இப்போதைய அறிவியலின் கருதுகோள்கள்.

கருதுகோள் அடிப்படை சான்றுகள் இல்லாமல் வைக்க முடியுமா? வார்ம் ஹோல் இருக்கா இல்லையா,அதை சொல் நண்பா என்கிறீர்களா!!!.

அதாகப் பட்டது ஆல்பட்ர் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கொள்கையானது ஈர்ப்பு விசை,காலம்,நேரம் போன்றவற்றை தொடர்பு படுத்தி சில வகைக் கெழு சமன்பாடுகள்[differential equations] ஆக்கியது.


அச்சமன்பாடுகளின் தீர்வுகள் பல. அதில் ஒன்றே பெருவிரிவாக்க கொள்கை,பிரபஞ்சம் விரிவடையும் போதும் அதன் எல்லைப் புள்ளிகளுக்குள் பயணிக்கும் குறுக்கு வழி இருக்கும் என்பதும் இந்த தீர்வின் நீட்சியே!!.


அப்போ வார்ம் ஹோல்  என்பது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகளின் ஒரு தீர்வு அல்லது விளக்கம் அப்படினு மட்டுமே சொல்கிறேன் சகோ!!
See this!!



இந்த பொது சார்பியல் சமன்பாடுகளைக் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்!! ஹி ஹி


இந்த சமன்பாடுகள் தவறென்று ஒதுக்கப் படாதவரை வார்ம் ஹோல்ஸ் உண்டு என அறிவியல் தேடுகிறது.அவ்வளவுதான்!!

கருந்துளை,வார்ம் ஹோல் இரண்டுமே ஐன்ஸ்டினின் சமன்பாடுகளின் நீட்சி விளக்கமே. கருந்துளை என்பது இப்போது உண்டு என சான்றளிக்கிறார்கள். 

கருந்துளை பற்றிய நமது முந்தைய பதிவு.

http://aatralarasau.blogspot.com/2011/10/black-hole-18.html

ஆகவே வார்ம் ஹோல் என்பதும் உண்மை ஆகுமா? என்பதை காலம் பதில் சொல்லும்.

நன்றி!!

Wednesday, November 28, 2012

பேரண்டம் தோன்றிய காலம் எப்படி கண்டு பிடித்தார்கள்???



photo of Edwin Hubble looking into telescope
 

பேரண்டம்  தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று பலருக்கு தெரியும்.இளைய பூமி கொள்கையாளர்களை[Young earth creationist] தவிர மற்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.சரி இதனை எப்படி கணக்கிட்டார்கள் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

பேரண்டத்தின் தோற்றத்தை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கை பெரு விரிவாக்க கொள்கை எனப்படும் ஃபிக் பேங் (big bang theory) கொள்கையாகும்.அதாவது 13.8 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்து இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதும்,இன்னும் இப்பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த விரிவடைதலை நிரூபித்தவர் திரு எட்வின் ஹூபிள் அவர் தொலை நோக்கியின் மூலம் செய்த ஆய்வுகள் மூலம் பிற காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) நம்மிடம் இருந்து விலகி செல்கின்றன என்று கண்டறிந்தார்.ஹூபிளின் ஆய்வு முடிவுகளின்படி நமக்கு(பூமிக்கு) தூரத்தில் உள்ள காலக்ஸிகள் வேகமாக விலகுவதும்,அருகில் உள்ளது மெதுவாக விலகுவதையும் வரை படத்தில் இருந்து அறியலாம்.ஏன் இப்படி ?காணொளியில் காட்டப்படும் பலூன் விரிவடைவதை யோசித்தால் புரியும்.இவரின் ஆய்வுகள் சிவப்பு விலக்கம்[red shifts] பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

அந்த தொடர்புகளை ஒரு வரைபடமாக (பூமியில் இருந்து)தூரம்(d) அதன் விலகி செல்லும் வேகம்(V) ஆகியவற்றின் தொடர்பாக வரைந்தார்.இதற்கு தோராயமாக ஒரு நேர்கோட்டு சமன்பாடு[linear equation] அமைத்தார் இது ஹூபில் விதி எனப்படுகிறது.அந்த மாறிலி(H0) ஹூபில் மாறிலி(constant) எனப்படுகின்றது
v = H0 x d

1/H0=d/v==meter/(meter/sec)=time
graph of recession velocity as function of distance 
for distant galaxies 

ஆகவே ஹூபில் மாறிலியின் தலைகீழி(reciporocal) பிரபஞ்சத்தின் வயது ஆகும்.ஹுபில் மாறிலி வரை படம்,அதன் ஆயத் தொலைவுகள் மூலம் H0 = 71 km/s/mpc . என கணக்கிடப்பட்டது.இதனை கணக்கிட கணிணி கணித மென்பொருள்கள் தேவை.

1mpc=One megaparsec = 3.086×1019 km



H0=71/ 3.086×1019 s-1= 2.30×10−18 s−1

Time=Age of the universe=1/H0=4.35×1017 seconds or 13.8 billion years.

இது ஒரு தோராய முறை ஏனெனில் ஹூபில் மாறிலி கணக்கிடுவதில் உள்ள தவறின்(error) அளவையும் சேர்க்க வேண்டும்.அந்த அளவு நமக்கு தேவையில்லை நமக்கு தெரிய வேண்டியதெல்லாம்.

1. ஹூபில் பூமியில் இருந்து காலக்ஸிகள் நகரும் வேகம் ,தூரம் ஆகியவற்றை கணித்தார்.

2.அதற்கு ஒரு சமன்பாடு அளித்தார் (ஹூபில் விதி)

3. ஹூபில் மாறிலியின் தலை கீழி பிரபஞ்சத்தின் வயது ஆகும்(ஏன்,எப்படி என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!)







http://en.wikipedia.org/wiki/Age_of_the_universe

http://imagine.gsfc.nasa.gov/YBA/M31-velocity/hubble-more.html


 இது நாம் ஏற்கெனவே சென்ற வருடம் எழுதிய பதிவு. சகோ இக்பால் தொன்மங்களின் வயது கண்டறிவது பற்றிய பதிவு கண்டவுடன் ,இதையும் பகிரலாம் என தோன்றியது. சான்றுகள் மூலமே அறிவியல் விள்க்கம் வரும். எதையும் ஒருவர் சான்றுகள் இன்றி அறிவியலில் சொல்ல முடியாது.

இங்கு கூட பாருங்கள்.ஒளிப் படிமங்கள் i.e  தொன்மை கால ஒளியின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டது. 

இங்கே பருங்கள் பல விண்மீன் திரட்சிகளின்[galaxies] பெயர்களோடு அவற்றின் விலகும் வெகம் கணித்தலை,ஹூபில் மாறிலி கண்டுபிடித்தலை ஒரு பாடத்திட்ட ஆய்வு ஆக‌ செய்யும் வாஷிங்டன் பல்கலைக கழக சுட்டி.



http://www.astro.washington.edu/courses/labs/clearinghouse/labs/HubbleLaw/hubbles_law_procedure.html




காணொளி பாருங்கள் இன்னும் தெளிவாக புரியும்.சந்தேகம் இருந்தால் விவாதிப்போம் நன்றி

Tuesday, April 24, 2012

கருப்பு ஆற்றல்& கருப்பு பொருள்[Dark Matter&Dark Energy] என்பது கட்டுக் கதை ஆகுமா?



இப்போதைய  பேரண்டவியலில் அறிவியலில் ஏற்றுக் கொள்ள்ப்பட்ட  கொள்கையாக்கம் "அதிகரிக்கும் வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்" என்பதுதான். பேரண்டத்தின் விரிவடையும் வேகம் அதிகர்ப்புக்கு காரணம் அதில் உள்ள கருப்பு பொருள் என்னும் கொள்கையாக்க விளக்கம்,ஆய்வுகளுக்கு 2011 இயற்பியல் நோபெல் பரிசும் வழங்கப்பட்டது.

சரி கருப்பு ஆற்றல்& கருப்பு பொருள் என்றால் என்ன?


மேலே குறிப்பிட்ட சுட்டியின் தமிழாக்கம் அளிக்கிறோம். 90களின் தொடக்கத்தில் பேரண்டம் விரிவடைவது குறித்து அறிவியலில் ஒருமித்த  கருத்தாக்கம் ஏற்கப்பட்டது. அது சார்ந்து இந்த பேரண்டம் எவ்வளவு காலம் விரிவடையும்?அதற்கு ஒரு எல்லை உண்டா  என்பதும் விடையளிக்க முற்பட்டனர்.

இரு வாய்ப்புகள்

1.ஒரு அள்வு விரிவாக்கதின் பின் பேரண்டத்தின் ஆற்ற‌ல் அடர்த்தி அதனை மீண்டும் சுருங்க வைக்கும் அள்வு இருக்க்லாம்.

அல்லது

2.அதன் ஆற்றல் அடர்த்தி மிக குறைவாக இருந்து பேரண்டம் எப்போதும் விரிவடைந்து   கொண்டே இருக்கலாம்.

இரண்டு வாய்ப்புகளிலும் கால்ப்போக்கில் விரிவடையும் வேகம் ஈர்ப்பு விசையால் குறைய வேண்டும் என்பது கணிப்பு. ஆனால் விரிவடையும் வேகம் குறைவாதாக் பரிசோதனை அள்வுகளில் தெரியவில்லை. இப்பேரண்டம் முழுதும் பருப்பொருள்[matter] உள்ளது ஈர்ப்பு விசை என்பது அனைத்தையும் இழுக்கிறது. ஈர்ப்பு விசை என்பது ஒன்றை நோக்கிய‌ மற்றொன்றின் பரஸ்பர இழுப்பு மட்டுமே இது விலக்கு விசை அல்ல என்பதை புரியவேண்டும்.

1998ல் ஹூபில் தொலை நோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வு அள்வுகள் தூரத்தில் உள்ள வெளித் திரள்களின் நடசத்திரவெடிப்பு(சூப்பர் நோவா)களின் விலகும் வேகத்தை கண்க்கிட்டது.

இப்போதைய வேகத்தை விட கடந்த காலத்தில் பேரண்டம் குறைவான் வேகத்தில் விரிவடைந்தது என்பதுதான் இந்த பரிசோதனையின் முடிவு.

இந்த விரிவடைதலின் வேக அதிகரிப்பை எப்படி விள்க்குவதென்ற முயற்சியில் மூன்று கருதுகோள்களை முன் வைக்கின்றனர்.

1.ஐன்டினின் ஈர்ப்புவிசை மற்றும் அண்டவியல் மாறிலி சார்ந்த விளக்கம்.

2. பேரண்டம் முழுதும் ஒரு அறியா திரவம் போன்ற பருப்பொருள் நிறைந்து உள்ளது.

3. ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசைக் கொள்கை தவறு மாற்றுக் கொள்கை தேவை.

இதன் விடை இன்னும் சரியாக அறியப்படவில்லை எனினும் இப்படி விரிவடையும் வேகம் அதிகரிப்பின் காரணம் எது என்ற கேள்விக்கு விடையாக  கருப்பு ஆற்றல் என வரையறை செய்தனர்.

கருப்பு ஆற்றல்

பேண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஒருவகை ஆற்றல் என்பதே இதன் வரையறுப்பு.கட‌வுளை அறிய முடியுமா என்றால் அறிய முடியாததுதான் கடவுள் என்ற  குழப்பமான‌ மதவாதிகள் விளக்கம் போல் உள்ளதா.மன்னிக்கவும் அறிவியலின் வரையறுப்பு இதுதான்.

அறிவியலின் வரையறுப்பை நினைவு கூற வேண்டுகிறேன். இயற்கையின் நிகழ்வுகளை விளக்குவதே அறிவியல்.இயற்கை நிகழ்வுகளை அதன் காரணிகளாக  பகுத்து ,அவற்றுக்கு இடையே தொடர்புகளை நிறுவுவதும் ,அதன் மூலம் கணிக்கும் விடயங்களை ஆய்வுரீதியாக் உறுதிப்படுத்துவதும் இதன் அங்கங்கள் என அனைவரும் அறிவோம்.

இங்கு இயற்கை நிகழ்வான‌ பேரண்ட விரிவடைவின் வேகம் அதிகரித்தல் உறுதி செய்யப்பட்ட உண்மை என்வே கொள்ளலாம்.

பேரண்டத்தின் விரிவடையும் வேகம் குறையாமல் அதிகரிப்பதின் காரணியாக  கருப்பு ஆற்றல் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்ற கருது கோளின் படி இந்நிகழ்வு விளக்க ஏதுவாக உள்ளது.எனினும் இதன் மூலம் கணிக்கபடும் விடயங்கள் ஆய்வு ரீதியாக் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இது முழுமையாக் ஏற்கப்படும்.

பேரண்டத்தில் 70% கருப்பு ஆற்றலும் 25% கருப்பு பொருளும் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.மீதம் உள்ள 5% தான் அனைத்து வெளித்திரள்களும்[galaxy],விண்மீன்கள்[stars],கோள்கள் சேர்ந்த அளவு.அதில் பூமி ஒரு தூசி.

ஆகவே நாம் அறிந்த பேரண்டம் மிக சிறிய அளவு மட்டுமே.சில அறிவியலாளர்கள் இந்த கருப்பு ஆற்றலை வெற்றிடத்தின் ஒரு தன்மையாகவும் வரையறுக்கிறார்கள். வெற்றிடம் என்பது உண்மையில் சூன்யம் அல்ல என்ற் கருத்தை முதலில் வெளியிட்டவர் ஐன்ஸ்டின். வெற்றிடம் அதன் அளவை அதிகரிக்க முடியும் என்பதை அதன் தன்மையாக வரையறுத்தார் ஐன்ஸ்டின்

அதாவது அறிவியலில் உள்ள கருதுகோள்கள் பெரும்பாலானவை தத்துவம் போலவே இருக்கும். ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதி கொள்கையாக்கத்தில் அண்டவியல் மாறிலி[cosmological constant]  என்று ஒன்று உண்டு.இது பற்றி ஒரு தனிப் பதிவு இட்டு விடுவோம்.

வெற்றிடத்தில் ஆற்ற‌லும் இருக்கும் என்பது ஐன்ஸ்டினின் இன்னொரு கணிப்பு.

ஐன்ஸ்டினின்  முதல் கணிப்பின்படி வெற்றிடம் விரிவடையும் போது அதன் ஆற்றலும் அதிகம் தோன்றுகிறது.இந்த ஆற்ற‌ல் வெற்றிடத்தை அதிகரிக்கும் வேகத்தில் விரிக்க ,விரிவடைதலின் எல்லை அண்டவியல் மாறிலியின் அள‌வின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த கருப்பு ஆற்றலின் இன்னொரு விள்க்கம் குவாண்டம் பருப்பொருள் கொள்கையாக்கதின் அடிப்படையில் ஆனது.அதாவது வெற்றிடம் என்பதில் பல பருப்பொருள்கள் தோன்றுவதும்,மறைவதும் மிக இயல்பான விடயம்.அப்ப்டி உள்ள வெற்றிடத்திற்கும் கணிக்கப்பட்டகருப்பு ஆற்றலுக்கும் தொடர்பினை கண்க்கிட்டு பார்த்த போது தவறு அதிகம் வந்ததால் இதனை கைவிட்டு விட்டார்கள்.

இன்னொரு விளக்கமான் ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசை கொள்கை முற்று முழுதும் த்வறு இதற்கு மாற்றுக் கொள்கை கண்டுபிடிக்கப்படவேண்டும்.இது பேரண்டம் விரிவடைகிறதா என்பதையே சந்தேகத்திற்கு உள்ளாக்கும். ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விசை கொள்கை சூரிய குடுப்பம்,வெளித்திரள் ஆகியற்றின் இயக்கங்களை மிக சரியாக் விள்க்குவதால் மாற்றுக் கொள்கைக்கு இந்த இயக்கங்களையும் விள்க்கி ,விரிவடைதலின் வேகம் அதிகரித்தலையும் விள்க்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஆகவே கருப்பு ஆற்றல் என்பது வெற்றிடத்தின் தன்மையா? ,ஒரு அறியா பருப்பொருளா? அல்லது மாற்று ஈர்ப்பு விசைக் கொள்கை தேவையாஎன்பதில் ஏதேனும் ஒன்றின் மூலம் விடையளிக்கப்படலாம்.இப்போதைக்கு விடை தெரியா கேள்வி.

கருப்பு பொருள்

இதை பற்றியும் ஒன்றும் தெரியாது.பேரண்டத்தில் பார்க்க முடியாத பல பருப் பொருள்கள் உள்ளன.நமது பேரண்டத்தில் 25% கருப்பு பொருள் உள்ளது என்பதை ஏற்கென்வே குறிப்பிட்டோம்.
கருப்பு பொருள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட என்னவாக இருக்கமுடியாது என்பதை அறிவியல் தெளிவாகவே வரையறுக்கிறது.

[நாமும் இதே போல் கடவுள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட என்னவாக இருக்கமுடியாது அடித்துக் கூற இயலும்.]

இப்படி கருப்பு பொருள்  என்னவாக் இருக்க முடியாது என்ற வரையறைகள்

1. விண்மீன்கள்,கோள்கள் போல் கண்ணுக்கு தெரிவது இல்லை.இப்படி கண்னுக்கு தெரியாத பொருள்கள் 25% இருந்தாகவேண்டும் என பரிசோதனைகள் கூறுகின்றன.

2.கண்னுக்கு தெரியாத, ஆனால் பரிசோதனையில் கண்டுபிடிக்கக்கூடிய பேரியான் போன்ற அணு துணை துகள்களால் ஆன பருப்பொருள்களும் அல்ல.இவைகளை வெப்பக் கதிவீச்சு உள்வாங்குதலின் மூலம் கண்டறிய முடியும்

3.கருப்பு பொருள் எதிர் பருப்பொருள் அல்ல. பருப்பொருள் எதிர் பருப்பொருளுடன் இணைந்தால் காமா கதிர்கள் வெளிப்படுவதை உணர முடியும்.

4.இது கருந்துளையும் அல்ல.கருந்துளைகளை பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.எப்படி எனில் இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.


இப்படி ஒளியை ஈர்த்து  வளையச்செய்யும் தன்மை உடைய இந்த நான்குவகை தன்மை பொருள்களிலும் அடங்காத வகைதான் கருப்பு பொருள்.இப்படிப்பட்ட பொருள்கள் 25% பேரண்டத்தில் இருக்கவேண்டும் என்பதே கணிப்பு .

மேலே சொன்னது எதுவுமே புரியவில்லை என்றாலும் கவலையில்லை.நம் பாணி ஒரு வரி விள்க்கம்!

1.பேராண்டம் விரிவடைதலின் வேகம் அதிகரிப்பின் காரணியாக வரையறுக்கப்படுவது கருப்பு ஆற்றல் இது பேரண்டத்தில் 70% உள்ளது.

2.பரிசோதனைகளால் அறியப்படாத ஈர்ப்பு விசையின் காரணி கருப்பு பொருள்.இது பேரண்டத்தில் 25% உள்ளது.


இதைதான் கட்டுக் கதை என்று குறிப்பிடுகிறீர்களா என்றால் இல்லை.கடந்த சில வாரங்களுக்கு முந்தைய ஒரு செய்தி குறித்தே பதிவு எழுத விரும்பினேன்.நாம் ஒரு பதிவு எழுதும் போது அது முழுமையாக இருக்க வேண்டும் என்பதல் கருப்பு ஆற்ற‌ல்& கருப்பு பொருள் பற்றியும் எளிமையாக விள்க்க வேண்டியதாயிற்று.

சரி செய்திக்கு செல்வோம்.


Serious Blow to Dark Matter Theories? New Study Finds Mysterious Lack of Dark Matter in Sun's Neighborhood

 

ஐரோப்பிய லா சில்லா சதர்ன் ஆயவக்த்தில்[European Southern Observatory's La Silla Observatory] உள்ள சக்தி வாய்ந்த MPG/ESO 2.2-metre  தொலைநோக்கி  மூலம நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்ட 13,000 ஒளிவருடங்கள் தூரம் உள்ள விண்மீன்களின் இயக்கங்கள் கண்டறியப்பட்டன. இந்த புதிய தகவல்கள் அடிப்படையில் சூரியனுக்கு அருகில் உள்ள இடத்தின் எடை ,க‌ன பரிமாணத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டது.இந்த கன்பரிமாணமானது இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்ட அள்வைகள் போல் 4 மடங்கு ஆகும்.

இபோது அறியப்பட்ட பருப்பொருள்களின விண்மீன்கள், காற்று,தூசி முதலியைவை தவிர்த்த எடை கருப்பு பொருளின் எடையாக இருக்கும் என்பதே கருத்தாக்கம்.


"The amount of mass that we derive matches very well with what we see -- stars, dust and gas -- in the region around the Sun," says team leader Christian Moni Bidin (Departamento de Astronomía, Universidad de Concepción, Chile). 

ஆனால் மிச்சம் மீதி எடை மிக மிக குறைவு.அதாவது இல்லை என்றே கூறிவிடலாம்.இதுதான் அங்கே நிகழ்ந்தது.

சரி இத்னால் கருப்பு பொருள் என்பதே இல்லை என்று கூற முடியாது என்றாலும், சூரியனுக்கு அருகில் உள்ள அளக்கப்பட்ட இடத்தில் இல்லை என்ப்து உறுதி.கருப்பு பொருள் பூமியை ஊடுருவி செல்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையிலும் பல சுரங்க ஆய்வகங்கள் நிறுவப்ப்ட்டு அத்னை உண்ர முடியுமா எனனும் ஆய்வுகளிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

சரி இதெல்லாம் 5% பேரண்டத்தில் ஒரு சிறு பகுதியில்தானே ஆய்வு செய்து இருக்கிறோம்.இந்த 5% தாண்டி ஆய்வுகள் நிகழும் போது மட்டுமே உறுதியாக கூற இயலும் என்றாலும் இதிலும் கருப்பு பொருள்&ஆற்ற‌ல் கொஞ்சமாவது கண்டறிந்தால் மட்டுமே இது இருப்பதன் சாத்தியம் உண்டு.
5% அறியப்பட்ட பேரண்டத்திலும் கருப்பு பொருள் அல்லது கருப்பு ஆற்றல் கொஞ்சமாவது உணரப்பட முடியும் என்ற தேடல் தொடர்கிறது.

காணொளியில் கருப்பு பொருள் ,கருப்பு ஆற்ற‌ல் பற்றி அருமையாக விளக்குகிறார்கள் கண்டு களியுங்கள்!.






நன்றி


Thanks google

Wednesday, December 14, 2011

கடவுள் துகள் கண்டு பிடிக்கப்பட்டதா? காணொளிகள்

ஹிக்ஸ் போஸான் எனப்படும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான சமிக்ஞைகளை[signals] தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ண்[CERN] ஆய்வு கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் நேற்று(13/12/2011) அறிவித்துள்ளனர்.


இந்த ஹிக்ஸ் பற்றிய சில குறிப்புகளும் அது பற்றிய வரலாற்று தேடல் குறித்த சில காணொளிகளைய்ம் இப்பதிவில் காண்போம்.

இந்த போஸான் என்னும் பெயரே நமது இந்திய அறிவியலாளர் சத்யேந்திர போஸ் அவர்களின் அணுதுகள்  அறிவியலுக்கான பங்களிப்புக்காக் பெயரிடப்பட்டது. இவர் ஐன்ஸ்டினுடன் பல ஆய்வுகளில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.


பெரும் அணு துகள் உடைப்பான்(LHC) மூலம் நடத்தப் படும் சோதனைகளில் இத்துகளை கண்டறிந்து உறுதிப் படுத்துவதும் ஒன்றாகும். 

1.ஹிக்ஸ் துகள் என்றால் என்ன?

அணுவின் ஒரு அடிப்படை துகள்.இது நுயுக்ளியர் எளிய விசையின் செயல்பாடுகளை விளக்க உதவும் ஒரு கருதுகோள். இந்த நுயுக்ளியர் எளிய விசையும்,மின் காந்த விசையின் தொடர்புகள் ஸ்டீபன் ஹைசன் பர்க்,அப்துஸ் ஸலாமின்(பாகிஸ்தான்) அவர்களின் நிரூபணத்திற்காக நோபல் பரிசு பெற்றனர். இத்தொடர்புகள் ஹிக் செயலாக்கம் மூலமாக விள்க்கப் பட்டது.ஆகவே ஹிக்ஸ் என்னும் துகள் இருந்தாக் வேண்டிய கட்டாயம் உள்ளது.இதுவரை ஆய்வு ரீதியாக் உறுதிப் படுத்தப் படவில்லை என்றாலும், அதனை தேடும் முயற்சி 60+ வருடங்களாக நடந்து கொண்டிருந்தது.. இது ஒரு சுழற்சியற்ற(spinless scalar) துகள்..



2.ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என்றால் என்ன?

W&Z போசான்கள் எடை அற்றவை. அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எடை பெறுவதை ஹிக்ஸ் செயலாக்கம்(Higgs mechanism) என அழைக்கப் படுகிறது.

In the standard model, at temperatures high enough so that electroweak symmetry is unbroken, all elementary particles are massless. At a critical temperature, the symmetry is spontaneously broken, and the W and Z bosons acquire masses. (EWSB, ElectroWeak Symmetry Breaking, is an acronym used for this).


அதாவது நுயுக்ளியர் எளிய விசையும்,மின் காந்த விசையும் தொடர்பு படுத்த வேண்டுமெனில்,அந்த செயலாக்கங்கள் விள்க்கப் படவேண்டுமெனில் ஹிக்ஸ் துகள் என்னும் கருதுகோள் மிக அவசியம்.கொள்கையாக்கத்தின் படி அப்படி ஒன்று இருந்தாக வேண்டும்.ஆனால் அது ஆய்வு ரீதியாக உறிதிப்படுத்தப் பட்டால் மட்டுமே முழு உண்மை ஆகும்.பெரும் அணு துகள் உடைபான் மூலம் இந்த துகளை கண்டறிய பல் சோதனைகள் நடத்தப் பட்டு வருகின்றன..

இன்னொரு விதமாக ஹிக்ஸ் செயலை விளக்கலாம். ஐன்ஸ்டின் அவர்களின் சிறப்பு சார்பியல் தத்துவத்தின்[special theroy of relativity]  படி பொருள் ஆற்றலாகவும் ஆற்றல் பொருளாக்வும் மாறமுடியும் என்பதற்கான செயலையே இந்த ஹிக்ஸ் துகள் செய்கிறது. அதாவது ஆற்றல் என்பதன் இறுகிய வடிவமே[condensed form] பொருள்.இந்த ஹிக்ஸ் துகள் என்னும் ஆற்ற்லை அளிக்க கூடிய துகள்,[boson] ஒரு குறிப்பிட்ட சூழலில் பொருளுக்கு எடை அளிக்கிறது.

இது இன்னும் உறுதிப் படுத்த பல சோதனைகளை கடக்க வேண்டும் எனினும் நேற்றைய முன்னேற்றம் பல சாதனைகளுக்கு வித்திடும் என்பது மட்டும் உறுதி.ஹிக்ஸ் துகள் பற்றிய வரலாற்று தேடல் பற்றிய ஒரு காணொளி.இன்னும் தகவல்கள் கிடைப்பின் பகருவோம்!!!!!!!!!!!!

Monday, December 12, 2011

ஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி

ஹூபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரை பெருமைபடுத்தும் விதத்தில் அவர் பெயர் சூட்டப் பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஒரு ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும்.
அது பற்றிய சில காணொளிகளை இப்பதிவில் கண்டு களியுங்கள்!!!!!!!!!!!!!



Part 2


http://en.wikipedia.org/wiki/Hubble_Space_Telescope

Sunday, December 11, 2011

பிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது?









photo of Edwin Hubble looking into telescope
 

பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று பலருக்கு தெரியும்.இளைய பூமி கொள்கையாளர்களை தவிர மற்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.சரி இதனை எப்படி கணக்கிட்டார்கள் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கை பெரு விரிவாக்க கொள்கை என்ப்படும் ஃபிக் பேங் (big bang theory) கொள்கையாகும்.அதாவது 13.8 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்து இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதும்,இன்னும் இப்பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த விரிவடைதலை நிரூபித்தவர் திரு எட்வின் ஹூபிள் அவர் தொலை நோக்கியின் மூலம் செய்த ஆய்வுகள் மூலம் பிற காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) நம்மிடம் இருந்து விலகி செல்கின்றன என்று கண்டறிந்தார்.ஹூபிளின் ஆய்வு முடிவுகளின்படி நமக்கு(பூமிக்கு) தூரத்தில் உள்ள காலக்ஸிகள் வேகமாக விலகுவதும்,அருகில் உள்ளது மெதுவாக விலகுவதையும் வரை படத்தில் இருந்து அறியலாம்.ஏன் இப்படி ?காணொளியில் காட்டப்படும் பலூன் விரிவடைவதை யோசித்தால் புரியும்.இவரின் ஆய்வுகள் சிவப்பு விலக்கம்[red shifts] பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

அந்த தொடர்புகளை ஒரு வரைபடமாக (பூமியில் இருந்து)தூரம்(d) அதன் விலகி செல்லும் வேகம்(V) ஆகியவற்றின் தொடர்பாக வரைந்தார்.இதற்கு தோராயமாக ஒரு நேர்கோட்டு சமன்பாடு[linear equation] அமைத்தார் இது ஹூபில் விதி எனப்படுகிறது.அந்த மாறிலி(H0) ஹூபில் மாறிலி(constant) எனப்படுகின்றது
v = H0 x d

1/H0=d/v==meter/(meter/sec)=time
graph of recession velocity as function of distance 
for distant galaxies 

ஆகவே ஹூபில் மாறிலியின் தலைகீழி(reciporocal) பிரபஞ்சத்தின் வயது ஆகும்.ஹுபில் மாறிலி வரை படம்,அதன் ஆயத் தொலைவுகள் மூலம் H0 = 71 km/s/mpc . என கணக்கிடப்பட்டது.இதனை கணக்கிட கணிணி கணித மென்பொருள்கள் தேவை.

1mpc=One megaparsec = 3.086×1019 km



H0=71/ 3.086×1019 s-1= 2.30×10−18 s−1

Time=Age of the universe=1/H0=4.35×1017 seconds or 13.8 billion years.

இது ஒரு தோராய முறை ஏனெனில் ஹூபில் மாறிலி கணக்கிடுவதில் உள்ள தவறின்(error) அளவையும் சேர்க்க வேண்டும்.அந்த அளவு நமக்கு தேவையில்லை நமக்கு தெரிய வேண்டியதெல்லாம்.

1. ஹூபில் பூமியில் இருந்து காலக்ஸிகள் நகரும் வேகம் ,தூரம் ஆகியவற்றை கணித்தார்.
2.அதற்கு ஒரு சமன்பாடு அளித்தார் (ஹூபில் விதி)

3. ஹூபில் மாறிலியின் தலை கீழி பிரபஞ்சத்தின் வயது ஆகும்(ஏன்,எப்படி என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!)



காணொளி பாருங்கள் இன்னும் தெளிவாக புரியும்.சந்தேகம் இருந்தால் விவாதிப்போம் நன்றி





http://en.wikipedia.org/wiki/Age_of_the_universe

http://imagine.gsfc.nasa.gov/YBA/M31-velocity/hubble-more.html