Friday, March 29, 2013

மூன்று வகை நம்பிக்கைகள்!!வணக்கம் நண்பர்களே,

நம்பிக்கை இல்லா மனிதர் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டு. அப்படி பிறரை பாதிக்காமல் நம்பிக்கைகள் தனிப்ட்ட வகையில் கொள்ள உரிமையும் உண்டு.

இப்பதிவில் நம்பிக்கைகள் அதன் வகைகள் குறித்து அறிவோம்.

நம்பிக்கை என்றால் என்ன?


Belief is the psychological state in which an individual holds a proposition or premise to be true.
ஒருவர் ஏற்கும் கொள்கை,கோட்பாடு உண்மை,சரி என நம்பும் மனநிலை.

சகோ இராபின் எப்போது  நாத்திகம்,பரிணாமம் என்பதும் நம்பிக்கையே என் நம்மோடு வாதிடுவார். பரிணாமம் என்பதற்கும் நாத்திகம் என்பதற்கும் தொடர்பு இல்லை, இரண்டும் வெவ்வேறு தளங்கள் என நாம் சொன்னாலும் அவரோ, இன்னும் சிலரோ ஏற்கப் போவது இல்லை!!.

இருந்தாலும் சகோ இராபினின் கூற்றும் உண்மைதான். ஆனால் நம்பிக்கைகளின் மூன்று வகை உண்டு என்பதால் ,அதில் ஆத்திகம்,நாத்திகம்,அறிவியல்[ப‌ரிணாமம்!] எந்த வகையில் வருகிறது என்பதை இப்பதிவில் அறிவோம்.

நம்பிக்கைகளின் மூன்று வகை,

1. சான்று சாரா நம்பிக்கை

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

முதலில் சான்று என்றால் ஏதோ ஒரு வகையில் அளவிட,கணக்கிட உணர முடியும் விடயம் எனக் கொள்ளலாம். இதனை பெரும்பான்மை ஏற்கும்,ஒருவரும் மறுக்க இயலா வண்ணம் இருக்கும். எ.கா பூமி ஏறத்தாழ கோள வடிவம் உடையது.விமானத்தில் பயணம் செய்த எவரும் ,இதனை எளிதில் உணர்ந்து இருப்போம்.ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதனை அறியாமல் இருந்தார்கள்.

1. சான்று சாரா நம்பிக்கை

இது பெரும்பாலும் ஆத்திகம் சார்ந்தது.மத புத்தகம் சொல்வதை ,சான்றுகள் ரீதியாக பார்க்க மறுத்தல்.மத புத்தகம்,சான்று முரண்படும் என்றாலும் இது வேறு,அது வேறு என சொல்லி,மத புத்கத்திற்கு சான்று தேவையில்லை, இது நம்பிக்கை சார் விடயம் என சொல்லி விடுவார்.

ஒரு நகைச்சுவை எ.கா வேண்டும் எனில் உலகம் தோன்றி 7000 ஆண்டு ஆனது என சொன்ன ஒரு படைப்புக் கொள்கையாளரிடம் ,பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? என் கேட்கப் பட்டது.

அதற்கு அவர் இவை எல்லாம் சாத்தான் என் போன்றவர்களை சோதிக்க காட்டும் மாய வலை என்று சொல்லி விட்டார் ஹி ஹி!!

இப்படி நம்புபவர்களை எதுவும் மாற்றுவது மிக கடினம். இவர்கள் அப்பாவிகள்தான், ஆனால் மதத்திற்காக எதையும் தியாகம் செய்யும் வண்ணம் இருப்பதால் தனக்குதானே அல்லது,பிறருக்கு தீமை விளையும் சாத்தியம் மிக அதிகம்.

பிரார்த்த‌னை மூலம் வியாதி குணப்படும் என நம்பி மோசம் போவது, பல மோசடி மதவாதிகளுக்கு பணம் அனுப்பி ஏமாறுவது , சூனியக்காரிகள் என் பலரை தீ வைத்து எரித்த கொடுமைகள்  ,பிற மதத்த‌வரின் உரிமைகளை மறுத்தல் என பல வகைகளில் துன்பம தரும் கொள்கை இது. 

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

உலகில் எப்போதும் விடை தெரியா கேள்விகள் அனைத்து துறைகளிலும் உண்டு. மனித சமூகத்தில் தொடர் விடை தேடுதலால் மட்டுமே முன்னேற்றம் வந்தது என்பதால் இயற்கையை அறியும்,முயற்சி தொடர்கிறது.

எப்படி பிரபஞ்சம் தோன்றியது? முதல் உயிர் எப்படி தோன்றியது போன்ற கேள்விகள் மதம்,தத்துவம்,அறிவியல் என் பல் துறைகளுக்கும் பொதுவான கேள்விகள்.

மதத்தின் படி அனைத்தும் அவன் செயலே என்பார்.தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாக சரியாக இருந்தால் போதும், ஆனால் அறிவியலுக்கு சான்று அவசியம்,அச்சான்றின் மீதான விள்க்கம்,கணிப்பு என தொடர்கதை ஆக செல்லும்.

இந்த இரண்டாம வகை நம்பிக்கையாளர்கள் ,விடை தெரியா கேள்விக்கெல்லாம் வித்தகனே காரணம் என்பார்.

விடை தெரிந்த கேள்வியை தவிர்ப்பார், ஒரு கேள்வியின் விடை சமீபம் ஆனால், கடவுள் வேறு கேள்வியின் விடையாக இடம் பெயர்வார்.


இவர்கள் மத புத்தகம் நம்பி ஏற்றாலும், கடவுளின் இருப்புக்கு இயற்கையின் மகத்துவமே காரணம் என்க் காட்டுவார்!!!

இந்தவகை வாதங்களை நன்கு வரையறுத்தவர் 15 ஆம் நூற்றாண்டு கிறித்துவ பாதிரி அக்கினோ ஆவார்.

http://en.wikipedia.org/wiki/Quinque_viae

அ) முதல் காரணி வாதம்[படைப்புக்கு படைப்பவன் அவசியம்]

ஆ) ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட பிரபஞ்சம்.

இ) விடை தெரியா கேள்விகளின் விடை வித்தகனே

ஈ) கடவுள் இல்லை என நிரூபிக்க முடியாமையால் கடவுள் உண்டு

என இயற்கையின் மீதான விவாதங்களில் செல்வதில் மத புத்த்கம் மீதான ஆய்வுகளை தவிர்க்கலாம்.

ஏன் எனில்

மத புத்தகம் கூறும் பெரும்பாலான கதைகளுக்கு,  அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.

மத புத்த்கம் மூல நூல்களின் மொழியாக்கம் போன்றவற்றுக்கும் மொழியியல் சான்றுகள் இல்லை.  

ஒரு பழைய புத்தகம் இப்படி சொல்கிறது என்றால் அதே போன்ற சொற்கள்,வாக்கியங்கள் ஏற்கெனவே உள்ள அதே மொழி புத்தகங்களில் அதே விதத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்க வேண்டும். அதன் இலக்கண நூல்கள்,அகராதி போன்றவை நூல் எழுதப்பட்ட காலத்திற்கு முந்தையது ஆக இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இருக்காது!!!

பெரும்பாலும் முந்தைய மொழிபெயர்ப்புகளை இபோது சுட்டுவதையே தவிர்ப்பார்.

ஆகவே இப்படி மத புத்தகம் சாராமல் மதம் காப்பாற்றும் ஒரு முயற்சியே இந்த இரண்டாம் வகை நம்பிக்கை.

விவாதங்களில் இவர்கள் கேள்வி கேட்பதையே விரும்புவார், நிரூபணத்தை எதிர் குழு மட்டுமே தர வேண்டும். எதிர் குழு ஒரு விடயத்தை 99% நிகழ்தகவுடன் சரி எனக் கூறினால்,இவர்கள் ஆகவே 1% தவறு.எங்கள் தரப்பு நிரூபிக்க அவ்சியம் இன்றி வெற்றி என குத்தாட்டம் போட ஆரம்பித்து விடுவார்!!!

பெரும்பான்மையான மத பிரச்சாரவாதிகள் இந்த நம்பிக்கையாளர் ஆக இருப்பார்.முதல் வகை நம்பிக்கையாளர்களுக்கு வழி காட்டி ஆவார்!!!

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.

அறிவியல் என்பது இயற்கையை அறியும் இயல் என்பதால், தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் என்பதை நம் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நாத்திகம் என்பதும் கடந்த ,நிகழ் கால சான்றுகளின் மீது பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம், அதன் மீதான கணிப்புகளை எதிர்கால சான்றுகளின் அடிப்படையில் பொருந்தும் வண்ணம் விளக்கங்களை மாற்றி அமைக்கிறோம்.

விடை தெரியா கேள்விகளின் விடை எந்த அளவு அளிக்கப் பட்டு உள்ளது என்பதை சான்றுகளின் அடிப்படையில் பரிசோதித்து ஏற்கிறோம்.

பிரப்ஞ்சம் தோன்றியது 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் என்பதை கணிப்பாக ஏற்கிறோம். அதற்கு முந்தைய சூழலும் கூட சில கணிப்புகள் குவாண்டம் இயக்கவியல்,ஸ்டிரிங் தியரி அடிப்படையில் உண்டு.  அதன் பரிசோத்னை முடிவுகளுக்கு காத்து இருக்கிறோம்.

பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது ஆனால் நிலை மாறுகிறது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கணிப்பு!!!.

[பரிசோதனையின் படி] சூன்யம்[nothing] என ஒன்று இருக்கவே முடியாது,ஆகவே முடிவிலியும்[infinite] இருக்க முடியாது.

There is always something instead of nothing!!

பிரபஞ்சம் சூன்யத்தில் இருந்து தோன்றியது என் விளக்கும் பேரா லாரன்ஸ் க்ராஸ் அவர்களின் உரை!!


Universe from nothing!!

**
பரிணாமத்திலும் 380 கோடி ஆண்டு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களின் கிழைத்து தழைத்து பரிணமித்தன என்பதற்கு பல பரிசோத்னை சான்றுகள் உள்ளன என்பதும், முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது இப்போது பரிசோதனையின் படி விடை தெரியா கேள்வி எனவும் ஒத்துக் கொள்கிறோம்.

இந்த மூன்றாம் வகை நம்பிக்கை நாத்திகர்,அறிவியல் ஆய்வாளர்கள் கொள்ளும் சான்றின் மீதான கணிப்பு ஆகும். ஒருவேளை தவறு ஆனாலும் அடுத்த பொருந்தும் விளக்கம் ஏற்பதில் தயக்கம் இல்லாதவர்கள்.  

பரிணாமக் கொள்கை டார்வின் காலத்தில் இருந்து சான்றுகளின் படி பல மாறுதல்களை கண்டு உள்ளது.

பரிணாம மாற்றத்தின் காரணி இயற்கைத் தேர்வு மட்டுமே, அதுவும் மாற்றம் படிப்படியாக நிகழும் எனவே டார்வின் கணித்தார்.

ஆனால் இயற்கைத் தேர்வு[natural selection] அல்லாமல் சீரற்ற மரபு விலகலும்[random genetic drift] முக்கிய காரணி ஆக ஏற்கப் படுகிறது,படிப்படி[gradual] மாற்றம் மட்டும் அல்லாமல், நிறுத்திய நிலைத்தனமையும் [punctuated equilibrium] மாற்றமாக ஏற்கப் படுகிறது.

விளக்கம் மாறலாம், ஆனால் சான்றுகள் மாறாது.புதிய விளக்கம் பழைய ,புதிய சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.

ஆகவே நாத்திகர்களின் நம்பிக்கை சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே மாறும். ஆத்திகர்கள் சான்றளிக்கப் பட்ட மத புத்தக விரோத விடயங்களை ஒதுக்கி விடுவார்கள். நம்பிக்கைகளை சான்றின் அடிப்படையில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனை ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்!!!

பரிணாமமும் மதம் கூறும் படைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என் ஒத்துக் கொள்ளக் கூட அஞ்சும் பரிணாம எதிர்பார்களர்களை பதிவுலகில் அறிந்து இருக்கிறோம் அல்லவா!!! 

இந்த மூன்று வகைகளும் ஒன்றை ஒன்று சாராமல் இருக்க அவசியம் இல்லை.இந்த முதல் வகை,இரண்டாம் வகை கொஞ்சம் தொடர்பு இருக்கலாம், அதேபோல் இரண்டாம்,மூன்றாம் வகை கூட தொடர்பு இருக்க்லாம்.இப்படி Fuzzy!!


இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல உண்டு!!

பின்னூட்ட விவாதங்களின் மேல் அடுத்த பதிவு எழுதுவோம்!!

நன்றி!!! 

30 comments:

 1. சிந்திக்கப்பார்த்தேன்.முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அய்யா வணக்கம்.

   கருத்துக்கு நன்றி!!

   Delete
 2. சகோ.சார்வாகன்

  நம்பிக்கை கொள்வது அடிப்படை மனித உரிமை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த நம்பிக்கையும் இப்போது சரியான நம்பிக்கையாக இருக்கவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எ.கா மத நம்பிக்கைகள் அனுமதிக்கப்படகின்றன, ஆனால் அதில் மனித உயிர்பலி என்னும் நம்பிக்கையுள்ளவன் என்றால் ஏற்றுக்கொள்ளப்படாது. அடுத்து, நம்பிக்கைகள் உண்மையாகிவிடாது. அறிவியல் வளர்ந்தது, நம்பிக்கை அதை சான்றுகளின்படி நிரூபித்தல் என்ற வகையில் அறவியல் முறைப்படி தோன்றியது. இந்த அறிவியல் முறைப்படி நிரூபணம் செய்யப்பட்டுதான் அனைத்து அறவியல் கண்டுப்பிடிப்புகளும் உருவாகின். அதை அறிவியல் முறைப்படி நிரூபணம் செய்யப்பட்டுதான் பரிணாமமும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

  நாத்திகம் என்பது ஒரு நம்பிக்கையா? அது ஒரு நிலை. கடவுளை விவாதப்பொருளாகாக்கினால், கடவுளின் தன்மையை சரியாக வரையறுக்காமல், மாற்றம் செய்துக்கொண்டே அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, இதுதான் அது அதுதான் இது என போய்க்கொண்டே இருக்கும். கடவுளை இல்லை என்று ஒருவன் ஏதும் ஆகாமல் வாழ்ந்தால், ஏதும் ஆகாமல் இருப்பது கடவுளின் தன்மை, கடவுளின் தன்மை அதுதான், கடவுள் இருப்பதற்கு அத்தாட்சி அதுதான், நர்கத்தில் தண்டனை என நீளும். கடவுளின் தன்மையை நிலையற்றதாக ஆக்கி, அனைத்தையும் சேர்க்கும் விதமாக விவாதம் செய்வார்கள்.

  ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கமுடியும், அதனால் மதப்புத்தகத்தை வைத்து ஆயிரும் விளக்கங்கள் அளிக்க முடியும்.

  எந்த வித நம்பிக்கையாக இருந்தாலும் கடைசியில் நிற்பது அது மதத்தன்மை அளவுகோளுக்கு சரியாக இருக்கிறதா என்பதுதான். இல்லையென்றால் குப்பையில் கடாச வேண்டிய நம்பிக்கைகள் அவை. அற்வியல் நம்பிக்கை என்றால் அது அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். இல்லையென்றால் அது வெறும் நம்பிக்கைதான். நம்முடைய படைப்புவாதிகள் செய்யும் செயல், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றால், நிரூபிக்கவில்லை என்று அடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

  விவாதமுறையில் கடைப்பிடிக்கும் தந்திரத்தை பதிவு எளிமையாக சொல்கிறது.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரேன் வாங்க,

   நம்பிக்கை பிறரை பாதிக்கா வகையில் கொள்ள எவருக்கும் உரிமை உண்டு.
   மதம் என்பது நம்பிக்கை எனில் அரசியலில் பங்கு இருக்க கூடாது என்வே சொல்கிறோம்.

   அறிவியலிலும் நம்பிக்கை அதாவது கணிப்புகள் உண்டு. அவை சான்றுகளின் படி தவறு ஆனால் மாற்றப் படும். நாத்திகமும் இப்படித்தான் இயற்கைக்கு மேல் ஒரு அறிவுள்ள உயிரி இருந்து அனைத்துக்கும் பொறுப்பேற்று படைத்து,காத்து,பரிபாலித்து வருகிறது, யாரும் தொடர்பு கொள்ள முடியும் என சான்று கிடைத்தால் மட்டுமே நாத்திகம் விட முடியும்.


   அதை விட்டு மத புத்தகம் அனுப்பி விட்டு ஒளிந்து கொள்வார், அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விள்க்கம் கொடுப்பார்,அத்னையும் பரிசோதிக்க கூடாது, இயற்கையின் இபோதைய விடை தெரியா கேள்விகளுக்கு வித்த்கனே காரணம் ஆகவே,மத புத்தகத்தில் சொன்னதை
   ஏற்று ஆட்சியை நடத்து என்பது ஏமாற்று வேலையே!!

   மத புத்த்கம் சொல்லும் கதைகளுக்கு மட்டும் அல்ல,மதபுத்தகம் தோன்றியதாக் சொல்லும் கதைக்கே அகழ்வாய்வு,மொழியியல் சன்றுகள் இல்லை!!!

   சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்னும் போதே தேவ பாஷை என்னும் கூற்று அடிபட்டு போகிறது.

   தேவ நாகரி எழுத்து முறை தமிழின் எழுத்து முறைக்கு பிந்தியது!!!

   பிராஹி, கிரந்தம் ஆகியவை தமிழ்,தேவ நாகரி எழுத்துமுறைகளுக்கு முந்தியவை!!

   http://www.ancientscripts.com/sa_ws.html

   அரபி அராமைக் மொழியின் ஒரு பிரிவாக இருந்து தனி மொழி ஆனது என்றால் மத புத்தக விளக்கம் செல்லுமா????
   http://en.wikipedia.org/wiki/Arabic_language

   Arabic (العربية al-ʻarabīyah or عربي/عربى ʻarabī ) ( [alʕaraˈbijja] (help·info) or ( [ˈʕarabiː] (help·info)) is a name applied to the descendants of the Classical Arabic language of the 6th century AD
   ...

   Arabic was influenced by other languages as well. The most important sources of borrowings into (pre-Islamic) Arabic are from the related (Semitic) languages Aramaic,[13] which used to be the principal, international language of communication throughout the ancient Near and Middle East, Ethiopic, and to a lesser degree Hebrew (mainly religious concepts).
   ...
   - rahman (merciful), from Hebrew and Aramaic, where it had a similar meaning

   - nabi (prophet), old non-Arab term that came into Arabic from Aramaic and Hebrew before the emergence of Islam.

   ஆத்திகமோ,நாத்திகமோ நம்பிக்கைகள் மேல் சார்பற்ற பல பரிசோதனைகள் செய்து நம்பிக்கை கொள்ளவே வேண்டுகிறோம்.

   நன்றி!!!

   Delete
 3. \\எ.கா பூமி ஏறத்தாழ கோள வடிவம் உடையது.விமானத்தில் பயணம் செய்த எவரும் ,இதனை எளிதில் உணர்ந்து இருப்போம்.\\ மாமு நான் கூட விமானத்தில் பயணம் செய்தேன் மாமு, ஆனால் வெளியில எட்டி பார்த்தப்ப கோல வடிவத்தில் ஒன்னும் தெரியலையே மாமு? ஒருவேளை நீங்க போன விமானத்தில் இருந்து தெரிஞ்சிருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாப்ளே தாசு,

   நீர் அப்படி யோசிக்கிறீரா!!! ராக்கெட்டில் போனால் அப்படிப் பார்க்க இயலும், துணைக் கோள்களில் இருந்து எடுக்கப்படும் புகைப் படங்கள் பூமி நீள் வட்ட வடிவில் தோன்றலாம்.சந்திரனில் இருந்து பார்த்தாலும் அப்படித்தான்

   http://www.fourmilab.ch/cgi-bin/Earth

   விமானத்தில் தொலை தூரம் சென்றால் நேரம் மாறுகிறது அல்லவா!!.

   உலகை சுற்ற 80 நாட்கள் என ஒரு புத்தகம் உண்டு. பூமியை சுற்றி வரும் ஒருவர் ஒரு நாள் வித்தியாசம் கணக்கீட்டில் வருவதை உணரும் வண்ணம் காட்டி இருப்பார்கள்!!

   http://en.wikipedia.org/wiki/Around_the_World_in_Eighty_Days

   because the party had travelled east to west, thereby gaining a full day on their journey around the globe by crossing the International Date Line.

   விமானத்தில் உள்ள தொலைக்காட்சியில் பூமிப் பந்தின் மீது பயணிக்கும் பாதை காட்டுவார்கள் அல்லவா!!

   அதனையே சொல்கிறேன்!!!

   நன்றி!!!!

   Delete
  2. சகோ.சார்வாகன்,

   விமானத்தில் சென்றாலும் பூமி கோள வடிவில் இருப்பதைக்கானலாம், ஆனால் அதற்கு சூப்பர் சோனிக் விமானத்தில் மிக அதிக உயரத்தில் பறக்க வேண்டும், எட்ஜ் ஆஃப் தி ஸ்பேஸ் போகலம்.

   russia வில் இப்பொழுதது இது ஒரு பிசினெஸ் ஆகிவிட்டது, MIG-39,30 போன்ற போர் விமானங்களில் இப்பொழுது யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து விட்டு எட்ஜ் ஆஃப் தி ஸ்பேஸ் வரை பறந்து சென்று வரலாம்.சுமார் 16,000 டாலர் ஒருவருக்கு செலவாகும்.

   அப்படி பறக்கும் போது எடுத்த படம் இப்படித்தான் இருக்கும்,

   http://www.jetdiscovery.com/img/strat3.jpg

   மேலும் விவரத்திற்கு,

   http://www.adrenalin.com.au/mig-29-edge-of-space/russia/air/13863

   Delete
  3. திருத்தன்:மிக்-29 விமானம்,39 என தட்டச்சிவிட்டேன்.

   Delete
 4. பிரபஞ்சத்தில் உள்ள ஜடப் பொருட்களை மனிதப் பயன்பாட்டுக்கு exploit செய்யும் குருட்டு முறை அறிவியல். அதில் உள்ள எடுகோள்கள் Hypothesis எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் பின்னால் வரும் பரிசோதனை முடிவுகள் Hypothesis நிரூபணம் என்பது circular argument. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாதுன்னார், இப்போ அதை மிஞ்ச முடியும் என்கிறார்கள், நாளைக்கு வேற எதையாச்சும் சொல்வாங்க. அதனால நிரந்தரமான உண்மை அறிவியலில் இல்லை, உண்மையைத் தேடுபவன் அறிவியலை துணைக்கு கூப்பிட மாட்டான். முட்டாளாவே பிறந்து முட்டாளாவே சாவலாம்னா வெறும் அறிவியலை மட்டும் நம்பியிருக்கலாம்.

  மேலும் அறிவியலில் உயிர், consciousness அப்படின்னா என்னன்னு யாருக்கும் தெரியாது. ஒன்றுமில்லாததில் இருந்து ஏதாவது வருமா? நிரூபணம் என்ன? தானாகவே சிக்கலான அமைப்புகள் உருவாகுமா? சான்றுகள் என்ன? புவியில் உள்ள சிக்கலான அமைப்பில் ஒரு சதவிகிதமாவது சிக்கலான அமைப்பு மற்ற கோள்களில், பிரபஞ்சத்தில் உள்ளதா?

  மாமு கேள்விகள் எல்லாத்துக்கும் பித்தலாட்டத்தையே பதிலா வச்சிருக்கீங்க, வழக்கம் போல எதையாவது புளுகுங்க, என்ன பண்ணி தொலைக்கிறது...............:((

  ReplyDelete
  Replies
  1. ஜெயதேவ் தாஸ்,
   சீரியஸாகவே கேட்கிறேன். பிரபஞ்சத்தில் எது நிரந்தரம்? உயிர் மற்றும் consciousness பற்றி ஆன்மிகம், மதம், வேதம் ஆகியவற்றிக்கும் தெரியாதா? அறிவியலுக்கு தெரிந்து அதை என்ன்வென்று விளக்கினால் அறிவியல் உண்மையாகிவிடுமா? பிரபஞ்சத்தில் சிக்கலில்லாத அமைப்பு என்று ஏதாவது ஒன்று உண்டா?

   Delete
  2. மாப்ளே தாசு,
   அறிவியலுக்கு என சரி பார்க்க சில முறைகள் உண்டு. அதனை வரலாற்றுக்கும் பயன்படுத்தலாம்.

   ‍ சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் அறிவியல் கொள்கை அவ்வளவுதான். இத்ன மூலம் கணிப்பும் செய்யலாம், கணிப்பு என்றால் பலர் பல கணிப்புகளை ஆய்வுக் கட்டுரையாக வெளியிடுவார்.

   அதில் அதிகம் பொருந்துவது ஏற்கப்படும், என தொடர்கதை ஆகும்

   இதிலும் இயற்கைத் தேர்வு போன்ற முறையே செயல்படும்!!

   அறிவியலையும் பரிணாம பார்வை பார்க்க வேண்டும்!!!

   நன்றி!!!

   Delete
  3. "அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு"
   "உண்மையைத் தேடுபவன் அறிவியலை துணைக்கு கூப்பிட மாட்டான்"
   இதை சொன்னவர் ஒரே ஆள்
   இது இரண்டில் எது உண்மை

   ஆன்மிகம் தான் எல்லாமே என்றால் அறிவியல் பற்றிய குறிப்பு எதற்கு
   அறிவியலை நீக்கிவிடலாமே

   "பிரபஞ்சத்தில் உள்ள ஜடப் பொருட்களை மனிதப் பயன்பாட்டுக்கு exploit செய்யும் குருட்டு முறை அறிவியல்"

   கடவுளை நோக்கி உடலை வருத்தி ஐம்புலன்களை அடக்கி கடும்தவம் புரிந்தோர், கடவுள் மற்றும் கடவுள் அருள்பெற்றவர்கள் மட்டுமே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இருப்பவர்களுடன் பேசக்கூடிய சக்தி உண்டு - இது ஆன்மிகம்

   இன்றோ சாதாரண மக்களிடம் கூட அதுவும் குறிப்பாக கடவுளை ஒரு நாளும் தொழாதவர்கள் கூட 'செல்போன்' மூலமாக மிக எளிதாய் தொடர்பு கொள்ளமுடியும் - இது அறிவியலின் வளர்ச்சி

   அந்தோ பரிதாபம் இன்று ஆன்மிகவாதிகள் எவரும் மேற்குறிய ஆன்மிகத்தை பின்பற்றாமல் 'முட்டாள்களின்' அறிவியலையே பின்பற்றுகின்றனர்

   Delete
  4. சகோ சூரி வாங்க,

   இப்போதைய ஆத்திக மத வியாபாரிகள் பயங்கர விவரம் ஆகி விட்டார்கள். போலி அறிவியலை திணிப்பதில் வல்லவர்கள் ஆகிவ்விட்டார்.

   1. சான்றான விடயங்களை மத்புத்த்கத்தில் காட்டிவிடு, அல்லது கண்டு கொள்ளாதே!!

   பரிணாமத்திலும் சிறு பரிணாமம் என்னும் ஒரு உயிரியில் பல வகைகள் தோன்றுதல் அனைவரும் எளிதில் உணர முடியும்.சூழல் சார் மாற்றங்களும் உணர முடியும். இத்னை எதிர்க்க மாட்டார்கள்.

   2. தேடப்படும் விடயங்களின் மீது விடையாக கடவுளைக் காட்டு.

   இப்படி தோன்றும் பல் வகைக் குழுக்களின் இடையே உள்ள வித்தியாசம் அதிகரிக்கும் போது ,இணைய முடியாத புதிய உயிரிக் குழுக்கள் ஆகின்றன. இதற்கு நீண்ட காலம் ஆகும் என்றாலும், நுண்ணுயிரிகளில் ஆய்வக பரிசோத்னைகள் நடட்தப் பட்டு உறுதியாக்கப் பட்டு உள்ளது.

   இன்னும் ஆதம் ஏவாள் கதை சொல்வது, பிரம‌ன் வாயில் இருந்து இவன், அதில் இருந்து இவன் என்னும் கதைகளை வைத்து பிழைப்பு நடத்த முடியாது!!

   நன்றி!!

   Delete
 5. காணொளி, அருமை. அதை தமிழ்படுத்த வேண்டும்.

  “சாகும் நட்சத்திரங்ளின் வெடிப்பில் உண்டான அணுத்தான் மனிதனின் உடலலிருக்கும் அணு. நட்சத்திரங்கள் செத்துதான் மனிதன் பிறந்தான். இயேசுவை விட்டுவிட்டு அதற்குதான் நன்றி சொல்லவேண்டும்” -lawrence krauss சொல்கிறார், -அதுவும் புனிதவெள்ளியன்று.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரேன்,

   கடவுளின் மகனான இயேசு உலகின் பாவங்களுக்காக தன்னைத் தானே பலி ஆக்கினார் என்பது உன்னதமான கருத்து போல் தெரிந்தாலும் என்னைப் பொறுத்த வரை இதற்கும், நரபலிக்கும் வித்தியாசம் இல்லை!!

   ஒரு சாமான்யன் கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிட்டால் தவறு என்பவர்கள், இதனை சிலாகித்து கூறுவதை என்ன சொல்வது??

   ***

   லாரன்ஸ் க்ராசின் புத்த்கம் இதே தலைப்பில் வந்துள்ளது. அவசியம் படியுங்கள்.பிரபஞ்சம் என்றும் உள்ளது, அதன் நிலைகள் மட்டுமே மாறும்,அதில் குவாண்டம் சுரங்கம் தோன்றுதல் என்பதுதான் பெருவிரிவாக்கம் என் அழகாக விவரிக்கிறார்.

   அதுவும் பலப் பல பிரபஞ்சங்களில்,ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட விதிகள், அதில் ஏதோ ஒரு மூலையில் உயிர் தோன்றும் சாத்தியம் என அற்புதமாக விள்க்குகிறார்.

   நன்றி!!!

   Delete
 6. மாப்ளே தாசு,

  1.//அதனால நிரந்தரமான உண்மை அறிவியலில் இல்லை, உண்மையைத் தேடுபவன் அறிவியலை துணைக்கு கூப்பிட மாட்டான். முட்டாளாவே பிறந்து முட்டாளாவே சாவலாம்னா வெறும் அறிவியலை மட்டும் நம்பியிருக்கலாம்.//

  இதனை கொஞ்சம் நான் மாற்றி சொல்கிறேன்
  "" நிரந்தர உண்மை என்பது கிடையாது""

  ஹி ஹி அனைத்தும் சார்பு நிலை கருத்துகளே

  அறிவியலின் படி உண்மை என்றால் ,பலர் ,ஒருவரை ஒருவர் சாராமல் பரிசோதித்து ஒருமித்த அல்லது வித்தியாசம் குறைவான கருத்துக்கு வருதல்.

  மத புத்த்கம் கூறும் கருத்துகளை பரிசோதிக்க சான்றுகள் இல்லை என்பது அதனை ஆய்வுகளுக்கு விதிவிலக்கு ஆக்கி விடாது!!

  மத புத்த்கத்தில் தத்துவம் இருக்கிறது என சொல்லுங்கள், பரமன் இரகசியம் இருக்கிறது என்றால் சான்று கேட்போம், அறிவியல்முறையில் பரிசோதிப்போம்!!
  **
  2./மேலும் அறிவியலில் உயிர், consciousness அப்படின்னா என்னன்னு யாருக்கும் தெரியாது. //

  இதற்கும் பரிணாம விள்க்கம் உண்டு. இதில் மிகப் பெரிய வல்லுனர் டேனியல் டென்னெட்.
  http://en.wikipedia.org/wiki/Consciousness_Explained
  Consciousness Explained is a 1991 book by the American philosopher Daniel Dennett which offers an account of how consciousness arises from interaction of physical and cognitive processes in the brain.
  **
  3.//ஒன்றுமில்லாததில் இருந்து ஏதாவது வருமா? நிரூபணம் என்ன? //

  ஒன்றுமில்லாமை=சூன்யம் என்பதே இல்லை என் பதிவில் சொல்லி இருக்கிறேன். லாரன்ஸ் கிராசின் உரை கேட்கவும்.
  **
  4.//தானாகவே சிக்கலான அமைப்புகள் உருவாகுமா? சான்றுகள் என்ன?//

  தொடர்ந்த எளிமையான மாற்றங்கள், சிக்கலான வடிவமைப்பை உருவாக்கும் என்பதே டார்வினின் பரிணாம விளக்கம்.பரிணாம் வளர்ச்சி வரலாறே இதன் சான்று!!!

  நீங்கள் சிக்கலான உடல்,சிந்த்னை அமைப்பு கொண்டவரா?? ஹி ஹி!!
  **
  5.//புவியில் உள்ள சிக்கலான அமைப்பில் ஒரு சதவிகிதமாவது சிக்கலான அமைப்பு மற்ற கோள்களில், பிரபஞ்சத்தில் உள்ளதா?//

  பிற கோள்களின் அமைப்பு குறித்து இபோது அறிந்து வருகிறோம்.பூமியில் காற்று,நீர் இருப்பதால் அதறேற்ற உயிர்கள் பரிணமித்த‌ன. செவ்வாயில் நீர் இருந்தமைக்கான சாத்தியம் கூட அலசப் படுகிறது.

  அறிந்த விடயம் தாண்டி, தேடப்படும் விடயம் நோக்கியே கேள்விகளை வீசும் நீர் இரண்டாம் வகை நம்பிக்கையாளர்!!!

  நன்றி!!!

  ReplyDelete
 7. சகோ.சார்வாகான்,

  பொய்யான உண்மை,உண்மையான உன்மை,உண்மையான பொய்னு அறிவொளிப்போல நம்பிக்கைகளையும் வகைப்படுத்திட்டீங்க.

  ஆனால் இதுக்கெல்லாம் அப்பால் மூடநம்பிக்கைனு ஒன்னு இருப்பதை விட்டுட்டீங்களே.

  கடவுள் இருக்கார்னு சொல்லி நம்புறது வேற,ஆனால் இந்தக்கடவுள் மட்டுமே ஏக இறைவனு கடவுளில் கூட வகைப்பிரிப்பாங்க,அதிலும் இன்னார் சொன்னது தான் சரினு வேற சொல்லிப்பாங்க,

  மத்வாச்சாரியா,ராமானுஜர் சொன்னதுலாம் விட்டுட்டு வெள்ளைக்கார சாமியார் சொன்னா அதான் சரினு நிக்கிற மூட நம்பிக்கையும் இருக்கே :-))

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால்,

   மூமின் சகோக்கள் என்னை சார்வாகான் என்றும்,

   இந்துத்வ சகோக்கள் சாவர்கன்(ர்) எனவும்

   நாத்திக நண்பர்கள் சார்வாகன் என் அழைத்தாலும்

   நான் ஒருவன்(?)தானே!!

   ஹி ஹி
   **

   பல் பேர் கடை போட்டு மதம் விற்கும் போது அங்கே போகாதே இங்கே வா என கூவிக் கூவி அழைப்பது சரிதானே!!

   பிழைப்பை நோக்கி வலியது வாழும் போட்டியும் போராட்டமும் பரிணாம நியதிதானே!!

   **

   மூட நம்பிக்கை என்பதும் சார்பியல் பார்வைதான். நம்ம தாசிடம் போய் உம்ம கீதை,பாகவதம் சொல்வது மூட நம்பிக்கை என் சொன்னால் நம்மை பார்த்து [வாயை] மூடு என்பார். திட்டி பதிவு போடுவார்.

   அவருக்கு பரிணாமம் மூட நம்பிக்கை!! ஹி ஹி

   அந்த மூன்று பிரிவுகளுக்கு உள்ளும் பல உட்பிரிவுகளும் பரிணாம மரம் போல் கிளைகள் விடும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   ஆகவேதான் அதனை சேர்க்க வில்லை. சான்றில்லாத நம்பிக்கை அப்படித்தான்!!

   நன்றி!!!

   Delete
 8. சரி சார்வாகன் ,நீங்கள் பரிணாமவாதியாகவே இருந்து கொள்ளுங்கள் .ஆனாலும் வாழ்க்கை நடைமுறை ஒன்று வேண்டுமல்லவா?
  அதனால் தாடி வளர்த்துக் கொள்ளுங்கள் ,அதிகமான் விஞ்ஞானிகள் தாடி வைக்கிறார்கள் .கத்னா செய்து கொள்ளுங்கள் இதையும் மருத்துவர்கள் உட்பட அறிவியலார்கள் செய்து கொள்ளுகிறார்களாம் .தலைக்கு கேப் வைத்துக் கொள்ளுங்கள் .பெண்கள் லூசாக பேன்ட் ,பைஜாமா ,சர்ட் கோட் ,தலைக்கு ஸ்கார்ப் ,அல்லது தொப்பி வைத்துக் கொள்ளட்டும் .
  சிறுநீர் கழித்தால் நீரை உபயோக்கிமாறு பல சுத்தமான் கழிப்பறைகளில் எழுதி போட்டுள்ளார்கள் அதைப்போல செய்து கொள்ளுங்கள் .பசியுடன் இல்லாமல்
  சாப்பிட்ட பின்னர் தொழுது கொள்ளுங்கள் .அதனால் நல்ல டைஜசன் ,மற்றும் உடல்பயிற்சிகள் கிடைக்கும் ஸ்பைனல் கார்ட் வர வாய்ப்பில்லை .
  சக்காத் கொடுங்கள் இதனால் உறவு மற்றும் தூரமான பாவப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனநிறைவு கிடைக்கும் .
  வருடத்திற்கு ஒரு மாதம் அதிகாலையில் உண்ணுங்கள் .உங்களுக்கு பசி எடுக்காது .அப்புறம் மாலை சூரியன் மறைந்ததும் காஞ்சி சாப்பிட்டு பாருங்கள் .உங்களுக்கு உணவின் அருமை தெரியும் .உணவு என்பது இத்தனை சுகமான் ஒன்றா என்பது புரியும் .
  திருமணம் செய்து கொள்ளுங்கள் .ஒப்பந்த அடிபடையில் , பெண்களும் அப்படியே கல்லானாலும் கணவன் ,புல்லானாலூம் புருஷன் என்றெல்லாம் வேண்டாம் .தாம்பத்ய திருப்தி ,மன நிறைவு ,குழந்தை பாக்கிய குறை போன்ற பிரச்னைகளில் மனைவியையோ கணவனையோ ரத்து செய்து விடுங்கள் .ஆண்களுக்கு ஒரு மனைவி போதாவில்லை என்றால் இரண்டை திருமணம் செய்து கொள்ளுங்கள் .மனைவிக்கு துரோகம் செய்து விபச்சாரத்தின் பக்கம் போக்தீர்கள் .அந்த விபச்சாரியை திருமணம் செய்து மனைவி அந்தஸ்து கொடுத்து அவளும் மற்ற பெண்களை போல கணவன் மனைவி பிள்ளை என்று வாழ அந்த பெண்களை விபச்சாரி என்ற நிலையிலிருந்து குடும்ப பெண்ணாக்குங்கள் .பெண்ணுக்கு நாள் கணவன் வேண்டாம் பல நடைமுறை சிக்கல் உள்ளது .
  சொத்து விசயங்களில் அடித்து கொள்ளாதீர்கள் .அருமையான சட்டங்கள் இருக்கிறது .சுப்ரீம் கோர்ட் போனாலும் அதுதான் சட்டம் .ஆகவே கோர்ட்டுக்கு போகாமலே அதை பின்பற்றுங்கள் .இறைநாடினால் இன்னும் சொல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ வாங்க
   ஸலாம்,
   நடைமுறை வாழ்வில் ஒரே இடத்தில் வாழும் ,ஒரே கலாச்சார மனிதர்களிடம் அதிக வித்தியாசம் கிடையாது.

   நீங்கள் சொல்வதில் பல் விடயம் நானும் செய்வதுதான். மாறுபடும் விடயம் மட்டும் சொல்கிறேன்.

   1. பரிணாமம் என்பது நாத்திகம் அல்ல. நாத்திகர்களின் பரிணாமம் என்னும் அறிவிய‌லின் விளக்கத்தை ஏற்கிறோம்.குரான் பரிணாமத்தை மறுக்கவில்லை [அகமதியாக்கள் போல்] எனவும் பொருள் கொள்ள முடியும்.

   2. தொழுகை= உடல் பயிற்சி, பரவாயில்லை.நான் நடைப் பயிற்சி,கொஞ்சம் யோகா செய்வது உண்டு.

   3. ஒரு மனைவிதான் சரி, குழந்தை இல்லை எனில் தத்து எடுக்கலாம்.

   4. நோன்பு வைப்பது சரி. தொடர்ந்து 30 நாள் வருடத்தில் அல்ல. வாரத்தில் ஒரு நாள் ஒரு வேளை மட்டும் உண்ணுதல்.

   5. மாமிசம் உண்ணலாம்.வாரம் ஒரு முறை. கடையில் கிடைக்கும் ,எதுவும் சரி.எல்லாம் ஹலால்தான் ஹி ஹி!!!

   6. ஜ‌காத்= தானம்,100% சரி ஏற்கிறேன்.

   7. புனிதப் பயணம் தேவை இல்லை!!

   8. அரசியலில் மதம் கலப்பு கூடாது.இந்தியா ஜனநாயக,மத சார்பற்ற நாடாக மட்டுமே என்றும் இருக்க வேண்டும்.

   9.பொது சமூக/குற்றவியல் மனித உரிமை பாரபட்சம் அற்ற சட்டங்கள் தேவை. மரண தண்டனை தேவையில்லை.

   நன்றி!!

   Delete
 9. சார்வாகன்,

  பரிணாமத்தில் ஒரு அறிவியலாளர் ஒரு கருத்தை சொல்லி அதற்கு சில சான்றுகள் வைக்கிறார். நீங்களும் எற்றுக் கொள்கிறீர்கள். சில நாட்கள் கழித்து இன்னொருவர் வந்து அவர் சொன்னது தவறு தான் சொல்லும் புதிய கருத்துதான் சரி என்று அவரும் சில சான்றுகள் வைக்கிறார். இப்போது பழைய கருத்தைவிட்டு புதிய கருத்தை எற்றுக் கொள்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை நீங்கள் உணமை என்று எண்ணிய கருத்து தவறாகிவிட்டது. அதாவது ஒரு பொய்யை உண்மை என்று நம்பியிருக்கிறீர்கள். அந்த பொய் கருத்து மட்டுமன்றி அதை நிரூபிக்கக் கொடுக்கப்பட்ட சான்றும் பொய், ஆனால் அந்த பொய் சான்றையும் உண்மை என்றே நம்பி வந்திருக்கிறீர்கள்.

  இப்போது கொடுக்கப்பட்ட புதிய சான்று அடிப்படையில் புதிய கருத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது புதிய சான்றை நம்புவதால் அந்த புதிய கருத்தும் உண்மை என்று நம்புகிறீர்கள். நாளை இதுவும் மாறலாம். ஆக நீங்களும் நம்பிக்கையாளரே. மதத்தில் இறை தூதர்கள், ஆன்மீகவாதிகள் சொல்வதை நம்புவதுபோல, நீங்கள் அறிவியலாளர்கள் சொல்வதை நம்புகிறீர்கள். மட்டுமல்ல அதுதான் உண்மை என்று பரப்போரை செய்கிறீர்கள். ஆக நாத்திகத்தையும் ஒரு மதத்தைப் போலவே கட்டமைக்கப் பார்க்கிறீர்கள்.

  பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாளர்கள் பார்வையற்றவர்கள் யானையை தடவி ஆளுக்கொரு கதை சொல்வது போலவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராபின் வாங்க,
   இந்தப் பதிவே உங்களுக்குத்தான்.

   அறிவியல் என்பது சான்றுகளின் மீதன பொருந்தும் விளக்கம்.நீங்கள் சொல்லும் ஒரு அறிவியல் விள்க்கம் கடந்த கால சான்றுகளை சரியாக் விள்க்கினாலும், நிகழ்கால சான்றுகளின் மீதான் கண்க்கீட்டில் பிழை தருகிறது. அப்போது அக்கொள்கை மாற்றி அமைக்கப் படலாம், புதிய கொள்கை வரலாம்.

   பரிணாம விள்க்கங்களிலும் பல் மாறுதல்கள் வந்துள்ளன.

   சான்றுகள் மாறுவது இல்லை, அதன் விள்க்கங்களும் பரிணமிக்கின்றன.

   ஒருவேளை பரிணாமத்திற்கு எதிரான சான்று கிடைத்தால், முதலில் நான்தான் பதிவிடுவேன்.

   எப்படி சான்று எனில்,

   1.வேற்று கிரகவாசிகளின் அறிவியல் பரிசோதனைதான் நமது உலகம் என கண்டுபிடிக்கப் பட்டு விட்டால்
   [ நாம் இன்னொரு உலகம் பெருவிரிவாக்கம்+பரிணாமம் இணைத்து படைத்தால் =வழி நடத்தப் பட்ட பரிணாமம் ஹி ஹி]
   அல்லது

   படிமங்கள் பரிணாம மரத்திற்கு முரணாக கிடைத்தால்!!

   அல்லது.

   ஜீனோம் மாற்றம் எல்லைக்கு உட்பட்டது என் நிரூபிக்கப் பட்டால்

   ...

   நன்றி!!!

   Delete
 10. மனிதனுக்கு விடைதெரியாக் கேள்விகள் இருக்கும்வரை நம்பிக்கைகளும் இருக்கும்.

  ReplyDelete
 11. வணக்கம் சகோ.

  கலக்கலான பதிவு எதையும் கேள்வி எண்ணத்தில் ஆராய்ந்ததால் அறிவியல் வளர்ந்தது. நம்பிக்கை மட்டுமே மதத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது இந்த அடிப்படையைத் தகர்த்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதாலேயே மதவாதிகள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அறிவியலை வளர்த்ததில் பெரும்பாலோர் இறைநம்பிக்கை உடையவர்கள்தான். பெரும்பாலான கண்டுபிடிப்புகள் மதவாதிகளால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. உங்களுக்கு மட்டும்தான் மூளை இருக்கிறது என்று பேசவேண்டாம். இதுவரை வந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனை ஆத்திகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, எத்தனை நாத்திகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கணக்கெடுத்துப் பாருங்கள், அப்புறம் உதார் விடுங்கள்.

   Delete
 12. மூளை எல்லோருக்கும் இருக்கிறது அறிவுத் திறன் உள்ளவர்கள் மட்டுமே அறிவியல் அறிஞர்களாகின்றார்கள். மதவாதிகள் எதையும் கண்டுபிடிக்கக் கூடாது நாத்திகர்கள் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும் என்ற வரம்பு ஏதும் உண்டா நண்பரே? அனைத்து கண்டுபிடிப்புகளும் மனித கண்டுபிடிப்புக்களே.விஞ்ஞானிகளில் சிறந்தவர் ஆத்திகரா?நாத்திகரா?என்று இங்கு யாரும் பட்டிமன்றம் நடத்தவில்லை.அனைத்துக் கண்டுபிடிப்புக்களும் மனிதர்களுக்குப் பொதுவானதே. ஆம் இங்கு எங்கும் மனிதன் மனிதன் மனிதன் மட்டுமே.

  ReplyDelete
 13. கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? இது கண்ணதாசன் வாதம் இது எந்த வகை நம்பிக்கை

  ReplyDelete
 14. Faith gives comfort for the believers. If Science has rejected religion completely, they wouldn't be studying prayer and meditation. Thoppukaranam is called super brain yoga. Practioners do not have to to know Ganesha!
  Don't get me wrong.I am for separation of Church and State.
  Religion too will evolve to simple practices that will benefit even non believers.
  Human brain has not been understood completely by Science. Is learning a linear process as our education system would have us believe. If you search "Rex and Sixty Minutes" you will see an interesting video. Why isn't this possible for all humans?

  ReplyDelete
 15. உங்கள் விவாதங்கள் பின்னூடங்கள் நம்பள்கிக்கி டூ மச்; டூ மச் என்று சொல்வதை விட..எனக்கு..த்ரீ மச்...

  ஏழைக்கு ஏத்த எள்ளுரண்டை மாதிரி....நானும் கடவுளைப் பத்தி எழுதியுள்ளேன்...அதற்கு யாராவது பதில் கொடுங்களேன் பார்ப்போம்? உங்களால் முயத்யாது...!

  ReplyDelete
 16. நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம்.நம்பிக்கை தரும் படைப்புக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து இதுபோல எழுதுங்கள்

  ReplyDelete