Tuesday, July 31, 2012

இயற்கை வழி விவசாயமே எதிர்கால‌ வழிகாட்டிவணக்கம் நண்பர்களே,

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


காணொளி பாருங்கள்!!!!!!!!!!!!!!


நன்றி  

Friday, July 27, 2012

பரிணாமம்,அறிவார்ந்த வடிவமைப்பு முறையாக இலவச கல்வி படிக்கலாம் வாங்க!!!!!!!!


வணக்கம் நண்பர்களே,

உயிரின‌ தோற்றம்,பரவல் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கை பரிணாமக் கொள்கை என்பதும் அனைவரும் அறிவோம்.அது பற்றிய தகவல்களை நம் தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறோம்.

பரிணாமத்திற்கு மாற்றாக அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்னும் கொள்கையாக்கத்தையும் பரிணாம கொள்கை மறுப்பாளர்கள் முன் வைக்கிறார்கள்.இது குறித்தும் அவ்வப்போது   பதிவுகள் இடுகிறோம்.

இப்போது  பரிணாம கல்வி ,பரிணாம் விமர்சன அறிவார்ந்த வடிவமைப்பு கல்வி இரண்டுமே இலவசமாக கற்கும் கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


பரிணாம கொள்கை கற்பிப்பவர் பேரா முகம்மது நூர் டியூக் பல்கலைகழகம்,USA. பரிணாம்,Genetics அடிப்படையில் கற்பிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.காணொளியில் பேரா நோர் விள்க்குகிறார்.பாருங்கள்.


http://www.biology.duke.edu/noorlab/noor.htmlCourse Syllabus
 • Evidence for evolution
 • Introduction to basic genetics
 • Recombination and genetic mapping simple traits
 • Complications to genetic mapping
 • Genes vs. environment
 • Basic population genetics and Hardy-Weinberg
 • Gene flow, differentiation, inbreeding
 • Natural selection and genetic drift
 • Molecular evolution
 • Evolutionary applications and misapplications
 • Adaptive behaviors and species formation
எந்த தகுதியும் தேவையில்லை,இது இலவச,இணைய வழிக் கல்வி.இது இல்லாமல் இன்னும் பல பாடங்கள் கற்பிக்கப்படுகிறன.அவ்ற்றிலும் ஆர்வம் உள்ளோர் இணையலாம்.


இங்கே பதிவு செய்யுங்கள்,வாழ்த்துக்கள்.
****************

சரி அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் இலவச ,இணையக் கல்வி உண்டு அதையும் கற்க விரும்புவோர் கற்கலாம்.நாம் பரிணாம‌ம் விமர்சனம் தவறென்று சொல்லவில்லை.தவறாக பரிணாமத்தை விம்ர்சிகாதீர்கள் என்வே கூறுகிறோம்.அறிவியல்ரீதியான ஒவ்வொரு விமர்சன‌த்திற்கும் பரிணாம ஆய்வாளர்கள்(ஹி ஹி ஆதரவாளர்கள் அல்ல) பதில் அளித்தே ஆகவேண்டும்.சரியான புரிதல் இல்லா பரிணாம ஆதரவாளனை விட‌ பரிணாம மறுப்பாளனே மேல் என்பது நம் அனுபவரீதியான உணர்தல்.இது டார்வினியம் மற்றும் அறிவார்ந்த வடிவமைப்பு என்னும் பெயரில் நடத்தப்படுகிறது.ஏன் பரிணாமம் என்று சொல்லாமல் டார்வினியம் என்று சொல்கிறார்கள் என பல முறை விவாதித்து இருக்கிறோம்.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது படைப்புக் கொள்கையில் இருந்து வழிநடத்தப் பட்ட பரிணாமம் வரை ஏற்கும் விதத்தில் உள்ளதால் டார்வினின் இயற்கைத் தேர்வை விட இக்கொள்கையாக்கம் அதிக பொருந்தும் விள்க்கம் அளிப்பதாக இக்கொள்கையாளர்கள் கூறுகின்றனர்.


இங்கே பதிவு செய்யுங்கள்.

Course outline


இது ஒரு கிறித்தவ அமைப்பு நடத்தும் ட்ரினிட்டி பல்கலை கழக்த்தினால் நடத்தப்படுகிறது.பேரா டாம் வுட்வர்ட் இந்த பரிணாம் &அ.வ விவாதங்களில்,அதிகம் பங்கெடுத்தவர்.அவரின் காணொளி ஒண்று.
ஆகவே ஆர்வம் உள்ளோர் இணைய வேண்டுகிறேன்.இந்த கல்விக்கு விண்ணப்பத்தில் உங்களின் கிறித்தவ  ஆலயத்தின் பெயர்,முகவரி,கிறித்த‌வ மத குருவின் பெயர் என்று கேட்பது எதற்கு என்று தெரியவில்லை.கிறித்தவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படுவது போல் தெரிவதால் இதனை தவிர்த்து  நாம் பரிணாம கல்வியில்  மட்டும் இணைந்து விட்டோம்.

கல்வியிலும் மதம் பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.நாம் ஏன் பரிணாம‌ எதிர்பாளர்கள் (பெரும்பானமையோர் ) மதவாதிகள் என கூறுகிறோம் என்பது இப்போது அனைவருக்கும் புரியும்.

எனினும் கிறித்தவர் அல்லாத கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கும் கற்பிப்பார்கள் எனவே தோன்றுகிறது.ஆகவே  மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெற்று இணையலாம்.


தமிழர்கள் இரண்டையும் படித்தால் தமிழ்பதிவுலகில் பரிணாம் vs அறிவார்ந்த வடிவமைப்பு புதிய பரிமாணம் எடுக்கும் .இக்கல்வி தமிழ் மொழியில் கூட வழங்கும் சூழல் வரலாம்..

சபாஷ் சரியான போட்டி(போராட்டம்!!!) ஹா ஹா ஹா

நன்றி


Wednesday, July 25, 2012

போட்டி போடுவதா? போராட்டம் செய்வதா?
உலகில் வாழும் கோடிக்கணக்கான் உயிரினங்களில் மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகள் மற்றஉயிரினங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.பிற உயிர்கள் ,இயற்கையின்  ஒரே பிரச்சினை மனிதனின் பேராசை என்றால் மிகையாகாது. பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை,இயற்கை சூழலை அழிப்பதில் மனிதனின் பங்கு மகத்தானது.மனிதனுக்கு இருப்பதாக கருதப்படும் உபரி அறிவு பெரும்பாலும் இந்த நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது.

சரி புலம்பலை நிறுத்தி பதிவுக்கு வருவோம்.இப்போதைய நடைமுறை வாழ்வில் இரு வகையான பொருளாதார கொள்கைகள் உள்ளதாக சொல்லலாம்.

1. சந்தைப்  பொருளாதார முதலாளித்துவ வலதுசாரிக் கொள்கை

2.பொது உடமை இடது சாரிக் கொள்கை.

இந்த இரண்டுமே ஆத்திகர் ,நாத்திகர் வித்தியாசம் போல்,விவாதம்,விமர்சனம் என்று போகும் ஒரு தொடர்கதை.இந்த இரண்டையும் பற்றி சுருக்கமாக அறிவதே இப்பதிவின் நோக்கம்.

சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு அம்சமான விலை நிர்ணயம் பற்றி முந்தைய பதிவு ஒன்றின் பார்த்தோம். உலகளாவிய சந்தைப் பொருளாதார முறையில்  என்ன சொல்கிறார்கள்   ?

1.சட்டம் ஒழுங்கு போன்ற சில இன்றியமையா துறைகள் தவிர அனைத்துமே தனியார் வசம் இருக்க வேண்டும்.

2.தொழில்,வியாபாரம் தொடங்க எல்லைகள்,விதிகள்  இருக்ககூடாது அல்லது மிக குறைவாக இருக்க வேண்டும்.

3.பொருளாதாரம் என்பது சுழற்சி முறையிலானது.ஏற்றம் இறக்கம் போன்றவை இயல்பான விடயங்களே.

4. போட்டி என்பது தனி மனிதனில் ஆரம்பித்து ,நாடுகள் வரை இருந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.

ஆகவே போட்டி போடுவதே இதன் இயல்பு.போட்டி இட முடியாதவர்களுக்கு சில சலுகைகளும் வ்ழங்குவதாகவும் சில அம்சங்கள் உண்டு
.******************

சரி இடதுசாரி பொது உடமை என்ன சொல்கிறது?

1.மனித சமுதாயம் வரலாற்று ரீதியாக முதலில் தனியுடமை கொண்டதாக இருக்கவில்லை. விவசாயம் சார்ந்து ஒரு இடத்தில் வசிக்க முறப்ட்ட போதே தனியுடமை வந்தது.பிறகு அடிமை முறை,பிரபுத்வம்,அரசாட்சி,ஜனநாயகம் என பல் மாற்றங்களை ஏற்றது.அவ்வகையில் பொது உடமை என்பதும் அடுத்தநிலை ஆகும்.இதனை தவிர்க்க இயலாது.

2. உலகிற்கே இது பொருந்தும் எனினும் ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளம்,சொத்துகள் னைத்தும் அரசின் வசம் இருக்கும்.

3.அனைவருக்கும் வாழ்வாதாரம்,கல்வி சுகாதாரம் போன்றவை அரசினால் வழங்கப் படும்.இது இந்நூற்றான்டின் தொடக்கத்தில் சில நாடுகளில் அமலுக்கு வந்து பல சாதனைகள் செய்ததாக சொல்லப் பட்டாலும், வந்தது போலவே மறைந்தது அல்லது பல மாற்றங்கள் கண்டது.

இபோதைய பொது உடமை நாடுகள் என்று தங்களை அழைக்கும் சீனா,கியுபா சந்தைப் பொருளாதரத்தின் பல அம்சங்களை பயன்படுத்துகின்றன.

பொது உடமைக் கொள்கையின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் பலர் இது மனித இயல்புக்கு மாறானது என்பதையே முதன்மையாக்குகின்றனர்.அதாவது போட்டி போடுவது மனித இயல்பு  போட்டியை மறுக்கும் பொது உடமை இயல்புக்கு மாறானது என்பதே வாதம்.ஆகவே போட்டி போட்டு முன்னெறுங்கள் என்பது வலது சாரி வாதம்!!!!!!!!!!!!!!

போட்டி என்பது நியாயமாக நடந்தால் பரவாயில்லை,வலியோர் அரசியல்வாதிகளின் துணையோடு இயற்கை வளங்களை சுரண்டித்தானே தொழில் நடத்துகின்றார். இயற்கை வளம் வேண்டி காலம் காலமாக வாழும் நிலத்தை பிடுங்குகிறார்,இயற்கை வளம் உள்ளநாடுகளில் பிரச்சினை ஏற்படுத்தி சமாதானம் பேசுவது போல்  ஆக்கிரமிப்பு செய்து சுரண்டுகிறார்.ஆகவே போராடுவோம் என்பது இடதுசாரி வாதம்.

சரி நாம் என்ன சொல்கிறோம்?

நாம் இபோது ஒரு 75% சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்ட ஜனநாயக மத சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம்.

சர்வரோஹ நிவாரணி என்பது இருக்கவே முடியாது.ஆகவே எதனையுமே அப்படி ஏற்க முடியாது.

போட்டி போட்டு வரும் மன அழுத்தத்தால் கொலை,தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.ஆகவே போட்டி மனப்பானமை அடிப்படையிலான கல்விமுறை நிச்சயம் மாற்றப் படவேண்டும்.

தனியுடமை என்பது ஒழிக்க முடியாது எனினும் ,உச்ச வரம்பு அமல்படுத்துவது நல்லது.

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு,அது சார் நடவடிக்கைகள் தேவை.

அரசியல் பணிக்கும் கால வரம்பு. [.கா ஒருவர் அதிகபட்சம் 10 or 15 வருடம் மட்டுமே  சட்ட மன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் எனில் பல புது முகங்கள் பதவிக்கு வரும் வாய்ய்பு உண்டு.வாரிசு அரசியல் ஒழியும்]

போராட்டம் என்பது வன்முறையில் முடியும் வாய்ப்பு அதிகம்,ஆதிக்க ஆளும் சக்திகளுக்கு இதனை தங்களுக்கு சாத்கமாக மாற்றும் வித்தை கற்று பல வருடம் ஆனதை போராடு என ஊக்குவிப்பவர்கள் அறியவில்லை.

பலர்  போராட்டம் என பல இழப்புகளை சந்தித்ததும் அறிவோம்.அதன் பலன் யாருக்கோ செல்லும்.

மாற்றம் என்பது சிறிது சிறிதாக அடிமட்டத்தில் இருந்தே வரவேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கு சாதகமானதை மட்டும் விவாதிப்பதும் இயல்பானது.இந்த போட்டி,போராட்டம் இரண்டும் நம்மையும் பாதிக்கும் விடயங்கள் என்பதாலேயே விவாதிக்கிறோம்.

ஜனநாயகத்தினால் எங்களுக்கு கிடைத்த கொஞ்ச உரிமைகளையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது!!!!!!!!!!!!!!!!!!.

இதுதான் செய்ய வேண்டுமென யாராலும் சொல்ல முடியாது.ஆனால் இது குறித்த ஆக்கபூர்வமா விவாதங்கள் சில நடைமுறைகள் இப்போது இருக்கும் சூழலில் செய்ய முடியும்..

நம் வீட்டு குழந்தைகள்,இளைஞர்களை போட்டி என்பதில் இருந்தும் போராட்டம் என்பதில் இருந்தும் சரியான புரிந்துணர்வு கொள்ளசெய்வோம்.

போட்டியல்ல நட்போடு பகிர்வோம்

போராட்டமல்ல ஆக்கபூர்வமான படிப்படியானமாற்றம்

டிஸ்கி

சி அறைக்குள் உட்கார்ந்து  இப்படித்தான் எழுதுவான்கள் என்ற குரல் நமக்கு கேட்கிறது.நாம் மனித உயிர்கள் எதன் காரணமாகவும் பலி ஆகக்கூடாது.நம் வீட்டு குழந்தைகள் போட்டியினால் போராடுகிறார்கள் என உணர்ந்ததால் உரைக்கிறோம்.

நம் கருத்தை மறுக்க என்னை திட்ட சகலஉரிமைகளும் நம் சகோக்களுக்கு உண்டு!!!!!!!!!!!!!!!

உங்களின் கருத்தை நான் மறுக்கலாம் ,ஆனால் அக்கருத்து கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறேன்: வால்டய்ர்


நன்றி!!!!!!!!!!!!!!!!!!

கணித மேதை இரமானுஜத்தின் கடிதங்கள்:காணொளி


கணிதமேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 221887 - ஏப்ரல் 261920) இந்தியாவில் பிறந்த மிக சிறந்த அறிஞர்களுல் ஒருவர் என்பதை அனைவரும் அறிவோம்.

அவர் குறித்த விவரங்களை இந்த விக்கிபிடியாவில் அறியலாம்.தமிழ் விக்கிபிடியாவில் அனைத்து வாழ்க்கை குறிப்பு விவரங்களும் இருப்பதால் நாம் எதுவும் இப்பதிவில் எழுதவில்லை.

அவர் குறித்த ஒரு காணொளி இப்பதிவில் பகிர்கிறோம்.அனைவரும் கண்டு மகிழ்க!!!!!!!!!!!!!!!!!!

Monday, July 23, 2012

ஔரங்கசீப்பும் ஓசூர் இராஜனின் கதையும்;ஓர் மீளாய்வு

ஔரங்கசீப்பும் ஓசூர் இராஜனின் கதையும்;ஓர் மீளாய்வு

வணக்கம் நண்பர்களே,

நமக்கு அறிவியல் வரலாறு சார்ந்த ஆய்வு விவாதங்களில் ஆர்வம் உண்டு.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் விளக்கம் எனில் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் நிகழ்வுகளில் விள்க்கம் எனலாம்.
இப்பதிவுக்கு மீளாய்வு செய்ததை வெளியிடலாமா என நமக்கு பெரும் தடுமாற்ற‌ம் ஏன் என்பதை விளக்கத்தின் போது படிப்பீர்கள்.நாம் சொல்லும் பல பன்முக நடுநிலை கருத்துகள் பல மத்வாதிகளின் பிரச்சாரங்களுக்கு எதிர் வினையாவது தவிர்க்க முடிவதில்லை.

சரி பதிவுக்கு வருவோம்.சகோ ஓசூர் இராஜனின் பதிவின் சாரம் என்ன? 
1.ஔரங்கசீப் என்னும் முகலாய மன்னர் ,இந்துத்வவாதிகளால் தீயவராக சித்தரிக்கப்படுவது தவறு.

2.ஔரங்கசீப் ஒரு பல் மதத்தவரையும் நண்பர்களாக கொண்ட ,ஆதரித்த ஒரு மன்னன்.

3.ஔரங்கசீப் தனது கச் சிற்றரசின் அரசி அலயத்தில் மான்பங்கம் செய்யப் பட்டதால் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தார்.
 
 
இந்த மூன்று விடயங்களையும் ஆய்வுக்கு எடுப்போம்.
முதல் விடயம் மிக இயல்பான ஒன்று.. ஔரங்கசீப்பை இஸ்லாமிய மதவாதிகள் புகழ்பாடுவதும்,இந்துத்வவாதிகள் இக்ழ்வதும் அனைவரும்
அறிந்தது.

ஔரங்கசீப்பின் வரலாற்றில் வாரிசுப் போரில் த்னது சகோதரர்களைக் கொன்றது,தந்தையை சிறையில் இட்டது போன்ற விடயங்கள் வரலாற்றுப் பாட புத்கங்களில் படித்து இருக்கிறோம்.

ஔர‌ங்க‌சீப் ப‌ல் போர்க‌ள் புரிந்து இந்திய‌ துணைக‌ண்ட‌த்தின் பெரும்ப‌குதியை ஆண்டார் என்ப‌தால் போர் புரிப‌வ‌ர்க‌ள் அனைவ‌ராலும் பாராட்ட‌ப்ப‌ட‌ மாட்டார்க‌ள் என்ப‌தும் இய‌ல்பே.

இன்னொரு முக‌லாய‌ ம‌ன்ன‌ன் அக்ப‌ர் இஸ்லாமிய‌ ம‌த்வாதிக‌ளால் தூற்ற‌ப்ப‌டுவ‌து அவ‌ர் புதிதாக் ஒரு ம‌த‌ம்(தீன் இலாஹி) ஆர‌ம்பித்த‌துதான்.ம‌த்வாதிக‌ள் ஒருவ்ரை ஒருவ‌ர் வன்முறையற்று விம‌ர்சிக்கும் போது ந‌டுநிலையாள‌ர்க‌ள் க‌ண்டு கொள்ள‌‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

ஔரங்கசீப் பற்றிய பல விவரங்கள் சர்சைக்குறியவையே.ஆகவே புகழ்வதும் இகழ்வதும் அவரவர் நிலைப்பாடு.
**********

இரண்டாம் விடயம் ஔரங்சீப்புக்கும் சில காஃபிர் அரசர்கள் நண்பர்களாக் இருந்தனர் என்ற விடயத்தை எடுபோம்.
 

ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளும் அரசன் தனக்கு விசுவாசமான் பலரை பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே நிர்வாகம் செய்ய இயலும்.ஆகவே ஒரு குறிப்பிட்ட இன‌த்தவர் மட்டுமே ஆளும் வர்க்கம் எனில் அரசு சீக்கிரம் கவிழ்ந்து விடும்.ஆகவே ஒவ்வொரு இன‌த்திலும் எந்த ஆட்சி வந்தாலும் ஜால்ரா அடிக்கும் ஆட்களை கண்டறிந்து அவர்களை அரவனைப்பது பல் காலமாக உள்ள நடைமுறை.
ஒரு எ.கா வேண்டுமெனில் நம் நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் இந்துத்வ சக்திகளுக்கு மிகவும் பிடித்தவர். அது போன்ற சிலருக்கு ஔரங்கசீப் சிற்றரசர்களாக பதவி அளித்து நிர்வாகம் நடத்தி இருந்தால் அது சாத்தியமான் ஒன்றே.ஒருவன் அனைவருக்கும் கெட்டவன் ஆக முடியாது,. சிலருக்கு நல்லவன்,சிலருக்கு கெட்டவன் இதுதான் அரசியல் ஹா ஹா ஹா!.

*********************
மூன்றாம் விடயமாக சகோ ஓசூர் இராசன் ஏன் காசி விஸ்வதநாதர் ஆலயம் ஔரங்கசீப்பால் ஏன் இடிக்கப்பட்டது என்பதை விள்க்குகிறார்.
அவர் பதிவிலேயே படிக்க வேண்டுகிறேன்.நான் சொல்ல வருவது என்ன வெனில் சகோ ஒசூர் இராசன் சொலவது முன்னாள் ஒரிசா ஆளுநர் ஃபிசாம்பர் நாத் பாண்டே எழுதிய புத்த்கத்தில் உள்ள விடயம்தான்.


சகோ ஓசூர் இராசன் இதில் கூறியது பாதி உண்மை.கோயிலை இடித்ததை கூறியவர் அவ்விடத்தில் மசூதி கட்டியதை மறைத்து விட்டார்.அது இன்றுவரை பிரச்சினையாக உள்ளது.
இந்துத்வ சார்புடைய ஐரொப்பிய எழுத்தாளர் கொன்ரட் இது பற்றி விவாதிக்கிறார்.

இப்போது சகோ ஓசூர் இராசன் என்ன செய்து இருக்கிறார் எனில் ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து மசூதி கட்டியதை நம் வஹாபி சகோக்கள் ஆதரவுடன் நிரூபித்து இருக்கிறார்.
சரியான உள் குத்து பதிவு

ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததை நம் மூமின் சகோக்களை ஒத்துக் கொள்ள வைத்து விட்டீர்களே தலை ஓசூர் இராசன்!!!!!!!!!.
 

அயோத்திக்கு அடுத்து காசி விஸ்வதார் கோயிலை பிரச்சினை ஆக்க இந்துத்வ சக்திகள் முயல்வதும் அனைவரும் அறிவோம்


அடுத்து பாபர் மசூதிக்கும் இதே போல் ஓசூர் இராசன்  செய்வாரா என்பது பொறுத்து பார்க்க வேண்டும்!. !


சூப்பரா உள்குத்து போடூரீங்க தலை ஓசூர் இராசன்


நம் மூமின் சகோக்களுக்கு இபோது ஓசூர் இராசன் பதிவு என சொல்கிறது என்பது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

இதனால்தான் குரான்

"சிந்திக்க மாட்டீர்களா"!!!!!!!!!!!!!!!

என கூறுகிறது.

******************
 
நாம் என்ன சொல்கிறோம் ?

1947ல் இந்தியா என்னும் மத சார்பற்ற ,ஜன‌நாயக நாடு உருவானதில் இருந்து முந்தைய புராதன சின்னங்கள் பாதுகாக்கப் படவேண்டும்.அதற்கு முன்னால் நடந்தவற்றுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.

வரலாற்றின் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதோ,பரிகாரம் செய்வதோ தேவையற்ற‌து. இறந்த மனிதர்களை விட வாழும் மனிதர்களே முக்கியம்.

நமது நாட்டின் அரசியமைப்பு இன்னும் மனித உரிமைகள் அடிப்படையில் சீர்திருத்தப் படவேண்டும்.அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதாரம் வாழ்வாதாரம் உறுதிப் படுத்தும் ஒரு ஆட்சி முறை உருவாக வேண்டும். ‌

இந்த விதத்தில் சிந்திகாமல் மதம் சொல்வது மட்டுமே சரி ,அதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றுவோம் என்னும் சக்திகள் கால ஓட்டத்தில் காணாமல் போவது உறுதி.
நன்றி.******************

Friday, July 20, 2012

விலையே உன் விலை என்ன?


வணக்கம் ண்பர்களே,

இப்பதிவில் விலை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம்.விலை என்றால் என்ன என தெரியாதா? அப்படியென்றால் நிங்கள் காட்டில் வசிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என எண்னுகிறீர்களா நன்றி.

வாழ்வில் மிக இயல்பாக பயன்படுத்தும் பல விடயங்களின் அடிப்படைகள் நாம் அறியாதவை. மனிதர்கள் முதலில் காடுகளில் வாழ்ந்தனர். அப்போது சிறு குழுக்களாக வாழ்ந்தனர்.வேட்டைக்கு சென்று விலங்குகளை  கொன்று அதனை உண்டனர். விலங்கின் தோல்களே ஆடை ஆயிற்று.

அப்போது எதற்கும் விலை கிடையாது.வேட்டைக்கு செல்பவர்களில் பலர் அவ்வப்போது உயிர் இழப்பதுதான் உணவின் ஒரே விலை.

அதன் பிறகு மனிதன் விவசாயம் அறிந்ததால் ஒரே இடத்தில் வாழ முற்பட்ட போது தனக்கு தேவைப்பட்ட அனைத்தையும் தனது குழுவால் மட்டும் உற்பத்தி செய்ய இயலாது என்பதை அறிந்தான்.பிறகு பண்ட மாற்று முறை வந்தது.

இதிலும் ஒரு மாட்டுக்கு எவ்வளவு தானியம் சமம் என்னும் சிக்கல்கள் வந்தது.பணம் என்பது ஒவ்வொன்றின் மதிப்பை குறிக்கும் அளவாக ஏற்றுக் கொள்லப் பட்டது.


சரி பதிவின் மையக் கருத்தான விலை என்பதற்கு செல்வோம்

விலை என்பதின் வரையறுப்பு என்ன?

ஒரு குறிப்பிட்ட அளவு பொருள் அல்லது சேவையின் மதிப்பு.


சரி விலை என்றால் மதிப்பு இது எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.உலகின் பொருளாதாரமே இக்கேள்விக்குள் அடங்கி விடுகிறது.இது சுலபமான கேள்வி அல்ல.

ஒரு அளவுக்கு கூறினோம் எனில் இம்மதிப்பு தேவையை பொறுத்து நிர்ணயம் செய்யப் படுகிறது.

ஒரு பொருளை உற்பத்தி செய்ய உங்களுக்கு 10 ரூபாய் ஆகிறது என வைத்துக் கொள்வோம். இத்ர செலவுகள் இலாபத்தோடு சேர்த்து 15ரூ என விலை நிர்ணயம் செய்வது சரியான எளிமையான முறையாக தோன்றினாலும் இப்படி நடைமுறையில் முடியாது.

அப்பொருளுக்கு என்ன விலை தர நுகர்வோர் தயாராக இருக்கிறாரோ அதுவே விலையாகும். சில சமயம் இலாபமாகவும் பல் முறை நட்டமாகவும் விவசாயிகளுக்கு வருவது இதனால்தான்.

சரி உற்பத்தி செய்பவர்களுக்கு நட்டம் வரும் போது வியாபாரிகளுக்கு எப்படி இலாபம் வரும். வியாபரிகள் பல பொருள்களை விற்பதால்  ஒரு பொருளின் விலை நட்டம் பிற பொருள்களில் இலாபமாக இருக்கும் படி பார்த்துக் கொள்வர.

சரி தேவை எப்படி ஏறும்,இறங்கும் எனில் இது பல சமூக,அரசியல்  காரணிகளைக் கொண்டது.ஒரு தேவையற்ற  பொருளை செயற்கையாக இன்றியமையாதது போல் விளம்பரம் செய்து இலாபம் ஈட்டவும் இயலும். இன்றியமையா உணவுப் பொருளை அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி செயற்கைத் தேவை ஏற்படுத்தி விலை ஏற்றவும் முடியும்.

இதில் பல விடயம் உண்டு எனினும் விலை என்பது ஒரு மதிப்பு ,இது தேவையால் நிர்ணயம் செய்யப் படுகிறது.ஒரே பொருள் உற்பத்தி ,வியாபாரம் செய்பவ்ர்களுக்கு எப்போதும் இலாபம் வரும் என்பது நிச்சயமில்லை.

இப்படி செய்தால் இலாபம் வரும் என்பது சுதந்திர சந்தை பொருளாதாரத்தில்[free market]  உறுதியாக கூற இயலாது.

அப்படியானால் சந்தைப் பொருளாதாரம் உற்பத்தியாளருக்கு சாதகமானது இல்லை எனில் நுகர்வோருக்கும் சாதகமாகவும் எப்போதும் இருக்காது.

ஆகவே மாற்று பொருளாதார முறைகள் உருவாக வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோமா ?

ஹா ஹா ஹா

நாளை நடப்பதை யாரறிவார்?

"சூழலுக்கு ஏற்ற மாற்றம் உருவானால் மட்டுமே தப்புவோம் என்பது அறிவியல்"

காணொளி பாருங்கள்