Monday, July 2, 2012

புவி வெப்பமயமாதலுக்கு காரணம் அசைவ உணவு விலங்குகளா?!: காணொளி[18+]வணக்கம் நண்பர்களே

புவி வெப்பமயமாதல்[Global warming] என்பது கடந்து இரு நூற்றான்ண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி& வளர்ச்சியால் அதிகம் பயனபடுட்தப்படும் ஊர்திகள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் அசுத்த வாயுக்கள்,கழிவுகளினால் ஏற்படுகிறது என்பது பொதுவான வாதம்.Global mean land-ocean temperature change from 1880–2011, relative to the 1951–1980 mean. The black line is the annual mean and the red line is the 5-year running mean. The green bars show uncertainty estimates. Source: NASA GISS

இதற்கு எதிர்வாதமாக புவி வெப்பம் அதிகரிப்பது உண்மைதான் ஆனால் ஊர்திகள்,தொழிற்சாலைகள் வெளிவிடும் கழிவுகள் காரணமில்லை,பூமி சூரியனுக்கு நெருங்குவதால் மட்டுமே நிகழ்கிறது,  இது ஆதிக்க நாடுகள் வளரும் நாடுகளை கட்டுப் படுத்தும் ஒரு செயல் என சதிக் கதை சொல்கிறார்கள்.
[நாம் புவி வெப்பம் ஆகிறதோ இல்லையோ தொழிற்சாலைகளின் கழிவுகள் சுற்று சூழல்,மனிதர்களை பாதிக்கிறது.பல்வித நோய்களுக்கும் காரணம் என கொள்கைரீதியாக் ஏற்கிறோம்].

சரி நாம் பார்த்த ஒரு ஆவணப் படத்தில் புவி வெப்பம் ஆகும் காரணம் வருடத்திற்கு 90 பில்லியன் விலங்குகள் அசைவ உணவுக்காக் வளர்க்க்கப் பட்டு,பராமரிக்கப்பட்டு ,அதன் இறைச்சி பதப்படுத்தப் பட்டு பல இடங்களுக்கும் விநியோகம் செய்யப் படுவதுதான் என்கிறார்கள்.

இந்த விலங்குகளின் கழிவுகள், இறைச்சி பதபடுத்தும் வேதியியல் முறைகள்
என பலவற்றை பட்டியல் இடுகின்றனர்.
நம்க்கு இது புது தகவல் என்பதால் இப்போது புவி வெப்பமயமாதல்  மனிதர்களால் ஏற்படுகிறதா? என்பதில் அசைவ உணவு உண்ணலாமா என்ற விவாதமும் கலந்து இரண்டில் ஒன்றாக கலந்துவிட்டது என்ற தகவலைப் பகிர்கிறோம்.


காணொளி பாருங்கள்.நன்றி
http://www.meatthetruth.com/

23 comments:

 1. அரிசி உணவும் முன்பு இது போல் சொல்லப் பட்டது.

  மேலும் ஒருமுறை- தேயிலை டீ தயாரிக்க இரும்பை கனிமத்திலிருந்து மற்ற ஆகும் சக்தியை விட- பச்சை தேயிலையை க்ருப்பு தீத்தூள் ஆக்க தேவை என்றனர்.

  ஆனால் தினசரி வாழ்வில் - துவைக்க வாஷிங் மெஷின் இல்லாதோர் குறைவு. சென்னையில் கூட தினமும்- டிரையரைப் வெயில் காலங்களில் கூட பயன்படுத்துதல் தானியங்கி மெஷின் வடிவில் அவசியமாகிறது.

  இது போல பலவை தவிர்த்தல் நலம்.
  தேவப்ரியா சாலமன்

  ReplyDelete
 2. வணக்கம் சகோ தேவப்பிரியா
  நீங்கள் இக்காணொளியை பார்க்கவில்லை என அனுமானிக்கிறேன்.இக்காணொளியில் அசைவ உணவிற்காக அதிக அளவில் வளர்க்கப்படும் விலங்குகள் வெளிவிடும் கழிவுகளே புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என் கூறுகிறார்கள்.எனவே அசைவ உணவைக் குறைத்தால் சுற்ரு சூழலுக்கு நன்மை என விள்க்குகிறார்கள்.

  இந்த சுற்று சூழல் விவகாரத்தில் நம்மால் பல்தரப்பட்ட கருத்துகளை பரிசோதித்து பார்க்க இயலாது எனினும் அதிக மின்சார பயன்பாடு,ஊர்திகள் போன்றவற்றை குறைப்பது நம் தனிப்பட்ட பொருளாதாரத்திற்கும் நல்லதுதான்.
  எதிலும் நுகர்வை குறைப்பதே நல்லது.

  இபோது புத்தர் இருந்தால் "நுகர்வே(ஆசையே) துன்பத்திற்கு காரணம்" என கொஞ்சம் மாற்றி சொல்லி இருப்பார்


  இதில் விவாதிக்க பல விடயம் உண்டு எனினும் அசைவப் பிரியனான எனக்கே அசைவ உணவை கொஞ்சம் கொஞ்சமாக் விட்டுவிடலாமா என்ற எண்ணத்தை இகாணொளி உருவாக்கியது.அசைவ உணவை தவிர்க்க முடியுமா என முயற்சிப்போம்

  நன்றி

  ReplyDelete
 3. Replies
  1. வாஙக சகோ சுவடுகள்,
   கருத்துக்கு நன்றி

   Delete
 4. சகோ சார்வாகன்!

  எல்லோரும் சைவப் பிரியர்களாக மாறி விட்டால் உணவுக்காக காடுகள் அழிக்கப்படுமே! ஆடுகள் மாடுகள் கோழிகள் ஒரு பிரிவினர் உணவாக்கிக் கொள்வதால்தான் இவற்றின் பெருக்கம் ஒரு கட்டுக்குள் உள்ளது. இல்லை என்றால் இவற்றாலும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்'ளது. எதையும் அளவோடு வைத்திருந்தால் எவருக்கும் துன்பம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. சகோ சுவனன்,

   இப்பதிவு புவி வெப்பமயமாதலுக்கு அசைவ உணவுக்காக பெரிய அளவில உற்பத்தி செய்யப் படும் விலங்குகள் காரணாம் என்பதுதான். இது நமக்கு புதிய தகவல் என்பதால் மட்டுமே பகிர்கிறேன்.
   இதன் மீது நடைபெறும் ஆய்வுகள்,முடிவுகள் இதனை உறுதிப் படுத்தினால் வலியுறுத்தினால் அசைவ உண்வுக்கு கட்டுப்பாடுகள் தடை வந்தால் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

   அனைவ‌ருக்கும் சைவ‌ உண‌வு த‌யாரிக்க‌ முடியுமா என்ப‌தும் ,எந்த் அளவுக்கு அசைவ‌ உண‌வை த‌விர்க்க‌ முடியும் என்ப‌தும் இப்போது கேள்விக‌ள் ம‌ட்டுமே!

   ந‌ன்றி

   Delete
  2. உணவுக்காக காடுகள் அழியும் என்பது ஏற்க முடியாத ஒன்று ஏனெனில் .. மாமிசம் சாப்பிடும் அனைவரும் மாமிசத்தை கூடுதலாகத் தான் சாப்பிடுகின்றார்கள் ... அவர்களும் காய்கறி, நெல், கோதுமை உணவை உண்ணவே செய்கின்றார்கள். கால்நடை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், நிலங்கள் விரயம் ஆவது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை ..

   மனிதன் எப்படிச் சாப்பிட்டாலும் காடுகளை அழிக்கவேச் செய்கின்றான். இங்கு நாம் மிக கவனத்தில் எடுப்பது வாயுக்கள், மற்றும் நீர்வளங்கள் குறித்தே

   Delete
 5. நண்பரே,

  காணொளி நீண்டதாக இருப்பதால், என்ன காரணத்திற்காக சொல்கிறார்கள், என்பதை இனிமேல் தான் பார்க்கவேண்டும்.

  இந்த மாதிரி ஆய்வுகளை நடத்த, புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, தொழிலமைபுகள் பணவுதவி செய்கிறார்களோ என சந்தேகமாக இருக்கின்றது. மனிதன் விடும் மூச்சு காற்றனால் தான் வெப்பமயமாதலாகிறது என்று சொல்லாமல் இருந்தால் சரி.

  அறிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நரேன்,
   புவி வெப்பமயமாதல் உண்மை,மனிதனைன் செயல்கள் இதற்கு காரணமா என்பதுதான் கேள்வி.மக்கள் தொகை அதிகரிப்பும்,காடுகள் அழிப்பு,அதிக எரிபொருள், வேதிப் பொருள்கள் பயன்பாடு என பல விட‌யயங்கள் சொல்லப்படுவதை அறிந்தாலும் இப்படி அசைவ உணவு என கேள்விப்படுவது முதல் முறை.

   இது ஒரு சர்ச்சைக்குறிய விடயம் .
   முதலில் அப்படி இருக்க முடியாது என்பார்கள்,பிறகு அதற்கு இது காரணமில்லை என்பார்கள்,இன்னும் நெருங்கினால்,அதற்கு இது மட்டும் காரணமில்லை,இன்னொன்றுதான் மிக அதிக காரணம் என்பார்கள்.அது போல்தான் ஹி ஹி ஹி!!!!!!!!!!!!!

   நீங்கள் சொல்லும் வாய்ப்பையும் மறுக்க இயலாது.

   நன்றி

   Delete
 6. //எல்லோரும் சைவப் பிரியர்களாக மாறி விட்டால் உணவுக்காக காடுகள் அழிக்கப்படுமே//

  மரங்களில் இருந்து நாம் பழங்களை தான் புசிக்க போகிறோம் , தானிய வகைகள் தான் நாம் உண்ணும் சைவ உணவுகள் .

  மனிதனின் உடலைப்பு சைவவிலங்குகளின் உடலமைப்பை மிகவும் ஒத்து உள்ளது ...
  http://www.jstor.org/discover/10.2307/2742698?uid=2&uid=4&sid=47699113054167
  நீண்ட குடல் , அரவைக்கு ஏற்ற பற்கள் , தட்டை பாதங்கள்,செரிமான enzyme கள் என பல ஆதாரங்கள் உள்ளன ,

  மாடுகள் தாங்கள் உண்ணும் உணவில் ஏழு சத விகிதம் மீதேன் வாயுவாக வெளியேறுகிறது . அதுவும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் சதை புரதம் அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் உணவில் இந்த வாயுவின் வெளியேற்றம் அதிகம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மருத்துவரே,
   அப்பாடா காணொளி பார்த்து விட்டீர்கள் என்பதை உணர்கிறேன்.இக்கணொளியில் குறிப்பிடப்படும் விடயங்கள் வியப்பையே அளிக்கின்றன.அது குறித்த தேடல் தொடரும்.

   எனினும் தொழிற்சாலையின் பெரும் அளவு உற்பத்தி போல் கொடுமையாக, வளர்க்கப்படும் விலங்குகளை காணும்போது,கொல்வது கூட ஒரு கணம் ஆனால் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் துன்புறுத்தப் படும் விலங்குகளை காண கஷ்டமாக இருந்தது.

   நன்றி

   Delete
 7. சகோ.சார்வாகன்,

  வணக்கம்,

  நல்லதொரு பகிர்வு.

  கால்நடைகள் ஜீரண மண்டலத்திலேயே மீத்தேன் உருவாகி விடுகிறது என்பது மிகையான ஒன்று, அதில் மீத்தேன் இருக்கலாம், அதுவே பெரிய அளவு இருக்க வாய்ப்பில்லை.

  மேலும் நம் நாட்டில் எருவாக மாற்றப்படுவதால் கால்நடை சாணம் , மூலம் குறைவான மீத்தேன் உருவாகவே வாய்ப்புண்டு.

  புஷ் முன்னர் நெல் பயிரிடும் இந்தியாவால் தான் அதிகம் மீத்தேன் உருவாகிறது, இந்தியர்கள் அதிகம் உணவு உண்பதும் காரணம் என சொன்னது போல உள்ளது.

  நம் நாட்டில் பதப்படுத்த இறைச்சியை அதிகம் உண்பதில்லை, 90% மேல் ஃப்ரெஷ் இறைச்சி தான்.

  சரிக்கு சரி விகிதமாக இந்தியாவில் சைவ உணவாளர்கள் உள்ளார்கள், மேலும் இறைச்சி உண்ணும் தனிநபர் அளவும் குறைவு. அதே சமயம் மேலை நாட்டில் அசைவ உணவாளர்கள் அதிகம், அவர்கள் தினசரி நுகர்வும் அதிகம்,எனவே மீத்தேன் வெளியிடுவதும் அவர்களே.

  இந்தியாவில் இருந்து பெருமளவு இறைச்சியும் வெளிநாடுகளுக்கே செல்கிறது.பெரும்பாலான ஆசிய நாடுகள் இறைச்சியை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.சீனாவும், இந்தியாவும் முதலிடம்.

  எனவே அவர்களின் நுகர்வுக்கும் சேர்த்து நாம் உற்பத்தி செய்வதால்,உருவாகும் மீத்தேனுக்கும் அவர்களே காரணம்.

  குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் உருவாகிறதை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தேன், ஆனால் அதனை எல்லாம் யாரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே மனிதர்களின் பொதுவான நுகர்வு, எரிபொருள் எரிப்பே புவி வெப்பமாதலில் முதலிடம் வகிக்கிறது. அசைவ உணவென்று சொல்வதெல்லாம், வித்தியாசமான காரணம் கண்டுப்பிடிக்கிறோம் என சில ஆய்வாளர்கள் செய்யும் கவன ஈர்ப்பு விளையாட்டுகளே :-))

  ReplyDelete
 8. //கால்நடைகள் ஜீரண மண்டலத்திலேயே மீத்தேன் உருவாகி விடுகிறது என்பது மிகையான ஒன்று, அதில் மீத்தேன் இருக்கலாம், அதுவே பெரிய அளவு இருக்க வாய்ப்பில்லை.//

  மனிதர்கள் வெளியிடும் வாயுவில் கூட மீத்தேன் உள்ளது ( குறைந்த அளவில் )

  The major components of the flatus, which are odorless, by percentage are:
  Nitrogen: 20–90%
  Hydrogen: 0–50%
  Carbon dioxide: 10–30%
  Oxygen: 0–10%
  Methane: 0–10%.....(http://en.wikipedia.org/wiki/Flatulence )

  ஆனால் மாடுகளுக்கு செரிமானத்தில் நொதித்தல் (fermantation ) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது , அதில் நிறைய வாயு உற்பத்தி ஆகிறது ( about 30-50 liters per hour in adult cattle and about 5 liters per hour in a sheep or goat- http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/herbivores/rumination.html), அதில் மீத்தேன் முக்கியமான ஒன்று (The uppermost area of the rumen, the headspace, is filled with gases (such as methane, carbon dioxide, and, to a much lower degree, molecular hydrogen) released from fermentation and anaerobic respiration of food.
  http://en.wikipedia.org/wiki/Rumen )

  ......
  //குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் உருவாகிறதை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தேன், ஆனால் அதனை எல்லாம் யாரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே மனிதர்களின் பொதுவான நுகர்வு, எரிபொருள் எரிப்பே புவி வெப்பமாதலில் முதலிடம் வகிக்கிறது. //

  இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. dr.dolittle,

   //The major components of the flatus, which are odorless, by percentage are:
   Nitrogen: 20–90%
   Hydrogen: 0–50%
   Carbon dioxide: 10–30%
   Oxygen: 0–10%
   Methane: 0–10%.....(http://en.wikipedia.org/wiki/Flatulence )

   ஆனால் மாடுகளுக்கு செரிமானத்தில் நொதித்தல் (fermantation ) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது , அதில் நிறைய வாயு உற்பத்தி ஆகிறது ( about 30-50 liters per hour in adult cattle and about 5 liters per hour in a sheep or goat- http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/herbivores/rumination.html), அதில் மீத்தேன் முக்கியமான ஒன்று (The uppermost area of the rumen, the headspace, is filled with gases (such as methane, carbon dioxide, and, to a much lower degree, molecular hydrogen) released from fermentation and anaerobic respiration of food.
   http://en.wikipedia.org/wiki/Rumen )//

   விக்கிபீடியா, விவோ எனப்படும் தளங்கள் எதனடிப்படையில் கணக்கிட்டார்கள் என தெரியவில்லை, சாணியை வைத்து மீத்தேன் தயாரிக்கப்படும்"கோபர் கேஸ் பிளாண்ட்"இல் கூட அவ்வளவு மீத்தேன் உற்பத்தியாவதில்லை,அதனால் தான் பெருமளவில் கோபர் கேஸ் பிளாண்ட்கள் பிரபலமடையவில்லை, 10 மாடுகளின் சாணியை முழுவதும் பயன்ப்படுத்தினால் 1 மணி நேரம் அடுப்பெரிக்க வாயு கிடைக்கும்,வாயு உற்பத்தியாக சுமார் 4 மணி நேரம் ஆகும்.

   ஒரு மணிக்கு ஒரு மாடு 30 லிட்டர் வாயு கொடுக்குமானால் ,மாட்டின் பின்னால் ஒரு குழாய் பொறுத்தி விட மாட்டார்களா :-))

   மீத்தேன் உற்பத்தியாகிறது என்பது உண்மை தான்,ஆனால் சிலர் மிகைப்படுத்தி சொல்வதாகப்படுகிறது.

   -------
   சகோ.சார்வாகன்,
   //புவி வெப்பமயமாதலுக்கு காரணம் அசைவ உணவு விலங்குகளா?!: காணொளி[18+]//

   ஒரு டவுட்டு...
   தலைப்பில் "அசைவ உணவு விலங்குகள்"என போட்டுள்ளீர்ர்கள், அது மனிதனை அல்லது புலி ,சிங்கம் போன்றவற்றை குறிக்கிறதா?

   :-))

   Delete
  2. //ஒரு மணிக்கு ஒரு மாடு 30 லிட்டர் வாயு கொடுக்குமானால் ,மாட்டின் பின்னால் ஒரு குழாய் பொறுத்தி விட மாட்டார்களா :-))//

   ஹாஹா... :-) நானும் இவ்வாறாக யோசித்ததுண்டு , ஆனால் மாடுகளுக்கு வயுறு உப்புசம் (free gas bloat ) என்று ஒரு வகை நோய் வருவதுண்டு , உணவுபாதையில் ஏற்படும் அடைப்பினால் வயிற்றில் உருவாகும் வாயு வெளியேறாமல் வயிறு உப்பும் நோய் , நம்ப மாட்டீர்கள் அரைமணி நேர அடைப்பில் பலூன் போல உப்பி விடும் , உயிரை காப்பாத்த ஊசி மூலம் காற்றை விடுவிப்போம் , அவ்வளவு காற்று வரும் ...
   http://www.google.co.in/imgres?imgurl=http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/herbivores/bloat2.jpg&imgrefurl=http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/digestion/herbivores/tympany.html&usg=__P5tgFuLmP6S-SYlUyNV-GRDjZXs=&h=420&w=300&sz=28&hl=en&start=2&sig2=edtcSy9o-miWvmVd-KweKg&zoom=1&tbnid=cd_AJcX03AipBM:&tbnh=125&tbnw=89&ei=wBP3T_SXFInNrQeP17jGBg&itbs=1

   Delete
 9. நல்லதொரு பதிவு !!!

  புவி வெட்ப மயமாதலுக்கு இறைச்சி உற்பத்தியும் ஒருக் காரணமாகும் என்பது உண்மையே !!!

  ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல ... !!! ஆனால் அது முக்கியமான காரணங்களில் ஒன்று !!!

  இறைச்சி உற்பத்தி என்பது தேவையைத் தாண்டி சென்றுவிட்டது ... கால்நடைகள் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் நீரானாது மக்களுக்குத் தேவையான நீரில் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடுகின்றது ...

  வெளிநாடுகளில் Fresh - ஆக வெட்டப்பட்டு இறைச்சியைத் தருவது இல்லை... மாறாக பெரியத் தொழிற்சாலைகளில் இறைச்சியை வெட்டி பதப்படுத்தி அங்காடிகளுக்கு அனுப்புகின்றனர். அவற்றுக்கு expiry தேதிகள் இருக்கும். இவற்றில் பல மக்களால் வாங்கப்படாமலேயே குப்பைக்கு செல்கின்றன .. கால்நடை வளர்ப்புகளால் வெளிவரும் மீத்தேன் வாயுக்களும் மிகவும் அதிகம் ....

  அத்தோடு தினமும் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் இருப்பதால் இறைச்சிக்கான கால்நடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன...

  அதே சமயம் மீன், கோழி போன்றைவகளில் மக்களுக்குத் தேவையான புரதம், ஒமேகா கொழுப்பு நிறைய உள்ளன.. அவை நம் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமும் கூட..

  என்ன செய்யலாம் ... ???

  இறைச்சி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளலாம் .... !!! வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உண்ணலாம் ... !!!

  முடியும் எனில் அறவே விடலாம் ... ஆனால் பால், முட்டை போன்றவற்றை தவிர்ப்பதால் ஊட்டச்சத்துக் குறைப்பாடுகள் ஏற்படவும் வாய்புள்ளது ...

  தொழிற்சாலைகளில் இறைச்சிகளை கூட்டம் கூட்டமாக வெட்டி பதப்படுத்துவதைக் குறைக்கலாம் .. தேவைக்கு ஏற்ப இறைச்சிக்காக விலங்குகளை வெட்டலாம் ..

  ஜீவகாருண்யம் பேசிய சமண, பௌத்த மதங்கள் இதனால் தான் என்னவோ இறைச்சி உண்பதைத் தடை செய்தனவோ ??

  ReplyDelete
  Replies
  1. //இறைச்சி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளலாம் .... !!! வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உண்ணலாம் ... !!!//

   true ICMR -Indian Council of Medical Research , recomends only 34 gms of meat per day (http://www.dsir.gov.in/reports/ittp_tedo/agro/AF_Animals_Meat_Intro.pdf)

   it can be also replaced with plant proteins such as beans (Adults need to take in 5 1/2 to 6 ounces from the meat/beans group daily.

   Read more: http://www.livestrong.com/article/282320-recommended-daily-intake-of-food-groups/#ixzz1zXjjL5ED)

   Delete
 10. ////குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் உருவாகிறதை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தேன், ஆனால் அதனை எல்லாம் யாரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே மனிதர்களின் பொதுவான நுகர்வு, எரிபொருள் எரிப்பே புவி வெப்பமாதலில் முதலிடம் வகிக்கிறது. ////

  வழி மொழிகின்றேன்

  ReplyDelete
 11. கோவிக் கண்ணனும் இதுக் குறித்து ஒரு பதிவிட்டு இருந்தார் .. அதனையும் படித்துப் பார்க்கலாம்

  ReplyDelete
 12. சைவ / அசைவம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை.. இறைச்சி அல்லது மாமிச உணவு .. எனவும் காய்கறி அல்லது மரக்கறி உணவு என்று சொல்லலாமே ???

  சைவ உணவு ஒருக் காலத்தில் ஆருகத உணவு எனப்பட்டது. சைவர்கள் சமணர்களாக இருந்து சைவத்துக்கு மாறும் போது சமணக் கொள்கைகள் சைவத்துள் தானாகவே வந்துவிட்டது. அதில் ஒன்று தான் இந்த சைவ உணவு முறை எனப்படும் காய்கறி உணவு முறையும்.

  ReplyDelete
 13. பறவைகளை விடவும், ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் போது அதிக கேடு விளைவிக்கின்றன என்பதும் உண்மை ... !!!

  ReplyDelete
 14. அருமையான பதிவு நண்பரே.

  ”Global Dimming”
  http://www.youtube.com/watch?v=ptDvS20lH-g
  இதைப்பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும். (இதைப்பற்றி மாமா ஏதாவது கூறி இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் இது காஃபிர்களின் கண்டுபிடிப்புதான் என்று நினைக்கிறேன்)

  ReplyDelete
 15. நன்றி சகோ இக்பால் செல்வன்,சகோ வவ்வால்,சகோ மருத்துவர் டூ லிட்டில் நீங்கள் விவாதித்ததில் நான் அறிந்த விடயங்கள் பல்.மிக்க நன்றி.
  ******
  வாங்க சகோ தமிழன்
  நல்மா,நீங்கள் சொன்ன விவரத்தையும் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.பரிணாமம் பற்றி ஒரு எளிய தொடர் எழுதலாம என விவரம் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன்.நம் இய்ற்கை ஆர்வலர் என்பதல் இயற்கை சார் பதிவுகளும் முயற்சிப்போம்.

  நன்றி

  ReplyDelete